Ramayana Sculptures from Indonesia- Batch 6 (Post No.13,599)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,599

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

More Ramayana pictures from 100 year old German book.

They are from Java, Indonesian Island. This is the third batch of pictures of Ramayana Sculptures in

 Borobudur and other places.

to be continued…………………………………………………………….

—subham—

Tags- Ramayana sculptures, 100 year old German book, Java, Indonesia. Part 6

அனுமன் செய்த அற்புதம்- எட்டு நட்சத்திர தொகுதிகளைக் கடந்து பறந்தார் -10 (Post No.13,598)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,598

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 10


;முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்; வால்மீகி எழுதிய சம்ஸ்க்ருத சுந்தர காண்டத்தில், அனுமன் இலங்கைக்குப்  பறந்து சென்றபோது, எட்டு நட்சத்திரக்  கூட்டங்களைக் (EIGHT CONSTELLATIONS)  கண்டதாக எழுதுகிறார்; வானவியல் கணக்கின்படி ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  நின்று கொண்டு ஆறு  நட்சத்திர தொகுதிகளுக்கு மேல் காண முடியாது. ஆகையால் அனுமன் நீண்ட தொலைவு பறந்து சென்றதால்தான்  இவைகளைக் காண முடிந்தது என்று எண்ணலாம். அவர் 4 மணி நேரம் பறந்ததாகக் கொண்டால் இது சாத்திய மாகும்.

மேலும் வினோத நகர்வுகள் உள்ள சுவாதி நட்சத்திரத்தை (STAR ARCTURUS) அனுமனுடன் சம்பந்தப்படுத்துகிறார் வால்மீகி ; ராமாயண காலத்தில் இந்துக்கள் எந்த அளவுக்கு வானியலில் முன்னேற்றம் கண்டனர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு .

சுவாதி என்றால் சோதி நாள் எனப் பொருள் சொல்கிறது தமிழ் அகராதி. அனுமன் விஸ்வரூப வடிவம் எடுத்து சோதி போலப் பிரகாசித்து இலங்கைக்குப் பயணம் செய்தான்; துளசிதாஸ் இதை தேஜஸ் என்றார் ; வால்மீகி ராமாயணத்திலும் இது உள்ளது

xxxx

சுவாதி நட்சத்திரத்தை (STAR ARCTURUS) நட்சத்திரம்- அனுமன் தொடர்பு

கீழ் கண்ட  இணைப்பைக் காண்க ; இதே பிளாக்கில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரையில் உள்ளது

சுவாதி நட்சத்திரம் | Tamil and …

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

31 Aug 2012 — அதிசய நட்சத்திரம் ஸ்வாதி! ராம பக்தனான ஹனுமானை ஸ்வாதி நட்சத்திரத்துடன் ஒப்பிடுகிறார் மாமுனிவர் வால்மீகி. அதிசயமான…..

xxxxx

ஹனுமான் சாலீஸாவின் மேலும் 5 கண்ணிகளைக் காண்போம்:

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை

சோ இ  அமித ஜீவன் பல பாவை

29. சாரோம்  யுக பரதாப தும்ஹாரா

ஹை பரஸித்த ஜகத உஜியாரா

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே

அஸுர நிகந்தன ராம துலாரே

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா

அஸ  வர தீன ஜானகீ மாதா

32. ராம் ரஸாயன தும்ஹரே பாஸா

ஸதா ரஹோ  ரகுபதி கே தாஸா

பொருள்:

28.உங்களை வழிபட்டால் அவர்களுடைய வேண்டுதல்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுகிறீர்கள்; மதிப்பிட முடியாத பலன்களும் பக்தர்களுக்குக் கிடைக்கின்றன.

29.நான்கு யுகங்களிலும் உங்கள் புகழ் பரவிக்கிடக்கிறது . புகழானது எல்லா இடங்களிலும் ஒளி வீசுகிறது.

30.ராமபிரானின் பேரன்புக்கு இலக்கான அனுமனே! தங்கள் சாது சன்யாசிகளைக் காப்பாற்றுகிறீர்கள் ; அசுரர் குணமுள்ளோரை அழிக்கிறீர்கள் .

31.அஷ்டமா சித்திகளும், நவ நிதிகளும் எல்லோருக்கும் கிடைக்க நீங்கள் உதவுகிறீர்கள் ; இந்த சக்தி உங்களுக்கு சீதா பிராட்டியார் மூலம் கிடைத்தது

32. தங்களுடைய இருதயத்தில் ராம ரசாயனம் என்னும் அந்தக் கடல் அலை வீசிக் கொண்டிருக்கிறது ; ராமனுடைய பாத கமலங்களை சிரமேற் கொண்டு ராம தாசனாக இருக்கிறீர்கள் .

xxxx

இந்தக் கண் னிகளில் பல புதிய பலன்கள் வருகின்றன; அனுமனை உள்ளன்போடு வழிபடுவோனுக்கு எட்டு வகையான அபூர்வ சக்திகளும் ஒன்பது வகையான செல்வங்களும் கிடைக்கும் ; மேலும் பக்தர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவான் அனுமன். அது மட்டுமல்ல ,நல்லோரைக்க காப்பாற்றி அசுர சக்திகளை அனுமன் அழித்துவிடுவான் .

இவை எல்லா சக்திகளும் ராமன், சீதை மூலம் கிடைத்தன !

அஷ்டமாசித்தி

திருமூலர் திருமந்திரத்தில் இவைகளை ஒரே பாட்டில் காணலாம்

தானே அணுவும் சகத்துத் தன் நொய்ம்மையும்

மானாக் கனமும் பரகாயத் தேகமும்

தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்

ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே    

தன்னை அணுவாகச் சுருக்கிக் கொள்ளும் அணிமாவும், தன்னை உலகத்து மலை போலப் பெருக்கிக் கொள்ளும் மகிமாவும், அளவிடமுடியாத கனமுடையதாகச் செய்யும் கரிமாவும், ஆகாயம் போல நொய்தாகச் செய்யும் இலகிமாவும், எங்கும் விரிந்து எல்லா வற்றையும் தன்பால் தருவிக்கும் பிராப்தியும், தான் விரும்பிய பொருள்களைப் படைத்து விரும்பிய வடிவிற் சேர்ந்து நுகரும் பிராகாமியமும், தத்துவங்களே நீங்காது நின்று விரும்பியபடி நடத்தும் உண்மை நிலையாகிய ஈசத்துவமும், தத்துவங்களில் கலந்து எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் தன் பால் ஈர்க்கும் வசித்துவமும் எனச் சித்திகள் எட்டாகும் .

நவ நிதிகள்

சங்க நிதி, பதும நிதி, கச்சப நிதி, கற்பநிதி, நந்த நிதி, நீல நிதி, மகா நிதி, மகா பத்ம நிதி, முகுந்த நிதி,

இன்னும் ஒரு விளக்கம்

வண்டோகை , மனோகை , பிங்கலிகை, பதுமை, சங்கை, வேசங்கை , காளை  மகா காளை , சர்வதம்

4 யுகத்தில் எப்படி அனுமார் இருப்பார் ?

கிருத யுகத்தில் ரிக்வேதத்தில் காணப்படும் வருஷா காபி; த்ரே தாயுகத்தில் அனுமன் , துவாபர யுகத்தில் அர்ஜுனன் கொடியில் அனுமன் , கலியுகத்தில் ராமன் புகழ்பாடும் இடமெல்லாம் அனுமன்

XXXX

இனி சில கிருதிகளைக் காண்போம்

எனது சகோதரர் இயற்றிய இரண்டு பாடல்கள்—

மதுரை பேராசிரியர் சந்தானம் சூரிய நாராயணன் இயற்றிய இரண்டு கிருதிகள்

ராகம் சுத்த தன்யாசி; தாளம் ஆதி


பல்லவி

நீயே பாக்கியவான்- மாருதி

ராமசேவை செய்ய என்ன புண்ணியம்

செய்தாய்

அனுபல்லவி

வாயுகுமாரனே,வானர ராஜனே

தாயாம் சீதை தண்ணருள் பெற்றிட்ட(நீயே)

சரணம்

ராமநாமம் ஒன்றே தாரகமந்த்ரம்

ராம ஜெபம் செய்தால் இன்பங்கள் சேரும்

ஐம்புலன் அடக்கிய ஆஞ்சநேயா

“மதுர சூர்யன் “தொழும் மங்கள நாயகா

(நீயே)

*************

சஹானா ராகம்; ஆதி தாளம்

சஹா நான் என்று துணை புரிவாய்

சதா நின் பதம் நினைந்துருகும்

(சஹா)

தகாத செயல் செய்த தசகண்ட ராவணனின்

மகா கர்வம் அழித்த மதிமிகு மாருதியே

(சஹா)

