Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி?
ச. நாகராஜன்
இளம் தாய்மார்களும் நடுத்தர வயது பெண்மணிகளும் தங்கள் குழந்தைகளையும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியரையும்,, ‘படம் வரையாதே, கதை கேட்காதே! டி.வி. பார்க்காதே, படி, படித்து முன்னேறு’ என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் குழந்தைகளை எரிச்சலடையச் செய்வதுடன் அவர்களே தங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தைத் தடுப்பதை அறியாமல் இருக்கிறார்கள்!
கற்பனை என்பது அற்புதமான ஒன்று! இளம் வயதிலேயே அவர்கள் போக்கில் மனச் சித்திரங்களை உருவாக்க விட்டுவிட்டால் அவர்கள் சிறந்த சாதனையாளர்களாக பிற்காலத்தில் உருவாவதோடு வகுப்பில் முதன்மை பெற்றவராகவும் வருவார்கள் என்பது கிரியேடிவிடி பற்றிய அறிவியல் ஆய்வுகளின் முடிவு!
பேப்பரையும், வண்ணத்தூரிகையையும், வண்ணங்களையும் தந்து குழந்தைகளை அவர்களின் படைப்புலகில் விட்டுவிட்டு அகன்று விட வேண்டும். நிஜத்தில் நாம் பார்க்கும் உருவங்களையும், விலங்குகளையும் போடுமாறு அவர்களை வற்புறுத்தக் கூடாது. தங்கள் கற்பனைக்கேற்ப உருவங்களையும், இயற்கைக் காட்சிகளையும் வரையும் அவர்கள் பிற்காலத்தில் பல்வேறு நிஜங்களைப் பார்க்கும் போது தங்கள் அனுபவத்தில் மெருகேற்றிக் கொள்வார்கள்.
‘கதை சொல்வது’ என்பது படைப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு அற்புத உத்தி! பல்வேறு நாடுகளுக்குச் சென்ற வீரர்களைப் பற்றிய வரலாறுகள்
எல்லா நாகரிகங்களிலும் உண்டு. அர்ஜுனனின் யாத்திரை, கலிவரின் யாத்திரை என கற்பனையைத் தூண்டிவிடும் வரலாறுகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. மகாபாரதமும் ராமாயணமும் சுட்டிக் காட்டாத கற்பனையே இருக்க முடியாது!
அதேபோல ‘தொல்லைக்காட்சி’ என்று செல்லமாகத் திட்டப்படும் தொலைக்காட்சியில் விலங்குகள் பற்றியும், பல்வேறு நாகரிகங்கள், கண்டுபிடிப்புகள் பற்றியும் காண்பிக்கப்படும் டிஸ்கவரி சானல் நிகழ்ச்சிகளை, சீரியலை ஒதுக்கிவிட்டு குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பிக்க வேண்டும். திரைப்படங்களிலும் சாகஸம், துணிச்சலைக் காட்டும் அற்புதப் படங்கள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பார்க்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்.
எந்த ஒரு தீமையிலும் ஒரு நன்மை இருக்கும். அதைக் கண்டு அதில் குழந்தைகளை ஈடுபடுத்தி விடலாம். தாழ்வு மனப்பான்மையை அகற்றி சாதனையாளர்களாகத் தங்கள் குழந்தைகளை உருவாக்குவது இளம் தாய்மார்களின் கையிலேயே உள்ளது.
கிரியேடிவிடி எனப்படும் படைப்பாற்றலையும், கல்வியையும் பற்றி ஆய்வு செய்துள்ள ஆய்வாளர்கள் சாண்ட்ரா டபிள்யூ ரஸ் மற்றும் ஜனஸ் சால்க் ஆகியோர் “குழந்தைகளின் கற்பனையும், அவர்களின் மனச் சித்திரங்களுமே அவர்களின் வருங்காலத்தை நிர்ணயிக்கின்றன” என்கிறார்கள்.
சினேகிதி மாத இதழில் 2005, ஜூன் மாதம் வெளியான கட்டுரை.
Swami Ranganathananda (15 December 1908 – 25 April 2005) was a speaker, writer and author of many famous books; he was the president of Sri Ramakrishna Mission. He travelled around the world giving lectures on philosophy.
In his talk on Kena Upanishad he said,
Man in spite of his obvious limitations, thinks too much of the strength and glory, but all this ends in death. If only he knew the One, the source of all strength, glory and excellence in man and nature, how blessed his life would be, and how fearless of death he would become! Life is trivial if it doesn’t overcome death in the knowledge of the deathless Self, the one Self in all.
This echoed in Shakespeare in his Measure for Measure (II.ii.119-24)
But man, proud man, Dressed in a little brief authority, Most ignorant of what he’s most assured, His glassy essence, like an angry ape 150Plays such fantastic tricks before high heaven As makes the angels weep,
In moments of deep thoughtfulness, man feels within himself the presence of a power greater than his given self. He then learns to feel humility and to experience an elevation of spirit in that humility.
****
In his talk on Isa Upanishad he said,
Here is another beautiful epithet of the Atman (aatman): Kavih, the poet, the seer. He is the great poet, and the world is his poem, coming out in rhymes and verses. The word Kavih, poet, means not only one who composes verses, but one who is far seeing-kraanta darsi- as Sankaracharya puts it, one who has insight and can see and grasp the inner significance of things. The great poets of the world share this virtue with the Atman. Poetry brings a message from the heart of nature. What to the prosaic and humdrum mind may seem ordinary and insignificant, to the poet will be charged with meaning and significance. This thought has been neatly expressed in an English verse depicting the poetic vision of Shakespeare:
The poem hangs on the berry bush
When comes the poet’s eye;
The street begins to masquerade
When Shakespeare passes by.
Every act, every experience, every situation is full of poetic suggestion to a poet; his sensitive mind sees meaning and significance in them. There is no event or thing in nature which does not ensoul the Soul of the universe; the poet catches the divine pulsations of nature by momentary elevations to kinship with the divine Poet. The ordinary individual, on the contrary, sees only prosaic, discrete facts and events.
****
Fear of death, fear of life, and fear of being reborn, must give way to an all-round fearlessness. Weakness and cowardice are worse deaths than physical deaths. In the words of Shakespeare (Julius Caesar, II. ii. 32-33)
Cowards die many times before their deaths;
The valiant never taste of death but once.
Is there a philosophy which can generate and sustain such a spirit of valour, of heroism, capable of releasing vast stores of human energy? Yes, say the Upanishads; yes says the Gita and yes says Swami Vivekananda. It is the knowledge of the truth of the Atman, the immortal Self of man.
****
In his talk on Katha Upanishad he said,
The mood oof questioning comes to all people at some time or other in their lives. But the mood doesn’t stay; the pressures of external life drive it away and man continues his humdrum existence shut from the knowledge of the mystery which alone readers life meaningful and worthwhile. But if the mood stays, man becomes philosophical; he achieves spiritual depth. If it is not properly handled, however, the mood will make man pessimistic and apathetic and rob him of all zest in life. He will become in the words of Shakespeare ‘sicklied over with the pale cast of thought; from the thoughtless and shallow of optimism of worldliness, he will swing to the opposite extreme of the sickly pessimism of otherworldliness.
