Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2-8-2026 தினமணி கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
கடலில் மிதந்த இரும்பு குண்டுகள்!
ச.நாகராஜன்
ஆஸ்திரேலியாவில் க்வீன்ஸ்லாந்தில் வடகிழக்குக் கடற்கரையில் வழக்கம் போல மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. திடீரென்று அங்கு கடலில் பல இரும்பு குண்டுகள் மிதந்து வந்தன.
அவற்றைப் பார்த்த மக்கள் பிரமித்தார்கள். அவை நேரம் ஆக ஆக பெரிதாக வீங்க வேறு ஆரம்பிக்கவே அனைவரும் பயந்தனர்.
ஃபாரஸ்ட் பீச் அருகே வாழ்ந்து வந்த உள்ளூர்வாசியான ட்ரெவார் கைல் என்பவர் தான் ஜூன் 2026ல் அவற்றை முதன் முதலாகப் பார்த்தவர். “மூன்று குண்டுகளைப் பார்த்தேன். அவை எம்பிக் குதித்தவாறே கடலின் மீது பாய்ந்து வந்தன” என்றார் அவர்.
உடனடியாக ஓடோடிப் போய் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் தெரிவிக்க அவர்கள் அங்கு வந்து ஒரு தடுப்புப் பகுதியை நிர்மாணித்தனர். மீன் பிடிக்கச் சென்ற ஒரு மீனவரிடம் அவரது சாதனங்கள் மற்றும் கூடை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். யாரும் எல்லையைத் தாண்டி கடலுக்குள் போகக் கூடாது என்று அறிவித்த அவர்கள் ஸ்பெஷலிஸ்ட் க்வீன்ஸ்லாந்து ஃபயர் அண்ட் ரெஸ்க்யூ பிரிவிற்கு தகவலைத் தெரிவிக்கவே விசேஷ தீ அணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு வந்தனர்.
பின்னர், ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தினர் வந்து இதை ஆராய்ந்தனர். பின்னர் அவர்களால் அவை விண்வெளிப் பந்துகள் என்று அறிவிக்கப்பட்டன.
ஃப்ளின்டர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிஸ் கார்மன், “ஏராளமான ராக்கெட்டுகளும் விண்கலங்களும் திரவ எரிபொருள் அமைப்பைக் கொண்டுள்ளன. அவை இந்த வலிமை வாய்ந்த உலோகக் குண்டுகளில் மிக அதிக அழுத்தத்துடன் வைக்கப்படுவது வழக்கம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில் “இவை ராக்கெட்டுகளின் கழிவுப் பொருள்கள். ராக்கெட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட இவை வானிலேயே எரிந்து விடும். எரியாத சில பகுதிகள் இப்படி பூமியில் விழுவது வழக்கம். இவை மிக அதிக உஷ்ணநிலையில் தான் எரியும். அது இல்லாத போது வளி மண்டலத்திருந்து கீழே வந்து விழுந்து விடும்” என்றார்.
எந்த ராக்கெட்டிலிருந்து இவை கீழே விழுந்தன என்பது யாருக்கும் தெரியவில்லை. இப்படி இன்னும் பல கழிவுப் பொருள்களும் பூமியில் அவ்வப்பொழுது விழுவது வழக்கம் தான்!
இவை ஆபத்தானவை இல்லை என்றாலும், உள்ளூர் அதிகாரிகள், “யாரும் இதன் அருகே போக வேண்டாம்” என்று மக்களை எச்சரித்தனர்.
‘இவை ராக்கெட்டிலிருந்து தான் விழுந்தது என்பது என்ன நிச்சயம்? ராணுவத்தில் உருவாக்கப்பட்டு சோதனைக்காக வீசப்பட்ட அபாய ஆயுதங்கள் தாம் இவையா? அல்லது ஒருவேளை அயல்கிரகவாசிகள் இதைப் போட்டிருந்தால்?’…. என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது என்றனர் மக்கள்.
2026, ஜூலை 4ம் தேதி க்வீன்ஸ்லாந்து தீயணைக்கும் பிரிவு அதிகாரிகள் சமூக ஊடகங்களை அழைத்து இந்த குண்டுகள் தீங்கு விளைவிப்பவை என்பதால் யாரும் அவற்றை எடுத்து ஆராய வேண்டாம். இது போன்ற குண்டுகளைக் கடலில் கண்டவுடன் அதிகாரிகளிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும்” என்ற வேண்டுகோளை முன் வைத்தனர்.
மீன் பிடிப்பவர்களும், உல்லாசப்பயணிகளும் கடலில் இறங்கவில்லை.
இந்த மூன்று குண்டுகளை அடுத்து மேலும் பல இரும்புக் குண்டுகள் பல்வேறு கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு இப்போது, சுவையான சூடான பேசுபொருள் வானிலிருந்து விழுந்த இந்த மர்ம குண்டுகள் தான்!
1.கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் ஜெயங்கொண்டார் . இவரது இயற்பெயரை அறிய முடியவில்லை. புலவர் பலரும் சொற்போர் நிகழ்த்துவது வழக்கம். இத்தகு சொற்போரில் வென்றதால் இவருக்குச் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர். இவருடைய ஊர் தீபங் குடி. ஸம்ஸ்க்ருதச் சொல்ஜெயம் என்பதற்கு வெற்றி என்று பொருள்.
***
2.குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் முதலிய மன்னர்கள் திறை/கப்பம் செலுத்திப் பணிந்தனர். வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான். அவனை அழித்து வெற்றி கொள்ள தளபதி கருணாகரன் புறப்பட்டான். அந்தக் கலிங்கப் போரில் சோழர்கள் வெற்றி வாகை சூடினர் . இந்த வெற்றியைக் கொண்டாட பரணியை புலவர் எழுதினார்.
***
3.போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வென்ற தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியம் பரணி எனப்படும். பரணி என்பது கொற்றவையை வழிபடவேண்டிய நாள். மீனமாதம் [சித்திரை] பரணி நட்சத்திரமே கொற்றவைக்கு அல்லது பகவதிக்குரிய விழாநாளாகும். இந்தத் திருவிழாக்களே பரணி என்றுதான் சொல்லப்படுகிறன. கேரளத்தில் இன்று நூற்றுக்கணக்கான பரணித்திருவிழாக்கள் இருந்தாலும் முதன்மையானது கொடுங்கல்லூர் பரணி விழாதான். அது கொற்றவையாக வழிபடப்படும் கண்ணகிக்கான விழா.
***
4. காலம் (1078- 1118- குலோத்துங்க சோழன் காலம்) பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன்.. இவன் இராசேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன். இவன் மாமன் வீரராசேந்திர சோழன் இறந்த பின்பு அவன் மகன் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். இவனும் சில திங்களில் இறந்தான். சோழ நாடு வாரிசு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது. குழப்பத்தை நீக்கச் சாளுக்கியர் குலத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் பட்டம் ஏற்றான்.
