London Swaminathan’s New Book on Karnataka Temples (Tamil)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   3  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Title-  கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

பொருளடக்கம்

1.கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -Part 1 (பெங்களூர் கோவில்கள்)

2.சோமேஸ்வர, மல்லேஸ்வர, நாகேஸ்வர கோவில்கள்

3.சிக்க திருப்பதி, முக்திநாகா, போக நந்தீஸ்வர கோவில்கள்

4.பீமலிங்கேஸ்வரர், நான்கு முக மலையில் 4 கடவுள் கோவில்கள்

5. ரேவண சித்தேஸ்வர, சங்கமேஸ்வர, மட்டூர் வட்டார கோவில்கள்

6.மாண்ட்யா வட்டாரக் கோவில்கள்  

7.நிமிஷாம்பா, பஞ்ச லிங்கேஸ்வரர், நரசிம்ம சுவாமி கோவில்கள்

8.முக்தனாதேஸ்வர, மல்லிகார்ஜுன, மேலுகோட்டை செலுவ நாராயணர் கோவில்கள்

9.பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள்

10.ஆண்டாள் கண் ஒளிரும் எடத்தலை கோவில்

11.புலி மீது வந்த சித்தர் கோவில், திப்பு சுல்தான் எரித்த சிவன் கோவில்கள்

12.காந்திஜிக்கு தினசரி பூஜை! கடுங்காப்பி பிரசாதம்

13. தர்மஸ்தலம், குக்கே சுப்ரமண்யர் கோவில்கள்

14. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன், ஆனகுட்ட விநாயகர் கோவில்கள்

15.மூகாம்பிகை, சாரதாம்பிகை, முருதேஸ்வர்

16. அன்னபூர்ணேஸ்வரி, அம்ருதேஸ்வரர் கோவில்கள்

17.ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்!

18.பேலூர், சிரவண பெலகோலா கோவில்கள்

19.ஒன்பது நரசிம்மர் சிலைகள்!

20. மலைக்கல்லு திருப்பதி கோவில், அரிசிக்கரே ஈஸ்வரன் கோவில்

21.கப்பல் வடிவில் அதிசய கோவில்!

22.ஓம் வடிவ கடற்கரை!

23.காந்திஜி நுழைய மறுத்த கோவில்!

24.கோவிலில் பெரிய பீமன் முரசு!

25.அனுமன் பிறந்த கிஷ்கிந்தா !

26.உலகப் புகழ்பெற்ற ஹம்பி:

27. கடக் GADAG வட்டார கோவில்கள்

28.கனககிரி கனகாசலபதி கோவில் 

29.பாதாமி குகைகள், இந்து சமய ஓவியங்கள்!!

30.ஐஹோல் கோவில்கள்

31.பட்டடக்கல் கோவில்கள்

 *************************

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  -2024

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles and 116 Tamil and English Books

 Visited Countries

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Sri Lanka and Greece

**************

முன்னுரை

தமிழ்நாட்டைப்போலவே எண்ணற்ற, புகழ் பெற்ற இந்து சமயக் கோவில்களை உடைய மாநிலம் கர்நாடகம். இங்கு புகழ்பெற்ற சமண ஆலயங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. சிரவண பெலகோலாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கல் கோமடேச்வர் சிலை , மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் நந்தி, பேலூர், ஹளபீடு , சோம்நாத்பூர் சிற்பங்கள் பெருமளவில் புஸ்தகங்களில் காணப்படுகின்றன . இது ஒரு புறமிருக்க, மூகாம்பிகை, சாரதாம்பிகை கோவில்கள் ஆகியன தேவி பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . காவிரி நதியின் இருமருங்கிலுமுள்ள சிவன், விஷ்ணு கோவில்கள் சைவ, வைணவ பக்தர்களுக்கு பக்திப் பரவசம் ஊட்டுகின்றன.. காவிரி தோன்றுமிடத்தில் உள்ள தலங்களும் , பல நதிகளுடன் சங்கமிக்கும் இடங்களும் குக்கே சுப்ரமண்யர் கோவிலும்  குறிப்பிடத்தக்கவை.

முருதேஸ்வரில் உள்ள பிரம்மாண்ட சிவபெருமான் சிலை கடலோரமாக உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சிறிய கோவில்களும் இந்த நூலில் இடம்பிடித்துள்ளன . எல்லாவற்றுக்கும் மேலாக ஹம்பி, ஐஹோல், பட்டடக்கல் ஆகியவற்றில் உள்ள குகைக் கோவில்களும் ஓவியங்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.

நுளம்பர் , ஹொய்சாளர் , சாளுக்கியர் முதலிய வம்ச மன்னர்களின் ஆதரவுடன் பெருகிய கோவில்கள் அந்தந்தக் கால  புகழ்பெற்ற சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டி நிற்கின்றன. கோவில்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கின்றன .

இவ்வாறு மக்களின் பக்தி, கலை ரசனை , சுற்றுலா, வரலாற்று உணர்வு  ஆகியவற்றை வழங்கும் கோவில்களையும், சின்னங்களையும் காப்பாற்றி வருங்கால சந்ததியினருக்கு வழங்குவது நமது கடமை ஆகும். கர்நாடக கோவில்கள் பற்றி தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகள் இருந்தபோதிலும். புஸ்தகம் எதுவும் இல்லை ; சுற்றுலா கைடுகள் கோவிலைத் தவிர ஏனைய விஷயங்களையும் சேர்ப்பதால் பக்தர்களுக்குப் பயன்படுவதில்லை . அந்தக் குறையை இந்த நூல் போக்கும் என்று எண்ணுகிறேன் . முதலில் நான் எழுதிய மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் என்ற நூலுக்குக் கிடைத்த ஆதரவு இந்த கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்  நூலுக்கும் கிடைக்கும்  என்று  நம்புகிறேன் . இது என்னுடைய  107 ஆவது நூல்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

செப்டம்பர் 2023

Swami_48@yahoo.com

HOW CAN YOU GET THESE BOOKS?

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

QUIZ  பஞ்ச கேதார் பத்து QUIZ (Post No.12,982)

Kalpeshwar/ Kapileshwar temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,982

Date uploaded in London – –   3  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Kalpeshwar 

QUIZ SERIAL No.106

1.பஞ்ச கேதார் என்று  அழைக்கப்படும் ஐந்து கேதார ஸ்தலங்கள் எங்கே உள்ளன ?

XXXX

2.கேதார்நாத்தின் சிறப்பு என்ன?

XXXXX

3.இரண்டாவது கேதார் ஸ்தலமான துங்க நாத் எங்கே இருக்கிறது அதன் சிறப்பு / விசேஷம் என்ன?

XXXXX

4.ருத்ரநாத் எங்கே இருக்கிறது ?

XXXXX

5.நாலாவது ஸ்தலமான மகா மத்யேஸ்வர் கோவில் எங்கே இருக்கிறது ?

XXXX

6.கடைசியில் தரிசிக்கும் கல்பேஷ்வர் Kalpeshwar Temple (कल्पेश्वर) சிவன் கோவிலின் சிறப்பு என்ன ?

XXXXX

7.ஐந்து கேதார்களையும் ஐந்து பிரயாகைகளையும் சார் தாம் தலங்களையும் இணைக்கும் அம்சம் எது?அதற்கு என்ன சான்று?

XXXXX

8.பஞ்சகேதார் தலங்களை சிவபெருமானின் உடலில் உள்ள அங்கங்களாகவும் சொல்லுவார்கள்அவை யாவை ?

XXXXX

9.ஐந்து கோவில்களும் எப்போதும் திறந்திருக்குமா ?

xxxxx

10.இந்த ஐந்து தலங்களுக்கும் நேபாளத்துக்கு உள்ள தொடர்பு என்ன ?

xxxx

Tunganath Shiva Temple

விடைகள்

1.இமய மலையில் உத்தர கண்ட் மாநிலத்தில் ஐந்து கேதார ஸ்தலங்கள் உள்ளன. அவை :

கேதார் நாத் கோவில்

துங்கநாத் கோவில்

ருத்ரநாத் கோவில்

மத்திய  மஹேஸ்வர் கோவில்

கல்பேஷ்வர் கோவில்.

