Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பஞ்சாங்க ரகசியங்கள் – 4
kattukutty
ஷடசீதி
ஷடசீதி, விஷ்ணு பதி , விஷு- என்றால் என்ன ??
நாம் பார்க்கும் பஞ்சாங்கத்தில், உதாரணமாக ஆனி மாதத்தை எடுத்துக் கொள்வோமே….ஆனி 1 ம் தேதி ஷட சீதி எனப் போட்டிருக்கும்
(பார்க்க சார்வரி வருட பாம்பு பஞ்சாங்கம் ஆனி மாதம் (15-07-2020) ஒன்றாம் தேதி)
அப்படி என்றால் என்ன ??? சிவனுக்கு “ஷடாங்கன்”என்று பெயர். ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும்.
அதாவது அன்று சிவனையும் பாரவதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும்
விக்ஷ்ணுபதி
ஒவ்வொரு வருஷம் வரும் வைகாசி, கார்த்திகை, மாசி மாத முதல் தேதியில் விஷ்ணு பதி புண்ய காலம் என்று போட்டிருக்கும். அன்று விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் சேர்த்து வணங்கி வேண்டினால், மிக மிக புண்ணியமாம். ஏகாதசி விரதம் இருந்த புண்ணியமாம். கோ பூஜை செய்த விசேஷம்
விஷூபுண்யகாலம்
ஓவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதம் முதல் தேதி விஷு புண்ணிய காலம் என போட்டிருக்கும்.
மிக விசேஷமாக கொண்டாடுவது சித்திரை அதி காலை மூடிய கண்ணுடன் வந்து “கண்ணாடி மூலமாக” தெய்வத்தையும், பணம், வெள்ளரி பழம், ஆரஞ்சு, வாழை, பறங்கிக்காய் மற்றும் தேங்காய் காய்கறிகள் எல்லாவற்றையும் பார்ப்பார்கள். பார்த்து பெரியோர்களை வணங்கி பணம் பெறுவது வழக்கம். இதற்கு “விஷூக்கனி நோட்டம்”என்பார்கள். மற்ற ஆடி ஐப்பசி, மாதம் தெய்வதரிசனம் செய்வார்கள்.
தை மாதம் முதல்நாள் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசிப்பார்கள்;
இந்த மூன்று புண்ணிய காலங்களும் ஒவ்வொரு மாதமும் காலை 1.30 முதல் 10 மணி வரை மட்டுமே.
ரஜஸ்வலைநாள்
பெண்களுக்குப் போல நதிகளுக்கும் “வருடத்திற்கு மூன்று” நாட்கள் விலக்கு உண்டாம்.
அது ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் மூன்று நாட்களாம். அந்த மூன்று நாட்களில் யாரும் நதிகளில் குளிப்பதில்லை ,
பூஜை, திதி செய்வதற்கும் நீர் எடுப்பதில்லை. எல்லா நதிகளுக்கும் இந்த தீட்டு உண்டு,
ஆனால் பிரும்மபுத்ரா நதிக்கும் கங்கைக்கும் மட்டும் தீட்டு கிடையாது. உதாரணம்- பாம்பு பஞ்சாங்கம் சார்வரி வருடம் ஆடி மாதம் வியாழக்கிழமை 1 ம்தேதி, (16-07-2020)பார்க்கவும், ரஜஸ் வலை நாள் என்று போட்டிருக்கும்
கர்ண வேதை
சனி, செவ்வாய் கிரகங்கள் நின்ற நட்சத்திரங்களுக்கு 2, 15, 16, உள்ள நட்சத்திரங்கள் கர்ண வேதை எனப்படும். இந்த நாட்களில் காது குத்தக் கூடாது. அந்தக் காலத்தில் காது குத்தும் பழக்கம் இருந்தது.
சிறந்த முறையில் கல்வி பயில காது குத்துதல் மிக மிக அவசியம். உதாரணம் தற்சமயம் வரும் 10 ம், 12ம், வகுப்புப் பெண்களே முதலிடம் வருகிறார்கள். இப்போதாவது புரிகிறதா இரகசியம், நீங்கள் சொல்லலாம் அவர்கள் அழகுக்காக தோடு போட்டுக் கொள்வதாக.
கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள். அங்கே ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, பிறந்த 28 ம் நாள் காதை குத்தி விடுவார்கள்
அமிர்தகடிகை (உத்திரகாலாம்ருதம்)
ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரம் வருகிறது. வியாதி வந்தவர்கள் மருந்து சாப்பிடவென்றே சில நேரம் உண்டு. அந்த நேரம் பார்த்து மருந்து உண்டு பூரண குணமடைந்து நீண்ட நாள் வாழ்ந்தார்கள் அந்த நல்ல நேரம் தான் இது. எல்லாம் நாழிகையில் இருக்கும். இதை சூரியோதயத்திலிருந்து கணக்கிட வேண்டும். (ஒரு நாழிகை எனபது 24 நிமிடம் )
இஷ்டி(குமார சாமியம்)
இஷ்டி என்றால் யாகம் எனப் பொருள். இது அமாவாசை அல்லது பவர்ணமி கழிந்த இறுதிப் பகுதி அதாவது 4 வது பாகம் ஆகும். இது பிரதமை முதல் மூன்று பாகத்தைச் சேர்த்து ஹோமம் செய்யச் சிறந்த நேரம். சிறந்த பலனும் கிடைக்கும்!
