

WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,090
Date uploaded in London – 15 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஆகஸ்ட் 15 திரு வெ.சந்தானம் நினைவு நாள்.
அன்னா கரீன
ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்
மொழிபெயர்ப்பு: தினமணி உதவி ஆசிரியர் வெ. சந்தானம்
முதற் பதிப்பு மார்ச் 22 1947
தமிழ்ச் சுடர் நிலையம் திருவல்லிக்கேணி, சென்னை
முன்னுரையின் இறுதியில் திரு வெ. சந்தானம் கூறுவது:
திருவல்லிக்கேணி வெ. சந்தானம்
21-3-1947
நாவலின் துவக்க பாரா:
ஸௌபாக்கியங்களுடன் வாழும் குடும்பங்கள் எல்லாம் அநேகமாக ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் துருப்பாக்கியம் பிடித்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் துன்பமும் துயரமும் ஒவ்வொரு தினுசு!
8ம் பாகம், 15ம் அத்தியாயத்தில் ஒரு பாரா”
பிறகு லெவின் அங்கிருந்து கிளம்பினான். போகும்போது மீண்டும் வேதாந்த விசாரத்தில் இறங்கினான். “நன்மை, தீமை முதலிய சக்திகள் தான் கடவுள் இருக்கிறாரென்பதற்குத் தக்க ருசு. இதை நான் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, என் மனம் அறியும். இந்த மாதிரி உணருகிறவர்களுடன் நான் ஐக்கியமாகிறேன். இப்படிப் பொதுவாக நம்புகிறவர்களின் ஆத்ம ஐக்கியந்தான் மதம்” என்று யோசித்தான் லெவின்.
முகம்மதியர், யூதர், பௌத்தர் ஆகியோர் சமாசாரமென்னவென்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது. இவ்விஷயமாக நீண்ட நேரம் யோசித்தான். நல்லது எதுவென்பதைத் தான் அறிந்திருப்பதாகவும், இது எல்லோருக்கும் ஒரே மாதிரியானது தானே என்றும் பதில் சொல்லிக் கொண்டான்.
நாவலின் கடைசி இரண்டு பாராக்கள்:
“நான் அவளிடம் சொல்லப் போவதில்லை. இது எனக்கு மட்டும் முக்கியமானதொரு ரகசியம்….. வார்த்தைகளால் சொல்லவும் முடியாது” என்று தீர்மானித்தான் லெவின்.
“இந்த புது உணர்ச்சி என்னை மாற்றிவிடவில்லை. என்னை இன்பத்திலாழ்த்தியது. ஞானத்தை தந்தது. இது திடீரென்றும் வரவில்லை. மிகுந்த வேதனைப்பட்டபின் என்னை யறியாமலேயே இது என் ஹிருதயத்தில் குடியேறிவிட்டது. ஒருவேளை முன்மாதிரியே வேலைக்காரர்களை நான் கோபித்துக்கொள்ளக் கூடும். உதவாக்கரை விவாதங்களில் கலந்து கொள்ளக் கூடும். ஆயினும் என் ஆத்மாவுக்கும், என் மனைவியுள்பட இதரருக்குமிடையே அதே மதில் தான் இருக்கும். என்னுடைய கவலையில் ஒருவேளை அவள்மீது நான் புகார் கூறிக்கொண்டிருந்தாலும் இருப்பேன்; பிறகு வருந்தக் கூடும். நான் எதற்காக தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன் என்பது இன்னமும் என் அறிவுக்கு எட்டாத விஷயமாக இருக்கலாம். ஆயினுமென்ன? பிரார்த்தித்துக்கொண்டே இருப்பேன்! ஆனால் என் வாழ்க்கை – என்ன நடந்தாலும் சரி – முன்போல அர்த்தமற்றதாக இருக்காது; ஆனால் ஒவ்வொரு செய்கையும் சத்காரியமாக இருக்கும். அர்த்தமுள்ளதாக இருக்கும். இவ்விதம் செய்யக்கூடிய சக்தி எனக்கு இருக்கிறது” என்று சங்கற்பம் செய்து கொண்டால் லெவின்.


ஸாயி கீதங்கள்
திரு வெ. சந்தானம் அவர்கள் இயற்றிய ஸாயி கீதங்கள் என்ற நூலிலிருந்து ஒரு கீதம்!
மனோலயம்
ராகம் – ஸாரமதி தாளம் – ஆதி தாளம்
பல்லவி
மனோலயம் ஈயும் கருணாலய சாயி
பாவப் பெருங் கூட்ட்ம் பவமு மெடுக்க ஓட்டம்
அனுபல்லவி
இருள்சேரி ருவினை மருள் தருமாயை யேக
அருள்கூரவர் பூதிபோல பொருளேது பாக்யசித்தி
சரணம்
ஊழிற் பெரு வலியும்
சுழலும் கருச் செலவும்
கழிய மந்திரம் கூறும்
வேழ முகன்விண்டு சிவன்
சமுசார வாழ்வதிலே
யம சார நஞ்சை நீக்கும்
வாம பாகீ பாலாம் பிகே
வைத்யநாதா யுக சாரதி
–subham–