***
5.ஜெயங்கொண்டார் பரணி பாடி முடித்தார். பின்பு குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார். பாடலைக் குலோத்துங்கன் சுவைத்தான்; ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் ஆகிய தேங்காயை உருட்டிக் கவிஞரையும் நூலையும் சிறப்புச் செய்தான்.
****
6.இதில் கடவுள் வாழ்த்து, பேய்களின் வழிபாடு, போர்க்களக் காட்சிகள் மற்றும் வெற்றிச் சிறப்பு போன்ற செய்திகள் இடம்பெற்றிருக்கும்.போர்க்களத்தில் இறந்துபட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்க வரும் பேய்களின் கூத்து, பேய்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் மற்றும் காளி தேவிக்குக் களம் அமைத்தல் ஆகியவை விவரிக்கப்படும்..
***
7. காளிக்குக் கூளி கூறியது எனும் பகுதி கலிங்கப் போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறது. போர் நடவடிக்கைகள் முதலியவற்றை ஒரு பேய் காளியிடம் கூறுவதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. போர் பாடியதும் களம் பாடியதும் போர் நிகழ்ச்சிகளைச் சுவையாக வருணித்துள்ளன. நூலின் நிறைவாகக் கூழ் அடுதல் (சமைத்தல்) எனும் பகுதி அமைந்துள்ளது. இறந்த வீரர்களின் உடல்களைக் கொண்டு கூழ் சமைத்துக் காளிக்குப் படைத்துப் பேய்கள் தாமும் உண்பதாகக் கூழ் அடுதல் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
***
8.பேய்களின் வகைகள்:நொண்டிப் பேய் – கால் ஊனமுற்ற பேய்.கை ஒடிந்த பேய் – கைகளில் பலம் இன்றி முடங்கிய பேய்.குருட்டுப் பேய் – கண் பார்வை இல்லாத பேய்.ஊமைப் பேய் – பேசும் திறன் அற்ற பேய்.செவிட்டுப் பேய் – கேட்கும் திறன் இல்லாத பேய்.கூன்பேய் – உடல் கூன் விழுந்து வளைந்த பேய்.கணிதப் பேய் – வரவிருக்கும் போர்களைக் கணக்கிட்டுச் சொல்லும் பேய்.முதுபேய் – இமயமலையில் இருந்து பறந்து வந்து இந்திரசாலம் (மாய வித்தைகள்) காட்டும் மூத்த பேய்.
***
9.கலிங்கத்துப் பரணி போன்ற மற்ற முக்கியப் பரணி நூல்கள்:– தக்கயாகப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி ஆகியவை ஆகும். தக்கயாகப் பரணி:நூலாசிரியர்: ஒட்டக்கூத்தர்.காலம்: 12-ஆம் நூற்றாண்டு.மோகவதைப் பரணி:நூலாசிரியர்: தத்துவராயர்.காலம்: 15-ஆம் நூற்றாண்டு.பாசவதைப் பரணி:நூலாசிரியர்: வைத்தியநாத தேசிகர்.காலம்: 17-ஆம் நூற்றாண்டு.கஞ்சவதைப் பரணி மற்றும் இரணியவதைப் பரணி:கம்சனைக் கண்ணன் வதம் செய்ததும், இரணியனை நரசிம்மர் வதம் செய்ததும் ஆகிய புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய பிற பரணி நூல்களாகும்.
***
10.இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.
–SUBHAM—
TAGS- கலிங்கத்துப் பரணி , ஜெயங்கொண்டார், 10 கேள்விகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
PART 35
NON COVETING 18. வெஃகாமை – Against covetousness
H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931 did not select any couplet from this chapter
***
171.Behold the man who strays away from a righteous course and covets with an evil heart another man’s well earned riches; he falls a prey to endless evils and spoils his home–A Aranganatha Mudaliyar – ANM+2 ,B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
171.If a man abandons rectitude and covets another’s property
He will fall into cumulative errors and disgrace his family- S M Diaz, I G of Police- SMD ,Year 2000
***
171 With soul unjust to covet others’ well-earned store, Brings ruin to the home, to evil opens the door. If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.– Rev. Dr. G U Pope – GUP. Year 1886
***
171.Who covets others’ honest wealth That greed ruins his house forthwith– Suddhananda Bharathiyar- SB
***
171.If a man is devoid of equality as to covet another’s wealth, not only his family will be ruined, but many other ills also will betake him— EVS Publishers, Singapore- EVS, Year 1986
172.Thorough lust of gain they covet not who blush at an unjust act- ANM+2
***
172.Those who seek rectitude, will not covet other’s property
Not commit sinful acts in pursuance- SMD
***
172 Through lust of gain, no deeds that retribution bring, Do they, who shrink with shame from every unjust thing. Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained. – GUP
***
172.Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin –SB
*** 172.Those who are scrupulous about inequity, will not act unrighteously in their avarice for unlawful gain—EVS
173.They commit not evil for trifling joys of the earth who aspire to the kingdom of heaven– ANM+2
***
173. Those who aspire for heavenly bliss, will not give room for unrighteousness
Through base desire for a transient pleasure- SMD
***
173 No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire. Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.) – GUP
*** 173.For spiritual bliss who long For fleeting joy commit no wrong—SB
*** 173. Those that seeking lasting happiness will not act unrighteously for the short-lived pleasure derived from misappropriating what belongs to others—EVS
174.Out of poverty they lust not after another’s possessions who have a god like vision born of the conquest of the senses– ANM+2
***
174.Those who have learnt to see straight by keeping their senses under restraint
Nover think of other’s possessions even in the context of their extreme want- SMD
***
174 Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other’s goods, e’en in the hour of sorest need. The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought “we are destitute.” – GUP
***
174.The truth-knowers of sense-control Though in want covet not at all—SB
***
174. The wise who have gained control over of their five senses will not covet what belongs to others even if they are in want—EVS
*** 174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
XXXXXXXXXXXXXXXXXXXXX
175.Of what avail is a subtle mind that has drunk deep of the fountain of knowledge, if it slips into shameless acts through blind coveting of another’s possessions?– ANM+2
***
175.Of what avail is a keen intellect and wide knowledge,
If greed seizes him and he covets at every turn- SMD
***
175 What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn? What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ? – GUP
*** 175.What is one’s subtle wisdom worth If it deals ill with all on earth—SB
***
175.Of what use is knowledge however profound and broad it might be, if one would act unrighteously actuated by avarice– EVS
***
175. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்
to be continued…………………………….
Tags-Tirukkural Encyclopaedia- Chapter 18 (Kural 171-175) , Part 35, NON COVETING, வெஃகாமை – Against covetousness
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தியானம் வாழ்க்கையை மாற்றுமா? ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
ச. நாகராஜன்
இலக்கணம் கற்பிக்கத் தெரிந்த பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் தனது மாணாக்கர்களுக்கு இலக்கணத்தைத் தெளிவாகக் கற்பித்தார். முழுவதுமாக தனது பாடத்தை முடித்துக் கொண்ட அவர், மாணவர்களுக்கு ஒரு சோதனை பயிற்சியைத் தந்தார். நான்கு வரிகளில் ஒரு கவிதை இயற்ற வேண்டும் என்பது தான் அவர் கொடுத்த பயிற்சி.