–subham—
Tags- Shakespeare ,the Upanishads, Swami Ranganathananda, talks, Kena, Katha, Isa, Julius Caesar, , Measure for Measure
ஜகன்மோகினி கேசவர் கோவில்: ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 30
விசித்திர கோவில்! ஒரு புறம் பெருமாள்! மறுபுறம் மோகினி! ஜகன்மோகினி கேசவர் கோவில்: ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்-30
ஆந்திரப் பிரதேசத்தில் ராஜ மஹேந்திரபுரம் /ராஜமுந்திரி அருகிலுள்ள ரயலி மஹாவிஷ்ணு-ஜகன்மோகினி கோவில் ஒரு விசித்திரமான– வேறு எங்கும் இல்லாத புதுமையான— கருங்கல் சிற்பம் உடைய கோவில் ஆகும் .
எங்கே உள்ளது?
ரயலி மஹாவிஷ்ணு-ஜகன்மோகினி கோவில்
ராஜமஹேந்திரபுரத்திலிருந்து 40 கி.மீ.
காகிநாடாவிலிருந்து 74 கி.மீ.
அமலாபுரத்திலிருந்து 34 கி.மீ.
கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள இந்த ஸ்தலம் கோதாவரி நதியின் உபநதிகளான வசிஷ்ட ஆற்றுக்குக்கும் ,கெளதமி ஆற்றுக்கும் இடையே இருக்கிறது.
என்ன அதிசயம் ?
கருங்கல்லிலான சிலையில் ஒரு புறம் மஹாவிஷ்ணுவும்/கேசவ சுவாமி, மறுபுறம் ஜகன்மோகினியும் இருப்பது ஒரு அற்புதம் ஆகும். அதில் சிற்பியின் மகத்தான கைவண்ணத்தைக் காணலாம். சிலை மிகவும் பெரியது சுமார் இரண்டு மீட்டர் உயரம் ! ஐந்து அடி உயரம் , மூன்று அடி அகலம்!
ஆணும் பெண்ணும் ஒரே கல்லில் எதிர் எதிர் புறம் இருக்கின்றன.
சங்கரநாராயணர், அர்த்த நாரீ ஸ்வரர் போன்ற சிலைகளில் ஒரே புறத்தில் ஆண் பெண் உருவங்கள் இருக்கும். இது அப்படியல்ல.
ஏன் இந்த வடிவம்?
தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்த கதை தெரியாத இந்து இல்லை.அப்போது அசுரர்களை ஏமாற்ற மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அவர் எடுத்த ஒரே பெண் வடிவ அவதாரம் மோகினி. அசுரர்கள் காம வயப்பட்டு அமிர்தத்தை இழந்தனர். சிவனை ஏமாற்றிய பஸ்மாசுரனை , மோகினி தனது தந்திரத்தால் அழித்தாள் ; சிவனுக்கு மோகினி மேல் காதல் ஏற்படவே ஐயப்பன் /சாஸ்தா பிறந்தார் . அந்த மோகினி இங்கே ஒரே கல்லிலான தத்ரூப சிற்ப வடிவத்தில் உள்ளார்.
விக்ரமதேவன் என்ற மன்னர் கனவில் , விஷ்ணு வேண்டிக்கொண்டதன் பேரில் இங்கே கோவில் கட்டப்பட்டது . சிலையும், கனவில் கண்டபடி பூமிக்கு அடியிலிருந்து கிடைத்ததாக தல வரலாறு மொழிகிறது.
சிலையின் அழகு
கேசவ சுவாமி என்னும் மஹா விஷ்ணு நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரம் இரண்டு கைகளில்; மந்தர மலையும் கதையும் மேலும் இரண்டு கைகளில். .
சிலையின் மறுபுறத்தில் மோகினியின் உருவம் பெண்களுக்கே உரித்தான முடி அழகுடன் உள்ளார்
கேசவரைச் சுற்றி நாரதர், தும்புரு, கின்னர தேவர்கள், ஆதி சேஷன் ஸ்ரீதேவி பூதேவி உருவங்களையும் காணலாம்.
மேலும் ஒரு சிறப்பு
பெருமாளின் பாதங்களிலிருந்து எப்போதும் தீர்த்தம் வருகிறது. இதை கங்கை ஜலம் போல் புனிதமாகக் கருதி பகதர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
கோவிலுக்குப் பழமையான வரலாறு இல்லை; சிலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழும்பிய கோவில் இது. 11ஆம் நூற்றா ண்டுக்குக் பின்னர் எழுந்த கோவில்; பழைய கோவில் இருந்த இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
திருவிழாக்கள்
மார்ச்/ஏப்ரல் மாதத்தில் கல்யாண உற்சவம், இதே போல வெவ்வேறு மாதங்களில் மேலும் இரண்டு கல்யாண உற்சவம்; கிருஷ்ணன் பிறப்பு, பீஷ்ம ஏகாதசி, கார்த்திகை மாத க்ஷீராப்தி த்வாதசி , நவராத்ரி
SRI JAGANMOHINI KESAVA & GOPALA SWAMY TEMPLE, RYALI
Executive Officer,
Sri Jaganmohini Kesava & Gopala Swamy Temple,
Samalkota
East Godavari District, AP
***
எதிரே சிவன் கோவில்
உமா கமண்டலேஸ்வர கோவில்
ஜகன் மோகினி கோவிலுக்கு எதிரே சிவலிங்கம் காட்சி தரும் உமா கமண்டலேஸ்வர கோவில் இருக்கிறது.
கமண்டலத்துடன் சிவலிங்கத்தை பிரம்மா பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். இங்கும் சிவலிங்கம் மீது தண்ணீர் அபிஷேகம் செய்தவாறு இருக்கிறது. ஒரு காலத்தில் காடுகளாக இருந்த இடத்தில் இந்தக் கோவில்கள் தோன்றியுள்ளன. அதில் கடவுள் மீதோ அல்லது பாதங்களிலிருந்தோ தீர்த்தம் வரும்படி செய்தது சிற்பிகளின் சிறப்பு, அவ்வாறு வரும் தண்ணீர் தேஙகாது மறைவதும் குறிப்பிடத்தக்கது.
–subham—
Tags- ரயலி , உமா கமண்டலேஸ்வர கோவில், விசித்திர கோவில், ஒரு புறம் பெருமாள் மறுபுறம் மோகினி, ஜகன்மோகினி கேசவர் கோவில், ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்–30 ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆகஸ்ட் 2024 ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளியாகும் இந்த பத்திரிகையில் ஆரோக்கியம் சம்பந்தமான நல்ல கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆசிரியர் திரு ஆர்.சி.ராஜா. தொடர்புக்கான தொலைபேசி எண் 98431 57363. வருட சந்தா ரூ 180/
மௌனம் தரும் உடல் ஆரோக்கியமும், உள்ள ஆரோக்கியமும்!
ச.நாகராஜன்
மௌனத்தினால் ஏற்படும் நன்மைகள்
மௌனமாக இருப்பதன் மூலம் பல நன்மைகளை நாம் பெற முடிகிறது. அவையாவன:
1) தெளிந்த மனநிலையை எப்போதும் தருகிறது
2) தன்னை உணர வழி காட்டுகிறது
3) மூளையை ஊக்குவித்துச் செயலாற்ற உதவுகிறது. மூளையில் நல்ல செல்களை வளர்ச்சி அடையச் செய்வதோடு நினைவாற்றலைக் கூட்டுகிறது.
