வால்மீகி சொல்லும் சுவையான செய்திகள்: சத்ருக்னன்- முருகன் ஒப்பீடு (Post No.11,711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,711

Date uploaded in London – –  25 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வால்மீகி ராமாயண உத்தர காண்டத்தில் நிறைய சுவையான செய்திகள் உள்ளன . சங்கத் தமிழ்ப் புலவர்கள் இதை அப்படியே பின்பற்றியுள்ளனர். அரசனை இந்திரனுக்கும், யமனுக்கும், முருகனுக்கும் ஒப்பிடுவதை சம்ஸ்க்ருத நூல்களில், காளிதாசன் காவியங்களில் காணலாம். 

ததாபிஷேக வவ்ருதே சத்ருக்நஸ்ய மஹாத்மநஹ

அபிஷிக்தஸ்து சத்ருக்நோ பபெள சாதித்ய ஸன்னிபஹ

அபிஷிக்தஹ புரா சேந்த்ரைரிவ மருத் கணை ஹி

பொருள் மஹிமையுள்ள சத்ருக்நனுக்கு  திரு அபிஷேகம் நடந்தது . கதிரவனையொத்த ஒளிமிக்க சத்ருக்நனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டதும் , முன்பு இந்திரன் தலைமையில் தேவர்களால் அபிஷேகம் செய்யப்பட்ட முருகன் போல அவர் இருந்தார்.

சங்க இலக்கியத்தில் மன்னர்களை முருகனுக்கு ஒப்பிடும் இடங்கள் :

புறம் 56 நக்கீரர்பாடியது; பாண்டிய மன்னனை வருணிக்கையில் நீ யமன், முருகன், பலதேவன், கண்ணன் போன்றவன் என்று புகழ்கிறார். அதில் நினைத்தை முடிப்பதில் நீ முருகனையொத்தவன் என்கிறார். முருகனை சேனாதிபதி என்று புராணங்கள் வருணிக்கின்றன. சங்க புலவர்களும் நீ சீற்றமிகு முருகன் என்று மன்னனை வருணிக்கின்றன.

XXXX

சீதைக்கு இரட்டைக் குழந்தை TWINS IN VEDAS, RAMAYANA, MAHABHARATA & ASTROLOGY

உலகிலேயே முதல் இரட்டையர்கள் TWINS  பற்றிப் பேசுவது ரிக் வேதம் . அங்கே அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரைப் பார்க்கிறோம். பின்னர் சீதைக்குப் பிறந்த குசன், லவன் என்ற இரட்டையரைப் பார்க்கிறோம். ராமாயணத்தில் தசரதன் பிள்ளைகளான லெட்சுமணனும் சத்ருக்கனனும் சுமித்ரைக்குப் பிறந்த இரட்டையர் ஆவர் .அதன் பின்னர் மஹாபாரதத்தில் நகுலன் சகாதேவன் என்ற இரட்டையரைப் பார்க்கிறோம். பின்னர் மிதுன ராசி இரட்டையரை ஜோதிட நூல்களில் படிக்கிறோம்.. இவ்வளவு இரட்டைக் குழந்தைகளை வேறு எந்த மத நூலிலும் காண முடியாது

இதில் சுவையான விஷயம் என்னவென்றால், காட்டிலுள்ள வால்மீகி ஆஸ்ரமத்துக்குள் சத்ருக்னன் நுழையும்போது சீதைக்கு குசன் -லவன் என்ற இரட்டையர் பிறக்கின்றனர். உடனே வால்மீகி  மகரிஷி குழந்தைகளை பூத ,பிசாசுகள் நெருங்காமல் இருக்க குசம் என்ற தர்ப்பைக்  கட்டை எடுத்து நுனிப் பாகத்தையும் அடிப்பக்கத்தையும் எடுத்து வந்து காப்புக் கட்டுகிறார் இவ்வவாறு குசப் புல்லைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு குச , லவ என்ற பெயர் ஏற்பட்டது .

இதோ அந்த ஸ்லோகம் :

குச முஷ்டிமுபாதாய லவம் சைவ  ஸ து த்விஜஹ

வால்மீகி பிரததெள தாப்யாம் ரக்ஷாம் பூத விநாசினீம்

ஏவம் குசலவெள நாம்நா தாவுபெள யமஜாதகெள

பொருள்

அந்த வேதியர் பெருமானான வால்மீகி,  தர்ப்பக் கற்றையை நறுக்கி நுனிப்பாகத்தையும் அடிப்பாகத்தையும் எடுத்துக்கொண்டு வந்து குழந்தையைப் பீடிக்கவல்ல பூத பைசாசங்களை அழிக்கவல்ல காப்பை அக்குழந்தைகளுக்கு அளித்தார் . இதனால் இரட்டைக் குழந்தைகளான அவர்கள் முறையே குசன் என்றும் ,லவன் என்றும் பெயர் உடையவர் களாயினர்.

XXX

2015 மார்ச் 24 ல் நான் எழுதிய கட்டுரை:—

சங்க இலக்கியத்திலும் குழந்தைகளைப் பேய் பிசாசுகள் நெருங்காமலிருக்க ஐயவி என்னும் வெண்கடுகைப் புகைக்கும் செய்தி உளது .

பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.

EIGHT POINT GHOST BUSTING PLAN OF ANCIENT TAMILS

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்

2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்

3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்

4.யாழ் இசைக்க வேண்டும்

5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்

6.மணி அடிக்கவேண்டும்

7.காஞ்சி பாட வேண்டும்

8.அகில் புகை போட வேண்டும்

இதோ பாடல்கள்:—

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயேஐயவி புகைப்பவும் தாங்காதுஒய்யென

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறிஆம்பல் ஊதி,

இசை மணி எறிந்துகாஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

வேம்பு சினை ஒடிப்பவும்காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

பொருள்:

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

XXXX

விஞ்ஞானிகளுக்குத் தெரியாத அதிசய விமானம்  THOUGHT POWERED SPACESHIP- PLANE

இதுவரை உலகில் எந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கும்  தெரியாத அதிசய விமானம் இந்தியாவில் அக்காலத்தில் இருந்தது. இது பிரம்மாவினால் குபேரனுக்குக் கொடுக்கப்பட்டு பின்னர் ராவணனால் பறிமுதல் செய்யப்பட்டது. இதை வைத்துக்கொண்டு ராவணன் இமயமலை, நர்மதை நதிக்கரை, மற்றும் கிஷ்கிந்தை ஆகிய இடங்களுக்கு வந்து வால் ஆட்டியதும் சிவ பெருமான், கார்த்த வீர்ய அர்ஜுனன், வாலி ஆகியோரிடம் அடி வாங்கியதும் அனைவரும் அறிந்ததே.. இது எண்ணத்தால் — மனதின் சக்தியால் — இயக்கப்படும் THOUGHT POWERED விமானம். வேண்டிய இடத்துக்குச் செல்லும்; வேண்டிய அளவுக்கு பயணிகளுக்கு இடம் கொடுக்கும். இதை காமகாமி புஷ்பக விமானம் என்று ராமாயணம் புகழ்கிறது. இது போன்ற விமானம் சோதனைச் சாலையில் செய்யப்பட்டத்தை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகை வெளியிட்டது. ராமர் விமானம் பறந்தது எப்படி ? என்ற என்னுடைய விஞ்ஞானக் கட்டுரையில் அது பற்றி எழுதியுள்ளேன். இதோ அது பற்றிய ராமாயண ஸ்லோகம்:-

அயோத்யாம் ப்ராப்ய காகுஸ்தஹ  புஷ்பகம் காமகாமி தத்

விசர்ஜயித்வா கச்சேதி ஸ்வஸ்தி தே அஸ்து  இதி ச ப்ரபுஹு

பொருள்

ராமபிரான் அயோத்திக்குச் சென்று இஷ்டப்படி செல்லும் ஆற்றல் படைத்த புஷ்பக விமானத்தை உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று கூறி அனுப்பிவிட்டார் .

இதில் கவனிக்க வேண்டிய சொல் காமகாமி = இஷ்டப்படி செல்லக்கூடிய என்பதாகும் .

விஞ்ஞானிகள் இப்போதுதான் இதைப்பற்றி ஆராயவே துவங்கியுள்ளனர் .

இதே போல வலவன் ஏவா வான ஊர்தி PILOTLESS PLANE IN PURA NAANURU என்று புறநானூற்றுப் புலவர் பாடிய வின் ஊர்தி, இப்போது DRONE  ட்ரோன் என்ற பெயரில் பறப்பதைப் பார்க்கிறோம் .

—SUBHAM—

MY OLD ARTICLES

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

https://tamilandvedas.com › ராமர…

22 Jun 2013 — ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought …

புஷ்பக விமானம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered …

—subham—

Tags- காமகாமி புஷ்பக விமானம்இரட்டைக் குழந்தை, வால்மீகி, சத்ருக்னன்- முருகன் ஒப்பீடு

32வகை தர்மங்கள் பற்றி அம்பலவாணர் (Post No.11,710)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,710

Date uploaded in London – –  25 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

32 தர்மங்களின் பட்டியலை அறப்பளிச்சுர சதகத்தில்,   ஒரே பாடலில், அம்பலவாணக் கவிராயர்  அழகாகக் கொடுத்துள்ளார் . இதில் வியப்பான விஷயம் சிறைக் கைதிகளுக்கு உணவு கொடுப்பது, அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது , மிருகங்களுக்கு தீவனம்  கொடுப்பது, கல்யாணம் செய்ய உதவுவது, பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது , மருந்து கொடுப்பது ஆகியன அனைத்தும் உள . இவை அனைத்தும் புராண , இதிகாசங்களில் உள்ள விஷயங்கள்.

