மன்னர் படுகொலைகள்! எகிப்திய அதிசயங்கள் -20 (Post No.3729)

Picture of Ramesses III with Gods Horus and Seth

Written by London swaminathan

 

Date: 16 March 2017

 

Time uploaded in London:- 10-57 am

 

Post No. 3729

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திய வரலாற்றில் இரண்டு மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எகிப்திய மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் யாரும் வரலாற்றை எழுதவில்லை. அவர்களுக்கு  3000 ஆண்டுகளுக்குப் பின் — மனீதோ என்பவர் எழுதிய வரலாற்றைத் தான் நாம் நம்பவேண்டி இருக்கிறது. அந்த மனீதோவின் புத்தகமும் முழுதாகக் கிடைக்கவில்லை. அவர் சொன்னார் என்று பின்னர் எழுதிய குறிப்புகளில் இருந்தே வரலற்றைப் பிழி ந்து எடுக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் இரண்டு மர்மக் கொலைகள் துப்பறியும் கதைகள் போல இருக்கும்.

 

பழங்கால இந்திய வரலாற்றைத் தவிர வேறு எந்த நாட்டிலும் மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புராண வரலாற்றில் மட்டும் இப்படி மன்னர் படுகொலைகள் கிடையாது. ரோமானிய, மொகலாய வரலாறுகளில் ஒருவரை ஒருவர் கொன்று அரசாட்சியைப் பிடிப்பது சர்வ சாதாரணமாக நிகழ்ந்தது. (பழங்கால இந்தியாவில் கிரேக்கர்கள் புகுந்த காலம் முதல் படுகொலைகள் நிகழ்ந்தன)

 

மூன்றாம் ராம்செஸ் (RAMESSES III )

 

மூன்றாம் ராமசெஸ் Ramesses III (1183-1154 BCE) (ராமசேஷன் அல்லது ரமேசன்) மன்னர் படுகொலை செய்ப்பட்டிருக்கலாம் என்பது எகிப்தியவியல் (Egyptologists) அறிஞர்களின் கருத்து.

 

மூன்றாம் ராமசெஸ் புதிய ராஜ்யத்தின் கடைசி அரசர்; எகிப்தின் எல்லைகளையும், கோவில்களையும் பாதுகாத்த பெருமையுடையவர். ஆனால் இவர் அகால மரணம் அடைந்தவர் என்பது பின்னால் வந்த குறிப்புகளில் இருந்து தெரிகிறது. சதிகாரர்கள் விசாரிக்கப்பட்டது  தண்டிக்கப்பட்டது பற்றிய ஒரு பேப்பர் கிடைத்துள்ளது.

 

( Papyrus பபைரி என்ற புல்லில் எகிப்தியர் எழுதியதால் பிற்கலத்தில் PAPER பேப்பர் என்ற ஆங்கிலச் சொல் வந்தது)

 

அரசனுக்கு பல மனைவியர் உண்டு. ஆயினும் இந்தியா போல ஒருவள்தான பட்டத்து மஹிஷி (மஹாராணி). இது பிடிக்காத ஒரு அந்தப் புரத்து அழகி (குட்டி ராணி) அரண்மனை அதிகாரிகளுடன் சேர்ந்து  மன்னனுக்கு எதிராக சதி செய்தாள். மன்னரின் ஒரு மகனைப் பதவியில் அமர்த்துவது அவர்களுடைய திட்டம். அவர், சதிகாரர்களின் கைப்பாவையாகச் செயல்படுவார் என்று நினைத்தனர்.

 

டூரின் பபைரஸ் (Turin Papyrus) குறிப்புகளில் 40 சதிகாரர் பெயர்கள் இருக்கின்றன. உயர் பதவி வகித்த ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். மேற்கு தீப்ஸ் (West Thebes)  நகரில் அரண்மனையில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அவருக்குப் பின்னர் நாலாவது ராமசெஸ் பதவி ஏற்றார். சதிகாரர் கள் 40 பேரும் கொல்லப்பட்டனர். இதில் என்ன வேடிக்கை என்றால் பிடிபட்ட ஆட்களின் பெயர்கள் எல்லாம் கெட்ட பெயர்களாக மாற்றப் பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக நல்ல சாமி, மாடசாமி என்று இருவர் பிடிபட்டால் அவர்கள் பெயரை எழுதும்போது கெட்ட சாமி, மூட சாமி அல்லது மடச் சாமி பிடிபட்டான் என்று எழுதிவைத்துள்ளனர். இது அவர்களுடைய கோபத்தின் வெளிப்பாடா அல்லது அப்படி எழுதும் ஒரு மரபு இருந்ததா என்பதை நாம் அறியோம்.

 

ஒருவன் பெயர் மெரி ரே (ரே என்னும் கடவுளுக்குப் பிரியமானவன்; நாம் ராமப் ப்ரியா என்று பெயர் வைப்பது போல). ஆனால் அதை அவர்கள் மெசூத்ரே (ரேயால் வெறுக்கப்படுபவன்) என்று மாற்றி எழுதியுள்ளனர். பபகேனமுன் (அமன் என்னும் கடவுளின் தாசன்) என்பதை பபகாமன் (குருட்டு தாசன்) என்று எழுதிவைத்துள்ளனர். இப்படி சதிகாரகளின் பெயர்கள் எல்லாவற்றையும் திரித்து எழுதி இருக்கின்றனர்.

 

“அந்தப்புர அழகிகளுடனும் தியா (Tiye) என்ற ராணியுடனும் சேர்ந்து சதி செய்த குற்றத்திற்காக பெரும் எதிரி பபகாமன் கொண்டுவரப்பட்டான். எஜமானருக்கு எதிராக ‘மக்களே ஒன்று சேருங்கள், விரோதமாகப் போங்கள்’ என்று அவன் குரல் கொடுத்தான். ஆகையால் அவனை விசாரணை மன்றத்திலுள்ள நீதிபதிகள் முன் நிறுத்தினர். அவர்கள் அதைத் தீர விசாரித்து அவன் குற்றம் இழைத்ததைக் கண்டுபிடித்தனர். அவனுக்கு அதற்குரிய தண்டனை கிடைத்தது” — என்று தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன.

 

சாக்ரடீஸ் போல அவர்களை விஷம் குடிக்க வைத்தனர் என்று ஊகிக்கப்படுகிறது. அவனுடன் சேர்ந்த உப சதிகாரகளின் மூக்கும் காதும் வெட்டப்பட்டன.

 

சதி பற்றிச் சொல்லும் பேப்பர் குறிப்பு சதி வெற்றி பெற்றதா, அதனால்தான் மன்னன் இறந்தானா என்பதை தெளிவாகச் சொல்லவில்லை.

 

 

உலகின் முதல் ஸ்டிரைக்

 

உலகிலேயே நடந்த முதல் தொழிலாளலர் வேலை நிறுத்தமும் ராமசெஸ்  (கி.மு.. 1184- 1153-க்கு இடைப்பட்ட காலம்)  காலத்தில்தான் நடந்தது. தேரி எல் மெடினா (Deir El Medina) என்ற இடத்தில் தொழிலாளர்கள் ஸ்டிரைக் செய்ததை எழுதி வைத்துள்ளனர்.

Picture of Amenemhet I

அமனெம்ஹேத் Amenemhet (சமணகேது)

 

இதைவிட மர்மமான மரணம் அடைந்தவன் அமனெம்ஹேத் . இவன் 12 ஆவது வம்ச ராஜா.  கி.மு.1985 முதல் 1985 வரை ஆண்டவன். இவனும் அந்தப்புர அழகிகளின் சதியால் உயிரிழந்தான். அவனுக்குப் பின்னர் அவன் மகன் சம்வர ச்ரேஷ்டன் (Senwosret) பதவிக்கு வந்தான். முதலில் 11ஆவது வம்ச ஆட்சியில் பெரிய அதிகாரியாக (Vizier) இருந்தவன். இவன் வேலை பார்த்த ராஜா மண்டூகதேவன் (Montuhotep IV) எப்படி மரணம் அடைந்தான், பின்னர் இப்படி இந்த அதிகாரி பதவி ஏற்றான் என்பதெல்லாம் வரலா ற்றின் தீர்க்கப்படாத புதிர்கள்!

 

இவனுடைய கதை நெபெர்தி (நவ ரதி )ஆருடம் (Nefert Prophecies) என்ற இலக்கியக் குறிப்பிலிருந்து கிடைக்கிறது. நாலாவது வம்ச ராஜாவான ஸ்நோப்ரு (Snofru)    காலத்தில் இந்த ஜோஸியம் சொல்லப்பட்டதாக பிற்கலத்திலெழுதப்பட்ட குறிப்பு இது

 

நமது இந்துப் புராணங்கள் எல்லாவற்றிலும் வம்சாவளி என்ற பகுதியில் முடிந்த, இறந்து போன மன்னர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் ஆளப் போகிறார்கள் என்று வருங்கால ஆரூடம் போல எழுதியிருப்பர். அதே பாணியில் நடந்து போன நிகழ்ச்சிகளை  இனி நடக்கப் போவதாக எழுதப்பட்ட ஜோதிடப் புத்தகம் நவரதி ஆரூடம்.