கவிதை எழுதுவதற்குக் கஷ்டப்பட்ட ஒரு மாணாக்கன் ஒரு வழியாக முதல் இரண்டு வரிகளை இப்படி எழுதினான்:
The Full Moon is shining bright
The tree has fruits at a height
அடுத்த இரண்டு வரிகளை எழுத வேண்டுமே, ஒரு வழியாக கஷ்டப்பட்டு இப்படி எழுதி முடித்தான்:
The food is not cooked aright!
Ganganna’s face is a horrid sight!
கொடுத்த பயிற்சி முடிக்கப்பட்டு விட்டதென்னவோ உண்மை! ஆனால் என்ன பரிதாபம், எவ்வளவு மோசம், என்ன ஒரு பயனற்ற கவிதை அது!
மனிதனின் வாழ்க்கையில் வருடங்கள் பலவும் இப்படி பயனற்று கழிக்கப்படுகின்றன. அவன் தனக்குத் தரப்பட்ட பயிற்சியை கொடுக்கப்பட்ட காலத்தில் முடிக்கிறான். எல்லோரும் நான்கு வரி கவிதையை முடிக்கிறார்கள். ஆனால் அதில் அர்த்தம் ஏதாவது இருக்கிறதா?
அவர்கள் கவனத்துக்கு உரியவர்கள்தாமா அல்லது பாராட்டுக்குத் தான் உரியவர்களா? இல்லை.
அவர்கள் தான் நினைத்தபடி செல்கிறார்கள், ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆசை,ஒவ்வொரு வரியிலும் சிந்தனை, தாங்கள் முழுவதுமாக “வாழ்ந்து விட்டதாக” ஒரு திருப்தி! இப்படி தனக்குத் தானே அகமகிழ்ந்து கொள்வது மிகவும் தவறான ஒன்று.
கணக்கு முடிக்கப்பட்ட நிலையில் வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்று பார்க்கப்படும் போது எவ்வளவு லாபம் சம்பாதிக்கப்பட்டது?
நீங்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தீர்கள், ஆனால் உங்கள் வீட்டை அலட்சியம் செய்து விட்டீர்கள். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்தீர்கள், ஆனால் உங்கள் உள்ளே உள்ள ஆகாயத்தை அளக்கவில்லை.
நீங்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு அவர்களிடம் குறைகளை கண்டுபிடித்து அவர்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் எண்ணங்களையும், செயல்களையும், உணர்ச்சிகளையும் பார்க்காமல் அவை நல்லனவையா அல்லது கெட்டவையா என்பதையும் அலசி ஆராயாமல் அவற்றைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.
மற்றவர்களிடம் நீங்கள் காணும் தவறுகள் உங்களது நீட்சியே தான். மற்றவர்களிடம் நீங்கள் காணும் நல்லது அனைத்தும் உங்களது நல்ல தன்மையின் பிரதிபலிப்பே தான்.
தியானத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் நல்ல பார்வையை ஏற்படுத்திக் கொள்ளல், நல்லனவற்றைக் கேட்பதில் ஆர்வம் கொண்டு, நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் ஆகியவற்றைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
தியானத்தின் மூலம் உலகளாவிய தன்மை மற்றும் எங்கும் பரந்துள்ள இறைவனின் தன்மை பற்றிய கருத்தில் மூழ்க முடியும்.
உங்களது அன்றாட அனுபவங்களில் பெரிய கவலையானது சிறிய கவலைகளை ஒதுக்கி விட்டு அவற்றை மறப்பதில்லையா?
உங்கள் மனதை இறை நினைவால் நிரப்பி அவனுக்காக ஏங்கும் போது, ஏக்கத்துடன் அவனுக்காகவே வாடும் போது எல்லாவிதமான கீழ்த்தரமான ஆசைகளும், ஏமாற்றங்க[s1] ளும் ஏன், சாதனைகளும் கூட ஒன்றுமில்லாமல் போய்விடும். அவை அனைத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள். தெய்வீகத்தைப் பற்றிய ஏக்கத்தில் அவை அனைத்தும் மூழ்கிவிடவே வெகு சீக்கிரத்தில் தெய்வீக ஆனந்தத்தில் மூழ்குவீர்கள்.
23-4-1967 அன்று பிரசாந்தி வித்வன்மஹாசபாவில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை
1.அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.. இவர் சோழநாட்டிலே தில்லையாடி என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் இராம நாடகம், சீர்காழித் தலபுராணம் என்னும் அரிய நூல்களை இயற்றிப் புகழ் பெற்ற அருணாசலக் கவிராயர் ஆவார். அவருடைய மூத்தமகன் இவர். இவர் காலம் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது
***
2.ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
ஒன்றுதப் பாது புரிவார்;
உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்
ஒருமூன்றி னுக்கும் மறவா
தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்
அதிதிபூ சைகள்பண் ணுவார்;
யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
பிழையா திருக்கும் மறையோர்
பெய்யெனப் பெய்யும்முகில்;அவர்மகி மையெவர்களும்
பேசுதற் கரித ரிதுகாண்!
(அந்தணர் தமக்கு உரித்தான ஆறு தொழிலையும் (ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்) கைவிடார்.
வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்கு, பேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்
அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது
தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும், மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும், ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.
***
9.நல்லவர்களின் பட்டியலில் சற்புருடர்யார் ?
செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேல்
சித்தம்வை யாத பேரும்,
கைகண்டு எடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையில்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்ஒன்று நிதிகோடி வரினும் வழக்குஅழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மைஉரை யாத பேரும்,
ஐய, இங்கு இவரெலாம் சற்புருடர் என்று உலகர்
அகமகிழ்வர்!
(செய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள்.
பணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும், கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும் உத்தமர்கள்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும் உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.)
***
10.அம்பலவாணர் சொல்வது :
கோவில் இல்லாத ஊர், நாசி இல்லா முகம்,
கொழுநன் இல்லாத மடவார்,
குணமது இல்லா வித்தை, மணமது இல்லாத மலர்,
குஞ்சரம் இலாத சேனை,
காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை,
கதிர் மதி இலாத வானம்,
கவிஞர் இல்லாத சபை, சுதி லயை இலாத பண்,
காவலர் இலாத தேசம்,
ஈவது இல்லாத தனம் நியமம் இல்லாத செபம்,
இசை லவணம் இல்லாத ஊண்,
இச்சை இல்லாத பெண் போக நலம், இவை தம்மின்
ஏது பலன் உண்டு?
