ராமாயணத்தில் வரங்கள் 73 – வசிஷ்ட முனிவர் ஸௌதாஸருக்கு வரம் அளித்தது! (Post.16,161)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,161

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 73 – வசிஷ்ட முனிவர் ஸௌதாஸருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் அறுபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ஸௌதாஸ சரிதம்’ என்னும் ஸர்க்கமாகும்.

லவணாசுரனைக் கொல்வதற்கு சத்ருக்னனை ராமர் அனுப்ப அவன் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கினான். அப்போது அங்கிருந்த யாகசாலையைப் பார்த்து அது யாருடையது என்று வினவ வால்மீகி முனிவர் பழைய கால சரித்திரத்தைக் கூறலானார்.

இது பற்றி சாபங்கள் புத்தகத்தில் விவரமாகக் காணலாம். சாபத்தையொட்டி தரப்பட்ட வரம் பற்றி இங்கு விளக்கப்படுகிறது.

முன்காலத்தில் சுதாஸர் என்ற ஒரு சக்கரவர்த்தி இருந்தார். அவரது மகன் வீரஸஹர் என்பவர் அரசாட்சிக்கு வந்த போது ஒரு ஜதை பேய்களைக் கண்டார். அவற்றில் ஒன்றைக் கொன்றார். இதனால் வெகுண்ட இன்னொரு பேய் பழிவாங்க சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

வீரஸஹர் ஒரு சமயம் வசிஷ்டரை வைத்து அஸ்வமேத யாகம் ஒன்றைப் புரிந்தார். அப்போது வசிஷ்டர் வேடம் பூண்ட பேய் அவரிடம் வந்து, “யாகம் முடிந்து விட்டது. மானிட ஊன் கலந்த உணவு வேண்டும்” என்று கூறியது. வசிஷ்டர் கேட்பதாக எண்ணிய வீரஸஹர் அப்படியே மானிட மாமிசம் கலந்த உணவைப் படைத்தார்.

தன் பத்தினி மதயந்தியுடன் அவர்  நர மாமிச உணவைப் படைக்க இதனால் வசிஷ்டர் வெகுண்டு, “இது ஒன்றே உனக்கு இனி உணவாக இருக்கக் கடவது” என்று சாபமளித்தார்.

உடனே வீரஸஹர் நடந்த அசம்பாவிதத்தை உணர்ந்து வசிஷ்டரிம் அதைத் தெரிவிக்க  அவர் மன்னரைப் பார்த்து இப்படிக் கூறினார்:

மயா ரோஷபரீதேன யதிதம் வ்யாஹ்ருதம் வச: |                            நைதச்சக்யம் வ்ருதா கர்தும் ப்ரதாஸ்யாமி ச தே வரம் ||

        உத்தரகாண்டம் அறுபத்தைந்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 35

ரோஷபரீதேன – கோபாவேசத்தில் இருந்த                                      மயா – என்னால்                                                              இதம் வச: – இந்த வாக்கானது                                                          வ்யாஹதம் – சொல்லப்பட்டது                                                                            யத் – எதுவோ                                                                       ஏதத் – அது

வ்ருதா – வீணாகப் போக                                                          கர்தும் – செய்ய                                                                 ந ஷக்யம் ச – முடியாமல் இருந்தாலும்                                                     தே – உனக்கு                                                                     வரம் – ஒரு வரத்தை                                                             ப்ரதாஸ்யாமி – அளிக்கின்றேன்                                          

காலோ த்வாதச வர்ஷாணி சாபஸ்யாந்தோ பவிஷ்யதி |                        மத்ப்ரஸாதாஸ்ச ராஜேந்த்ர வ்யதீதம் ந ஸ்மரிஷ்யாமி ||

  உத்தரகாண்டம், அறுபத்தைந்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 36

த்வாதச வர்ஷாணி – பன்னிரெண்டு வருடங்கள்                                                     கால – முடிந்தவுடன்                                                      சாபஸ்ச – சாபத்திற்கு                                                             அந்த: – முடிவு                                                               பவிஷ்யதி – ஏற்படும்                                                            ச – அன்றியும்                                                               ராஜேந்த்ர அரசர்க்கரசனே                                                       மத் ப்ரஸாதாத் – என் அனுக்ரகத்தினால்                                                 வ்யதீதம் – நடந்தேறியதை                                                                 ந ஸ்மரிஷ்யாமி – நீ நினைக்க மாட்டாய்

ஆக பன்னிரெண்டு வருடங்கள் சாபத்தை அனுபவித்த வீரஸஹர் பின் வரத்தினால் நடந்ததை மறந்தார்.

இது சாபமும் வரமும் கலந்த ஒரு அபூர்வ சம்பவமாகும்.

இந்த வீரஸஹரே ஸௌதாஸர் ஆவார். அவருக்கு கல்மாஷபாதனர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இவரது பத்தினியே கற்பில் சிறந்த மதயந்தி ஆவார்.

இந்த சரிதத்தை வால்மீகி முனிவர் சத்ருக்னனுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

**

Leave a comment

Leave a comment