 

இதில் சமண கேது பற்றி எழுதி இருக்கும் பகுதி சுவையானது:

தெற்கிலிருந்து வருவான் ஒரு மன்னன்

அவன் பெயர் அமன என்ற ஒலியில் அமையும்

 

அவன் கத்திக்கு இரையாவர் ஆசிய மக்கள்

அவன் எழுப்பும் தீயில் விழுவர் லிபிய மக்கள்

கலகக்காரர்கள் கோபம் அடைவர்

அவர்கள் மன்னனுக்கு அச்சத்தை உண்டாக்குவர்

 

ஒழுங்கு அதன் இடத்தைப் பிடிக்கும்

சட்டச் சீர்குலைவு பற ந்தோடிப் போகும்.

 

நம்ம ஊர் குடுகுடுப்பைக்காரன் ஆரூட பாணியில் எழுதப்பட்ட இவ்வசகம் நாத்ரதாமஸ் ஆரூடம் போன்றது. யார் எப்படி வேண்டுமானாலும் ஜவ்வாக இழுத்து மனம்போனபோக்கில் அர்த்தம் சொல்லலாம்.

 

அமனகேது அந்தப்புர  சதியில் சிக்கியதை வேறு சில எழுத்துகளும் உறுதி செய்கின்றன அதன் பெயர் அமனகேது கட்டளைகள் (Instructions of Amenemhet). அந்தக் குறிப்பில் சொல்லப்படிருப்பதாவது:

 

இரவுச் சாப்பாடு முடிந்தது; இருள் சூழ்ந்தது

நான் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தேன்

படு களைப்பு எனக்கு; படுக்கையில் விழுந்தேன்;

என் இதயம், றக்கத்தின் பாதையில் அடி வைத்தது

 

திடீரென்று இரைச்சல்; விழித்தேன் சண்டையில்

மெய்க்காவலன் தாக்குதல் அதுவே

என் கைகளில் விரைவில் ஆயுதம் வந்திருந்தால்

கோழைகளை ஓட வைத்திருப்பேன்

அந்தோ! அவ்விரவில் வலுவானவர் இலையே

தனிமையில் சண்டை செய்யும் எவருமிலர்

பாதுகாப்பற்றவன் வெற்றி அடைவது எங்கனம்?

 

 

இதற்கு முன் அந்த மன்னன், தனது மகனுக்கு நல்லாட்சி நடத்துவது எப்படி என்ற பகுதிகள் உள்ளன. வால்மீகி ராமாயண த்தில் நல்லாட்சி பற்றி வசிட்டர் சொன்ன அருளுரைகள் போன்றது அப்பகுதி.

 

இதெல்லாம் நடந்து 1600 ஆண்டுகளுக்குப்  பின்னர் எகிப்திய வரலாற்றை முதல் முதலில் எழுதிய மனீதோவும் இந்த மன்னன் 38 ஆண்டுகள் ஆண்டான் என்றும் , அவன் தனது சொந்த அலிகளால் கொல்லப்பட்டான் என்றும் எழுதி வைத்துள்ளார். இந்தியாவிலும் எகிப்திலும் அந்தப் அந்தப்புரத்தில் அலிகளையும் குள்ளர்களையும், கூனர்களையும் வேலைக்கு அமர்த்துவர். அப்படிப்பட்ட கூனி ஒருவள்தான் ராமாயணக் கதயையே உருவாக்கினாள்:அவள் பேச்சைக்கேட்டு மயங்கிப் போனாள் கைகேயி!

 

–சுபம்–

ஹிட்லரிடமிருந்து அகதிகள் தப்பியது எப்படி? (Post No.3728)

Written by London swaminathan

 

Date: 16 March 2017

 

Time uploaded in London:- 7-59 am

 

Post No. 3728

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பிரான்ஸ் நாட்டை ஹிட்லரின் நாஜி (Nazi) படைகள் ஆக்ரமித்திருந்த காலத்தில் (Occupied France) அகதிகள் பலவழிகளில் தப்பித்துச் சென்றனர். இதோ ஒரு சுவையான உண்மைக் கதை.

 

ஊர் ஊராக வண்டிகளில் காட்டு மிருகங்களைக் கொண்டுசென்று காட்டும் குட்டி மிருகக் காட்சி சாலைகள் (Menagerie)  அக்காலத்தில் இருந்தன. அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று கூடாரம் அடித்து, கூண்டுகளில் உள்ள திரைகளை அகற்றுவர். ஊர் மக்களும் சிறுவர், சிறுமியருடன் வந்து டிக்கெட் வாங்கி அவைகளைப் பார்ப்பார்கள்.

இப்படிப்பட்ட குட்டி மிருகக் காட்சிசாலை ஒரு சின்ன ஊருக்கு வந்து முகாம் அடித்தது. ஒரு அகதி, அந்த காட்சி சாலையின் முதலாளியிடம் சென்று “ஐயா என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். நான் ஒரு அகதி. நாட்டை விட்டு ஓட விரும்புகிறேன்; எனக்கு ஒரு வேலை கொடுத்தீர்களானல் உஙளுடனே வந்து எப்படியாவது தப்பித்துப் போகிறேன்”.

முதலாளி சொன்னார்:

“எனக்கும் உன்னைக் காப்பாற்ற ஆசைதான். ஆனால் வேலையாளாகச் சேர்ந்தால் நீ ஜெர்மன் படைகளை ஏமாற்ற முடியாது உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் வேறு ஒரு யோஜனை சொல்கிறேன். என்னிடமிருந்த கொரில்லா குரங்கு ( Gorilla மனிதக் குரங்கு) போன வாரம் இறந்துவிட்டது. அதன் தோலைப் பதப்படுத்தி வைத்திருக்கீறேன். அதற்குள் பஞ்சை அடைத்து அதை பொம்மையாக விற்றுவிட க ஆசை. அது வரைக்கும், நீ அந்தத் தோலைப் போர்த்திக் கொண்டு  குரங்கு போல வா .

 

இந்த யோஜனை அவ்வளவு பிடிக்கவில்லை என்றாலும் அந்த அகதி ஒருவாராக ஒப்புக் கொண்டு கொரில்லா குரங்கின் தோலைப் போர்த்திக் கொண்டு ஊர் ஊராகச் சென்றான். ஒவ்வொரு ஊரிலும் நிஜ குரங்கு போலவே கூண்டுக்குள் ஆட்டம் போட்டான். முதலாளிக்கு நல்ல சந்தோஷம். அததுடன் புலி, சிங்கம், கரடி ஆகிய மிருகங்களின் கூண்டுகளும் இருந்தன.

 

ஒருநாள் கொரில்லா குரங்குக் கூண்டு உள்ள வண்டியில் சிங்கம் உள்ள கூண்டையும் ஏற்றி விட்டார்கள். கொரில்லா வேஷத்தில் இருந்த அகதிக்கு வயிற்றில் புளி கரைத்தது. இரவு நேரத்தில் கூண்டின் கம்பிகள் முறிவது போல சப்தம் கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் கொரில்லா குரங்கன் பார்த்தான். சிங்கம் இவனை நோக்கி வருவது தெரிந்தது. உடனே பயம் கவ்வியது.

“ஐயோ அம்மா, என்னை காப்பாற்றுங்கள்; சிங்கம் என்னைக் கொல்ல வருகிறது. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கதறினான்.

 

“சீ வாயை மூடு; கத்தாதே; நீ ஒரு ஆள்தான் மிருக வடிவில் இருக்கிறாய் என்று நினைத்தாயா? மக்கு!” — என்று சிங்க அகதி கூறியது.

 

கொரில்லா குரங்கனுக்குப் போன மூச்சு திரும்பிவந்தது!

 

ஜெர்மன் சிப்பாய்க்கு யூத ரத்தம்!

 

யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் நாஜிப் படை வீரன் ஒருவனின் உண்மைக் கதை இது.

 

ஒரு நாஜி படை வீரன்  யுத்தத்தில் கடுமையாக காயமடைந்தான். அவனுடன் வந்த ஹிட்லரின் படைவீரர்கள் பின்வாங்கியதால் காயமடைந்த இவன் மட்டும் எதிரிப் படைகளான ஆங்கிலப் படைகளிடம் சிக்கினான். சர்வதேச விதிகளின்படி போர்வீரர்களை மரியாதையுடன் , மனிதபிமானத்துடன் நடத்தவேண்டும் என்பதால் இங்கிலீஷ் (ஆங்கிலேய) டாக்டர்கள் அவனைக் கவனிக்கத் துவங்கினர். அவன் நாஜி படைகளைப் பற்றி ஏராளமான புகார்களைப் பொழிந்து கொண்டிருந்தான். காயங்களில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால் , பாதி பேசிக் கொண்டிருக்கையில், மயக்கம் போட்டுவிட்டான். ஆயினும் ஆங்கிலேய டாக்டர்கள் “கவலைப் படாதே நாங்கள் கவனிபோம்” என்றனர்.

