துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 29 (Post.16,210)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,210

Date uploaded in London –   18 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்

ஓர் ஆய்வு  –  28

(ஆர், சேஷாத்ரிநாதன்)

இராமன் சுக்ரீவன் நட்பு

இலக்ஷ்மணன் இராமன் காட்டிற்கு வந்த செய்தியையும்  சீதை கவர்ந்து செல்லப்பட்ட விவரத்தையும் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறினான். ஹனுமன்/

ஏற்கனவே ஹனுமன் இருதரப்புக் கதைகளையும் சொல்லிவிட்டா.ன். பிறகு இலக்ஷ்மணன் இராம சரிதத்தை மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். ஹனுமன் இருவருக்கும் இடையே நட்பை உருவாக்கி மொத்தக் கதையையும் சுருக்கமாகச் சொன்னான். அதவாது தெரிந்தவரை சொன்னான்.. ஹனுமனுக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சுருக்கமாகச் சொல்லிவிட்டான். இலக்ஷ்மணன் அதை முழுமையாகச் சொன்னான். இராமனின் பிறப்பு, கல்வி முறை, சீதையுடன் திருமணம், தந்தையின் கட்டளைக்கிணங்க வனவாசம், இராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட விவரங்கள் ஆகியவை. இதை இராமன் ஏன் சொல்லவில்லை? தனது வீரத்தையும், பிரதாபத்தையும் தனது வாயால் சொல்வதைவிட இலக்ஷ்மணன் சொல்வதே சிறப்பு என்று இராமன் முடிவு செய்திருக்கலாம். நட்பு உடன்படிக்கை எற்பட்டபிறகே இலக்ஷ்மணன் இந்த விவரங்களைச் சொல்கிறான். காரணம் இரண்டு நண்பர்களிடையே எந்தவித ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதற்காக.

ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्याति पृच्छति!

भुङ्क्ते भोजयते चैव षड्विधं प्रीतिलक्षणम्!!

நட்பின் இலக்கணம் என்ன? பர்த்ருஹரி சதகம் என்ற நூலில் சொல்லப்படுவதாவது. தேவைப்படும்போது கொடுப்பது, தேவைப்படும்போது எடுத்துக் கொள்வது, ரகசியங்களைச் சொல்வது, ரகசியங்களைக் கேட்பது, நமக்கு பிடித்த உணவைச் சாப்பிடுவது, அவர்களுக்குப் பிடித்த உணவைக் கொடுப்பது  ஆகியவைதான் நட்பின் இலக்கணங்களாகக் கருதப்படுகின்றன.

அடுத்து ஹனுமான் சொன்னது கதா “कथा”  இலக்ஷ்மணன் சொன்னது “चारित. இங்கு கதா என்பது பெண்பால். ஹனுமான் சீதை அபகரிப்பு மற்றும் சுக்ரீவன் மனைவி உருமை வாலியால் அபகரிப்பு விஷயங்களைச் சொன்னான். இலக்ஷ்மணன் சொன்னது சரிதம். சரித என்பது ஆண்பால். இலக்ஷ்மணன் இரானின் வீர வரலாறான தாடகை வதம், சுபாகு வதம்,  மாரீசன் வதம், கர தூஷண வதம், விராதன் மற்றும் கபந்தன் வதம் ஆகிய வீர வரலாற்றைச் சொன்னான் என்று உரையாசிரியர்கள் சொல்லியுள்ளனர். இந்த விவரங்கள் ஹனுமனுக்குத் தெரியவில்லை.

कह सुग्रीव नयन भरि बारी। मिलिहि नाथ मिथिलेसकुमारी॥1॥

இலக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஜானகி கிடைத்துவிடுவாள். கவலை வேண்டாம்” என ஆறுதல் கூறினான். சுக்ரீவனின் நட்பு உண்மையான நட்பு. அதனால் இராமனின் துயரத்தைக் கேட்டதும் தான் கண்ணீர் விட்டு அழுதான்.

जे न मित्र दु:ख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥

எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கேட்டு தான் துக்கப்பதுவதில்லையோ, அத்தகையவனைப் பார்ப்பதே பாவம் என்கிறார் துளசிதாசர்.