4) மனஇறுக்கத்தைப் போக்குகிறது.
5) முன்னேறவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் நம்பிக்கையுடன் செயலாற்றச் செய்கிறது
6) படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது
7) சிந்தனை ஆற்றலை மேம்படுத்தி ஒருமுனைப்புடன் எதையும் கவனிக்குமாறு செய்கிறது.
ஆய்வுகள் தரும் முடிவுகள்
அறிவியல் தரும் ஆய்வு முடிவுகள் சில இதோ:
உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது
ரத்த அழுத்தம் சீராகிறது
இரண்டு நிமிட ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு நல்ல இசையைக் கேட்டவுடன் ஒருவரின் இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகிறது.
வேகமாகப் பறக்கும் எண்ணங்களை நிறுத்தி ஆக்கபூர்வமாக சிந்தனை செய்ய வழி வகுக்கிறது.
Stress Harmone -ஆன கார்டிஸாலைக் குறைக்கிறது.
தூக்கமின்மை என்ற வியாதியை வராமல் தடுத்து அமைதியாக உறங்க வழி வகுக்கிறது.
மௌனத்தை ஊக்குவிக்க வழிகள்
எப்போதும் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்படுதல்.
வீட்டில் டி.வி., ரேடியோ ஆகியவற்றை மிதமான ஒலியில் கேட்டல். தேவை என்றால் மட்டுமே கேட்டல்.
அனைவரும் எழுந்திருக்கும் முன்னர் சற்று முன்னதாக வீட்டில் எழுந்திருத்தல்.
காதில் இயர் போனை மாட்டிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்தல்.
கொஞ்சம் கொஞ்சமாக மௌனமாக இருக்கும் நேரத்தைக் கூட்டுதல்’
மௌன விரதம்
மௌனமாக இருப்பதை எல்லா மதங்களும் ஊக்குவிக்கின்றன. இந்து மதத்தில் மௌன விரதம் ஒரு ஆன்மீக நெறியாகவே சொல்லப்படுகிறது.
தக்ஷிணாமூர்த்தி மௌனத்தினாலேயே அனைத்தையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு விரித்து விளக்கினார் என்பதை அறிகிறோம். (குரோஸ்து மௌனம் வியாக்யானம்)
மன மகிழ்ச்சி, அமைதி,மௌனம்,தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை ஆகிய இவை மனத் தவமெனப்படும்
சாணக்கியர் தனது சாணக்ய நீதியில் எந்த ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் மௌனத்தை அனுஷ்டிக்கிறானோ எவன் ஒருவன் இப்படி ஒரு வருடம் தொடர்ந்து செய்கிறானோ அவன் ஆயிரம் வருட காலம் சொர்க்கத்தில் போற்றப்படுவான் என்கிறார்.
மௌனத்தை விட அதிகப் பயன் தருமானால் மட்டுமே நீ பேசலாம் என்பது அருமையான ஒரு பழமொழி.
ஜைனம் போற்றும் மௌனம்
ஜைன மதத்தில் பெரியோர்கள் ஐந்து மஹாவிரதங்களையும் சாமான்யர்கள் ஐந்து அணுவிரதங்களையும் அனுஷ்டிக்கின்றனர். இதில் உபவாசமும் மௌனவிரதமும் வலியுறுத்தப்படுகிறது. மார்கழி மாதம் மௌன ஏகாதசி என்ற நாளில் முழு நாளையும் மௌன விரத நாளாக அனைத்து ஜைனர்களும் அனுஷ்டிக்கின்றனர்.
மௌனத்தினால் வார்த்தைகள் அளந்து பேசப்படும் பழக்கம் ஏற்படுகிறது. ஆகவே நாளடைவில் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒருவருக்கும் தீங்கு ஏற்படாதபடி நலனுக்காகவே வெளிப்படுவதாக ஆகிறது.
ஜென் குட்டிக் கதை
ஒரு ஜென் குட்டிக்கதை உண்டு.
ஜப்பானில் கியோஷி என்ற ஒரு சீடர் மலை ஒன்றின் உச்சியில் வசித்து வந்த ஹோஷின் என்ற ஒரு ஜென் மாஸ்டரை அணுகினார். தனக்கு உபதேசம் செய்யுமாறு அவர் மாஸ்டரைக் கேட்க மாஸ்டர் அவர் கண்களையே உற்று நோக்கினார். பின்னர் தரையில் இருந்த ஒரு கல்லை ஒரு தட்டு தட்டினார். இது எழுப்பும் ஒலியைக் கேட்டாயா? என்றார் அவர். ஆம் கேட்டேன் என்றார் கியோஷி.
இப்போது மௌனத்தின் மொழியைக் கேள் என்றார் அவர். நாட்கள் ஓடின. மாதங்கள் ஆயின. மௌனம் எழுப்பும் ஒலி பற்றி அவர் சிந்தித்தார். நாளடைவில் நுட்பமான மாறுதல்கள் அவர் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட ஆரம்பித்தது. ஒருநாள் அருகிலிருந்த ஆறு ஒன்றில் ஓடும் நீரின் சலசலவென்ற ஓசையை அவர் கேட்டார்.
இயற்கையின் அந்த ஒலியில் அவர் மௌனத்த்தின் மொழியை உணர்ந்தார். அவர் உள்ளத்தில் ஏற்பட்ட அந்த மாறுதல் அவருக்கு ஒரு தெளிவைத் தரவே அனைவரும் அவரை நாடலாயினர்.
ஒரு நாள் கெஞ்சி என்ற ஒரு செல்வந்தர் அவரிடம் வந்து தன் இரு மகன்களும் போடும் சண்டைக்கு ஒரு தீர்வு தருமாறு கேட்டுக் கொண்டார்.
இருவரையும் தன்னிடம் வருமாறு அழைத்த கியோஷி ஒரு ஆற்றங்கரையில் இருவரையும் அமர்த்தினார். அங்கு மௌனமாக அமருமாறு அவர் சொல்ல முதலில் தயங்கிய இருவரும் பிறகு அப்படியே அமர்ந்தனர். தெள்ளிய ஆற்று நீர் ஓடிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழிந்தது.
\
பின்னர் இருவரையும் ஒருவரோடு ஒருவர் பேசுமாறு கியோஷி பணித்தார். இப்போது அவர்கள் இருவரும் மற்றவர் கூற்றில் உள்ள உண்மையைத் தெளிவாகக் கண்டனர். உணர்ச்சிகள் தந்த கோபம் போய் உண்மையை அவர்கள் தெளிவாகக் கண்டவுடன் இருவரும் சமாதானமாகப் பேசி சண்டையை முடித்தனர். இந்த அதிசயமான மாறுதலைக் கண்ட செல்வந்தர் கெஞ்சி, தான் என்ன கைம்மாறை மாஸ்டருக்குச் செய்ய வேண்டுமென்று கேட்டார்.
கியோஷியோ இந்த மௌனத்தின் மஹிமையை உலகெங்கும் பரப்புவதே அவர்கள் தனக்குச் செய்யும் கைம்மாறு என்றார்.
அவர்களும் அப்படியே செய்ய ஆரம்பித்தனர். கியோஷியின் இறுதி நாளில் அவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரது இறுதி உபதேசத்தை அருளுமாறு அனைவரும் கேட்க அவர், “மௌனம் தரும் ஒலியைக் கேளுங்கள்; பிரபஞ்சத்தின் அறிவை அறிவீர்கள்” என்றார்.