 

மயக்கம் தெளிந்து மகிழ்ச்சியுடன் படுக்கையில் படுத்தான்: ஒரு ஆங்கில டாக்டர் நக்கலாகக் கிண்டல் தொனியில் பகடி செய்தார்: “கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு; உன் உடம்பில் இரண்டு பாட்டில் Bottle) யூதர் ரத்தம் ஏற்றி இருக்கிறோம்!”

நோயாளி: ??????????????

 

–சுபம்–

 

 

 

Get Feng Shui – Vastu Combined Benefits! (Post No.3727)

Written by S NAGARAJAN

 

Date: 16 March 2017

 

Time uploaded in London:-  5-14 am

 

 

Post No.3727

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Self Improvement Series

 

 

Vastu is a living organism. Vastu books of Hinduism explain the secrets about the health of a construction or a building. The preparation of site, commencement of building, layout of building, disposition of rooms in the building, kitchen, worship room, bed room, living room, walking space in rooms, verandahs, Doors and windows, woodwork, well, compound around building, toilet are all very important and one should learn the art of Vastu and build the building according to the rules and guidance given by the sages to get the maximum benefits.

Each direction of the building is governed by planet. Each direction gives certain specific benefits.

Similarly, Feng Shui which originated in China 4000 years ago ensures improved health, better sleep, harmonious family relationship, longevity, active sex life, wealth, fame.

‘Chi’ is the subtle flow of electromagnetic energy which links all things in the universe. Buildings alter the flow of energy. The design and interior decoration of a building should enhance the kind of chi energy so that the occupants enjoy the maximum benefits.

One who follows Feng Shui will maximize his benefits.

Even though hundreds of complicated rules are laid, the basic rules if followed properly assure a trouble free life.

Vastu and Feng Shui accept the fundamental principles.
Some of the important rules are given below.

The Brahma Sthala or the centre point of the building is very important. It should be kept clean.

Chanakya in his,’Arthasastra’ lays down that in the midst of the king’s fort were to be constructed the temples of Siva, Vaisravana, the Asvins, Lakshmi and Madira (all Hindu deities).

Similarly in all the houses and commercial places, the centre place should be vacant and kept clean.

It is preferable if the building faces East or North East.

The building should never face South-East.

The bedroom should be on the South-West.

Kitchen should be preferably on the South-East corner of the building.

Worship room should be in the North-East direction.

The well should be provided on the North-East direction of the plot.

The concept of yin and yang offers a comprehensive way of looking at the world and how it affects you. Feng Shui explains Yin and Yang in detail.

 

Picture of Yin-Yang Symbol

 

The following chart explains Yin and Yang.

YIN :-

Female

Night

Dark

Shadow

Winter

Wet

Soft

Cold

Receptive

Passive

Negative

Earth

Matter

North

Downward,

Inner

Low

Dullness

Backward

Calm

Lonely

Valley

Stillness

Contraction

Below

YANG:-

Male

Day

Light

Sun

Summer

Dry

Hard

Hot

Creative

Active

Positive

Sky

Spirit

South

Upward

Outer

High

Lively

Forward

Noisy

Crowded

Mountain

Motion

Expansion

Above

By understanding and applying Yin and Yang one can ensure harmonious life. 


Vastu and Feng Shui are important for happy living.

***

 

கற்பணம், முசுண்டி, பிண்டிபாலம்- கம்பன் தரும் ஆயுதப் பட்டியல்!! (Post No.3725)

Written by London swaminathan

 

Date: 15 March 2017

 

Time uploaded in London:- 8-39 am

 

Post No. 3725

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

வால்மீகி ராமாயணத்தில் 135-க்கும் மேலான ஆயுதங்களின் பெயர்கள் உள்ளன. இவைகளை ஆங்கிலத்தில் ராமாயணத்தை மொழிபெயர்த்த ஹரிபிரசாத் சாஸ்திரி கடைசியில் பிற்சேர்க்கையாகத் தனியாகக் கொடுத்துள்ளார். இது போல கம்ப ராமாயணத்தில் வரும் ஆயுதப் பட்டியலையும், பிற தமிழ் இலக்கியங்களில் வரும் ஆயுதப் பட்டியலையும் தொகுத்தல் நலம் பயக்கும். ஆயினும் அவைகளின் வடிவங்களையும் முழுச் செயற்பாட் டையும் நாம் அறியோம். கம்போடியா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் உள்ள ராமாயணச் சிற்பங்களைப் பார்த்தாலும் அத்தனை ஆயுதங்களையும் அடையாளம் காண முடியுமா என்பது ஐயப்பாடே!

 

பழங்காலத்தில் போர்த் தொழிலே முக்கியத் தொழிலாக விளங்கியிருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் விவசாயம் முதலிய தொழில்கள் இருந்திருக்க வேண்டும். எகிப்து போன்ற சில இடங்களில் மட்டும் கட்டிடத் தொழில் (பிரமிடு கட்டுதல்) போர்த் தொழிலுக்கு அடுத்தபடியாக இருந்திருக்கலாம். இதற்கு அடுத்த படியாக சமயம் தொடர்பான பணிகள் வந்திருக்கலாம்.

 

கம்ப  ராமாயணத்தில் கம்பன் தரும் படைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஏனெனில் அது அப்போதைய உலக ஜனத்தொகைக்கும் அதிகம்! நிற்க.

 

சுந்தர காண்டத்தில் இரண்டு பாடல்களில், கம்பன் தரும் ஆயுதங்களின் பெயர்களை மட்டும் பார்போம். அவற்றைக் கண்ணால் காண்பது அரிது. அகராதிகளிலும் மேம்போக்காகவே பொருள் தருவர்; ஆகையால் அவற்றின் உருவத்தை அறிதல் அரிதிலும் அரிது. இது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவை. சங்க இலக்கியத்தில் கோட்டைகளின் மதில் சுவரில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றிய செய்திகள் உண்டு.

 

சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,

காலன் வரி வில், பகழி, கற்பணம், முசுண்டி,

கோல், கணையம்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,

வாலம் முதல் ஆயுதம் வலித்தனர் வலத்தார்

 

 

சூலாயுதம் (முத்தலை வேல்), மழு (கோடரி), வாள், வேல், பேரீட்டி (தோமரம்), இருப்புலக்கை, உயிர்களை எடுக்கும் எமன் போன்ற வில்-அம்பு, இரும்பு நெரிஞ்சி முள் (கற்பணம்), முசுண்டி, தடி, வளைதடி (கணையம்), சக்கரம், வச்சிராயுதம் (குலிசம்), உடை வாள், கை வேல், திருகுதடி (பிண்டி பாலம்) முத்லிய ஆயுதங்களை உறுதியாகப் பிடித்திருந்தார்கள்.

இவை எல்லாம் அரக்கர் கைகளில் ஏந்தியிருந்த ஆயுதங்கள்

அடுத்த பாடலில்

 

அங்குசம், நெடுங்கவண் அயில் சிலை வழங்கும்

வெங்குசைய பாச முதல் வெய்ய பயில் கையார்;

செங்குருதி அன்ன செறி குஞ்சியர்; சினத்தோர்;

பங்குனி மலர்ந்து ஒளிர் பலாசவனம் ஒப்பார்

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

அரக்கர்கள் மேலும் அங்குசம் (மாவெட்டி; யானைகளை அடக்கப் பயன்படுத்துவது) நீண்ட கல் எறி கயிறு, நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப்  புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக் கயிறு, முதலான ஆயுதனக்களைக் கைகளில் வைத்திருந்தார்கள். அவர்கள் ரத்தம் போலச் சிவந்த செம்பட்டை முடியினர்; கண்களும் கோபக் கனலை வீசின; அவர்களுடைய தோற்றம் பங்குனி மாதத்தில் மலர்ந்து விளங்கும் கல்யாண முருங்கைமரக் காட்டை ஒத்திருந்தது.

 

கல்யாண முருங்கை மரத்தை பூடியா மானோஸ்பெர்மா Butea monosperma என்ற தாவரவியல் பெயரால் அழைப்பர். அது ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காடு முழுதும் காணப்படும். வசந்த கலத்தில் அது காலை, மாலைச் சூரிய ஒளியில் காடே தீப்பற்றி எரிவதுபோலக் காட்சியை உண்டாக்கும். ஆகையால்  இதைத் தாவரவியல் பிரியர்கள் (Flame of the Forest) காட்டின் தீ என்று அழைப்பர். கம்பன், இதைக் கண்டிருக்க வேண்டும். அரக்கர்களின் தலை செம்பட்டை முடியை அதற்கு ஒப்பிட்டது தாவரவியல் படித்தோருக்கும் பூங்காக்களில் செம் முருங்கை (Butea monosperma) மரங்கள் பூத்துக் குலுங்குவதை ரசிப்போருக்கும் விசேஷ அர்த்தத்தைத் தரும்.

 

வாழ்க கம்பன் ! வளர்க அவன் புகழ்!!

 

 

From my old article: —

 

இலங்காதேவியின் தோற்றம்

 

வேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்

கோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்

போல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்

கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்

 

அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல்,  குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள். 