இவை அனைத்தும் சிவன் கோவில்கள்

Kedarnath – 1st Panch Kedar

Tungnath – 2nd Panch Kedar

Rudranath – 3rd Pancha Kedar

Madhyamaheshwar, –4th Pancha Kedar

Kalpeshwar, 5th Pancha Kedar

இவைகளை மேற்கூறிய வரிசையிலேயே தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம் .

XXXXX

கேதார்நாத் கோவில் மிகவும் பிரசித்தமானது ; 12  ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. பனி மூடிய ஆறு காலம் கோவில் மூடப்படும். ரிஷிகேஷ் நகரிலிருந்து 223  கி.மீ தொலைவு. மந்தாகினி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இருக்கிறது (  சார் சதாம்- கேதார்நாத் 10) கட்டுரையில் விவரம் உள்ளது .

XXXXX

3. केदारनाथ கேதார்நாத் உயரம்  3,583 மீட்டர்11,755  அடிகள்  ; துங்கநாத்  (तुङ्गनाथ)(3,680 m or 12,070 ft),அதையும்  விட மேல் இருக்கிறது.

இந்தியாவில் உயரமான சிவன் கோவில் துங்கநாத் கோவில் ஆகும் ; இங்குள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு லிங்கம்; அதாவது மனிதன் செதுக்கவில்லை. தானாக பூமியில் தோன்றிய லிங்கம். ஆதியில் பாண்டவர்கள் கட்டிய கோவில் ; போரில் தங்கள் செய்த பாவங்கள் தொலைய அவர்கள் இதை எழுப்பினார்கள் . பாண்டவர் உருவங்களும் உள. பிற்காலத்தில் ஆதி சங்கரர் இதை புனர் நிர்மாணித்தார் . அவருடைய சிலையும் இங்கே கருவறையில் உளது . மேலும் உள்ள பல சிலைகளில் கால் பைரவர் , வேத வியாசரை சிலைகள் குறிப்பிடத்தக்கன. 

XXXXX

4.இங்கும் இயற்கையில் அமைந்த சிவன் உருவமே ; இந்தக் கோவிலில் சிவன் , முகத்துடன் அருள்பாலிக்கிறார் ; மற்ற இடங்களில் உருவமற்ற லிங்கமே உளது. இதை நீலகண்டன் என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்; 2286 மீட்டர் உயரத்தில் இமய மலையின் அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்தக் கோவில் இருக்கிறது இங்கிருந்து இமயமலைச் சிகரங்களான நந்த தேவி, நந்த கண்டி , திரிசூலி,  ஹாத்தி பர்வத் ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம் . அருகில் அனுசுயா தேவி கோவில் இருக்கிறது . கோவிலுக்குப்  பின்னால் வைதரணி நதி ஓடுகிறது. கோவிலுக்கு அருகில் சூர்ய குண்டம், சந்திர குண்டம், தாரா குண்டம் ஆகிய புனித நீர்நிலைகளைக் காணலாம். தாரா என்றால் நட்சத்திரம்.

பஞ்ச ஸ்தலங்களில் இதுதான் கடினமான பாதை  உடைய கோவில். கோபேஸ்வர் வரை சாலையுள்ளது ; இங்கிருந்தோ ஜோஷிர்மட் என்னும் இடத்திலிருந்தோ மைல் கணக்கில் நடந்து செல்ல வேண்டும்

XXXXX

6.பஞ்ச  கேதார் ஸ்தலங்களில் மிகவும் எளிதில் தரிசிக்கக்கூடிய கோவில் கல்பேஷ்வர் கோவில்தான். ரிஷிகேஷிலிருந்து உக்ரம் உர் கம் என்னும் கிராமத்துக்குச் சென்றால் அங்கிருந்து ஐந்து  கி.மீ தொலைவில் கோவிலை அடையலாம். இங்கே ஜடாதார் என்ற பெயரில் சிவனை வணங்குகிறார்கள்.

 உர்கம் பள்ளத்தாக்கு மிகவும் இயற்கை வனப்புமிக்கது. அகஸ்தியர் தவம் செய்ததும், துர்வாசர் கற்பக விருட்சத்தை தின் கீழ் தவம் செய்ததும் இங்குதான்  . ஊர்வசி தோன்றியது , குந்தி வரம்பெற்றது இல்லம் இங்குதான் என்றும் செப்புவார்கள்.

ஐந்து கேதார்களுக்கும் சென்றபின்னர் கட்டாயம் பத்ரிநாத்துக்குச் சென்று விஷ்ணுவை வணங்க வேண்டும் என்ற சம்பிரதாகாயமும் இந்தப் பிரதேச மக்களிடம் உளது.

XXXXX

7.ஆதிசங்கரர் இந்த எல்லா கோவில்களிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆதிகால கோவில்களை புனர் நிர்மாணம் செய்திருக்கிறார் ; தென் இந்திய அர்ச்சகர்களை நியமித்தது வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளார். நாடன் நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு படங்களை நிறுவி பாரதம் ஒன்றே என்றும் காட்டியுள்ளார். பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதாரையும் அர்ச்சகராக நியமித்து புரட்சி செய்து இருக்கிறார் . மேற்கூறிய பல கோவில்களில் அவரது சிலை அல்லது சந்நிதி இருக்கிறது

XXXXX

8.கேதார்நாத்* ~ ஈசனின் உடல்;

துங்கநாத்* ~ ஈசனின் புஜம்;

ருத்ரநாத்* ~ ஈசனின் முகம்;

மத்மஹேஷ்வர்* ~ ஈசனின் தொப்புள்;

கபிலேஷ்வர்* ~ ஈசனின் தலைமுடி.

XXXXX

9.இல்லை. கல்பேஷ்வர் கோவில் மட்டும்தான் ஆண்டு முழுதும் திறந்திருக்கும். ஏனைய நான்கு கேதார்களும் பனிக்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும். உற்சவ மூர்த்திகளை மட்டும் உகிமத்தில் வைத்து வழிபடுவார்கள் .

XXXXX

10.நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் பசுபதிநாதசிவன் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் கேதார்நாத் இந்தப் பட்டியலில் இல்லை ; பசுபதிநாத் கோவில்தான் இருந்தது பிற்காலத்தில்

கேதார் நாத்தை சேர்த்துவிட்டார்கள். இந்த ஐந்து கோவில்களில் பெரும்பாலானவை நேபாள கோபுர அம்சத்தினைக் கொண்டு  இருப்பது இதற்குச் சான்று என்பது ஒரு வாதம். மேலும் நேபாள கோரக்நாத் சம்பிரதாயத்தின்ர்  பின்பற்றும் நடைமுறைகள், இந்த யாத்திரையிலும் பின்பற்றப்படுகிறது..

–subham—

Tags- கல்பேஷ்வர் கோவில், துங்கநாத், காளிமத் கோவில், பஞ்ச கேதார் பத்து, Quiz,

S.Nagarajan Article Index : JANUARY  2024 (Post No.12,981)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,981

Date uploaded in London – — 3  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

SNR Article Index : JANUARY  2024

JANUARY  2024

1-1-2024 12872 தந்த்ர சாஸ்திரங்கள்                                   2-1-2024 12876 லங்கணம் பரமௌஷதம்!                            3-1-2024 12879 யானையைப் பரிசாகப் பெற்ற புலவர் வீரராகவ முதலியார்! 4-1-2024 12882 SNR Article Index : DECEMBER  2023

5-1-2024 12885 பை’ – விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!                          6-1-2024 12889 கே செரா செரா –  Whatever will be, will be!                                    7-1-2024 12892 சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம்   ஒன்றே!                                                                                                                              8-1-2024 12895 அதிகஸ்யாதிகம் பலம்! – ஒரு வரி சுபாஷிதங்கள்         9-1-2024 12898 கர்ம ரகசியம்! –                                                                                      10-1-2024 12901 கர்ம ரகசியம்! – 2.                                                                         11-1-2024 12904 விவேகானந்த அதிசயம்! – 1                                                                        12-1-2024 12908 விவேகானந்த அதிசயம்! – 2                                                                  13-1-2024 12911  நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை!  – ஜனவரி 2024    ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை                                     14-1-2024 12914 கர்ம ரகசியம்! – 3.                                                                                            15-1-2024 12917  KARMA RAHASYA  – 1

16-1-2024 12921 தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த    மேதை!  – 1   10-1-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 17-1-2024 12925 தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த     மேதை!  – 2  10-1-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை    18-1-2024 12929 கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 1 – 17-1-24 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை19-1-2024 12932 கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 2 – 17-1-24 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை                 20-