இதிலுள்ள தண்ணீர் பந்தல் வைக்கும் விஷயம் பெரிய புராணத்தில் அப்பர் காலத்தில் இருந்ததை படிக்கலாம் . மணிமேகலை காவியத்தில் அவள் சிறைச் சாலை சேவை செய்ததையும் உணவு கொடுத்ததையும் காணலாம். அசோகர் கல்வெட்டு முதல் இன்று ராமகிருஷ்ண மிஷன் வரை இந்த சேவைகளைக் காண்பதால் இது வாய்ச் சொல் வீரமில்லை ; உண்மைக் கதை என்றும் தெரிகிறது

.  தமிழ் நாட்டில் பல ஊர்ப்பெயர்களில் கூட ‘சத்திரம்’ என்ற சொல் இருப்பது அக்கால மன்னர்களின் தர்மத்துக்குச் சான்றாக நிற்கின்றன. மதுரை மங்கம்மாள் சத்திரத்திலும், அதற்கு அணித்தேயுள்ள மார்வாடி தர்மசத்திரத்திலும் நானே பலர் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் ; கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைச் சின்னம் திறக்கப்பட்ட போது ஆர் எஸ் எஸ் (R S S)  ஸ்தாபனம் மூலம் இதைச் செய்தோம் ; ஏதோ வெளிநாட்டினர் வந்து நமக்கு மருத்துவ மனை கட்டவும், காலேஜ் கட்டவும் சொல்லிக்கொடுத்தனர் என்பதெல்லாம் தவறு என்பதை சதகப் பாடலும் புராணங்களும் காட்டுகின்றன.

சமணர்கள் , மிருகங்கள், பறவைகளுக்கும் கூட இலவச மருத்துவ மனை வைத்ததை உலகில் வேறு எங்கும் காண முடியாது .

32 வகை தர்மங்கள்

1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் (Choultries; free lodging and boarding) கட்டிவைப்பது.

2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு (Free Hostels for students or Food Distribution)  உணவு வசதி அளிப்பது.

3. அறுவகைச் சமயத்தார்க்கும் (food for Mendicants) உணவு கொடுப்பது.

4. பசுவுக்கு வைக்கோலும் (fodder for cows) புல்லும் வழங்குவது.

5. சிறைச் சாலையில்(Food for prisoners துன்புறுவோர்க்கு சோறளிப்பது

6. வீடு தேடி வரும் ஆதரவற்ற (Giving alms) ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.

7. தின்பண்டம் (Anna Dhanam) நல்கல்.

8. மகப்பேறு மருத்துவ (Setting up Maternity Homes) மனைகள் அமைத்தல்

9. தாய்மைப் பேறுபெற்ற (Helping pregnant women; pre-natal and post natal care) பெண்கட்கு உதவி செய்வது.

10. குளம் வெட்டுதல் (Excavating Tanks, Lakes for Irrigation)

11. அனாதைப் பிணங்களை (cremating dead bodies of orphans or the poor) அடக்கம் செய்வது.

12. சுண்ணாம்பு tamilandvedas.com, swamiindology.blogspot.com

 (giving lime for betel-nut chewers) அளிப்பது.

13. நோயாளிகட்கு மருந்துகள் (Free distribution of medicines; setting up of hospitals for men and animals) கொடுத்து உதவுவது.

14. துணிவெளுக்கும் (Providing laundry service) தொழிலாளர் சேவை செய்து கொடுத்தல்

15. நாவிதர் (providing barber shops) சேவை செய்து கொடுத்தல்

16. காது குத்தி (Piercing ear for both boys and girls; also provide them ear studs) காதோலை/தோடு கொடுத்து உதவுவது.

17. மறைமொழி , தர்ம சாத்திரம் (Setting up schools to teach them Vedic Hymns and Morals ) கற்பித்தல்; பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது

18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது tamilandvedas.com, swamiindology.blogspot.com (helping children to take oil bath).

19. ஆலயம் கட்டல் (Building Temples)

20. பிறர் துன்பம் தீர்ப்பது.(Helping the downtrodden and the bereaved)

21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.(Setting up sheds for water distribution)

22. மடம் கட்டிச் சமய அறிவை வளர்ப்பது (Setting up Mutts for religious teachings).

23. அறைதல் = சாலைகளை அமைத்துக் கொடுப்பது அல்லது  தமுக்கு முதலியன (Communication facilities) மூலம் செய்தி வழங்குவது. 

24. சோலைகளை உண்டாக்கி வைப்பது (Creating gardens and parks for general public).

25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது (Constructing pillars and water holes for animals; they come there to relieve their itching).

26. விலங்கினங்கட்கு உணவளிப்பது (Giving food to animals and birds; both domestic and wild). tamilandvedas.com, swamiindology.blogspot.com

27. வெற்றிலை பாக்கு (distributing betel-nuts) கொடுத்து உதவுவது.

28. விலை கொடுத்து (saving lives) உயிரைக் காப்பாற்றுதல்.

29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல். திருமணமாகாத ஏழை களுக்குத் திருமணம் (Helping boys and girls to get married; Free Matrimonial Service) செய்து வைப்பது.

30. குழந்தைகட்குப் (Provision of Free Milk to Children) பால் வழங்குதல்.

31. கண்ணாடி (distributing mirrors for women to help with their look) வழங்குதல்.

32. விலைமாதர் (setting up brothels for the amorous so that common women are not disturbed) சேவை நல்குதல் tamilandvedas.com,

Xxxx

மாதவியின் மகளாக அவதரித்துப் பேரெழிலுடன் விளங்கிய மணிமேகலை!, ஒரு கட்டத்தில் சிறைச் சாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள கைதிகளைச் சந்திக்கிறார். அமுதசுரபி என்னும் வற்றாத உணவளிக்கும் அற்புத பாத்திரம் மூலம் அங்குள்ள கைதிகளுக்கு அறுசுவை உணவு படைக்கிறார். வயிற்றுக்குச் சோறிட்டதோடு நில்லாமல் மனதுக்கும் ஆறுதல் தரும் அன்பு மொழிகளையும்  நல்ல வாழ்க்கை நடத்தத் தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறார். அற்புதம்! அனைவரும் மனம் மாற்றம் அடைந்துவிடுகின்றனர். இதை அறிந்த சோழ மன்னன் அவளை அரண்மனைக்கு அழைக்கிறார். சிறைக் கைதிகளை உடனே விடுவிக்கும் படியும் சிறச்சாலைகளை சாது சந்யாசிகள் தங்கும் திரு மடங்களாக மாற்றவும் ஆலோசனை வழங்குகிறார். மன்னனும் அதை ஏற்று செயல் படுத்துகிறான்.

சிறைக் கைதிகள் சீர்திருத்தம் Prisoners rehabilitation என்பது மேலை நாட்டில் புதிதாகப் பின்பற்றப்படும் கருத்து. இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டியவர் மணிமேகலை!

Xxxx

பெரிய புராண, மஹா பாரத தண்ணீர் பந்தல் கதைகள்

12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி பற்றி வேதங்கள் முதல் திருவிளையாடல் புராணம் வரை பிரஸ்தாபிக்கின்றன. அத்தகைய காலங்களில் அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி என்ற அற்புதக் கலயங்களும் சின்னங்களும் இந்திய மக்களைக் காப்பாற்றி வந்துள்ளன. இதை நம்பாதோரும் கூட கஷ்ட காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை மலர்ந்த பூமி இப் புனித பாரதம் என்பதையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.

அப்பூதி அடிகள் கதை

பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹா  பாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நால்வரில் ஒருவர். சம்பந்தராலும் போற்றப்பட்ட புனிதர். ஆனால் அந்தணர் அல்ல. அவர் திங்களுர் சென்றபோது அவர் பெயரில் திருமடங்களும் தண்ணிர் பந்தல்களும் இருந்ததைக் கண்டு வியந்தார். யார் என்று வினவியபோது அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் இவ்வாறு செய்ததை அறிந்தார். அவரிடமே சென்று

“ஏனைய்யா இப்படி அப்பர் பெயரை வைத்தீர்? அவர் என்ன சாதனை செய்து கிழித்துவிட்டார்?” என்று வினவ, அப்பூதி அடிகள் புலி எனச் சீறி அப்பர் தம் பெருமையை விளக்கி வந்தவரை விரட்டப் பார்த்தார். தாம்தான் அப்பர் என்று அவர் தம்மையே அறிமுகப் படுத்தியபோது அப்பூதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. நாம் இங்கே கவனிக்கவேண்டியது தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் 1300 ஆண்டுகளாக இன்றும் தமிழகத்தில் நீடித்திருக்கும் ஒரு சமூகப் பணி என்பதாகும்.

மாத்ர தேச அதிபதி சல்லியன் கதை

இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத காலத்தில் இப்படி ஒரு கதை வருவதைப் பார்த்தால் இமயம் முதல் குமரி வரை 5000 ஆண்டுகளாக இப்படி நற்பணி நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். பாண்டவ சகோதரர் நகுலன் சகாதேவனின் மாமன் மாத்ர தேச அதிபதி சல்லியன். மாபாரத போருக்கு முன் இவனை தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டவர்களும் கவுரவர்களும் முனைப்புக் காட்டினர். கள்ளத்தனத்தில் கெட்டிக்காரன் துரியோதணன். சல்லியன் வரும் வழியில் தண்ணீர் பந்தல்கள் வைத்து அவன் தாக சாந்தி செய்யவே அவனிடம் உதவி கேட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா? வனும் அப்படியே உதவி தருவதாக வாக்களித்தான். கர்ணனின் தேரோட்டியாக அமர்ந்த சல்லியன், 18ஆம் நாளில் உயிர் துறக்கிறான். வாக்கிற்குக் கட்டுப்பட்ட சத்திய சீலன்!