இங்கு உரையாசிரியர்கள் வேறு ஒரு கருத்தும் சொல்கிறார்கள். இராமன் சீதையின் பிரிவால் துயரப்படுவதைக் கேட்ட சுக்ரீவனுக்குத் தனது மனைவியின் நினைவு வந்திருக்கக் கூடும். தன்னைப் போலவே இராமனும் மனைவியின் பிரிவால் வருந்துகிறான் என்பதை நினைத்துக் கண்ணீர் வடித்திருப்பான் என சொல்கின்றனர்..

निज दुख गिरि सम रज करि जाना।

 मित्रक दुख रज मेरु समाना॥

அதாவது உண்மையான நண்பன்  தனது துன்பத்தைத் தூசிபோல நினைத்து நண்பனுக்கு ஏற்பட்ட துன்பத்தை இமய மலையாகக் கருதுவான்..

சுக்ரீவன் சீதை கண்டிப்பகக் கிடைப்பாள் “मिलिहि’  என்று சொல்கிறான். காரணம் சீதை இராவணன் தன்னைக் கடத்திச் செல்லும்போது கீழே சில குரங்குகளைப் பார்த்ததும் தன்னுடைய நகைகளை அடையாளமாக விட்டுச் செல்கிறாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது இராமன் கண்டிப்பாக தன்னைத் தேடி அங்கு வருவான் என்று. அதைத்தான் சுக்ரீவன் உறுதியாக சீதை கிடைத்துவிடுவாள் என்று சொல்கிறான்..

சுக்ரீவன் சீதையைப் பற்றிக் கூறுதல்

मंत्रिन्ह सहित इहाँ एक बारा। बैठ रहेउँ मैं करत बिचारा॥

गगन पंथ देखी मैं जाता। परबस परी बहुत बिलपाता॥2॥

மேலும் “நான் ஒருமுறை இங்கு அமைச்சர்களுடன் (நளன், நீலன், ஜாம்பவான் மற்றும் ஹனுமன்) அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவன்   ஒரு பெண்ணைக்  கவர்ந்து ஆகாய மார்க்கமாகச் சென்றதையும், அழுது கண்ணீர் வடித்தவளாய்  “புலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தோம்” என்றான் சுக்ரீவன்,

இதற்கு சமமான சுலோகம் ஆத்யாத்ம இராமாயணத்தில் உள்ளது.

एकदा मन्त्रिभिः सार्द्ध स्थितो5हं गिरिमूर्द्धनि।

विहायसा नीयमानां केनचित्‌ प्रमदोत्तमाम्‌॥’

===================

राम राम हा राम पुकारी। हमहि देखि दीन्हेउ पट डारी॥

मागा राम तुरत तेहिं दीन्हा। पट उर लाइ सोच अति कीन्हा॥3॥

“எங்களைப் பார்த்ததும் இராமா இராமா என்று அழைத்தபடியே ஓர் ஆடையைக் கீழே போட்டார்” என்றான் சுக்ரீவன்.   இராமன் அந்த ஆடையைக் கொண்டுவரச் சொன்னான். அந்த ஆடையை மார்போடு அனைத்துக் கொண்டு மிகவும் வருந்தலானான்..

இங்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது. பொதுவாக பெண்கள் தங்கள் கணவன் பெயரைச் சொல்வதில்லை. ஆனால் இங்கு சீதை இராமா! இராமா! என்று அலறியதன் மூலம்  நான் இராமனின் மனைவி. எனது நிலையை எனது கணவர் இராமனிடம் தெரிவியுங்கள் என்பதற்காகப் பெயரைச் சொன்னார் என்று சொல்கின்றனர். மேலும் சீதை மிக உயரத்தில் சென்று கொண்டிருந்ததளால் மெதுவாகச் சொன்னால் கீழே நிற்கும் குரங்குகளுக்கு கேட்காது என்று எண்ணி உரத்த குரலில் கூறியதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆபத்தில் இருக்கும் சமயம் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கணவன், மகன், குரு ஆகியோர் பெயரைச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். (பொதுவாக