–Subham–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 35 (Post No.3724)

Written by S NAGARAJAN

 

Date: 15 March 2017

 

Time uploaded in London:-  6-28 am

 

 

Post No.3724

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 35

ச.நாகராஜன்

 

 

114ஆம் வயது – (1953-1954)

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 114. ஷாங்காயை விட்டு மாஸ்டர் ஸு யுன் கிளம்பப் போகிறார் என்பதை அறிந்தவுடன் பிக்ஷுக்களும் சீடர்களும் அன்பர்களும் அவரிடம் வந்து ஒரு வார காலம் சான் தியானம் பற்றிச் சொல்லுமாறு வேண்டினர்.

 

மரகத புத்தர் இருந்த யு ஃபு மடாலயத்தில் ஒரு பெரிய தியான மண்டபம் இருந்தது. மடாலயத் தலைவர் வெய் ஃபாங் தலைமையில் ஒரு பெரிய குழு அவரை வரவேற்கவே அவர்களது வேண்டுகோளை ஏற்று ஸு யுன் தியான வகுப்பை 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி துவக்கினார்.

 

 

அது முடிந்த போது இன்னும் ஒரு வாரம் அதைத் தொடர வேண்டும் என்று அனைவரும் வேண்டினர்.  அந்த வேண்டுகோளை ஏற்று இன்னும் ஒரு வாரம் மாஸ்டர் ஸு யுன் உரை நிகழ்த்தினார்.

 

சரித்திரப் பிரசித்தி பெற்ற் அந்த உரைகள் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு நாளும் அந்த உரையைக் கேட்ட அனைவரும் புளகாங்கிதம் அடைந்தனர்.

 

 

முதல் நாள்

 

தியானம் என்று சம்ஸ்கிருதத்திலும் ஜென் என்று ஜப்பானிய மொழியிலும் கூறப்படும் சான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சான் என்பதில் இருபது வகைகள் உள்ளன என்பதை மஹாப்ரக்ஞான சூத்ரம் விளக்குகிறது. ஆனால் இவற்றில் எந்த ஒன்றும் முடிந்த முடிபல்ல.

 

தியானத்தில் அமரும் போது மார்பை முன்னே தள்ளி இருக்கச் செய்ய வேண்டும். பிராண சக்தியை மேலேயும் கொண்டு போகக் கூடாது. கீழேயும் விடக் கூடாது.  தியானத்தின் முதல் இருக்கையை எண்ணங்கள் எழுவ்துடனான யுத்தம் என்றே சொல்லலாம்.

 

 

இரண்டாம் நாள்

 

சொந்த அனுபவத்தினாலேயே சான் தியானத்தின் பயனை ஒருவர் அறிய முடியும். ஒரு பண்டிதரின் தேர்வை சான் தியானத்திற்கான நேர எல்லையுடன் ஒப்பிடலாம். தேர்வுக்கு ஒருவர் அமர்கிறார். அந்தத் தேர்வுக்கென ஒரு நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.

 

நமக்குள்ள (தேர்வுக்கான) பொருள் சான் தியானம் என்பது. ஆகவே தான் இது சான் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதை பிரக்ஞா மண்டப்ம் என்றும் கூறலாம். நம்முடைய திரிக்கப்பட்ட எண்ணங்களாலேயே நாம்  நாமாக இருக்கிறோம். அந்த எண்ணங்கள் இல்லாத நிலையில் புத்தர் புத்தராக இருக்கிறார். இப்போது சான் தியானம் என்ன என்பது தெரிந்து விட்டதால் அதை ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தால் வேறெதுவும் வெல்ல முடியாத ஒன்றை அறிவோம்.

 

மூன்றாம் நாள்

 

நம்முடைய சுமையை இறக்கி வைத்து விடுவது ஒரு வழி. நம்முடைய வீடு அருகிலேயே இருக்கிறது.

இப்போது எண்ணிய முந்தைய எண்ணம் எழாதிருந்தால் நாம் மனம் மட்டுமே. அடுத்து வரும் எண்ணம் எழாதிருந்தால் நாம் புத்தரே.

 

 

நான்காம் நாள்

 

தவறான எண்ணம், அறியாமை, பொறாமை ஆகியவற்றை      அகற்றுங்கள் உங்கள் மனதை அலை பாய விடாதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்..

 

ஐந்தாம் நாள்

முதலாவதாக நாம் நம்மைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக பொறுத்துக் கொள்ளும் மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும்… உங்களது ‘நம்பும் மனம்’ வ்லிவுடையாத இருந்தால், உங்களது பொறுத்துக் கொள்ளும் மனம் வந்த வழியே திருப்பிச் செல்லாமல் இருந்தால் நீங்கள் இந்த உடலுடன் இருக்கும் போதே புத்த நிலையை அடைய முடியும்.

 

 

ஆறாம் நாள்

 

நமது ஆசைகளாலேயே நாம் இந்த பிறவிக் கடலில் இருக்கிறோம். 84000 விதமான ஆசைகள் உள்ளன. இதனாலேயே நாம் புத்த நிலைமையை அடைய முடிவதில்லை. நாம் புத்தரையும் போதிசத்வரையும் போல மற்றவருக்கு சேவை செய்யத் தொடங்கினால்  போதி விதைகளை எங்கும் விதைத்து அதற்குரிய மிக அருமையான பழங்களைப் பலனாகப் பெற முடியும்.

 

 

ஏழாம் நாள்

 

சான் தியானம் என்பது சிறுபிள்ளை விளையாட்டு இல்லை. ஆகவே நீங்கள் மிகுந்த முயற்சி எடுத்து உங்களைப் பண்படுத்துவதில் வெற்றி பெற வேண்டும்.

இப்படியாக் அருமையான உரைகளை அனைவரும் கேட்டு மகிழ்ந்து பயனடைந்தனர்.

ஏழு நாட்களில் அவர் ஆற்றிய மிக நீண்ட உரைகளில் ஓரிரு முத்துக்களைச் சுருக்கமாக மேலே பார்த்தோம்.

 

 

இதன் பின்னர் மாஸ்டர் ஸு யுன் பல்வேறு ஆலயங்களுக்கும் அழைப்பின் பேரில் சென்றார்.

நான்காம் மாதம் தலை நகரிலிருந்து அழைப்பு வந்தது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் அங்கு வந்து குழுமினர்.

 

 

அங்கு சீன் புத்த சங்கம் தொடங்கியது.

பின்னர் அவர் பல இடங்களுக்கும் சென்று இறுதியில் யுன் ஜு சென்றார். ஒன்பதாம் மாதத்தில் காண்டனிலிருந்து ப்ல பிக்ஷுணிகள் அவரைப் பார்க்க அங்கு வந்தனர். சீடர்களான அவர்கள் மடாலயம் வந்த போது சிதிலமடைந்து இருந்த சுவர்களையே கண்டனர்.

 

 

மாஸ்டர் எங்கே என்ற அவர்கள் ஒரு பிக்ஷுவைக் கேட்க அவர் ஒரு பசுந் தொழுவத்தைச் சுட்டிக் காட்டினார்.

அந்த சிறிய பசுந் தொழுவத்தில் ஒரு ஓரத்தில் தியான நிலையில் அவர் அமர்ந்திருந்தார்.

 

மெதுவாக கண்களைத் திறந்த அவர் வந்திருந்தோரைப் பார்த்து “நீங்கள் என்னைப் பார்க்க ஏன்  இவ்வளவு சிரமப்பட வேண்டும்?” என்றார்.

 

அவரைத் தரிசிக்க வந்ததாக அவர்கள் தங்கள் நோக்கத்தை  கூறிய போது ஸு யுன், “ நான் இங்கு வந்த போது முதலில் நான்கு துறவிகளே இருந்தனர் ஆனால் ஒரு மாதத்திலேயே ஐம்பது பேர் இங்கு வந்து விட்டனர். இந்த தொழுவத்தைத் தவிர சில சிதிலமான சுவர்களே இங்கு உள்ளன. ஆனால் என்னைப் பார்க்க வந்ததாக நீங்கள் சொல்வதால் இங்கு இருக்குமிடத்தில் சில நாட்கள் தங்குங்கள்.” என்றார்.

 

 

பசுந்தொழுவத்தை ஸு யுன் பெரிதும் விரும்பினார். ஆனால் நாள் ஆக ஆக இன்னும் பலர் அங்கு வந்தனர். உபாசகர் ஜியான் யு ஜியா நிதி உதவி அளித்தார். அங்கு நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்ய ஸு யுன் விழைந்தார். பிரார்த்தனை மண்டபமும் செப்பம் செய்யப்பட்டது. குளிர் காலம் வந்தது. மாஸ்டரை நான் ஹுவா மடாலயம் அழைத்தது.

 

இப்படியாக 114ஆம் ஆண்டு முடிந்தது.

-தொடரும்

 

சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723)

Picture of a Traditional Tamil Wedding

 

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 20-55

 

Post No. 3723

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.

 

1.1மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.

 

இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.

 

2.பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.

இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ரா மா யணம், சிலப்பதிகாரம்).

 

3.ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டத்து. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாவிடில் இரண்டாவது மனைவிக்கு அனுமதி உண்டு.