ஆக தண்ணிர் பந்தல், அன்ன தானம் என்பன பாரதீய வாழ்வில் இரண்டறக் கலந்த அம்சங்கள். வட இந்தியாவில் காளி கம்பளவாலா சத்திரங்கள் என்று வழி நெடுகிலும் உண்டு. அந்தக் காலத்தில் இமய மலையின் புனித தலங்களுக்குச் செல்லுவோருக்கு கம்பளி ஆடைகளை கொடுத்துதவிய ஒரு தர்மாத்மாவின் பெயரில் அமைந்த சத்திரங்கள் அவை. நம் தமிழ் நாட்டிலும் வழி நெடுகிலும் அன்ன சத்திரங்கள் இருந்த காலம் ஒன்று உண்டு.

எறும்புக்கும் கொசுவுக்கும் கூடத் தீங்கு செய்யாத சமண சமயத்தினர் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவ மனை நடத்திய நாடு இது!

Above article 32 வகை தர்மங்கள் பட்டியல் (Post No.7683) was written by me on 12 March 2020

xxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 94

 94. முப்பத்திரண்டு அறங்கள்

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்

     பிள்ளைகள் அருந்தி டும்பால்,

  பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்

     பெண்போகம், நாவிதன், வணான்,

மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு

     வாயின்உறை, பிணம்அ டக்கல்,

  வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்

     வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,

சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்

     செய்தல், முன் னூலின் மனம்,

  திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,

     தேவரா லாயம்,அ வுடதம்;

அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்

     அன்னைசெயல்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) அருமை ……. தேவனே!, பெறும் இல் – மகவு பெறுதற்கு

வீடு விடுதல், பெறுவித்தலொடு – மகவு பெறுதற்கு வேண்டியவற்றை

உதவுதல், காது ஓலை – காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள்

அருந்திடும் பால் – அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல்,

பேச அரிய சத்திரம் – சொலற்கரிய சத்திரம் கட்டல், மடம் – (துறவிகள்

இருக்கும்) மடம் அமைத்தல், ஆவுரிஞ்சு கல் – பசுக்களின் தினவு நீக்கும்

கல்நடுதல், பெண்போகம் – பெண்களுக்கு இன்பம் அளித்தல், நாவிதன் –

அம்பட்டனுக்கு உதவுதல், வணான் – வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி

கண்ஆடி – மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், தண்ணீர் – நீர்

வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் – தலைக்கு எண்ணெய்

கொடுத்தல், பசுவின்வாய் உறை – பசுக்களுக்குத் தீனி, பிணம் அடக்கல் – (ஆதரவு அற்ற)

பிணத்தை அடக்கம் செய்தல், வாவி – குளம் வெட்டுதல், இறும் உயிர்

மீட்டம் – இறக்கும் உயிரைக் காத்தல், தின்பொருள் – தின்பண்டம்

அளித்தல், அடைக்காய் வழங்கல் – வெற்றிலைபாக்குக் கொடுத்தல்,

சுண்ணாம்பு உதவுதல், சிறை உறுபவர்க்கு அமுது – சிறையில்

அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், வேறு இலம் காத்தல் – பிறர்

துயரைப் போக்குதல், பொழில் செய்தல் – சோலை வைத்தல், முன் நூலின்

மணம் – பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், திகழ் விலங்கு

ஊண் – விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், பிச்சை – இரப்போர்க்கு

ஈதல், அறு சமயருக்கு உண்டி – அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு

அளித்தல், தேவராலயம் – திருக்கோயில் கட்டுதல், அவுடதம் – மருந்து

கொடுத்தல், அறைதல் கற்போருக்கு அன்னம் – பாடம் படிப்போர்க்கு

உணவு அளித்தல், நாலெட்டு அறங்களும் – (ஆகிய) முப்பத்திரண்டு

அறங்களும், முன் அன்னை செயல் – முற்காலத்தில் உமையம்மையார்

காஞ்சியிற் செய்தவை ஆகும்.

To be continued……..

Tags– 32 வகை தர்மங்கள்,அம்பலவாணர் , சத்திரங்கள்,மணிமேகலை, தண்ணீர் பந்தல் ,அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி

பேரூர்த் தாண்டவமூர்த்தி! (Post No.11,709)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,709

Date uploaded in London –  25 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 கொங்குமண்டல சதகம் பாடல்கள் 17, 16 

பேரூர்த் தாண்டவமூர்த்தி!

ச.நாகராஜன் 

(சென்ற கட்டுரையில் பேரூர் பட்டீஸ்வரம் கோவில் பற்றிப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து இதோ…)

கோமுனி, பட்டி முனி காண பட்டீஸ்வரர் நடனம் ஆடிய தலம் மேலைச் சிதம்பரம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற திருத்தலமாகு.

இதைப் பற்றி கொங்குமண்டல சதகம் பாடல் 17இல் சிறப்புறக் கூறுகிறது இப்படி:-

பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா

நாகா பாணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்

போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்

வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே

பொருள் : கோமுனி, பட்டிமுனி காண, மரகதவல்லி சமேதரான பட்டீஸ்வரர் நடனம் செய்தது மேலைச் சிதம்பரமான பேரூரில்.

அந்தப் பேரூரும் கொங்குமண்டலம் சார்ந்த திருத்தலமே என்பதாம்.

கொங்குமண்டலத்தில் ஆறை நாட்டில் உள்ளது திரு அவிநாசி.

இங்கு ஒரு பெரிய அற்புத சம்பவம் நடைபெற்றது.

திருநாவலூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு சமயம்  அவிநாசிக்கு எழுந்தருளினார். அப்போது ஒரு வீட்டில் மங்கல ஒலி எழுந்தது. ஆனால் அடுத்த வீட்டிலோ அழுகுரல் கேட்டது.

நடந்தது என்ன என்று கேட்டார் சுந்தரர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சில சிறுவர்கள் அங்குள்ள குளத்திற்குச் சென்றனர். ஒரு சிறுவனை முதலை ஒன்று இழுத்துச் சென்று விழுங்கி விட்டது.  அந்தச் சிறுவனுடன் கூடச் சென்ற சிறுவனுக்கு இன்று உபநயனம். ஆகவே அந்த வீட்டில் மங்கல ஒலி எழுகிறது.  ‘நம் குழந்தை இருந்தால் அவனுக்கும் இது போலவே உபநயனம்  நடந்திருக்குமே’ என்று அச்சிறுவனின் தாயார் அழவே, அந்த அழும் ஒலி அங்கு கேட்டது.

சுந்தரமூர்த்தி நடந்தை உணர்ந்தார். அந்தச் சிறுவனின் தாயார் அழுவதைக் காணப் பொறாத அவர் நேராக் குளக்கரைக்குச் சென்றார்.

“காலனைக் குழந்தையைக் கொடுக்கச் சொல்” என்று பதிகம் ஓதினார்.

என்ன ஆச்சரியம்! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவன் மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் முதலையின் வாயிலிருந்து கக்கப்பட்டு வெளியே வந்தான்.

அனைவரும் இந்த அதிசய சம்பவத்தைக் கண்டு பிரமித்தனர்.

உலகெங்கும் இந்தச் செய்தி பரவியது.

இன்றும் அதன் நினைவாகத் திருவிழா அங்கு நடை பெறுகிறது.

சுந்தரர் பாடிய பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாயிற்று.

அவர் பாடிய பாடல்:

உரைப்பாருரையிகந் துள்கவல்லார் தங்களுச்சியா

யரைக்காடரவா வாதியு மந்தமுமா னாய்

புரைக்காடு சோலைப் புக்கொளியூரவிநாசியே

கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே

இதைச் சுட்டிக் காட்டும் அவிநாசிப் புராணம் தரும் பாடல் இது:

“உரைப்பாருரையென் றுள்குறவல்லா குச்சியின்மீதே யொளிவிடுசுடரே

யரைக்காடரவா வாதியு நடுவு மந்தமுமளவு மல்லவுமானாய்

புரைக்காடவை சூழ்புக்கொளியூரா புகழவிநாசிப் புண்ணியமுதலே

கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல் காலனையென்றே கட்டுரை செய்தார்”.

இந்த வரலாறை கொங்குமண்டல சதகம் பாடல் 16 சிறப்புறக் கூறி அவிநாசித் திருத்தலத்தைப் போற்றுகிறது:

பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்

பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்

ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு

வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே

பொருள் : பிள்ளையைக் கொண்டு வா என்று சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாட, விழுங்கிய பிள்ளையை குளக்கரையில் முதலை உமிழ்ந்த அவிநாசித் திருத்தலமும் கொங்குமண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.

***

Warning to HRCE Officers: Story of a Dog in Valmiki Ramayana (Post No.11,708)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,708

Date uploaded in London – –  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Here is a story from Valmiki Ramayana which says people who are appointed as officials in Hindu temples, Go Saalas and Anna Chatras easily go to hell. Rama appointed a Brahmin as an officer in a monastery as a punishment. But he was happy thinking that it was a reward.

