பல்லவர் செப்பேடுகள் பற்றி எட்டாவது 10 கேள்விகள் விடைகள்

Written by London Swaminathan

Post No. 16,211

Date uploaded in London – 18 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

71.

கண்டாலே கொல்லும் பாம்பு விஷம் பற்றி பல்லவர் செப்பேடுகள் சொல்லும் சுவையான விஷயம் என்ன ?

72

கர்ணன் பற்றி வேலூர்ப்பாளையம் செப்பேடு என்ன சொல்கிறது ?

73

எந்த ஒரு செப்பேட்டில் மட்டும் தமிழே இல்லாமல் சம்ஸ்க்ருதம் மட்டும் உள்ளது ?

74

பல்லவர் கால தொழிலாளர் வகைகளைக் கூறும் செப்பேடு எது ?

75

பிராமணர்களுக்கும் பல்லவர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

76

தொத்தி ஸ்வாமி, கண்ண ஸ்வாமி,  நந்தி ஸ்வாமி ஆகிய மூவர்களின் பெயர்கள் தெரிவிக்கும் செய்தி என்ன ?

77

பல்லவர் செப்பேடுகளில் பழமையானது எது ? புதுமையானது எது? இடைப்பட்டவை யாவை ?

78

வரலாற்றில் உள்ள பல்லவ மன்னர்களின் கால வரிசை என்ன ?

79

பிராமணர்களுக்கு கிரஹண தானம் கொடுத்த பல்லவன் யார் ?  உத்தராயண புண்ய கால தானம் கொடுத்தபல்லவன் யார்  ?

80

பல்லவர் செப்பேடுகளில் உள்ளஅஷ்ட மங்கல சின்னம் என்றால் என்ன ?

******************************

விடைகள்

71.சிம்ம விஷ்ணுவுக்கு முன்னால், அரசுபுரிந்த நந்தி வர்மன்,  திருஷ்டி விஷம் என்ற ஒருவனை வெற்றி கொண்ட செய்தி வேலூர் ப்பாளையம் செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது  . பார்வையினாலேயே மரணத்தை விளைவிக்கக்கூடிய விஷத்தைக் கொண்ட பாம்பையே திருஷ்டி விஷம் என்பார்கள். ஆனால், இங்கே அது அந்தப் பெயரைக்கொண்ட நாகராஜன் ஒருவனையே குறிக்கும்  கர்நாடகத்தில் ஆட்சி புரிந்த  சிந்தர் என்னும் அரச பரம்பரையினர்  தங்களை  த்ருஷ்டிவிஷனுடைய சந்ததியாகக் கூறிக்கொள்வார்கள் . நாக வம்சத்தைச் சேர்ந்த அந்த மூல புருஷன் கர்நாடகத்துக்கு வந்தான் என்றும் அவன் தங்கியிருந்த காலத்தில் தோன்றிய  சந்ததியார் சிந்தர் என்றும்  அவர்களுடைய சாசனங்கள் கூறுகின்றன . அவர்களில் ஒருவனைத்தான் நந்தி வர்மன் தோற்கடித்திருக்க வேண்டும்.

அரக்கோணத்துக்கு அருகில் கிடைத்த வேலூர்ப்பாளையம் செப்பேடு, மேலும் கூறுவதாவது

ஸ்லோகம் 4

அசோகவர்மன் போன்ற மன்னர்களுக்குப்பிறகு  அந்த வம்சத்தில் கால பார்த்தாரு பிறந்தான் .

ஸ்லோகம் 5

அவன் மகன் சூத பல்லவன் .அவனுக்குப் பிறந்தவன் வீர கூர்ச்சன். அவன் நாகராஜன் மக்களுடைய கைத்தலத்தோடு  அரசையும் பற்றினான்.

ஸ்லோகம் 6

அவனுக்கு ஸ்கந்த சிஷ்யன் மகனாகப்பிறந்தான்  அவன் இருபிறப்பாளர்களின் கடிகையை சத்யசேனன்  என்ற அரசனிடம் கைப்பற்றினான்.  அதற்குப்பிறகு காஞ்சீபுரத்தைக் கைப்பற்றிய  குமார விஷ்ணுவும் சோழர்களுடைய சென்னைக்கு வடவாகினியான  புத்த வர்மனும் அரசரானார். இந்த நான்கு அரசர்களும் இதே முறையில் வாயலூர்க் கல்வெட்டிலும்  குறிக்கப்பட்டிருப்பது கவனிக்காத தக்கது . அப்பால் விஷ்ணுகோபன்  போன்ற பல அரசர்களுக்குப் பிறகு  சிவா பெருமான் அருளால்  திருஷ்டிவிஷனை ஆடச்செய்த  நந்தி வர்மன் அரசனானான் . அப்பால் சிம்மவர்மன் அரசன் ஆனான்  அவன் மகன் சிம்ம விஷ்ணு  காவிரி பாயும் சோலா நாட்டைக் கைப்பற்றி  பல்லவர் ஆட்சிக்கு உட்படுத்தினால். அவன் மகனான மகேந்திரனுக்கு  வாதாபி நகரின் நடுவிலிருந்த  வெற்றித்தூணை எடுத்து வந்த நரசிம்ம அவர்மன் பிறந்தான். 13 ஆவது சுலோகத்தில் பிராமணர்களுடைய கடிகையை மீண்டும் அமைத்தான் சந்திரனைத் தலையில் தரித்த  சிவபெருமானுக்கு கைலாயத்தைப் போன்று கல்லால் ஒரு ஆலயம் அமைத்தான் .

