Written by London Swaminathan
Post No. 16,089
Date uploaded in London – 14 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
வேள்விக்குடி சாசனத்தின் தோற்றம் பற்றிய கதை என்ன ?
2
வேள்விக்குடி செப்பேடுகள் இப்போது எங்கே உள்ளன ?
3
அகத்தியன் பற்றி வேள்விக்குடி சாசனம் கூறுவது என்ன ?
4
இந்துக்களுக்கு நேர்ந்த அநீதியை வேள்விக்குடி சாசனம் எப்படிக் காட்டுகிறது ?
5
வேள்விக்குடி சாசனம் சொல்லும் அரிய செய்திகள் என்ன ?
6
வேள்விக்குடிச் சாசனத்தை வழங்கிய ஜடில பராந்தக நெடுஞ்சடையன் வழங்கிய வேறு இரண்டு சாசனங்கள் யாவை ?
7
பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட சாசனங்களில் என்ன மொழி, என்ன எழுத்துக்கள் உள்ளன ?
8
மேற்கூறிய சாசனங்களில் உள்ள வரலாற்றுச் செய்திகள் என்ன?
9
சின்னமனுர் சிறிய சாசனம் பாண்டியர்களின் முன்னோர்களின் புகழைப் பாடுவது எவ்வாறு?
10
பராந்தக வீர நாராயணனின் தளவாபுரச் செப்பேடு சொல்லும் அதிசயச் செய்திகள் என்ன?
.
********************************************
AGASTYA RISHI; GURU OF PANDYAS.
விடைகள்
1.சமண, பெளத்த மதத்தைச் சேர்ந்த களப்பிரர்களை விரட்டிய பின் மீண்டும் பாண்டிய ஆட்சி ஏற்பட்டது. அவர்களில் ஏழாவது அரசனான பராந்தக நெடுஞ்சடையன் (765-815 CE) ஆட்சியில் முன்னொரு காலத்தில் முதுகுடுமிப்ப பெரு வழுதியிடம் தானம் பெற்ற கொற்கைக்கிழான் என்ற பிராமணனின் வம்சத்தில் வந்த ஒரு பிராமணன் மனங்கொதித்துக் கூச்சலிட்டான். அதைக்கேட்ட பாண்டிய அரசன் அவனை அழைத்து விசாரித்தான் . களப்பிரர்கள் என்னும் கலி அரசர்கள் நிலத்தைப் பறித்துக்கொண்டனர் என் றான் ; இதை ஆதாரங்களோடு அந்தப் பிராமணன் கொடுக்கவே மீண்டும் வேள்விக்குடி அவனது பரம்பரையில் வந்த நற் சிங்கனுக்கு கொடுக்கப் க்கப்பட்டது; இந்த விவரம் வேள்விக்குடி செப்பேட்டில் உள்ளது .நற்சிங்கன் மீண்டும் தானம் பெற்று, அந்தத் தானம் முழுவதையும் தனக்கே வைத்துக்கொள்ளாமல், அதில் ஒரு பகுதியை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு, மற்ற பாகத்தைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்தான். இத்தானத்தை நிறைவேற்றுவதற்குக் கரவந்தபுரத்து வாசியான மூவேந்த மங்கல பேரரையன் ஆன வைத்ய சிகாமணி மாறன் காரி என்பான் நியமிக்கப்பட்ட செய்தியும் காணப்படுகிறது.
*****
2.லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன; இவை எப்படி அங்கே சென்றன என்று தெரியவில்லை; ஆனால் யூகச் செய்திகள் உள்ளன.
*****
3.காளிதாசன் என்னும் உலகப்புகழ்பெற்ற கவிஞன் ரகுவம்ச காவியத்தில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியனையும் அகத்தியனையும் முதல் முதலில் தொடர்புபடுத்தி எழுதினான்; பின்னர் மணிமேகலையில் அகத்தியன் என்ற பெயர் வருகிறது. முதல் தொல்பொருட்துறைச் சான்று வேள்விக்குடி சாசனத்தில்தான் கிடைக்கிறது; பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்று கூறுகிறது .
*****
4.இந்துக்களின் கோவில்களை பெளத்தர்களும் சமணர்களும் ஆக்ரமித்து அவர்களது சிலைகளை வைத்தனர்; இந்துக்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டனர். இந்துக்களின் நிலத்தை களப்பிரர்கள் பிடுங்கிக் கொண்டதை வேள்விக்குடி சாசனம் தெள்ளிதின் விளக்குகிறது ; சில திராவிட முட்டாள்கள் இதை மாற்றி எழுதி நாம் அவர்கள் இடத்தை ஆக்ரமித்ததாக எழுதியுள்ளனர். அவர்களுக்கு வேள்விக்குடி சாசனமும் பின்னர் வந்த பெரிய புராணமும் செமை அடி கொடுக்கிறது.
****
5.இந்த சாசனம் புறநானூற்றில் வரும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதலிய ஆறுமன்னர்களின் பெயர்களை நமக்கு எடுத்துரைக்கிறது .பாண்டிய வம்சத்தின் பழைய சாதனைகளை பட்டியலிட்டுள்ளது –
மேருவின் உச்சியில் இரு மீன் உருவங்களை பொறித்தது;
இந்திரனின் சிம்மாசனத்தில் ஒரு பாதியையும் அவனுடைய மாலையையும் அடைந்து; பூமி தேவிக்கு கணவனாக அமைந்தது;
அரக்கர் தலைவர்களை வென்றது;
தேவர்களைத் தூதராகக் கொண்டது;
பாற்கடலைக் கடைந்தது ;
அகத்தியரால் முடிசூட்டப்பட்டது;
குடிமக்கள் விரும்பியதை அளித்தது.