Now and then we hear about government officers in Tirupati Balaji temple and HRCE controlled Tamil Nadu temples abusing and misusing the temple money.  We also hear about the frauds in Food Distribution Centres. There is a proverb in Tamil Sivan Sothu Kula Naasam meaning Those who steal temple property will be destroyed lock, stock, and barrel.

Stealing is bad according to all religious books. Stealing holy property is worse. All the Tamil inscriptions in temples and brahmin lands say that those who violate the king’s orders will go to hell. If we keep it in the background of our mind and read the dog story we will fully understand what the dog said at the end.

xxxx

Uttara Kaanda of Ramayana is the seventh and last section of the great epic Ramayana. Some people consider it an appendix written by someone else. Others say it was written by Valmiki himself, but there are some interpolations. Whatever it is, the stories and the morals they teach are interesting and valid today.

Here is a story of a dog told by the great saint Valmiki.

Rama, the king, held morning consultations, with his ministers and senior citizens of the state. They included Brahmins and representatives of the business community.

After the consultation, he asked his brother Lakshmana to go to the gate and bring all the citizens with petitions. He went to the palace gate and called for petitioners to come forward. There was none but an injured dog sitting and howling there.

It was a real Ram Rajya. There was neither poverty nor disease and earth filled with grains and herbs. Neither children nor the young nor those of middle age met with death. The kingdom was ruled with equity and there was no adversity. Thus during Rama’s administration none was to be seen who was in need of justice.

But he dog at the gate was howling unceasingly.

Lakshmana said,

“O fortunate one, who brought you here, speak without fear”.

The dog said,

I wish to communicate something to Rama who is the refuge of all beings who confers fearlessness on all. But we are not allowed inside the temples, palaces, or Brahmins houses. So please get the permission of the king. Lakshmana went back to Rama and reported what the dog said. Rama asked him to bring the dog inside the hall.

The dog told Rama, a Brahmin by name Sarvartha siddhi who lives on alms, hit it on the head and injured it without any reason.

Rama sent for the Brahmin. and he came to the assembly hall.

Rama said

“O Brahmin! you have injured this dog. What offence did it commit? You hit it severely with your staff.”

 The Brahmin said, “I was wandering about the whole day in search of alms. I was overcome with hunger. The dog was sitting in the centre of a street. I asked it to move but it didn’t move. So I became angry and struck it with my staff. I am guilty, punish me.”

 Rama consulted his eight ministers and the business representatives who were present in the hall. They said to him, “A Brahmin is exempt from punishment. So make him the head of a monastery”.

 Rama posted him as the head of a monastery. The Brahmin was mounted on an elephant and left the palace happily.

 The dog said,

“Oh Ragava, this Brahmin given to anger is impious. He will by no means be able to discharge the duties. He who wishes to see his children, friends and beasts fall into hell is made chief of the gods’ temples, shelter for cows and Brahmins’ Anna Chatras/choultries. Oh, Raghava , he perishes who deprives the Brahmins, women or children of their legitimate possessions; one who misappropriates the offerings of Brahmins goes to the lowest hell”.

 Hearing the words of the dog ,Rama’s eyes opened wide in astonishment. Then the dog departed and went to the holy city of Kashi. It went on a fast unto death. In its former birth it was a good person but born as a dog because of its bad .behaviour.

This story implies that if a man is appointed as a higher official and he doesn’t discharge his duties faithfully he is in danger of going to hell.

–subham— 

Tags-   HRCE, Valmiki, warning, Dog story, Ramayana, Uttara Kanda

கோவில் அதிகாரிகளுக்கு நரகம் கிடைக்கும்:  வால்மீகி எச்சரிக்கை (Post No.11,707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,707

Date uploaded in London – –  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வால்மீகி  இராமாயண உத்தர காண்டத்தில் வியப்புமிகு செய்திகள் பல உள . ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் நிறைய இடைச் செருகல்களைக் கொண்டு இருப்பதால் பலரும் இதை வால்மீகி  மஹரிஷி எழுதி இருக்க முடியாது என்பர். ஆயினும் பகதர்கள் எல்லாவற்றையும் நம்புகின்றனர். என்னிடமுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பான ஹரிப் பிரசாத் சாஸ்திரி புஸ்தகத்திலும் எல்லா ஸ்லோக மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவர் இடைச் செருகல் (INTERPOLATIONS)  என்ற தலைப்பில் நாய் கதை, கழுகு-ஆந்தை சண்டைக் கதை (VULTURE AND OWL) முதலியவற்றைக் கொடுத்துள்ளார்.

நேற்று நாய்க் கதையைச் சொன்னேன். இன்று அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

நாய்க் கதையின் சுருக்கம்:

ராமபிரான், பிராஹ்மணர்களையும் பிசினஸ் கம்யூனிட்டி வி.ஐ.பிக்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியபின்னர் , “தம்பி லெட்சுமணா, குறைதீர்க்கும் மனுக்களுடன் வாசலில் காத்திருப்போரை அழைத்து வா” என்கிறார்; அவனும் அரண்மனை வாசலுக்குச் சென்றான். தலையில் அடிபட்ட நாய் ஒன்று மட்டுமே நின்றது. ஒரு பிராமணன் தன்னைக் காரணமின்றி தாக்கியதாக சொல்லவே பிராமணனையும் அழைத்து விசாரித்தார் ராமபிரான். அவன் பசி, கோபத்தில் இவ்வாறு செய்ததாக உண்மையை விளம்பினான். உடனே அவனுக்கு மணியக்காரர் பதவியைக் கொடுத்து அனுப்பினார். அவன் சந்தோஷமாக யானை மீது ஏறி வீட்டுக்குச் சென்றான். அடிபட்ட நாய், மீண்டும் தன் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டு, பின்னர் காசிக்குச் சென்று சாகும் வரை உண்ணாவிரத நோன்பு அனுஷ்டித்து உயிர் நீத்தது .

இதற்கு அடுத்துவரும்  ஸ்லோகம்தான் மிகவும் சுவையானது :

யமிச் சேந் நரகம் நேதும் ஸ புத்ர பசு பாந்தவம்

தேவேஷ்வ திஷ்டிதம் குர்யாத் கோஷு ப்ராஹ்மணேஷு ச

நிரயாந் நிரயம் ஸைஷ பதத்யேவ  நராதமஹ

மக்கள், விலங்கினங்கள் , உறவினர்கள் இவர்களுடன் கூடிய எவனை நரகத்திற்கு அனுப்ப விருப்பமுண்டோ அவனைக்  கோவில்களிலும், பசு மடங்களிலும் , பிராமணர்களின் அன்ன  சத்திரங்களிலும் அதி காரியாகச் செய்துவிடவேண்டும் . அவன் ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் போய்க்கொண்டே இருப்பான் .

வால்மீகி முனிவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்று ஆராய்வோம். பொதுவாகவே பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது குற்றம் என்பதை , எல்லா மத நூல்களும் செப்புகின்றன. அதிலும் புனிதமான பொருள்களைத் திருடுவது பெரிய குற்றம்; அவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள் என்று எல்லா தமிழ்க் கல்வெட்டுக்களும் எச்சரிக்கின்றன. ஏனெனில் அது வேலியே பயிரை மேய்ந்ததற்குச் சமம்  ஆகும்.

மேலும் சிவன் சொத்து குல நாசம் என்ற தமிழ்ப் பழமொழியை எல்லோரும் அறிவர். கோவில்கள், பசு மடங்கள் , அன்ன சத்திரங்களில் பொய்க் கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டுவது எளிது. தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் இவ்வாறு (H R C E) கோவில் ஊழியர்கள் திருடுவதும், லஞ்சம் வாங்கி கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதும் நாம் .அறிந்ததே. திருடர்களுக்கு நரகம் கிடைக்கும் என்பதை எல்லா சமயங்களும் எழுதியுள்ளன . இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வால்மீகி மகரிஷியும் எழுதியுள்ளது அடிக்கோடிட்டுக் காண்பிப்பது போல பளிச்சிடுகிறது.

வாழ்க வால்மீகி ; வளர்க ராமாயணம்

–SUBHAM—tags- கோவில் அதிகாரி, நரகம் ,  வால்மீகி,  எச்சரிக்கை 

பகைக்காதே! பகைக்காதே! 15 பேரைப் பகைக்காதே! (Post No.11,706)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,706

Date uploaded in London – –  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பலவாணக் கவிராயர், பகைக்கக்கூடாதவர்கள் யார் யார் என்று ஒரு லிஸ்ட்/ List பட்டியல் தருகிறார்.; அந்த 15 பேரைக் கனவிலும் பகைக்கக்கூடாது என்கிறார். யார் அந்த 15 பேர்?

அரசர், மந்திரிகள், தீயோர், கோள் சொல்லுவோர்,

தூதர்,மர்மமான ஆசாமிகள் , வலிமையுடையோர்கணக்கர்,

சமையற்காரர், மந்திர வாதிகள், பணக்காரர், இழிந்தோர்,

உபதேசியர், மருத்துவர்,  புலவர்கள்.

