கர்ம ரகசியம்! – 2 (Post No.12,901)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,901

Date uploaded in London –  –   10 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கர்ம ரகசியம்! – 2

ச.நாகராஜன்

ஒருவன் செய்த கர்மம் ஒருபோதும் அவனை விடாது.

நல்வினை, தீவினைகளின் பயன் பற்றி தர்மர் பீஷ்மரிடம் கேட்க அதைப் பற்றி விரிவாக பீஷ்மர் எடுத்துரைக்கிறார்.

இதை மஹாபாரதத்தில் அநுசாஸனபர்வம் பத்தாம் அத்தியாயத்தில் காண்கிறோம்.

பீஷ்மர் கூறுகிறார்: “கன்றானது அநேக ஆயிரம் பசுக்களில் தன் தாயைத் தெரிந்து அடைவது போல, முன் செய்த கர்மம் செய்தவனைத் தொடர்கிறது. பூக்களும், கனிகளும் யாராலும் கட்டளையிடப்படாமலே, தம் தம் காலம் கடவாமல் உண்டாவது போல முன் செய்த கர்மமும் காலத்தில் வெளிப்படுகின்றது.”

இதே பர்வத்தில் 35வது அத்தியாயத்தில் பத்து வகை கர்மங்களைப் பற்றிய விளக்கத்தை பீஷ்மர் தருகிறார்.

தேகத்தினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் மூன்று.

1) உயிரைப் போக்குவது

2) திருடுவது

3) பிறர் மனைவியைத் தொடுவது

ஆக இந்த மூன்று தீய கர்மங்களையும் விட வேண்டும்.

வாக்கினால் செய்யப்படும் பாவங்கள் நான்கு.

1) கெட்ட பேச்சு

2) கடுஞ்சொல்

3) கோள் சொல்வது

4) பொய் சொல்வது

இவை நான்கும் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள். வாக்கினாலும் இவை செய்யத் தகாதவை.

இந்த நான்கையும் விட வேண்டும்.

மனத்தினால் செய்யப்படும் நற் கர்மங்கள் மூன்று.

1) பிறர் பொருளை விரும்பாமை

2) எல்லா பிராணிகளிடத்தும் அன்பு

3) புண்ய பாவங்களுக்குப் பலன் உண்டென்ற நம்பிக்கை

இந்த மூன்றையும் மனதினால் கொள்ள வேண்டும்.

இவற்றைச் செய்பவன் நாராயணனிடம் பக்தி கொண்டு செய்யும் போது அவர் அனுக்ரஹத்தால் அவன் மேலான பதத்தை அடைவான் என்பது பீஷ்மரின் வாக்கு.

தர்மபுத்திரர் பீஷ்மருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு பிரஹஸ்பதி வருகிறார்.

தர்மபுத்திரரிடம் ப்ருஹஸ்பதி, ‘மனிதன் ஒருவனாகவே பிறக்கிறான்; ஒருவனாகவே இறக்கிறான். ஒருவனாகவே நரகங்களைத் தாண்டுகிறான். ஒருவனாகவே நரகத்திற்குப் போகிறான். தந்தை, தாய், சகோதரன், புத்திரன், ஆசாரியன், தாயாதிகள், சுற்றத்தார், சினேகிதர்கள் யாரும் துணையாவதில்லை. மனிதர்கள் தேகத்தைச் சில காலம் பயன்படுத்தி உயிர் போன பின் கட்டை ஓட்டாஞ்சில்லிகளைப் போல எறிந்து விட்டு வேறு முகமாகப் போகின்றனர். தர்மம் ஒன்றே பின் தொடர்கிறது” என்கிறார்.

தர்மர் அவரிடம் மனிதன் உயிரை விடுகின்ற போது அதில் சூட்சுமமான ஆத்மா மறைந்து கண்பார்வைக்குத் தெரியாமல் போகின்றதே? தர்மம் அதைத் தொடர்வது எப்படி?’” என்று கேட்கிறார்.

உடனே பிரஹஸ்பதி கூறுகிறார்: “பூமி, வாயு, ஆகாயம், அக்னி, நீர் ஆகியவற்றின் தேவதைகள், புத்தி, ஆத்மா இவை அனைத்தும் சேர்ந்து எக்காலமும் தர்மத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேற்சொன்னவற்றுடன் தர்மம் பின் தொடர்கிறது. மேலே சொன்னவை தோல், எலும்பு, மாம்ஸ சுக்லசோணிதங்களையும் உயிர் விட்ட தேகத்தையும் விடுகின்றன. அதன் பிறகு ஜீவனானது தர்மத்துடன் சேர்ந்து இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் சுகமாக விளங்குகிறது.:

மனிதனுக்கு உள்ள மூன்று வகை தேகங்களைப் பற்றியும் பிரஹஸ்பதி விளக்குகிறார்.

மனிதனுக்கு மூன்று தேகங்கள் உண்டு.

1) போகவச்யம் (ஸ்வர்க்க சரீரம்)

2) கர்மவஸ்யம் (இது பூமியில் உள்ள சரீரம்)

3) யாதனாவச்யம் (இது நரகத்தில் உள்ள சரீரம்)

இந்த மூன்று வகை தேகங்களினால் மனிதன் தன் வினைப்பயனை அனுபவிக்கிறான்.

இதைத் தொடர்ந்து எந்தக் கர்மத்தை செய்தால் என்னென்ன பிறவிகளாகப் பிறப்பார்கள் என்ற உரை தொடர்கிறது.

தான் பிரமதேவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதை தற்போது உரைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

நல்ல கர்மங்களின் பயன்களை, குறிப்பாக தானம் செய்தல்,அஹிம்சை, வாக்கினால் செய்யப்படும் தவம், மௌனம்  உள்ளிட்ட அனைத்தின் நலனைப் பற்றியும் அநுசாஸன பர்வத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

கர்ம ரகசியத்தை முழுவதுமாக அறிவது முடியாதது என்றாலும் கூட, ஒருசிறிது அறிந்து கொள்ளலாம்.

                   ***                    தொடரும்

மல்லிகைப் பூ ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் ! (Post No.12,900)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,900

Date uploaded in London – –   9 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

மல்லிகைப் பூ மணத்தை விரும்பாதவர் எவருமிலர். மல்லிகை மலரை அணியாத இந்துப் பெண்களை பார்ப்பது அரிது. சில கடவுளருக்கு சில பூக்கள்தான் உகந்தது என்பர்; ஆனால்  மல்லிகை மலரை விரும்பாத தெய்வமில்லை. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை என்றாலோ முகூ ர்த்தம் என்றாலோ விலை ஏறி விடும்.

லண்டனில் அப்படி இல்லை. எப்போதும் ஒரு முழம் ஒரு பவுண்டுதான்; அதாவது ஒரு முழம் நூறு ரூபாய்..

பூஜை அல்லது வீட்டில் விசேஷம் என்றால் முன்கூட்டியே  ஆர்டர் கொடுத்துவிடுவோம் .  விமானத்தில் மல்லிகை வந்து இறங்கும் நாளைத் தவிர வேறு நாளில் விசேஷம் இருக்குமானால், ஸார் , பிச்சிப்பூ வாங்குங்கள். அது  நாள் பட்டாலும் வாடாது என்று கடைக்காரரே நமக்கு ரகசியங்களையும் சொல்லித் தருவார் .

தாவர இயல் கணக்குப்படி மல்லிகை, முல்லை, பிச்சி என்பது எல்லாம் ஓர் குடும்ப மலர்களே. ஜாஸ்மீனியம் JASMINIUM என்ற குடும்பத்தில் வந்துவிடும்.

மல்லிகை மலர் சாகுபடியில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடுதான்.அதிலும் மதுரை மல்லிகை என்றால் இன்னும் மகத்துவம் அதிகம் .

உலகில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்துக்கள் மட்டும் மல்லிகா என்று பெண் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டார்கள் என்று எண்ணிவிடக்கூடாது . முலலீம்களும் யாஸ்மின் YASMIN என்றும் கிறிஸ்தவர்களும் ஜாஸ்மின் JASMINE என்றும் பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள்.

அதிகம் வாங்குவது சவூதி அரேபியா !

வோல்சா Volza’s India Export data நிறுவன கணக்குப்படி மல்லிகை  ஏற்றுமதி பின்வருமாறு:

இந்தியா ஏற்றுமதி செய்யும் மல்லிகைப்பூவை  அதிகம் வாங்குவது சவூதி அரேபியா; அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு நாடுகளும், சிங்கப்பூரும் நிற்கின்றன.

உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்த மலரை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தோனேஷியா, சீனா ஆகும் .

ஆண்டுதோறும் இந்தியா 5,514 shipments 5514 தடவை கப்பல்களில் ஏற்றுகிறது

இந்தோனேஷியா 1,163 கப்பல்களில் ஏற்றுகிறது; சீனா 733 shipments.733 கப்பல்களில் ஏற்றுகிறது .

இந்திய மல்லிகை கனடா , அமெரிக்கா , பிரிட்டன் , பஹ்ரைன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அதிகம் செல்கிறது.

மல்லிகை சாகுபடி ஆண்டு முழுதும் வருமானம் தருகிறது. GREEN HOUSE கிரீன்ஹவுஸ் அமைத்து எல்லாக் காலங்களிலும் மல்லிகை மலரைப் பெறும் நவீன உத்திகளை விவசாய பத்திரிகைகளில் காணலாம்.