IT is evident from the above that Brahmins did not dominate or monopolise
The education scene. The main beneficiaries were the Sudras.
The reports and the statements attached to them drawn up by the collectors under
instruction from the Governor are comprehensive, and also reveal qualitative aspects.
They cover the qualification of the teachers, how and how much they were paid, how the
poor students managed, the subjects covered , the number and types of books taught, etc. It has to be remembered that at that time people mostly followed their traditional
occupations, which they freely learnt at home (much as the apprentices did in England).
They did not have to pay for learning the trade or craft which was the means of livelihood.
Thus the nature of even indigenous schooling was academic, and did not affect their
professions. Only the Brahmins went on to study their religious literature because
they earned their bread thereby.
Why did this system disappear?
The British altered the general economic and financial arrangements drastically. The
village communities lost their financial independence due to centralisation. They lost
their cohesiveness and organic nature. They were unable to maintain the schools.
The economy and along with it the old professions declined, and could no more provide
sustenance. The Indian schools were left to die.
At the same time, the schools introduced by the British were unaffordable for most.
Gandhiji pointed this out in his 1931 address.
” The village schools were not good enough for the British administrator, so he came out
with his programme. Every school must have so much paraphernalia, building, and so forth.
Well, there were no such schools at all. There are statistics left by a British administrator,
which show that, in places where they have carried out a survey, ancient schools have
gone by the board, because there was no recognition….and the schools established after
the European pattern were too expensive for the people.
Too expensive for the people! That is why large sections of people (including Brahmins)
could not afford formal education in the schools run by the government. To this day, the
schools we have established after the European pattern remain expensive!
There are many qualitative aspects of the indigenous schools and interesting information
that the reports bring out. We may see them separately. In the meantime every educated
Indian ought to study these reports to know the truth first hand, and become free from the
falsehoods that have been dished out to us in our system, by the politicians, and through
the media.
Many Brahmins themselves have developed a defensive complex- a guilty conscience-
as if their forefathers had done something wrong by denying education to the other
communities. Dharampal’s book contains all the original reports which are full of actual
statistics. And they show that Brahmins did not control or dominate or monopolise
education, and that Sudras derived the maximum benefit under the indigenous
system. Brahmins mainly concentrated on religious education. General education was open
to all, and was supported by common village funds and charity, as we will see.
Indians in general were neither uneducated nor illiterate as the politicians and false
historians have been claiming. Indians should study this material in the original and
really understand things as they were. Only then can we call the bluff of the propagandist
முற்காலத்தில் கம்மியர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு காரை போட்டுக் கொள்ளக் கூடாது, நன்மை தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதக் கூடாது, வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு போட்டுக் கொள்ள கூடாது என்ற கடுமையான விதிகள் இருந்தன.
ஆனால் இந்த அநியாயத்தைப் பொறுக்காத கோனேர் மெய்கொண்டான் என்ற சோழன் இவற்றை நீக்கினான்.
நீக்கியதோடு மட்டுமல்லாமல் சாசனமாகப் பொறித்தான்.
கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் இந்த சாசனம் இருக்கிறது.
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ கோனேரின் மெய்கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளற்கு கரு-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி பேரிகை உள்ளிட்டவை கொட்டுவித்துக் கொள்ளவும் தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் சொன்னோம். இப்படி இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.
இது தான் சாஸனம்.
S.I.I. V. III. P.I.P. 47 கோயமுத்தூருக்கு அடுத்த பேரூரிலும் இந்த சாஸனம் இருக்கிறது.
இந்தச் சமபவத்தைப் பெருமையாக கொங்கு மண்டல சதகம் தனது 90வது பாடலில் கூறுகிறது.
பாடல் இதோ:
இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக் கொள்ள விரண்டுசங்கு
பொருள் : குடியிருக்கும் வீட்டுக்குக் காரை போட்டுக் கொள்ளவும், நன்மை மற்றும் தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதவும், வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு அணிந்து செல்லவும் இராஜ கட்டளை பெற்ற கம்மாளர் வாழ்வதும் கொங்கு மண்டலமே.
TAGS — கம்மியர், சாசனம், கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவில்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெரும்பாலான தமிழ் மக்கள் இரண்டு பழமொழிகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவர்; என்ன செய்தாலும் கஷ்டம் நீங்கவில்லை என்பதைக் குறிக்க ,
‘காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை’ ;
‘ராமேஸ்வரம் போயும் சனீஸ்வரன் விடவில்லை’ –
என்று முனகுவர். இவை ஆழமான பொருள் உடைய பழமொழிகள்.