புத்தரின் அருளுரை
புத்தர் ஒரு பௌர்ணமி அன்று பூரண ஞானம் பெற்ற நிலையில் அவர் மௌன நிலையை அடைந்தார். அனைத்து தேவதைகளும் அவரை அணுகி அருளுரை தருமாறு வேண்டின.
“அறிந்தவர்கள் ஏற்கனவே அறிந்து விட்டார்கள். அறியாதவர்கள் என் வார்த்தையினால் பயனடைய மாட்டார்கள். எங்கு சொற்கள் முடிகின்றனவோ அங்கு ஞானம் பிறக்கிறது” என்றார் அவர்.
உடனே தேவதைகள், “அது சரிதான். ஆனால் அறிந்தும் அறியாமலும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உபதேச உரைகளை அருளுங்கள். அதுவே மௌனத்தின் பெருமையை அவர்களை உணரவைக்கும்“ என்றன. உடனே புத்தர் பேச ஆரம்பித்தார். அவர் பேசிய சொற்கள் மௌன நிலையை அடைவதற்கான உரைகளாக அமைந்தன.
அருளாளர்கள் போற்றும் மொழி
ஸ்வாமி விவேகானந்தர், மஹரிஷி அரவிந்தர் ஆகியோர் நீண்ட மௌன விரதத்தை அனுஷ்டித்து பெரும் ஆற்றலைப் பெற்று உலகத்திற்கு நல்கினர்.
ரமணரின் ஆற்றல்
மௌனத்தின் எல்லையற்ற ஆற்றலை உணர்த்தியவர் பகவான் ரமண மஹரிஷி. மௌனத்திற்குள் பிரபஞ்சமே அடங்கி இருக்கிறது என்றார் அவர். இதை அவர் நிரூபித்தும் வந்தார். அவரிடம் சந்தேக விளக்கம் பெற விரும்பி வருவோர் அவர் முன் அமர்ந்து தான் கேட்க விரும்பிய கேள்விகளை நினைத்தவுடனேயே, அதற்கான சரியான பதில்களை அவர்கள் உள்ளத்தில் உடனடியாகப் பெறுவது வழக்கம். இந்த அனுபவத்தைப் பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
காந்திஜியின் மௌன விரதம்
மகாத்மா காந்திஜியும் கூட மௌன விரதத்தை அடிக்கடி மேற்கொண்டார்.
தனக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகள் மௌன விரதத்தினாலேயே தனக்குக் கிடைக்கின்றன என்றார் அவர். தனது சுயசரிதத்தில் அவர் மௌனம் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்.
மௌனம் என்பது வாழ்க்கை முறை
மௌனம் சர்வார்த்த சாதகம் (மௌனம் அனைத்தையும் சாதகமாக்க வல்லது) என்று பஞ்சதந்திரம் கூறுவது சத்தியமான மொழியாகும்.
வெறும் சொல்லடுக்குகளுக்கும் ஓசைக்கும் அப்பாற்பட்டது மௌனம். அது ஒரு வாழ்க்கை முறை. அதை நடைமுறைப்படுத்தும் போது நாம் அடையும் பேறை சொல்லாலும் ஓசையாலும் விளக்க முடியாது!
சான்றோர்கள், ஆன்றோர்கள் ஒரே மாதிரி சிந்திப்போப்பார்கள் என்பது முது மொழி; அது மட்டுமல்ல உண்மைக் கவிஞர்களுக்கு – உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளிஉண்டாகும் என்பது பாரதியார் கண்ட உண்மை ;இதை அவரது பாடல்களிலும் வள்ளுவன் குறளிலும் , கம்பன் கவிதையிலும்; ரிக் வேத முனிவர்கள் வாக்கினிலும் காண்கிறோம். ஷேக்ஸ்பியர் நமக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வளைந்த கவிஞர்; நடக்க ஆசிரியர்; 37 நாடகங்களையும் நூற்றுக்கு மேலாண் அங்ககீழாக் கவிகளையும் இயற்றி இங்கிலாந்தில் இருந்து கொண்டு ஆங்கில மொழியின் புகழைப் பரப்பினார்; நம் நாட்டுக்கு கவிஞர்களையோ ஆளோ அவரை விட பல் நூற்று அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். ஆனால் நாம் தமிழ் மொழியையு சம்ஸ்க்ருத மொழியையும் உலகம் முழுதும் பரப்பவில்லை; அதனால் நாம் புகழ் திக்கெட்டும் பரவவில்லை.நிற்க.
இப்போதாவது அவர் 500 ஆண்டுக்கு முன் செப்பியதை நான் அதற்கு முன்னரே செப்பிவிட்டோம் ன்பதைப் பகர்வோம்; எல்லோருடனும் அதைப் பகிர்வோம் .
குடி குடியைக் கெடுக்கும் என்பதை எல்லோரும் அறிவர் ; குடி குட்டி இரண்டும் வேண்டாம் என்று வள்ளுவன் சொல்லுவான்; மது, மாது ஆகிய இரண்டும் திருவை நீக்கும்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.–குறள் 920
இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
For those forsaken, misfortune’s device
Is double faced women, drink and dice- Kural 920
Or
Prostitutes ,liquor and gambling are the friends of those who have been forsaken by the Goddess of Wealth (Lakshmi)-920
or
Women of double minds, strong drink, and dice; to these giv’n o’er,
Are those on whom the light of Fortune shines no more.920
****
ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
And Shakespeare says
“Olivia: What’s a drunken man like, fool?
Clown: Like a drowned man, a fool and a mad man: one draught above heat makes him a fool; the second mads him; and a third drowns him.”
– Twelfth Night, or What You Will (1.5.120-124)
“Olivia: What’s a drunken man like, fool?
Clown: Like a drowned man, a fool and a mad man: one draught above heat makes him a fool; the second mads him; and a third drowns him.”
கோமாளி பதில்- மூழ்கிப்போனவன் போல கதைப்பான்; முட்டாள் ; பைத்தியக்கார பயல். ஒரு மொந்தை கூடினால் முட்டாள் ஆகிவிடுவான் ; இன்னும் ஒரு மடக்கு, பைத்தியம் ஆகி விடுவான் மூன்றாவது டோஸ் ; ஆள் முழுகிப்போவான்.
****
கம்ப ராமாயணத்தில் குடித்துக் கெட்டுப்போன சுக்ரீவனும் இதை யே சொல்லி அழுகிறான்
கம்பன் அதை சுக்ரீவன் வாயிலாக கிட்கிந்தாக் காண்டத்தில் வழங்கும் பாங்கு படித்துச் சுவைக்க வேண்டியது.
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்ச மெல்லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே
பொருள்:-
குடித்தால் வஞ்சனை, திருடுதல், பொய் கூறல், அறியாமை, மாறான கொள்கை, அடைக்கலம் அடைந்தோரை கைவிடுதல், செருக்கு, ஆகியன வருத்தும். அதே நேரத்தில் தாமரை மகளும் (லெட்சுமி) நீங்கிவிடுவாள் நஞ்சைச் சாப்பிட்டால் உடல் மட்டும் அழியும். இதுவோ உடலையும் அழித்து ஆளை நரகத்திலும் தள்ளும்.