அசோகவனம் சென்று அன்னை துயர் துடைத்தாய்

அசுரர் குலம் ஒழித்து அதர்மம் அழியச் செய்தாய்

மகா பராக்ரம கோதண்ட ராமனுடன்

மனதில் தினம் தொழும் “மதுர சூர்யன்”

(சஹா)

*************

தீட்சிதர் கிருதிகள்

பல்லவி

பவன-ஆத்மஜ-ஆக3ச்ச2 பரி-பூர்ண ஸ்வச்ச2

பரம-ஆத்ம புச்ச2 பாஹி மாம் ஜய ஜய

அனுபல்லவி

நவ வ்யாகரண நிபுண நவ வித4-அந்த:கரண

ஸி1வ ராம ஹரி க்ரு2ஷ்ண ஸ்ரீ கு3ரு கு3ஹ ஸ்மரண

சரணம்

கபட வானர வேஷ காவ்ய நாடக தோஷ

கபி யூத2 பரிபோஷ கமனீய பா4ஷ

அபக3த-அகி2ல தோ3ஷ ஹத ராக்ஷஸ-அஸே1ஷ

உபனிஷத்3-பத3 கோ4ஷ உதி3த மித்ர த்3வேஷ

அபி4-ரூப மணி பூ4ஷ ரிபு ஜய ப3ல விஸே1ஷ

ஜப ஸமாதி4-அபி4லாஷ அபரிமித ஸந்தோஷ

XXXX

XXXXXX

பல்லவி

பவன-ஆத்மஜம் ப4ஜ ரே சித்த

பரம ஸா1ந்தம் ஸுர கு3ரு கு3ஹ மஹிதம்

ஸமஷ்டி சரணம்

பு4வன த்ரய வ்யாபகம் அதி-லலிதம்

பூ4-ஸுர-ஆதி3 ஸேவித ராம தூ3தம்

ஸ்1ரவண ராம நாம ப்ரபா4வம்

ஸா1ஸ்1வத ஸஞ்ஜீவினி-ஔஷத4 கரம்

XXXXX

DIKSHITAR THREE

பல்லவி

ராம சந்த்3ர ப4க்தம் ப4ஜ மானஸ

ராக்ஷஸ-அந்தகம் ஹனுமந்தம் ஸ்ரீ

ஸமஷ்டி சரணம்

ஆமிஷீ க்ரு2த தி3வாகரம்

கே3ய ஹெஜ்ஜஜ்ஜி ராக3 ப்ரீதி-கரம்

ஸாம தா3ன பே4த3 த3ண்ட3 சதுரம்

ஸத்3கு3ரு கு3ஹ ஸம்மோதி3தம் வரம்

XXXX

DIKSHITAR FOUR

பல்லவி

வீர ஹனுமதே நமோ நமோ

மாருத தனய நமோ நமோ

அனுபல்லவி

ஸரஸீ-ருஹ வத3ன ஸ்ரீ ராம சந்த்3ர சரண

சரணம்

க்ரூர ராக்ஷஸ-ஆதி3 ஹரண

ஸர்வ வித்3யா தா3ன நிபுண

பர மந்த்ர வினாஸ1-கரண

கபி வினுத கு3ரு கு3ஹ ஸ்மரண

XXXX

VALMIKI ON HANUMAN TEJAS அனுமனின் தேக ஒளி – தேஜஸ் பற்றி வால்மீகி

तस्य संस्तूयमानस्य सर्वैर्वानरपुङ्गवैः।

तेजसापूर्यमाणस्य रूपमासीदनुत्तमम्।।4.67.5।।


सर्वैः by all, वानरपुङ्गवैः by monkey leaders, संस्तूयमानस्य of him being praised, तेजसा with lustre, पूर्यमाणस्य who was filled, तस्य his, रूपम् body, अनुत्तमम् excellent, आसीत् became.


As Hanuman was being praised by the monkey leaders, his body filled with lustre. It looked excellent.

यथा विजृम्भते सिंहो विवृद्धो गिरिगह्वरे।

मारुतस्यौरसः पुत्रस्तथा सम्प्रति जृम्भते।।4.67.6।।


विवृद्धः grown, गिरिगह्वरे in a mountain cave, सिंहः lion, यथा as, विजृम्भते he stretches himself, मारुतस्य Windgod’s, औरसः पुत्रः lawful son, सम्प्रति at that time, तथा like that, जृम्भते grew.


Just as a lion grown in a mountain cave stretches its body, the Windgod’s son stretched (his limbs) at that time.

अशोभत मुखं तस्य जृम्भमाणस्य धीमतः।

अम्बरीषमिवाऽदीप्तं विधूम इव पावकः।।4.67.7।।


जृम्भमाणस्य on expansion, धीमतः of the wise person, तस्य his, मुखम् face, आदीप्तम् glowing, अम्बरीषमिव like a burning oven, विधूमः smokeless, पावकः इव firelike, अशोभत was shining.


On expansion, wise Hanuman’s face was bright, glowing like a burning oven and shining like smokeless fire.

XXXX

SWATI STAR அற்புத சுவாதி நட்சத்திரம் பற்றி வால்மீகி

भविष्यति हि मे पन्थास्स्वातेः पन्था इवाम्बरे।

चरन्तं घोरमाकाशमुत्पतिष्यन्तमेव वा।।4.67.20।।

द्रक्ष्यन्ति निपतिष्यन्तं च सर्वभूतानि वानराः।


वानराः monkeys अम्बरे in the sky, मे I, पन्थाः path, स्वातेः of the constellation of Swati, पन्थाः इव like the path, भविष्यति will be, घोरम् terrific, आकाशम् sky, उत्पतिष्यन्तमेव च as I am flying upward, चरन्तम् while I am moving, निपतिष्यन्तम् while I am descending, सर्वभूतानि all creatures, द्रक्ष्यन्ति will see me.


‘O monkey when I fly upward in the dreadful sky or descend down, all creatures will see me, for my path will be the path of the constellation of Swati (a group of stars).

XXXX

CONSTELLATIONS அனுமன் கண்ட  நட்சத்திரங்கள்  பற்றி வால்மீகி

Following is the excerpt from Chapter 57 of Sundara Kanda:

sacandra kumudam ramyam saarka kaaraNDavam shubham |
tiShya shravaNa kadambam abhra shaivala shaadvalam || 5-57-1
punarvasu mahaamiinam lohita anga mahaagraham |
airaavata mahaadviipam svaatii hamsa viloDitam || 5-57-2
vaata samghaata jaata uurmim candra amshu shishira ambumat |
bhujamga yakSha gandharva prabuddha kamala utpalam || 5-57-3
hanumaan maarutagatirmahaanauriva saagaram |
apaaramaparishraantaH pupluve gaganaarNavam || 5-57-4


स चन्द्रकुमुदं रम्यं सार्ककारण्डवं शुभम्।

तिष्यश्रवणकादम्बमभ्रशैवालशाद्वलम्।।5.57.1।।

पुनर्वसुमहामीनं लोहिताङ्गमहाग्रहम्।

ऐरावतमहाद्वीपं स्वातिहंसविलोलितम्।।5.57.2।।

वातसङ्घातजातोर्मि चन्द्रांशुशिशिराम्बुमत्।

भुजङ्गयक्षगन्धर्वप्रबुद्धकमलोत्पलम्।।5.57.3।।

हनुमान्मारुतगतिर्महानौरिव सागरम्।

अपारमपरिश्रान्तः पुप्लुवे गगनार्णवम् ।।5.57.4।।


मारुतगतिः like the Windgod, हनुमान् Hanuman, अपरिश्रान्तः nwearied, सचन्द्रकुमुदम् Moon for a white lotus, सार्ककारण्डवम् Sun for a waterfowl, शुभम् auspicious, तिष्यश्रवणकादम्बम् Tishya and Shravana for sweetvoiced swans, अभ्रशैवालशाद्वलम् clouds for duckweeds and grassy spots on the shores, पुनर्वसुमहामीनम् Punarvasu constellation for large fish, लोहिताङ्गमहाग्रहम् the planet Mars for a crocodile, ऐरावतमहाद्वीपम् Airavata for a large island, स्वातिहंसविलोलितम् Swati for swan in water, वातसङ्घातजातोर्मि waves produced by wind for its billows, चन्द्रांशुश्शिराम्बुमत् cool Moonbeams for cold waters, भुजङ्गयक्षगन्धर्वप्रबुद्धकमलोत्पलम् nagas, yakshas, gandharvas together as fully blossomed lotuses, अपारम् गगनार्णवम् another ocean like, महानौ: huge boat, सागरम् इव like the ocean, पुप्लुवे flew across.


Hanuman leaped ike the Windgod, unwearied across the sky, as a huge boat crosses an ocean. The ocean was graced with a swan, the sky with constellation of Swati with fullblown lotuses and water lilies, like the nagas, yakshas, and gandharvas gathered together. The Moon in the sky was like a white lotus, the Sun like a waterfowl, the
auspicious Tishya and Shravana like the sweetvoiced swans, and the clouds like duckweeds and green grassy spots on the shore. The Punarvasu star was like a large fish and the planet Mars was like a crocodile. Airavata was like the great island. The waves produced by the wind were like cool moonlight in the cold water.