என்னுடைய கருத்து

ஒவ்வொரு செப்பேடும் புதுப்புது மன்னர் கள் பெயர்களைச் சொல்கின்றன அவைகளை க்க கால வரிசைப்படி தொகுத்து ஆராய வேண்டும்

***.

72.சுலோகம் 26

பிரசித்திபெற்ற பராக்கிரமம் கொண்டவனும் சோழவம்சத்துச் சூடாமணியும் தியாகத்தில் ராதேயனும் (காவது கர்ணனுக்குச் சமமானவப்பும்)  உயர்ந்த காததையுள்ளவனும் (செய்நன்றி மறவாதவனும்) ஆனா குமாராங்குசன்  என்பான் இதற்கான விண்ணப்பத்தைச் செய்தான் .

(முன்னர் வரும் ஸ்லோகங்களில்( எண் 23) பிராமணர் பெயர்களில்சிவதாசன் என்ற பெயரும் உள்ளது பிற்காலத்தில் தாசன் என்ற பெயரைப் பிராமணர்களிடையே காண்பது அரிது ).

அந்தக் காலத்திலேயே தியாகத்துக்கு கோட்டைக்கும் கர்ணன் பெயரை ஒப்பிடுவது குறிப்பிட்டது தக்கது .

சுலோகம் 26

பிரசித்திபெற்ற பராக்கிரமம் கொண்டவனும் சோழவம்சத்துச் சூடாமணியும் தியாகத்தில் ராதேயனும் (காவது கர்ணனுக்குச் சமமானவப்பும்)  உயர்ந்த காததையுள்ளவனும் (செய்நன்றி மறவாதவனும்) ஆனா குமாராங்குசன்  என்பான் இதற்கான விண்ணப்பத்தைச் செய்தான் .

(முன்னர் வரும் ஸ்லோகங்களில்( எண் 23) பிராமணர் பெயர்களில்சிவதாசன் என்ற பெயரும் உள்ளது பிற்காலத்தில் தாசன் என்ற பெயரைப் பிராமணர்களிடையே காண்பது அரிது ).

அந்தக் காலத்திலேயே தியாகத்துக்கு கோட்டைக்கும் கர்ணன் பெயரை ஒப்பிடுவது குறிப்பிட்டது தக்கது .

***

73.தமிழ்நாட்டில் வாணியம்பாடிக்கு அருகில் கிடைத்த உதயேந்திரம் செப்பேடுகள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும் உள்ளது . கூலசர்மன் என்ற பிராமணனுக்கு முதல் நந்தி வர்மன் கொடுத்த தானத்தைக் குறிப்பிடும் சாசனம் இது . கி.பி 550.

ஆயினும் இது ஒரிஜினல் சாசனம் இல்லை பிற்காலத்தில் காபி/ நகல் எடுத்ததால் பிழைகள் மலிந்துள்ளன ஆயினும் இது உண்மையாசை சாசனம் என்பதற்குச் சான்றாக முதல் ஏட்டின் முன்புறத்தில் முதல் பராந்தக சோழன் காலத்தில் எழுதப்பட்ட  கடையீடு ஒன்றும் காணப்படுகிறது

ஒரு கீழ்நிலை அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவு அல்லது ஆணையை கடையீடு என்பார்கள்.

தமிழ் வாசகம் சொல்லுவதாவது ,

மாதிரைகொண்ட கோப்பரகேசரி வர்மனான முதற் பராந்தக சோழனுடைய ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டு , காஞ்சி வாயிலாகிய இகன்மறை மங்கலத்து  ஸபையோமும் உதயசந்திர மங்கலத்து ஸபையோமும் இவ்விரண்டு ஊரோமும் கூடி ஒன்றானமையில் இதன் மேற்பட்டது ஓரூராய்  வாழ்வோமானோம் .

சோழர் காலத்தில் இந்த பல்லவ சாசனத்தை உண்மையென்று கருதியத்தால்தான்  இதன் மீது கடையீடு எழுதியுள்ளனர்.