–subham—
Tags அறப்பளீச்சுர சதகம், 10 கேள்விகள், அம்பலவாணர், அந்தணர், நல்ல மனைவி , நல்லவர் பட்டியல் , கள் குடித்த குரங்கு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Tamil Music Wonders! Purananuru wonders-47, Tamil Encyclopedia-87, One Thousand Interesting Facts -Part 87
Item 702
Peacock danced like a rope dancer/acrobat
Kapilar, the most famous Sangam poet shows us a drunken peacock.
A peacock drinks self fermentedtoddy in a rockpool formed of the water mixed with honey and wit the pulps of te jack fruit and staggers like a lady dancing on a rope. It is in Kurinjippattu lines 187-194.
***
Item 703
In one of the books classified as minor classics known as Tinaimalai Nutraimpatu, verse 3, we read of the parrots that came to eat the millet, in the millet farm, forgot all about their food while listening to the sweet music of the Kurinji girls or the girls of the hills.
***
Item 704
In Akam 102, we have an account of a wild rushing elephant which stood entranced at the charming music of a girl.
Akanānūru 102, Mathurai Ilampālāsiriyan Chēnthankoothanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby The man from the country, ……….where a mountain dweller with the ……….strength of a maned lion, is on a lookout ……….platform in a huge millet field with ……….mature millet, happily drunk with liquor, ……….and in the gently moving breeze, his wife ……….puts her fingers through and dries her ……….perfume-rubbed, thick, long hair, and sings ……….songs in kurinji tune in the lofty mountains, ……….and a brave young elephant, not eating the ……….clusters of millet, and not moving away, puts ……….his green, sleepless eyes to sleep quickly, came with sandal paste on his chest, wearing garlands and flower strands buzzing with striped bees, bore a spear on his right hand, escaped the security guards, paused and came slowly into our house through an unbolted door, hugged my chest and embraced my shoulders, for my sorrow to leave, spoke mixed words that were sweet and left.
Since he does not shower his graces, my bright forehead surrounded by dark hair, which gives joy, has become pale, and this has caused gossip to rise. How can I survive this, my friend?
(English translations of poems are done by Vaidehi Herbert;thanks.)
***
Item 705
In Kalittokai, Palaikkali section verse 2, we have a similar instance of an uncontrollable mad elephant being subdued by music.
***
Item 706
In Narrinai verse 304, we have a fabulous bird named Asunam which becomes captive to music. Those hunters who want to catch them play melodious music first to attract them and then play loud, harsh music to kill them. Adi Sankara also mentioned how deer are caught through music. American native Indians still use whistling to trap reindeer. Sangam age shepherds and now Scottish shepherds use dogs to round up the sheep by whistling.
Narrinai verse 143 and Akam 318 tell us that the shepherd assembles all the sheep in one place just by a whistle. They are intelligent enough to follow the instructions. In western countries the dogs do the job.
***
Item 707
Parrots recite Vedas
Sangam Tamil poet Uruththirankannan also says that the parrots in Brahmins houses recite Vedas. They repeat it because the Brahmins do the recitation every day-Perumpanaatruppadai: lines 300/301.
***
Item 708 Poet Kapilar used Parrots
When the three great Tamil kings laid a siege around King Pari’s 300 towns, Kapilar trained the parrots to bring the grains into Pari’s territory. Poets Avvaiyar and Nakkirar were all praise for Kapilar for this help (Akam303 and Akam 78).
***
Item 709
Tamil Verse 143 of Kannakaran Korranar of Narrinai gives the information about parrots calling a girl in affectionate terms even after she left home.
New Scientist magazine has published an article about intelligent animals. Under the title of “Animal Einsteins” it has published a s news story about parrots. Alex the parrot owned by psychologist Irene Pepperberg until his death in 2007, was a prodigy. The parrot had a vocabulary of about 150 words. He could also count to 6. But Indian parrots mentioned in the above two references did more than this!!
***
Item 710
In Tamil Puram .247 verse: Monkeys help the temple (priests) by cleaning the land. They first wake up the deer that are sleeping in the temple complex.
Puranānūru 247, Poet Mathurai Pērālavāyar sang when he saw Perunkōppendu enter the fire, Thinai: Pothuviyal, Thurai: Anantha Paiyul – see previous song In the terrifying front yard, by the light of the fire kindled by hunters, and lit with dried wood brought by elephants, a female monkey scratches the ground and wakes up large herds of delicate deer.
With water dripping from the hair on her back, abandoning her youth, she with large, distressed eyes, walks toward the burning pyre in the vast ground, she whose sweet life would tremble if she were to be away from her husband even for a little bit long, in their well-guarded, huge palace where drums never stop.
***
Item 711
Apes and elephants mourn when they lose their near dear ones. The zoo keepers have observed this and the newspapers have published pictures of the mourning animals (See mourning ape in Metro London 5th April 2012). Famous Tamil Novel Thekkadi Raja gives the elephant mourning in great details.
Puram 323-anonymous- a deer was caught by a tiger. Its calf was orphaned. A wild cow in the forest fed it with her milk.
Puranānūru 323, Poet: Unknown, Thinai: Vākai, Thurai: Vallān Mullai – Parts of this poem are missing He is the leader of a town where an old cow with no anger, feeds a calf of a wild cow killed by a tiger. He gives without limit to people who come with need, what they desire.
He owns spears. He draws his sword from the scabbard only to kill elephants with legs that resemble pounding mortars, in battles.
If the kings rule the country according to the rules, a tiger won’t attack a deer. Both will drink water from the same lake, say Kalidasa (Ragu. 6-46) and Tamil poets Ilango (Silappadikaram-Purancheri Irutha Kathai), Kamban and Manikkavasagan.
***
Item 712
Forest orchestra is described in many places. Each animal or bird plays its roll in the orchestra
Aninkurunuru 275 poet says a monkey used sticks to burst the bubbles in the stream water. They also play like our children
***
Item 713
A monkey took the peacock eggs and roll them on rocks. For them it is a ball game (Kuruntokai 38) once upon a time people thought all these were poetts’ imagination; but modern research articles show animals behave like men in many areas.
To be continued
Tags- animal Einsteins, Tamil Music Wonders! Purananuru wonders-47, Tamil Encyclopedia-87, One Thousand Interesting Facts -Part 87, item 713
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
91HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91
English version was posted yesterday. Here is the Tamil version.