“ Like a winged mountain Hanuman sailed over the airy sea; Yakshas looked like the lotus flowers, Gandharvas moon, the sun its water fowl, Tishya and Sravana Nakshatras its swans and the clouds its reeds and moss. Punarvasu was the whale and Lohitanga (Mars) the crocodile, Airavata the spacious island, Swati, its decoration in the form of a swan; the breezes were its billows and the rays of the moon its cool and peaceful waves”.

The above passage is a metaphor and refers to the stars Shravana (Capricorn), Tishya (Gemini), Punarvasu (Gemini/ Cancer), Lohitanga ( Mars or red star Jyeshta)(Scorpio) and Swati (Libra). Lohitanga in Sanskrit means planet Mars. But he might have meant red star Jyeshta (Kettai in Tamil). Airavata is Indra’s heavenly elephant Vahana/vehicle. But here it means a star.’

TO BE CONTINUED……………………………………

—SUBHAM—-

TAGS- ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 10, ஸ்வாதி, நட்சத்திரம், அனுமன் செய்த அற்புதம், எட்டு நட்சத்திர தொகுதி, பறந்தார் -10 ,தீட்சிதர் கிருதிகள், மதுரை சூரிய நாராயணன் கிருதிகள் ,அஷ்டமா சித்திகள், நவ நிதிகள் , திருமந்திரம்

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்;   விஞ்ஞானிகள் அறியாத மனம்-2 (Post.13,597)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,597

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் –2

அற்புதங்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை

கட்டுரையின் இரண்டாவது பகுதி

சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து பேசினார் ………

“ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் , புராதன இந்தியாவில் , அற்புதங்கள், இப்போது இருப்பதைவிட அதிகமாகவே நடந்தன ஒரு நாடு நெருக்கமான ஜனத்தொகை அடையும்போது மனோசக்திகள் குறையும் என்று நான் நினைக்கிறேன். பெரிய நாடாக இருந்து குறைவான ஜனத்தொகை இருந்தால், மனத்தின் அபூர்வ சக்திகளை அதிகம் காணலாம். .எதையும் பகுத்தறிவுடன் நோக்கும் இந்துக்கள் இது பற்றியும் சிந்தித்தனர். இவை எல்லாம் அபூர்வமே அல்ல; இயற்கையான, சாதாரண விஷயம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்  உடல் சார்ந்த பல விதிகளை போலவே இவையும் சில விதிகளுக்குட்பட்டே நடக்கின்றன. இயற்கையில் ஏதோ ஒரு அதிசயம் என்பதல்ல.

அபூர்வமான சக்திகளுடன் சிலர் மட்டும் பிறக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்; இதை யாரும் பெறமுடியும்; ஆனால் முறையாகப் பயின்று, பயிற்சி செய்து இவைகளை பெறலாம்  இந்த விஞ்ஞானத்துக்கு ராஜ யோகம் என்று பெயர்.ஆயிரக்கணக்கானோர் இதை பயின்றுவருகிறார்கள் இந்தியாவில் இது ஒரு தினசரி வழிபாடு.

அவர்கள் முடிவாகக் கண்டது என்ன? எல்லா சக்திகளும் நம்முடைய மனதில் தான் உள்ளன.

நம்முடைய மனம் பிரபஞ்சம்  முழுதும் வியாபித்துள்ள மனதின் ஒரு பகுதிதான் . ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனமும் , எங்கிருந்தாலும் அதனுடன் தொடர்பு கொள்கிறது.

எண்ணங்கள் பரிமாற்றம் என்னும் விஷயத்தை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா? ஒரு மனிதன் சிந்திக்கும் விஷயம் ஏதோ ஒரு வகையில் உருவம் எடுக்கிறது தொலைவிலுள்ள ஒருவனுக்கு ஒரு மனிதன் செய்தி அனுப்ப எண்ணுகிறான். அதை அறிந்து , அந்த எண்ண அலைகளை ஏற்க அந்த மனிதனும் தயாராகிறான்.; அப்படியே அதை ஏற்கவும் செய்கிறான்.தொலைவு ப ற் றி கவலையே இல்லை. நான் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் மூளைக்குள் போகிறது; அதை நீங்கள் உங்களுடைய எண்ணத்துடன் கலந்து நீங்களே ஒரு புதிய வடிவம் கொடுக்கிறீர்கள் ஆனால் டெலிபதி TELEPATHY என்னும் தொலையுணர்வு அப்படிப்பட்டதல்ல . அது நேரடித் தொடர்பு

XXXXX

(என் கருத்து :- புற நானூற்றிலும் இந்த அதிசயம் உள்ளது. இந்துக்கள் வடக்கிருந்து உண்ணாவிரதம் இருப்பது ஒரு சடங்கு. இது வால்மீகி ராமாயணத்திலும் உளது பிராயோபவேசம் என்பர் ; கோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தான். அவன் புனிதமான வடக்குதிசை நோக்கி அமர்ந்தவுடன் புனிதப் புலவர் பிசிராந்தையார் வரப்போகிறார் என்றான். நீங்களும் அவரும் எக்காலத்திலும் சந்தித்ததும் இல்லை ; ஒருவரை  ஒருவர் பார்த்ததும் இல்லையே என்றனர் சகாக்கள்; ஆனால் என்ன அதிசயம் ! பிசிராந்தையாரும் வந்து வடக்கிருந்து உயிர்நீத்தார். ராமபிரான் வாழ்நாள் முடிந்தவுடன் சரயு நதியில் ஜல சமாதி அடையப் போகிறார் என்ற வுடன் பல்லாயிரம்மக்கள் அவருடன் சென்று சரயூ நதியில் மூழ்கி சொர்க்கம் சென்றனர்.  பட்டினத்தார், ஆதிசங்கர ர்  ஆகியோரின் தாயார்  இறக்கும் போது , முன்னர் கொடுத்த உறுதி மொழிப்படி , அவர்கள் தாய் முன் தோன்றி சட லத்துக்கு  தீ மூட்டினர் ; பூசலார் நாயனார் மன க் கோயில் கட்டி கும்பாபிஷேக தேதி நிர்ணயித்ததை இறைவனே சோழ மன்னனுக்கு அறிவித்தான் என்கிறது பெரிய புராணம் ; இந்தக் கலை அமெரிக்க, ரஷிய விஞ்ஞானிகளுக்கு இன்று வரை தெரியாது )

XXXX

மனது தனிப்பட்டதல்ல தொடர்ச்சியானது- இணைந்தது என்பதை யோகிகள் கண்டுபிடித்தனர் மனது என்பது பிரபஞ்சம் தழுவியது ; உங்கள் மனது, என் மனது, இன்னும் உள்ள சின்னச் சின்ன மனதுக்கள் எல்லாம் பிரபஞ்ச மனதின் துண்டுகள்தான் ; பெரிய கடலில் பார்க்கும் அலைகள் போல. (ஆனால் கடல் ஒன்றுதான்). நம்முடைய எண்ணத்தை நேரடியாகவே அனுப்பலாம்.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறீர்கள்; நாம் பெரும்பாலும் நம்முடைய சக்தியை சொந்த உடம்பினைப் பாதுகாத்துக்கொள்ள செலவிடுகிறோம் எஞ்சிய சக்தியை பிறர் மீது செலுத்துகிறோம். நம்முடைய எண்ணங்கள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போல அவர்கள் எண்ணங்களும் நம் மீது ஆதிக்கம் செய்கின்றன நம்முடைய செயல்கள், குணங்கள் முதலியவை மாறுவதைப்போல பிறர் இடத்திலும் நடக்கிறது ; ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். கற்றறிந்த, சொல்லில் வல்லவரான ஒருவர் ஒரு மணிநேரம் உங்களுடன் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்கள்  மனதில் மாற்றமே இல்லை ; இன்னும் ஒருவர் வருகிறார் ; நன்றாகப் பேசத்தெரியாது; இலக்கணப் பிழைகளுடன் கொச்சை மொழியில் பேசுகிறார். ஆனால் அவர் பேச்சு உங்களுடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன்  பொருள் என்ன ? சொற்கள் மட்டும் மாற்றத்தைக் கொணராது ; பேசுபவரின் காந்த சக்தியும் தேவைப்படுகிறது பேச்சு மூன்றில் ஒரு பகுதி தாக்கத்தை உண்டாக்கினால், பேசுவரின் பெர்சனல் மாக்னெட்டிசம் PERSONAL MAGNETISM  மூன்றில் இரண்டு பங்கு தாக்கத்தை உண்டாக்குகிறது