நல்ல அறிவுரைதான். சமையல்காரனை பகைத்தால் சாப்பாட்டில் உப்பு அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துவிடுவான்; டாக்டரைப் பகைத்தால் ஊசி மருந்து  ஏற்றுவதாகச் சொல்லி தண்ணீரை ஏற்றிவிட்டு காசு வாங்குவார். கீழோரைப் பகைத்தால் தூக்கணங் குருவிக்கூட்டைப் பிய்த்தெறிந்த பஞ்ச  தந்திரக் கதை நினைவுக்கு வரும். பலசாலியைப் பகைத்தால்  கைகால்கள் முறியக்கூடும்; பணக்காரர்களைப் பகைத்தால் அடியாட்களைக் கொண்டு தாக்குவார்கள். புலவர்களை பகைத்தால் அறம்பாடி நம்மைக் கொன்றுவிடுவார்கள் .அரசர்/ ஆளும் கட்சியினரைப் பகைத்தால் போலீஸ் கேஸ் கூட பதிவு செய்ய மாட்டார்கள். அம்பலவாணர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்.

Xxxx

அடுத்த பாடலில் இன்னுமொரு அறிவுரை வழங்குகிறார்; கரும்பு போன்ற பொருள்களைக் கசக்கிப் பிழிந்தால்தான் பலன் கிடைக்கும். சாறு வேண்டுமென்றால் நசுக்க வேண்டும். திருவள்ளுவர் கூட கருமிகளை கையை முறித்து முகவாக்கட்டையில் ஒரு குத்துவிட்டால்தான் காசு தருவான் என்று சொல்கிறார் (காண்க வள்ளுவரும் வன்முறையும் என்ற எனது கட்டுரை). இன்னும் சிலரைப் புகழ்ந்து வேலை வாங்க வேண்டும். சின்னப் பையனாக இருந்தால், அட என் ராஜா , உன்னைப்போல இன்டெலிஜெண்ட் INTELLIGENT  யாரும் கிடையாது ; உன் டீச்சர் என்னிடம் சொன்னார். வா, வா, ஹோம் ஓர்க்கை HOME WORK வேகமாக செய் என்று சொன்னால் செய்வான். ஒரு பெண்ணை விரும்பினால், உன்னைப்போல அழகியை நன் உலகிலேயே கண்டதில்லை. அடடா, நீ நல்ல குணங்களுக்கு இலக்கணம்.BEAUTY AND FULL OF GOOD VIRTUES என்று புகழ் வேண்டும். அந்த அசடும் ( DIMWIT)மயங்கி, சொக்கிப் போகும். இது அம்பலவாணர் கண்ட உண்மை.

XXXXXXXXX

இதோ பாடல் எண் 92

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 92

        92. பகை கொள்ளத் தகாதவர்

மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு

     மாறாத மர்மம் உடையோர்,

  வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்

     மடையர்,மந் திரவா தியர்,

சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்

     சூழ்வயித் தியர்,க விதைகள்

  சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்

     சொப்பனந் தனில் ஆகிலும்

நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்

     நானிலத் தென்பர் கண்டாய்!

  நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்

     நம்பனே! அன்பர் நிதி யே!

அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) நாரி ஓர் பாகனே – உமையொரு பங்கனே!, வேத ஆகமம்

பரவும் நண்பனே – மறையும் ஆகமமும் போற்றும் சிறப்புடையவனே!,

அன்பர் நிதியே – அன்பரின் சேமப்பொருளே!, அன்னம் ஊர் பிரமனும்

கண்ணனும் காணாத அண்ணலே – அன்னத்தில் ஊர்ந்து வரும் நான்முகனும்

திருமாலும் கண்டுபிடிக்க இயலாத பெரியோனே!, அருமை …….. தேவனே!,

மன்னர் – அரசர், அமைச்சர் – மந்திரிகள், துர்ச்சனர் – தீயோர், கோளர் –

கோள் சொல்லுவோர், தூதரொடு – தூதர்களுடன், மாறாத மர்மம்

உடையோர் – நீங்காத செற்றம் கொண்டவர்கள்,

வலுவர் – வலிமையுடையோர், கருணீகர் – கணக்கர், மிகு பாகம் செய்து

அன்னம் இடும் மடையர் – சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர்,

மந்திர வாதியர் – மந்திரஞ் செய்வோர் சொன்னம் உடையோர் – செல்வ

மிக்கவர்கள், புலையர் – இழிந்தோர், உபதேசமது செய்வோர் – உபதேசியர்,

சூழ் வயித்தியர் – ஆராய்ச்சியுடைய மருத்துவர், கவிதைகள் சொற்றிடும்

புலவர் – செய்யுள் இயற்றும் புலவர்கள், இவர் பதினைந்து பேரொடும்

சொப்பனந்தனில் ஆகிலும் நன்னெறி அறிந்தபேர் இந்நானிலத்து பகை

செய்திடார் – இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி

அறிந்தவர்கள் இவ்வுலகிற் பகை கொள்ளார், என்பர் – என்று கூறுவர்.

     (வி-ரை.) கண்டாய் : முன்னிலை அசைச் சொல் : நன்மை + நெறி –

நன்னெறி, மடை – சோறு. மடையர் – சமையல் செய்வோர். உபதேசம்

புரிவோர் – ஆன்மநெறி கற்பிக்கும் ஆசிரியர்.

Xxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 93

 93. நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்

சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்

     சொல்லும்நல் நெல்லை எள்ளைத்

  தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்

     தொண்டரைத் தொழுதொ ழும்பை

நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்

     நற்றமிழ்க் கவிவா ணரை

  நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க

     நயமுள்ள நாரியர் தமைப்

புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்

     போர்வீர ரைத்தூ யரைப்

  போதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன்

     புகழ்பெறக் கொள்வர் கண்டாய்

அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே – தீய

அறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே!, அண்ணலே –

தலைவனே!, அருமை ….. தேவனே!, சுவைசேர் கரும்பை – சுவை பொருந்திய

கரும்பையும், வெண் பாலை – வெண்மையான பாலையும், பருத்தியை –

பருத்தியையும், சொல்லும் நல் நெல்லை – சொல்லப்படுகின்ற நல்ல

நெல்லையும், எள்ளை – எள்ளையும், தூய தெங்கின் கனியை – தூய்மை

பொருந்திய தென்னம் பழத்தையும், எண்ணாத துட்டரை – மதிக்காத

தீயவர்களையும், தொண்டரை – அடிமையாளரையும், தொழு தொழும்பை –

குற்றேவேல் செய்வோரையும், நவைதீருமாறு – குற்றம் நீங்கும்படி, கண்டித்தே

– கண்டனம் செய்தே, பயன் கொள்வர் – அவர்களால் ஆன பயனைப்

பெறுவார்கள், நல் தமிழ் வாணரை – நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த

புலவரையும், நலம் மிக்க செழுமலரை – நன்மை மிகுந்த செழித்த பூவையும்,

ஓவியம் எனத் தக்க நயம் உள்ள நாரியர் தமை – ஓவியத்தில் எழுதிய

பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், புவி மீதில்

உபகார நெஞ்சரை – பூமியின் மீதில் உதவி செய்ய வேண்டுமென்று மனம்

படைத்தோரையும், சிறுவரை – சிறுவரையும், போர் வீரரை – போர்

வீரர்களையும், தூயரை – தூய்மை பொருந்திய பெரியோர்களையும், போதவும்

பரிவோடு மிகுபயன் புகழ் பெறக் கொள்வர் – மிகுதியான அன்போடு மிகுந்த பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.

     (வி-ரை.) தொழும்பர் – குற்றேவல் செய்வோர். நவை – குற்றம்.

Xxxx

To be continued……………………………………………

 tags- அறப்பளீசுர சதக,  பாடல் எண் 93,  பகை,  தகாதவர், பகைக்காதே 

பட்டிப் பெருமான் பள்ளனான கதை! (Post No.11,705)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,705

Date uploaded in London  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பட்டிப் பெருமான் பள்ளனான கதை!

ச.நாகராஜன்

கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.

இறைவனின் அருளுக்கு ஜாதி பேதம் கிடையாது, உயர்ந்தோர், பட்டியல் இனத்தோர் என்ற வேறுபாடு கிடையாது என்பதை நமது  பண்டைய இலக்கியம் தெளிவு பட விளக்குகிறது.

பின்னால் அரசியல் காரணங்களுக்காக  வேறுபாடு உருவாக்கப்பட்டு பல்வேறு சொற்றொடர்களில் அமைக்கப்பட்டு பட்டியல் இனத்தோர், தலித், ஹரிஜன், முன்னேறிய வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் என்றெல்லாம் சொல்லப்பட்டு பிளவை ஏற்படுத்தியது.

சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் இடம் பெற்ற ஒரு சுவையான வரலாறு இறைவனின் அருள் எல்லோருக்கும் பொது என்பதை விளக்குகிறது.

இறைவனே பள்ளன் ஆன நிஜ வரலாறு இது.

சுந்தரர் தனது உளத்திலிருந்து எழுந்த அருள் பாடல்களைப் பாடியவாறே ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபிரானைத் தரிசித்து வந்தார்.

‘சுந்தரர் பாடிக் கொண்டே வருகிறார். அவருக்குத் தேவையான பொன்னைக் கொடுக்க என்னிடம் பொன் இல்லையே’ என்று ஒளிந்தாற் போல ஒரு திருவிளையாடலை நடத்தத் திருவுள்ளம் கொண்ட பட்டிப் பெருமான் ஒளிந்து கொண்டார்.

இந்த வரலாறு நடந்ததும் கொங்குமண்டலத்திலே தான் என்று பெருமையுடன் இதைப் பதிவு செய்கிறது கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.

