பார்த்தசாரதி திருவடிகளே சரணம் (Post 11,390)

WRITTEN BY Dr. A. Narayanan MSc. Ph.D., London

Post No. 11,390

Date uploaded in London – 28 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DR.A.NARAYANAN POEMS ON SKANDA/ MURUGA AND PARTHASARATHY

 பார்த்தசாரதி திருவடிகளே சரணம் 

பார்த்தசாரதி பார்த்தனைக் காத்த சாரதி                                       

பார்த்தோரை பார்வையிலேயே ஈர்த்த சாரதி

நேர்த்தியான மூர்த்தியாய் முருக்கிய மீசையும்

முழித்த பார்வையும் புல்லாங்குழலற்றுப் பிறைமதிப் 

புன்னகையோடுப் பொல்லாப் பகைவரைப் போரில்

கொல்லாக் கொற்றவன் கோழையெனப் புரவியுடன்

பூட்டிய பெருந்தேர்  ஓட்டிய இடையர் குலத்தோனே

இடம் மாறி  கிருத்தினன் கீர்த்திக்கு சாரதியான

உலகோர் உய்ய அறமோங்க கீதையெனும் 

வேதமீன்ற வேங்கட கிருட்டிணனே

பார்த்தனுக்குப் பாத்திரமான பரமனோ

ஆழியும் சார்ங்கமும் கதையும் ஏந்தா

ஊழி முதல்வனாய் ஊதிய பாஞ்ச சன்யம்

முழங்கியதோ பஞ்சவரிடம் தஞ்சமடைந்தால்

மிஞ்சுவர் படையுடன் பங்காளிகள் அல்லேல் 

எஞ்சுவது இப்போர்களம் பிணக்குவியலிலென

அணிதேர்புரவி ஆட்பெரும் இரு படை இடையே

அருச்சுனன் ஆணைக்கு தேரை நிருத்திய 

விமலன் விசயனை நோக்கக் கண்டானோ

தனஞ்செயனின் கண் தேங்கிய தாபத்தை

கணை ஏவும் கைகள் நடுங்கப் 

பார்த்தன் பங்காளிகளையும் பயின்ற

விச்சை ஈன்ற குருவையும் கொன்று

குவித்த குருதி மண்ணில் கொடி

ஏற்றியவரோ! குந்தியின் குமரர்கள்

கொலை வெறிப் பாண்டவரெனப்

பழிச் சொல் ஏற்பதா வென விதிர்க்க

தூக்கத்தை வென்றோன் துக்கத்தில்

துடிக்கப் பந்த பாசமெனும் வியந்தரன்

பற்றியதில் வியந்தனன் விமலன் 

நாடிழந்து நாடியவள்நாணம்

நடு அவையில் பறிபோகாக்

கண்ணன் காத்ததையும் மறந்து 

நஞ்சுப் பகைவரை உன்னியரென

மன்னிப்பது வீரனுக்கு வேணா

வைராக்கியமெனக் கார்முகில்

வண்ணன் போர் முனையில் பல்

குணனுக்குப் போதித்தப் புவி

யுள்ளோர்க் கெல்லாம்பொருந்தும்

வேதமே கீதையெனுபநிடதம்

துவங்கியதோ கீதோபதெசம் துயருற்றோன்

துலங்கப் பிறப்பு இருப்பு இறப்பெல்லாம்

துயருரறூம் உடலுக்குரியதாக நின்றோர்

இறப்பதும் சென்றோர் பிறப்பதெனும் பிறப்பு

இறப்பு சுழற்சியில் அழிவிலா ஆத்மா அடுத்தடுத்

திருக்கும் கூடே உடல், உடை கிழியும்போது புத்

தாடை உடலேற்பது போலப் புதுப்புதுஉடலேற்கும் 

சீவாத்மா சிதைக்கவோ எறிக்கவோ நனைக்கவோ

உலர்த்தவோ முடியாதொன்றாக பரமாத்மாவின்

சேவகனாய் உடலிலிருப்பதை நீ!அறிவாயோ