आत्मनाम गुरोर्नाम नामातिकृपणस्य च ।

आयुष्कामो न गृह्णीयात् ज्येष्ठापत्यकलत्रयोः ॥

வாழ்க்கையில் செழிப்பை விரும்புவன் தனது பெயரையே உச்சரிக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இது எப்படிச் சாத்தியம்? பொதுவாக ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர்கள் இருக்கும். அதிகாரபூர்வமான பெயர். செல்லமான பெயர். தனது செல்லப் பெயரை உச்சரிக்கலாம். அதிகாரபூர்வ பெயரை உச்சரிக்ககூடாது.  உபநயனத்தின் போது ஷர்மா நாம் என்று ஒரு பெயரைச் சொல்வர். இதைத்தான் உச்சரிக்கக்கூடாது என்று சொல்வர். அபிவாதயே சொல்லி வணங்கும்போது மட்டும் இந்தப் பெயரை உச்சரிக்கலாம். ஆனால் அதை உச்சரிப்பவர் அதைக் கேட்கக்கூடாது. இதனால் தான் அபிவாதயே சொல்லி வணங்கும்போது இரு காதுகளையும் பொத்திக் கொண்டு சொல்லவேண்டும் என்று சொல்லப் படுகிறது.)

வால்மீகி ராமாயணத்திலும்

क्रोशन्ती राम रामेति लक्ष्मणेति च विस्वरम् |

स्फुरन्ती रावणस्य अन्के पन्नगेन्द्र वधूः यथा || ४-६-१०

சுக்ரீவன் சீதை இராமா! இலக்ஷ்மணா! என்று அலறிக் கொண்டே இராவணன் பிடியில் தத்தளிப்பதைப் பார்த்தேன் என்று சொல்கிறான்.

வால்மீகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 58 வது சர்கத்தில் சம்பாதி

क्रोशन्ती राम राम इति लक्ष्मण इति च भामिनी |

भूषणानि अपविध्यन्ती गात्राणि च विधुन्वती || ४-५८-१६

மீண்டும் அதே நிகழ்வை அங்கதனிடம் தெரிவிக்கிறான். மேலும் இராமா! இராமா! என்று கத்திக் கொண்டே இருந்ததனால் அந்தப் பெண் சீதையாக இருக்கவேண்டும் என்றும் ताम् तु सीताम् अहम् मन्ये रामस्य परिकीर्तनात् | சொல்கிறான்.

ஹனுமான் நாடகம் என்ற நூலிலும் இந்த விவரங்கள் கிடைக்கின்றன

पापेनाकृष्यमाणा रजनिचरवरेणाम्बरेण ब्रजन्ती किष्किन्धादोौं मुमोच प्रचुरमणिगणैर्भूषणान्यर्जितानि। हा

राम प्राणनाथेत्ययह जहि रिपुं लक्षणेनालपन्ती यानीमानीति तानि क्षिपति रघुपुर: कापि रामाउ्जनेय:॥’

சீதை, இராவணனால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டபோது,தன் நகைகள், ஆபரணங்களை வழியிலே தரையில் விட்டாள்.- அவள் மனம் கலங்கி, “ஹா இராமா! என் உயிர்நாதா!” என்று அழுதாள்.- “லட்சுமணா! எதிரியை அழித்துவிடு!” என்று கூவினாள்.- அவள் விட்ட ஆபரணங்களை ஹனுமன் சேகரித்து, பின்னர் ராமனிடம் கொண்டு வந்து காட்டினான்.)

இது சம்பந்தமாக பல நூல்களில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இங்கு சுவையான ஒரு விஷயத்தை உரையாசிரியர்கள் சொல்கின்றனர். துளசிதாசர், சீதை மூன்று முறை இராமா, இராமா, இராம என்று கத்தியாதகச் சொல்கின்றனர். இதன் தாத்பர்யம் என்ன? இராவணன் மிகச் சாமர்த்தியமாக யாருக்கும் தெரியாமல் மிக உயரத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தான். கிஷ்கிந்தாவின் மேலே செல்லும்போது சீதை கீழே குனிந்து பார்த்ததில் மூன்று குரங்குகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. அவர்கள் கவனத்தைக் கவர வேண்டும். வெறும் ஆடையைக் கீழே வீசினால் அது காற்றில் பறந்து சென்று விடும். அதற்குள் தனது கொலுசு, குண்டலம் இவைகளை வைத்துக் கட்டி  மூன்று முறை இராமா என்று அலறியபடி கீழே வீசினாள். இராமன் வந்துவிடுவானோ என்ற பயத்தில் இராவணன் வேகமாகச் சென்று கொண்டிருந்தபடியால் பின்னால் திரும்பி சீதை என்ன செய்து கொண்டிருந்தாள் எனப் பார்க்கவில்லை.