1-2024 12936 ராம நாம மஹிமை – 1

21-1-2024 12939 ராம நாம மஹிமை – 2                                 22-1-2024 12943 ராம நாம மஹிமை – 3                                                                             23-1-2024 12946 ராம நாம மஹிமை – 4                                                                              24-1-2024 12950 ராம நாம மஹிமை – 5                                                                              25-1-2024 12953  கர்ம ரகசியம்! – 4 வாங்க சார் யமலோகத்திற்கு ஒரு விஸிட் – உயிரோடிருக்கும் போதே                                   26-1-2024 12956 டாட்டாவின் வெற்றி ரகசியம் – 1   மாலைமலர் 24-1-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                            27-1-2024 12959 டாட்டாவின் வெற்றி ரகசியம் – 2   மாலைமலர் 24-1-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                                   28-1-2024  12962 புத்தக அறிமுகம் அஹம் ஸ்புரணா.தமிழில்                                            29-1-2024 12966 ராம நாம மஹிமை – 6                                                                 30-1-2024 12969 தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 1

25-1-2024 அன்று ஞானமயம் சார்பில் நடைபெற்ற தைப்பூச நன்னாள் விழாவில் ZOOM வாயிலாக இணையதளத்தில் நடந்த ஒளிபரப்பில் ச.நாகராஜன் ஆற்றிய உரையின் முதல் பகுதி                               31-1-2024 12972 தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 2 உரையின் இறுதிப் பகுதி

***********************

QUIZ பஞ்சப் பிரயாகை பத்து QUIZ (Post No.12,980)

Picture of Deva Prayag 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,980

Date uploaded in London – –   2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 QUIZ SERIAL No.105

1.பஞ்சப் பிரயாகை என்னும் ஐந்து ஸ்தலங்கள் யாவை ?

xxxx

2.விஷ்ணு பிரயாகையில் எந்த இரண்டு நதிகள் கலக்கின்றன?

xxxx

3.நந்தப் பிரயாகையில் எந்த இரண்டு நதிகள் சங்கமிக்கின்றன ?

xxxx

4.கர்ணப் பிரயாகைக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது ?

xxxx

5.கர்ணப் பிரயாகையில் கோவில்கள் இருக்கிறதா ?

xxxx

6.அலக் நந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் இடத்திற்கு என்ன பெயர்ஏன் அப்படி அழைக்கின்றனர்?

xxxx

7.தேவப் பிரயாகையில் சிறப்பு என்ன ?

xxxx

8.கண்டம் என்னும் கடி நகர் சிறப்பு பெறுவதற்கு காரணம் என்ன ?

xxxx

9.கண்டம் என்னும் கடிநகரை / தேவைப் ப்ரயாகையை அடைவது எப்படி ?

xxxx

10 .பஞ்ச பிரயாகை என்ன தூரத்தில் அமைந்துள்ளன ?

xxxx

Karna Prayag

விடைகள்

1.கர்ணப் பிரயாகை , நந்தப்பிரயாகை  , ருத்ரப் பிரயாகை  , தேவப் பிரயாகை , விஷ்ணுப்  பிரயாகை  ஆகிய ஐந்து ஸ்தலங்களை பஞ்சப் பிரயாகை என்று அழைப்பார்கள் .பஞ்ச என்றால் ஐந்து ; பிரயாகை என்றால் நதிகள் கூடும் இடம்; தமிழில் கூடல் என்போம். பெரிய பிரயாகையை  திரிவேணி சங்கம், பிரயாக்ராஜ், அலகாபாத் என்று அழைப்போம். மேற்கூறிய ஐந்து பிரயாகைகளும் உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ளன . நதிகள் கூடும் இடம், நதிகள் கடலில் கலக்கும் இடம், நதிகள் தோன்றும் இடம்– எல்லாவற்றையும் இந்துக்கள் புனிதமாகக் கருதுவார்கள் ; வேறு எந்த கலாசாரத்திலும் இது கிடையாது ; இந்துக்கள் இதே நாட்டில் தோன்றியதால் நீரின் மீது மதிப்பு செலுத்துவார்கள்; நீர் பற்றிய மந்திரங்கள் ரிக் வேதத்தில் உள்ளன .

xxxxx

2. டோலி கங்கா என்ற நதி அலக்நந்தாவுடன் கூடும் இடம் விஷ்ணு விஷ்ணு பிரயாகையாகும். இது நாரதர் தவம் இயற்றிய புனிதத்தலம்.

Xxxx

3.அலக்நந்தாவுடன் மந்தாகினி கலக்கும் இடம் இது .

நந்தப் பிரயாகையில் கோபேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. 24 கதவுகளுடன் பெரிய கோயில்.

Xxxx

4.சூரிய பகவான், கர்னணனுக்கு தெய்வீக  கர்ண குண்டலங்களைக் கொடுத்த இடம் இது. அதனால் இப்பெயர்;  சுவாமி விவேகாநந்தர் மூன்று வாரங்களுக்குத்   தியானம் செய்த புனித இடம்; இங்கே அலக்நந்தாவுடன் பிண்டார் நதி இணைகிறது .

xxxx

5.கர்ணனுக்கும் உமாதேவிக்கும் கோயில்கள் உள்ளன.

Xxxx

6.ருத்ர பிரயாகை என்று பெயர் ; இது சிவன் தாண்டவம் ஆடிய இடம் என்பதால் ருத்ர  பிரயாகை எனப்படுகிறது . இங்கு நாரதர் தவம் செய்ததற்கு அடையாளமாக நாரதர் சிலா என்ற பாறை இருக்கிறது . பத்ரிக்கும் கேதாருக்கும் செல்லும் பாதைகள் பிரியும் இடம் இதுதான்

Xxxxx

7. இங்குதான் அலக்நந்தாவுடன் பாகீரதி நதி கலந்து கங்கை என்ற பெயரில் சமவெளியில் காலடி எடுத்துவைக்கிறது. இன்னும் ஒரு சிறப்பு சரஸ்வதி நதி, இங்குள்ள ராமரின்    பாதத்திலிருந்து மீண்டும் வெளிப்பட்டு கங்கையுடன் கலக்கிறது . ரகுநாத்ஜி கோவிலில் ‘ராம் குண்டம்’  என்ற இடத்தில் ராமரின் பாதங்கள் இருக்கின்றன. தேவ சர்மா என்ற ரிஷி இங்கு தவம் இயற்றினார் ;அவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.  முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்யும் இடம்,. சிவன், காளி, ஹனுமான் கோவில்கள் உள்ளன.  இதுதான் ஆழ்வார்கள் பாடிய கண்டம் என்னும் கடி நகர் என்ற திருத்தலம்.

xxxx

8.இங்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் திருத்தலம் இருக்கிறது . 108 வைணவ தலங்களில் ஒன்று.

மூலவர் பெயர் – நீலமேகப்பெருமாள்;

தாயார் – புண்டரீகவல்லி ;

கோவிலுக்குப் பின்னால் அழகான, சிறிய ஹனுமார் இருக்கிறார் ; ராமர், பிரம்மா, தசரதன், பரத்வாஜர் ஆகியோர் வந்த இடம் . தேவப் பிரயாகை என்பது இதுதான்

xxxx

9.ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில் 70  கி.மீ; பத்ரிநாத்துக்குச் செல்லும் வைணவர்கள் , திரும்பி வருகையில் ரகுநாத்ஜி கோவிலுக்கு சென்று வருகிறார்கள். ஆதி சங்கரர் ஸ்தாபித்த மூர்த்தி இது;

Xxxx

10.ரிஷிகேஷிலிருந்து ஒவ்வொரு பிரயாகைக்கும் உள்ள தொலைவு::

விஷ்ணு பிரயாகைக்கு   256  கி.மீ

நந்தப் பிரயாகைக்கு– 190   கி.மீ

கர்ணப் பிரயாகைக்கு-  169   கி.மீ

ருத்ர பிரயாகைக்கு – 140    கி.மீ

தேவப் பிரயாகைக்கு – 70  கி.மீ

 —subham—                    

Tags-  பஞ்ச பிரயாகை, Quiz, கர்ணப் பிரயாகை , நந்தப்பிரயாகை  , ருத்ரப் பிரயாகை  , தேவப் பிரயாகை , விஷ்ணுப்  பிரயாகை 

London Swaminathan’s Tamil Book on Burma & Confucius

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கன்பூசியஸ், பர்மா பற்றிய

அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

பொருளடக்கம்

1.ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் -1

2.ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் -2

3.கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 1

4.கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 2

5.கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

6.இரண்டு முயல்களைத் துரத்தாதே! பரமஹம்சரும் கன்பூசியஸும்

7. சினம்/ கோபம்: கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் !- 1 

8. நல்லவை கேட்க!கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- 2

9.தன் நம்பிக்கை : கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- 3

10.தமிழ்ப் பழமொழிகளில் கன்பூசியஸ் தத்துவம் 

11. அதிகம் அடிபட்டவர் சிவபெருமான் !