பாடல் :

கடுவாள் விழியினை யாரூர்ப் பரவை கலவிவலைப்

படுவார் தமிழ்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்

நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள

வடிவாகி நின்றதும் பேரூர்ச்சிவன் கொங்கு மண்டலமே

பொருள் :  ‘சுந்தரர் பாடி வருவார், அவருக்குக் கொடுக்க பொன் இல்லையே நம்மிடம்’ என்று ஒளிந்தார் போலப் பட்டிப் பெருமானார், பள்ள வடிவு கொண்டு ஒளிந்ததும் பேரூரில், அந்தப் பேரூரும் கொங்குமண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.

உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறையோலமிட்டுரைக்கும்

வியந்ததஞ்செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகி முன்காட்டிப்

பயந்தரு மிறையவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த் திருவிளையாட்டால்

நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணிமுனண்ணிரம்மா

  என்று பேரூர்ப் புராணம் இதைக் கூறுகிறது.

பேரூர் தலம் பற்றிய குறிப்பு :

கோவை மாநகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி பேரூர் பட்டீஸ்வர கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கரிகால் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பச்சைநாயகி அம்மன் பட்டிஸ்வரருடன் இருந்து அருள் பாலிக்கும் தலம் இது. இங்குள்ள லிங்கம் ஸ்வயம்பு லிங்கம்.

இதற்கு பிப்பலாரண்டயம், பட்டிபுரி, காமதேனு புரி எனப் பல பெயர்கள் உண்டு.

ஒரு முறை பிரம்மா அயர்வுற்று, தூங்கி, படைப்புத் தொழிலைச் செய்யவில்லை. இதை அறிந்த மஹாவிஷ்ணு காமதேனுவை அழைத்து, ‘நீ சிவனை நோக்கித் தவமிருந்து அவர் அருள் பெற்று படைப்புத் தொழிலைச் செய்வாயாக’ என்றார். அதன் படி காமதேனு இமயமலையில் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் சிவன் அருள் சித்திக்கவில்லை.

நாரதர் ஒரு சமயம் அங்கே சென்றார். ஆதிலிங்க மூர்த்தியாக காஞ்சியில் அருள் பாலிக்கும் சிவபெருமான் பற்றிச் சொல்ல, காமதேனு அங்கு சென்று தினமும் சிவபெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.

ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி அந்த லிங்கத்தின் மேல் எழுந்திருந்த புற்றை விளையாட்டாய்க் கலைத்து விட்டது.

கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியின் மீது படிந்து விட்டது.

இதை அறிந்த காமதேனு பெரிதும் வருத்தமுற்றது.

காமதேனுவின் வருத்தத்தைப் போக்க சிவபிரான் காமதேனு முன் தோன்றினார்.

“கவலையுற வேண்டாம். பட்டியின் குளம்படித் தழும்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.இங்கே தொடர்ந்து நீ தவம் செய். எனது நடன தரிசனத்தை நீ எப்போதும் இங்கு காணலாம். இந்தத் தலம் பட்டீஸ்வரம் என இனிப் புகழ் பெறும்.” என்று கூறி அருளினார்.

இன்றும் சிவபிரான் திருமுடியில் இந்தக் குளம்படித் தழும்பு உள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக இறைவன் பட்டீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.

இந்தத் தலத்தில் பல அருளாளர்களும் வருகை புரிந்து பாடல்களைப் பாடித் தொழுதுள்ளனர்.

இன்றும் பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து சிவபிரானை வணங்கும் மாபெரும் தலமாக பட்டீஸ்வரம் உள்ளது.

***

.

உத்தர காண்டத்தில் வால்மீகி சொல்லும் சுவையான நாய்க் கதை (Post No.11,704)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,704

Date uploaded in London – –  23 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

உலகத்தில் தோன்றிய  காவியங்களில் முதல் காவியம் வால்மீகி ராமாயணம் ஆகும். இது ஆதி காவியம் என்று அழைக்கப்படுகிறது . இதில் 7 காண்டங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் சர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன . எளிய சம்ஸ்க்ருதம்; ஆனால் அற்புதமான கதையும் சொல்லாக்கமும் உடையது. சம்ஸ்க்ருதத்தில் பிற்காலத்தில் எழுதிய எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அவரைப் பின்பற்ற்றியதைக் காணலாம். சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் ராமாயணம் பரவியிருந்ததை அகநானூற்றுப் புறநானூற்றுப் பாடல்களில் காண்கிறோம். ராவணனை அரக்கன் என்றும் சங்கப் புலவர் வசை பாடுகிறார். பிற்காலத்தில் தேவாரம் பாடிய மூவரும் ராவணனை வசைபாடுவதோடு ராமனைப் புகழ்வதையும் காண்கிறோம். அதே போல ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும் படிக்கிறோம் .

ராமாயணத்திலுள்ள 7 காண்டங்கள் – பால, அயோத்தியா , ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர காண்டங்களாகும். இதில் கடைசி காண்டம் உத்தர காண்டம். இதை சிலர் பிற்சேர்க்கை என்றும்  வால்மீகி  எழுதாதது என்றும் செப்புவர். ஆனால் இது பிற்சேர்க்கையாக இருந்தாலும்   வால்மீகி தான் எழுதியிருக்க வேண்டும் என்பது சம்ஸ்க்ருத மொழியை அறிந்தோரின் வாதம். எது எப்படியாகிலும் அதிலுள்ள சுவையான விஷயங்கள் உண்மையில் நடந்தவையே.

இந்து மத்தில் நிறைய நாய்க் கதைகள் இருக்கின்றன. இது ரிக் வேதத்தில் துவங்குகிறது. சரமா, சரமேயஸ் என்ற நாய்கள் பற்றி ரிக் வேதத்தில் படிக்கிறோம். மஹாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் வடக்கு நோக்கி நடந்து உயிர் விடுகையில் யுதிஷ்டிரனை கடைசி வரை ஒரு நாய் தொடர்ந்து சென்ற கதையை நாம் கேட்கிறோம். அது போலவே ராமாயண உத்தர காண்டத்தில் ஒரு நாய்க் கதை வருகிறது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள்.

காலையில் செய்யவேண்டிய கடமைகளை முடித்த பின்னர் பிராமணர்களையும் , BUSINESS COMMUNITY பிசினஸ் கம்யூனிட்டியைச் சேர்ந்த வர்த்தகர்களையும் சந்தித்து ராமர் ஆலோசனைக்  கூட்டம் நடத்தினார்.

பின்னர் லெட்சுமணனை அழைத்து இன்று நம்மிடம் மனுக்கொடுக்க வந்துள்ள பொதுமக்களை அழைத்து வா என்கிறார்.

(இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் — ராமபிரான் அரசன் என்ற முறையில் பிஸினஸ் கம்யூனிட்டி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகும் . அதற்குப்பின்னர் பொது மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதையும் கவனிக்க வேண்டும் ).

இதற்குப்பின்னர் நடந்த சுவையான கதை இதோ:

ததா ப்ரபாதே விமலா க்ருத்வா பெளர்வாஹ்நிகீம் க்ரியான்

ராஜதர்மானவேக்ஷன் வை ப்ராஹ்மணைர்  நைகமைஸ் ஸஹ

அத ராமோ  அப்ரவீத் தத்ர லக்ஷ்மணம் சுபலக்ஷணம்

கார்யார்த்தி நச்ச ஸெளமித்ரே வ்யாஹார்த்தும் த்வமுபக்ரம

ஏவ முக்தஸ்து ஸெளமி த்ரீ :நிர்ஜகாம ந் ருபாலயாத்

அபச் யத் த்வார தேசே வை ச்வானம் தாவதிஸ்திதம்

இவ்வாறு கூறப்பட்ட லட்சுமணன் அரண்மனையிலிருந்து வெளியே சென்று ஒரு நாய் நிற்பதைக் கண்டான் ; புத்திசாலியான அவன், நாயை உள்ளே அழைத்துச் சென்று ராமனிடம் நாயை அறிமுகம் செய்துவைத்தான் .

அதா பச்யத தத்ரஸ்தம் ராமம் ச்வா பின்ன மஸ்தகஹ

ராமஸ்ய வசனம் ச்ருத்வா ஸாரமேயோ அப்ரவீத் இதம்

உடைந்த தலை யுடைய அந்த நாய், ராமரைப் பார்த்தது .

ராமரின் அனுமதி பெற்ற பின்னர் பேசத்  தொடங்கியது.

பிக்ஷூ ஸர்வார்த்த சித்திச்ச பிராஹ்மணா வஸதே வஸத்

தேன தத்தஹ ப்ரஹாரோ மே நிஷ்காரண மாநாகசஹ

ஸர்வார்த்த சித்தி என்ற ஒரு  பிராஹ்மண பிக்ஷூ ,அக்ரஹாரத்தில்

வசித்து வந்தான் . ஒரு பாவமும் அறியாத என்னை அவன் காரணமின்றி அடித்துவிட்டான்

ஆநீ தஸ்து ததஸ்தேன ராமம் த்ருஷ்ட்வா மஹாத்யுதிஹி

த்விஜஹ ஸர்வார்த்த சித்திஸ்து அப்ரவீத் ராம ஸன்னிதெள

பின்னர் அவனால் அழைத்துவரப்பட்ட , ஒளியுடன் கூடிய ஸர்வார்த்த சித்தி என்னும் அந்தணன் ராமன் முன்னிலையில் சொன்னான் :

மயா தத் தஹ ப்ராஹாரோ அயம் க்ரோதே நாவிஷ்ட்ட சேதஸா

பிக்ஷார்த்த மட மானேன காலே விகத பைக்ஷகே

பிக்ஷையின் பொருட்டு அலைந்தும் பிக்ஷை கிடைக்காததால் கோபம் வந்தபோது இந்த அடி என்னால் கொடுக்கப்பட்டது .