 குடும்பத்தில் சிலர் வெற்றி பெறுகிறார்கள்; சிலர் வெற்றி பெறுவதில்லை; குடும்பம் பாழானதுக்கு அந்த ஆள்தான் கா ரணம் என்று குற்றம் சாட்டிவிடுகிறோம்; நமது தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொவதில்லை. தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; பெரிய தலைவர்கள் வந்தனர்; புத்தகங்களை எழுதினர்; அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் எல்லாம் மகத்தானவர்கள்.  இன்றும் நாம் அவர்கள் எழுதிய புஸ்தகங்களைப் படிக்கிறோம் ஏன் ? நான் முன்னர் சொன்னது போல அவர்களின் PERSONALITY பெர்சனாலிட்டிதான். தனித்தனமைதான்.. அது,  மூன்றில் இரண்டு பங்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

XXXX

(என் கருத்து – மஹாத்மா காந்தி, நடிகர் எம்.ஜி. ஆர் பேசிய கூட்டங்களுக்கு பல லட்சக் கணக்கானோர் வந்து நீண்ட நேரம் காத்திருந்து பேச்சைக்கேட்டனர் ; இதையே செய்த ஏனையோருக்கு அப்படிக் கிடைக்கவில்லை; பெர்சனசாலிட்டி , பெர்சனல்  மாக்னட்டிசத்துக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்; புத்தர், ஆதிசங்கரர் , சுவாமி விவேகானந்தர் போன்றோருக்கும் இவை இருந்தன ). விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தான்  கண்ட அற்புதங்களை, சம்பவம் சம்பவமாக எடுத்துச் சொல்லி அவைகள் மூலம் இறைவனை அடைய முடியாது; இறைவனை அடைய முடியாதபடி தடுக்கும் படு குழிகள் அவை என்பதை விளக்கியுள்ளார்; சத்யா சாய்பாபாவும் அற்புதங்கள் பற்றிக் கேட்டபோதெல்லாம், இவை தனது விசிட்டிங் கார்ட் என்று சொல்லி மழுப்பியுள்ளார்; அதாவது இறைவனுக்கும் அற்புதங்களும் தொடர்பு இல்லை; நல்லோர், அவைகளைப்ப பயன்படுத்தி மக்களை நல்வழிப் படுத்துவர்; தீயோர் அவைகளைப் பயன்படுத்தி பெண் மீதும் பொன்  மீதும் கை வைத்து சிறைக்குச் செல்லுவார்கள் ; ராஜ யோகம், ஹட யோகம் மூலம் அபூர்வ சக்திகளைப் பெறலாம் . திரு மந்திரத்தில் திருமூலர் அட்டமா சித்தி பற்றி ஒரு அத்தியாயமே பாடியுள்ளார் )

XXX

கட்டுரையின் மூன்றாவது பகுதியில் ராஜ யோகம் பற்றிச் சொல்கிறார் .

தொடரும்

–SUBHAM—

TAGS– மனதின் சக்தி, பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், ராமன், சரயூ நதி, ஜல சமாதி,, எம் ஜி ஆர், காந்தி , கூட்டங்கள் ,  பிரபஞ்ச்ச மனது,  பாபா செய்த அற்புதங்கள் , விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம், பகுதி – 2. power of mind

நீங்கள் முன்னேற ஏ.கே. 47 மிரட்டல் தான் வேண்டுமா? (Post No.13,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.596

Date uploaded in London – —28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xx

நீங்கள் முன்னேற ஏ.கே. 47 மிரட்டல் தான் வேண்டுமா? 

ச. நாகராஜன் 

பி.பி.சி. அண்மையில் ஒலிபரப்பிய ஒரு உண்மைக் கதை சுவையான ஒன்று. முன்னேறத் துடிப்பவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதும் கூட!

டாம் என்பவர் ஒரு விவசாய ஆராய்ச்சியாளர்; ஆர்க்கிட் பூக்களைச் சேர்ப்பது அவரது தொழில். அவரை கொலம்பியா கொரில்லாக்கள் திடீரெனக் கடத்திச் சென்று விட்டனர். தென்  அமெரிக்காவில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவில் ஒன்பது மாதம் அவர் சிறை வைக்கப்பட்டார். அவர் தனது நண்பருடன் அபூர்வ தாவர வகைகளைச் சேகரிக்கச் சென்ற போது தான் இருவரும் கடத்தப்பட்டனர். பயங்கரமான ஒன்பது மாத கடத்தல் வாசத்தில் அங்கு இருவரையும் தினசரி தலையை வெட்டப் போவதாகத் தீவிரவாதிகள் மிரட்டிக் கொண்டே இருந்தனர்.

எவ்வளவு கொடுமையான பீதியை அவர்கள் அனுபவித்திருப்பார்கள்! நம் வீரப்பன் – ‘ராஜ்குமார்’ நாட்களை நினைத்துப் பாருங்கள்.

இந்த பயங்கர அனுபவம் தந்த மனத்துன்பத்திலிருந்து விடுபட,

டாம் தனது டயரியில் தான் கனவு கண்டு அமைக்க விரும்பும் அபூர்வ வகை தாவரங்கள் அடங்கிய ஒரு தோட்டத்தின் வரைபடத்தை அமைக்க முயன்றார். இந்தச் சம்பவத்தை அவர் பி.பி.சி. நிகழ்ச்சியின் போது விவரித்தார்…

“என்னைக் கடத்தியவர்கள் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி என்னை அடித்து உதைத்தனர். அன்றைய தினம் எனது சகோதரியின் பிறந்த தினம்.”

“உனக்கு இன்னும் ஐந்து மணி நேரம் தான் இருக்கிறது” என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கொல்லப்படுவதற்கு முன் இருந்த ஐந்து மணி நேரத்தை ‘நர்க வேதனை’யோடு எப்படிக் கழிப்பது? எனவே, அதை மறப்பதற்காகத் தனது டயரியை எடுத்தார்; தனது கனவுத் தோட்டத்தை முழு விவரங்களுட\ன் வரைய ஆரம்பித்தார்.

ஏ.கே. 47 அவரது தலையை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருக்க, அவரது மனம், கனவு ப்ராஜெக்டில் ‘ஃபோகஸ்’ ஆனது! அவர் தன் கனவில் ஆழ்ந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. அந்த வரைபடம் ஆரம்பமாகி முன்னேறிக் கொண்டே இருந்தது. ஐந்து மணி நேரம் கழிந்தது. வழக்கம்போல உணவு வந்தது; ஆனால் குண்டு எதுவும் பாயவில்லை!

ஒன்பது மாதங்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக அந்த இருவரும் விடுவிக்கப்பட்டனர். தனது சொந்த ஊரான  ‘கெண்ட்’க்கு வந்த டாம் பராமரிக்கப்படாமல் கிடந்த தனது பூர்வீக சொத்தான இரண்டு ஏக்கர் நிலத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இன்று ஒரு மாயாஜாலத் தோட்டம் நிஜமாகவே லிவிங்ஸ்டன் கேஸில் கிரவுண்டில் உருவாகி இருக்கிறது.

‘தாவரங்களின் உலகத் தோட்டம்’ என்ற அந்த பிரம்மாண்டமான தோட்டம், பார்க்க வருவோரை மகிழ்விக்கிறது!

எவ்வளவோ விஷயங்களைக் கனவு கண்டு, அதை நிறைவேற்ற செயல்படாமல் இருக்கும் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டில் தலைக்கு நேரே ஒரு ஏ.கே.47 மிரட்டல் தேவையாக இருக்கிறதா – திட்டத்தை ‘ஃபோகஸ்’ செய்து தயாரிக்க?

டாமின் அனுபவம் ஒன்றே போதாதா?

நமது வீட்டின் முன்னறையில் அமைதியாக அமர்ந்து ஒரு ஐந்து மணி நேரத்தில் நமது கனவுத் திட்டத்தின் வரைபடத்தை முழு விவரங்களுடன் உருவாக்க முடியாதா, என்ன? குறிக்கோளை முடிவு செய்து, வெவ்வேறு கலர்களில் நமது திட்டத்தை அதற்குரிய முக்கியத்துவம், கால எல்லை இவற்றை நிர்ணயித்து எதிர்கால நனவுப் பலகையாக ஒன்றை உருவாக்க முடியாதா என்ன?

ஐந்து மணி நேரம் தீவிரவாதிகள் உங்களைக் கடத்தி ஏ.கே. 47 -யுடன் மிரட்ட வேண்டுமா, என்ன? நீங்களே இனிய சுகானுபவமாக உங்களை ஒரு ஐந்து மணி நேரம் கடத்திக் கொண்டு கனவிலிருந்து நனவுக்கு இட்டுச் செல்லும் வரைபடத்தை உருவாக்கி எதிர்காலத்தை எதிர் கொள்ளலாமல்லவா? 

**

சினேகிதி மாத இதழில் 2007, பிப்ரவரி மாதம் வெளியான கட்டுரை.

