பல்லவர் செப்பேடுகள் பற்றி நான்காவது 10 கேள்விகள் (Post.16,198)

Written by London Swaminathan

Post No. 16,198

Date uploaded in London – 14 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கடந்த மூன்று  நாட்களில் முப்பது  கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்

31

யாப்பருங்கல விருத்தி உரையில் கீழே வரும் பாட்டில் பாராட்டப்படும் மன்னன் யார் ?

வண்டிவரும் மலர்வெட்சி மாலைமார்பன்

மால்வேண்ட மண்ணளித்த மலிதோள்வள்ளல்

ஞண்டிவரும் தண்படப்பை ஞாழல் மூதூர்

நரபதிக்கு வான்கொடுத்த நகைவேல் நந்தி

தண்டிவரும் தடவரைத் தோள் சயந்தன் வாடச்

சதுமுகனைச் சயம் செய்த  சங்கபாலன்

தெண்டிரைவாய்த் திருமகளோடமிர்தம்  கொண்டான்

சீர்பரவச் சென்றகளும் செல்லல்தானே

32

அகஸ்தியருடன் ஒப்பிடப்பட்ட பல்லவன் யார்?

33

துரோணர் மகன் அஸ்வத்தாமனிடமிருந்து பல்லவர்கள் தோன்றினார்கள் என்று செப்பேடுகள் சொல்வதற்கு வேறு ஆதாரம் உள்ளதா? 

34

மஹாராணிகள் சாரு தேவி,  ரங்க பதாகை (பறக்கும் வர்ணக்கொடி )பற்றி பல்லவ செப்பேடுகள் பகிர்வது என்ன ?

35

தென் கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன?

36

முப்பது செப்பேடுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு தொல் பொருட் துறை திருத்தணிகையருகில் கண்டுபிடித்த செப்பேடு என்ன சொல்கிறது ?  

37 

பிள்ளையாரத் துதிக்கும் செப்பேடு எது ?

38

பிராமணர் சொத்து விஷம் என்றும் எச்சரிக்கும் செப்பேடு எது?

39

போரில் தோற்று கந்தைத் துணியுடன் ஓடிய மன்னன் யார் ?

40

தமிழ் நாட்டில் 25 ஆண்டுகளுக்கு ஒளிந்து கொண்டு வாழ்ந்த இலங்கை மன்னனை  அரியாசனத்தில் ஏற்றிய பல்லவன்  யார்?

*********************

விடைகள்

31. பாண அரசனான நந்தி என்பவனைப் புகழ்ந்து பாடிய செய்யுள் இது. முதலில் விஷ்ணுவுக்கு மூன்றடி மண் கொடுத்த மஹாபலி வம்சத்தில் வந்தவன் என்று கூறுகிறது .ஞாழல் என்ற கடற்கரைப்பட்டினத்து மன்னனை வானுலகுக்கு அனுப்பிய செய்தி உள்ளது  ஞாழல்  என்னும் மலர் சிவபெருமானுக்கு உகந்தது; அடுத்தது ஆதி பிரம்மாவை வெற்றி கொண்டதைக் குறிக்கும்; ஆக இந்த மன்னன் விஷ்ணு, சிவன் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மேம்பட்டவன் என்பது கவியின் கூற்று . கடைசியில் கடல் கடைந்த செய்தி மூலம் தேவர்களுக்கும் மேலானவன் என்று சொல்லப்படுகிறது . அவன் வெற்றிகொண்ட சதுமுகன் நந்தி வர்ம பல்லவனின் தந்தையான ஹிரண்ய வர்மனைக்குறிக்கும் . இதே விருத்தி உரையில் நந்தி என்னும் பாண அரசனைப்பற்றி வேறு பல பாடல்களும் மேற்கோள்களாக வருகின்றன . இவை அனைத்தும் நந்திவர்ம பல்லவனையே குறிக்கும் . எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மனின் ராயக்கோட்டைச் சாசனம் வெளியிடப்பட்டது  தொண்டை நாட்டின் வடபகுதியை ஆண்ட பாணர்கள் நந்திவர்மனையே அவர்கள் வம்ச பரம்பரைக்கு முதல்வனாகக் கொண்டார்கள் . பக்கம் 102 ; பல்லவர் செப்பேடுகள் முப்பது.