12. அப்பர் பற்றிய அரிய தகவல்கள்– சொ. சொ. மீ. உரை

13. சிவபெருமான் நேரில் வந்தபோது நடந்தது என்ன?

14. ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை

15. திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1

16. திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-2

17. தெரிந்த ஊர், தெரிந்த கதை: புதிய விளக்கங்கள்!!

18.பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள்: வெற்றிலை

எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1

19.பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் -2

20. பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள்

21. பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -1

22. பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -2

23. பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தங்கப்  பிள்ளையார் !

24. பிஸினஸ் மேன் Business Man பற்றி குட்டிக்கதை

25. தமிழ் அதிசயம்! ஒரே எழுத்துக்கு  45 அர்த்தம் !!

26. நிவேதிதா வாழ்க்கையில் நடந்த அற்புதம்;  லண்டனில் சிலை திறப்பு

27. லண்டன் முருகன் தேர் திருவிழா; London Skanda Temple Rath Yatra 2023

28. இலண்டன் திருப்புகழ் விழா LONDON THIRUPPUGAZ FESTIVAL

29. லண்டன் ஹரே கிருஷ்ண ரத யாத்ரா London Ratha Yatra

30.மேலை நாடுகளில் சோதிடம் வளர்கிறது

31. ஆரூடம் கேட்பது, குறி சொல்லுவது உண்மையே! பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒப்புதல்  

************************

முன்னுரை

இந்த நூல், அண்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதில் முக்கியமாக இடம்பெறுவது சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றியும் பர்மா வரலாறு பற்றியும்  உள்ள சுவையான செய்திகளாகும். இன்று புத்த மத நாடாகக் காட்சி தரும் பர்மா என்னும் மியான்மாரில் (Burma / Myanmar) ஒரு காலத்தில் இந்து மதம் தழைத்தோங்கி இருந்தது. அதற்கான சான்றுகளைத் தந்துள்ளேன். சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றி  தமிழ் பத்திரிகைகள் கவனம் செலுத்தின ; ஆனால் அவருடைய பொன்மொழிகள் அனைத்தும்  நமது இந்து மத நூல்களில் உள்ள கருத்துக்கள்தான் என்பதை. இதுவரை யாரும் சுட்டிக் காட்டாததால்  அவற்றை ஓரளவுக்கு கீதை, குறள் , தமிழ் , ஸம்ஸ்க்ருதப் பழ மொழிகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.

கட்டுரை எழுதிய காலத்தில் வந்த ஜோதிடச் செய்திகளும் ஆயுர்வேதச் செய்திகளும்  கட்டுரைகளாக சேர்க்கப்பட்டுள்ளளன.

இறுதியாக லண்டனில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப்  பற்றிய சிறிய விமர்சனங்களும் உள்ளன ; முப்பது ஆண்டுகளாக நடந்து வரும் ஹரே கிருஷ்ணா இயக்க ரத யாத்திரை, லண்டன் முருகன் கோவில்  ரத யாத்திரை, ஆண்டுதோறும் நடந்துவரும் திருப்புகழ் விழா, மற்றும் சகோதரி நிவேதிதா சிலைத் திறப்பு விழா ஆகியவற்றைச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன் ; முடிந்த அளவு, படங்களையும் சேர்த்து இருக்கிறேன்.  அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே நோக்கம் .

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

Swami_48@yahoo.com

செப்டம்பர் 2023

Title-  கன்பூசியஸ்பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – 2024

Subject – History and Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles and 116 Tamil and English Books

Visited 15 Countries

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Sri Lanka and Greece

**************

 இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 Tags- கன்பூசியஸ், பர்மா ,அரிய தகவல்கள்,ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழா,

லாபம்  தரும் லாவெண்டர் ஏற்றுமதி; மும்பை அருகில் மூலிகைப் பண்ணை (Post No.12,979)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,979

Date uploaded in London – –   2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

லாபம்  தரும் லாவெண்டர் சாகுபடியும் ஏற்றுமதியும்

லாவெண்டர் என்னும் வாசனைச் செடியின் எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் , உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

வொல்சா புள்ளிவிவரம் Volza’s India Export data :

14,000 கப்பல்கள் சுமந்து சென்றன; இந்தியாவிலிருந்து 702 நிறுவனங்கள்  இதை கப்பலில் அனுப்பின; அதை 4335 நிறுவனங்கள் விலைக்கு வாங்கின.

As per Volza’s India Export data, Lavender oil export shipments from India stood at 14.1K, exported by 702 India Exporters to 4,335 Buyers.

உலகில் இதை ஏற்றுமதி செய்யும் நாடுகள் :

இந்தியா 14 ,140  கப்பல் லோட்/shipments

பிரான்ஸ் – 4410

ஜெர்மனி -3403 

The top 3 exporters of Lavender oil are India with 14,140 shipments followed by France with 4,410 and Germany at the 3rd spot with 3,403 shipments.

அமெரிக்கா, கனடா, பிரிட்டனுக்கு அதிக அளவு லாவெண்டர் எண்ணெயை இந்தியா அனுப்புகிறது .

XXXX

லாவெண்டர் தாவரம் பற்றிய அதிசய விஷயம் என்னவென்றால் அது 15 ஆண்டுகளுக்கு பலன் தருகிறது ஆகையால் அதை வளர்ப்பதற்கான செலவு மிகவும் குறைவு. Lavender plant gives flowers for 15 years .

xxxx

இந்தியா முழுதும் பயிர் செய்யலாமா ?

முடியாது. இது மித வெப்ப (Temperate) பிரதேச தாவரம். ஆகையால் இமயமலையை ஒட்டிய வட இந்தியாவில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது .

வட இந்திய மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் , உத்தரகண்ட் ஆகியன  இந்த செடிக்கு ஏற்ற பருவ நிலையைக் கொண்டுள்ளதால் அங்கே சாகுபடி செய்கின்றனர் .

பஞ்சாப் மாநிலத்தில் சில பகுதிகளில் இது வளர்கிறது . இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் The Indian Institute of Horticultural Research (IIHR) இந்திய பருவநிலைக்கு ஏற்ற புதிய வகைகளை உண்டாக்கியிருக்கிறது .

காஷ்மீர் மாநிலம்தான் மிகவும் உகந்த இடமாகக் கருதப்படுகிறது .

xxxx

பயன்கள் என்ன ?

இந்தச் செடியின் இலை தழைகள் எல்லாம் சுகந்த மனம் வீசுவதால் இதை  பெர்பியூம் (PERFUME)  எனப்படும் சென்ட்களிலும் , அரோமாதெரப்பி மருந்துகளிலும் பயன்படுத்துகின்றனர் ; இது தவிர சோப்பு, முகத்தில் பூசும் பவுடர் , வீடுகளில், கார்களில் வாசனை வீசும் பொருட்கள், மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள் ஆகியவற்றிலும் இது பயன்படுகிறது.

Lavender is a versatile herb that is known for its distinct scent and medicinal properties. It is widely used in perfumes, cosmetics, and aromatherapy products.

இந்தச் செடியை சாகுபடி செய்வோர் தாமாக மேற்கூறிய சிறு தொழில்களையும் ஆரம்பிக்க வாய்ப்பு தருகிறது.