Ramayana Sculptures from Indonesia- Batch 5 (Post No.13,595)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,595

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

xxxx  

More Ramayana pictures from 100 year old German book.

They are from Java, Indonesian Island. This is the third batch of pictures of Ramayana Sculptures in

 Borobudur and other places.

—subham—

Tags- Ramayana sculptures, 100 year old German book, Java, Indonesia. Part 5

Janmashtami Celebrations in London Hospital (Post No.13,594)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,594

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 Janmashtami Celebrations in London Hospital (Post No.13,594)

We celebrated Janmashtami, Lord Krishna’s Birth Day, in the Northwick Hospital in Greater London area last week. It was celebrated six days before Janmashtami, because devotees will be very busy near the actual day.

It was part of our weekly prayers in the chapel in the hospital. About 100 devotees from the hospital, both patients and staff, took part in it. Volunteers from Swaminarayan temple and Harekrishna temple came and sang the songs glorifying Lord Krishna.

We did singing with dance in the last 15 minutes . Volunteers from the ISKCON, Hare Krishna Temple led the group. All the devotees joined them enthusiastically. Prasad was distributed at the end. The function went on for two hours.

Wednesday is allocated for Hindu Prayers. And we do celebrate major festivals including Diwali.Hospital  Hindu Chaplain V V Swaminathan leads the prayer every week.

Please see my pictures taken on the day.


Picture of Hospital Hindu Chaplain V V Swaminathan with the Swaminarayan Temple Bhajan Group.

–subham–

tags-  Janmashtami Celebrations in London Hospital , Northwick Park Hospital 

அனுமன் பறந்த வேகம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 9 (Post No.13,593)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,593

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அனுமன் பறந்த வேகம் ;ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 9

முதலில் அனுமன் இலங்கைக்குச் சென்ற வேகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய சுவையான விஷயத்தைக் காண்போம்:

விமானம் போல பறந்தான் – கம்பன் வருணனை

கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,

கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும்

உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்

புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24-

சுழன்றுசுழன்று செல்கின்ற குதிரைமேல் உள்ள;

தெய்வத் தன்மை பெற்ற கூரிய நுனியையுடைய;

வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரனுக்கும்;

கண்ணின் பார்வை பின்பற்ற முடியாத வேகமுடைய

கடலும் கடலாற் சூழ்ந்த உலகமும்;

தன்னுள் ஒடுங்கும்படி (பேருருக் கொண்டவனாய்);

அண்டத்தின் உச்சியானது மோதும்படி; செல்கின்ற

பயணத்தால்; ஒப்பற்ற புட்பக விமானம்;

இலங்கை மாநகருக்குப் போவதை

ஒத்திருந்தான். (FLIGHT TO SRI LANKA)

xxxxx

Speed of Hanuman- 660 kilometers per hour

மனோ ஜவம் மாருத துல்ய வேகம் என்ற ஸ்லோகத்தில் அனுமனின் வேகம் மருத் என்னும் காற்றின் வேகம் என்றும் மனத்தின் வேகம் என்றும் முதல் வரி சொல்கிறது. இதில்தான் ஐன்ஸ்டைன் இந்துக்களிடம் தோற்றுப்போனார்; ஒளியின் வேகத்தில் யாரும் பயணம் செய்ய முடியாது அப்படிப்போனாலும் அருகிலுள்ள ஆல்பா செண்ட்டாரை  நட்சத்திரத்துக்குப் போகவே நாலரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது ஐன்ஸ்டைன் கூற்று.  ஆனால் இந்துக்கள் சொர்க்கத்துக்குப் போகவே ஒரே நாள் தான் செலவி ட்டனர் என்று பாகவதமும் நம்மாழ்வாவர் பாசுரமும் சொல்கிறது; தேவர்கள் ஒளி ரூபத்தில் வாழ்வதால் தான் அவர்களுக்கு தேவர் என்றே பெயர்! அவர்கள் மனத்தின் வேகத்தில் சென்றனர். நான் அண்டார்டிகாவில் இருப்பதாக நினைக்க ஒரே நொடிப்பொழுது போதுமே? தேவர்கள் இப்படித்தான் செய்தனர். ஒளி ரூபத்தில் செல்லவும் செய்தனர்.

இலங்கையிலிருந்து அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருவதற்கு ராமன் ஒரே நாள்தான் செலவிட்டான் ; அதுவும்  நடுவில் தங்கித் தங்கி வந்தான். அதனால் அனுமன் பறந்து போய் பரதன் தீக்குளிப்பதைத் தடுத்தான் இப்பொழுது கம்பனும் அனுமன் புஷ்பக விமானம் போல பறந்தான் என்கிறார்.

Another wonder is about the speed of Anjnaeya. True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley. “ How fast do monkeys fly? It was a matter of scholarly reasoning for the commentators!”, said Prof. Goldman. Some of them worked it down to a speed of roughly 660 km an hour considering Hanuman first brought mountain to Lanka and then flew back all the way to put it back in its place. Prof. Goldman gave a lecture in Delhi in 2004.

இதை அமெரிக்க பேராசிரியர் கோல்டுமேன் R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley கணக்குப்போட்டு அனுமன் மணிக்கு 660 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக டில்லியில் ஒரு சொற்பொழிவில் சொன்னார்.

Maruti Miracle: 660 Kms per hour!

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2013/06/11 › maruti-mirac…

11 Jun 2013 — True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of …

xxxx

ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர்

சுந்தர காண்டம்

அனுமர் கடல் தாண்டப் பாய்தல்

விருத்தம்-1

பாய்ந்திடு சிறுபிள்ளை ஆம்பொழு தொருதினம் மாங்கனி ஆமெனவே

காய்ந்திடு கதிரெதிர் பாய்ந்தவன் நெடுகிய கடல்களும் நிலைபிசகித்

தோய்ந்திட வடவரை சாய்ந்திட விசுவசொரூபம் எடுத்தனுமான்

நாம்துதி பேசும்ம யேந்திரம்ஏறியண் ணாந்தெதிர் பாய்ந்தனனே.

நாதநாமக்கிரியை ராகம்                         ஆதிதாளம்

பல்லவி

பாய்ந்தானே அனுமான் – மயேந்திரம் ஏறிப்

பாய்ந்தானே அனுமான்.                        (பாய்ந்)

அநுபல்லவி

பாய்ந்தொரு மூவுல    கேந்தியராவணன்

மாய்ந்திடமேவுகு      லாந்தகன் எனவே              (பாய்)

சரணங்கள்

1. கேசவ ராகவ       பூசித னேஎனும்

  வாசக மானது      நேசம் விடாமல்

  மோச நிசாசரர்     நாசம் தாய்விட

  வீசியவால் எம     பாசம தாகப்              (பாய்)

2. வட்ட நெடுங்கடல்  முட்ட உரங்கிழி

  பட்டு மறைந்திடு    திட்டுகள் தெரிய

  நெட்டை நெடுங்கிரி எட்டுமறும் பொடி

  பட்டுதி ரும்பிடி     நட்டணை ஆகப்          (பாய்)

298

3. எடுத்தொரு ராகவன்     கொடுத்தகை மோதிரம்

  இடுக்கிய காதிலே        மடற்குளே யடக்கி

  மிடுக்குள ராட்சதர்       நடுத்தலை மேல் விழும்

  இடிக்கிணை யாகவே      திடுக்கென ஓடிப்           (பாய்)

4. அண்டர்கள் முனிவர்கள்  கண்டதிசயமொடு

  மண்டிய மருமலர்        கொண்டனர் பொழிய

  வீண்டல ரவி சசி        மண்டலம் இருசிறு

  குண்டலம் எனமுக       மண்டலம் அசைய          (பாய்)

5. சுமந்திடு தாயுரை        சுமந்தவன் ஈரடி

  சுமந்து விசுவரூபம்       சமைந்ததி னாலே

  அமிழ்ந்திய கடல்படு     திமிங்கில மொடுதிமி

  திமிங்கிலம் விவையினில்  மிதந்திட மேலே           (பாய்)

6. அந்தமலையில் உள      தந்தி கரடிபுலி

  நொந்து திசைதிசைபி     ரிந்த அவை வெருள

  முந்து கொடி முடிபி      ளந்து பளபளென

  உந்து இணையடிகள்உ    தைந்து கிளம்பி            (பாய்)

xxxxx

ஹனுமான் சாலீசாவின் அடுத்த ஐந்து கண்ணிகளை எடுத்துக் கொள்வோம் :

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை ।
தீனோம் லோக ஹாங்க தே காம்பை ॥ 23 
॥

பூ⁴த பிஶாச நிகட நஹி ஆவை ।
மஹவீர ஜப³ நாம ஸுனாவை ॥ 24 
॥

நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா ।
ஜபத நிரன்தர ஹனுமத வீரா ॥ 25 
॥