சீதையின் முதல் இராமா என்ற கூக்குரல் குரங்குகளின் கவனத்தைக் கவருவதற்காக. இரண்டாவது அலறல் இந்த ஆடையையும் நகைகளையும் இராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்வதற்காக. மூன்றாவது அலறல் நான் இராமனை விரும்புகிறேன். இவன் என்னைக் கடத்திச் செல்கிறான் என்று தெரிவிப்பதற்காக. சுக்ரீவன் இராமனிடம் சீதை ஆடையை எறிந்தாள் என்று மட்டும் சொல்கிறான். காரணம் அவன் சீதை எறிந்ததை பிரிக்கவில்லை, காரணம் அது இன்னொருவருக்குச் சேர வேண்டியது. “धन पराव बिष ते बिष भारी சுக்ரீவனைப் பொறுத்தவரை அடுத்தவரின் செல்வம் விஷத்தை விட கொடிய விஷம், அதனால் சீதை வீசியதை அவன் திறந்து பார்க்காமல் அப்படியே குகைக்குள் வைத்துவிட்டான்.. இந்த விலை மதிக்க முடியாத வஸ்து சுக்ரீவனின் கையில் கிடைத்ததுமே “சீதையைத் தேடும் பணி தொடங்கி விட்டது मम दिसि देखि दीन्ह पट डारी।  என்று உரையாசிரியர்கள் சொல்கின்றனர்.

துளசிதாசர் இங்கு “मागा राम तुरत तेहि दीन्हा” என்ற பதப் பிரயோகம் செய்துள்ளார். அதாவது तुरत என்ற வார்த்தை இங்கு முக்கியமானது.. இராமனுக்கு சீதை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் வேகத்தைக் குறிக்கிறது. சுக்ரீவனைப் பார்த்து இன்னும் ஏன் தாமதம். உடனே அதைக் கொண்டுவா என்று சொல்கிறார்.. இராமனுக்கு சுக்ரீவன் சொன்ன பொருள் சீதையுடைதுதானா என்று பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல். வால்மீகி இராமாயணத்திலும் சுக்ரீவனிடம்

तम् अब्रवीत् ततः रामः सुग्रीवम् प्रिय वादिनम् |

आनयस्व सखे शीघ्रम् किम् अर्थम् प्रविलम्बसे || ४-६-१३

இதே கருத்தைச் சொல்லுகிறார்..

**

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு  –  29 

(ஆர், சேஷாத்ரிநாதன்)

இராமன் சொன்னவுடன் சுக்ரீவன் உடனே 

वमुक्तस्तु सुग्रीवः शैलस्थ गहनां गुहाम्‌। प्रविवेश ततः शीघ्र राघवप्रियकाम्यया।॥ उत्तरीयं गृहीत्वा तु स तान्याभरणानि च। इदं पश्येति रामाय दर्शयामास दोहा ५ ( ७-८ ) # श्रीमद्रामचन्द्रचरणौं शरणं प्रपद्ये # ( ४९३ ) [ किष्किन्धाकाण्ड वानर:॥‘ (१४-१५)

சீதையின் ஆடையையும் அதில் வைக்கபட்டிருந்த நகைகளையும் இராமனிடம் காட்டினான். 

துளசிதாசர் தனது கீதாவளி என்ற நூலிலும் இதை அழகாக விளக்கி உள்ளார் 

भूषन बसन बिलोकत सियके।

प््रेाम-बिबस मन,कंप पुलक तनु, नीरजनयन नीर भरे पियके।1।

स्कुचत कहत, सुमिरि उर उमगत, सील सनेह सुगुनगन तियके।

स्वामि दसा लखि लषन सखा कपि , पिघले हैं आँच माठ मानो घियके। 2

सोचत हानि मानि मन गुनि गुनि गये निघटि फल सकल सुकियके।

वरने जामवंत तेहि अवसर बचन बिबेक बीररस बियके।3।।

 धीर बीर सुनि समुझि परसपर, बल-उपाय उघटत निज हियके।

तुलसिदास यह समउ कहेतें कबि लागत निपट निठुर जड़ जियके।4।

சீதையின் அணிகலன்கள், ஆடைகள் பார்த்ததும்,

ராமனின் மனம் பாசத்தில் மூழ்கியது;

உடல் நடுங்கியது,

மெய்சிலிர்த்தது;

தாமரைக் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

:

சீதையின் பண்பு, பாசம், நற்குணங்களை நினைத்து,

ராமன் நாணத்துடன் பேசுகிறார்;

அவரது நிலையை பார்த்த லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்,

உருகுகிறார்கள் – வெதும்பும் நெய்போல்.