குறைந்த பாசனம் போதும்; மேலும் பூச்சிகள் இதை எளிதில் தாக்காது. ஆனால் தேனீக்களை மட்டும் கவர்ந்து இழுக்கும்; ஆகையால் எல்லா வகையிலும் இது புறச்சூழலின்  நண்பன்.

xxxx

சாகுபடிக்கு சவால் விடும் பருவ நிலை மாற்றம்

லாவெண்டர் செடிகள் வளருவதற்கு 60 -80  பாரன்ஹீட் வெப்ப நிலை போதும். Lavender grows well in temperatures ranging between 60-80 degrees Fahrenheit.   தற்காலத்தில் காற்றுமண்டல வெப்ப நிலை உயர்ந்து வருவது இதற்கு ஒரு சவாலாக விளங்குகிறது.

லாவெண்டர் சாகுபடி சுற்றுலாவுக்கு உதவுகிறது ; ஹாலந்தில் துலிப் மலர்களையும் ஜப்பானில் செர்ரி மலர் பூப்பதையும் காண வரும் சுற்றுலாப்  பயணிகளைப் போல காஷ்மீரில் லாவெண்டர் மலர்களை பூப்பதைக் காண சுற்றுலாப்பயணிகளும் வருகின்றனர் .

ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் ?

மக்காச்  சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஹெக்டேருக்கு Rs. 40,000/- to Rs. 60,000/- per hectare கிடைத்தது.

அவர்களே லாவெண்டர் சாகுபடி செய்தவுடன் வருமானம் ஹெக்டேருக்கு  Rs. 3,50,000/- to Rs. 6,00,000/- ஆறு லட்சமாக உயர்ந்தது  .

xxxxx

HERB FARM NEAR MUMBAI

மும்பை அருகில் மூலிகைப் பண்ணை

மருத்துவத்தில் பயன்படும் 500  மூலிகைகளையும், செடி, கொடி , மரங்களையும் நட்டு வளர்க்க மும்பை நகரிலுள்ள டாடா நினைவு கேந்திரம் (Tata Memorial Centre) ஏற்பாடு செய்துள்ளது இந்தப் பண்ணை , நகருக்கு அருகில் அமைக்கப்படுகிறது . அங்கு 100  படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையும் அமைக்கப்படும். மூலிகை மூலமாக  புற்றுநோயால் கஷ்டப்படும் நோயாளிகளை எந்த அளவுக்கு குணப்படுத்த இயலும் என்பதை ஆராயும் ஆராய்ச்சிக்கூடமும் அங்கே இருக்கும் . Tata Memorial Centre இந்தியாவில் புற்றுநோய் வந்தவர்களைக் குணப்படுத்தும் மருத்துவ மனைகளில் முதல் 5 இடங்களுக்குள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .

–subham—

Tags- லாவெண்டர் , சாகுபடி, ஏற்றுமதி, மும்பை , மூலிகைப் பண்ணை

மின்னல் வேக மன்னன் ப்ரூஸ் லீ – பயிற்சியே வெற்றி! (Post No.12,978)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,978

Date uploaded in London – — 2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 மாலைமலர்

மின்னல் வேக மன்னன் ப்ரூஸ் லீ – பயிற்சியே வெற்றி!

                                                                     ச.நாகராஜன்

மின்னல் வேக மன்னன் 

மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் ப்ரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம் இவரைக் கண்டு பிரமித்தது  இவரது அபாரமான வேகத்தினால் தான். 

அவரைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ‘ஒன் இன்ச் பஞ்ச்’ என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து எதிரிலிருப்பவரை வீழ்த்தும். இந்த ஒரு அங்குல இடைவெளியிலிருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமான அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர். இந்த ஒரு இஞ்ச் குத்தின் வேகத்தை ஒருவாறாகக் கணக்கிட்ட நிபுணர்கள் அது மணிக்கு 190 கிலோமீட்டர் இருந்ததாகக் கூறினர். (மிகக் கொடூரமான புயலின் வேகம் கூட அதிக பட்சம் மணிக்கு 117 கிலோமீட்டர் தான்!) 

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் சைனா டவுனில் உள்ள ஒரு சீன மருத்துவமனையில்  1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி லீ ஹோய்-சூன் மற்றும் கிரேஸ் ஹோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ப்ரூஸ் லீ.

சீன பஞ்சாங்கத்தின்படி அவர் பிறந்த வருடம் டிராகன் வருடம். அதே போல பிறந்த நேரமும் கூட காலையில் வரும் (7 முதல் 9 மணி வரை வரும்) டிராகன் நேரம் தான். அதிர்ஷ்டமான நேரத்தில் பிறந்த அவருக்கு இளமையில் பெயர் – லிட்டில் டிராகன்! 

இளம் வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் தோற்றமளித்தார்.

குழந்தையுடன் பெற்றோர் ஹாங்காங் நகருக்கு குடி பெயர்ந்தனார்.

இளம் வயதிலேயே தற்காப்புக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த

ப்ரூஸ் லீ ஹாங்காங் நகரில் அந்தக் காலத்தில் மிக சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தெருச்சண்டைகளில் ஈடுபட்டார். வீட்டுக் கூரைகளிலும் இது நடைபெறுவது வழக்கம்,

நகரத்தையே அச்சுறுத்திய ஒரு பிரபல ரௌடியின் மகனை தெருச்சண்டை ஒன்றில் வீட்டுக்கூரை மீது புரட்டி எடுத்தார் ப்ரூஸ் லீ.

அவனுக்கு கைமுறிவு ஏற்பட்டது; பல் தெறித்து விழுந்தது.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ப்ரூஸ்லீயின் தாயார் இது போல நடைபெறாதவாறு தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்து அவரை வெளியே மீட்டு வந்தார்.

அமெரிக்கா திரும்பல்

அமெரிக்காவில் பிறந்த காரணத்தினால் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் பெற்றோர் ப்ரூஸ் லீயை அமெரிக்காவிற்கே அனுப்பத் தீர்மானித்தனர். சியாட்டிலில் குடியேறிய ப்ரூஸ் லீ அங்கு குங் பூ பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார்.

தற்காப்புக்கலையில் விசேஷ கவனம் செலுத்திய அவர் தனது திறமையினால் ஜீத் குனோ டோ என்ற புதிய முறையை வகுத்தார். இந்த முறை ஒரு புதிய பரிமாணத்தை உலகிற்குக் காண்பிக்கவே ப்ரூஸ் லீயின் புகழ் தற்காப்புக் கலை வட்டாரத்தில் பெரிதாகப் பரவியது.

கல்லூரியில் சேர்ந்த ப்ரூஸ்லீ படிப்பை விட தனது குத்துச்சண்டையில் அதிக கவனம் செலுத்தினார். கல்லூரியிலிருந்து வெளியேறினார்.

தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொலைக்காட்சித் தொடர்

‘தி க்ரீன் ஹார்னெட்’ என்று ஒரு தொடர். அதில் கடோ என்ற பாத்திரத்தில் நடித்த ப்ரூஸ் லீ ஒரு காட்சியில் பாட்மேனுடனான சண்டையில் தோற்க வேண்டும். முடியாது என்று மறுத்து விட்டார் லீ. பின்னர் பேட்மேனும் இவரும் டிரா செய்வதாக கதை திருத்தப்பட்டது. அவ்வளவு தன்மானம் உள்ளவர் ப்ரூஸ் லீ. 

என்றும் வெற்றிஎவருடனும் வெற்றி!

ப்ரூஸ் லீயின் உயரம் 172 செண்டிமீட்டர். எடை 64 கிலோ.

கடுமையான பயிற்சியின் மூலம் அவர் தனது இரு விரல்களைக் கீழே பூமியில் வைத்து உடலைத் தூக்கி நிறுத்துவார். இதைப் பார்த்த மற்றவர்கள் வியந்தனர். 

சியாட்டிலில் இருந்த போது யோய்ச்சி நகாசி என்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் ப்ரூஸ் லீயை வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்தார். முதலில் அவரை அலட்சியமாக ஒதுக்கிய லீ ஒரு கட்டத்தில் அவரது சவாலை ஏற்க வேண்டியிருந்தது. சரியாக பதினோரு விநாடிகளில் இரண்டே அடிகளில் அவரை வீழ்த்தினார் ப்ரூஸ் லீ. பிரக்ஞையை இழந்து தள்ளிப் போய் விழுந்த நகாசிக்கு மண்டையில் பலத்த காயம் பட்டது. இப்படி சில விநாடிகளில் எதிராளியை வீழ்த்தும் அவரது  கை முஷ்டிக்கும் அதன் வீச்சிற்கும் அனைவரும் பயந்தனர்; வியந்தனர்.