மல்லிகை எஸ்சென்ஸ்

இந்துக்களைப் பொறுத்தவரை மல்லிகை என்பது இறைவனுக்கு சமர்ப்பிக்கவும், நாள், கிழமைகளில் பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது. ஆனால் மற்ற மதத்தினர் இதை சென்ட் என்னும் பெர்ப்F யூமில் PERFUME அதிகம் உபயோ கிக்கின்றனர் .

மல்லிகை எஸ்சென்ஸ் மிகவும் விலை உயர்ந்தது . ஒரு மில்லி லிட்டர் எசன்ஸ் எடுக்க 8000 மல்லிகை மலர்கள் தேவை ; ஒரு லிட்டர் எடுக்க 8000 X 1000 மலர்கள் தேவை.!

மல்லிகை மலரிலேயே பல வகைகள் உண்டு. அது தவிர முல்லை , பிச்சி வகைகளும் உள்ளன. ஆகையால் இதை செடி என்றும் கொடி என்றும் சொல்லலாம். 15 முதல் 20 ஆண்டுகள் வரை பலன் தரும்

பயன்கள்

பெரும்பாலும் பெர்ப்பியூம் PERFUME என்னும் நறுமண திரவம் தயாரிக்க உபயோகிக்கிறார்கள் .

வெவ்வேறு அளவில் வெவ்வேறு எண்ணெய்களில் CARRIER OILS கலந்து மசாஜ் செய்ய, முடி வளர் தைலம் தயாரிக்க, ஆவி மூலம் நறுமணம் பரப்ப , மெழுகு வர்த்தியில் , ஊது வர்த்தியில் சேர்க்க என்று நூற்றுக் கணக்கில் மலரையும் எஸ்ஸன்ஸ் கலந்த எண்ணெயையும் பயன்படுத்துகின்றனர் .

மருத்துவ பயன்கள்

மல்லிகை மலர் வாசனை சிகிச்சை முறையில் ( Jasmine,  aromatherapy scent) பயன்படுகிறது . இதை நுகர்ந்தால் மனத்  தொய்வு  அகன்று மன நலம் பெருகுகிறது என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது

, (has been linked with reducing depression and improving mental health)

இன்னும் ஒரு ஆய்வில் மலரின் மணம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதையும், ரத்த அழுத்தத்தை உயர்த்துவதையும் மூச்சுவிடுவதை அதிகரிப்பதையும் கண்டனர் . In one study, jasmine oil was found to increase blood oxygen levels, blood pressure and even the breathing rate of participants.)

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பாசிட்டிவ் எனர்ஜி, ஆக்கபூர்வ எண்ணங்களை அதிகரிக்கிறது .

ஆரோக்கியம் தொடர்பான பத்திரிகை நடத்திய ஆய்வில்  (Journal of Health Research) மல்லிகை மலரை நுகர்ந்தால் (inhaling jasmine oil affected the central nervous system and stimulated brain activity, enhancing and boosting the participants’ moods. Overall, each participant reported feeling more energetic and positive.) மத்திய நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுவதையும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்வதையும் , தெம்பான உணர்ச்சி பெருகுவதையும் கண்டனர் .

திரைப்படப் பாடல்களில் மல்லிகை

மல்லிகையைப் பயன்படுத்தும் திரைப்படப் பாடல்களைக் கேட்டால் அல்லது படித்தால் அது நல்ல மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் மட்டும் இருப்பதைக் காணலாம் .

மல்லிகை எஸ்சென்ஸ் விலையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்! மயக்கம் போட்டு விழுந்துவிடுவீர்கள் ஒரு லிட்டர் 20,000 ரூபாய்க்கு மேல்.

–SUBHAM—

TAGS- மல்லிகை, மருத்துவ பயன்கள் , ஏற்றுமதி

நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்-52 (Post No.12,899)

Neendoor  Subrahmanya Swami on elephant.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,899

Date uploaded in London – –   9 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 52

கோவில் எண்கள் –93, 94, 95,96, 97

93.நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோட்டயம் மாவட்டத்தில் பசுமையான வயல்வெளி சூழ்ந்த இடம் நீண்டூர் ஆகும். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கிறது. இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் புகழ் பெற்றது; பழமையானது

தாரகாசுரனுடன் போரிட்ட தேவ சேனாபதியாக முருகன் இங்கு காட்சி தருகிறார். தாரகாசுரனை வதம்செய்யும் பாணியில் முருகனின் வேல் கீழ் நோக்கி இருக்கும். ஏனைய சுப்ரமண்ய சுவாமி கோவில்களில் வேல் நிமிர்ந்த நிலையில் இருக்கிறது .

மே மாதத்தில் வருடாந்திர விழா நடக்கும். இது தவிர தைப்பூச நாளும் கொண்டாடப்படும் .தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, நாகர் சந்நிதிகளும் கோவிலில் இருக்கின்றன.ஒட்டனரங்கமாலா சமர்ப்பணம் என்ற மிகப் பழமையான சிறப்பு வழிபாடு இந்தக் கோவிலின் தனித்துவத்தைக் காட்டும். வேறு எங்கும் இந்த சடங்கு இல்லை .

கேரள பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நல்ல மர வேலைகளைக் காணலாம்.

XXXX

94. குட்டியணி குளங்கரை பகவதி கோவில்

Neendoor Kuttiyanikulangara Devi temple, also known as Neendoor Kavu,

நீண்டூர் காவு என்று அழைக்கப்படும் இந்த பகவதி கோவில் கைப்புழா என்னும் இடத்தில் அமைந்துள்ளது

வருடாந்திர விழாவை நீண்டூர் பூரம் என்று அழைப்பார்கள். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ.

இங்கு பிப்ரவரி மாதத்தில் 3 நாள் உற்சவம் நடக்கும் . நவம்பர்- டிசம்பரில் 41 நாள் களமெழுத்துப்பாட்டு  விழா நடக்கும் .

3 நாள் உற்சவத்தில் கதகளி, கோல்களி நடக்கும். மூன்றாவது நாளில்தான் கும்பம் துள்ளல் என்ற கரகாட்டம் நடக்கும். மேளதாள இசைக்கு ஏற்ப தலையில் குடங்களை வைத்துக்கொண்டு ஆடுவார்கள். அத் தோடு கருடன் தூக்கம், பூரம் துள்ளல் ஆகியனவும் நட க்கிறது .

கோவில் விழாவில் நடக்கும் ஓட்டந்துள்ளல் நிகழ்ச்சியும் ஏனைய இடங்களிலிருந்து மாறுபட்டது. அதற்கு நீண்டூர் பாணி  ஓட்டந்துள்ளல் என்ற பெயரும் உண்டு.

கடைசி நாளில் யானை ஊர்வலத்துடன் வேல களி நடத்துவார்கள் ; சிப்பாய் வேஷத்தில் வருவோர் பழங்கால யுத்த முறைகளை செய்து காட்டுவார்கள் .

xxxx

95.ஆதித்யபுரம் சூரியன் கோவில் ரவிமங்கலம்

கோட்டயம் மாவட்டத்தில் காடுதுருத்தி அருகில் இரவிமங்கலம் என்ற ஊரில் இருக்கிறது. ரவி என்றால் சூரியன் .

கேரளத்தில் சூரியனுக்கு உள்ள ஒரே கோவில் இது.

ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன.

 ‘ஸ்ரீகோவில்’ எனப்படும் கருவறையானது வட்ட வடிவில் உள்ளது. சூரிய பகவானின் சிலை,  தியான நிலையில் மேற்கு நோக்கி இருக்கும் . பின் வலது கையில் சக்ராயுதத்தை ஏந்தியும், பின் இடது கையில் சங்கு ஏந்தியும், முன் இரு கைகளானது தவ முத்திரையோடு உள்ளன.சாஸ்தா, யக்ஷி ஆகிய துணை தெய்வங்கள் உள்ளனர்.

விழாக்களில் காவடியாட்டமும் உண்டு.  மே மாதம் , டிசம்பர் மாதங்களில் விழாக்கள் நடக்கின்றன.

xxxx

96.கடுதுருத்தி மஹாதேவர் கோவில்

கோட்டயம் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் கடு துருத்தி சிவன் கோவில் இருக்கிறது .வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் .

கரன்  என்ற அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்தபோது அவனிடம் சிவபெருமான் 3 லிங்கங்களைக் கொடுத்தார் . அவன் ஒரு லிங்கத்தை ஏத்த மானூரிலும், இரண்டாவது லிங்கத்தை வைக்கத்திலும் வைத்தான். வாயில் கடித்த நிலையில் கவ்வி வந்த கரன் மூன்றாவது லிங்கத்தை வைத்த இடம் கடித்து உருத்தி என்று அழைக்கப்படுகிறது .

மலைக்குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய இருக்கிறது.

மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

xxxxx

97.பனச்சிக்காடு சரஸ்வதி கோவில்

கோட்டயத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் சிங்கவனம் என்ற இடம் உள்ளது. அதன் அருகில் புகழ்பெற்ற பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் இருக்கிறது.

கல்வியில் நல்ல சிறப்புகளைப் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் நாடும் கோவில் இது. நவராத்ரி காலத்தில் வரும் சரஸ்வதி பூஜையும் அதையடுத்து விஜய தசமியன்று வரும் வித்யாரம்பம் நிகழ்சசியும் சிறுவர்களை கவர்ந்துஇழுக்கும் கோவில் இது .