ராமன், சீதாவின் இழப்பையும், அவமானத்தையும் சிந்திக்கிறார்;

அவளது நற்குணங்களை நினைத்து, மனம் உருகுகிறது.

அந்த தருணத்தில், ஜாம்பவான்  பேசுகிறார் –

அறிவும் வீரமும் கலந்த வார்த்தைகள்.

ஆத்யாத்ம இராமாயணத்திலும் இந்தக் காட்சி சொல்லப்பட்டுள்ளது

क्रोशन्तीं रामरामेति दृष्ट्वास्मान् पर्वतोपरि ।

आमुच्याभरणान्याशु स्वोत्तरीयेण भामिनी ॥ ३८॥

निरीक्ष्याधः परित्यज्य क्रोशन्ती तेन रक्षसा ।

नीताहं भूषणान्याशु गुहायामक्षिपं प्रभो ॥ ३९॥

दि निक्षिप्य तत्सर्वं रुरोद प्राकृतो यथा ॥ ४१॥

இராமன் அவற்றைப் பார்த்ததும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு சீதையை நினைத்து சாதாரண மனிதன்  போல புலம்பினான். வால்மீகியும் இராமனின் துயரத்தை தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

अभवत् बाष्प सम्रुद्धः नीहारेण इव चन्द्रमाः || ४-६-१६

सीता स्नेह प्रवृत्तेन स तु बाष्पेण दूषितः |

हा प्रिये इति रुदन् धैर्यम् उत्सृज्य न्यपतत् क्षितौ || ४-६-१७

=========================== 

சர்கம்   4 

இராமனுக்கு சுக்ரீவன் அறுதல்

कह सुग्रीव सुनहु रघुबीरा। तजहु सोच मन आनहु धीरा॥

सब प्रकार करिहउँ सेवकाई। जेहि बिधि मिलिहि जानकी आई॥4 

அதைக் கண்ட சுக்ரீவன் “ஐயனே! கேளுங்கள். கவலையை யொழித்து மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஜானகியைத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவி புரிவேன்” என்றான்.

अलम् वैक्लव्यम् आलम्ब्य धैर्यम् आत्मगतम् स्मर |

त्वत् विधानाम् न सदृशम् ईदृशम् बुद्धि लाघवम् || ४-७-५

महात्मा च विनीतः च किम् पुनर् धृतिमान् महान् || ४-७-७

बाष्पम् आपतितम् धैर्यात् निग्रहीतुम् त्वम् अर्हसि |

मर्यादाम् सत्त्व युक्तानाम् धृतिम् न उत्स्रष्टुम् अर्हसि || ४-७-८

व्यसने वार्थकृच्छ्रे वा भये वा जीवितान्तगे ।

विमृशंश्च स्वया बुद्ध्या धृतिमान्नावसीदति ॥ ४.

ये शोकम् अनुवर्तन्ते न तेषाम् विद्यते सुखम् |

तेजः च क्षीयते तेषाम् न त्वम् शोचितुम् अर्हसि || ४-७-१२

शोकेन अभिप्रपन्नस्य जीविते च अपि संशयः |

स शोकम् त्यज राजेन्द्र धैर्यम् आश्रय केवलम् || ४-७-१३ 

வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி சொன்னதுபோல  சுக்ரீவன் இராமனுக்கு ஆறுதல் கூறுகிறான். “தாங்கள் தைரியத்தைக் கைவிடாதீர்கள்.  தங்களைப் போன்ற உத்தமர்கள்,தைரியசாலிகள்  இப்படி துக்கப்படலாமா? ஒரு வானரமான நானும் மனைவியைப் பிரிந்தவன்தான். ஆனாலும் தைரியத்தைக் கைவிடாமல் மனத்தைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.. அப்படி இருக்கும்போது தங்களைப் போன்ற வீரர்கள், படித்தவர்கள், நல்ல நடத்தை உள்ளவர்கள் இப்படிக் கண்ணீர் விடலாமா? ஆதலால் துயரத்தை விட்டு  மனதைத் திடப் படுத்திக் கொண்டு தைரியமாக இருங்கள். ரகுவம்சத்தில் எல்லோரும் வீரர்கள். அந்தக் குலத்தில் பிறந்த வீரனான நீங்கள் தைரியத்தைக் கைவிடலாமா? இது தங்களுக்கு அழகல்ல  “तब भार्या महाबाहो भक्ष्यं विषकृतं यथा। त्यज शोकं-॥தங்கள் மனைவி ஜீரணிக்க முடியாத விஷம் கலந்த அன்னத்தைப் போன்றவள். அவளை யாரும் எளிதில் நெருங்க முடியாது. ஆகையால் கவலையை விடுங்கள் ” என்று சுக்ரீவன் கூறினான். 