சகுந்தலா
சகுந்தலா என்றால் பறவைப் பெண் என்று பொருள்; அதாவது கானகத்தில் பறவைகளால் வளர்க்கப்பட்டாள். இதிலிருந்துதான் நாம் பயன்படுத்தும் சகுனம் என்ற சொல் பிறந்தது. விஸ்வமித்திரனுக்கும் தேவ லோக அழகி மேனகாவுக்கும் பிறந்த பெண் குழந்தையை அவர்கள் காட்டில் விட்டுச் செல்லவே, கண்வர் என்ற முனிவர் அவளை வளர்த்து வந்தார். ஒரு நாள் துஷ்யந்தன் என்ற மன்னன் அவளைக் கண்டு கானகத்தில் அவளை கந்தர்வ முறையில் மணந்து கொண்டு நாட்டுக்குப் போய்விட்டான் அவள் கர்ப்பமுற்று உலகத்தையே ஆண்டு இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயரைத் தந்த பரதனைப் பெற்றுக்கொடுத்தாள்; அவளது முழுக் கதையை சாகுந்தலம் நாடகத்தில் காணலாம்
சாகுந்தலம்
உலகப்புகழ்பெற்ற ஸம்ஸ்க்குக நாடகத்தை அபிக்ஞான சாகுந்தலம் என்ற பெயரில் காளிதாசன் எழுதி உலகையே வியக்க வைத்தான்; இதை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் ஜோன்ஸ், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பாரதத்தின் பெருமை பரவியது; சாகுந்தல நாடக சகுந்தலாவைக் காப்பி அடித்து ஷேக்ஸ்பியர் , டெம்பஸ்ட் என்னும் நாடகத்தில் மிராண்டா என்ற கானகப் பெண்ணை உண்டாக்கினார். கானகத்தில் சகுந்தலாவை கர்ப்பவதியாக்கிவிட்டு நாட்டுக்குத் திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விடுகிறான்; கண்வ முனிவர் சீடர்கள் புடை சூழ, அவளை அனுப்பிவைத்தபோது, அவளை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறான் துஷ்யந்தன்; அவன் கொடுத்த மோதிரமும் ஒரு அசரீரியும் அவளை உண்மைபெண் என்று காட்டியவுடன் ஏற்கிறான் என்பது சாகுந்தல நாடகத்தின் கதை ; இதில் பறவைகள் , மான்களுடன் அவள் வாழ்ந்த அப்பாவிப் பெண் வாழ்க்கையும் குடும்பப்பெண் எப்படி நடக்க வேண்டும் என்ற கண்வ மஹரிஷியின் வசனமும், ஆஸ்ரம அழகும் அக்கால பாரதத்தின் அழகினை வருணிக்கிறது ; ஐரோப்பாவின் அறிஞர்கள், கவிஞர்கள் அனைவரும் காளிதாசனுக்குப் புகழாரம் சூட்டியதோடு சம்ஸ்க்ருத மொழியையும் பயிலத் துவங்கினார்கள்.
சால்மலி த்வீபம்
புராணத்தில் பூமியை அல்லது அவர்கள் அறிந்த நிலப்பரப்பினை ஏழு தீவுகளாக , அதாவது கடல் சூழ்ந்த பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் அங்குள்ள தாவரம் அல்லது பறவையின் பெயரைச் சூட்டினார்கள்; அதில் ஒன்று சால்மலி த்வீபம் .சால்மலி என்றால் இலவம் பஞ்சு மரம்; அது பல நாடுகளில் காணப்படுவதால் இந்த இடத்தைக் கண்டு பிடிப்பதில் குழப்பம் நிலவுகிறது; இதைச் சுற்றி கரும்புக் கடல் உள்ளதாகவும் புராணங்கள் செப்புகின்றன ; சிலர் இதை ஆஸ்திரேலிய பகுதி என்றும் வேறு சிலர் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதி என்றும் எழுதியுள்ளார்கள் .
எனது கருத்து
புராணத்திலுள்ள இடங்கள் பெரும்பாலும் ஆசிய கண்டத்தையே குறிக்கிறது; ஒருவேளை ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் ; அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்றவைகளை அவர்கள் பாதாள லோகங்களில் சேர்த்துவிட்டனர்; ஆகவே இவைகளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தைச் செலவழிப்பதை விட அவர்கள் ஏன் இப்படிப்பிரித்தார்கள் என்று ஆராய்வது நல்லது ; புராண பூகோளம் என்று ஆங்கிலத்தில் புஸ்தகங்களை எழுதியோரிடையேயும் ஒருமித்த கருத்து இல்லை ; சம்ஸ்க்ருத புராணங்களிடையேயும் ஒரே கருத்து இல்லை .
சாலாதூரா
உலகப்புகழ் பெற்ற, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதி , உலகையே வியப்பில் ஆழ்த்திய சம்ஸ்க்ருத இலக்கண வித்தகன் பாணினிபிறந்த ஊர் இது இப்போது பாகிஸ்தானில் லாகூர் நகருக்கு அருகில் உள்ளது . பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னால் நூலை எழுதினார் ; அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் வந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்ரீகனும் பாணிணிக்கு சாலாதூரா நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறான்
Xuanzang’s Record: Writing in CE 646, Xuanzang recorded visiting the town (calling it Suoluoduluo), noted that it was the birthplace of Pāṇini (the author of the Vyākaraṇa or Qingming-lun), and stated that a commemorative statue of Pāṇini still existed there during his visit.
***
சாம வேதம்
நான்கு வேதங்களில் சாம வேதம் மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ளது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என்பதை நான்மறை என்று சங்கப்புலவர்களும் போற்றியுள்ளனர் . பாரத நாட்டில் இசையை தோற்றத்தை மெய்ப்பிக்கும் நூல் இது; இதை இசையின் ஓதுவார்கள் வேத பண்டிதர்கள்; இதை அப்படியே காப்பி அடித்து புத்த பிட்சுக்களும் பாலி மொழி கிரந்தங்களை ஓதி வருகின்றனர் ஒவ்வொரு யாக யக்ஞத்திலும் வேத பாண்டிதர்கள் சாமத்தை இசைப்பார்கள்; அந்த அளவுக்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் இந்துக்கள்த்திலுள்ள மந்திரங்கள் முக்கால் வாசி ரிக்வேத மந்திரங்களே நூற்றுக்கும் குறைவான மந்திரங்களே புதியவை; ஆகையால் ரிக்வேத காலத்தையே இதற்கும் சூட்ட வேண்டும்; அதாவது 3500 முதல் 6000 ஆண்டு வரை பழமையானவை
ரிக் வேதத்தின் எட்டாவது ஒன்பதாவது மண்டல பாக்கள் இதில் இடம்பெறுகின்றன
மொத்தமுள்ள துதிகள் -1,771.
சாம வேதத்தில் பாரம்பரியமாக 1,000 சாகைகள் (கிளைகள்) இருந்ததாகக் கூறப்பட்டாலும், தற்போது கிடைத்து, புழக்கத்தில் உள்ள முக்கிய சாகைகள் மூன்று மட்டுமே ஆகும். அவையாவன: கௌதம சாகை, ரணாயனிய சாகை, ஜைமினி சாகை (தலவகார சாகை)
ஒவ்வொரு வேதத்திலும் சாகைகள் என்ற கிளைகள் உண்டு; அதாவது அந்தந்த ஆசிரியரின் பாணி அல்லது ஸ்டைல் அல்லது உத்தி என்று சொல்லலாம் அவ்வகையில் குஜராத்தில் கெளதும சாகாவும் மகாராஷ்டிரத்தில் ராணாயணீய சாகாவும் தமிழ்நாட்டில் ஜைமினீய சாகாவும் பயிலப்படுகின்றன
Regional Schools (Sakhas): Preserved through oral traditions across different parts of India, notably the Kauthuma tradition in Gujarat, Ranayaniya in Maharashtra, and Jaiminiya in Southern India.
சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம் ஆகிய இரண்டும் இந்த வேதத்தைச் சேர்ந்தவை
***.
ஷம்பு
Śaṃbhu (शंभु).—a. சிவபெருமானின் பெயர்களில் ஓன்று; இன்பத்தை மகிழ்ச்சியை அளிப்பவர் என்பது பொருள்; சம்போ சங்கரா என்ற கோஷங்களை பஜனைகளில் கேட்கலாம்
***
சமிதி – கமிட்டி
ரிக் வேதத்தில் காணப்படும் இந்தக்குழு அமைப்பினை நம் இப்போதும் கமிட்டி என்று சொல்லி வருகிறோம்; உண்மையான உச்சரிப்பு சமிதி; அதை ஆங்கிலத்தில் க உச்சரிப்புடன் சொல்லி வருகிறவம்; ரிக் வேதத்தில் சபா (அவை) சமிதி என்ற இரண்டு அமைப்புகளையும் பயன்படுத்தினர்
இரண்டு குழுக்களிலும் உள்ள உறுப்பினர்கள் வேறுபட்டனர் . தமிழில் எண்பேராயம் ஐம்பெருங்குழு என்று இருந்ததைப் போல.
***
சாமுத்திரிகா லக்ஷணம்
உடலின் உறுப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதைக்கொண்டு அவர்களின் குண நலன்களை, ஆரோக்கியம் , திறமை ஆகியவற்றைக் குறிக்கும் இந்துமத சாஸ்திரம் சாமுத்ரிகா லக்ஷணம் என்று அழைக்கப்படுகிறது. தாமரை இதழ் போன்ற கண்கள், மீன் போன்ற கண்கள் , தாள் தோய் தடக்கை (ஆஜானுபாஹு) என்றெல்லாம் இலக்கியங்களில் காணலாம். ஆயினும் இவைகளின் பலன்களை சாமுத்ரிகா லட்சண நூல்களில் மட்டுமே காண முடியும் ; ஆளைப்பார்த்தால் ராஜா போல இருப்பான் என்று நாம் சொல்லும்போது நம் உள்ளத்தில் ராஜ களை என்பது ஊன்றியிருப்பது தெரிகிறது ; இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நூல்கள் உண்டு ;பத்மினி வகைப் பெண்களுக்கு உடலில் இயற்கை மணம் உண்டு என்ற திருவிளையாடல் புராண வசனம் போன்றவை சாமுத்ரிகா லட்சணத்தின் ஒரு பகுதியே
அகத்தியர் பெயரிலும் ரதி ரஹஸ்யம் என்ற பெயரிலும் நூல்கள் இருக்கின்றன ; உலகத்தில் பெண்கள் படிப்பதற்கு முதல் முதலில் சிலபஸ் போட்டவர்கள் இந்துக்களே ; அவள் கற்க வேண்டிய 64 கலைகளை வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் பட்டியலிட்டுள்ளார் அதில் ஒரு கலை- சாமுத்ரிகா லக்ஷணம் ஆகும் .
***
சந்தனம்
சந்தன மரம்—( Santalum album)—இந்த மரத்தின் எல்லா பகுதிகளும் மனம் நிறைந்தவை; இதன் எண்ணெய் , பொடி, அரைத்த விழுது ஆகிய அனைத்தும் இறைவன் பூஜைகளில், அபிஷேகத்தில், குளிர்ச்சி தருவதற்காக மனித உடலில் பூசுவது வளாகம்; ஆயுர்வேத சிகிச்சைகளிலும் பயன்படும்; இறைவன் சிலைகளில் சந்தன விழுதை அப்பி பூஜை செய்வார்கள் மணம் தரும் இந்த மரக்கட்டைகள் தென்னிந்தியாவில் அதிகம் கிடைக்கிறது
***
சந்தான லட்சுமி
சந்தானம் என்றால் புத்திரப் பேறு ; அஷ்ட லட்சுமி என்னும் எட்டு லக்ஷ்மிக்களில் ஒருவர் சந்தான லக்ஷ்மி; அஷ்ட ஐசுவர்யங்களையும் வேண்டும் துதிகளில் இவள் பெயரும் இடம்பெறுகிறது .
அஷ்ட லக்ஷ்மிக்களும் என்ன என்ன தருவார்கள் என்பது அவர்களுடைய பெயர்களிலேயே உள்ளது
• ஆதி லக்ஷ்மி: ஆன்மீக செல்வம்; எதிலும் முன்னேற்றம்;
• தன லக்ஷ்மி: செல்வம்; நீங்காத சம்பத்து;
• தான்ய லக்ஷ்மி: அளவற்ற தானியம், உணவு, அமோக விளைச்சல்;
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
S Nagarajan Articles index JULY 2026
1-7-26 15932 எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும்,
மரியாதையும்! – 2 2-7-26 15935 எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும்,
மரியாதையும்! – 3 3-7-26 15940 S Nagarajan Articles index JUNE 2026 4-7-26 15944 புகழ் பெற்ற மருத்துவப் பழமொழிகள் 5-7-26 15947 ராமாயணத்தில் வரங்கள் (63-1) பிரம்மா மேகநாதனுக்கு
வரம் அளித்தது (தொடர்ச்சி) 7-7-26 15955 சர்வ தேச விண்வெளி நிலையத்தை நீரில் மூழ்கடிக்க
நாஸா திட்டம்! பேராபத்தில் பாயிண்ட் நெமோ? 8-7-26 15958 மஹரிஷிகளின் பட்டியல் – 19-7-26 15963 மஹரிஷிகளின் பெயர் பட்டியல் – 210-7-26 15966 கோத்ரங்களின் பட்டியல் – 1 11-7-26 15971 கோத்ரங்களின் பட்டியல் – 2 12-7-26 15975 கோத்ரங்களின் பட்டியல் – 3 13-7-26 15977 கோத்ரங்களின் பட்டியல் – 4 14-7-26 15980 பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லையா?
திடுக்கிடும் ஆய்வு முடிவு?! (28-6-26 தினமணி கதிர் கட்டுரை)
15-7-26 15982 அதிசயமான அமேஸான் மழைக்காடு என்ன ஆகப்
போகிறது? (5-7-26 தினமணி கதிர் கட்டுரை) 16-7-26 15985 வசுதைவ குடும்பகம் (சுபாஷிதம்) 17-7-26 15988 பூமியில் ஒட்டாது; விண்வெளியில் ஒட்டும்! (12-7-26
தினமணி கதிர் கட்டுரை) 18-7-26 15991 ராமாயணத்தில் வரங்கள் 64 – சூரியன் சுமேருவுக்கு வரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
குயில் பாட்டில் வரும் குயில் பறவையைப் பாரதியார் எங்கே கண்டார் ?