கர்நாடகத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், பரவூரில் உள்ள தட்சிண மூகாம்பிகை கோவில் போல இதுவும் சிறப்பு பெற்றது  துர்காஷ்டமி நாளன்று தேவிக்கு முன்னால் புஸ்தகங்களை அடுக்கிவைப்பார்கள் ; விஜய தசமி நாளில் கல்வியைத் துவங்குவார்கள் உற்சவ காலத்தில் பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசைக் கச்சேரிகளும் நடக்கும்.

ஆண்டுதோறும் குழந்தை வரம் வேண்டி கர்நாடக கொல்லூருக்குச் சென்று வந்த தாமோதர நம்பூதிரிக்கு இறைவியே தோன்றி இங்கு கோவில் அமைக்க வேண்டினார். நம்பூதிரியும் காட்டில் கிடைத்த சரஸ்வதி விக்கிரகத்தை வைத்து  கோவிலை எழுப்பினார்  ஆயினும் இப்போது இறைவியைக் காண முடியாதபடி செடி கொடிகள் முளைத்துவிட்டன .

தற்போது கிணறு போன்ற பள்ளத்தில் மறைந்திருக்கும் தேவியைப் பார்த்து வணங்க முடியாததால், பக்தர்களின் பார்வைக்காக இங்கு மேற்கு திசையைப் பார்த்தபடி கல் ஒன்றை நிறுவி , சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரையும் பரவூர் போலவே தட்சிண மூகாம்பிகா கோவில் என்று சொல்லுவார்கள் .குழந்தை இல்லாதோர் இங்கு வந்து பாயஸப் பிரசாதத்தைச் சாப்பிட்டால் மகப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தக் கோவிலில் இருக்கும் வித்யா மண்டபத்திற்குச் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் குருவின் மடியில் தங்கள் குழந்தையை அமர வைக்கின்றனர். அவர் தங்க நாணயத்தினால் ஹரியின் பெயரை நாக்கில் எழுதுவார். பின்னர் அங்குள்ள தாம்பளத்திலுள்ள அரிசியில் ஹரி என்று குழந்தையை விரலினால் எழுத வைப்பார்கள்.. இதை வித்யாரம்பம் என்று அழைக்கிறார்கள்.

—subham—

Tags- பனச்சிக்காடு ,மூகாம்பிகை, சரஸ்வதி, கோவில், வித்யாரம்பம், கடுதுருத்தி மஹாதேவர், ஆதித்யபுரம் சூரியன் ரவிமங்கலம், நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி, குட்டியணி குளங்கரை பகவதி .

 கர்ம ரகசியம்! – 1 (Post No.12,898)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,898

Date uploaded in London –  –  –  9 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கர்ம ரகசியம்! – 1

ச.நாகராஜன் 

நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் மனிதனின் கர்மமே என்று ஹிந்து மதம் திடமாகத் தெரிவிக்கிறது.

நம் மனதில் தோன்றும் ஏராளமான சந்தேகங்களுக்கு ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், சாஸ்திரங்கள் விளக்கமாக விடையைத் தருகின்றன.

சந்தேகங்கள் ஆயிரம்; விடைகளும் அப்படியே.

கர்மங்களின் ஸ்வரூபம் புலன்களுக்கு எட்டாத நுட்பம்.

இதைப் பற்றி யமன், கௌதமி, காலபுருஷன், வேடன், ஒரு பாம்பு ஆகியவற்றிற்கு இடையே நடந்த ஒரு உரையாடலை மஹாபாரதம் அநுசாஸன பர்வம் முதல் அத்தியாயத்தில் தெரிவிக்கிறது.

கௌதமி என்னும் ஒரு கிழவி இருந்தாள். காம, க்ரோதம் அற்ற நல்லவள் அவள்.

அவளது மகனை ஒரு பாம்பு கடிக்கவே அவன் இறந்து விட்டான்.

அர்ஜுனகன் என்னும் ஒரு வேடன் அந்தப் பாம்பைச் சுருக்கிட்டு கௌதமியிடம் கொண்டு வந்தான்.

“ஓ! பாக்யவதியே! உன் மகனைக் கொன்ற நீசமான பாம்பு இது தான். இதைத் தீயில் போடலாமா? துண்டு துண்டாக வெட்டலாமா?சீக்கிரம் சொல். குழந்தையைக் கொன்ற இதை நீண்ட காலம் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது” என்றான் வேடன்.

உடனே, கௌதமி, “வேடனே! இதை விட்டு விடு. புண்ணியத்தால் லேசாக இருக்கும் மனிதர்கள் நீரில் ஓடங்கள் மிதப்பது போல உலகில் மிதக்கின்றனர். பாவத்தினால் மிகுந்த கனமாய் இருப்பவர்கள் நீரில் விழுந்த ஆயுதம் போல அமிழ்ந்து போகின்றனர்.” என்றாள்.

வேடனோ, சாந்தியை விரும்புபவர்கள் தனக்கு நேர்ந்த காலத்தை விட்டுவிடுவார்கள். காரியத்தைக் கவனிப்பவர்கள், சமயம் வந்த போது அதைச் செய்து விடுவார்கள். ஆகவே இந்தப் பாம்பை நான் கொல்லப் போகிறேன்” என்றான்.

“வேடனே! இதனால் தர்மம் கெடும். இந்த சர்ப்பத்திற்கு அதிகாரி நான் இல்லை.கோபத்தை விடு. இந்த அரவத்தை விட்டு விடு” என்றாள் கௌதமி.

உடனே வேடன், “இதைக் கொல்வதினால் உண்டாகும் புண்ணியம் எனக்கு அழிவில்லாத லாபம் ஆகும். இந்த அயோக்கிய பாம்பை கொல்வதனால் எனகு புண்ணியம் உடனே கிடைக்கும்” என்றான்.

உரையாடல் தொடர்ந்தது.

கௌதமி கூறியதற்கெல்லாம் வேடன் மறுமொழி உரைத்தான். பாம்போ சுருக்கில் மாட்டி உயிரை இழந்து கொண்டிருந்தது.

அது ஒருவாறாக மெல்லப் பேசத் தொடங்கியது: “ அர்ஜுனகா! இதில் என் குற்றம் ஏதும் இல்லை. யமன் கட்டளை இட்டான். நான் கடித்தேன். பாவம் ஏதேனும் உண்டெங்கில் அது யமனுடையது” என்றது. உரையாடல் நீண்டு கொண்டே போனது.

அப்போது யமன் அங்கே வந்தான்.

“பாம்பே! நான் காலத்தினால் ஏவப்பட்டு உன்னை ஏவினேன். இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நானும் காரணமில்லை. நீயும் காரணமில்லை. காற்றானது பல இடங்களிலிருந்து மேகங்களை இழுத்துக் கொண்டு வரும் போது அவை எப்படி காற்றுக்கு உட்பட்டிருக்கின்றனவோ அது போலவே நான் காலத்தை அநுசரித்தே பிராணிகளிடம் செல்கிறேன்” என்றான் யமன்.

காலத்தின் வலிமையை யமன் வெகுவாக எடுத்துரைத்தான்.

“சூரியன், சந்திரன், விஷ்ணு, நீர், காற்று, இந்திரன், அக்னி, ஆகாயம், பூமி, மித்ரன் என்னும் தேவதை, மேகம், வசுக்கள், அதிதி தேவதை, நதிகள், கடல்கள்,  சக்தி, அசக்தி ஆகிய இவை எல்லாம் அடிக்கடி காலத்தினால் ஆக்கவும் அழிக்கவும் படுகின்றன. பாம்பே! இதை நீ அறிந்திருந்தும் என்னைக் குற்றவாளியாக நீ நினைப்பது எப்படி?” என்றான் யமன்.

இதைத் தொடர்ந்து நீண்ட வாக்குவாதம் ஏற்பட்டது. வேடன் பாம்பைச் சொல்ல பாம்பு யமனைச் சொல்ல யமன் காலத்தைச் சொல்ல காலபுருஷனே அங்கு நேரில் வந்து தோன்றினான்.

“ஓ! வேடனே! இந்தக் குழந்தை இறந்ததற்கு நானும் இந்த யமனும் இந்தப் பாம்பும் முதல் காரணங்கள் அல்லோம். நாங்கள் குற்றவாளிகளே அல்ல. இந்தக் குழந்தை செய்த கர்மமே எங்களை அவ்விதம் செய்யத் தூண்டிற்று. இவன் இறந்ததற்குக் காரணம் இவனது கர்மமே தான். நாங்கள் அனைவரும் கர்மத்திற்கு உட்பட்டவர்கள். இவ்வுலகில் கர்மம் ஒரு பாகஸ்தன். ஒவ்வொருவருக்கும் தன் தன் வினை சம்பந்தமே இலக்கணம். கர்மங்கள் எங்களை ஏவுவதற்குத் தகுந்தபடி தான் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏவுகிறோம். செய்பவன் மண்ணுருண்டையின் விரும்பியவற்றைச் செய்து கொள்வது போல மனிதன் கர்மங்களைச் செய்து அவற்றின் பலனைப் பெறுகிறான்.  நிழலும் வெயிலும் எப்போதும் இடைவிடாமல் சேர்ந்திருப்பது போல காரியமும் அதைச் செய்யும் கர்த்தாவும் முன்வினைகளால் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஆதலால் நான், யமன், பாம்பு, நீ , இந்த கௌதமி இன்னும் யாரும் இந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமல்லோம்.” என்று இப்படி விளக்கமாக உரைத்தான் கால புருஷன்.