***

32.ராயக்கோட்டை செப்பேடுகள் பல்லவ மன்னன் ஸ்கந்த சிஷ்ய வர்மனை, அகஸ்திய முனிவரோடு ஒப்பிடுகிறது; அவர் கடலினைக் குடித்த செய்தி, 18 குடி வேளிரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்த செய்திகள் குறிப்பிடப்படுகின்றன.

***

33.அஸ்வத்தாமனின் தந்தை மஹாபாரதப் புகழ் துரோணாச்சாரியார் ; அவர் பிராமண ஆசிரியர். இந்தப் பெயரை கடந்த சில நூற்றாண்டுகளிலோ, இப்போதோ பிராமணர்களிடையே காண்பதற்கில்லை. வேளூர்ப் பாளையம் செப்பேடுகள் 23 ஆவது ஸ்லோகத்தில் பிராமண வம்சத்தினரைக் குறிக்கையில் ஒருவருடைய தாயின் பெயர் துரோண மணி என்கிறது . ஹல்லக்கெரே  செப்பேடுகள் தானம் வாங்கிய பிராமணர்களில் ஒருவர் பெயரை துரோண பட்டன் என்று சொல்கிறது. உதயேந்திரம் செப்பேடுகளில் நான்கு பிராமணர்களின் பெயர்கள் துரோணன் என்பதாகும். வேறு எந்த மஹாபாரதப் பெயரும் நூற்றுக்கும் மேலான பிராமணர்களின் பெயர்களில் இல்லை! இந்த சாசனம் நந்திவர்ம பல்லவனுடையது; அந்தக் காலத்தில் பல்லவர்கள் துரோண–அஸ்வத்தாமன் வழிவந்தவர்கள் என்று மக்கள் நம்பியதை இது காட்டுகிறது ; பாண்டவர் கூடாரத்துக்குத் தீவைத்த அஸ்வத்தாமன் பெயர் பிராமணர்களின் பெயர்களில் இல்லை..

***

34 இரண்டாம் நரசிம்மனின் ஒரு மனைவியின் பெயரை நாம் அறிவோம். அவளுடைய பெயர் ரங்க பதாகை;  அவள் நடனத் துறையில் வல்லவள் ; பெயரை மொழி பெயர்த்தால், வர்ணக் கொடி என்று வரும்; அவள் நாட்டியம் ஆடினால் எப்படி இருந்திருக்கும் என்று நாமே யூகிக்கலாம்; தமிழில் கொடி என்றால் வானில் பறக்கும் கொடி, கொம்பில் படரும் முல்லைக்கொடி போன்ற மலர்க்கொடி ஆகும் .

சாருதேவி என்ற ராணி குணபதேயம் செப்பேடுகளை வெளியிட்டாள் ; அவள் யுவ மஹாராஜா விஜய புத்த வர்மனின் மனைவி; அக்குரன் என்று பெயர் முடியும் ஒருவனுடைய தாயும் ஆவாள் . ஏடுகள் சிதைந்திருப்பதால் முழு பெயர் கிடைக்கவில்லை; விஷ்ணு கோயிலுக்கு ஆயுள் பலம் அதிகரிக்க பரிகாரமாக கொடைகள்   வழங்கியதை செப்பேடு கூறுகிறது