ஸங்கட ஸே ஹனுமான சு²டா³வை ।
மன க்ரம வசன த்
⁴யான ஜோ லாவை ॥ 26 ॥

ஸப³ பர ராம தபஸ்வீ ராஜா ।
தினகே காஜ ஸகல தும ஸாஜா ॥ 27 
॥

23.உங்களிடமுள்ள தேஜஸ் / ஒளி மகத்தானது.அதைத் தங்களைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது  .உங்களுடைய ஹூம் கார கர்ஜனை மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்கிறது

24.மஹாவீரனே ! உனது  பெயரைச் சொன்ன மாத்திரத்தில் பூதம், பேய் , பிசாசுகள் நடுங்கி ஓடுகின்றன ; உன் பெயர் சொல்லும் எவனையும் அவை நெருங்காது

25.வீர அனுமனே ! உன் பெயரை  இடைவிடாது ஜபம் செய்வோருக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

26.உண்மை, வாய் மை , மெய்மை என்னும் மனோ வாக் காய — திரிகரண சுத்தியுடன் , உங்களிடம்  ஈடுபட்டவர்களின்  எல்லாத் துன்பங்களையும் அகற்றி விடுவிக்கிறீர்கள்

27.பரம் பொருளான, தவசீலர்களில்  சிறந்தவரான ராமபிரானின் பணிகள் அனைத்தையும் நீங்களே நிறைவேற்றினீர்கள்.

இந்தக் கண்ணிகளில் உள்ள கருத்தின் சுருக்கம் -உடம்பிலும் புகழிலும் ஒளி வீசுபவர், பூதப் பிசாசுகளை விரட்டுபவர் ; அனு மனை நம்பினோர்க்கு துன்பமே இல்லை;; யார் தூய்மையுடன் பக்தி செலுத்துகிறாரோ அவர்களுக்கு மட்டுமே அருளுபவர்; .இதற்கெல்லாம் காரணம் நீர் ராம பிரானுக்கு ஆற்றிய சேவைதான் .

ராமனைப் புகழும் எல்லோரும் அனு மனைச் சேர்க்காமல் இருப்பதில்லை; அநுமானைப் புகழும்   எல்லோரும் ராமனைச் சேர்க்காமல் இருப்பதில்லை . இது போன்ற பிணைப்பை வேறு எங்கும் காண முடியாது.

ராமனின் புகழை முழு அளவில் யாரும் எழுத்தால் வருணிக்கவில்லை; ஏனெனில் 3000 இடங்களிலிருந்து எடுக்க வேண்டும். இன்னும் அன்னமாச்சார்யா, தியாகராஜர் கிருதிகளில் உள்ள ராமன் புகழை மட்டும் கூட யாரும் ஒப்பிட்டு ஆராயவில்லை; எந்தக் காலத்தில் ஏனைய 3000 ராமாயணங்களில்  உள்ளதை ஒப்பிட முடியும்?

–SUBHAM—

TAGS- அனுமன் பறந்த வேகம், ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 9, ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர் ,சுந்தர காண்டம், அனுமர் கடல் தாண்டப் பாய்தல்

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் – 1 (Post.13,592)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,592

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

சுவாமி விவேகானந்தர்  1902–ம் ஆண்டில் (1863-1902) சமாதி ஆகிவிட்டார் ; அதற்கு கால் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் சத்ய சாய் பாபா (1926-2011) தோன்றினார் . ஆயினும் பாபா செய்யப்போகும் அற்புதங்களுக்கு சுவாமி விவேகானந்தர் , அதற்கு முன்னரே விளக்கம் கொடுத்துவிட்டார் எதைக் கண்டு பிடித்தாலும் இந்துக்கள் முன்னரே கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே! மொபைல் போன், ஐ பேட் , இன்டர்நெட் , கம்ப்பூட்டர் , யூ ட்யூப் இவை எல்லாம் இந்து மதத்தில் உள்ளதா ? என்ற கேள்விகள் நியாயமானவைதான் . இவைகளுக்கு விளக்கம் தரும் பேசசு இதோ!

நான் முன்னர் எழுதியதுபோல நவக்கிரக ஸ்தோத்திரத்திலுள்ள விஷயங்களை நாஸா  NASA  கண்டுபிடிக்கவில்லை; நாடி ஜோதிட விஷயங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; பாபா போன்றோர் செய்யும் அற்புதங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; அஷ்டமா சித்திகளை நாஸா கண்டுபிடிக்கவில்லை; இந்து மதம் சொல்லும் வெளி உலகங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; கனவுகள் பற்றி இந்துக்கள் சொல்லும் செய்திகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை; ஒளி ரூபத்தில் நமக்கு மேலே சஞ்சரிக்கும் ககன சித்தர்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை (குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயருக்குத் தெரிந்தது கூட அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளுக்குத் தெரியாது ; கம்பன் கூட ஆகாயவாசிகள் பற்றிக் கவிதை பாடினான் . நிற்க

XXXX

THE POWERS OF THE MIND

(Delivered at Los Angeles, California, January 8, 1900)

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ்  நகரில் 1900-ஆம் ஆண்டில் மனத்தின் சக்திகள் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.

“உலகம் முழுதும், வரலாற்றுக்காலம் முழுதும், மனதிற்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பற்றிய  நம்பிக்கை இருந்து வருகிறது வழக்கத்திற்கு மாறான அபூர்வ சம்பவங்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்; நம்மில் பலருக்கு நேரிலும் அத்தகைய அனுபவங்கள் கிடைத்தன. என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்த்த சில விஷயங்களைச்  சொல்லி  இந்த தலைப்பு பற்றிப் பேசுகிறேன்

மனதில் எதை நினைத்துக்கொண்டு போனாலும் உடனே அதைக் கண்டுபிடித்து விடைதரும் ஆள் பற்றி ஒருமுறை கேள்விப்பட்டேன். .எனக்கும் ஆர்வம் மேலிடவே சில நண்பர்களை அழைத்துக்கொண்டு போனேன் எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்கள் பற்றிக் கேட்கத் தோன்றியது; ஆயினும் தவறுகள் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதை எழுதி அவரவர் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டோம் ; எங்களைப் பார்த்தமாத்திரத்தில் அந்த ஆசாமி எங்கள் கேள்விகள் என்னவென்று கூறி அதற்குப் பதிலும் தந்தார் .

பின்னர் அவர் ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி, அதை மடித்து , இதை பிரித்துப் பார்க்காமல் உன் பைக்குள் வைத்துக் கொள் ; நான் கேட்கும்போது அதைக்கொடு என்றார்; பின்னர் எந்த மொழியானாலும் சரி; ஒரு வாக்கியத்தை நினைத்துக்கொள் என்றார் ;  நாங்கள் பார்க்கப்போன நபருக்கு சம்ஸ்க்ருத வாசனையே கிடையாது என்பது எனக்குத் தெரியும்; ஆகையால் ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன்.

இப்பொழுது நான் முன்னர் கொடுத்த தாளை பைக்குள்ளிலிருந்து எடுத்துக் படி என்றார் ; நான் நினைத்த சம்ஸ்க்ருத வாக்கியம் அதில் இருந்தது !அது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எழுதப்பட்டது; என்னுடன் வந்த வேறு ஒருவர் அராபிய  மொழியில் குரான் வாசகத்தை எழுதி வைத்திருந்தார் ; அதையும் அவர் முன் கூட்டியே எழுதிக்கொடுத்து இருந்தார்

எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் டாக்டர்; அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவ விஷயத்தைநினைத்து இருந்தார் ; அதையும் அந்த ஆள் கண்டுபிடித்து முன்கூட்டியே எழுதி இருந்தார்

எனக்கு மனதில் திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது; இந்த ஆள் நம்மை மயக்கி ஏமாற்றி இருப்பாரோ என்று நினைத்து, பல நாட்களுக்குப் பின்னர்,  இன்னும் ஒரு முறை அவரைப் பார்க்கப்போனேன் இந்த தடவை வேறு சில நண்பர்களை அழைத்துச் சென்றேன்; முன்னர் போலவே அவர் அற்புதங்களை செய்தார். அற்புதம்! ஒரு பிழையும் இல்லை..