****
டெம்ப்ஸ்ட் TEMPEST நாடகத்தில் ஏரியல் குடிகார காட்சியை பிரஸ்ஸ்பெரோவிடம் வருணிக்கிறது; குடிகாரர்கள் கைகளால் காற்றினை அடித்து மூச்சு விட்டனர் என்கிறார் ஷேக்ஸ் பி யர்.
PROSPERO
170 Say again, where didst thou leave these varlets?170. varlets: ruffians, rascals.
ARIEL
171 I told you, sir, they were red-hot with drinking;
172 So full of valor that they smote the air
173 For breathing in their faces; beat the ground
174 For kissing of their feet; yet always bending
****
ஒதெல்லோ நாடகத்திலும் ஷேக்ஸ்பியர் குடிக்கும் காட்சிகளை வருணிக்கிறார் .
காசியோ சொல்கிறான் நன் குடிகாரன் என்று நினைத்து விடாதீர்கள் ; இதோ பாருங்கள் இது என் வலது கை ;இது என் இட து கை; நன்றாக நிற்கிறேன்; நன றாகப் பேசுகிறேன் ( குடித்தால் இதைச் செய்ய முடியாது என்பது பொருள்)
காசியோ Ay, but, by your leave, not before me. The
Lieutenant is to be saved before the Ancient. Let’s
have no more of this. Let’s to our affairs. God
forgive us our sins! Gentlemen, let’s look to our
business. Do not think, gentlemen, I am drunk. This
is my ancient, this is my right hand, and this is my
left. I am not drunk now. I can stand well enough,
and I speak well enough. OTHELLO act II
*****
ஒரு குடிகாரன் எப்படி நடப்பான் என்பதை மீண்டும் வருணிக்கிறார்; உளறுவான்; கிளி போல சொன்னதையே திரும்பிச் சொல்லுவான்; பெரிய பிரசங்கி போல நடிப்பான் ; தன்னுடைய நிழலுடன் (எதிரி என்று நினைத்து) சண்டை போடுவான் ; ஒதெல்லோ நாடகத்தில் இது போல குடி பற்றி நிறைய வசனங்கள் உள்ளன
CASIO I will rather sue to be despised than to deceive
so good a commander with so slight, so drunken,
and so indiscreet an officer. Drunk? And speak
parrot? And squabble? Swagger? Swear? And discourse
fustian with one’s own shadow? O thou
invisible spirit of wine, if thou hast no name to be
known by, let us call thee devil! –OTHELLO ACT II, SCENE III
****
FROM TIRUKKURAL
School girl crying over her drunken dad.
வள்ளுவனோ இதற்காக பத்து குறள்களை ஒதுக்கி எல்லோரையும் எச்சரிக்கிறான்
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.-923
Even the mother’s face feel painful at the sight of the drunkard’s joy. How then would the wise look at him ?- 923
Or
The drunkard’s joy is sorrow to his mother’s eyes;
What must it be in presence of the truly wise?.923
XXXX
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.–குறள் 926
The sleeping and the dead are in no way different; those that drink are always like them that eat poison -926
Or
English Couplet 926:
Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
XXXX
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.-922
English Couplet 922:
Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men’s esteem is lost.-922
Or
Let none take to the drinking habit, except those who do not value,
Their reputation , and esteem among the righteous – 922
XXXX
ராமநாடக கீர்த்தனையில் அருணாசலக் கவிராயர் இதை அழகாக நாட்டுப்புற மெட்டில் தருகிறார்.
ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர்
சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல்
கொச்சகம்-1
சாமி இந்தப் படியுரைக்கத் தம்பியும் கிஷ்கிந்தையிற் போய்
ஆமனுமான் தாரையைக் கண்டது சொன்னான் அவராலே
கோமகன் சுக்ரீவன் இளங்குமரன் வரவறிந்து கெட்டேன்
மாமதுஉண் டென்றுரைவான் சொல்லிக் கரைவானே
புன்னாகவராளிராகம் ; அடதாளசாப்பு
பல்லவி
மதுவே-உன்னாற்கெட்ட திதுவே
அநுபல்லவி
புதுமை நான்பாவ சுக்கிரீவன் எய்த
பூமிதந்தானுக்குச் சாமிதுரோகம் செய்த (மது)
சரணங்கள்
1. சாமிஎன்றங்கதன் கூவிஎனைத் தட்ட
தொட்டதும் விட்டதும் நானறியேன் முட்ட
பாமரனாய் உன்னைக் குடித்தேனே பொட்ட
பஞ்சமா பாதகன் ஆனேன்கடை கெட்ட (மது)
2. பித்தாம் உடம்புக்கு மத்தும் புறப்படும்
பெண்என்றும் தாயென்றும் தெரியாம லேவிடும்
குத்திரம் ஆம் நரகத்தினி லேயிடும்
குடித்தவன் அடுத்தவன் எடுத்தவனும் கெடும் (மது)
3. குன்றாத வாலியை வென்று பிறந்தேனே
கோதண்ட தீக்ஷாகுருவாற் சிறந்தேனே
ஒன்றா அவன்செய்த நன்றி துறந்தேனே
உன்னைக் குடித்தேனே என்னை மறந்தேனே (மது)
4. வையகம்தந்து மதிதந் தெனையாள
வைத்தானை எண்ணாமல் வைத்தாய் பழிமூள
ஐயையோ நான்சொன் காலஞ்சற் றேநீள
ஆகாமற் போனேனே ஓகோ சண்டாள (மது)
ஒருவன் குடித்துவிட்டால் எதிரே உள்ள பெண்கள் எல்லாம் அனுபவிக்க வேண்டிய பொருள் என்று நினைத்து விடுகிறான்.
–subham—
TAGS–தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன்மொழிகள்- 1, குடி , மது, கள் , கம்பன், சுக்ரீவன், அருணாசல கவிராயர், கம்பன் ஒதெல்லோ, டெம்பஸ்ட் , டவெல்ப்த் நைட் , நாடகம்
திரு மந்திரத்தில் ஏராளமான பாடல்களில் தமிழ் வேதமான திருக்குறள் மற்றும் பகவத் கீதை கருத்துக்களை திருமூலர் புதைத்து வைத்துள்ளார்; இந்த மூன்று நூல்களையும் கற்றவர்களுக்கு, உடனே அவைகளை ஒப்பிட்டு மகிழத் தோன்றும் . ஞேயம் , ஞாதுரு போன்ற சொற்களை நம்ம்மில் பலரும் கேட்டிருக்கமாட்டோம். பகவத் கீதை பயின்றோருக்கு உடனே இவை நினைவுக்கு வரும். திருமூலர் அவைகளை எடுத்தாள்கிறார்.
திருவள்ளுவர் முதல் அருட்பிரகாச வள்ளலார் வரை தங்கள் பாடல்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்களை அள்ளித் தூவி இருக்கின்றனர். ஆகையால் எவரேனும் சம்ஸ்க்ருதம் வேண்டாம் என்று கிளம்பினால் அவர்கள் தெய்வத் தமிழை அழிக்கப் புறப்பட்ட ராட்சதர்கள் , அரக்கர்கள் என்பதை அறிய வேண்டும். இந்த எல்லா நூல்களும் வேதங்களைப் புகழ்ந்து பேசுகின்றன இந்து மதத்தைக் காப்பாற்ற 3000 திருமந்திரப் பாடல்கள் கூட வேண்டாம். திருக்குறளின் அறத்துப் பாலும் பொருட்பாலும் மட்டுமே போதும் அல்லது பாரதியார் பாடல்கள் மட்டுமே போதும்.