***

35.இந்தோ-சீனாவில் (OLD NAME OF SOUTH EAST ASIAN COUNTRIES) லாவோஸ் ராஜ்யத்தின் தென்பகுதியில் வாட்-லுவாங்- கெள என்னுமிடத்தில் கிடைத்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு , தேவானீகன் என்ற அரசன் அந்த இடத்தில் குருக்ஷேத்திர என்ற மஹா தீர்த்தத்தை ஏற்படுத்திய செய்தியைத் தெரிவிக்கிறது. அது கி பி ஐந்தாம் நூற்றாண்டில் வழங்கிய பல்லவ கிரந்த த்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. ப்ரஹ்மண்ய பாவத்தை உடைய பகவானிடம் அதைக்கற்று சிஷ்யரும் பிரம்மண்ய பாவத்தை அடைந்ததாக வருகிறது ; இது ஸுப்ரஹ்மண்யனிடம்  ஓம் மந்திரத்தைக் கற்ற சிவ பெருமானாக இருக்க முடியாது. சுப்ரமண்யனிடம் தமிழ் கற்ற அகஸ்தியனாகத்தான் இருக்கவேண்டும் என்பது அறிஞர் கருத்து. ராயக்கோட்டைச் செப்பேடுகள் சொல்லும் ஸ்கந்த சிஷ்ய வர்மன் யார் என்று திகைத்த அறிஞர்களுக்கு இது உதவுகிறது ; அகஸ்தியருடன் ஒப்பிடப்படும் நந்தி வர்மன் தான் ஸ்கந்த சிஷ்யன் என்று ஒரு சாரார் முடிவு செய்துள்ளனர் ; தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அகஸ்தியரைத் தேவ நிலைக்கு உயர்த்தி சிவ பெருமானைப் போல கையில் த்ரிசூலத்தைக் கொடுத்து சிலைகளை வைத்துள்ளனர்!

***

36..இது அபராஜித வர்மனின் வேளஞ்சேரி ப்பட்டயம்  என்று அழைக்கப்படுகிறது அபராஜித வர்மனின் வேளஞ்சேரி செப்பேடு (அல்லது திருத்தணிச் செப்பேடு) என்பது பல்லவ வம்சத்தின் இறுதி மன்னனான அபராஜித வர்மனின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய பல முக்கிய வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான தொல்லியல் ஆவணமாகும்.

  1977-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகில் உள்ள வேளஞ்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த திரு. நடன காசிநாதன் அவர்களால் இந்தச் செப்பேடு கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகளைத் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டாக்டர் ஆர். நாகசாமி அவர்கள் Thiruttani and Velanjeri Copper Plates” என்ற நூலாக வெளியிட்டார்.இச்செப்பேடு கிடைப்பதற்கு முன்பு வரை, பல்லவ மன்னர்களான கம்பவர்மன், நிருபதுங்கவர்மன், அபராஜிதவர்மன் ஆகிய மூவரும் மூன்றாம் நந்திவர்மனின் மகன்கள் என்றே வரலாற்று அறிஞர்கள் நம்பினர். ஆனால், வேளஞ்சேரி செப்பேடு அபராஜித வர்மன், கம்பவர்மனுக்கும் கங்க நாட்டு இளவரசி விஜயாவுக்கும் பிறந்த மகன் என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.  அபராஜித வர்மன் தனது 9-வது ஆட்சி ஆண்டில் (சுமார் கி.பி. 889) இச்செப்பேட்டை வெளியிட்டுள்ளார். நிலக்கொடை (பிரம்மதேயம்): இந்த செப்பேட்டின் முக்கிய நோக்கம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு (முருகன் கோயில்) பூசை செய்வதற்காகவும், பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக (பிரம்மதேயம்) வழங்கியதையும் பதிவு செய்வதாகும்.  பல்லவர்களின் பிற செப்பேடுகளைப் போலவே இதுவும் சமஸ்கிருதம் (கிரந்த எழுத்து) மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. இதே வேளஞ்சேரி கிராமத்தில் அபராஜித வர்மனின் செப்பேட்டுடன் சேர்த்து சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் 25-வது ஆட்சி காலத்துச் செப்பேடும் கண்டெடுக்கப்பட்டது . தொல்லியல் துறையில் குழப்பத்தைத் தவிர்க்க, அபராஜிதனின் செப்பேட்டை திருத்தணிச் செப்பேடு என்றும், பராந்தகனின் செப்பேட்டை வேளஞ்சேரிச் செப்பேடு என்றும் அழைக்கிறார்கள்.