ஹைதராபாத்தில் ஒரு சம்பவம்

இந்தியாவில் ஹைதராபாத்தில் நான் இருந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது .ஒரு பிராமணன், யாரும் அறியாத இடத்திலிருந்து மாயமாகப் பொருள்களைக் கொண்டுவருவார் என்பதைக் கேட்டு அங்கே போனேன். அவர் வியாபாரம் செய்துவரும் வணிகர்; சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர் ; உங்கள் அற்புதங்களைக் காண வந்தேன் என்று சொன்னவுடன் தனக்கு உடம்பு சரியில்லை; காய்ச்சல் ; நீங்கள் என் தலையில் கையை வையுங்கள்; என் ஜுரம் அகன்றுவிடும்  என்றார் 

(நோயாளிகளை சாது சந்யாசிகள் தொட்டு ஆசிர்வதித்தால் நோய் போய்விடும் என்ற நம்பிக்கை இந்திய முழுதும் உண்டு; 1400 ஆண்டுகளுக்கு முன்னர், கூன் பாண்டியனுக்கு விபூதி கொடுத்த சம்பந்தர் அவனது வயிற்று நோயைப் போக்கியதோடு அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார்; அப்பருக்கு , அவருடைய சகோதரி திலகவதி, விபூதி கொடுத்து சூலை நோயை  நீக்கினார் )

நான் தொட்டவுடன் அவருக்கு உடம்பு குணமாகிவிட்டது ; நீங்கள் ப்ராமிஸ் செய்தபடி உங்கள் அற்புதத்தை இப்பொழுது காட்டுங்கள் என்றேன். அவர் வெறும் துண்டு மட்டுமே அணிந்து இருந்தார்; எல்லா உடைகளையும் தள்ளி வைத்தார்; மிகவும் குளிராக இருந் ததால்  நானே அவர் மீது ஒரு கம்பளத்தைக் போர்த்தினேன் நாங்கள் 25 பேர் அங்கே இருந்தோம்; நீங்கள் உங்களுக்கு வேண்டிய எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று அவர் சொன்னவுடன் நாங்கள் அங்கு விளையாத திராட்சை, ஆரஞ்சு பழவகைககளை எழுதினோம்; அவர் ஒரு மூலையில் உடகார்ந்து இருந்தார்.அந்தக் காகித துண்டுகளை அவரிடம் கொடுத்தோம்; அவர் போர்வையை விலக்கினார் ; நாங்கள் எழுதிய பழங்கள் அங்கே இருந்தன!

 அவரே மாயமாக பெரிய ரோஜா மலர் பூங்கொத்துக்காளைக் கொண்டுவந்தார் ; அவை அப்பொழுதுதான் பறித்தவை; கசங்க வில்லை; பனித்துளிகளும் இருந்தன இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது எல்லாம் கை அசைவில் வரும் என்று பதில் கொடுத்தார்.

கை அசைவில் அவ்வளவு பொருட்களைக் கொண்டுவரமுடியாது; பின்னர் அவை எங்கிருந்து வந்தன?  இது மட்டுமல்ல; இது போல பல விஷயங்களை நான் பார்த்து இருக்கிறேன் இதுபோல எல்லா நாடுகளிலும் ஆட்கள் உள்ளனர். இந்த நாட்டிலும் (அமெரிக்கா) நீங்கள் நிறைய பார்க்கிறீர்கள் ஆனால் நிறைய மோசடிப் பேர்வழிகளும் இருக்கிறார்கள்; அவர்கள் உண்மைச் சம்பவத்தை காப்பி அடிக்கிறார்கள்.ஆனால் அப்படி மோசடி செய்ய அவர்களுக்கும் உண்மையான சம்பவம் தேவை; அப்போதுதான் அதைக் காப்பி அடிக்கலாம்; நடவாத ஒன்றிலிருந்து எதையும் செய்ய முடியாது; ஆதாரம் இருந்தால் அதைவைத்து இமிடேஷன் செய்யலாம்.”

xxxx

MY COMMENTS

( நான் பார்த்த அதிசயம் : சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எங்கள் குடும்பத்துடன், பத்து கார்களில் ஆட்கள் புடை சூழ மதுரையிலிருந்து புட்டப்பார்த்திக்குச் சென்று பிரசாந்தி நிலைய பஜனைகளில் கலந்து கொண்டோம்; அப்போதெல்லாம் பெரும் கூட்டம் கிடையாது; பெண்கள் மட்டும் தங்குவதற்கு ஷெட்டுகள் இருந்தன. நாங்கள் எல்லோரும் கார்களிலும் அதற்கு அருகிலும் படுத்துக்கொண்டோம் ; மதுரையிலிருந்து எங்களுடன் வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே பாபாவின் பக்தர்கள் ; நாங்களோ புது முகங்கள்; ஆயினும் மறுநாள் பாபா வலம் வருகையில் முதல் முதலில்  என தாய் தந்தையரை அழைத்து பல விஷயங்களை சொன்னார்; கையை அசைத்து விபூதி வரவழைத்து எங்கள் எல்லோருக்கும் கொடுத்தார்; ஒரு (பாபா) போட்டோவையும் உண்டாக்கி அதை என் தந்தையிடம் ( V.SANTANAM, NEWS EDITOR, DINAMANI, MADURAI) கொடுத்தார்; அது அவரது பர்ஸில் 1998-ல் அவர் இறக்கும் வரை இருந்தது; நான் 198-7ல் லண்டனுக்கு வந்துவிட்டதால் போட்டோ என்ன ஆனது என்பது தெரியாது; ஒரு வேளை என் தாயாரிடம் சென்றிருக்கலாம்; அது மறைந்து போகவில்லை என்பதற்காக இவ்வளவு விஸ்தாரமாக எழுதினேன் ; என் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி பரீட்சையில் பாஸ் என்றார்; பள்ளி மாணவனுக்கு அதை வீட வேறு என்ன வேண்டும்; அதற்குப் பின்னர் 4,5 முறை புட்டபர்த்திக்குச் சென்றபொழுது நிறைய பேருக்கு கை அசைவில் விபூதியை வரவழைத்துக் கொடுத்ததையும் பார்த்து இருக்கிறேன் )

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் இதற்கான விளக்கத்தையும் சுவாமி விவேகானந்தர் கொடுக்கிறார் ; அதையும் காண்போம் .

தொடரும் ……………………………….

TAGS- பாபா செய்த, அற்புதங்கள் , மனத்தின் சக்தி, விவேகானந்தர் விளக்கம், விஞ்ஞானிகள் அறியாத மனம் ,

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை (Post No.13,591)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,591

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

உலகிலேயே அதிசயமான மதம் இந்துமதம்; செலவில்லாமல், எளிதில் பரமபதம்- வைகுண்டம்- கைலாசம் அடைய வழிகளை சொல்லித் தருகிறது.

அருகம் புல் , எருக்கம் பூ, வில்வ இலை , துளசி இலை அல்லது  ஏதாவது பூ அல்லது தண்ணீர் இவைகளை கடவுளுக்கு அளித்தால் போதும். பெரிய புண்ணியம் கிடைக்கும்.

பிராமணர்கள் தினமும் மூன்று வேளை  வெறும் தண்ணீரைத்தான் இறைவனுக்குக்  கொடுக்கிறார்கள். அதுவும் விலை கொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீரை அல்ல; எந்த நதி  அல்லது குளம் அல்லது கிணற்றடியில் இருக்கிறார்களோ  அதையே எடுத்து அப்படியே கொடுப்பதால் செலவே இல்லை.

பகவத் கீதையில் உள்ள இந்த விஷயத்தை சங்க கால பார்ப்பனப் புலவன் கபிலன் அப்படியே புறநானூற்றில் சொன்னான்

நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்

புல்லிலை யெருக்க மாயினு முடையவை

கடவுள் பேணே மென்னா வாங்கு

மடவர் மெல்லியர் செல்லினும்

5             கடவன் பாரி கைவண் மையே.

(பி – ம்.) 3 ‘வேண்டேமென்னா’

நல்லனவென்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூவாதலால் அவை இரண்டினும்வைத்து எண்ணப்படாத குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையையுமுடைய எருக்கம்பூவாயினும் ஒருவனுடையனவற்றைத் தெய்வங்கள் விரும்பேமென்னா; அதுபோல, யாதும் அறிவில்லாதாரும் புல்லிய குணங்களையுடையாரும் செல்லினும் பாரி கைவண்மை செய்தலைக் கடப்பாடாகவுடையன்-

xxxx

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.-– திருமந்திரம்

இறைவனுக்கு  எளிமையாகப் பச்சிலை சூட்டி வணங்கினாலே போதும்.   பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். நாம் உண்ணும்போது  உண்கிற உணவில் ஒரு கைப்பிடி எடுத்து பசித்தோருக்குக் கொடுத்தாலும் போதும். இவை அனைத்தையும் விட, யாருக்கும் இன்னுரை சொன்னாலே கூட போதும் என்கிறார் தமிழ்ச் சான்றோரான திருமூலர். எளிமையும் சிரத்தையும் தான் நமது ஹிந்து வாழ்வியல் அறத்தின் அடிப்படைகள்.

xxxx

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

          வாடினேன்; பசியினால் இளைத்தே

     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்!

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்;

     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்!-திருவருட்பா

xxxx

பஞ்சமஹா யக்ஞம்

இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் —

1.பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல்,

2.தேவ யக்ஞம்/தெய்வங்களுக்குப் பூஜை செய்தல்,

3.மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல்,

4.பூத யக்ஞம்/பிராணிகளுக்கு உணவு படைத்தல்,

5.பித்ரு யக்ஞம்/நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தல் என்பன அடக்கம்.