***

74.கர்நாடகத்தில் பெல்லாரி ஜில்லாவில் ஹீரடஹள்ளி என்னுமிடத்தில் சின்னப்பா என்ற வியாபாரியிடம் வாங்கப்பட்ட செப்பேடுகளில் எட்டு ஏடுகள் உள்ளன . இது சிவஸ்கந்த வர்மன் , பிராமணர்களுக்கு அளித்த தானத்தைச் சொல்லும் சாசனம் இது .

வரி 1

காஞ்சீபுரத்திலிருந்து பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவரும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவனுக்கு அக்னிஷ்டோமம் , வாஜபேயம் அஸ்வமேதம் ஆகிய யாகங்களை செய்தவனும்  தர்ம மகா ராஜாதிராஜனுமான  சிவஸ்கந்த வர்மன்

வரி 3

நம்முடைய விஷயத்தில்—(அதாவது ராஜ்யத்தில்)– உள்ள எல்லா அரச குமாரர், சேனாபதி , ராஷ்டிரிக்கர்—(ராஷ்டிரபாலர்)–மாதவிக்கர்—(சுங்க அதிகாரி)– தேசாதிகர்—(நாடு ஆட்சி செய்வோர்)– கிராமகிராம போஜர்—(அந்தந்த ஊரின் போஜர்)–வல்லபர்- (குதிரை காவலர்,) கோவல்லபர்—(ஆநிரை காவலர்)–அமைச்சர், அரக்கஅதிகர்—(காவலர்)– குமிக்கர், தூதிகர், நெய்கர், –( நையா யோகிக்கர்-அதிகாரி)– மற்றும் நம்மால் ஏவலை நிறைவேற்றச் செல்லும் சஞ்சரந்தர்  — (ஒற்றர், சஞ்சரிப்போர்)–  படைவீரர் ஆகியோருக்கு கட்டளை :

வரி 5

ஆப்பிட்டி கிராமத்தில் வசிப்பவர்களும் சில்லரேகை கொடுங்கை அனுபவிப்பவர்களுமான பிராமணர்களுக்கு  நம்மால் இங்கே இப்போது வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன .

இதற்குப்பின்னர் பிராமணர்களின் கோத்திரம் முதலியவற்றுடன் அவர்களுடைய பெயர்கள் உள்ளன.

இப்போது நாம் லட்சம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினை பயன்படுத்துகிறோம் ; பல்லவர் செப்பேடுகளில், குறிப்பாக இந்தச் செப்பேட்டில் நூறாயிரம் என்ற சொல் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது அனால் இதிலும் ஆயிரம் என்ற எண், சம்ஸ்க்ருத சஹஸ்திரத்தின் திரிபு ஆகும் .

***

75.பல்லவர் செப்பேடுகள் முப்பது நூலிலுள்ள செப்பேடுகள் ஒன்றிரண்டினைத் தவிர மீதி எல்லாம் பிராமணர்களுக்குத் தானம்  கொடுத்த செய்தியைக் கூறுகின்றன. அந்த தான விஷயம் இல்லாவிடில் இவ்வளவு வரலாற்றுச் செய்திகள் கிடைத்திராது; முப்பது செப்பேடுகளிலும் சுமார் 600 பிராமணர்களின் பெயரும் கோத்திரமும் உள்ளதை போல வேறெங்கும் தொடர்ச்சியாக தகவல் கிடைப்பது அரிதாகும்.

*** 

76.யுவ மகாராஜன் விஷ்ணுகோபனுடைய நெடுங்கராயச் செப்பேடுகளில் மூவர் பெயரும் தா னம் பெற்றோரின் பெயர்களாக வந்துள்ளன .

பல்லவர் செப்பேடுகள் முப்பது நூல் பக்கம் 303 ,

இவர்கள் ஓவர் பெயருக்கும் முன்னால் நதிப்பி போஜர் என்ற அடைமொழி உள்ளது . பிரம்மதேயம் என்று சொல்லாமல் சாரணிக கிராமம்- அதாவது சரண டைந்தவர்களுக்கு க்க கொடுக்கப்பெற்ற ஊர் என்றே குறிக்கப்பட்டுள்ளது . சுவாமி என்ற சொல் அந்நாளிலே அரசுரிமை கொண்டிருந்தவர்களுக்கே  வழங்கப் பெற்று வந்தது ; ஆகவே இவர்கள் மூவரும் சிற்றரசர்களாக இருந்து  பதவியை இழந்து பல்லவர்களிடம் புகலிடம் தேடி வந்தவர்கள் என்று கருதப்படுகிறது . நதிப்பி என்பது அவர்களுடைய ஊராக இருந்திருக்கலாம் .