உடனே கௌதமி உலகமே கர்மத்தைக் காரணமாக உடையது என்பதை அறிந்து கொண்டாள்.

“இந்தப் பிள்ளை மரணமடையத்தக்க கர்மத்தை நானும் செய்திருக்கிறேன். பாம்பை விட்டு விடு, அர்ஜுனகா” என்றாள் கௌதமி.

வேடன் அர்ஜுனகன் பாம்பை உயிரோடு விட்டான். யமனும், காலபுருஷனும் அங்கிருந்து அகன்றனர்.

“மூவுலகங்களும் கர்மங்களைச் சார்ந்தது என்று அறிவாயாக” என்று இந்தக் கதையைக் கூறி தர்மருக்கு பீஷ்மர் ஆறுதல் அளித்தார்.

கர்ம ரகசியம் பிரம்மாண்டமானது. மிகவும் நுட்பமானது. எளிதில் அறிய முடியாதது. ரகசியமானது. இதை நமது நூல்கள் ஆங்காங்கே விளக்கமாகக் கூறுகின்றன.

அதை அறிந்து கொள்வதே ஒரு பாக்கியம் தான்! அதற்கும் ஒரு நல்ல கர்மத்தைச் செய்திருக்க வேண்டுமல்லவா!***  தொடரும்

மனோரஞ்சித மலர் எண்ணெய் ஏற்றுமதி (Post No.12,897)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,897

Date uploaded in London – –   8 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மனோரஞ்சிதம் என்ற பெயரை சீதாப்பழ குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு தாவரங்களுக்கும் பயன்படுத்துவார்கள். ஆர்ட்டாபாட்ரிஸ் ஹெக்ஸா பெடலா (6 இதழ்) Artabotris hexapetala என்ற தாவரம் கொடி வகை. கனங்கா ஓடோரேட்டா Cananga odoreta என்பது மரம் வகை; ஆயினும் இரண்டும்  நறுமணமிக்கது . ஏறத்தாழ ஒரே குணங்களையும் பயன்களையும் உடையவை.

மனோரஞ்சிதம் மலரை காட்டு சண்பகம் என்றும் அழைப்பார்கள் கனக / தங்க நிறத்தில் இருப்பதால் , இதை   பல மொழிகளில் கனங்கா என்றே அழைக்கின்றனர். வெளிநாடுகளில் இதை இலங் இலங் பூக்களுக்கெல்லாம் பூ என்பது இதன் பொருள். அதாவது மலர்களின் ராணி

மருத்துவம் முதல் வாசனைத் திரவம் வரை, பலவகைகளில் உதவுகிறது

ஸம்ஸ்க்ருதப் பெயரான மனோ ரஞ்சிதம் என்பதுதான் உண்மையான பொருளைக் காட்டும். அதாவது இந்த மலரை நீங்கள் முகரும்போது என்ன பழந்ததை அல்லது பூவை நினைக்கிறீர்களோ அந்த வாசனை வரும் . என்ன அதிசயம் !

இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வளரும் இந்த மரம், சீதாப்பழ குடும்பத்தைச் (Custard apple) சேர்ந்தது 

இதன் தெலுங்கு மொழிப்  பெயர் தமிழர்களைக் குழப்பிவிடும். ‘சம்பங்கி’ என்பார்கள். ஆ னால் தமிழில் சம்பங்கி என்பது வேறு வெள்ளை நிறப்பூவைக் குறிக்கும். அதன் தாவரவியல் பெயரும் மனோ ரஞ்சிதத்துக்குத் தொடர்பு இல்லாதது .

இந்த தாவரம் இந்தியாவைச் சேர்ந்தது லாவோஸ், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது . ஆப்பிரிக்காவை ஒட்டியுள்ள மிகப்பெரிய மடகாஸ்கர் (மலகாசி) தீவிலும் காணப்படுகிறது (Native               India, through parts of Indochina, Malaysia, the Philippines and Indonesia, to Queensland, Australia).

பல இடங்களில் இதை புது மண தம்பதியரின் முதலிரவுப் படுக் கையை  அலங்கரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அதனால் இதை மன்மதன் , மதன காமன் என்றும் அழைப்பர்; அந்த சம்ஸ்க்ருத சொற்களின்பொருள்  மனத்தைக் கடைபவன் ; காமம் வந்துவிட்டால் மனது, தயிர் கடைவது போலக் கடையத் தானே செய்யும்!

ஏற்றுமதியில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

இந்தப் பூவின் எண்ணையை ஏற்றுமதி செய்வதில் பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது; அது மடகாஸ்கர் தீவு மூலம் பெறுகிறது . அதைத் தொடர்ந்து ஜெர்மனி, பின்னர் இந்தியா வருகிறது .

இலங் இலங் எண்ணெய் வாங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை  2528, (Ylang ylang oil ); அவர்களுக்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனிங்கள் 756.

உபயோகங்கள் என்ன ?

அரோமா தெரபி Aroma Therapy யென்னும் வாசனை எண்ணெய் சிகிச்சையில் பயன்படுகிறது .

மெழுகுவர்த்தியில் கலந்து நறுமணத்தைப் பரப்புகிறார்கள்

பெர்Fயூம் என்னும் சென்ட் வகைகளில் பயன்படுகிறது

Health Benefits       ஆரோக்கிய தகவல்

•              Good Aphrodisiac மனதில் காம உணர்வுகளைத் தூண்டிவிடும்

•              Stress and Depression Reliever மனா உளைச்சலை அகற்றி அமைதி உண்டாக்கும்

•              Used as Antiseptic கிருமி நாசினி

•              Helps You Sleep நல்ல உறக்கத்துக்கு உதவும்

•              Relieves Eczema சொறி சிரங்குகளை குணப்படுத்தும்

உலகம் முழுதும் இலங் இலங் எண்ணெய் விற்கப்படுகிறது.

xxxx

Artabotrys hexapetalus என்னும் வகை மனோரஞ்சிதத்தில் 26 வகை ரசாயனப் பொருட்களிருப்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர் (The pleasant smelling flower essential oil of Artabotrys hexapetalus (L. f.) Bhandare (Annonaceae) was analyzed by GC and GC/MS. Twenty-six components of the oil including sesquiterpene hydrocarbons (33.3% of the oil) and oxygenated sesquiterpenoids (47.7%) were identified. β-caryophyllene (11.4%) and caryophyllene oxide (31.5%) were identified as the major components of the oil.)

மஞ்சள்  நிறப் பூ ஜூன் ஜூலையில் பூக்காத துவங்கும் . முதலில் பச்சை நிறத்தில் இருக்கும் .

xxxxx

Details in English

Malayalam: Lāṅgi lāṅgi (ലാംഗി ലാംഗി), Kattuchempagam

Tamil: Maṉōrañcitam (மனோரஞ்சிதம்), Kattu chempakam (காட்டு சம்பகம்), Kadi, Karumugai கருமுகை

Kannada: Apurva champaka (ಅಪೂರ್ವಚಂಪಕ), Katte sampinge (ಕತ್ತೆಸಂಪಿಗೆ),  Kananga (ಕನಂಗ)

English: Fragrant cananga, Macassar oil plant, Ylang-ylang, Ylang-ylang tree, ilang-ilang, fragrant cananga, Macassar Oil Plant, Macassar oiltree, Perfume Tree, woolly pine, Matches stick tree

Common Names     Apurvachampaka, Cananga,

xxxxxx

NATURAL ESSENTIAL OILS HERBAL OILS FOR AROMATHERAPY PURPOSES HERBAL OILS FOR MULTIPLE PURPOSES:- YLANG YLANG OIL

Plant Growth HabitFast-growing, straggling, pendulous evergreen tree
Growing ClimatesGullies and on slopes, in forest and on its edges, moist evergreen forests and teak forests
SoilDeep, well-drained soils are required for the plant’s long taproot but the species can tolerate a wide range of soils including rich volcanic, fertile sands, clay loams and clays. It can tolerate shallow and infertile soils as well as short-term water logging but cannot tolerate permanent marshy or wetland conditions, or saline or alkaline soil
Plant SizeUp to 40 m (130 ft.) tall with a trunk diameter of 75 cm (2.5 ft)
RootLong taproot
StemPendulous, pubescent when young, striated with age
BarkLight brown or greyish, smooth in young trees, in mature trees fissured and rough.
LeafBlade narrowly ovate to oblong-elliptic, (5-)10-22 cm long, 2.5-9 cm wide, chartaceous, dark green when fresh, oblong to lanceolate or elliptic, with 5-10 pairs of lateral veins, glabrous or glabrate above
Flowering seasonJune-July
FlowerFlower is drooping, long-stalked, with six narrow, greenish-yellow (rarely pink) petals, rather like a sea star in appearance
Fruit Shape & Size1.5-2 cm long, 1.3-1.4 cm in diam., broadly ellipsoid to broadly obovoid, purple-black and juicy when ripe
Fruit ColorDark green when young turning to black when ripen
Flesh ColorYellow
PropagationBy Seed or cuttings
Flavor/AromaTropical, fruity, fatty, sweet, and floral
SeedPale brown, oblong-elliptic in outline, flattened, 9 mm. long, 6 mm. wide, 2.5 mm. thick, with rugose or pitted faces.
TasteBitter
Plant Parts UsedFlowers, Essential oil
SeasonOctober-November
xxxxxx 
KingdomPlantae (Plants)
SubkingdomTracheobionta (Vascular plants)
InfrakingdomStreptophyta  (land plants)
Super DivisionSpermatophyta (Seed plants)
DivisionMagnoliophyta (Flowering plants)
Sub DivisionSpermatophytina  (spermatophytes, seed plants, phanérogames)
ClassMagnoliopsida (Dicotyledons)
Sub ClassMagnoliidae
Super OrderMagnolianae
OrderMagnoliales
FamilyAnnonaceae (Custard-apple family)
GenusCananga (DC.) Hook. f. & Thomson (ilang-ilang)
SpeciesCananga odorata (Lam.) Hook. f. & Thomson (ilang-ilang)