2
இந்தப் பாட்டில் மீண்டும் மீண்டும் வரும் செய்யுள் வரிகள் என்ன ?
3
குயிலைக் காண புலவர் எத்தனை நாள் தோப்புக்குச் சென்றார் ?
4
முதல் நாள் முதல் கடைசி நாள் வரை அவர் கண்ட மிருகங்கள் யாவை?
5
இந்தப் பறவைப் பாட்டினை எந்த ஆங்கிலக் கவிஞர் பாட்டுடன் அறிஞர்கள் ஒப்பிடுகின்றனர்?
6
குயில் பாட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?
7
இந்தப்பாட்டில் பாரதியார் என்ன சொல்ல வருகிறார் ?
8
குயிலின் பூர்வ ஜன்மக் கதை என்ன ?
9
குயில் பாட்டின் இறுதியில் பாரதியார் என்ன சொல்கிறார்
10
குயில் பாட்டு எவ்வளவு நீளமானது ? அவர் கொடுத்த தலைப்புக்கள் என்ன ? அது எங்கே முதலில் வெளியானது ?
************************************
விடைகள்
1.புதுச்சேரி நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. முத்தியாலுப்பேட்டை என்றொரு பகுதியில் இருந்த அந்த இயற்கை எழில் மிகுந்த சோலை கிருஷ்ணசாமிசெட்டியார் என்பவருக்கு ச் சொந்தமாக இருந்தது. அந்தத் தோப்பிற்குச் சென்ற பாரதியார் குயில் கூவுவதைக் கேட்டார். அப்போது உதித்ததே இந்தக் குயில் பாட்டு.
***
2.இந்தப் பாட்டில் மீண்டும் மீண்டும் வரும் செய்யுள் வரிகள் :
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
***
3.குயிலைக் காண புலவர் நான்கு நாட்களுக்குத் தோப்புக்குச் சென்றார்.
***
4.குரங்கும் கிழட்டுக் காளை மாடும்; பிற பறவைகளும் அங்கே இருந்தன.
***
5.இந்தப் பறவைப் பாட்டினை ஆங்கிலக் Keats Ode to a Nightingale கவிஞர் கீட்ஸ் எழுதிய நைட்டிங்கேல் பாடல் , ஷெல்லி எழுதிய ஸ்கைலார்க் என்னும் வானம்பாடிப் பாடலுடன் அறிஞர்கள் ஒப்பிடுகின்றனர்.
***
6. குயில் பாட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் N.V. சுப்பாராமன். பின்னர் மேலும் பலர் மொழிபெயர்த்தனர்
***
7.பாரதியார் குயில் பாட்டின் இறுதியில் கவிஞர் மூன்று அடிகளில் ஒரு வினாவை எழுப்புகின்றார்.
ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும்
வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ!
அவரே வேதாந்தம் என்று சொல்லிவிட்டதால் அத்வைத தத்துவத்தை இதில் காணலாம் .வேதாந்த நெறிப்படி இறைவனும் உயிரும் வேறு வேறு அல்ல. இரண்டையும் வேறு வேறாகக் காட்டுவது மாயையின் செயல். இந்த மாயை பக்தி, ஞான, கர்மயோகங்களால் விலகும். இதன்படி நோக்கக் குயில் நாத வடிவான இறைவன் குறியீடு என்பது விளங்கும். கவிஞன் பாட்டின் பொருள், குயில் அப்பாட்டின் நாதம். இரண்டும் ஒன்றுபடத் தடையாயிருப்பது மாயை. மாயை மாடாகவும் குரங்காகவும் வந்து பொய்த் தோற்றங்களைப் படைக்கின்றது. அறிவு என்ற வாளின் வீச்சிலே பொய்த் தோற்றம் கலைகிறது.
குயில்பாட்டின் தத்துவ உள்ளுறை
குயில்-சீவான்மா (உயிர்) (Soul)-கவிஞன்;
பரமாத்மா (கடவுள்) (God)-குரங்குமனம் (mind);
மாடு-ஐம்பொறி (Senses);
உடைவாள்-ஞானம் (மெய்யறிவு) (Real Knowledge);
ஏனைய பறவைகள்-உலகியல் (Worldly life);
சோலை-பிரபஞ்சம் (Universe);
நான்குநாள்-சீவன்பக்குவம் பெறுவதற்குரியகாலம்(Timerequiredforthsoul to be fit)
இப்பாட்டில் குயில் – சீவான்மா, கவிஞன் – பரமாத்மா, குரங்கு- மனம், மாடு-ஐம்பொறி, உடைவாள்-ஞானம், ஏனைய பறவைகள்- உலகியல், சோலை-பிரபஞ்சம், நான்கு நாள்- சீவான்மா பக்குவம் பெறுவதற்குரிய காலம் என்ற வகையில் தத்துவம் அடங்கியதாகக் கருதுவர்.
இப்பாடலைச் சைவ சித்தாந்த நோக்கில் கணிப்பவர்,”ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களில் காதலை மாயா சக்தியாகவும் ஆணவம், கன்மம், என்பவைகளை மாடனும் குரங்கனுமாகப் பாவித்து, குயிலைப் பசுவாக ஆன்மாவாகப் பாவித்து மன்னவன் மகனைப் பதியாகப் பாவித்துப் பொருள்கொள்ளுவதே பொருத்தமுடைத்தாம்
***
8.குயிலின் பூர்வ ஜன்மக் கதை :
குயிலின் முந்தைய பிறப்பு:
ஒரு நாள் பொதியமலையின் அருகேயுள்ள ஒரு சோலையில் ஓர் முனிவர் வந்தார். மற்ற குயில்களைப் போலன்றி என் மனம் மானுடரைப் போல் எண்ணுகிறது, அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரிகிறது. இதன் காரணம் என்ன? இதன் உண்மையை எனக்கு விளக்கியருள வேண்டும்” என்று வணங்கிக் கேட்டேன்.
“அப் பெருமுனிவர் பேசினார். “குயிலே! கேள். சேரவள நாட்டின் மலையில் வாழும் வேடர்களுக்கு வீரமுருகன் என்பவன் முன்பு தலைவனாக இருந்தான். முற்பிறப்பில் அந்த வீரமுருகனின் மகளாகப் பிறந்திருந்தாய். அப்போது உன்னைச் “சின்னக்குயிலி” என்ற பெயரால் அழைப்பர்.
