
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,212
Date uploaded in London – 19 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1990ம் ஆண்டு நடந்த ஒரு ரயில் பயணம்?! என்ன நடந்தது?
ச. நாகராஜன்
இரண்டு தோழிகள் ரெயில்வேயில் வேலைக்கு ஆள் எடுப்பதைக் கேள்விப்பட்டு குஜராத்திற்குப் பயணமானார்கள். அவர்கள் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயிலைப் பிடிக்க வேண்டும். ஆனால் முதல் ரயிலில் ஏராளமான இளைஞர்கள் அவர்களை சீண்டி கேலி செய்யத் தொடங்கியதால் ரயிலிலிருந்து இறங்கினர்.
அடுத்த ரயில் பயணமாவது நல்ல பயணமாக அமைய வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்தனர்.
அடுத்த ரயிலுக்கான ரிசர்வ் சார்ட்டில் அவர்கள் பெயர் இல்லை. அவர்கள் டிக்கட் பரிசோதகரை நாடி தங்களுக்கு
ரிஸர்வேஷன் செய்து இடம் ஒதுக்குமாறு வேண்டினர்.
அடுத்த ரயிலும் வந்தது. அதில் ஏறி இரண்டு இடங்களைப் பிடித்தனர். அவர்களுக்கு முன்னால் இரண்டு ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். முந்தைய அனுபவம் அவர்களை உஷார் படுத்தியது. ஆனால் வேறு வழியில்லை. அங்கேயே உட்கார்ந்தனர். டிக்கட் பரிசோதகர் வருகிறாரா என்று ஆவலுடன் பார்த்த வண்ணம் இருந்தனர். சிறிது நேரம் கழித்து அவர் வந்தார். ஆனால் வேறு எங்கும் சீட் இல்லை என்றும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைகள் அடுத்த ஸ்டேஷனிலிருந்து வரப்போகும் பயணிகள் ரிஸர்வ் செய்த சீட்டுகள் என்றும் அவர் கூறினார். ஆகவே அடுத்த ஸ்டேஷனில் வேறெங்காவது காலியாக இடங்கள் இருக்கிறதா என்று அவர்கள் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ராத்திரி நேரத்தில் எங்கு போய் இடம் தேடுவது? இரண்டு தோழிகளும் மலைத்தனர்.
அவர்கள் கலவரப்பட்டு பேய் அடித்தது போல இருந்ததை எதிரில் உட்கார்ந்திருந்த இரு ஆண்களும் பார்த்தவண்ணம் இருந்தனர்.
அடுத்த ஸ்டேஷனும் வந்தது. என்ன செய்வது என்று தோழிகள் மலைக்கும் போது எதிரில் இருந்த இரு ஆண்களும் வேகமாக வண்டியிலிருந்து
இறங்கினர். உடனே அவர்கள் சீட்டில் தோழிகள் அமர்ந்தனர். ரயில் கிளம்பியது.
அப்போது ரயிலிலிருந்து இறங்கிய இரண்டு பேரும் உள்ளே வந்தனர். பேசாமல் தரையில் படுத்தனர். எதுவும் பேசவில்லை.
ஒருவாறாகப் படுத்துத் தூங்கிய அவர்கள் காலையில் டீ, டீ என்ற சப்தம் கேட்டு எழுந்தனர்.
காலை விடிந்து விட்டது. இருவரும் அந்த இரு ஆண்களுக்கும் மனமார்ந்த தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
அதில் ஒருவர் பேசினார்; “ சகோதரி! உங்களுக்கு குஜராத்தில் ஏதாவது உதவி வேண்டுமென்றால் தயங்காமல் எங்களைக் கேளுங்கள்.”
ஒருவாறாக தைரியம் அடைந்த தோழிகள், தங்கள் டயரியை அவர்களிடம் நீட்டினர்.
அவர்கள் தங்கள் பெயரையும் விலாசத்தையும் எழுதினர்.
“நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்து விட்டது. போய்வருகிறோம்” என்று கூறிய அவர்கள் ஸ்டேஷனில் இறங்கினர்.
கூட்டத்தோடு கூட்டமாக கலந்தனர்.
தோழிகள் அந்த இருவரின் பெயரைப் படித்தனர்.
ஒருவர் நரேந்திர மோடி. இன்னொருவர் சங்கர் சிங் பகேலா.
இந்த சம்பவத்தை விவரிக்கும் நண்பர் இப்போது புதுடில்லியில் மத்திய ரயில்வே தகவல் அமைப்பில் ஜெனரல் மானேஜராகப் பணி புரிகிறார்