நேற்றைய கட்டுரையையும் படியுங்கள்

இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி (Post No.12,894)

—subham—

Tags- மனோரஞ்சிதம், எண்ணெய் , மருத்துவ உபயோகம், இலங் இலங்

அனுமன் சந்நிதியுடன் கவியூர் சிவன்  கோவில்-51 (Post No.12,896)

picture of Anikkattilamma Devi Tempe

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,896

Date uploaded in London – –   8 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 51

கோவில் எண்கள் –88, 89, 90, 91, 92

88.அனுமன் சந்நிதியுடன் கவியூர் மஹாதேவர் கோவில்

த்ரிக்கவியூர் என்னும் ஊர் திருவல்லா அருகில் இருக்கிறது . சபரிமலை கோவில் இருக்கும் பதனம் திட்டா மாவட்டத்தில் இருக்கிறது . சிவன் கோவில் என்றபோதிலும் இங்குள்ள அனுமன் சந்நிதி புகழ் பெற்ற ஹனுமான் ஜயந்தியைக் கொண்டாடுகிறது .

பழங்கால மரச் சிற்பங்கள் இந்தக் கோவிலை அலங்கரிக்கின்றன . அவற்றில் நிறைய புராணக் கதைகளை வடித்துள்ளனர்.

ஆண்டுதோறும் சிவ பெருமானுக்கு ஒரு விழாவும் ஹநுமானுக்கு ஒரு விழாவும் நடக்கிறது.

சிறிய குன்றின் மீது கோவில் நிற்கிறது . மேலே செல்ல 21 பெரிய படிகள் உண்டு. கருவறையில் சிவனையும் பார்வதியையும் தரிசிக்கலாம். கீழே மஹாவிஷ்ணு கோவிலும் இருக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள சுவர், பழங்கால மதில் ஆகும். குன்றின் மேலே குளமும் கீழே பெரிய ஏரியும் இருக்கின்றன.

மூலவரான சிவன் திருக்கவியூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் மணல் மற்றும் தர்ப்பை புல்லால் ஆனது என்று நம்பப்படுகிறது. அருகில் அவரது மகன்களான கணபதி, சுப்ரமணியர் உள்ளனர். கருவறையின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, கணபதி உள்ளனர். தென்மேற்கில் அய்யப்பன் கிழக்கு நோக்கி மேற்கில் ராஜேஸ்வரியாக பார்வதி உள்ளனர். உள் முற்றத்தின் வடமேற்கு மூலையில் உள்ள பிரதான கருவறைக்கு வெளியில் அனுமன் உள்ளார். நாலம்பலத்திற்கு வெளியில் வடகிழக்கு முற்றத்தில் நாகர்கள் (நாகராஜா, நாக யட்சி), வடமேற்குப் பகுதியில் உள்ள பிரதான கோயில் வளாகத்தின் அடியில் அமைந்துள்ள கீழத்திருக்கோயிலில் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோர் உள்ளனர். (இது விக்கிபீடியா தரும் தகவல்.)

ஆயிரமாண்டுக்கும் மேலான பழமை உடைய கல்வெட்டுகள் இருப்பதால், இந்தக் கோவில் வரலாறு எழுதுவோருக்கு முக்கிய ஆதாரமாகத்  திகழ்கிறது .

வட்ட வடிவில் அமைந்த கருவறையின் சுற்றளவு 46 அடி. முன் காலத்தில் 16 விழாக்கள் நடந்தன. தற்போது சிவனுக்கு நடக்கும் 10 நாள் உற்சவமும் அனுமனுக்கு நடக்கும் 7 நாள் உற்சவமும் முக்கியமானவை. பண்டிகை நாட்களில் சிறிய உற்சவங்களும் நடக்கும் .

சிவ பெருமான் உற்சவத்தில் பள்ளி வேட்டை, ஆராட்டு , இரவு முழுதும் நடக்கும் கதகளி நடனம் சிறப்பானவை .

ஹனுமத் ஜெயந்தி உற்சவத்தில் கடைசி நாளன்று, அருகிலுள்ள தேவி கோவிலின் சப்பரம் இங்கு வரும். மயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் உள்பட கிராமீய நடனங்கள் அனைத்தும் நடக்கும்.

XXXXX

89.புதுக்குளங்கரா தேவி கோவில்

செங்கன்னூரிலிருந்து 7.கி.மீ. தொலைவில் ஓதரா என்னுமிடத்தில் பத்ரகாளி கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது . ஆண்டுதோறும் நடக்கும் 10 நாள் விழாவில் ஓவ்வொரு நாளும் வெவ்வேறு  முக கவசங்கள், கிரீடங்கள், உடைகள் அணியும் படையணி விழா நடக்கும் 1001 பாக்குமர ஓலைகளில் வர்ணம் அடித்து உண்டாக்கப்படும் தலையணி பைரவி கோலம் எனப்படும். பத்தாவது நாளன்று இது பயன்படுகிறது . பூப்பாத துள்ளல்காக்கரிசி நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் இந்தக் கோவிலுக்கே உரித்தான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.

இந்த விழா மார்ச் மாதம் நடக்கும்.

xxxxx

90.அணிக்கட்டிலம்மா கோவில்

பத்தனம்திட்டா மாவட்டத்தில் , மல்லப்பள்ளியிலிருந்து 3.5 கி.மீ. தொலைவிலுள்ள அனிக்காடு என்ற கிராமத்தில் அணிக்கட்டிலம்மா கோவில் உள்ளது. ஒரே கர்ப்பக்கிரகத்தில் சிவனும் பார்வதியும் இருப்பது சிறப்பு அம்சம். மணிமாலா ஆற்றங்கரையில் எடப்பள்ளி வம்சத்தினர் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது. ஒவ்வொரு சிலையும் 4 அடி உயரம் கொண்டது .

தேவியின் பெயர் .அணிக்கட்டிலம்மா. ஒரு தாய் , தன்னுடைய குழந்தைகளைக் கவனிப்பது போல வேண்டிய வரம் தரும் தேவி அவள் .

கும்பம் மாதத்தில் இங்கு நடக்கும் பொங்கல் விழாவில் பல ஊர்களை சேர்ந்த தாய்மார்கள் பங்கேற்கிறார்கள் .நிறைய பெண்கள் , பொங்கல் வைக்க வருவதால் 2 கி.மீ தொலைவுக்கு பொங்கல் பானைகளைக் காணலாம்.

திருவல்லா, அருகிலுள்ள மற்றும் ஒரு தலம் ஆகும்.

Xxxx

91.நிரணம் திரிகபாலீஸ்வரர் கோவில்

நிரணம் என்னும் ஊர் திருவல்லாவிலிருந்து  8 கி.மீ தொலைவில் இருக்கிறது . இங்குள்ள திரிகபாலீஸ்வரர் கோவில்  மிகவும் பழமையானது . கபாலீஸ்வரன் என்றவுடன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நம் நினைவுக்கு வருவார்.

நிரணம் வேறு ஒரு வகையிலும் புகழ் பெற்றது .நிரணம் கவிஞர்களான “கண்ணஸ்ஸர்கள்” மலையாள பக்தி இலக்கியத்தில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மலையாளத்தில் பாகவதம், இராமாயணம் மற்றும் பாரதத்தை எழுதியுள்ளனர். அவர்கள் 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் .

Picture of Sapta Matrikas in Niranam.

xxxxx

92.பந்தளம் ஐயப்பன் கோவில்

ஐயப்பன் வளர்ந்த இடம் பந்தளம் ; ஐயப்பன் வரலாறே இங்குதான் தொடங்குகிறது; இங்கு பந்தள மகாராஜாவின் குடும்பக் கோவில் இருக்கிறது

செங்கன்னூரிலிருந்து 10 கி.மீ. சபரிமலையிலிருந்து 88 கி.மீ தொலைவு.

சிறப்பு அம்சங்கள்

மணிகண்டன் என்ற பாலகனாக 12 ஆண்டுகள் வளர்ந்து, கானகத்துக்குள் சென்று புலி மீது சவாரி செய்து, ராணிக்குப் புலிப்பால் கொண்டுவந்தார் மணிகண்டன்/ அய்யப்பன் என்பது புராணம் . இன்றும் புலி வாகனன் ஆகவே கோவிலில் காட்சி தருகிறார் .