இந்துக்களின் மனு தர்ம சாத்திரமும் இதையே செப்பும். அரசர்கள் மட்டும் அருகாமை நாட்டு உறவு நீடிக்கவும், படைபல உதவிக்கும் என பல மனைவியரை மணந்தனர். ஆனால் ராமன் போன்ற மன்னர்கள் “இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று சொன்னார்கள்.

 

4.முதலில் சம்மதம், பின்னர் கல்யாணம் என்ற நடைமுறை இருந்தது.

பெண்ணுக்கு பணம் (சீதனம்) கொடுக்க வேண்டும்.

 

நிச்சயதார்த்தம் பின்னர் திருமணம் என்பது இந்துக்களின் வழக்கம்.

சங்கத் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

5.திருமண ஒப்பந்தம் எழுத்தில் இருந்தது. ஆனால் வாய்மூலம் சொன்னாலும் அதுவும் ஏற்கப்பட்டது. சுமேரியாவில் திருமணத்தைப் பற்றி சட்ட விதிகள் இருந்தன.

 

இந்துக்களும் நிச்சயதார்த்த்தின்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் உண்டு. இரு தரப்பினரும் அதை கைமாற்றிக்கொள்வர். சில நேரங்களில் இந்தப் பெண், இந்தப் பையனுக்குத்தான் என்று சொல்லிவிட்டால், வார்த்தை மாறாமல் அதை மதித்து நடந்தனர். இந்துக்களின் நீதி நூல்களில் திருமண விதிகள் உள்ளன.

 

6.மெசபொடோமியாவில் இ ருதரப்பாரும் பெண்ணுக்குக் கொடுத்த சீதனம் பற்றி எழுதி வைத்தனர். பெண்ணின் சொத்து குழந்தைகளையே சாரும். குழந்தை இல்லாவிடில் கணவருக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கான  சீதனத்தை குழந்தை பெறும்வரை தவனை முறையில் செலுத்தினர்..

இந்துமத்தில் இது பற்றி விதி இல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைப் போடுவர். ஆடி, கிருத்திகை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, தலை தீபாவளி என்று ஏதேனும் ஒரு சாக்கில் கொடுப்பர். அதை எல்லாம் மொத்த சீதனக் கணக்கில் சேர்ப்பர். இடை க்  காலத்தில் ஆண்களுக்கு கிராக்கி அதிகம் இருந்ததால் ஆண்களுக்கு   வரதட்சிணைப் பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பழங்காலத்தில் இவ்வாறு இல்லை.

 

6.சுமேரிய, பபிலோனிய திருமணங்கள், 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் என்னென்ன சடங்குகள் நடந்தன என்ற விவரம் இல்லை.

 

இந்துக்களின் திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது. இப்பொழுது அது இரண்டு நாட்களாகச் சுருங்கிவிட்டது. இந்துக்களின் 5 நாள் சடங்குகளும் நீதி நூல்களில் உள்ளன.

 

 

7.பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை, மாப்பிள்ளை அகற்றுவது முக்கிய சடங்காக இருந்தது.

 

இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே  – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் உள்ளது. தமிழ்நாடு ஏனைய எல்லா மாநிலங்களையும் விட வெப்பம் அதிகமான இடம் என்பதால் காலப்போக்கில் இந்த வழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். மாப்பிள்ளையும் வேட்டி துண்டுடந்தான் நிற்பார்; வடக்கில் குளிர் என்பதால் ஆணும் கூட உடம்பு முழுதும் மூடியிருப்பார்.

8.பெண்களின் தோழிகள் அந்தப் பெண் கன்னிப் பெண் தான் என்பதை உறுதி செய்யும் வழக்கம் இருந்தது.

 

இந்துக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்தது. முதல் இரவுக்குப் பின்னர் அந்த வேஷ்டி முதலிய துணிகளை நாவிதனுக்குத் தானம் செய்துவிடுவர். அந்தக் காலத்தில் அவர்கள்தான் மருத்துவச்சி; மகப்பேறு வேலைகளைக் கவனித்து வந்தனர். ஆகையால் ஏதேனும் இசகு பிசகு இருந்தால் அவர்கள் மூலம்  கிசு ,கிசு ஊர் முழுதும் பரவிவிடும்.

 

  1. திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி என்று நூஜி (Nuzi) முதலிய இடங்களில் உள்ள களிமண் (Clay tablets) கல்வெட்டுகள்/ பலகைகள் சொல்கின்றன.

 

இந்துக்களின் வேத மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன. காளிதாசனும் ரகு வம்ச மன்னர்களின் 14 குண நலனகளை அடுக்குகையில் சந்ததி விருத்திக்காகவே ரகுவம்ச மன்னர்கள் திருமணம் செய்தனர் (செக்ஸ் இன்பத்துக்காக அல்ல) என்று அடிக்கோடிட்டுக் காட்டுவான்.

 

10.குழந்தையின்மை/ மலட்டுத் தனமை என்பது அக்காலத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது ஹமுராபி (Hammurabi Code) மன்னனின் சட்ட ஷரத்துகளில் ஒரு மணப்பெண், ஒரு அடிமைப் பெண்ணையும் கண்வனுக்கு அளிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

 

இது இந்துமதத்தில் இல்லை. ஆனால் மன்னர்களுக்குக் குழந்தை இல்லையென்றால் உறவினர் மூலம் குழந்தை பெற அனுமதி உண்டு. அம்பா, அம்பாலிகா மூலமே வியாசர், திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறக்க உதவினார்.

 

11.கனவனுடனோ, அல்லது கணவனும் மனைவியும் பெண்ணின் தந்தை வீட்டிலோ வசிக்கும் இரண்டு வகையான ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை இல்லாமல் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால் மாமனார் தனது மகன்களில் வேறு ஒருவனுக்குக் கல்யாணம் செய்யும் ஏற்பாடு இருந்ததை நூஜி களிமண் படிவங்கள் காட்டுகின்றன.

 

அர்ஹல்பா (Arhalba) என்ற மன்னன் தான் இறந்தால் தனது சகோதரனைத் தவிர வேறு எவரையும் தன் மனைவி மணக்கக் கூடாது என்று உயில் எழுதிவைத்ததை உகாரித் (Ugari) களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

 

12.ஹிட்டைட் (Hittite) களிமண் பலகைகள் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே கூடி வாழ்ந்தால், அதை சட்டபூர்வமாக கருதலாம் என்று சொல்கின்றன.

இது இந்துமத்தில் இல்லை

 

14.விவாக ரத்து பற்றி, சொத்து பிரிவினை பற்றி சட்ட விதிகள் இருந்தன. பெண்களுக்கு எதிராகவே பல சட்ட விதிகள் இருந்தன.

இந்து சட்ட நூல்கள் (மனு முதலான நீதி நூல்கள்) விவாக ரத்து, சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றி விரிவாகச் சொல்கின்றன. இது விஷயத்தில் வேற்றுமை பாராட்டவில்லை

.

13.இந்துக்கள் இறைவனுக்கு ஆன்டுதோறும் கல்யாண உற்சவங்கள் நடத்துவது போல ((மதுரை மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், ஆண்டாள் போன்றவை) சுமேரியாவிலும் கடவுளர் கல்யாண மஹோத்சவங்கள் நடந்துவந்தன.

 

 

இப்போது முஸ்லீம் சட்ட விதிகள் இருக்கும் அந்த நாடுகளில் முன்காலத்தில் தலாக், தலாக் விவாக  ரத்து, ஐந்து மனைவி திருமணம் முதலியன இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

Source for Middle East: “ Dictionary of the Ancient Near East” by  British Museum.

 

–Subham–

 

சொந்த தங்கையை மணந்த மன்னர்கள்- எகிப்திய அதிசயங்கள் 19 (Post No.3722)

Menkaure and his wife

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 9-18 am

 

Post No. 3722

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திய பாரோக்கள் (பர ராஜ = மன்னர்கள்) சொந்த தங்கைகளையே திருமணம் செய்துகொண்டனர். இதனால் அவர்கள் பலவகை மரபியல் நோய்களுக்கு உள்ளானார்கள். மேற்காசியாவை ஆண்ட ஹிட்டைட்டுகள் (Hittites) இப்படி யாரேனும் திருமணம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தார்கள். இவை எல்லாம் வரலாற்றில் காணப்படும் சுவையன செய்திகள்!

 

எகிப்திய சரித்திரத்தில் பழைய ராஜ்யம், நடு / மத்திய ராஜ்யம், புதிய ராஜ்யம் (Old, Middle and New Kingdoms) என்றும் குழப்பமான (அராஜக= அரசனற்ற) காலங்களை இடைப்பட்ட காலம்  (Intermediate Periods) என்றும் வரலாற்றாசிரியர்கள் பிரித்துள்ளனர். புதிய ராஜ்யத்தின் துவக்கத்தில் இரண்டாம் அஹோதேப் ( Ahotep II மஹாதேவி என்பது இப்படித் திரிந்திருக்கலாம்) தனது சகோதரனையே  கல்யாண ம் செய்துகொண்டார். அவருடைய பெயர் தா அல்லது காமோசி (Taa or Kamose) என்று நம்பப்படுகிறது.