திருமந்திரத்தில் குறளும் கீதையும் என்ற தலைப்பில் புஸ்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருப்பதால் பாடல் எண்களை மட்டும் கொடுக்கிறேன். ஆன்மீக அன்பர்களும் ஆராய்ச்சியாளர்களும் துருவி ஆராயலாம் .:-
மாணிக்கவாசகரின் காலம், திருமூலருக்கு முற்பட்டது. பிள்ளையார், சிவலிங்கம் போன்ற குறிப்புகள் திருமந்திரத்தில் அதிகம்; திருவாசகத்தில் அவை இல்லை. மாணிக்க என்ற சொல்லை பல இடங்களில் திருமூலர் பயன்படுத்துவதும் ஆராய்ச்சிக்குரியது
திருப்பாவை தாக்கங்கள் –594, 806, 2316, 2893
இன்னும் நிறைய உள ; இவை மாதிரிக்கு மட்டுமே.
பயன்படுத்திய நூல் -தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திருமந்திரம் .
*****
ஒரு சில எடுத்துக்காட்டுகள்
ஆறாம் தந்திரம் திருமந்திரம்
3. ஞாதுரு ஞான ஞேயம்
ஞேயம் ஞாத்ரு
ஞாதுரு = காண்பவன் => ஆன்மா / சீவன்
ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம்
ஞேயம் = காணப்படும் பொருள் => சிவம்.
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தின் நின்ற அறிவறி வாறே.
(ப. இ.) திருவருள் துணையால் ஞேயமாகிய திருவடிப்பேற்றில் உறைந்து நின்றோர்க்கு, முற்றுணர்வாகிய சிவஞான முதலியன நிலை பெறும்.. ஆண்டவனை அடையும் நன்னெறியினைப்பற்றி வாழும் அறிவினை நல்கும் வாயிலினைப் பயப்பதாகும் அவ் வறிவுடையவரே சிறந்த நிறைந்த அறிவராவர்.
(ப. இ.) முன் ஓதிய காண்பன், காட்சி, காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச்சிறப்பால் உள்ளங்கொள்கின்ற சிறந்த மெய்யுணர்வுடையோன் சிவபெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட்கண்ணாற் கண்டு அம் மெய்ப்பொருளின் திருவடியிற் புகுவன்,
2340, 2341 பாடல்களையும் காண்க
*****
பகவத் கீதையில் இவை முதலில் வந்தன:
अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च | एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव || 13-1
நான் 1994-ம் ஆண்டில் படித்தபோது எடுத்து எழுதிய குறிப்புகளே இதுவரை எழுத உதவின. ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை; எவ்வளவோ மந்திர,,தந்திர, எந்திரங்களை திருமூலர் குறிப்பிடுகிறார். அவைகளை உண்மையில் செய்வோர் இன்றும் இருப்பார்கள்; அவர்கள் அவைகளை விளக்குவதே முறை. எடுத்துக்காட்டாக அஷ்டமாசித்திகள், குண்டலினி சக்தி பற்றி எவர் வேண்டுமானாலும் எழுதலாம். அவைகளைச் செய்யும் சக்தி படைத்தவர்கள் இருந்தால்தான் நாம் அதுபற்றிப் பேசலாம். அதுவரை அவைகள் பற்றிப் பெருமையாகப் பேசுவதில் பொருளே இல்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குழந்தைகளும் ‘பெரிய யோசனை’ சொல்வார்கள்!
ச. நாகராஜன்
‘ஜர்னல் ஆஃப் கிரியேடிவ் பிஹேவியர்’ என்ற பத்திரிகை படைப்பாற்றலை, பயிற்சியினால் மேம்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது. அறிவியல் பூர்வமாக 170 உத்திகள் படைப்பாற்றலை மேம்படுத்த உள்ளன என்கிறது அது!
இந்த உத்தியில் ஒன்று ‘ஐடியா ஜெனரேஷன் டெக்னிக்’ எனப்படும் புதிய யோசனையை உருவாக்குவது! இதை உங்கள் வீட்டுக் குழந்தைகள் செய்ய முடியும் என்று சொன்னால் ஏளனப் புன்னகை பலருக்குத் தோன்றினாலும் தோன்றக் கூடும்! ஆனால் ஸ்வீடன் நாட்டுக் குழந்தைகள் வாங்கிய மழைக்காடுகள் பற்றிய உண்மைச் சம்பவத்தைக் கேட்டால் ‘அட, அப்படியா’ என்று ஆச்சரியப்படுவீர்கள்.
ஸ்வீடன் கிராமப்புறப் பள்ளி ஒன்றில் ஒரு ஆசிரியை! அவர் பெயர் ஈனா கெர்ன். ஒரு நாள் பாடம் நடத்துகையில் தென் துருவப் பகுதியில் ரெய்ன் ஃபாரஸ்ட் எனப்படும் மழைக்காடுகள் அழிந்து வருகின்றன என்று கூறிய கெர்ன் அதனால் சின்னச் சின்ன மிருகங்கள் முற்றிலுமாக அழிந்து வருகின்றன என்றார். வகுப்பறையில் இருந்த அனேகம் குழந்தைகள் நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை வளர்த்து வந்ததால் பெரிதும் கவலையுற்றனர். ‘மழைக்காடுகள் என்றால் என்ன? அதை நாங்கள் பார்க்க வேண்டும்’ என்று குழந்தைகள் அடம் பிடித்தனர்!
‘பெரியவர்களானவுடன் நீங்களே அதைப் பார்க்கலாம்” என்று கெர்ன் கூறிய போது, “அதற்குள் மிருகங்கள் இறந்து விடும் என்கிறீர்களே” என்றனர் குழந்தைகள்.
இந்த நிலையில் தான் ஒரு குழந்தை எழுந்து, “அந்தக் காடுகளை நாமே வாங்கி விட்டால் என்ன? அப்போது அதை யாராலும் அழிக்க விடாமல் செய்யலாமே” என்று கூறியது.
இன்னொரு ஆசிரியையாக இருந்தால் இந்த யோசனையைக் கேட்டு சிரித்து இருப்பார். கெர்ன் அப்படி இல்லை! அவர்களை ஊக்கப்படுத்தினார்.
குழந்தைகள், மழைக்காடுகள் வாங்க எவ்வளவு பணம் வேண்டும், ஒரு இடத்தை வாங்குவது என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்! எல்லாவற்றையும் விளக்கினார் கெர்ன்.
எல்லாக் குழந்தைகளும் உற்சாகமாகப் பணியைத் தொடங்கினர். சின்னச் சின்ன எக்ஸிபிஷன்கள், குதிரை ஓட்டம், நாய் ஓட்டப் பந்தயம், முயல்கள் கலந்து கொண்டு தாண்டி ஓடும் ரேஸ் என்று பல சிறுசிறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பணம் சேர்க்க ஆரம்பித்தனர். இந்தச் செய்தி மெதுவாக நாடெங்கும் பரவியது. ஸ்வீடனின் அனைத்துப் பள்ளிகளும் இதில் ஈடுபட்டன. ஒரு புதுப்பாடல் உருவாக்கப்பட்டது.