முதலில் ஒரு திருத்தம் ; சனீ’ஸ்வரன்’ என்று அவருக்கு ஈ’ஸ்வரன்’ பட்டம் கிடையாது ; சனை: +சரன் = மெதுவாக செல்பவன் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவார்கள். சூரியனை பூமி சுற்றுவதற்கு 365 + கால் நாட்கள் ஆகும். ஆனால் சனிக் கிரகம் சூரியனைச் சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகும். ஜோதிட சாஸ்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் கிரகங்களில் மிகவும் ‘மந்த கதி’ உடையது சனிக் கிரகம் . ஆதி காலத்திலேயே இந்துக்களுக்கு வானியல் (astronomy) அத்துபடி ; ஆகையால் இப்படிப் பெயரிட்டனர்.
விதிகளில் மூன்று வகையான விதிகள் உண்டு. அவற்றில் ஒன்றை எல்லோரும் அனுபவித்தே தீர வேண்டும்; அதை ‘பிராரப்த கர்மா’ என்பர். ஆனால் கடவுளைக் கும்பிடுவோருக்கு அதை அனுபவித்தாலும் அதன் கஷ்ட நஷ்டம் பெரிதாகத் தோன்றாது. பெரிய சன்யாசிகளுக்கு பெரிய நோய்கள் வந்ததை நாம் அறிவோம். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அவர்கள் கஷ்டப்படுவது போலத் தோன்றும்; அவர்களோ பிரம்மானந்தத்தில் திளைத்துக் கொண்டு இருப்பர்.
Long Q in Kasi/ Benares /varanasi
இப்போது பழமொழிகளுக்கு விளக்கம் காண்போம் –
கங்கை நதி புனிதமானதுதான்; அப்படியானால் அதில் வாழும் மீன்கள் எல்லாம் புனிதம் செய்தவையா ? அவை எல்லாம் சுவர்க்கத்துக்குப் போய் விடுமா? இல்லை என்கிறார் ராமகிருஷ்ண பரம ஹம்சர்.
சிலர் என்னதான் செய்தாலும் அவர்களின் கர்ம வினைகள் விடுவதில்லை. யார் அந்த சிலர் ?
ஐந்து வகையான பாவங்களைச் செய்தவர்கள் தீர்த்த யாத்திரை செய்தும் பயனில்லை. எத்தனை புனிதக் கடல்களில், ஆறுகளில் குளித்தாலும் அவர்கள் பாவம் தொலைவதில்லையாம்.
****
“Here’s the smell of blood still. All perfumes of Arabia will not sweeten this little hand.”
Lady Macbeth in Shakespeare’s Macbeth
சேக்ஸ்பியர் எழுதிய புகழ்பெற்ற ‘மாக்பெத்’ (Macbeth) நாடகத்தில் ஒரு மேற்கோள் வருகிறது ; திருமதி மாக்பெத் , டங்கன் (Duncan) என்னும் மன்னனையும் பலரையும் கொன்ற பின்னர் அவள் கையில் ரத்தக் கரை படிந்துள்ளது ; அவள் உறக்கமின்றி கையில் ஒரு மெழுகுவர்த்தியுடன் அலையும் பொது சொல்லும் வாசகம் –
“இன்னும் என் கைகளில் ரத்த நாற்றம் வீசுகிறது. அரேபியா நாட்டிலிருந்து வரும் அத்தனை வாசனைத் திரவத்தை ஊற்றினாலும் இது நல்ல மணமாக மாறாது” – என்று சொல்லி வருத்தப்படுகிறாள்.
இது போல கீழ்கண்ட ஐந்து வகையான பாவங்களைச் செய்தோர் கங்கை, காவிரியில் மூழ்கும்போது வருத்தப்பட்டு பாவ மன்னிப்பு கேட்டாலும், போகாதாம். யார் அந்த ஐவர்?
“1.வாழ்நாளில் பாவங்களை மட்டுமே செய்தவர்கள், 2.கடவுள் நம்பிக்கையற்றோர் , 3.சந்தேகப் பேர்வழிகள், 4.கடவுளை எதிர்த்துப் பேசும் நாஸ்தீக வாதிகள் , 5.எதையும் தவறான கண்ணோட்டத்தில் காண்போர்- ஆகிய இந்த ஐந்து வகையினரும் எந்தத் தீர்த்தத்தில் போய் நீராடினாலும் பலனில்லை!” — வாயு புராணம் 77-127
இது வாயு புராணம் சொல்லும் விஷயம் .
புரியவில்லையா?
சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
முழுக்க முழுக்க பாவங்களை மட்டும் செய்துவிட்டு, கங்கையில் போய் குளித்தால் பாவம் போய்விடும் என்று நினைப்பது மூடத்தனம் ; பாடங்களையே படிக்காமல் பரீட்சை எழுதப் போகும் நாளன்று பிள்ளையார் கோவிலைச் சுற்றப் போனால், அவனுடைய நண்பர்களே, ‘சாகப்போகும் நேரத்தில் மட்டும் சங்கர சங்கரா என்று சொல்கிறாயே’ என்று கிண்டல் செய்வார்கள்.
