

Written by London Swaminathan
Post No. 16,137
Date uploaded in London – 28 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பெளத்தர்கள் வேதப்புத்தகமாகக்கருதும் பாலி மொழி புஸ்தகத்தில் புத்தர் புகன்ற எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன ?
2
அறிவு என்னும் கருவியால் ஐம்புலன்களையும், அதன் போக்கில் விடாமல் அடக்கி ஆள்பவனே, மேல் உலகத்துக்கு விதை ஆவான் (குறள் 24) வள்ளுவர் சொன்னதை புத்தர் எப்படி மொழிகிறார் ?
3
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழல் (குறள் 428)– இந்த வள்ளுவன் கருத்து தம்மபத்தில் எங்கே உள்ளது ?
4
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் (850)- உலகத்தார் ஒப்புக்கொண்டதை இல்லை என்பான் பேய் என்றா வள்ளுவர். புத்தர் என்ன செப்பினார்?
5
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு (190) என்று வள்ளுவன் சொன்னதையும் புத்தர் சொன்னாரா?
6
ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!! என்று புத்தர் பகர்ந்து எந்த ஸ்லோகத்தில்?
7
பிராமணன் கொலை செய்தாலும் பாவம் வராது என்று புத்தர் பாடினாரா ?
8
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி- குறள் 25 —என்ற குறளுக்கு இந்திரனைத் திட்டி பரிமேலழகர் அர்த்தம் கற்பித்தார் . பத்து பேர் உரையில் ஒருவர் மட்டும் இது இந்திரனைப் புகழும் குறள் என்றார் . புத்தர் என்ன இயம்பினார் ?
9
பிறருடைய மனைவியை நாடுபவனை வள்ளுவர் எச்சரிப்பது போலவே புத்தரும் எச்சரித்தாரா?
10
“ஆசை அறுமின், ஆசை அறுமின்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்; ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்” என்று திருமூலர் உரைத்தை புத்தர் ஒரு உவமையுடன் எப்படிச் சொன்னார் ?
********************


விடைகள்
1.இந்த நூலில் 423 ஸ்லோகங்கள் இருக்கின்றன. 26 அத்தியாயங்களில் அவைகளைத் தொகுத்துள்ளார்கள் .
***
2.புத்தரும் தம்மபதத்தில் 321-324ல் சொல்லுவது இதேதான்:
பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்.
பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும் பயிற்சி பெற்றவுடனேயே நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.
***
3.பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்படாமல் இருப்பது மடத்தனம். பயப்பட வேண்டிய பழி பாவங்களுக்குப் பயப்படுவதே அறிஞர்கள் செயலாகும்.
இதை புத்தரும் தம்மபதம் 317ல் அப்படியே புகல்வார்:
பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே
***
4.உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று , தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)
***
5.மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே; உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார். நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (50)
****
6.காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)
***
7.ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்– (தம்மபத பாடல் 294)
பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- தம்மபதம், 389
****
8. புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.- தம்மபதம் 30
***
9.மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309
***
10.உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

–subham—
Tags- புத்த மத வேதம், தம்மபதம், 10 கேள்விகள் , பிராமணன், இந்திரன்