ஐயப்பன் குளித்த குளம் எப்போதும் வெதுவெதுப்பாக இருக்கிறது .அவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஓலைச் சுவைகளும் உள்ளன

சபரி மலை சாஸ்தாவுக்கு/ ஐயப்பனுக்கு மகரவிளக்கு அன்று அணிவிக்கப்படும் அத்தனை  ஆபரணங்களும் பாதுகாப்புடன் பந்தளத்திலிருந்து புறப்பட்டு, மகர விளக்கிற்குப் பின்னர் திரும்பிவரும்..

இரண்டு பெட்டிகளில் (திருவாபரணம்) அணிகலன்கள்/ நகைகள் செல்லும். ஒரு பெட்டியில் சாஸ்தா அணியும் ரத்தினக் கிரீடம் , கையில் அணியும் கங்கணம், ஆரம்  என்னும் மாலை , நூபுரம் என்னும் சிலம்பு, அங்குலீயம் என்னும் மோதிரங்கள், மார்பில் அணியும் பதக்கங்கள் ஆகியன ஒரு பெட்டியில் இருக்கும்.

மாளிகைப்புரத்து அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் இன்னும் ஒரு பெட்டியில் இருக்கும்.

—-subham—

Tags- மணிகண்டன், புலி மீது சவாரி, பந்தளம், நிரணம் திரிகபாலீஸ்வரர், அணிக்கட்டிலம்மா கோவில், அணிக்கட்டிலம்மா, ஹனுமத் ஜெயந்திகவியூர் ,மஹாதேவர், கோவில் , திருவாபரணம்

அதிகஸ்யாதிகம் பலம்! (Post No.12,895)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,895

Date uploaded in London –  –  –   8 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒரு வரி சுபாஷிதங்கள்

அதிகஸ்யாதிகம் பலம்!

ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:

1. அங்கீக்ருதம் சுக்ருதின: பரிபாலயந்தி|

தான் செய்வதாக ஒத்துக்கொண்ட ஒன்றை நல்லவன் செய்து விடுவான்.

2. அஜீர்ணே பத்யம்ப்யன்னம் வ்யாதயே மரணாய வா|

அஜீர்ணம் இருக்கும்போது, ஒத்துக்கொள்ளும் உணவு கூட உடலைப் படாத பாடு படுத்தும், ஏன் மரணத்தையே கூட விளைவிக்கும்.

3. அதிநிர்மிதனாதக்னிஸ்சந்தனாதபி ஜாயதே|

அதிகமாகக் கடைந்து கொண்டே இருப்பதன் மூலம் சந்தனக்கட்டையிலிருது கூட அக்னியை உருவாக்க முடியும்.

4. அதீத்ய ஹி குணான்சர்வான் ஸ்வபாவோ மூர்தின் திஷ்டதி|

மற்ற எல்லாக் குணங்களையும் விட ஒருவனின் ஒழுக்கம் தலையாயதாக முதலில் நிற்கிறது.

5. அத்யந்தவிமுகே தைவே வ்யர்தம் யத்னம் பௌருஷம்|

விதி எதிராக இருக்குமானால், முயற்சியும், வீரமும் கூட பயனை அளிக்காது.

6.அதிகஸ்யாதிகம் பலம்|

அதிகம், இன்னும் மிக அதிகம் என்பது பலத்தைத் தரும்.

7. அனுயுக்தமப்யூஹதி பண்டிதோ ஜன:|

சொல்லாத கருத்துக்களைக் கூட ஒரு பண்டிதன் புரிந்து கொள்வான்.

8. அந்தஸ்த்ரீபாலமூர்காணாமாக்ரஹோ பலவான் கலு|

கண்பார்வையற்றவர், ஸ்திரீகள், குழந்தைகள், மூர்க்கர்கள் ஆகியோரின் ஆசைகள் மிக அதிகம்.

9. அபராதபரம்பராவ்ருதம் நஹி மாதா சமுபேக்ஷதே சுதம்|

மகன் அதிக பாவங்களைச் செய்தால் கூட அவன் தாயார் அவனை இகழ மாட்டாள்.

10. அமோகோ தேவதானாம் ச ப்ரஸாத: கின்ன சாதயேத்|

தேவதைகளின் ஆசீர்வாதம் அனைத்தையும் தரும்.

11. அர்தஸ்ய புருஷோ தாஸ: தாஸோ ஹ்ரார்தோ ந கஸ்யசித்|

மனிதர்கள் செல்வத்தின் சேவகர்களே, செல்வம் யாருக்கும் சேவகம் செய்வதில்லை.

12. அவஞாத்ருடிதம் ப்ரேம் நவிகர்தும் க ஈஸ்வரK

அலக்ஷியத்தினால் அறுந்துபோன ஒரு காதல் விஷயம் யாராலும் திருப்பிச் சேர்க்கப்பட முடியாது.

13. அசமீக்ஷய ந கர்தவ்யம் கர்தவ்யம் சுசமீக்ஷிதம்|

ஆழ்ந்து சிந்திக்காமல் ஒரு காரியத்தை ஒருவன் செய்யக் கூடாது, சிந்தித்து விட்டால் காரியத்தைச் செய்ய வேண்டும்.

14. அஸ்ய பாபோதரஸ்யார்த்தே கிமநாடி ந நாடகம்!

இந்தப் பாழும் வயிறுக்காக எந்த பாவ காரியத்தைத் தான் நான் செய்யவில்லை?!

15. ஆகதம் து பயம் வீக்ஷ்ய ப்ரதிகுர்யாத்யதோசிதம்|

வரப்போகின்ற அபாயத்தைக் கண்டவுடனேயே ஒருவன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

16. ஆக்ஞா குரூணாம் ஹ்ராவிசாரணீயா|

ஒருவன் தனது குருவின் (அல்லது மூத்தவர்களின்) ஆணையைப் பற்றி சிந்திக்கக் கூடாது. (அதை செயல்படுத்த வேண்டும்)

17. ஆத்மன: ப்ரதிகூலானி பரேஷாம் ந சமாசரேத்|

தனக்கு நலமில்லாத (ப்ரதிகூலமாக இருக்கும்) ஒன்றை பிறருக்கும் செய்யக் கூடாது.

18. ஆபத்காலே ச கஷ்டோபி நோத்ஸாஹசத்யஜுஅதே புதை:|

ஆபத்த்துக் காலத்திலும், கஷ்ட காலத்திலும் அறிஞர்கள் ஒருபோதும் உற்சாகத்தையும் சத்யத்தையும் இழக்கக் கூடாது.

19. ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: சுகீ பவேத்|

உணவிலும் தொழில் விஷயங்களிலும் ஒருவன் வெட்கப்படக் கூடாது, சந்தோஷமாக இருக்க வேண்டும்.

20. இதோ ப்ரஷ்டஸ்ததோ ப்ரஷ்டK

இங்கு வழுக்கி விழுந்தவன் அங்கும் வழுக்கி விழுந்தான்.

21.இந்த்ரோபி லகுதாம் யாதி ஸ்வயம் ப்ரக்யாபிதைர்குணைK

தனது நற்குணங்களை ஒருவன் சொல்லத் தொடங்கினால் இந்திரன் கூட மோசமானவனாகி விடுவான்.

22. ஈர்ஷ்யாம் ஹி விவேகபரியந்திநீ|

மேன்மையான விஷயங்களில், பொறாமை அவற்றைத் துடைத்து அழித்து விடும்.

23. உபாயம் சிந்தயேத்ப்ராஞஸ்ததாபாயம் ச சிந்தயேத்|

ஒருவன் சாதனைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், அதை அடைவதில் உள்ள அபாயங்களையும்  சிந்திக்க வேண்டும்.

24. உபாயேன ஹி யச்சக்யம் ந தச்சக்யம் பாராக்ரமைK

உபாயத்தால் அடையமுடியாத ஒன்று பராக்ரமத்தால் அடைய முடியாது.

25. க்ருத்திச்சித்தவிகாரிணீ|

ஒருவனின் மனதை மாற்ற வல்லது செழுமை.

***

இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி (Post No.12,894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,894

Date uploaded in London – –   7 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உலகில் மூலிகைகள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது . முதலிடம் வகிக்கும் நாடு சீனா .

ஆறாயிரத்து 600க்கும் மேலான மூலிகைச் செடிகள் (6,600) இருக்கின்றன. இந்தியா ஏற்றுமதி செய்யும் மூலிகை அல்லது மருத்துவ குணமுள்ள முக்கிய தாவரங்கள் :

மஞ்சள், சீரகம், கருமிளகு , ஏலம் ,கொத்தமல்லி, கருவேப்பிலை , பட்டை சோம்பு, இஞ்சிகிராம்புகடுகுகுங்குமப்பூ ஜாதிக்காய்ஜாதிபத்திரிவெட்டிவேர் , கத்தாழை , அசுவகந்தி , வேப்பிலைவெந்தயம்கசகசா

மருந்துச் சரக்கு என்பதைவிட அறுசுவை உணவு தயாரிக்கவே இந்தப் பொருட்கள் அதிகம் பயன்படுகின்றன.

ஆயுஷ் என்னும் மத்திய அரசின் துறை ஏற்றுமதி விஷயங்களை கவனிக்கிறது; லைசென்ஸ் அனுமதி பெற்றே  உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்திய மருந்து அல்லது மருத்துவ குணமுள்ள உணவுச் சரக்குகளை அதிகம் இறக்குமதி செய்யும் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் வருகின்றன .