அது சரி, மேலேயுள்ள ஐந்தில் நம்பிக்கையற்றோர், நாஸ்தீக வாதிகள் என்று இரண்டு வகை உள்ளதே ; இரண்டும் வேறு வேறா ? ஆமாம் வேறுதான்; கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவன் (Atheist) நாஸ்தீகன் ; அதிலும்கூட புத்தரைப் போல கடவுள் பற்றி ஒன்றுமே சொல்லாமல் ‘கமுக்க’மாக இருக்கும் பேர்வழிகளை ஆக்நேய வாதிகள் (Agnostic) என்பர். தன் மீதே எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் மற்றொரு வகை. ‘நான் உருப்படவே மாட்டேன்’ என்று நினைப்போர். அர்ஜுனன் இப்படி நினைத்தபோது, ‘சம்சய ஆத்மா விநஸ்யதி’ – என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் எச்சரிக்கிறார். அதாவது ‘சந்தேகப் பேர்வழிகள் அழிந்தே போவார்கள்’.
கடைசி வகைக்கு வருவோம். எதையும் தவறாககே காண்போர். இது துரியோதனன் வகை. தர்மனையும் துர்யோதனனையும் அனுப்பி, தம்பிகளா! ஊரை ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு நல்லவர், கெட்டவர் லிஸ்ட் (List) டைக் கொடுங்கள் என்று கிருஷ்ணர் கேட்டார். “இந்த ஊரில் ஒரு பயல் கூட நல்லவன் இல்லை. I am sorry; no list is available ‘ஐ ஆம் ஸாரி ; நோ லிஸ்ட் ஐஸ் அவைலபிள்’ என்று சொல்லிவிட்டான் துரியோதனன்” (ஒரு ஆளும் நல்லவன் இல்லை. எல்லோரும் கெட்டவர் ; ஆகையால் பட்டியலுக்கு அவசியமில்லை ).
தர்மன் என்னும் யுதிஷ்டிரன் சொன்னான்; “கண்ணா, நான் எப்படி லிஸ்ட் (How can I give you a List?) கொடுக்க முடியும்? எல்லோரும் நல்லவர்கள். எதற்கப்பா List லிஸ்ட்? யாரிடம் நல்ல குணம் இல்லை? உபநிஷத்துகள் சொல்லுவது போல ‘எல்லோரும் அம்ருதஸ்ய புத்ராஹா’ (அமிர்தம் உண்ட தெய்வீக மனிதர்கள்) என்று சொல்லிவிட்டான். நம் நண்பர்களினிடையேயும் அரசியலிலும் பார்க்கிறோம். எதைச் சொன்னாலும் ‘அதை எதிர்ப்பதே எம் தொழில்’ என்போர். இது போல தெய்வீக காரியங்களிலும் துசுக்கு சொல்லுவோர் உண்டு. அதை ஐந்தாவது வகை எனலாம்..
தீர்த்த யாத்திரை செய்யாமலேயே பலன் பெறும் ஒரு வகை பற்றியும் ஒரு செய்தி உள்ளது. காசி காண்டம் என்னும் சங்கிரசம்ஹிதை பகுதியில் ஒரு செய்யுள் சொல்கிறது —
நிக்ருஹீதேந்திரியக்ராமோ யத்ரைவ வஸதே நரஹ
தஸ்ய தத்ர குருக்ஷேத்ரம் நைமிஷம் புஷ்கரம் ததா
இதன் பொருள்–
“ஐம்புலன்களையும் அடக்கியவனுக்கு அவன் வீடுதான் குருக்ஷேத்ரம், நைமிசாரண்யம் , புஷ்கரம் போன்ற புனித தீர்த்தங்கள் ஆகும்”.
சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வாசகமும் உண்டு:–
“ஸ ஸ்நாதோ யோ தமஸ்நாதஹ ஸ்ரத்தா சுத்த மனோமலஹ” – என்று.
இதன் பொருள் —
“யார் நன்றாகக் குளித்தவன் என்றால், புலனடக்கம் என்னும் தீர்த்தத்தில் குளித்து, மன அழுக்கை , நம்பிக்கையால் கழுவுபவனே நன்றாகக் குளித்தவன் ஆவான்”.
அதாவது புலன் அடக்கம் நதி; கடவுள் நம்பிக்கை நல்ல ‘சோப்பு’ (Soap).
மன அழுக்கு நம் உடலில் இருக்கும் அழுக்கு . அதைத் தேய்த்துக் கழுவுக ..
*******
பாரதியார் இன்னும் அழகாகச் சொல்லி விட்டார் –
“துணி வெளுக்க மண்ணுண்டு – எங்கள் முத்து
மாரியம்மா , எங்கள் முத்து மாரி .