வேள்விக்குடி சாசனம் சிவபெருமான் வாழ்த்துடன் துவங்குகிறது.
*****
6.ஸ்ரீவர மங்கலச் செப்பேடு; அந்த ஊரை தானமாக வழங்கியதால் அதே பெயரில் அழைக்கப் படுகிறது; சின்னமனூர்ச் சிறிய சாசனம்.
*****
7.தமிழ் மொழி வசனங்கள் வட்டெழுத்திலும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் கிரந்த எழுத்திலும் உள்ளன.
*****
8.ஸ்ரீ வர மங்கலச் செப்பேட்டுச் செய்திகள் —
இந்தச் செப்பேட்டில் துவக்கத்தில் 6 ஸம்ஸ்க்ருதச் ஸ்லோகங்கள் உள்ளன ; முதல் நான்கு ஸ்லோகங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன், பாண்டிய குலம் தோன்றிய சந்திரனைப் போற்றுகிறது. அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பல்லவ பஞ்சனன் / முறியடித்தவன் மாறவர்மன், அவன் மகன் ஜடிலவர்மனைப் பற்றியது.
ஜடிலவர்மன் என்னும் நெடுஞ்சடையன் , குடகொங்க மன்னனைப் பிடித்துவந்து மதுரையில் சிறையில் அடைத்தான் ; அவனுக்கு உதவியாக வந்த பல்லவனும் கேரளனும் ஓடிப்போனார்கள்; அதியனையும் வென்றான் . பரம வைஷ்ணவனான இவன் காஞ்சி ஆற்றங்கரையில் போரூரில் திருமாலுக்கு குன்றமன்னதோர் கோவிலைக் கட்டினான் .
இவனது சிறப்புப் பெயர்கள் –
பாண்டியநாதன், பண்டித வத்சலன், வீரபுரோகன், விக்ரமபாரகன், பராந்தகன், பரம வைஷ்ணவன் .
பர அந்தகன் என்றால் எதிரிகளுக்கு யமன் போன்றவன்;
ஜடில வர்மன் என்றால் நெடுஞ்சடையன்.
*****
9.சந்திரவம்சத்தில் தோன்றி அசுரர் கூட்டத்தை அழிக்க இந்திரனுக்கு உதவினார்கள்;
இமயமலை உச்சியில் அழகிய கயற் சின்னம் பொறித்தார்கள் ;
தெற்குத்திக்கிலுள்ள மலையில் உறையும் குடமுனியின் இனிய தமிழால் தங்கள் காதுகளைக் கழுவிக்கொண்டார்கள் ;
இந்திரன் ஆரத்தை அணிந்து அவனுக்குச் சமமாக அமர்ந்தார்கள்;
அவனுடைய திருமுடியில் வளை உடைத்தார்கள்;
கடல் பின்வாங்க வேல் எறிந்தார்கள் ;
ஓராயிரம் வேள்விகளைச் செய்தார்கள்;
பூதகணங்களைக்கொண்டு பணிகளை ச் செய்வித்தார்கள்;
பாவலர்களுக்கு ஆயிரம் யானைகளை வழங்கினார்கள்;
உலகம் பாடிப்பரவும் ஜெயந்தவர்மனின் மகனாக பரமேச்வரன் வெளிப்பட்டான் ;
அவன் அரிகேசரி, அசமசமன், அலங்க்யவிக்ரமன்,
அந்தணர் இடர் நீங்க அவர்களுக்கு முகில்போல பொன் மழை பொழிந்தான்;
துலாபாரம் ஏறியும், இருமுறை இரணிய கர்ப்பம் புகுந்தும், கோஸஹஸ்ரம் முதலான பெரிய தானங்களைச் செய்தும் இந்திரன் போல வீற்றிருந்தான்
*****
10.திருமால் வணக்கத்தோடு சாசனம் ஆரம்பிக்கிறது.
பாண்டியர்களின் முன்னோர்கள் செய்த அருஞ்செயல்கள் –
கடலைக் கடைந்து அமிர்தம் கொண்டது;
அகத்திய முனிவருடன் தமிழ் ஆராய்ந்து;
இராவணனுடன் சமாதானம் செய்வித்தது;
திருதராட்டிரான் மக்கள் அனைவரும் அழியும்படி போர்க்களத்தில் யானைகளை நடத்திச் சென்றது;
அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட வசு சாபத்தை நீக்கியது ;
அரிச்சந்திரன் நகரை அழித்து அவன் பரிச்சந்தம் பலவற்றைக் கவர்ந்தது ;
நாற்கடலின் நீரினால் ஒரே பகல் நீராடியது;
நாற் கோடிப் பொன் கொடுத்து நூற்கடலைக் கரைகண்டது; ஆயிரம் யானை வழங்கியது;
தென் மதுராபுரியை நிர்மாணித்தது;அங்கே சங்கம் நிறுவித் தமிழை வளர்த்தது;
இந்த சாசனத்தில் களப்பிரருக்கு களப்பாழர் என்ற சொல் உள்ளது. சிலேடையாக வரகுணன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் உள்ளது
இந்த சாசனத்தில் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் தந்தை பராந்தகன் என்று உள்ளது . சின்னமனூர் பெரிய சாசனத்தில் அது வரகுணன் என்று காணப்படுகிறது; ஆகவே இவ்விரண்டு பெயர்களும் ஒரே அரசனை குறிப்பதாகும்.
-SUBHAM—
TAGS- பாண்டியர் செப்பேடுகள் , 10 கேள்விகள் , வேள்விக்குடி சாசனம், சின்னமனூர் செப்பேடு, தளவாய்புரம், சாசனம், ஜடில பராந்தகன், நெடுஞ்சடையன், அகத்தியன்