படையாய் நிற்குமிவரெவரும் இன்றிறப்பர்

பிறப்பர் நாளை மிண்டும் இறப்பர் பிறப்பர்

அறப்போரில் புறம் நோக்காப் பகைவனை

அழிப்பதே உன் கடமை பார்த்தா ! மேலும் 

பற்றற்றாற்றும்  எக்கடமையும் யோகமாய் 

ஞானமெனும் பாதையிணைந்து விளக்குரூம்

பக்தியில் அறிவாயோ எதிலும் இயங்குவனும் 

எதையும் இயக்குவனும் பிரப்ஞ்சம் விரிதலும்

சுரிதலுமாக எல்லாமென்னிடமிருந்தே அர்சுனா!

என விமலன் பகர வியந்தானோ விசயன் 

தாமோதரன் தாள் தனஞ்சயன் தஞ்சமடைய

திருவாய் விளம்பிய விசுவரூபம் நேரில் காண 

அருத்தித்தோனுக்கு அவன் புறக்கண் காண

இயலா விராட ரூபம் காண்பதற்கேற்ற

ஞானக்கண்ணருளியதில் கண்டு களித்ததோ

ஞாலத்தையளந்தோன் கொண்ட கோலத்தில்

அண்ட பகிரண்டமும் ஆயிரம் தலையும் 

அதற்கேற்ப அளப்பிலா ஆயுதங்கள் தாங்கிய

கரங்களும் அதிசய அணிகலங்களும் ஆடை

அலங்காரமுமாய் விளங்கிய விசுவேசுவரன்

ஒன்றில் பலவாய் காட்சி தந்த உம்பர்கோமானின்

ஒளி வீசும் விராட ரூபத்தில் கௌரவர் சேனையில்

வீரர்களும் மகாரதிகளும் விசுவரூபன் வாயினுள்

வீழ்வோரும் வெளிவருவோருமாய் காட்சி காண

ஊர்வன, நிற்பன,நீந்துவன நடப்பன, பறப்பன வென

வெல்லாம் ஒருங்கே திரண்டதைக் கண்டு வியந்து

விதிர்த்தானோ விசயன்  சாட்டையும் சங்குமேந்திய

சாரதியா! பஞ்சவர்க்கு உறவும் நண்பனுமானவன 

கஞ்சனைவதைத்த கிருட்டிணனா! எட்டிப்பிடிக்க

இயலாதோன் இசைந்தானே கட்டியுறவாட.

விசுவரூபம் கண்டு வியந்து வியர்த்த விசயன்

விமலனை சங்கு, சக்கரம், சார்ங்கம் கதையுடன் 

விட்டுணுவாய் காண வேண்ட வேய்ங்குழலோன்

விராட உருவம் களைந்து விட்டுணுவாய்த் தோன்ற

விசயன் வில்லேந்தி வீரிட்டு விடுத்த சரமாரியில்

விழுந்தன சிரங்கள் பலவாயினும் மகாரதிகளை

வீழ்த்த வசுதேவன் வகுத்தனோ சூட்சி பல்வேராக

வீடு பெற மரணமண்டா மகாரதிகள் மாதவன் தன்

வீடுடையானாக்கி யறமோங்க யுகந்தோருமவதார

விட்டுணுவினிலக்கோ அறம் வழுவோரையழிப்பது

 நாராயணன் 

xxx

கந்தன் கருணை                                     

ராகம்: சிம்மேந்த்ர மத்யமம்    

பூங்காற்றுச் சுமந்த வந்தப் பூ மணமாய்

பொறி வண்டுத் தேடியத் தேன் சுவையாய்

வருவாயோ முருகா! தரிசனம் தருவாயோ

ஓமுருகா! வேல் முருகா!

வா முருகா!  வடிவேலழகா! 

கந்தன் கழலோ  தாமரையோ அதில்

வண்டின் ரீங்காரம்  ஓம் காரம் 

தண்ட பாணியின் திருக்கோலமோ  

பண்டாரமான பழனியாண்டியாக

ஆண் டியானாலும் அவன் திருவடியில்

வேண்டியதெல்லாமே விளைந்திடுமே

ஓ முருகா! வேல் முருகா!