ஏதத் ச்ருத்வா து ராமேண கெளலபத்யே அபிசேஷிதஹ

ப்ரய யெள பிராஹ்மணோ ஹ்ருஸ்டோ கஜஸ் கந்தேன சோர்ச்சிதஹ

இதனைக் கேட்ட ராமனால் அவன் மணியக்காரர் பதவியில் அமர்த்தப்பட்டான். உடனே அந்த வேதியனும் மகிச்சியுடன் யானையின் முதுகில் அமர்ந்து சென்றான் ..

 ச்வாப்ய கச்சன் மஹாதேஜாஹா யாத ஏவா கதஸ்ததஹ

வாரணஸ்யாம்  மஹாபாகஹ ப்ராயம் சோபவிவேசஹ 

ஒளிமிகுந்த முகத்துடன் அந்த நாயும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பிச் சென்றது .பின்னர் அந்த மஹிமைவாய்ந்த பிராணி , காசியில் சாகும் வரை உபவாசம் இருந்தது .

XXXXX SUBHAM XXXXXX

TAGS–பிராமணன் , நாய், தலையில் காயம், ராமன், உத்தர காண்டம்

மன்மத லீலை பற்றி அம்பலவாணர் தரும்  முழு வருணனை (Post No.11,703)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,703

Date uploaded in London – –  23 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மன்மதன்- ரதி பற்றி அறியாத இந்துக்கள் எவருமில்லை. சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒரே வருணனைதான் காணப்படுகிறது. அவனிடம் 5 மலர் அம்புகள் உள்ளன. அதை அவன் எய்தால் ஒருவர், காதல் வசப்படுவர். பின்னர் அவர்கள் செய்யும் வேலையை அப்பர் சுவாமிகள் முதல் பலரும் வருணித்துள்ளனர். அப்பர் இந்தக் காதலை சிவன் மீதுள்ள காதலாக வருணிக்கிறார். அவரோ காமனை  எரித்தவர். பற்றுக  பற்றற்றான பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு  என்ற வள்ளுவன் வாக்கினுக்கிணங்க சிவனை நினைத்தவர் மன்மத லீலையில் இருந்து விடுபடுவர்.

வேறு எங்கும் சொல்லாத ஒரு விஷயத்தை அம்பலவாணர் கற்பனை செய்து சொல்லுவது நன்கு ரசிக்கத்தக்கது. அதாவது ஒவ்வொரு மலரும் காதல் வயப்பட்டோரின் உடலில், மனதில் என்ன செய்யும் என்பது கவிஞரின் புது கற்பனை.

Xxxxx

காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது

அஷ்டாங்க மைத்துனம்

ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்

சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச 

——விருத்த வசிஷ்டர் 

பொருள்:-

ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முது வசிட்டன் சொல்லுகிறான். 

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:. இதுதான் மன்மத லீலை.

அப்பர் தேவாரம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258 

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்..

Xxxxxxxxxxxx

தமிழ் நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கிய எம். கே  தியாகராஜ பாகவதர் பாட்டு

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

திரைப்படம் : ஹரிதாஸ்

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1944

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு

என்மதி மயங்கினேன் நான்

என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

xxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 90.

காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்

வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி

     மனதிலா சையையெ ழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;

நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்

     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனைவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்தனே – தலைவனே!, அருமை …….. தேவனே!, வனசம்

செழுஞ்சூதமுடன் அசோகம், தளவம், மலர்நீலம் இவை ஐந்துமே மாரவேள்

கணைகள் ஆம் – தாமரைவளமிகுந்த மாஅசோகுமுல்லைமலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும், இவை

செயும் குணம் – இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், முளரி மனதில்

ஆசையை எழுப்பும் – தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும்,

வினவில் ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும் – வினவுமிடத்துச்

சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோகம் மிகத் துயர்செயும் – அசோக மலர் மிகவும்

துன்பத்தைத் கொடுக்கும், குளிர் முல்லை வீழ்த்திடும் – குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும், நீலம் உயிர் போக்கிவிடும் – நீலமலர் உயிரை ஒழிக்கும், மேவும் இவை செயும் அவத்தை – பொருந்தும் இவை உண்டாக்கும்

நிலைகளாவன : நினைவில் அதுவே நாக்கம் – எண்ணத்தில் அதுவே

கருதுதல், வேறு ஒன்றில் ஆசை அறல் – மற்றொன்றில் ஆசை நீங்கல்,

நெட்டுயிர்ப்பொடு பிதற்றல் – பெருமூச்சுடன் பிதற்றுதல்நெஞ்சம் திடுக்கிடுதல்- உள்ளம் திடுக்கிடல், அனம் வெறுத்திடல் – உணவில் வெறுப்புகாய்ச்சல் -உடல் வெதும்புதல், நேர்தல் – மெலிதல்மௌனம் புரிகுதல் – பேசாதிருத்தல்,அனைய உயிர் உண்டு இல்லை என்னல் – ஆசையுற்ற உயிர் உண்டோ

இல்லையோ என்னும் நிலையடைதல், ஈரைந்தும் ஆம் – (ஆகிய இவை)

பத்தும் ஆகும்.

xxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண்  91. காமன் துணைப்பொருள்கள்

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) எளியோர்க்கு எலாம் அமுதமே – ஆற்றல் அற்றவர்கள்

எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை …… தேவனே!, அஞ்சுகணை

மார வேட்கு – ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, வெம் சிலை செழுங்

கழை – கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும், நாரி கருவண்டு இனம்

– அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்). மேல் விடும் கணைகள் அலர்

ஆம் – (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும், தேர் வீசிடும்

தென்றல் – தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்)பரிகள் பைங்கிள்ளையே

– குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்). வேழம் கெடாத இருள் ஆம் –

யானை அழியாத இருளாகும். பெருஞ்சேனை வஞ்சியர் – மிகுபடை பெண்கள்

(ஆவர்), உடைவாள் கைதை – உடைவாள் தாழை மடல் (ஆகும்), முரசம்

நெடிய வண்மைபெறு கடல் ஆம் – போர் முரசு நீண்ட கொடைத்தன்மை

பொருந்திய கடலாகும், பதாகை மகரம் – கொடி மகர மீன் ஆகும், காகளம்

வரு கோகிலம் – சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும், பெரும்

போர்க்களம் மனதே – பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும்,

பாடல் சஞ்சரிக இசை – பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும், கவிகை

குமுதம் நேயன் – குடை சந்திரன் (ஆவான்); மனைவி சார் இரதியே ஆம் –

காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள், மகுடம் தறுகண் மடமாதர்

இளமுலை ஆம் – அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்

முடி ஆகும், தவறாது இருக்கும் இடம் அல்குல் ஆம் – எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும், என்பர் – என்று அறிஞர் கூறுவர்.

Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha மன்மதன் …

https://tamilandvedas.com › tamil-hin…

2 Nov 2022 — Hinduism is the only religion in the world that showed sex is holy and necessary. They included in the four values of life Dharma, Artha, KAMA …

Tags-மன்மதன், ரதி, லீலை, அம்பலவாணர், சதகம், ஐந்து மலர் அம்பு

பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா? (Post No.11,702)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,702

Date uploaded in London –  23 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரத மர்மம்

பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா?

ச.நாகராஜன் 

பாண்டவர் ஐவர் திரௌபதி ஒருத்தியை மணம் புரிந்தது சரியா?

காலம் காலமாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு மஹாபாரதத்திலேயே பதில் உள்ளது.

மஹாபாரத கதாபாத்திரங்களுக்கும் இந்த சந்தேகம் வர அது கேட்கப்பட்டது; உரியவரால் உரிய பதில் அளிக்கப்பட்டது.

வேதமே அனைத்து தர்மங்களுக்கும் ஆதாரம்.

“வேதத்தில் அன்னையைத் தெய்வமாகக் கொள், தந்தையை தெய்வமாகக் கொள்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே தாயும் தந்தையும் எதைச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டுமென்பது பெறப்படுகிறது.

ஆனால் அதே வேதத்தில் இதற்கு முரணான ஒன்றும் காணப்படுகிறது.

“அயுக்தமாக – அதாவது யுக்திக்குப் பொருந்தாத – ஒன்றைப் பெரியோர் சொன்னால் அது பெரியோர் வாக்கியமாயினும் , குரு வாக்கியமாக இருந்தாலும் அதை அங்கீகரிக்கக் கூடாது” என்று இப்படி வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி இரு வகையான அறிவுரைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போல உள்ளவை கூறப்பட்டுள்ளனவே என்ற சந்தேகம் யாருக்கும் எழலாம்.

ஆனால் சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள், சாஸ்திரங்களை முற்றிலுமாகப் படித்து உணர்ந்தவர்கள் இதை முரண்பாடான வாக்கியங்களாகக் கருதவில்லை.

யுக்திக்குப் பொருத்தமில்லாத ஒன்றை குரு  சொன்னாலும் அதைக் கேட்கும் அவசியம் இல்லை என்பது யாருக்குப் பொருத்தமானது?

குரு சொல்வதை அப்படியே கேட்டுக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது யாருக்குப் பொருந்தும்?

குரு சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற வாக்கியம் குருவையே அண்டி அவருடனேயே வசிக்கும் பிரம்மசாரிகளுக்கே பெரிதும் பொருந்தும்.