போஜர் என்ற பெயர் கொண்ட குறுநில மன்னர்களின் வம்சம் மேலைக் கடற்கரை ஓரமாக  கோவாவை ஒட்டிய பிரதேசத்தில் ஆட்சி புரிந்திருந்தது  அவர்கள் யதுகுளத்தில் ஹேஹய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் . நாலாம் நூற்றா ண்டு முதல் ஏழாம் நூற்றா ண்டு வரை மன்னர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கொங்கணத்து மெளரியர்கள் அவதிகளை அடிமைப்படுத்தியதால் பல்லவர்களிடம் புகலிடம் தேடி வந்தனர் போலும் .

***

77.பல்லவர் செப்பேடுகள் முப்பது புஸ்தகம் கால வரிசைப்படுத்திய் கொடுத்துள்ளது :

மயிதவோலு , ஹீரஹடஹள்ளி, குணபதேயம், செந்தலூர், ஓங்கோடு-1, உருவப்பள்ளி, நெடுங்கராய, வே சந்த, பீகிர, மங்களூர், விழாவெட்டி, ஓங்கோடு -2 , சுரா செப்பேடுகள் 

***

78.வரலாற்றில் உள்ள பல்லவ மன்னர்களின் கால வரிசை

சிம்ம  விஷ்ணு 575-600 CE

மகேந்திரவர்மன் 600-630 CE

நரசிம்மவர்மன்  630-668

2 மகேந்திரவர்மன் 668-670

பரமேஸ்வர வர்மன் 670-695

2 நரசிம்மவர்மன் 695-728

2பரமேஸ்வர வர்மன் 728-731

2 நந்தி வர்மன் 731-795

தந்தி வர்மன் 795-846

3  நந்தி வர்மன் 846-869

நிருபதுங்கன்  869-880

அபராஜித வர்மன் 880-897 CE

***

79.கிரஹண தானம் கொடுத்த பல்லவன் – இரண்டாம் நரசிம்ம வர்மன் சந்திர கிரஹண காலத்தில் தானம் அளித்த செய்தி ரேயுறுத் செப்பேடுகளில் காணப்படுகிறது

உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டுத் தானம் வழங்கிய பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆவார்.ஆந்திரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இவருடைய பல்லவர் செப்பேட்டின்படி, தனது ஆட்சியின் 19-ஆம் ஆண்டில், பௌஷ்ய மாத சுக்ல பக்ஷ திரயோதசி திதி கொண்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, உத்தராயண புண்ணிய கால நிமித்தமாக ‘குப்புநூறு’ என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவசர்மன் என்ற பிராமணருக்கு அவர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.உன்னக்குரவய பாளையம் செப்பேடு தரும் தகவல் இது.

***

80.பல்லவர் செப்பேடுகளில் உள்ளஅஷ்ட மங்கல சின்னம் :

பல்லவர் காலச் செப்பேடுகள் மற்றும் அவர்களின் நாணயங்களில் அஷ்டமங்கலச் சின்னங்கள் (அல்லது மங்கலச் சின்னங்கள்) இடம்பெற்றுள்ளன.

பல்லவர்கள் தங்களது அரசு ஆவணங்களான செப்பேடுகளைப் பாதுகாப்பாக இணைக்கும் செப்பு வளையங்களின் முகப்பு முத்திரைகளிலும் (Seals), அவர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் பல்வேறு மங்கலச் சின்னங்களைப் பொறித்துள்ளனர்.

ஸ்ரீவத்ஸம் (மறுவடிவம்): திருமகளின் மறுவடிவமாகக் கருதப்படும் இந்த மங்கலச் சின்னம் பல்லவர் நாணயங்களிலும் செப்பேட்டு முத்திரைகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.நந்தி (காளை): பல்லவ மன்னர்களின் முதன்மை இலச்சினையான நந்திச் சின்னம் செப்பேட்டு முத்திரைகளின் மையப்பகுதியில் வீற்றிருக்கும்.இருவிளக்குகள் (குத்துவிளக்கு): மங்கலத்தைக் குறிக்கும் விளக்குகள் நந்தியின் இருபுறமும் செப்பேடுகளில் செதுக்கப்பட்டிருக்கும்.சாமரம் (கவரி): அரச மரியாதையையும் சுபிட்சத்தையும் குறிக்கும் சாமரம் போன்ற அஷ்டமங்கலக் கூறுகள் இவர்களின் முத்திரைகளில் உண்டு.பூரண கும்பம் (கலசம்) & குடை: சில பிற்காலப் பல்லவர் செப்பேட்டு முத்திரைகளில் மங்கலக் கலசம் மற்றும் வெண்கொற்றக்குடை போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

Tags- பல்லவர் செப்பேடுகள், எட்டாவது 10 கேள்விகள் , பல்லவர் செப்பேடுகள் முப்பது

–subham–

Leave a comment

Leave a comment