எல்லா இந்துக்களும் பஞ்ச மஹா யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளைச் செய்யவேண்டும்.பிராமணர்கள் வேதம் ஓதும் இடத்தில் மற்றவர்கள் தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருவாசகம், திருக்குறளை ஓதலாம். வேள்வி என்பது யாகத்தீயில் அவிஸை (நெய்யுடன் கலந்த சோறு) போடுவது மட்டுமல்ல. மனதளவில் பல வேள்விகளைச் செய்யலாம்.

வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:—

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)

பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.

மனு ஸ்மிருதியில் 3-70 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருக்கிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.

XXXX

மனு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது ?

வீட்டில் ஐந்து கொலைக்களங்கள் -மனு ஸ்ம்ருதி

पञ्च सूना गृहस्थस्य चुल्ली पेषण्युपस्करः ।

कण्डनी चौदकुम्भश्च बध्यते यास्तु वाहयन् ॥ 3-६८ ॥

பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷன் யுபஸ் கரஹ

கண்டனீ செளத  கும்பஸ்ச பத்யதே  யாஸ்து வாஹயன் 3-68

இல்லறத்தானுக்கு ஐந்து கொலைக்களங்கள் உள்ளன ; அவையாவன- அடுப்பு, மாவரைக்கும் அம்மி , ஆட்டுரல் உரல் /உலக்கை , அருவா மனை/கத்தி போன்றவை 3-68 மனு 

XXXX

तासां क्रमेण सर्वासां निष्कृत्यर्थं महर्षिभिः ।

पञ्च कॢप्ता महायज्ञाः प्रत्यहं गृहमेधिनाम् ॥ ६९ ॥

தாஸாம் க்ரமேண சர்வாசாம் நிஷ்க்ருத்யர்த்தம் மஹர்ஷிபிஹி

பஞ்சக்லுப்தா மஹாயக்ஞாஹா ப்ரத்யஹம் க்ருஹ மேதினாம்  3-69

இந்தப் பாவங்களைப் போக்குவதற்கு மஹரிஷிகள் ஐந்து பெரிய வேள்விகளை இயற்ற நமக்குக் கட்டளை இட்டுள்ளார்கள் ; இதை இல்லறத்தார்கள் தினமும் செய்ய வேண்டும் 3-69

XXXXX

अध्यापनं ब्रह्मयज्ञः पितृयज्ञस्तु तर्पणम् ।

होमो दैवो बलिर्भौतो नृयज्ञोऽतिथिपूजनम् ॥ ७० ॥

அத்யாபனம் ப்ரஹ்ம யக்ஞஹ பித்ருயக்ஞஸ்து தர்ப்பணம்

ஹோமோ தைவோ பலிர் பெளதோ ந்ருயக்ஞ்ஓ அதிதி பூஜனம் 3-70

(அந்தக் கொலைகளுக்கு பரிஹாரமாக ) ஐந்து யக்ஞங்களைச்  செய்ய வேண்டும் ; அவையாவன :

கல்வி கற்பித்தல் மூலம் பிரம்ம யக்ஞம் ;

தர்ப்பணம் செய்வது மூலம் பித்ரு  யக்ஞம் ;

ஹோமம் செய்து ஆகுதி அளிப்பதன் மூலம் தேவ  யக்ஞம் ;

பலி  கொடுப்பதன் மூலம் உயிரினங்களுக்கு  யக்ஞம் ;

விருந்தாளிகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் மனிதயக்ஞம் — 3-70

XXXXX

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.–குறள் 322

Let those that need partake your meal; guard every-thing that lives;

This the chief and sum of lore that hoarded wisdom gives.

–SUBHAM—

TAGS–வீட்டில் ஐந்து கொலைக்களங்கள் ,மனு ஸ்ம்ருதி, பஞ்ச மஹா யக்ஞம் ,வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், தென்புலத்தார் , தெய்வம், யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்!(Post No.13,590)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.590

Date uploaded in London – —27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xx 

உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்! 

ச.நாகராஜன் 

நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உங்களுக்கு உதவ இரண்டு டாக்டர்கள் நிரந்தரமாக உங்கள் கூடவே இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லை?

பிரிட்டனின் ஆன்மீகத் தாத்தா என்று புகழப்படும் ஜார்ஜ்   ட்ரெவெல்யன் 1913-ம் ஆண்டு இந்த இரண்டு டாக்டர்களைப் பற்றி இப்படி அறிமுகம் செய்து வைத்தார்:-

“என்னிடம் இரண்டு டாக்டர்கள் இருக்கின்றனர்; என் இடது கால்; என் வலது கால்!”

உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு அனைத்து நோய்களையும் தீர்க்கவல்ல  நடைப்பயிற்சியை, இந்த இடது கால் மற்றும் வலது கால் டாக்டர்கள் தான் செய்ய முடியும். ஆகவே நீங்கள் உங்கள் இரு டாக்டர்களை தினமும் இயக்க வேண்டும்; மீதியை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!

தினமும் நடப்பது என்பது ஆயுளைக் கூட்டி, உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும் ஓர் அற்புதப் பயிற்சி!

‘ஆர்ச்சிவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்’  நடத்திய ஒரு ஆய்வில், உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும் நேரடி சம்பந்தமும் உடையவை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பதானது, உங்கள் ஆயுலை 1.3 வருடங்களைக் கூட்டுவதோடு, 1.1 வருடங்கள் இதயநோய் இல்லாமல் ஆக்குகிறது.

வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகை தனது தலையங்கத்தில் நடைப்பயிற்சியைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து, தினமும் முப்பது நிமிடங்கள் நடந்தால் 1.3 ஆரோக்கிய வருடங்களைப் பெறலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது! அதிக ஆற்றலைத் தருவதோடு, ஆழ்ந்த உறக்கத்தையும் நடைப்பயிற்சி உறுதிப்படுத்துகிறது.

தினமும் நடைப்பயிற்சி செய்யும் மாணவன் நன்கு படிப்பதோடு, படித்ததை உடனுக்குடன் நினைவுக்குக் கொண்டு வரும் ஆற்றலையும் பெறுகிறான். எங்கும் வாகனம்; எப்போதும் வாகனம் என்ற இந்த வேகயுகத்தில் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் சென்று அலுவலகம் மற்றும் இதர இடங்களில் அமர்ந்து பணி செய்வோர் தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் மதிய உணவு இடைவேளையில் ஒரு அரை. மணி நேரம் நிச்சயம் நடக்க வேண்டும்.

வாகனங்களைச் சற்று அதிக தூரத்தில் நிறுத்திவிட்டு, பணியிடங்களுக்கு நடக்கும் வாய்ப்பை இவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். லிப்டை உபயோகிக்காமல் படிகளில் ஏறவும், இறங்கவும் செய்யலாம். மாடியில் பணிபுரிவோர் அதே பகுதியில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்காமல், அடுத்த தளத்தில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்கும் விதமாகச் சற்று தூரம் நடந்து மாடிப்படிகளில் ஏறலாம், இறங்கலாம்.

இப்படி நடப்பதை சிறு சிறு வழிகள் மூலம் சிரத்தையுடன் மேற்கொண்டால், உடல் எடை அல்லது பருமன் அதிகமாவது தடுக்கப்பட்டு, சரியான எடையுடன் கூடிய அழகிய மேனியை உருவாக்கிக் கொள்ளலாம். அழகிய மேனி உடையவர்கள் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டு என்றும் இளமையோடு இருக்கலாம். நடப்பதால் உடல் இளைக்கும்; அதிக சுறுசுறுப்படையும்.

அழகிப்போட்டியைச் சற்று நினைத்துக் கொள்ளுங்கள். அதில் வென்றவர்களைச் சற்று கவனியுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த

நடிகர் அல்லது நடிகை உங்களை ஏன் கவர்கிறார் என்பதைச் சற்று சிந்தியுங்கள். அவர்கள் முகமும் அங்க லாவண்யங்களும் ஒருபுறம் இருக்க, அவர்கள் நடக்கும் நடை அழகே, அவர்களது பொலிவை எடுப்பாக எடுத்துக் காட்டுவதை நிச்சயமாக நீங்கள் உணர முடியும்.

அவர்களிடம் உள்ள இரண்டு டாக்டர்களையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, ஆடிப்பாடி இடைவிடாது நடைபயின்று உடலை ‘சிக்’கென்று பாதுகாப்பதால், அவர்கள் கவர்ச்சி உடையவர்களாக உங்கள் முன் தோன்றுகிறார்கள்!

தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம். ஆகவே, உங்களுடன கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களை சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!

**

சினேகிதி மாத இதழில் 2007, ஜனவரி மாதம் வெளியான கட்டுரை.