சக் நாரிஸ் என்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் அவருடன் நட்பு பாராட்டினர்.

ஒரு முறை சக் நாரிஸிடம், “ நீங்களும் ப்ரூஸ் லீயும் சண்டை போட்டால் யார் ஜெயிப்பார்கள்?” என்று கேட்ட போது, “சந்தேகம் என்ன, ப்ரூஸ் லீ தான்!” என்று பதிலளித்தார் அவர்.

மனைவியும் மக்களும்

1964, ஆகஸ்ட் 17ஆம் நாளன்று லிண்டா என்ற பெண்ணை லீ திருமணம் செய்து கொண்டார். ப்ரண்டன் லீ என்ற மகனும் ஷானன் லீ என்ற மகளும் அவருக்கு உண்டு.

ப்ரண்டன் லீ பிற்காலத்தில் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்தார். ஷானன் லீ நடிகையானார். 

திரைப்படங்களில் நடிக்க ஆர்வம்

வாழ்நாளில் ஐந்தே ஐந்து திரைப்படங்களில் தான் நடித்தார் ப்ரூஸ் லீ.

தி பிக் பாஸ்  (The Big Boss – 1971)

ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி (Fist of Fury – 1972)

 வே ஆஃப் தி ட்ராகன்(Way of the Dragon – 1972)

எண்டர் தி ட்ராகன்(Enter the Dragon – 1973)

கேம் ஆஃப் டெத் Game of Death – 1978)

உலகப் புகழ் பெற்ற படமான ‘எண்டர் தி ட்ராகன்’

அவர் மறைந்த சில நாட்களுக்குப் பின்னாலேயே திரைக்கு வந்தது.

‘கேம் ஆஃப் டெத்’ படமோ’ அவர் மறைந்த பிறகே முடிக்கப்பட்டது. திடீரென அவர் மறைந்ததால் கதையும் மாற்றப்பட்டது. இதில் அவரது பிரேத ஊர்வலம் அப்படியே எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.

இவர் நடித்த ஐந்து திரைப்படங்களே எதிர்காலத்தில் மற்றவர்கள் 168 படங்களை எடுக்க உத்வேகம் ஊட்டியது!

 எண்டர் தி ட்ராகன் 

உலகத்தின் கவனத்தையே ஈர்த்த ‘எண்டர் தி ட்ராகன்’ திரைப்படம் ப்ரூஸ் லீ மறைந்த சில தினங்களுக்குப் பிறகு 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

99 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத் தயாரிப்பின் போது அவர் பட்ட கஷ்டம் அதிகம். ஏராளமான காயங்கள், ஒரு காட்சியில் பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது. ஷூட்டிங்கை நிறுத்த கூடாது என்று சொல்லி உரிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது அவர் வழக்கம். மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டவாறே நடித்துக் கொண்டே இருந்தார் அவர்.

3500 லட்சம் அமெரிக்க டாலரை ஈட்டியது இந்தப் படம்.

தற்காப்புக் கலை பற்றி வெளி வந்த படங்களில் உலகின் தலையாய படமாக இன்றளவும் திகழ்வது இந்தப் படமே! 

மறைவு 

ப்ரூஸ் லீயின் மறைவு எவ்வளவு அகாலமானதோ அவ்வளவு சோகமானதும் கூட. 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அவர் மறைந்தார்.

 இயல்பாகவே அதிக உஷ்ணத்தை அவர் உடலால் தாங்க முடியவில்லை. அவரது உடலிலிருந்து வியர்வைச் சுரப்பிகள் அகற்றப்பட்டன. அவருக்கு வலிப்புகள் வருவதுண்டு. தலைவலி வேறு உண்டு.

 1973, மே 10ஆம் தேதி ஹாங்காங்கில் கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் ப்ரூஸ் லீ திடீரென மயங்கி விழுந்தார்.மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டு, மனிடால் என்ற மாத்திரையைத் தந்து மூளை வீக்கத்தை சரி செய்தனர்.

இதே மூளை வீக்கமும் தலைவலியும் திரும்பவும் 1973 ஜூலை 20ஆம் தேதி அவருக்கு ஏற்பட்டது. தலை வலிப்பதாக ப்ரூஸ் லீ சொல்லவே தைவான் நடிகையான பெட்டி டிங் பெய் ஒரு வலி நிவாரண மாத்திரையை கொடுத்தார். சிறிது ஓய்வு எடுக்கச் சென்ற லீ எழுந்திருக்கவே இல்லை. ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட  போது லீ இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். மறைந்த போது அவருக்கு வயது 32.

உடல் பரிசோதனையைச் செய்த டாக்டர் 1400 கிராம் இருக்க வேண்டிய மூளை 1575 கிராமாக வீங்கி இருப்பதைச் சொல்லி மூளை வீக்கத்தினால் அவர் இறந்து விட்டதாக தனது முடிவை தெரிவித்தார்.

ஆனால் இன்றளவும் அவர் மரணம் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

அவரது உடல் சியாட்டிலில் லேக் வியூ சிமெட்ரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 வெற்றி பெற ப்ரூஸ் லீ தரும் அறிவுரை 

“சிரஞ்சீவியாக இருக்க ஒரே வழி, அனைவரும் எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வது தான்!” என்று கூறிய ப்ரூஸ் லீ, தான் கூறியபடியே அனைவரின் நினைவிலும் இன்றளவும் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.

இந்த நிலையை அடைய எளிய வழிகளையும் அவர் கூறி இருக்கிறார். அவற்றில் முக்கியமானவை இதோ:

1. “பத்தாயிரம்  உதைகளைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபோதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் அவர்.

“ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும்” என்றார் அவர்.

தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது. அகல உழுவதை விட ஆழ உழு; என்றும் பத்து இடங்களில் பத்து அடி தோண்டுவதை விட ஊற்று இருக்கும் இடத்தை நிர்ணயித்து நூறு அடி தோண்டு என்றும் தமிழில் முன்னோர்கள் கூறியுள்ளதை நினைவு கூரலாம்.

2. தண்ணீர் போல நெகிழ்வுடன் இருங்கள்! எந்தத் தடையையும் எதிர் கொண்டு நெகிழ்வுடன் சென்று அதை மீறி தனது இயல்பாக இருக்கும் தண்ணீரிலிருந்து ஏராளமான பாடத்தைக் கற்கலாம்.

3. வேரை அறிந்து  கொள்ள முயலுங்கள். எது இலை, எது கிளை, எது அழகான மலர் என்ற விவாதத்தில் இறங்க முயல வேண்டாம். வேரை அறிந்து கொண்டால்  மலர் மலரும் விதம் உங்களுக்குத் தானே புரிந்து விடும்!

4. அறிவது மட்டும் போதாது; அறிவதைச் செயலில் கொண்டு வர வேண்டும். விருப்பப்பட்டால் மட்டும் போதாது. அதை அடைய செயலில் இறங்க வேண்டும்..

5. ஒரு நாளைக்கு ஒரு சிறிது முன்னேற்றமாவது அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பயிற்சியே வெற்றி தரும் என்று நிரூபித்த அதிசய மனிதர் ப்ரூஸ் லீ!