உன்னுடைய மாமன் மகன் மாடன் என்பவன் உன்னை மணக்க விரும்பி உன் நினைவாகவே சித்தம் வருந்தினான். அவனுடைய பெருந்துன்பத்தைக் காணச் சகிக்காமல் அவனை மாலையிட நீ வாக்களித்தாய். . தென்மலையின் வேடர் தலைவன் மொட்டைப்புலியனின் மகனான நெட்டைக்குரங்கனுக்கு, உன்னை மணமுடிக்க நிச்சயித்தான் அந்த மொட்டைப்புலியன். உனது அப்பனும் சம்மதித்தான்
செய்தி கேட்டு மாடன் மனம் புகைந்தான். உன்னிடம் வந்தபோது, நெட்டைக் குரங்கனுக்கு நான் பெண்டாட்டியாக நேர்ந்தாலும் மூன்று மாதங்களுக்குள் ஏதாவது மர்மம் செய்து வேற்றுமையை விளைவித்து இங்கே நான் வந்தடைவேன். தாலியை மீண்டும் அவர்களிடமே கொடுத்து விடுவேன். நான்கு மாதத்தில் நாயகனாக உன்னை நான் மணம் புரிவேன். என் பேச்சு தவறமாட்டேன். மாடா! என்னை நம்பு” என்று இரக்கத்தினால் உரைத்தாய்.
ஒரு நாள் சேரமன்னனின் மகன் வேட்டையாட காட்டிற்கு வந்தவன், நீங்கள் இருக்குமிடம் வந்தான். உன்னைக் கண்ட அந்த அரசகுமாரன் உன் மீது மாளாக் காதல் கொண்டான். நீயும் அவனைக் கண்டாய், அவன்மீது ஆறாக் காதல் கொண்டாய், இருவரும் ஆவி ஒன்றென தழுவி நின்றீர்.
அவ்வேளையில் ஊரிலிருந்து நெட்டைக் குரங்கன் வந்து இளவரசனும் நீயும் நெருக்கமாக இருப்பதைக் கண்டான்.
நெட்டைக்குரங்கன் வந்த செய்தியை யாரோ இதற்குள் மாடனுக்குத் தெரிவித்தார்கள். அவனும் சின்னக் குயிலியைத் தேடிக்கொண்டு காட்டிற்கு ஓடிவந்தான். . இருவரும் தத்தம் உடைவாளை உருவிக்கொண்டு முன்னே பாய்ந்தனர்.
இளவரசன் மீது இருவர் வீசிய வாட்களும் பாய்ந்தன. சடாரென திரும்பினான் இளவரசன். உடைவாளை எடுத்து ஒரே வீச்சில் மாடனையும் குரங்கனையும் மண்ணிலே சாய்த்தான். அடுத்த கணமே அவனும் அடியற்ற மரம்போல் சாய்ந்தான். இளவரசன் “வஞ்சியே, நீ அஞ்சாதே. பிறப்பும் இறப்பும் இவ்வையகத்தில் புதுமையன்று. சாவிலே துன்பம் ஒன்றும் இல்லை. நாம் இருவரும் மீண்டும் இம்மண்ணில் பிறப்போம். அப்போது உன்னை மீண்டும் கண்டு அன்பு கொள்வேன். அப்பால் உடலும் உயிரும் ஒன்றென நாம் இல்லறம் காண்போம்” என்று புன்னகை பூக்கச் சொல்லி ஆவி நீங்கினான். இப்பிறப்பில் நீ குயிலாய் காட்சி கொடுக்கின்றாய்” என்று அந்த முனிவர் குயிலின் வரலாற்றைக் கூறி முடித்தார்.
“உன்னுடைய மன்னவன் இப்பிறப்பில் தொண்டை வளநாட்டில் கடற்கரைப் பட்டினம் ஒன்றில் பிறந்து வளர்கிறான். உன்னை ஒருநாள் சோலையினிடத்தே காண்பான். உள்ளம் உருக நீ பாடும் காதல் பாட்டினைக் கேட்பான். “ஐயனே! இப்பிறப்பில் நானோ குயில் உருவம் கொண்டுள்ளேன். என் கோமானோ பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் நெஞ்சம் ஊடுருவிக் காதல் மலர்ந்தாலும், எங்ஙனம் எங்கள் திருமணம் நடக்கும்?” என்றேன்.
“பேதாய்! இப்பிறவியிலும் நீ விந்தியமலைச் சாரலில் உள்ள ஒரு வேடனுக்குக் கன்னியாகவே பிறந்தாய். தீவினைப் பயனாய் மாடன், குரங்கன் இருவருமே கொடும்பேய்களாக அலைகின்றனர். அவ்வாறு அவர்கள் காடு, மலை, மேடு, பள்ளமெல்லாம் சுற்றி அலைந்து திரிந்துவரும் வேளையிலே, உன்னைக் கண்டு விட்டனர். இப்பிறப்பிலும் நீ மன்னனையே மணப்பாய் என்றெண்ணி உன்னைச் சின்னக் குயிலாக்கி, நீ செல்லும் திசையெல்லாம் நின்னுடனே சுற்றி, சூழ்ச்சி பல செய்து வருகின்றனர். நீ இதனைத் தெரிகிலையோ?” என்றார் முனிவர்.” இதற்கு ஓர் மாற்று இல்லையா?” என்று மனம் மறுகி நான் கேட்டேன்.
மாமுனிவரும், “பெண்ணே! வேந்தன் மகன் உன்னைக் கண்டு நேசம் காட்டி நிற்கையில், இப்பேய் இரண்டும் மாயம் பல செய்யும். அவனும் அதன் பயனாய் உன்பால் ஐயம் கொள்வான். சினம் கொண்டு கன்னி உன்னை விட்டுவிட உறுதி கொள்வான். இதற்கப்பால் நேருவதையெல்லாம் நீயே அறிந்துகொள்வாய், எனக்கு சந்தியாவந்தனம் ஆற்றுகின்ற நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி அவரும் காற்றிலே மறைந்து போனார். இதுவே என்னுடைய பழம்பிறப்பின் கதை. இப்பிறப்பின் பின்னைப் பகுதியிலே நடந்தவற்றைப் பார்த்திபனே, நீர் முற்றிலும் அறிவீர்!
***
10. குயில் பாட்டு” சி. சுப்பிரமணிய பாரதி எழுதிய நீள் கவிதை நூல். 1914-ல் எழுதப்பட்டு 1923-ல் வெளிவந்தது. 1. சோலைக் குயில்,2. குயிலின் பாட்டு,3 குயிலின் காதற் கதை, 4. காதல் வேதனை, 5. குயிலும் குரங்கும், 6. இருளும் ஒளியும், 7. குயிலும் மாடும், 8. நான்காம் நாள்,- 9. குயில் தனது முன்பிறப்பின் கதையை மொழிதல்-என்ற 9 பிரிவுகளை உடையது. குயில் பாட்டின் மொத்த வரிகள் 745.
–subham—
Tags– பாரதி, குயில்பாட்டு , 10 கேள்விகள் , மொத்த வரிகள், ஆங்கில மொழிபெயர்ப்பு, புதுச்சேரி, மாந்தோப்பு , குயில், பாரதி