

Written by London Swaminathan
Post No. 16,059
Date uploaded in London – 6 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

1
தாயுமானவர்அற்புதங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிட்டு அதைவிடக் கடினம் மனதை அடக்குவது என்று சொன்ன பாடல் எது ?
2
தாயுமானவர் பாடல்களை இயற்றிய காலம் எது ?
3
அவர் பாடிய நூல்கள் என்ன என்ன ?
4
அவர் பாடலில் என்ன உள்ளது ?
5
காகம் என்னும் பறவையைச் சொல்லி அவர் நமக்கு என்ன போதிக்கிறார் ?
6
வள்ளுவர் கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் 20 குறள்களில் மாமிசபட்சிணிகளைக் கண்டிக்கிறார்; உமது பாலிசி என்ன ?
7
ஆனந்த விகடன் பத்திரிகைக்கும் உமக்கும் நெருங்கிய தொடர்பு உளதாமே ?
8
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம். — என்ற புகழ்பெற்ற பாடல் எதில் உள்ளது?
9
சங்கநிதி பதும நிதி இரண்டும் தந்து…… என்று அப்பர் பெருமான் பாடினர்; நீவீர் ?
10
தாயுமானவர் பிறந்ததும் முக்தியடைந்தும் எங்கே ?
**************************************************

விடைகள்
1கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம் புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
கண் செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன் நிகரில் சித்தி பெறாலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது சத்தாகி என்
சித்தமிசை குடி கொண்ட
தேசோ மயானந்தமே
***
2.காலம்: கி.பி 18-ஆம் நூற்றாண்டு (1705 – 1742).
***
3.திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்;
பராபரக் கண்ணி;
மௌனகுரு வணக்கம்;
மொத்தப் பாடல்கள்: 1452 பாடல்கள்.
தலைப்புகளின் எண்ணிக்கை: 56 பிரிவுகள்.
***
4.இப்பாடல்கள் அத்வைத வேதாந்தத்தையும் சைவ சித்தாந்தத்தையும் இணைத்து, பக்தி மற்றும் ஞானத்தை எளிய தமிழில் விளக்குகின்றன.
***
5.காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர் நிற்குமோ! கர்மமானவை கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ?
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,
போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா
ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!
***
6.“கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று
அல்லாதோர் யாரோ அறியேன் பராபரமே”
“கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க
எல்லோர்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே”
***
7. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
வாசன் அவர்கள் தன் பொறுப்பில் ஆனந்தவிகடனை ஏற்றவுடன் இந்த பராபரக் கண்ணியை விகடனின் குறிக்கோளாக ஆக்கி அதை விகடனில் வெளியிட ஆரம்பித்தார்.
***
8.திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்;
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்– என்ற தொகுப்பில் முதல் பாடல்.
***
9.பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
பணிசெய்யுந் தொழிலாளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
கேட்டுப் பிழைப்போரையுங்
கிரீடபதி யாக்குவீர்
***
திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்ப பிள்ளை மற்றும் தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து கனகசபாபதி என்ற மகவையும் பெற்று வாழ்ந்தார். பின்னர்த் துறவு வாழ்க்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். அவர் 1742-ஆம் ஆண்டு தை மாதம் விசாகம் நட்சத்திரம் கூடிய நாளில் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரத்தில் முக்தி அடைந்தார் .

–Subham–
Tags- தாயுமானவர் பாடல்கள் , 10 கேள்விகள்
1