“ஆஹா, அற்புதமான
மழைக்காடுகளே!
நீங்கள் ஏன் அழிய
வேண்டும்?
எல்லா உயிரினங்களுக்கும்
நீங்கள் தேவை
நாங்கள் அழிவைத்
தடுப்போம்!
நீங்கள் துண்டிக்கப்படக்
கூடாது!
எங்களுக்கு நீங்கள் தேவை!
முதலில் ஒரு சிறு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்த குழந்தைகள் பல நாடுகளிலிருந்து ஆதரவு குவியவே மழைக்காடுகளையே வாங்குமளவு பணத்தைச் சேர்த்தனர்!
ஸ்வீடன் தேசத்து அரசர் அந்தப் பள்ளிக்கு நேரடியாக வந்து குழந்தைகளைப் பாராட்டினார்!
உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதைத் தீர்க்க குழந்தைகளிடம் வழி கேளுங்கள் என்கிறார் கெர்ன்!
நாளைக்கு உங்கள் குழந்தை ஒரு யோசனை சொல்லும்போது ஸ்வீடன் தேசத்துச் சம்பவத்தை நினைவில் கொண்டு அதற்குரிய மதிப்பைக் கொடுத்து அதை அமுல்படுத்த முடியுமா என்று பாருங்கள்.
சிறுபிள்ளைத்தனமான யோசனை என்று சொல்வது தான் சிறுபிள்ளைத்தனமானது. 170 படைப்பாற்றல் உத்திகளில் மேம்பட்ட உத்திகளுள் ஒன்று குழந்தைகளின் யோசனை!
**
சினேகிதி மாத இதழில் 2005, ஜூலை மாதம் வெளியான கட்டுரை.
1.12: The valiant Bhishma, the elder of the Kurus and the grandfather, roared like a lion and blew his conch loudly to cheer up Duryodhana.
Dr S Radhkrishnan: With him and others, loyalty to duty counted far more than individual conviction. Social order generally depends on obedience to authority. Did not Socrates tell Crito that he wouldn’t break the laws of Athens which brought him up, guarded and watched over him ?
(Here Dr R compares Bhishma with Socrates. Both knew the Government is wrong but obeyed to it.)
The soul is spoken of as invisible, inconceivable, and unchangeable. Knowing this, you should not grieve for the body.
Dr S Radhkrishnan: Arjuna’s grief is misplaced as the self cannot be hurt or slain. Forms may change; things may come and go but that which remains behind them all is for ever.
When Crito asks “in what way shall we bury you, Socrates ?
Socrates answers: In any way you like, but first you must catch me, the real me. Be of good cheer , my dear Crito , and say that you are burying my body only and do with that whatever is usual and what you think best.
Those who seek the state of Yog should reside in seclusion, constantly engaged in meditation with a controlled mind and body, getting rid of desires and possessions for enjoyment.
Dr S Radhkrishnan: Plato’s Meno begins with the question Can you tell me, Socrates, is virtue to be taught? The answer of Socrates is virtue is not taught but recollected. Recollection is a gathering of one’s self together, a retreat into one’s soul. The doctrine of Recollection suggests that each individual should enquire within himself. He is his own centre and possess the truth in himself. What is needed is that he should have the will and the perseverance to follow it up. The function of the teacher is not to teach but to help to put the learner in possession of himself.
The self-controlled yogi, thus uniting the self with God, becomes free from material contamination, and being in constant touch with the Supreme, achieves the highest state of perfect happiness.
Dr S Radhkrishnan:
brahma-sansparśham– contact with the Eternal. God is no more a rumour, a vague aspiration, but a vivid reality with which we are in actual contact. Religion is not a matter of dialectic but a fact of experience. Reason may step in and offer a logical explanation of the fact but the reasoning becomes irrelevant, if it is not based on the solid foundation of fact.
Besides these facts of religious experience are universal in space and in time. They are found in different parts of the world and different periods of history, attesting to the persistent unity and aspiration of the human spirit. The illuminations of the Hindu and the Buddhas seers, of Socrates and Plato , of Philo and Plotinus , of Christian and Muslim mystics , belong to the same family, though the theological attempts to account for them reflect the temperaments of the race and the epoch.
14-3/4 The total material substance, prakṛiti, is the womb. I impregnate it with the individual souls, and thus all living beings are born. O son of Kunti, for all species of life that are produced, the material nature is the womb, and I am the seed-giving Father.
Dr S Radhkrishnan: God has an eternal vision of creation in all its details. Whereas in Socrates and Plato, ideas and matter are conceived as a dualism, where the subtle worlds of ideas and the gross world of matter is difficult to understand, in the Gita , the two are said to belong to the Divine. God himself incarnates the seminal ideas in the forms of the gross world. These seminal ideas which have a divine origin, which belong to the casual Logos are the explanation of our love for God.
yat tu kāmepsunā karma sāhankārena vā punaḥ kriyate bahulāyāsaṁ tad rājasam udāhṛitam
Action that is prompted by selfish desire, enacted with pride, and full of stress, is in the nature of passion.
Doing unpleasant things from a sense of duty, feeling like unpleasantness all the time is of the nature of “passion”., but doing it gladly in utter unself-consciousness , with a smile on the lips, , as socrate drank hemlock, is of the nature of “goodness” it is the difference between an act of love and an act of law, an act of grace and an act of obligation.
–subham—
Tags- Dr S Radhkrishnan ,on Plato, Socrates ,Bhagavad Gita , Comparative Study by Scholars – Part 2
Great Tamil poets from Appar 600 CE to Bharati (died in 1921) challenge God of Death. Since they were worshippers of Lord Siva and His son Skanda, they didn;t fear death. They knew what happened to Yama Dharman when he came to take the like of teenage boy Markandeya. Even Tiru Valluvar mentioned it in his Tamil Veda Tirukkural.
Tirumular and Arunagiri say they will cut Yama with the sword of wisdom. Bharati is the boldest of the poets, who says, Hey! come near me. I will crush you like the weeds. Here are some poems in English and Tamil:
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள் 3
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மொத்தமுள்ள 110 பொன்மொழிகளில் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். இங்கு அவர் நமக்கு ஒரு புதிர் போடுகிறார்.
ரேகையில் கனி கொள் (94ஆவது அறிவுயரை )
நெல்லிக்காயில் ரேகைகள் இருப்பதை நாம் அறிவோம். நெல்லிக்காய் லேகியம்- சியவனப் பிராஷ் — உடலுக்கு நல்லது என்பதை ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா உலகம் முழுதும் பரப்பினார். அவருக்கு முன்னர் அவ்வையார், ஆல்பிரூனி ஆகியோரும் கரு நெல்லிக்காய் மஹிமையை புறநானூறு மூலமும் ஆல்பிரூனி நூல் மூலமும் நமக்கு உணர்த்தினர் . பாரதியார் நெல்லிக்காயை சொல்கிறாரா அல்லது வேறு ஏதாவது சொல்கிறாரா என்பது விளங்கவில்லை ; ஆகையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி ,என் ராமச்சந்திரன் கூட இரு பொருள் தருகிறார்.
ரேகையில் கனி கொள் 94
CONSUME STREAKED BERRY/AMLA/NELLIKKAAY/GOOSEBERRY
OR
SEEK OUT VEINS OF LOVE
அன்பினை நாடு/ தேடு என்பது இரண்டாவது பொருள்.
