மோடிஜியைக் கவிழ்க்க சர்ச் சதியா? (Post No16,178)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,178

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மோடிஜியைக் கவிழ்க்க சர்ச் சதியா? 

ச. நாகராஜன்

கார்டினல்கள், ஆர்ச் பிஷப்கள், பிஷப்கள், விகார்கள் ஆகியவர்களின் பிரத்யேக அறைகள் இப்போது ‘வார் ரூம்’ ஆகி விட்ட அதிர்ச்சி செய்தியை கேரளாவின் மூத்த பத்திரிகையாளரான குமார் செல்லப்பன் அவர்கள் சனாதன் ப்ரபாத் 2026, ஆகஸ்ட் 1-15 இதழில் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்ட திட்டங்களையும் உத்திகளையும் அவர்கள் வகுத்து வருகிறார்களாம்.

ஆப்ரஹாமிக் தலைவர்கள் ஹிந்துக்களை பலியாக்குவது சுலபம் என்று கருதுகிறார்களாம்.

இதன் உச்சகட்டமாக இவர்கள் கோபம் நரேந்திர மோடியின் மீது திரும்பி இருக்கிறது.

இதற்காக இவர்கள் ராகுல் காந்தியுடன் கூட்டணி சேர்ந்து விட்டார்கள்.

ராகுல் காந்தி, கடந்த ஜூன் மாதம் நியூ டில்லியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, “இன்னும் ஒரு வருட காலத்தில் நரேந்திர மோடியின் அரசு இருக்காது. மோடிக்கு எதிராக பிரம்மாண்டமான எதிர்ப்பலை இந்தியாவில் எழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அத்தோடு அவர் மேலும் கூறுகையில், எலக் ஷன் கமிஷனர்களும், நீதிபதிகளும் அவருக்கு பிஜேபி அரசின் மேலாதிக்க மனப்பான்மையிலிருந்து தம்மைக் காக்குமாறு தனக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

1978ம் ஆண்டு மொரார்ஜி தேசாயின் அரசு ஓபி தியாகி மூலம் ‘ஃப்ரீடம் ஆஃப் ரெலிஜின் பில்” ஐ கொண்டுவந்த போது கல்கத்தாவில் மதர் தெரஸா பெரிய கலவரத்தைத் தூண்டி விட்டார். இந்தச் சட்டம் சட்டத்திற்குப் புறம்பாக மதம் மாற்றுவதைத் தடுப்பதற்கான சட்டமாகும். கலவரக் கூட்டங்களின் விளைவாக மொரார்ஜி அரசு கவிழ்ந்தது.

 இப்போது Foreign Contribution Regulation Amendment Act (FCRAA ACT 2026) பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்த இந்திய கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு திட்டமிட்டுள்ளது.

சனாதன தர்மத்திற்கு எதிராக Catolic Bishops’ Conference of India – CBCI – எவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

ஹிந்து தர்மத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இரவு பகலாக இது வேலை பார்த்து வருகிறது. ஆனால் இதை ஓசைப்படாமல் பகிரங்க விளம்பரம் இல்லாமல் செய்து வருகிறது.

இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருப்பதாக தங்களுக்கு ஜால்ரா போடும் உலகளாவிய ஊடகங்கள் மூலமாக தொடர்ந்து இது செய்திகளை வெளியிட்டு வருகிறது.

1959ம் ஆண்டு இதன் பிரம்மாண்டமான தாக்குதல் கேரளாவில் நடைபெற்றது.

1957ல் அரசை அமைத்த நம்பூதிரிபாட் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர் இவர்கள்.

காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீகுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் கம்யூனிஸ அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கம்யூனிஸ அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் குறுக்கிட்டதையும் சர்ச் விரும்பவில்லை. ஏனெனில் பள்ளிகளில் பெருவாரியான பள்ளிகள் கிறிஸ்தவ சர்ச்சினாலேயே நடத்தப்பட்டவையாகும்.

இவர்களின் கிளர்ச்சி பெரிதாக ஆகவே அப்பாவியான 20 உயிர்கள் பலி ஆயின.

இறுதியில் நேருவின் அரசு 356 சட்டப்பிரிவின் படி நம்பூதிரிபாட் அரசை கலைத்தது.

இதற்குப் பின்னர் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.கம்யூனிஸ்டுகளும் சர்ச் பிஷப்புகளும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த செல்வாக்கையும் செல்வத்தையும் நன்கு புரிந்து கொண்டனர்.

இடையே அமெரிக்க சி.ஐ.ஏயும் வடிகனும் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களை ஆதரிக்காத அரசுகளைக் கவிழ்க்கலாயின.

இவற்றிற்கு வரும் நிதியை இந்திய அரசின் FCRA கண்காணிக்க ஆரம்பித்தது.

இதனால் சர்ச்சுக்கும் எப்சி ஆர் ஏக்கும் தீராப் பகை ஏற்பட்டு விட்டது.

 இந்த நிலையில் தான் சட்டத்திற்கு மேல் சட்டம் வந்து தங்களின் மதமாற்ற நடவடிக்கை, அரசு கவிழ்ப்பு நடவடிக்கை ஆகியவற்றைச் செய்ய விடாமல் தடுக்கிறதே என்று சர்ச் பிஷப்புகள் ஆத்திரப்படுகின்றனர்.

இப்போது ராகுல் காந்தி ஒரு வருடத்திற்குள் மோடி அரசு போய்விடும் என்று பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் சவால் விட்டு அறிவித்திருப்பதால் சர்ச்சுகளுக்கு ஏக சந்தோஷம்.

அவருடன் கூட்டு சேர்ந்து இணைவது தானே நல்லது!

இதற்கான நடவடிக்கைகளைத் தான் மூத்த பத்திரிகையாளர் குமார் செல்லப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

என்ன நடக்கப் போகிறது? பிஜேபி உஷாராகச் செயல்படுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

**

Leave a comment

Leave a comment