குரு வாக்கியமும் தள்ளத் தக்கதே என்ற வாக்கியம் பிரம்மசாரி அல்லாத இதர ஆச்ரமங்களில் உள்ளவர்களுக்கே பொருந்தும்.

இதற்கு ஆதாரமாக உள்ள  மனு வாக்கியம் இதோ:

“அக்நியாதானம், பூமியில் சயனம், பிக்ஷாடனம், குரு சொல்வதைச் செய்தல் ஆகிய இவைகளை உபநயனமான குருகுலவாசம் செய்யும் பிரம்மசாரியானவன், அவன் குருகுலவாசம் முடியும் வரையில் செய்து தீர வேண்டும்.”

இது அதிகாரி நிர்ணயத்தின் கீழ் வந்திருப்பதால் குரு சொல்வதைச் செய்தே ஆக வேண்டும் என்று ஏற்படுகிறது.

இந்த குருத்வம் மூவகையாகச் சொல்லப்படுகிறது.

,மாதா, பிதா, குரு ஆகிய இம்மூவர்களுமே குரு என நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு வேளை தந்தை இறந்து போனால் அந்த குருத்வமும் தாயிடமே வந்து சேரும்.

அதே போல ஒரு ஆசார்யர் தன் சீடர்களை யாரிடம் ஒப்புவித்திருக்கிறாரோ அவரும் குருவே தான்.

முதலில் பாண்டு மஹராஜன் குந்தியிடம் பாண்டவர்கள் ஐவரையும் ஒப்புவித்தான். துரதிர்ஷ்டவசமாக மாண்டு போனான்.

பின்னர் ஆசாரியர் துரோணர் வந்தார். அவரும் பாண்டவர் ஐவரையும் குந்தியிடமே ஒப்புவித்தார்.

ஆக இப்படி பாண்டவர்களை நோக்கும் போது குந்தி தேவியின் குருத்வம்  மூன்று வகையாலும் நிரம்பி உள்ளது.

அவளுக்கு மூன்று வகை குருத்வ அதிகாரம் ஏற்பட்டுள்ளபடியால், குந்தியின் வார்த்தையைத் தட்டவே  முடியாது என்பது பெறப்படுகிறது.

ஆதிபர்வத்தில் 12வது உபபர்வமாக அமைவது ஸ்வயம்வர பர்வம்.

அர்ஜுனன் வில்லை வளைத்து லக்ஷியத்தை நோக்கி அடித்து பந்தயத்தில் வென்றவுடன் திரௌபதி அவனுக்கு உரியவளாகி விட்டாள்.

அன்னையிடம் தாங்கள் வென்றதைச் சொன்ன போது, குந்திதேவி, “ஐவரும் புஜியுங்கள்” என்று கூறினாள்.

ஆகவே ஐவரும் திரௌபதியை மணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனால் துருபதனோ இதை ஆக்ஷேபிக்கிறான்.

யுதிஷ்டிரர் தனது தாயின் சொல்லையே கேட்பேன் என்ற திடத்துடன் இருந்தார்.

ஜடிலை, ஸப்த ரிஷிகளிடம் இருந்ததையும் அவர் சொல்கிறார்.

அப்போது வியாஸர் அங்கு வருகிறார். நளாயினியே குந்தி தேவி என்ற ரகசியத்தை அவர் கூறி அருள்கிறார்.

சங்கரர், நளாயினிக்கு அவள் ஐந்து முறை கேட்டதால் ஐந்து கணவரை வரமாக அளித்தார்.

இப்படி விவரமாக வியாஸர் கூறியதைக் கேட்ட துருபதன் திரௌபதியை பாண்டவர் ஐவருக்கும் மணம் முடித்துத் தர சம்மதித்தான்.

பாண்டவர் வரிசைப்படி கிருஷ்ணையை (திரௌபதியை) மணம் செய்து கொண்டனர்.

திரௌபதியை பந்தயத்தில் ஜெயித்து வந்த போது, ‘ஐவரும் புசியுங்கள்’ என்று தான் சொன்ன வாக்கியம் நடக்காமல் போய்விடக் கூடாது என்ற கவலையுடன் இருந்த குந்தி தேவி கூறினாள் :

“தர்மசாரியாகிய யுதிஷ்டிரர் சொல்லுவது உசிதமே. நான் அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ, எனும் பயம் எனக்கு மிகவும் உள்ளது. இந்த அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ”

இப்படி தன் தாயான குந்தி தேவி வருத்தப்படுவதைக் கேட்டுப் பொறுக்காத தர்மர், ஐவர் ஒருத்தியை மணம் புரியக்கூடாது என்பது சரியே என்றாலும் கூட, பிதா, மாதா, குரு ஆகிய மூவரின் குருத்துவமும் ஒருங்கே கொண்ட தன் தாயான குந்தியின் வார்த்தையின் படி நடக்காமல் போனால் அதுவே மஹாபாபம் என்பதை உணர்ந்து ஐவரும் ஒருத்தியைக் கல்யாணம் செய்வதை ஏற்றுக் கொள்ளத் துணிந்தார்.

துருபதன் கூறுகிறான்” “ ஓ, குருநந்தனரே, ஒருவனுக்குப் பல மனைவி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருத்திக்குப் பல கணவன்மார்கள் விதிக்கப்பட்டதாக ஓரிடத்திலும் காணப்படவில்லையே”

“ஓ, கௌந்தேயரே! உலகத்திற்கும் வேதத்திற்கும் எதிராக உள்ள அதர்மத்தைத் தர்மம் போலச் செய்வது சரியல்ல. உமக்கேன் இப்படி புத்தி போகிறது?” என்று இப்படி துருபதன் தர்மரை நோக்கிச் சொல்ல,

அவர் பதில் கூறுகிறார்:-

“ஓ! மஹாராஜனே! தர்மம் மிக்க சூக்ஷ்மமாய் உள்ளது. இதன் கதியை எம்மால் அறிய இயலவில்லை. முன்னோர்கள் சென்ற வழியை அநுசரிக்கின்றோம்.

என் வாக்கு அந்ருதத்தில்  செல்வதில்லை. மனம் அதர்மத்தில் செல்லாது. இவ்விஷயத்தில் என் மனம் செல்லுகின்றபடியால் இது எந்த வகையிலும் அதர்மமாகாது.”

முன்னோர் வழியையே பின்பற்றுவேன் என்பதனால் ஶ்ரீ ராமர் எவ்வளவு பாபமாயினும் பிரம்மசாரியானவன் குரு சொன்னபடி நடப்பதே தர்மம் என வாழ்ந்து காட்டியதைச் சுட்டிக் காட்டுகிறார். தாடகையை பெண் என்ற போதும் கூட குரு வாக்கியத்தை மேற்கொண்டு வதம் செய்தார் ஶ்ரீராமர்.

“குருவின் வாக்கியமே தர்மம் என தர்ம தத்துவம் உணர்ந்த பெரியோர் சொல்லுகின்றனர். மூன்று வகையாலும் குருவாயுள்ள எனது தாயே எமக்குப் பரம குரு” என்கிறார் தர்மர்.

இதுவே தர்ம ரஹஸ்யம்.

இதைக் கேட்ட வியாஸர், “இதுவே விஹித தர்மமாம். யாதொரு காரணத்தினால் இதுவே சனாதனமோ, தர்ம புத்திரர் எப்படிச் சொல்கின்றாரோ அப்படியே தர்மம் உள்ளது. இதில் சந்தேகமில்லை.”

என்று உறுதிபடக் கூறுகிறார்.

இப்படிப்பட்ட இதிஹாஸ நிகழ்ச்சிகளினாலேயே, முரண்பாடு உள்ளது போலத் தோன்றும் நிகழ்வுகளில், உள்ளே புதைந்திருக்கும் தர்ம ரகசியங்களை அறிய முடிகிறது.

இதையே முன்னோர் விளக்கமாக இப்படிக் கூறியுள்ளனர்:

“இதிஹாஸ புராணங்களால் வேதத்தின் அர்த்தம் விளங்கச் செய்யப்பட்டுள்ளது”.

இனி, ஐவருடன் சேர்ந்து வாழ திரௌபதி பல நிபந்தனைகளை விதித்தாள். இதனால் கதையில் பல நிகழ்வுகள் ஏற்பட்டன. அதை மஹாபாரதத்தில் படித்து பிரமிக்கலாம்.

இனி விதண்டாவாதிகளுக்கு ஒரே பதில் தான்:

“ஐவர் ஒருத்தியை மணந்த போது நாங்கள் விதண்டாவாதிகள் ஐவரும் ஒருத்தியை மணக்கப்போகிறோம். இதில் என்ன தப்பு?” என்று கேட்டால் பதில் இது தான்: “ நீங்கள் ஐவரும் தர்மர், பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவன் போன்றவர்களைப் போன்ற வீரமும் இதர குணாதிசயங்களுக் கொண்டவர்கள் என்றால், நீங்கள் மணக்கத் துடிக்கும் பெண்ணும் யாக அக்கினியில் திரௌபதியைப் போல நெருப்பிலே உதித்தவள் என்றால், உங்கள் ஐவரின் அன்னை, அதற்குச் சம்மதித்தால் அப்படியே செய்யலாம்” என்பதே.

கிரிமினலான புத்தி தரும் விதண்டாவாதம் எப்போதும் தோற்கும்! தர்மமே வெல்லும்.

***

tags- திரவுபதி , பஞ்சபாண்டவர்