சுக்ரீவன் सब प्रकार कारिहाँ सेवकार्ड என்று சொல்கிறான். அதாவது சீதை இருக்குமிடத்தைக் கண்டறிவது, எதிரிகளுடன் போரிடுவது, சீதையை மீட்டுக் கொண்டுவருவது ஆகிய சேவைகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.

‘जेहि बिधि मिलिहि जानकी आई  இங்கு ‘ஆயி’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அதாவது இதற்காக தாங்கள் எதுவும்  செய்யவேண்டியதில்லை. நாங்களே சீதையைக் கண்டுபிடித்து, எதிரிகளுடன் போரிட்டுச் சீதையை மீட்டு வரும்வோம் என்ற பொருளாகும்.. 

வால்மீகி இராமாயணத்திலும் இதே கருத்தை சுக்ரீவன் சொல்வதாக எழுதி இருந்தார் 

भर्या वियोगजम् दुःखम् न चिरात् त्वम् विमोक्ष्यसे |

अहम् ताम् आनयिष्यामि नष्टाम् वेदश्रुतीम् इव || ४-६-५

सातले वा वर्तन्तीम् वर्तन्तीम् वा नभः तले |

अहम् आनीय दास्यामि तव भार्याम् अरिन्दम || ४

इदम् तथ्यम् मम वचः त्वम् अवेहि च राघव |

न शक्या सा जरयितुम् अपि सः इन्द्रैः सुर असुरैः || ४-६-७

तव भार्या महाबाहो भक्ष्यम् विष कृतम् यथा

त्यज शोकम् महाबाहो ताम् कान्ताम् आनयामि ते | ४-६-८

अनुमानात् तु जानामि मैथिली सा न संशयः 


“உமது மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்து விரைவில் விடுபடுவீராக.  {தொலைந்து போன} வேதசுருதியைப் போல, நான் அவளை மீட்டு வருவேன்[ அரிந்தமரே }, ரசாதலத்தில் {பாதாளத்தில்} இருந்தாலும், நபஸ்தலத்தில் {வானத்தில்} இருந்தாலும், நான் உமது மனைவியைக் கொண்டு வந்து உம்மிடம் கொடுப்பேன். இராகவரே, என்னுடைய இந்தச் சொற்கள் உண்மையானவை என்பதை அறிவீராக. மஹாபாஹுவே, உமது   {மனைவியான சீதை  விஷம் கலந்த உணவைப்} போல, இந்திரன் முதலிய ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} செரிக்கப்பட சாத்தியமற்றவள் ஆவாள்.” இவ்வாறு சுக்ரீவன் இராமனிடம் கூறினான். இத்தோடு நில்லாமல் சுக்ரீவன் பிரதிஞ்ஞையும் செய்கிறான்.. 

இது ஆத்யாத்ம இராமாயணத்தில்

सुग्रीवो5प्याह हे राम प्रतिज्ञां करवाणि ते। समरे रावणं हत्वा तव

दास्यामि जानकीम्‌॥’

 இது வால்மீகி இராமயணத்தில்

सत्यम् तु प्रतिजानामि त्यज शोकम् अरिन्दम |

करिष्यामि तथा यत्नम् यथा प्राप्स्यसि मैथिलीम् || ४-७-३

रावणम् सगणम् हत्वा परितोष्य आत्म पौरुषम् |

तथा अस्मि कर्ता नचिराद् यथा प्रीतो भविष्यसि || 

“அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். மைதிலியை எவ்வாறு மீட்க முடியுமோ அவ்வாறு முயற்சி செய்வேன். சோகத்தைக் கைவிடுவீராக. இராவணனையும், அவனது கணங்களையும் {தொண்டர்களையும்} கொன்று, என் ஆற்றலுக்கு நிறைவளிக்கும் வகையிலும்,  நீர் மகிழ்ச்சியடையும் வகையிலும் விரைவிலேயே நான் செயல்படுவேன்” என்றான் சுக்ரீவன்.

***

Leave a comment

Leave a comment