 

(மோசி/மோசஸ்/ மூசு பலா,  தேப்/தேவி பற்றிய எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காணவும்)

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமோசியும் (Ahmose) தனது தங்கையை திருமணம் செய்துகொண்டான். அவளுடைய பெயர் ஆமோசே நவரதிரி Ahmose Nefertiry (நவ ரதி).

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமெனோதேப் ( Amenhotep) சமணதேவன்). அவன் தனது சகோதரி மேர்யாடாமுனை (Merytamun மாரி அம்மன்) மணந்தான்.

statue of Hatshepsut

இதற்குப் பின்னர் ஆண்ட மன்னன் துதமோசிக்கு (Thutmose) ஹட்சேப்சுத் (சத்ய சுதா Hatshepsut) என்ற மகள் பிறந்தாள். அவள் தனது ஒன்றுவிட்ட சகோதரனை கல்யா ணம் செய்துகொண்டாள். அவன் மன்னனான போது அவன் பெயர் இரண்டாம்  துதமோசி.

 

 

இந்தக் காலகட்டத்தில் சகோதர-சகோதரி கல்யாணம் நடைபெற்ரது உண்மை என்பதும், இது சம்பிரதாய சடங்கு அல்ல– உண்மையான திருமணம் என்பதும் உறுதியாகிவிட்டது.

 

எகிப் தி ய மன்னர்களின் பெயர்களில் உலகம் முழுதும் தெரிந்த மன்னன் துதன்காமுன் Tutankhamun (துஷ்டகாமினி). அவனும் அவனுடைய ஒன்றுவிட சகோதரி அங்கசேனாமுன்னை (தேவ சேனா/ தெய்வானை என்பது போன்ற ஒரு சம்ஸ்கிருதப் பெயர் என்பது என் துணிபு) கல்யாணம் செய்துகொண்டான்.

 

(துதன் காமுனின் ரத்தின- தங்கப் புதையல் அப்படியே கிடைத்ததால் அவன் பெயர் உலகம் முழுதும் பரவியது அவன் இளம் வயதில் இறந்ததால் அவனை BOY KING பாய் கிங் — மாணவ அரசன் — என்பர்).

 

அப்பாவும் மகளும் திருமணம் செய்துகொண்ட அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மூன்றாம் அமனோதேப் Amenhotep (சமண தேவன்), இரண்டாம் ரமேஸஸ் Ramesses II (ராம சேஷன், ரமேசன்) ஆகியோர் தங்களுடைய மகளைத் திருமணம் செய்தனர். ராமசேஷனுக்கு பிண்டாநட் Bintanat  (விந்தியாநாத்) என்ற மகள் பிறந்தாள்

 

Akhenaten and his wife Nefertiti

பழைய ராஜ்யத்தில் (OLD KINGDOM) இப்படி நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் டாலமி (PTOLEMY II) காலத்தில் மீண்டும் 200 வருடங்களுக்கு இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது. டாலமி காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாகும் (இந்தியாவில் அசோகன் ஆண்ட காலத்தை ஒட்டி)

 

அரசர் அளவில் இப்படி நடந்தபோதும் சமுதாயத்தில் இப்படி நடந்ததாகத் தகவல் இல்லை. ஆகவே இது சமுதாயம் வெறுத்த ஒரு வழக்கம் என்றே கருதப்படுகிறது. இது எப்படித் தெரிகிறதென்றால் புதிய சாம்ராஜ்யத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசர் கல்லறைப் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி, அவனுடைய தாயாருடனும் மகளுடனும் கள்ள த் தொடர்பு வைத்துக்கொண்டதோடு வேறு ஒரு பெண்ணை தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்ததாக அவன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனுடைய பெயர் நபாமுன் (நவமுனி).

 

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மன்னர்கள் மட்டும் எப்படி குடும்ப உறுப்பினர்களை யே அனுபவித்தனர்? இதற்குக் காரணம் என்ன?

 

பெண்வழி (Female line) அரச மரபு இருந்ததால் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே ராஜபோகத்தை வைத்துக்கொள்ள அப் படிச் செய்தனர் என்பது ஒரு ஊகம்.

 

வெளியிடத்தில் பெண் எடுத்தால் அரசாட்சி கை மாறிவிடுமோ என்ற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது எகிப்தில் இருப்பதே ஒரு ராஜ குடும்பம்- அந்த ராஜ குடும்பத்திலேயே  உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று கருதி இருக்கலம். இப்பொழுதும் கூட சில ஜாதியினர் தங்கள் ஜாதிக்குள்ளேயே — ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே — திருமணம் செய்வதைப் பார்க்கிறோம். தமிழர்கள் அத்தை, மாமன் மகள், மகன்களை க் கட்டுவதைக்கூட  வெளிநாட்டினர் COUSIN MARRIAGE கஸின் மேரேஜ் என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு புதுமை.

 

தெய்வங்களின் கதைகளிலும் இப்படி வருவதாலும் எகிப்திய அரசர்கள் தெய்வங்கள் என்று கருதப்பட்டதாலும் இப்படி நடந்ததாகக் கருதுவோரும் உண்டு. பைபிள் கூறும் முதல் மனிதனாகிய ஆதாம் அவன் இடுப்பு எலும்பில் உருவான ஏவாளையே (ADAM AND EVE) மனைவியாகக் கொண்டான். அதாவது மகளையே மணந்தான்!

 

ஆதாம்- ஏவாள் ஆகிய இருவருக்குப் பிறந்த சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் மணந்ததாலும் புணர்ந்ததாலும்  மக்கள் பெருகினர் என்று பைபிள் வாக்குவாதத்தில் ஈபடுவோர் செப்புவர்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது போன்ற பல குறிப்புகள் உண்டு.

எகிப்தைப் பொறுத்தமட்டில் எல்லா காரணங்களும் ஊகங்களே; உறுதியான காரணம் எதுவும் எழுதப்படவில்லை.

 

xxxxxxxxxxxxxxxxxxx சுபம் xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியாஎகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

 

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

18. எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)  Posted on12-3-20117

xxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487) by S Nagarajan, posted 27-12-2016

 

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)

 

Feng Shui – True or False? (Post No.3721)

Written by S NAGARAJAN

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:-  5-13 am

 

 

Post No.3721

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Feng Shui – True or False? If it is True, is there a Proof?

by S. Nagarajan

 

Feng means Wind and Shui means water in Chinese language. It is an ancient Chinese art, at least 5000 years old.


There are five elements. Everything is energy. If you are able to channelise the positive energy understanding the five elements, you will be successful in all spheres.

 

 

How to channelise the energy and what is the proof that Feng Shui works?

We may refer at least one real story for this.

Hans Snook is famous for his slogan, ‘The future is bright, The future is Orange’.  With this he developed his company and sold it for a huge amount of 50 million pounds.

 

 

Snook was born in England. He dropped out of university and worked in the hotel business in Canada.

Then he went to Hong Kong and worked in a telecoms company. In 1994, he came back to London and launched a mobile phone company.

 

He was all success due to his belief in Feng Shui. Even though he did not have a great belief in that, he consulted a Feng Shui master. The master suggested certain alterations in his office and assured him that within twelve months the business would become very successful.

 

And that is what happened. His business incredibly brought a lot of money.

Not only Hans Snook, almost all businessmen around the world who want an all-round success and prosperity adopt Feng Shui principles. The Proof?

You may see the water spring in front of the big malls and corporate office buildings.

 

 

One interesting example is Andrew Thrasyvoulou. He is an architect himself and owner of a hotel group, Myhotel Company.

When he took over a London building he had to redesign and modify it since the existing one was not according to the principles of Feng Shui.

He has based the layout on the principles of this Chinese art. Major changes in the 76 room hotel were made.

The staircase facing the entrance was moved in order to make the positive flow of energy. The bar’s hard edges were removed and were replaced with round corners.

 

A Fish Tank was placed in front of Cash register locks to bring luck and prosperity.

Thus the entire hotel was modified and he made enormous money.

The latest fashion is to engage a Feng Shui master along with the architect.

The Hindu Scriptures specify Vastu Sastra which is more than Feng Shui.

 

 

All these special techniques are simply aligning the forces which are invisible. Those who respect and adopt them are fortunate and those who are ignorant of the facts are deprived of the benefits.

Hence we must understand the basic principles and make our life a successful one following these rules.

I would like to recommend to read my earlier article titled, ‘Get Feng Shui – Vastu Combined Benefits’.

****

 

Vedic Ribhu is Greek Orpheus: Nicholas Kazanas (Post No.3720)

Compiled by London swaminathan

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:- 20-43

 

Post No. 3720

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“Rbhu is a Vedic God. Rbhu means Intelligent fashioner. Scholars generally agree that this word is cognate with English/Germanic elf (Elfe, Alp etc.), old Slavic Rahb (servant) and the name of the Greek poet- musician- hero Orpheus.

 

In the Rig Veda (1-20, 110; 3-60; 7-48 etc) the Rbhus are three brothers, sons of Sudhanvan who perform several miraculous deeds “through the power of mind”.