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 4 (Post No.12,977)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,977

Date uploaded in London – –   1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 4

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

XXXXX

சில்லரை விஷத்திற்கு

31. ஆடுதீண்டாப்பாளை வேர், கவுத்தும்பை வேர்,  வெள்ளெருக்கு வேர் , மருக்காறை வேர், இவைகளை சமநிடை எடுத்து அறைத்து , உடம்பில் பூசி முருக்கித் துவட்டினால் , கருவழலை- தண்ணிப்பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் தீரும்  

xxxx

32 . ஆனை  நெருஞ்சியிலையை  சிறுநீர் விட்டறைத்து இடித்து சாறு பிழிந்து சுமார் அரைக்கால்படி உள்ளுக்கு  கொடுத்தால் மேற்படி விஷங்கள் நிவர்த்தியாகும் ; பார்வதி பரணீயம் என்னும் சாஸ்திரத்தில் சகலவித சர்ப்பத்திற்கும் ஜாதி, நிறம், குறி, அடையாளமும் அதற்கு அனுபோகமான மருந்துகளும் வெகு விபரமாய்ச் சொல்லியிருக்கிறது .

xxxx

முள்ளு வெளிப்பட

33 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து முத்தையாக்கி காலில் முள்ளு  தைத்த இடத்தில் வைத்துக்கட்டி மறுதினம் அவிழ்க்க முள்ளு வெளியில் வந்துவிடும் .

xxxxx

குதிக்கால் வெடிப்புக்கு

34 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து பில்லைதட்டிக்  காயவைத்துச் சுட்டு அந்த சாம்பலை தேன்விட்டிழைத்து, குதிக்கால் வெடிப்பு, ஆசன வெடிப்பு இதுகளுக்கு இரண்டு வேலை தடவ வெடிப்புகள் மாறிவிடும் .

xxxx

வயிற்றுக்கடுப்புக்கு

35.ஆலம் விழுதை எருமைத்தயிர் விட்டரைத்து ஒரு பலம் எடுத்து எலுமிச்சம்பழ ரசம் ஒரு பலம் விட்டுக் கலந்து கொடுக்கவும். இப்படி இரண்டு மூன்று வேளை கொடுக்க வயிற்றுக்கடுப்பு தீரும் .

xxxxx

36 . ஆசனக்கடுப்புக்கு புகை

ஆமையோட்டையிடித்து  பொடிசெய்து நெருப்பில் தூவி அந்தப்புகையை அபானத் துவாரத்திற் பிடிக்க . ஆசனக்கடுப்பு உடனே தீரும் .

Xxxx

37 . ஆண்குறி புண் வீக்கத்திற்கு

ஆதளைப் பாலை ஆண்குறி  தோலின் மீது உண்டாகும் புண், ரிணம்  இதுகளுக்குத் தடவி , அலரிப்பூவைக் கசக்கி அதன்மேல் வைத்துக்கட்டி னால் வீக்கம் வாடிப்போகும்; புண் ஆறிவிடும் .

xxxxx

38 .புழுவெட்டுக்கு

ஆனைத்தந்தத்தை சுட்டுப் பொடியாக்கி தேனில்குழைத்து புழுவெட்டினாலாவது  மற்ற எவ்விதத்தாலாவது மயிர் உதிர்ந்துபோன இடத்தில் எட்டுநாள் தடவி வந்தால் மயிர் முளைக்கும் .

xxxxx

39 .மயிர் கருப்பாகத் தைலம்

னைத்தந்தத்தின் பொடி பலம் ஐந்து —  எட்டு படி தண்ணீரில் போட்டு ஒருபடியாய்க் காய்ச்சி அதில் ஒரு படி நல்லெண்ணெய் விட்டு சவுரிக்கொடி அவுரித் தழை , கரணங்  கண்ணி சிவந்த ஆலம் விழுது இவைகளின் சாறு  வகைக்குப்படி கால் –  ஒன்றாய்க்கலந்து பதமாய்க் காய்ச்சி,  வடித்து சிரசில் பதமிட்டுவந்தால் மூன்று மாதத்தில் எப்பேர்க்  கொற்ற நகையும் மாறிவிடும் .

தைலபதம், எண்ணெய் பதம், மெழுகுபதம் இவைகளை பார்வதி பரணீயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது .

xxxxx

40 .ஒக்காளத்திற்கு

ஆளிவிரை ஒரு பலம் எடுத்து 4 பலம் ஜலத்தில் ஒரு ராத்திரி  ஊறவைத்து  காலையில் எடுத்து மல் துணியில் கொட்டிப்பிழிந்து ஒரு பலம் வெள்ளை சக்கரைபோட்டுக் கலக்கி சாப்பிடவும். பத்து நாலா சாப்பிட அழலை, ஒக்காளம், நரம்புக்குத்து, வலி,வாந்தி,  வீக்கம்,  விரைவாதம் தீரும்.

–subham—

Tags-  முனிசாமி முதலியார்,   மூலிகை அதிசயங்கள், Part 4, ஒக்காளம் மயிர் கருப்பாகத் தைலம் , ஆண்குறி புண்,  வீக்கத்திற்கு, புழுவெட்டுக்கு

London Swaminathan’s New Book on Hindu Saints, Temples & Historical Atrocities

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Strange Stories about Hindu Saints, Temples

and Historical Atrocities ( book title)

CONTENTS

1.The Mysterious disappearance of Great Hindu Saints

2.Rebirth is True : New Evidence from Newspaper

3.Interesting Titbits from Confucius life!

4.‘Don’t Chase Two Rabbits’: Paramahamsa and Confucius

5.Rapist on run gave up after being fed!

6.The Tortoise Mystery: Can we live for 300 years?

7.Clairvoyant predicted Middlesbrough woman’s £12,050 Postcode Lottery

8.Great Demand for Astrologers in London

9.Swamiji Krishna’s Miracles!

10.More Miracles by Swamiji Krishna

11.British massacred Muslims in India

12.Death Sentence to Naked Muslim Saints

13.Homer’s Iliad did a Miracle! Power of Words

14.How did Two Japanese Cities escape from American Atom bombs?

15.Englishman mocking at ‘Lazy’ Dravdidans!

16.Gemmology in Brhat Samhita

17.Kohinoor Diamond: Interesting Anecdote by Hallam Murray

18.Diamond hunting in Anantapur, Kurnool regions on in monsoon season

19.Eight Types of Pearls in Varahamihira’s book;  20 Types of Pearls in Tamil Book

20.Hindus’ belief in Gem Stones

21.Pearl in Foreign Languages

22.Nagaratna/ Cobra Jewel, Rubies and Emeralds in Brhat Samhita

23.How did Shakespeare know about the Indian Co-bra Jewel-Nagaratnam?

24.Dheeran Chinnamalai, a fighter to the last!

25.Strange Stories about 50 Ganesh Temples in Tamil Nadu – 1

26.Ganesh who ate the Prasad: Strange Stories from Tamil Temples-Part 2

27.Strange Stories from Ganesh Temples in Tamil Nadu -3

28.Vatapi Ganapathim Bhaje!

29.World’s Largest Shivalinga Temple opened in Assam

30.My Visit to Kukke Subrahmanya Temple

31.My Visit to Selaiyur Skandhashram Temple

32.My Trip to Thirukkadavur Shiva Temple

33.My Visit to Udupi Sri Krishna Temple

34.Hampi -Hindu Wonder destroyed by Muslim Invaders

35.Two Hindu Wonder Ovens

36.Mirror Temples! Hindu Wonders!!

37. Saraswati Statue in Saudi Arabia

38. Unique Hindu Temple in Mauritius

39.Sound of Indian Pungi Music Does Wonders- Report Swiss Scientists

40.Hide and Seek Game in Sangam Tamil literature

41.Albert Einstein on Cluttered Desk!

42.Patriotism: Bismarck and Californians!

43.Names Make it or Mar it

44.The Man Who ‘Discovered’ Yosemite!

*****************

Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

Foreword

This book has a collection of articles to cater to the needs of people with different tastes. They can be classified under five broad categories. 1) Temples, 2) Saints and Miracles, 3) Stories about Gem Stones , 4) Historical incidents and 5) Anecdotes . I struggled a lot to find a common title to the book and at last decided at the current title after several additions, commissions, and omissions.

The story of diamonds in Hindu literature starts with Bhagavata Purana. During Lord Krishna’s days,  the Syamantaka diamond caused murder and mayhem. I have written about it under  the title Hope Diamond in another book published already. Since these are written as separate articles for my blog over a period of 12 years, one can open any chapter and read it. There are over 40 topics dealing with the subjects mentioned above. In some articles I have added my personal experience as well. Hope our readers also find them interesting.

London swaminathan

October 2023

swami_48 @ yahoo.com

—– SUBHAM—

TAGS- BOOK ON SAINTS, HISTORICAL ATROCITIES, FESTIVALS.