பாரதியார் இறந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; அவர் உயிரோடு இருந்தால் ஐயா, கொஞ்சம் விளக்குங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.
Be composed when exasperated என்பது இன்னும் ஒருவர் மொழிபெயர்ப்பு; களைப்பிலும் கவலையிலும் அன்றலர்ந்த செந்தாமரை போல நீ இருப்பாயாகுக ; இடுக்கன் வருங்கால் நகுக என்ற வள்ளுவன் குறளை நினைவிற்கொள்க
****
மூப்பினுக்கு இடங்கொடேல். 80
GIVE NO ROOM FOR AGEING
****
யௌவனம் காத்தல் செய்.88
CONSERVE YOUTH
****
ரூபம் செம்மை செய்.(93)
PERFECT THE FORM
OR
Be elegant in your shape
****
மூன்று வாக்கியங்களிலும் ஒரே செய்திதான் இருக்கிறது .இதற்கு குச் சில எடுத்துக்காட்டுகள் உள்ளன .
நரை திரை இல்லாமல் வாழ நமது சுற்றுப்புறச் சூழல் நமக்கு கவலை இல்லாத வாழ்வினைத் தரவேண்டும் ; இது புறநானூற்றுப் புலவர் பிசிராந்தையாரின் கண்டுபிடிப்பு
‘உங்கள் வயது பலவாகியும் இன்னும் நரையில்லாம லிருக்கின்றீர்களே! இது எப்படி முடிந்தது? என்று கேட்பீர்களானால் காரணங் கூறுகிறேன் கேளுங்கள்! என் மனைவி சிறந்த குணங்களையுடையவள்; என் மக்கள் அறிவு நிரம்பியவர்கள். என் மேற்பார்வையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என் உள்ளம் போல் ஒத்துழைக்கின்றனர். எனது நாட்டு மன்னவனும் குடிகளுக்குக் கொடுமை செய்யாமல் காப்பாற்றுகின்றான். நான் வாழும் ஊரிலே அறிவும் அடக்கமும் உள்ள ஆன்றோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் சிறந்த கொள்கையை உடையவர்கள். இதனால்தான் நான் கவலையின்றி, நரை திரையின்றி நன்றாக வாழ்கின்றேன்’’ என்று பட்டென்று பதில் கொடுத்தார்.
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்; என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர் என் இளைஞரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. (பா. 191)
இன்னொரு எடுத்துக்காட்டு பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்; நாட்டின் பிரதர் ஆனாலும் காலை 4 மணிக்குப் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சிரசாசனம் போடுவார்; இதனால் இறக்கும் வரை அவரது முகம் இளமைப் பொலிவுடன் திகழ்ந்தது.
மூன்றாவது வழியும் உண்டு; அதற்கு பொருட்செலவு அதிகம். மேலை நாடுகளில் டாக்டர் சர்ஜரிக்குகள், கிளினிக்குகள் ஆகியவற்றில் உட்கார்ந்தால் அங்குள்ள டெலிவிஷன் திரையில் ஓ டும் விளம்பரங்களைக் காணலாம்; உங்கள் பல்லினை,முத்துப் பல்லாக்குவேன் ; உங்கள் முகத்தை 16 வயது இள நங்கை ஆக்குவேன், உங்கள் சிறுத்த முலைகளை பருக்கச் செய்வேன் என்றெல்லாம் படிக்கலாம்.
சுருங்கச் சொன்னால் மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடலாம்; ஒய் கொண்டையும் போடலாம்!
****
ருசிபல வென்றுணர்.92
MASTER MANY A TASTE
OR
Win over your sensory perception
****
வருவதை மகிழ்ந்துண்.103
ACCEPT WHATEVER COMES
சாப்பாடு, உணவு பற்றி பாரதியார் அதிகமாகவே சொல்கிறார் ; இங்குள்ள அறிவுரைக்கும் இரு பொருள் உண்டு ; ஆறு சுவை உணவையும் சாப்பிடப் பழகு அல்லது நாக்கு ருசியைப் பற்றி கவலைப்படாமல் அதை வென்று மேலே செல் . ஏனெனில் அடுத்து வருவதை மகிழ்ந்துண்.103 என்றும் சொல்லிவிட்டார் ; கிடைத்ததை வைத்து திருப்தி அடை ; இதைத்தான் மஹாத்மா காந்தியும் நமது உபநிஷத்துக்களை இயற்றிய ரிஷிகளும் நமக்குத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தார்கள் .
ஏனெனில் ஆசைக்கு அளவில்லை. ஆசை வளர வளர துன்ப ங்களும் வளரும் ; உடல் நலத்தையும் மன நலத்தையும் பேணிக் காக்க,வருவதை ஏற்பதே சிறந்தது
****
மொய்ம்புறத் தவஞ் செய்.83
DO TAPAS TO ACQUIRE PROWESS
பாரதியார் மீண்டும் தவம், தியானம் பற்றிப் பேசுகிறார்; அவரே வேத மந்திரங்களை காசியில் அத்தை வீட்டில் தங்கியபோது கற்றார்; இதற்கு முன் மந்திரம் பற்றியும் ஒரு வாக்கியம் உள்ளது. ஆகையால் தவத்தின் மூலம் ஆன்மீக பலம் பெற வேண்டும் என்பதே அவரது போதனை ; புத்தரையும் ஆதிசங்கரரையும் வேதங்களையும் போற்றிப் பல பாடல்களைப் பாடியிருப்பதால் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.
*****
மோனம் போற்று.84
HAIL SILENCE
மெளனம் இருப்பதை இந்துமத நூல்கள் போற்றுகின்றன. ரமண மஹரிஷி, மெளனம் முலமே தனது போதனைகளை வழங்கினார் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) அடிக்கடி மெளன விரதம் இருந்து பேசாமல் இருந்து விடுவார் . இது ஆன்மீக பலத்தை அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல; வாயினால் கெட்டுப்போகும் வாய்ப்புகளைக் குறைக்கும். கத்திப் பேசி சக்தியை வீணடிக்காமல் இருக்கலாம். பாரதியும் வேறு ஒரு கவிதையில் இதைப்போற்றுகிறார்
மெளனம் பற்றி பாரதி பாடல்
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி.
மனத்திற் சலனமில்லாமல்,
மதியி லிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய
திவையுந் தரணி கடவாயே.
****
வீரியம் பெருக்கு. 106 INCREASE VIRILITY
இதையும் இருவிதமாக வியாக்கியானம் செய்யலாம்;
பெரும் பாலும் வீரியம் என்பதை பாலியல் நூல்களில் ஆண்மை, விந்து என்ற பொருளில் பயன்படுத்துவர்; அதாவது அலிகளுக்கு இது இல்லை. ஆகவே அலி போல இராதே; ஆண்மகன் போல இரு என்பாதே பொருள்.
இரண்டாவதாக ஆண்மை= வீரத்தைப் பெருக்கு என்றும் சொல்லலாம் .
நமது காலத்தில் வாழ்ந்த பாரதியாரே சில சொற்களால் பல பொருட்களளைத் தருகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த , ஒலித்த வேதங்களுக்குப் பொருள் கண்டுபிடிக்க முயல்வோரை எண்ணி வியப்பதா ? சிரிப்பதா ?
–சுபம்–
TAGS- ரேகையில் கனி கொள் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள் 3,