 

For instance, Rig Veda 4-2 says ‘ratham ye cakruh suvrtam sucetaso avibvarantam manasas pari dhyaya’ The wise ones who fashioned the fine-rolling, impeccable car by visionary power ’dhi’ – out of mind/manas – But three are often indicated by the singular Rbhu as one. Thus, in the RV, the name appears both in the singular and in the plural. The three brothers, though mortal, thanks to their great mental power gain the favour of the gods and stay in the mansion of the Sun god where they serve as priests and there become immortal gods themselves.

 

The Slavic servant can be put aside as of no significance other than the cognation rbhu=rabh. The Germanic elves are in the plural, a whole tribe of them. They are of two kinds: the dark ones live underground and  often identified with the Dwarfs who often are greedy and who are craftsmen dealing with metals, precious stones and ether minerals; the fair ones live in the light in Alfheim, are associated with the sun and can heal. Thus it is not difficult to see the connection with the Rigvedic Rbhus.

 

Greek Orpheus was a figure of veneration from very ancient times and a multitude of legends were woven around him. He too was a clever craftsman with music and became a devotee (and in later legend a priest) of the Sun god. Only instead of gaining immortal godhood he was torn apart by the Maenads; his head was thrown into the river Hebros, floated still singing into the sea and finally was washed ashore on Lesbos where a shrine was established giving out oracular prophecies. A different strand has him killed by the lighting of Zeus.

 

Here again countless generations of ancient and modern scholars tried to trace his antecedents. Some said Orpheus was a historical figure who performed miraculous deeds and founded a religion — Orphism”. Others said he was the son of the Sun god or even the very incarnation of Apollo. Some said his origin was to be found with the Thracians or the shamans in the Hyperborean regions (and farthest Siberia); others claimed that he came from Anatolia and still others argued that he was a native Greek and and/or son of Oiagros.

 

But, of course, Orpheus is a PIE (-Prtco-Indo-European) as the evidence shows and some IEans brought a memory of him with them when they came and settled into Greece, in the 3rd or the 2nd millennium BC. Although this fact is now well known among IE scholars, classicists continue to speculate and argue in their accustomed vein.

Reincarnation Theory

 

Closely connected with the Orphics are the Pythagoreans. Both held the idea of reincarnation, albeit clearly, in their early but only in their later traditions.

 

Now, since the very early Greekliterature of Homer, Hesiod and other poets until Pindar and Empedocles (early 5th century BCE), shows no definite knowledge of this doctrine, hellenists tend to accept what Herodotus says in the Second Book of his Histories (2-123), namely that Pythagoreans brought it into Greece from Egypt. In fact several scholars have the Greeks importing many ideas into Greece from the Near East (e.g. Pengalese 1994; West 1971, 1994).

 

We can say with certitude that Herodotus is often totally unreliable and this is one such instance. The Egyptians had no doctrine of reincarnation; they mummified the corpses of noblemen and held that their souls rose into heaven joining Ra or Osiris in his sky boat. In fact no, Near -eastern culture had reincarnation at this period.

 

It would be far more reasonable to accept that Greece brought the idea of metempsuchosis (reincarnation) or palingenesia (rebirth) together with the Erinus (Vedic Goddess Saranyu) legend, the memory of Orpheus and many other elements from the PIE culture, rather than assume that these were borrowed from near-eastern cultures that did not have them anyway.”

 

Source: Vedic and Indo-European Studies, Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, 2015

 

–Subham–

 

கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!! அடுத்த ஜன்மத்திலும் அவரே………….. !!! (Post No.3719)

Written by London swaminathan

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:- 11-15 am

 

Post No. 3719

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

  1. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் கும்பிடவே வேண்டாம்; கணவனைக் கும்பிட்டால் ‘பெய்யெனப் பெய்யும் மழை!

 

2.கணவன் பெயரைச் சொல்லக்கூடாது. அது மரியாதைக் குறைவு!!

 

3.அடுத்த ஜன்மத்திலும் அவரே எனக்கு கணவராக வரவேண்டும்; இதற்காகத் தவம் செய்வேன்………………

 

இப்போதுள்ள இந்துப் பெண்களைக் கருத்து கேட்டால், நிபந்தனையற்ற ஆதரவு தருவதில்லை. என் கணவன் ராமன் போல் இருந்தால், முன்னோர் சொன்னதை ‘’ஆதரிப்பேன்;’’ என் கணவர் கிருஷ்ணர் போல இருந்தால் ‘’மாட்டேன்’’ என்பர்!

 

ஆண்களிடம் கருத்துக் கேட்டால், கல்யாணம் ஆனதும் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த வரம்” என்று பாடிக்கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் நாக்கு குளறுவதால் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த அ அ அ ‘ரவம்’ — என்று பாடுகிறேன் என்பர்

(அரவம்=பாம்பு); தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் கொட்டிக்கொண்டே இருக்கும் என்பது பழமொழி. என் மனைவிக்கு அதிகாரம் கொடுக்காமலேயே கொட்டிக்கொண்டிருக்கிறாள் என்பர்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் 2000 ஆண்டுகளாக பல “பத்தாம் பசலி”க் கருத்துகள் உள்ளன. உலகில் வேறு எந்த பழைய கலாசாரத்திலும் இப்படி “ஹைதர் அலி” கால கருத்துக்கள் இல்லை. ஆயினும் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளாக இப்படி ஒரே கருத்து நிலவுவது, இந்த நாகரீகம் இயற்கையிலேயே இந்த மண்ணிலேயே உருவாகி வளர்ந்தது; ஆரியம்- திராவிடம் என்பதெல்லாம் நல்ல பிதற்ரறல் என்பதைக் காட்டுகிறது.

 

உங்கள் கணவர் பெயர் என்ன?

 

கணவன் பெயரைச் சொல்லக்கூடாது! என்று இந்துப் பெண்கள் நம்பினர்.

 

உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் இல்லாததால், அதுவும் உலகிலேயே பெரிய நாடாக இருந்த பாரதத்தில் 2000 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருப்பதால் ஆரிய-திராவிடக் கூத்தாடிகளுக்கு இந்தக் கொள்கை அடி கொடுக்கும்.

 

மதுரையில் நாங்கள் வசித்த காலத்தில் என் தந்தை பெயரை என்  அம்மா எப்போதும் சொன்னதே கிடையாது. ஆனால் இப்போது என் மனைவி என் பெயரை, ஒன்றுக்குப் பத்து முறை சொல்லவும் தயங்க மாட்டாள்; நான் அதை காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.

 

மதுரை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாலளராக (ஜில்லா கார்யவாஹ்) தொண்டாற்றியபோது ஒரு வீட்டில் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அவரது கணவன் பெயர் தெரிந்தால்தான் நாங்கள் சென்ற விலாசம் சரியா என்று தெரியவரும். ஆனால் அப்பெண் கணவர் பெயரைச் சொல்லாமல் எங்களுக்கு ‘’விடுகதை’’ போட்டாள். அதாவது பெயரை நேரடியாகச் சொல்லாமல், பல துப்புகளைக் கொடுத்தாள். பொதுவாக இந்தமாதிரி நேரத்தில் மகனோ மகளோ இருந்தால் அவர்கள் மூலம் கணவர் பெயரை வெளிப்படுத்துவர்.

 

எனக்கு அந்த வீட்டுக்காரரைன் பெயர் இப்போது நினைவில்லை. நான் லண்டனுக்கு வந்தே 31 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு எடுத்துக்காட்டுக்காக கீழே உள்ளதைத் தருகிறேன்.

 

இது ராமநாதன் வீடா?

பெண்: இல்லீங்க

உங்கள் வீட்டுக்காரர்  பெயர் என்ன?

மிகவும் தயக்கத்துடன் அப்பெண்: அதுவா?.. அதுவா?…

 

அதாங்க மதுரைக் கோவில்ல இருரக்காரே அந்தக் கடவுள் பெயருங்க!

ஓ சுந்தரேசனா?

அப்பெண்: ‘’இல்லீங்க”

ஓ சுந்தரம்? …………. மீனாட்சி சுந்தரமா?

அது இல்லீங்க! தமிழ்ல சொல்லுவாங்களே/ இந்த சினிமாவில கூட நாகேஷ் உரக்கச் சொல்லுவாரே….

ஓ சொக்கனா!

ஆமாங்க, ஆமாங்க, அதே தான்!

 

இப்படி பலவிடுகதைகள் மூலம் நம் அறிவைச் சோதிப்பர். மண்டனமிஸ்ரரைச் சந்திக்கப் போன ஆதிசங்கரன் என்ற சிறுவனைப் பார்த்து நகைத்த நர்மதை நதிக்கரைப் பிராமணப் பெண்கள், அவருக்கு சம்ஸ்கிருதத்தில் புதிர் மிக்க கவிதை மூலம் வழி சொன்னது போல நமக்குக் கணவன் பெயரைத் தெரிவிப்பர்!