QUIZ வைஷ்ணவ தேவி கோவில் பத்து QUIZ (Post No.12,976)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,976

Date uploaded in London – –   1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.104

1.வைஷ்ணவ தேவி கோவில் எங்கே இருக்கிறதுஎப்படிப் போகவேண்டும்?

xxxx

2.வைஷ்ணவ தேவி கோவிலின் சிறப்பு என்ன?

xxxxx

3.கோவிலுக்குச் செல்ல காட்டுப்பாடுகள் உண்டா ?

xxxx

4.கோவிலுக்குப் போவதற்கு குறுகிய குகை வழியாகச் செல்ல வேண்டுமா ?

xxxx

5.கோவிலுக்குள் யாரைத் தரிசனம் செய்யலாம் ?

xxxx

6.திருப்பதி மலை ஏறுவோர் கோவிந்தா கோஷம் போடுவார்கள்சபரிமலை ஏறுவோர் சரணம் ஐயப்ப கோஷம் எழுப்புவார்கள்வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்லும் கோடிக்கணக்கான பக்தர் எழுப்பும் கோஷம் என்ன ?

xxxxx

7.பாண கங்கா ஆறு எங்கே இருக்கிறதுஅதற்கும் தேவிக்கும் என்ன தொடர்பு ?

XXXX

8.பைரவன் காட்டிக்கும் ஐரோன்கட்டி BHAIRON GHATTI  க்கும் வைஷ்ணவ தேவிக்கும் என்ன தொடபு?ர்

XXXX

9.அர்த்த குமாரி / குவாரி குகை Ardhkumari cave என்பது என்ன?

XXXX

10.கோவில் எப்போதும் திறந்திருக்குமா ?

XXXX

விடைகள்

1.இந்தியாவின் வடகோடி மாநிலமான ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பிரதேசத்தில் திரிகூட மலையின் மேல் வைஷ்ணவ தேவி குகைக்கோயில் (VAISHNO DEVI TEMPLE) அமைந்துள்ளது . கத்ரா KATRA  என்பது அடிவார ஸ்தலம்; இங்கிருந்து கால்நடையாகவும் யாத்திரை செல்லலாம். தற்காலத்தில் ஹெலிகாப்டர் வசதி, பாட்டரியால் இயங்கும் கார் வசதிகள் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் கால் நடையாக செல்ல முடியாதவர்கள்  குதிரை மீதும், பல்லக்கிலும் சவாரி செய்வார்கள். இதற்கான வசதிகள் அங்கே உண்டு . ஒவ்வொன்றுக்கும் கட்டணம் உண்டு.

.ஜம்மு நகரிலிருந்து 42 கி.மீ தொலைவில் கத்ரா உள்ளது .

5200 அடி உயரத்தில் கோவில் இருப்பதால் 14 கி.மீ பல ஏறுவதற்கு மணி நேரம் ஆகும். மிகவும் கடினமான ஏற்றம்

ஹெலிகாப்டர், பாட்டரி கார் வேண்டியோர் கோவிலின் அதிகாரபூர்வ வெப்சைட்டில், ஆன் லைன் வழியாக டிக்கெட்டும் வாங்கலாம்.

பாட்டரி காரில் ஏறுவதற்கு ஆறு  கி.மீ செல்ல வேண்டும் .மேலும்  எட்டு கிலோமீட்டரில் கார் மூலம் கோவிலை அடையலாம் ; இது வயதான பயணிகளுக்கு பாதி தூரம்  உதவும் சர்வீஸ்.

Helicopter services start from Katra on the foothills and the flight will drop you at Sanjhichatt. This visit to the sacred Shrine, enveloped by the clouds is the beginning of a breathtaking heli-hop.

The flight from Katra to Sanjichhat takes a total of approx. 08 minutes.

One way fare from Katra to Sanjichhat or Sanjichhat to Katra (Fare Rs.1830/- ) per passenger and Katra-Sanjichhat-Katra (Fare Rs.3660/-) per passenger.

Vaishnodevi Bhawan/temple is approx. 2.5 Km. from Helipad Sanjichhat.

 xxxxx

2.நாட்டிலேயே அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்கள்  பட்டியலில் வைஷ்ணவ தேவி கோவில் முதல் ஐந்து  இடங்களுக்குள் உள்ளது , அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது  வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1 .2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும்.

xxxx

3.உண்டு. கத்ரா நகரில் பதிவு செய்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் .

விமானப்பயணம் போல கத்தி கபடா , சிகரெட் முதலியவற்றுக்கு அனுமதி இல்லை ; முஸ்லீம் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தக் கட்டுப்படுகள். மேலும் இந்திய பாதுகாப்புப்படைகள் 24 மணி நேரமும் இந்த இடத்தைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளன . உடைக் (Dress Code) கட்டுப்பாடுகளும் உண்டு.

xxxx

4.முன்னர் இப்படி குகை வழியாகச் செல்ல வேண்டியிருந்தது . இப்போது இரண்டு செயற்கை சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுவிட்டன. உள்ளே, வெளியே என இரண்டு வழிகள்;  கோவில் தொடர்பான சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே குகைப்  பாதை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணியும் இதன் வழியாகச் சென்றால் அதைக்கடக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது .இதனால் சுரங்க வழிகள் கட்டப்பட்டன.

xxxxx

5. கோவிலுக்குள் சக்தியை / தேவியை தரிசிக்கலாம். துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் இருப்பிடமாக   கருவறை கருதப்படுகிறது

மனித உருவில் ஒரு பக்தனுக்கு அருள்பாலித்த தேவி தனது உருவத்தை மறைத்து,  ஐந்தரை அடி உயரம், மூன்று தலைகள் (பிண்டி) உள்ள பாறையாக மாறினாள்; இதுவே குகையில் உள்ள மூலவர். இது தவிர உற்சவ மூர்த்திகள் இருக்கின்றன.

Meanwhile, Vaishnavi decided to shed off her human form and assuming the face of a rock she immersed her self into meditation forever. Thus Vaishnavi, in the form of a five and a half feet tall rock with three heads or the Pindies on the top is the ultimate destination of a devotee. These Pindies constitute the Sanctum Sanctorum of the holy cave known as the shrine of Shri Mata Vaishno Devi Ji, which is revered by one and all.

xxxx

6.,“ஜெய் மாதா தி” Glory/Victory to Mother. அன்னையின் நாமம் வாழ்க/ வெல்க!

xxxxx

7.கத்ரா நகரிலிருந்து புறப்படும் யாத்ரீகர்கள் முதலில் சந்திப்பது இந்த ஆறுதான். சுமார் 2 கி.மீ. தொலைவு.

தேவியானவள் திரிகூட மலைக்குச் செல்லுகையில்  அவருடன் வந்தவருக்கு தாகம் எடுக்கவே தேவி ஒரு அம்பு   விட்டு இந்த ஆற்றை உருவாக்கினாள் என்பது ஐதீகம். பெரும்பாலான யாத்ரீகர்கள் இங்கே குளித்துவிட்டு மலை ஏறத்துவங்குகிறார்கள் .

XXXXX

8.திரிகூட பர்வதத்தின் மற்றொரு சிகரத்தின் உச்சியில் இருப்பது பைரவர் கோவில். இதுதான் அதிக உயரமான இடம் . தேவியைத் தரிசித்த பின்னர் இங்கும் வந்து சிவனை தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் மூன்று கி.மீ பாதை மிகவும் ஏற்றம் கொண்டது.  இப்போது கம்பி வழி ரயில் பாதை ROPE CAR போட்டுவிட்டதால் ஐந்தே நிமிடத்தில் கோவிலை அடையலாம்.

xxxxx

9.பவன் என்று அழைக்கப்படும் கோவிலை அடைவதற்கு முன்னால்  அர்த்த குமாரி / குவாரி குகை இருக்கிறது . இங்கு ஒரு மகானுக்கு தேவி தரிசனம்  தந்தாள் ; மேலும் பவனை அடையும் முன்னர் ஒன்பது மாதங்களுக்கு இந்தக் குகையில் தங்கி இருந்தாள் என்பதால் புனித இடமாகக் கருதப்படுகிறது . இது 15  அடி நீள குகை ; இதை கர்ப்பா ஜூன் என்பர்.

XXXX

10.ஆண்டு முழுதும் கோவில் திறந்திருக்கும். ஆயினும் ஏப்ரல் முதல் அக்டோபர்  வரை  பருவ நிலை நன்றாக இருக்கும்.; போகும் வழி முழுவதும் நல்ல வசதிகளை செய்து இருக்கிறார்கள்; சாப்பிடுவதற்கு, தங்கி ஓய்வு எடுப்பதற்கு, மின்சார விளக்குகள் ஆகிய அனைத்தும் உண்டு . ஆகையால் எந்த நேரமும் பயணம் செய்யலாம்.

–subham—

Tags– வைஷ்ணவ தேவி,  கோவில் பத்து,  QUIZ  ,