தோல் வெளுக்கச் சாம்பருண்டு -எங்கள் முத்து
மாரியம்மா , எங்கள் முத்து மாரி
மணி வெளுக்கச் சாணையுண்டு -எங்கள் முத்து
மாரியம்மா , எங்கள் முத்து மாரி
மனம் வெளுக்க வழியில்லை -எங்கள் முத்து
மாரியம்மா , எங்கள் முத்து மாரி “
என்று பாடிவிட்டு இதனால்தான் உன்னை அடைக்கலம் புகுந்தோம் என்று பாடி முடிக்கிறார் பாரதியார்.
******
அப்பரும் ‘கங்கை ஆடிலென்’…. என்ற தேவார பதிகத்தில் சொல்வார்–
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்குமரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே
–ஐந்தாம் திருமு றை
அதாவது சிவனை மனதில் ஆழமாகப் பதித்து பக்தி செலுத்தாமல்,
மேம்போக்காகப் பலன் கிடைத்தால் கிடைக்கட்டும் என்று அரைகுறை மனதுடன் செல்வோருக்கு தீர்த்த யாத்திரை பலன் தராது.
*******
பட்டினத்தாரும் வியந்து பாடுகிறார்
ஆரூரர் இங்கிருக்க
அவ்வூர்த் திருநாளென்
றூர்கள்தோறும்
உழலுவீர்; — நேரே
உளக்குறிப்பை நாடாத
ஊமர்காள்! நீவீர்
விளக்கிருக்கத் தீத்தேடுவீர்!.
Tags – கங்கை யாடிலென், காசிக்குப் போயும், ராமேஸ்வரம், சனீஸ்வரன், தீர்த்த யாத்திரை
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
என்னை நீ கிழித்தாய் இன்றைக்கு!
நீ என்ன கிழித்தாய் நேற்றைக்கு?
kattukutty
என்னை நீ கிழித்தாய் இன்றைக்கு!
நீ என்ன கிழித்தாய் நேற்றைக்கு?
தினசரி நாட்காட்டியில் நாம் தேதியையும் நல்ல நேரம் கெட்ட நேரம் மட்டும் படித்துவிட்டு இன்று நல்ல நாளா, கரிநாளா,
நான் சட்டை துணி மணி வாங்கலாமா???கடைக்குப் போகலாமா??.?. என்று மட்டுமே பார்த்து கொள்கிறோம்.
இதற்குமேல் இன்று அஷ்டமி, நவமி ,பிரதமை, இல்லாமல் இருக்கறதா என்றும் சிலர் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் தியாஜ் என்று போட்டிருக்கிறதே, அஹஸ் என்று போட்டிருக்கிறதே திரு தினஸ் ப்ருக், அவமா ஏன்
போட்டிருக்கிறதே என்று கவலைப்படுவதில்லை.
(இதையெல்லாம் எனது “பஞ்சாங்க ரகசியங்கள்” (Parts 1, 2, 3, 4, 5 )என்ற கட்டுரையில் பார்த்துக் கொள்ளவும்)
மேலும் நான் செய்யப்போகும் வேலைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை….. அமிர்த யோகம், சித்த யோகம் என்றெல்லாம் பார்த்து விட்டுத்தான் பால் கார்டு வாங்கவே போகிறோம் அல்லது வேலை செய்கிறோம்.
மரண யோகம், கரி நாள் என்றவுடன் பயந்து நடுநடுங்கி தினசரி செய்ய வேண்டிய
வேலையெல்லாம் செய்யாமல் விட்டு விடுகிறோம்.
ஒன்றே ஒன்றை மட்டும் பார்த்து சந்தோஷப்படுகிறோம். இன்றைய ராசி பலன் மேஷம்- வெற்றி, ரிஷபம்-சந்தோஷம், மிதுனம்-பண வரவு …. அர்த்தம் புரியாமலே அந்த தேதியைக் கிழித்து விடுகிறோம்.
அது கேட்கிறது ஏ மனிதா! நீ என்னைக் கிழித்தாய் இன்றைக்கு ??? ஆனால் நீ என்ன (வேலை செய்து) கிழித்தாய் நேற்றைக்கு??? 24 மணி நேரத்தை வீணடித்து விட்டு, எனக்கு நேரம் சரியில்லை, காலம் சரியில்லை, நாட்காட்டியில் போட்டிருக்கிறதே இன்று மரண யோகம் என்று??? நான் என்ன செய்ய???? என்று புலம்பும் மனிதா,
அவைகள் என்னென்ன எதற்காகப் போட்டிருக்கிறார்கள் என்று நீ நினைத்துப் பார்த்தாயா, தேரிந்து கொண்டாயா??
சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு நாட்காட்டி பக்கத்தில் என்னன்ன போட்டிருக்கிறது என்றால் ஏராளம் ஏராளம்…… ஒவ்வொன்றாகப் பார்ப்போம் முக்கிய முதல் விஷயம் நல்ல நாள் பார்ப்பது எப்படி??? என்பதை மட்டும் இன்று பார்ப்போம்
1)செவ்வாய், சனி, கிழமைகள் இருக்கக்கூடாது. 2)அஷ்டமி, நவமி பிரதமை திதிகள் ,கரிநாள் கூடாது. 3)சிலர் பரணி, கார்த்திகை நட்சத்திரங்களையும் தவிர்ப்பார்கள் 4)மரண யோகம் என்று இருந்தால் தவிர்க்கவும் (சித்த யோகம், அமிர்த யோகம் மிக நல்லவை) 5)ராகு காலம், யமகண்டம் நேரங்களை அட்டவணையில் பார்த்து ஒதுக்கவும் 6)ஹோரை அட்டவணையைப் பார்க்கவும்
நல்ல ஹோரைகள்—சந்திரன், புதன், குரு, சுக்கிரன் கூடாத ஹோரைகள்—சூரியன், செவ்வாய், சனி 7)நாட்காட்டியில் அன்றைய நட்சத்திரத்தைப் பார்த்து சந்திராஷ்டம நாளை தவிர்க்கவும் (சில நாட்காட்டியில் “சந்திராஷ்டம தினம்” என்றே போட்டிருப்பார்கள்).
நான் குறிப்பிட்ட ஹோரை, ராகு கால, யம கண்ட அட்டவணையும் காலண்டரின் பின்புறமே போட்டிருப்பார்கள் அவ்வளவு தான் நல்ல நாள் குறித்தாகி விட்டாயிற்று!!!
இது பார்ப்பது மிக மிக முக்கிய காரியங்களுக்கே…… உதாரணமாக இடம் வாங்க அட்வான்ஸ் கொடுக்க,புது கட்டில் ,TV,
பணம் துணி, உடைகள் வைக்க பீரோ வாங்க புது வாகனம் வாங்க……….. சும்மா பால் கார்டு வாங்க எலக்ட்ரிக் பில் பணம் கட்ட கை பேசி ரீ சார்ஜ் செய்ய, பேங்க் பாஸ் புக் அப்டேட் செய்ய உபயோகப்படுத்த வேண்டாம்.
வெற்றிகரமான வாழ்க்கை உங்களுக்கே !!!
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர் – திருக்குறள் எண் 485 அதிகாரம் : காலமறிதல்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures
BOOKS INDIANS SHOULD READ- 20
Chapter 8 Part 1
THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-3 The Beautiful Tree
Nursed by wrong information
It is the general belief among [English] educated Indians that our educational system is
a gift from the British colonial masters. Most people have been led to believe that Indians
were largely uneducated and illiterate before they came, and that whatever prevailed in the
name of education was monopolised by the Brahmins, and that the other communities
were left out or lagged behind. They believe that especially the Sudras and those
regarded below them ( the present day Dalits) were denied education, and consequently
opportunities of advancement. This has been the main theme of our politicians since
Independence, and this belief lies at all efforts at so called educational reform. Yet how many of them have really studied “history” beyond what is provided in the
text-books controlled by the state, and the political discourse? How many of them have
taken the pain and made the effort to verify facts from original sources?
Gandhiji’s struggle Those who have knowledge of our struggle for Independence and of Gandhiji’s part in it
would be aware that education was an important part of Gandhiji’s constructive
programme. He had his own insights and developed his own approach, culminating
in “Nai Talim”. But as one who knew the roots of India’s life and civilisation, he knew that
India had its own system of education which served it well for centuries. Speaking at
Chatham House in London on 20 October, 1931, Gandhiji said:
“I say without fear of my figures being challenged successfully, that today India
is more illiterate that it was fifty or a hundred years ago, and so is Burma,
because the British administrators, when they came to India, instead of taking
hold of things as they were, began to root them out. They scratched the soil
and began to look at the root and left the root like that, and the beautiful
tree perished.”
Where is the proof?
Gandhiji’s claim ran counter to the popular perception of the day, (and it does to this day )
and was contested by imperial loyalists who demanded “precise references to the printed
documents.” Gandhiji was imprisoned on his return from London, and our freedom
struggle entered a critical phase which denied Gandhiji the time to take up such research
work. Unfortunately, none of his followers did any study or research in the subject.
The British rulers, for their own purposes, had caused some surveys/studies to be made
on the state of education in the areas ruled by them, but not all of this material was printed
and published. Some Indian writers had made use of some of the available material in their
books, but this material seems to have been ignored by the academic community, for
whatever reason. In any case, no one had accessed the original documents and made a
proper case to support Gandhi’s stand.
It was thus left to Dharampal to visit the archives and gather the original material in
mid-1960s. Based on them, he published his book “The Beautiful Tree” in 1971. This title
is derived from Gandhiji’s phrase. Its subtitle ran:
“Indigenous Indian Education in the Eighteenth Century.”
British Surveys of Indigenous Education
Three motives prompted the British to undertake such studies/surveys.