***

37.இரண்டாவது நந்திவர்மனின் 731-795 CE கசாக்குடி செப்பேட்டில் சம்ஸ்க்ருத பகுதியில் முதல் ஒன்பது ஸ்லோகங்கள் கடவுள் வாழ்த்தாக உள்ளது; அதில் பரப்பிரம்மம், விஷ்ணு, த்ரிவிக்ரமாவதாரம், சிவபெருமான், ஹரிஹரன்விநாயகர் லட்சுமி, பகவதி ஆகியோர் துதிக்கப்படுகின்றனர். பின்னர் ரிஷிகள் முனிவர்கள் வரிசையில் துரோணர் அஸ்வத்தாமன் ஆகியோர் வருகின்றனர்  இந்திரனால் அனுப்பப்பட்ட மேனகை மூலம் அஸ்வத்தாமனுக்கு ஒரு பல்லவன் பிறந்தான் என்று ஒரு ஸ்லோகம் உள்ளது..

***

38.இரண்டாம் நரசிம்ம வர்மனின் ரேயூருச் செப்பேடுகள் இறுதியில் ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவை பின்வருமாறு

ரிஷிகள் இயற்றிய ஸ்லோகங்கள்

பிராமணர் சொத்து கொடிய விஷம்; வேறு எந்த விஷமும் விஷமாகாது ; விஷம் ஒருவனைக்கொல்லும்; பிரம்ம சொத்தோ புத்திர பெளத்திரர்களையும் கொல்லும்

*

தான் அளித்தது பிறர் அளித்தது எதுவாயினும் பூமியை அபகரிக்கும் ஒருவன் அறுபதினாயிரம் ஆண்டுகள் மலத்தில் புழுவாகப் பிறந்து உழல்வான்.

*

அநேகர் நிலம் அளித்து இருக்கிறார்கள் . பலர் அ தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்  எந்த எந்த அளவு பூமியோ அந்த அந்த அளவு பலன் .

பக்கம் 88, பல்லவர் செப்பேடுகள் முப்பது .

***

39.பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மனுடன் நடந்த பெருவளநல்லூர்ப் போரில் தோற்று, கந்தையைச் (கந்தைத்துணியைச்) சுற்றிக்கொண்டு ஓடியவன் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தன் ஆவான். கூரம் செப்பேடு (கூரம் பட்டயம்) இப்போர் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது: “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட விக்கிரமாதித்தனைக் கந்தையைச் சுற்றிக்கொண்டு ஓடும்படிச் செய்தான்” என்று விவரிக்கிறது. திருச்சிக்கு அருகிலுள்ள பெருவளநல்லூர்.பல்லவ மன்னன்: முதலாம் பரமேஸ்வரவர்மன் (அவனது போர்க்குதிரையின் பெயர் அதிசயம், யானையின் பெயர் அரிவாரணம்).சாளுக்கிய மன்னன்: பல லட்சம் வீரர்களுடன் படையெடுத்து வந்த முதலாம் விக்கிரமாதித்தன், போரின் முடிவில் தப்பிப் பிழைப்பதற்காகத் தனது அரச ஆடைகளைக் களைந்துவிட்டு, ஒரு சாதாரண கந்தைத்துணியைப் போர்த்திக்கொண்டு தனியனாகத் தன் நாட்டுக்கு ஓடி ஒளிந்தான் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

***

40.சிம்ம விஷ்ணு என்ற பல்லவன் இலங்கையை வெற்றிகொண்டான் என்ற செய்தியை இதுவரை யாரும் ஆராயவில்லை. ஏனெனில் அது மஹாவம்சத்தில் இல்லை ஆனால் 25 ஆண்டுகளுக்குத் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த மானவர்மனை நரசிம்ம வர்மன் இலங்கையில் மன்னனாக அமர்த்தினான் . முதல் தடவை அமர்த்தியபோது ஒடி வந்துவிட்டான் ; இரண்டாம் முறை நரசிம்மவர்மன் நானும் கப்பலில் வருகிறேன் என்றவுடன் அவனுக்கு சக்தி பிறந்தது . இந்த ஆண்டு 631 CE என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது

TAGS- பல்லவர் செப்பேடுகள், நான்காவது ,10 கேள்விகள் ,

—SUBHAM–

Leave a comment

Leave a comment