5000 கோடி ரூபாய் வியாபாரம் !

இந்தியாவும் சீனாவும் மூலிகை வியாபாரத்தில் 70 சதவிகிதத்தை வைத்துக் கொண்டுள்ளன.

இந்திய ஏற்றுமதிகளின் மதிப்பு 2017ஆம் ஆண்டில் 5000 கோடி ரூபாய். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது .

2017ம் ஆண்டின் இறுதியில் ஆயூஷ் இலாகா சார்பில் 4 நாள் மகாநாடு நடந்தது ஆயுஷ் என்பது ஆயுர்வேதா, யோகா, நாட்டு மருந்து , யுனானி, சித்த , ஹோமியோபதி மருத்துவ முறை என்பதன் சுருக்கம் ஆகும்

Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH).

சர்வதேச ஆரோக்கிய மகாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் இந்தத் துறையில் வியாபாரம் செய்யும் 250 கம்பெனிகள் இருக்கின்றன .

ஹோமியோபதி மருந்துச் சரக்குகளின் உள்நாட்டு வியாபாரம் ரூ.500 கோடி ; ஏற்றுமதி அளவு ரூ.200 கோடி.

2020-21ல் சுமார் 61 கோடி டாலராக இருந்த மூலிகை ஏற்றுமதி 2021-22 நிதியாண்டில் 63 கோடி டாலராக அதிகரித்தது .

இது தவிர இந்தியாவுக்கு வந்து செல்லுவோர் வாங்கிச் செல்லும் சரக்குகள் இதில் வராது. (நான் ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் சித்தரத்தை, கண்டத்திப்பிலி , சுக்கு, சுண்டைக்காய், மணத்தக்காளி வத்தல், பனங்கற்கண்டு , இஞ்சி முரப்பா, அஷ்ட சூர்ண பொடி முதலியன வாங்கி வருகிறேன்).

ஆயுஷ் துறை பல நாடுகளுடன் ஏற்றுமதி ஒப்பந்தமும் செய்துவருகிறது.

மஞ்சள் ஏற்றுமதி

உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன் (உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75% க்கும் அதிகமானது) உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது, மேலும் இது நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

மஞ்சளின் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 62% ஆகும். 2022-23 ஆம் ஆண்டில், 207.45 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.534 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருட்கள் 380 க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

 தேசீய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு, 2023 அக்டோபரில்  வெளியிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மற்றும் தமிழகத்தில் ஈரோடு என 3 இடங்களில் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தைகள் உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஈரோடு மஞ்சள் அனுப்பப்படுகிறது. இதனால் மஞ்சள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு பிறகு மஞ்சளின் தேவை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிகரித்து உள்ளது.

(லண்டனில் எங்கள் வீட்டுக்கு சமையல் செய்து தரும் குஜராத்தி பெண்மணி தினமும் காலையில் மஞ்சள் பொடி கலந்த வெந்நீரைக் குடிப்பாளாம் . எங்கள் வீட்டுக்கு வருகையிலும் அவள் கொண்டுவந்த பாட்டிலில் உள்ள  மஞ்சள் நீரைத்தான் குடிக்கிறாள். இன்னொரு இந்தி பேசும் நண்பரை முதல் தடவையாக வீட்டுக்கு அழைத்தேன். காப்பி , தேநீர் , சமோசா எதையும் சாப்பிட மறுத்து விட்டார் . கடையிலிருந்து வாங்கிய பேமஸ் பிராண்ட் தண்ணீர் பாட்டிலை வைத்தேன். அதையும் சாப்பிட மறுத்த அவர் என்னை வியப்பில் ஆழ்த்திய செய்தியைச் சொன்னார். தினமும் தாமிரச் சொம்பில் தண்ணீரை ஊற்றிவைத்து அதை மட்டுமே அருந்துவாராம். வெளியே செல்லும்போதும் அந்த தண்ணீரை மட்டுமே பாட்டிலில் எடுத்துச் செல்லுகிறார்.

என் அப்பா, அம்மாவுடன் சிறு வயதில் ரயில் பயணம் செய்தபோது வெண்கல கூஜாவில் தண்ணீர் கொண்டு சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். என் மகனிடம் இதைச் சொன்னால் கூட கூஜா என்றால் என்ன என்று கேட்பான். அதற்கான படத்தைத் தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டும்!).

கரு மிளகு ஏற்றுமதி

மிளகு ஏற்றுமதியில் , உலகில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நாம் ஏற்றுமதி செய்யும் மிளகு அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்குச் செல்கிறது முதலிடம் வகிக்கும் நாடு வியட்நாம். மூன்றாம்  இடத்தில் இலங்கை உள்ளது.

—subham–

Tags-  மூலிகை, மஞ்சள் , ஏற்றுமதி, ஆயுஷ், மிளகு,

கோவிலில் மூலிகைத் தைலம்; அலை மோதும் பக்தர் கூட்டம்-50 (Post.12,893)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,893

Date uploaded in London – –   7 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 50

கோவில் எண்கள் –84,85,86,87

84.தகழி தர்ம சாஸ்தா கோவிலில் மூலிகை அதிசயம்

கடவுளே கனவில் சொன்ன மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும் தைலம் மூட்டு வலிகளைப் போக்கும் அதிசயம் கேரளத்தில் நடக்கிறது. இந்த மூலிகை எண்ணெயை வழங்கும் ஐயப்பன் /கோவில் ஆலப்புழை வட்டாரத்தில் தகழி என்ற ஊரில் இருக்கிறது .ஆலப்புழா நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், சம்பக்குளம் நகரில்இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது தகழி திருத்தலம்..

இங்கு வழங்கப்படும் ஆயுர்வேத எண்ணெய் , மூட்டு வலியோடு தோல் நோய்களையும் குணப்படுத்தும் .

இதுபற்றிய சுவையான கதையைக் கேட்போம்.

பரசுராமர் ஸ்தாபித்த கோவில் காலப்போக்கில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு புதை குழியில் சிக்கியது; பக்தர்களும் அதை மறந்தனர்; ஒரு காலத்தில் வில்வமங்கலத்து சுவாமிகள் அந்தப் பக்கம் வருகையில் தெய்வீக சக்தி வரும் இடத்தை நோக்கிச் சென்று பொதகுழி ஐயப்பனைக் கண்டார். அதை வழிபாட்டுக்கு நிறுவினார்.

சம்பகசேரி மன்னர் அந்தச் சிலை நிறுவப்பட்ட இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார் .அது சிதிலம் அடைந்தது . திருவிதாங்கூர் மன்னர் இந்தப் பகுதியைக் கைப்பற்றியதால், சம்பகசேரி மன்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார்.

அதை வணங்கி வந்த ஆசான் என்ற  ஒரு பக்தருக்கு, கையில் காசு இருந்தால் மீண்டும் கோவில் கட்டலாமே என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டார். அப்போது இறைவனே கனவில் தோன்றி அருகிலுள்ள ஓதர்மலையில் உள்ள மூலிகைகளைக் காட்டி அதைக்கொண்டு தைலம் தயாரிக்க கட்டளையிட்டார். அதை பக்தர்களுக்கு கொடுத்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும்; பக்தர்களே முன்வந்து கோவிலை எழுப்புவர் என்று ஐயப்பன் சொன்னார். கனவில் கண்டது நினைவில் நிஜாமாகியது .இப்போதும் கூட மூலிகைகளைப் பறித்து முதல் நாள் இரவில் கர்பக் கிரகத்தில் வைத்து விடுகின்றனர் ; அதிலிருந்து மூலிகை எண்ணெய் எடுக்கின்றனர்.

இக்கோவிலில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் கிழக்கு நோக்கிய நிலையில், வலது காலை மடித்தும், இடதுகாலைத் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது வலது கையில் சிறிய எண்ணெய்க் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார். கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. 5, 6 ஆம் நாள் திருவிழாக்களில் பிரபல கதகளி கலைஞர்கள் ஆடுவர் .ஏழாவது நாள் பள்ளிவேட்டை நடக்கும்.

மண்டல பூஜை நாட்களான 41 நாட்களும் இத் திருக்கோவிலில் ‘களமெழுத்துப் பாட்டு’ நடைபெறுகிறது. தனுர் (மார்கழி) மாதம் முதல் நாளில் தொடங்கி 11 நாட்களுக்குக் கலபாபிஷேகம் எனும் விழா நடக்கும்.

xxxxx

85.திருவிழா ஸ்ரீ மஹாதேவர் கோவில் , கனிச்சு குளங்கரா

திருவிழா மகாதேவர் கோயில் (Thiruvizha Sree Mahadeva Temple) என்பது, , ஆலப்புழை மாவட்டம் திருவிழா என்ற ஊரில் இருக்கிறது . சேர்தலையிலிருந்து  7 கி.மீ. . இது நீலகண்டப் பெருமானான சிவபெருமான் வாழும் தலமாகப் போற்றப்படுவதால்  இறைவனை, காலகண்டன் என்று மலையாளத்தில் அழைக்கின்றார்கள் .

எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் கோவில் உள்ளது .