Administrative : to understand the indigenous systems/manners/methods so that they
could entrench themselves the better, and also obtain a veneer of legitimacy
2. Enlightenment: influenced by the Scottish Enlightenment, of men like Adam Ferguson and
A.Maconochie, who were interested in learning about the arts and sciences of the people,
so that the knowledge would not be lost even if the societies declined due to colonial
conquest.
3. Projection and propagation of Christianity so that” Indians would become Christians…
without knowing it”.
Archival material Whatever the motive, the material gathered adds up to a solid testimony to the extent,
effectiveness and practical worth of the system of education that prevailed in India.
The material gathered can be classified as:
Survey of Indigenous Education in Madras Presidency: 1822-1825. The Madras
Presidency then covered a huge area- the entire present Tamil Nadu, parts of Andhra, and beyond up to Ganjam, parts of Karnataka, and Malabar. It thus contained geographical and linguistic variety
Report of Fra Paolina Da Bartolomeo of Austria “On Education of Children in India”
1776 to 1779 (published in Rome,1796)
– Alexander Walker on Indian Education. Literature c.1820
-W.Adam’s Report “State of Education in Bengal: 1835-38.(which then included parts
of Bihar)
-G.W.Leitner’s “History of Education in the Punjab since Annexation and in 1882.
Important Conclusions Dharampal has included all this archival material in his book, in full, or in extracts. The
material covers different parts of the country, with much linguistic variety. Based on this,
he draws conclusions which are striking.
1. Contrary to the popular view, education was not confined to the Brahmins or the
twice born. “It was the groups termed Soodras and the castes considered
below them who predominated in the thousands of the then still-existing
schools in practically each of these areas.”[This is especially so in the Tamil
speaking areas]
2. This educational network was supported and sustained by sophisticated fiscal
arrangements of the pre-British Indian polity. Substantial proportion of the revenues had
long been assigned for public purposes. It is the collapse of this system through
centralisation of revenue that led to the collapse of education, along with social life
and economy.
3. This system of education was more advanced than what prevailed in
England at the relevant time. Indian system covered more children of the
common people than the British at that time. Some of the features of the Indian
system were in fact taken to and applied in Britain!
இறைவன் சிலரை தன் புகழ் பாடவே அனைத்தையும் அருளி அதைத் திரும்பப் பெற்று மகிழ்வான் என்பதை அருணகிரிநாதர் தெளிவாகக் கூறியுள்ளார்:
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல் போய்அற மெய்ப்புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே (கந்தர் அநுபூதி)
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் வேலவன் தந்தது என்றால் அவர் வழியில் அவர் தந்த திருப்புகழைப் பாடுவது ஒன்றையே தன் பணீயாய்க் கொண்டவர் மதுரையில் வாழ்ந்த திருப்புகழ் தியாகராஜன் அவர்கள்.
எங்கள் குடும்ப நண்பர். எங்கள் தந்தையார் தினமணி திரு வெ;சந்தானம் மதுரையில் தினமணியின் பொறுப்பாசிரியராக ஐம்பதுகளில் மதுரை வந்தது முதலாக நெருங்கிப் பழகிய குடும்பங்களுள் திரு திருப்புகழ் தியாகராஜன் அவர்களின் குடும்பமும் ஒன்று.
பல்லாண்டு கால பழக்கத்தின் அடிப்படையில் அவர் வாழ்க்கை மொத்தத்தையும் ஒரே ஒரு சொல்லில் சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
முருகன் – இது தான் அந்த வார்த்தை.
காலையில் முருக நாமத்துடன் எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து இரவில் முருக நாமத்துடன் உறங்கச் செல்லும் உத்தமர் அவர்.
இடையில் உள்ள நேரத்தில் அலுவலகப் பணியை மதுரை கார்ப்பரேஷனில் சிறப்பாக ஆற்றியதோடு மட்டுமின்றி முருகன் புகழையும் பரப்பிக் கொண்டே இருப்பார்.
இதற்கான சரியான கருவியாக, அமைப்பாக இலங்கியது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தெற்கு ஆடி வீதியில் அமைந்திருக்கும் திருப்புகழ் சபை.
நூற்றுக்கணக்கான பேர்களுக்கு திருப்புகழைச் சொல்லித் தந்து, பாடுவதற்கு களம் அமைத்து அவர்கள் நலமுடன் வளமாக வழி வகுத்தது திருப்புகழ் சபை. திருப்புகழ் சபையின் மூச்சாக்த் திகழ்ந்தார் அவர்.
வெள்ளிக்கிழமை பஜனை என்றால் எந்த வேலையையும் உதறி விட்டு அங்கு அன்பர்கள் ஓடி வருவது வழக்கம்.
“அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்றார் அருணகிரிநாதர்.
இரு தாள் இறைஞ்ச திருப்புகழ் சபையை செவ்வனே நடத்தி வந்த அவர் அறிவால் அறிவதற்கும் வழி வகுத்தார்.
தேன் சொட்டும் திருப்புகழை அவர் நா கொட்டும் மளமளவென்று.