 

வால்மீகியும், காளிதாசனும், இளங்கோவும், வள்ளுவனும், அம்முவனாரும் சொல்லும் கருத்துகளை இன்றைய பெண்கள் ஏற்றுக் கொக்ள்வார்களா?

 

முதலில் புலவர்கள் சொல்லுவதைப் படியுங்கள். பின்னர் என் கேள்விக்கு என்ன பதில் என்று கேட்கிறேன்.

 

வள்ளுவனும் வால்மீகியும்!

 

வள்ளுவனும் வால்மீகியும் இவ்விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமகவே (TOO MUCH!) பேசிவிட்டனரோ!

 

ராமபிரான் வாய் மூலமும், சீதையின் மூலமும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்லிவிடுகிறார். அயோத்தியா காண்டத்தில்:-

 

சீதை சொல்கிறாள்:

ஒருவனுடைய தந்தை, தாய், தன்னுடைய சகோதரன், புதல்வன், மருமகள் ஆகிய ஐவரும் தாம்தாம் செய்த  பாவங்களுக்கு ஏற்ப அவற்றின் பலனை அனுபவிப்பார்கள். ஆனால் மனைவியே தன் கணவனின் பாவ புண்ணியங்களில் பங்கேற்பவள்.

 

கணவன் துன்புறும்போது மனைவி சுகத்தில் புரளும் ஈனப் பிறவி என்றா என்னை நினத்தீர்கள்?   த ங்களுடன் வாழ்வதே உத்தமமான தர்மம் என்பதைப் புரிந்து கொண்டேன்; தங்களுடன் வாழும்போது, எத்தகைய துன்பமும் எனக்குத் தென்றலைப் போல இனிக்கும்; குயிலைப் போல் ஆனந்தததைத் தரும். கணவனுக்குப் பணிவிடை செய்வதே நான் கொண்ட தர்மம். அந்தத் தர்மததைச் செய்ய விடுங்கள். தங்களை மீறிப் பேசும் சொற்கள் தங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். இருப்பினும் நான் கதியற்றவள் தாங்களே தெய்வம் என்று வந்தவள்; தங்களைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?

 

ராமனும் கோசலையிடம் பேசும்போது, கணவனே தெய்வம் என்று குறிப்பிடுவான்.

தமிழ் வேதமாகிய திருக்குறள் தந்த திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்:–

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு எந்த தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனை மட்டும் தொழுது  — பின் தூங்கி முன் எழும் — துயில் எழும் மனைவி, பெய் என்றால், உடனே அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும்!

 

(இதற்கு சாவித்ரி, வாசுகி, கண்ணகி கதைகளை ஆதாரமாகக் கொள்வர்.)

 

இதைவிட ஒருபடி மேலே போய், வள்ளுவன் செப்புவான்:

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர் கொண்டனள் (குறள் 1315)

 

இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் – என்று சொன்னபோது –மறுமையில் மறந்து விடுவேன் என்று தவறாக நினைத்துக் கொண்டு, மறு பிறப்பில் பிரிந்துவிடுவோமோ என்று கண்களில் நீர் பெருகியது!

 

இதற்கெல்லாம் மூல காரணம் வால்மீகிதான்!

சங்கப் புலவர்களின் தங்க மொழிகள் (பொன்மொழிகள்)

 

2000 ஆண்டுகளுக்கு முன் பாடிவைத்த பைந்தமிழ்ப் புலவர்களும் வால்மீகியை அடியொற்றிக் கருத்துகளை உதிர்த்துள்ளனர்.

 

தோளும் அழியும்…………………

சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவின்

பிறப்புப் பிரிது ஆகுவது ஆயின்,

மறக்குவேன்கொல், என் காதலன் எனவே

நற்றிணை 397, புலவர் அம்மூவனார்

 

பிரிவிடை ஆற்றுக என வற்புறுத்திய தோழிக்கு, ஆற்றுவேன் என்று தலைவி சொல்லியது:

“மாலைப் பொழுதும் வந்துவிட்டது. யான் எப்படி ஆவேனோ இங்கே யான் இறப்பதற்கு பயப்படவில்லை ஆனால் வேறு ஒன்றுக்கு அஞ்சுவேன்; இறந்த பின் , மறு பிறப்பில் பெண்ணாகப் பிறக்காமல், வேறு ஒன்றாகப் பிறந்தால் என்ன செய்வேன் என்ற எண்ணம் என் மனதை வாட்டுகிறது”  — என்பது ஆன்றோர் உரை.

 

 

குறுந்தொகையிலும் அம்மூவனாரே இக்கருத்தைத் திருவாய் மலர்ந்து அருளுவார்:

 

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கே ழன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே

–குறுந்தொகை 49, அம்மூவனார்

 

தலைமகன் பரத்தை வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் இன்பம் துய்த்துவிட்டுத் திரும்பிவருகிறான்:

ஆன்றோர் உரை:

தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவாற்றாமை நீங்குமன்றே; நீங்கி யவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது:

 

“அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும், நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையுடைய தலைவ!

 

இப் பிறப்பு நீங்கப் பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், என்னுடைய கணவன், இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக!  நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

 

கருத்து:- நம்முடைய நட்பு பிறவிதோறும் தொடரும் இயல்பினதாகுக.

((மாதவியிடம் போய்விட்டுத் திரும்பிவந்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாள்!))

 

 

இதே கருத்து குறுந்தொகை 199 -பரணர்

குறுந்தொகை-2 இறையனார்

குறிஞ்சிப் பாட்டு வரி 24 -கபிலர்

பெருங்கதை2-11-39; மற்றும் பல இடங்களில் வருகிறது.

 

தமிழர்கள் மறு பிறப்பிலும், மறு பிறப்பில் நட்பு தொடர்வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்

 

காளிதாசனின் ரகு வம்ச காவியம்

 

காளிதாசன், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளான். ரகு வம்சத்திலிருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தருவன்:

சீதை சொல்கிறாள்; இப்பொழுது நான் கர்ப்பவதி; தவம் செய்தால் அது பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும்;  குழந்தை பிறந்தவுடன், நான்கு தீக்களுக்கு நடுவே நின்று கொண்டு சூரியனை உற்று நோக்கி தவம் செய்வேன். எதற் காக என்றால் அடுத்த பிறப்பில் நானும் நீங்களும் கணவன் மனைவி ஆக வேண்டும்; அப்பொழுது இப்பிறப்பில் ஏற்பட்ட பிரிவு ஏற்படக்கூடாது!

 

சாஹம் தபஹ சூய நிவிஷ்ட த்ருஷ்டிர் ஊர்த்வம் ப்ரசூதேச் சரிதும் யதிஷ்யே

பூயோ யதா மே ஜனனாந்தரே அபி த்வமேவ பர்தா ந ச விப்ர யோகஹ

ரகு 14-66

 

பொருள்

எவ்வாறு மறுபடியும் எனக்கு மறுஜன்மத்திலும் தாங்களே கணவராக ஆவீர்களோ பிரிவும் உண்டாகாதோ அவ்வாறு இத்தகைய துரதிருஷ்டம் வாய்ந்த நான், பிரசவத்திற்குப் பிறகு, சூர்யனிடத்தில் வைக்கப்பட்ட பார்வையுடையவளாக தவத்தை (பஞ்சாக்னி தபஸ்) செய்யப் போகிறேன்

 

இன்னொரு இடத்தில் ஆயிரம் மன்னர்களுக்கு இடையே இந்துமதி, அஜனைத் தனக்கு கணவனாக ஏற்றது எப்படி யென்றால் மனதுக்கு பூர்வ ஜன்ம தொடர்பினை அறியும் சக்தி உண்டு என்பார் (7-15)

 

ரதிஸ்மரௌ நூனம் இமௌ அபூதாம் ராக்ஞாம் சஹஸ்ரேஷு ததாஹி பாலா

கதேயமாத்மப்ரதிரூபமேவ மனோ ஹி ஜன்மாந்தர சம்கதிக்ஞம்

 

இவ்விருவரும் மனித வடிவில் தோன்றிய இணைபிரியாத ரதியும் மன்மதனுமே ஆவர்; மனமானது பூர்வ ஜன்மதொடர்பின் படியே செயல்படும் ஆதலால இவளுடைய மனமும் 1000 அரசர்கள் குழுமியிருந்த இடத்தில் அவளுக்கு உரியவனையே தேர்ந்தெடுக்க உதவியது.

 

கண்ணகி எப்படி தெய்வமானாள்?

 

 

தெய்வந்தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் – தெய்வமாய்

மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து!

–கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்

 

இளங்கோ சொல்வது:–

மண்ணக் மாதர்க்கு எல்லாம் அணி போல்பவளான கண்ணகியானவள், தெய்வமாக விண்ணக மாதர்க்கு விருந்தினளாயினாள். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் பெண்ணை தெய்வமும் வணங்கும் என்பது இவ்வுலத்தில் இதனால் உறுதி ஆய்விட்டது.

 

கட்டுரையின் நீளத்தைக் கருதி ஏனைய மேற்கோள்களைத் தவிர்ப்பன்.

பெண்களே! உங்கள் கருத்து என்னவோ?

–சுபம்–