மூலிகைச் சாறு பிரசாதம்

இப்பகுதியைச் சுற்றி கிடைக்கும் அபூர்வ மூலிகைச்சாற்றை, பசும்பாலில் கலந்து பந்தீரடி பூசையில் இறைவனுக்கு வைத்து வழிபடுகிறார்கள். இது நோயுற்றவர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. நாள்தோறும் நண்பகலில் பால் பாயசத்தை இறைவனுக்குப் படைக்கிறார்கள். அப்போது அருகேயுள்ள கோயிலில் சிவனின் மகளாகக் கருதப்படும் கனிச்சு குளங்கரா தேவியை இங்கு எழுந்தருளச் செய்து, அவருக்கும் பால் பாயசம் படைத்து, பூசை செய்து, அதனை நோயுற்றவர்களுக்கும் தருவார்கள்.

கை விஷம் 

மற்றவர்கள் எதிரிகளுக்கு வைக்கும் விஷத்தைக் கை விஷம்  என்பார்கள். ஒரு பெண், ஆண்களை வசப்படுத்த வெற்றிலை கொடுத்தால் கூட போதும் என்று மலையாளிகள் அஞ்சுவார்கள் . அத்தகைய கைவிஷங்களை அகற்ற இந்தக் கோவிலின் மூலிகைச் சாறு  பிரசாதமாக கொடுக்கப்படுகிறது இந்த தெய்வீக பிரசாதம் பெற, மாநிலம் முழுதுமுள்ள பக்தர்கள் இங்கு படை எடுக்கிறார்கள் .

மார்ச் மாதத்தில், ஆறாட்டு விழா நடக்கிறது. தனுர்  மாதத்தில் (மார்கழி-நவம்பர்-டிசம்பர்) பத்து நாட்கள் திருவிழா நடைபெறும் .யானைகள் பவனி, கேரள நடனங்கள் , கச்சேரிகள் எல்லா நாட்களிலும் உண்டு.

xxxxx

86.கண்டியூர் மஹாதேவ கோவில்

ஹரிப்பாட் சுப்ரமண்ய சுவாமி கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் தட்டம்பலம் என்னுமிடத்தில் அழகான சிவன் கோவில் இருக்கிறது . கருவறைக்கு வெளியே சுட்டம்பலம் இருக்கிறது . கருவறைக்கு வெளியேயுள்ள சுவர்களில் மரச் சிற்பங்கள் ஓவியங்களைக் காணலாம்.

கண்டியூருக்கு அருகே ,அச்சன்கோவில் ஆற்றங்கரையில் உள்ள மாவேலிக்கரை என்னும் இடத்தில் கோவில் அமைந்துள்ளது. கண்டியூர் ஒரு காலத்தில் ஓடநாடு ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது.

கோவிலின் வரலாற்றில் 3 கதைகள் சொல்லப்படுகின்றன

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 பெரிய சிவன் கோவில்களில் ஒன்று என்றும்  மார்கண்டேய முனிவரின் தந்தையான மிருகண்டு முனிவர், கங்கையில் நீராடும் போது கிராதமூர்த்தி வடிவத்தில் சிவபெருமானின் சிலையைப் பெற்று  கண்டியூரில் கோயிலை நிறுவினார் என்றும் . சிவபெருமான் பிரம்மாவின் தலையை வெட்டிய இடத்தில் கோயில் அமைத்தனர் என்றும் சொல்லுவார்கள் .

திருக் கண்டியூர் என்ற பெயரில்  தமிழ்நாட்டிலும் இதே கதையுடன் கோவில் இருக்கிறது.

XXXXXX

87. ஆலப்புழை தேவி கோவில்கள்

செங்கன்னூர் பகவதி கோவிலை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

மேலும் சில தேவி/ பகவதி, காத்தியாயனி கோவில்ல்கள் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கின்றன

சேர்தலை காத்தியாயனி , ஆரூர் காத்தியாயனி , புது வரநாடு தேவி , வடக்கு அரியாட் கள்ளங்கல் புவனேஸ்வரி, கனிச்சிகுளங்கரா தேவி கோவில்கள் முக்கியமானவை  அங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஏராளமான பக்தர்களை கவர்கின்றன.

கனிச்சிகுளங்கரா  தேவி கோவிலில் 21 நாட்கள் விழா நடைபெறும் முக்கிய அம்சம் இரவில் நடக்கும் கருடன் தூக்கம் ஆகும்

ஆலப்புழையி லிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள வளவநாடு புத்தன் காவு பத்ரகாளி கோவிலில் 12 நாள் உற்சவம் நடக்கும் ;பத்தாம் நாள் விழாவில் 10 அல்லது 15 அடி உயரமுள்ள தலைக்கு கவசத்துடன் சூட்டு ப் பாதயணி  நடனம் நடைபெறும் .

ஆலப்புழை கிதங்கம்பரம்பு புவனேஸ்வரி கோவிலில் ராஜ கோபுரம் பல வன்னச் சிற்பங்களுடன் எல்லோரையும் வரவேற்கும்

எர்ணாகுளத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலுள்ள எற மல்லூர் காஞ்சிரத்துங்கள் பகவதி கோவிலில்  நட்டு தாளப் போலி ஊர்வலம் நடக்கும் தட்டி வரவு விழாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் மரத்தடிகளை கோவிலுக்கு கொண்டு வருவார்கள்

இவ்வாறு ஒவ்வொரு தேவி கோவிலிலும் ஏதாவது ஒரு சிறப்பு அம் சம் இடம்பெறுகிறது .

–சுபம்—

Tags- கனிச்சிகுளங்கரா, சேர்தலை,  காத்தியாயனி, கண்டியூர் மஹாதேவ கோவில், கை விஷம்  , மூலிகைச் சாறு ,பிரசாதம் , திருவிழா ஸ்ரீ மஹாதேவர், தகழி தர்ம சாஸ்தா, மூலிகை அதிசயம்

சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம் ஒன்றே! (Post.12,892)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,892

Date uploaded in London –  –  –   7  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம் ஒன்றே! 

ச.நாகராஜன்

சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம் ஒன்றே தான்.

இதை, மாதமிருமுறை வெளிவரும் இதழான சனாதன் ப்ரபாத் (Snanathan Prabhat) இதழில் பரம பூஜனீய டாக்டர் ஜயந்த் பாலாஜி அதாவலே ( Dr Jayant Balaji athavale) சமீபத்திய இதழில் இப்படிக் கூறி இருக்கிறார்:

மனித குலத்தைக் காக்கும் மதம் இந்து மதம் ஒன்றே தான்!

மேலைநாட்டோருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் விடை தெரியாத பல கேள்விகள் உண்டு. மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள், பிறப்பதற்கு முன்னர் அவர்கள் எங்கே இருந்தார்கள், இறந்த பின் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களுக்கு விடைகள் தெரியாது. அவர்களால் மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எப்படித் தீர்க்க முடியும்?

ஹிந்து தர்மம் ஒன்றே தான் இப்படிப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையைத் தரும். அது மட்டுமின்றி அப்படிப்பட்ட நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கான வழியை அது ஒன்றே தருகிறது. ஆகவே மனித குலத்தை ஹிந்து மதம் ஒன்றே தான் காப்பாற்ற முடியும்.

கடவுளுடன் ஒன்றாகக் கலப்பது சுலபம் தான்!

கடவுள் உலக விஷயங்களை நடத்துவதற்காகத் தனக்கான தனி விதிகளைக் கொண்டிருக்கிறார். இந்த விதிகள் மாயை என்று சொல்லப்படுகிறது.

இவை மனித அறிவிற்கு அப்பாற்பட்டவையாகும். மாயையைப் புரிந்து கொள்ள முயல்வதை விட கடவுளுடன் ஒன்றாகக் கலப்பது சுலபம் தான்!

ஹிந்து சமூகத்தில் மட்டும் ஏன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு?

இந்த தேசத்தில் எத்தனை சன்னிகள், ஷியாக்கள், போஹ்ராக்கள், அஹம்மதியாக்கள், குரேஷிக்கள், ஷேக்குகள், நவாபுகள், மாப்ளாக்கள் உள்ளனர் என்பதை அறிய இந்த தேசத்திற்கு உரிமை உள்ளது.

இதே போன்ற கணக்கெடுப்பு கத்தோலிக்கர்கள், ப்ராடெஸ்டெண்டுகள், ஜாகோபைட்ஸ்கள், மார்தோமைட்ஸ், சிரியன் கிறிஸ்துவர்கள், பெந்தகோஸ்துகள், செவந்த் டே அட்வெண்டிஸ்டுகள், லத்தீன் கிறிஸ்துவர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், இன்னும் இது போன்றவர்களுக்கும் வேண்டும். 

இதே போலவே சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், ஜைனர்கள் மற்றும் நாத்திகர்களுக்குமான கணக்கெடுப்பு வேண்டும்.

ஒரு விரிவான கணக்கெடுப்பை தேசம் கொள்ளட்டுமே? ஏன் ஹிந்துக்களுக்கு மட்டுமான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு?

இஸ்லாமில் 72 ஜாதிகள் உள்ளன.

215 ஜாதிகள் கிறிஸ்தவ மதத்தில் உள்ளன.

இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும்.

ஏன் ஹிந்துக்களை மட்டும் பிரிக்கிறீர்கள்? 

*

நல்ல கேள்வி தான்! பதிலை எதிர்பார்க்கிறோம்!! 

***

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் :TRUTH Vol 91 No 34 Dated 22-12-2023

tags-Hinduism