அருணகிரிநாதரின் உள்ளக் கருத்தைத் தெள்ளத் தெளிவாக மடை திறந்த வெள்ளம் போல அனைவரின் உள்ளமும் கவரும் வண்ணம் சொற்பொழிவாற்றுவார்.
மதுரையை மையமாகக் கொண்டு அவர் பல ஊர்களிலும் ஆற்றிய திருப்புகழ் சொற்பொழிவுகள் பலரையும் கவர்ந்தன; திருப்புகழ் மர்மத்தை உணர்த்தின.
பலரது வாழ்க்கையையும் மாற்றி முன்னேற்றத்திற்கு வழி வகுத்தன.
கந்த சஷ்டி விழா என்றால் ஆன்மாவிற்கு முருக நாமமும் பௌதிக உடலுக்கு உகந்த அற்புதமான முருகனின் பிரசாதமும் இணைத்து திருப்புகழ் சபை தரும்.
ஆடி வீதியில் திரு முருக கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவை திரு தியாகராஜன் ஏற்பாடு செய்தார் என்றால் மதுரை மக்களுக்குக் கொண்டாட்டம் தான்!
பல்லாயிரக்கணக்கில் வடக்காடி வீதியும் தெற்காடிவீதியும் நிறைந்து எள் போட்டால் விழ் இடமின்றி நெருக்கமாக மக்கள் அமர்ந்திருப்பர்.
ஆன்மீக பிரச்சாரத்தை அவர் தலை மேல் பொறுப்பாக ஏற்று நடத்திய கால கட்டத்தையும் இங்கு சொல்ல வேண்டும்.
கொளுத்து புராணத்தை; அடி இறை பக்தர்களை என்று தீய சக்திகள் தலைதூக்கி விரித்தாடிய காலம் அது.
எங்கள் தந்தையார் உள்ளிட்டோர் ஆன்மீக காவ்லர்களுக்கு பக்க பலமாக இருந்தனர். தீய சக்திகளை தக்கபடி எதிர் நோக்கி வென்றனர்.
என்று அருணகிரிநாதர் அருளியபடி பழித்தவ்ர் செயலற்றுப் போக இன்றும் திருப்புகழ் சபை மதுரை நகரில் தலைமை பீடமாக நின்று திருப்புகழை ஓதி வருகிறது. இதற்குக் காரணம் திரு திருப்புகழ் தியாகராஜன் என்பதை நினைக்காமல் இருக்க முடியாது.
எளிமையாக வாழ்ந்தவர். பணத்திற்கு மதிப்புக் கொடுத்தவரில்லை.
முருகனையே முதலாகக் கொண்டவர் என்பதோடு மற்றதை எல்லாம் பூஜ்யமாகக் கருதினார்.
அதனால் தான் முருகன் ஒன்றாக தான் முதலில் நின்று அவர் கருதிய பூஜ்யங்களை எல்லாம் , குடும்பம், உறவினர், நண்பர்கள், உலக மக்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றுக்குப் பக்கத்தில் போடப்பட்ட பூஜ்யமாக ஆக்கி பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம். லட்சம் என்று மதிப்பு மிக்கவையாக மாற்றி விட்டான்.
நல்ல நண்பர்கள், திருப்புகழையே உருகிப் பாடும் குடும்பம் என அவர் வாழ்க்கையை அமைத்தது முருகனின் அருளே அன்றி வேறு என்ன?
எங்கள் தந்தையார் எப்படிப்பட்ட முக்கிய வேலையாக இருந்தாலும் சரி, திரு தியாகராஜன் அழைப்பைத் தட்ட மாட்டார். கண்டிப்பாக திருப்புகழ் சபைக் கூட்டங்களில் உரையாற்றுவார். சபைக் கூட்டங்களில் ஆற்றப்பட்ட ஆன்மீக உரைகள் தினமணியில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களைச் சேர்ந்து விடும்!
வெள்ளிக்கிழமை பஜனை என்றால் அனைவரும் அங்கு செல்வோம்.
குடும்ப சம்பந்தமான எந்த விஷயத்தையும் எங்கள் தந்தையாரிடம் அவர் பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததே இல்லை.
அதே போல எங்கள் தந்தையார் எங்களையும் அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்குச் சென்று உரையாடி இரவு நெடுநேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பி வரும் அந்த நாட்கள் மிக்க இனிமையானவை!
“பாடும் பணியே பணீயாய் அருள்வாய்”
என்ற வரத்தை வாங்கி வந்தவர் போலும், அவர்!
திருப்புகழ் குடும்பத்தைச் சேர்ந்த தன் மனைவி, மகன் கிருபாசங்கர், மருமகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தி திருப்புகழின் புகழை வானளாவ இன்றும் ஓங்கி வளர்வதற்கென இறைப்பணியில் ஈடுபடும்படி செய்து விட்டார்.
அன்னாரது நினைனைப் போற்றினாலேயே முருகனின் திருப்புகழ் நமக்கு வந்து சேரும். திருப்புகழ் சேர்வதோடு முருகனின் அருளும் நமக்குக் கிட்டும்.