வா முருகா! வடிவேலழகா!

காவடி சுமந்தோர் குன்றேறியுன்

கழலடி நிழலில் களைப்பாற   

குன்றே குமரனாக

நின்றே அவர்க் கருள்வாயே

ஓ முருகா! வேல் முருகா!

வா முருகா! வடிவேலழகா!

முப்பொழுதும் உன் நினைவினிலே

எப்பொழுது நீ என் நாவினிலே

இப்பொழுது யானுன் சந்நிதியினிலே 

இரப்பதோ உன் கருணை நிதி

கோல மயிலேறி சேவற் கொடி ஏந்தி

கருணைக்கடலான கந்தன் துணையாக

வேண்டியதெல்லாமே வேலவனேயாக

வேண்டியது வேறில்லை வேறில்லை

ஓ முருகா! வேல் முருகா!

வா முருகா! வடிவேலழகா!

                                                       நாராயணன் 

—-subham—-

அருணகிரிநாதரும் தமிழும்! – 2 (Post No.11,389)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,389

Date uploaded in London – –    28 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 2 

ச.நாகராஜன்

 அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

11) திருச்செந்தூர்

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி

   செந்திற் பதிநக – ருறைவோனே

 பாடல் எண் 96 : வஞ்சத்துடனொரு எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக் கொண்டு திருச்செந்தூர் நகரில் உறைந்திருப்பவனே!

12) பழநி

சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை

  பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர இனி வரவேணும்

பாடல் எண் 115 : இத்தாரணிக்குள் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும்.

13) பழநி

   வற்றா மதுக் கருணை உற்றே மறைக் கலைகள்

       ஓதித் தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி

        அத்தா

பாடல் எண் 115 : இத்தாரணிக்குள் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வற்றாத தேன் போலக் கருணையைப் பூண்டு, வேத நூல்களை ஓதி நன்கு பயின்று தமிழை ஆராய்ந்து தேவாரப் பாமாலைகளைத் தந்தைக்குச் சூட்டிய திருஞானசம்பந்தராக வந்த ஐயனே!

 14) பழநி

தமிழ்க் காழி மருதவன மறைக்காடு திருமருகல்

  தநுக்கோடி வருகுழகர் – தருவாழ்வே

பாடல் எண் 121 : உயிர்க்கூடு விடுமளவும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய சீகாழி திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான் தந்த குமரனே!

 15) பழநி

                      மெய்ப் பலகை

சதுபத் துநவப் புலவர்க் கும் விபத் – தியில் ஞான

படலத் துறுலக் கணலக் யதமிழ்த்

 த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்

    பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் – குருநாதா

பாடல் எண் 126 : கடலைச் சிறை வைத்து எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சங்கப் பலகையில் வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய) அகப்பொருள் விளக்கத்தைக் குற்றமின்றி உணர்வித்து அருளிய வித்தகனே, சற் குருநாதனே!

16) பழநி

 சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு

   கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர

     தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய – பெருமாளே

 பாடல் எண் 155 : சிந்துர கூரமருப்பு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழநி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே!

17பழநி

       சொர்க்கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றமிழ்பாட

 இருபதமுற் றிருவினையற் றியல் கதியைப் – பெறவேணும்

பாடல் எண் 167 : திடமிலி சற்குணமிலி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சொர்க்க உலகத்தில் இடம் பெறத் தகுதி இல்லாதவன் யான். கைகளால் ஒரு தானமும் கொடுத்து அறியாதவன் யான். உன்னை நல்ல தமிழ்ப் பாடலால் பாடுவதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன் யான். (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்) உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து, நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் தீர்ந்து உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று உய்ய வேண்டும்.



18) பழநி

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்

  வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு

  கற்பனை நெற்பல அளித்த காரண – னருள்பாலா

பாடல் எண் 172 : நெற்றி வெயர்த்துளி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவரது மனைவியார் (பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த நெல் மலையை அளித்த மூலப் பொருளான சிவபெருமான் அருளிய பாலனே!

 விளக்கம் : இங்கு பாடலில் குறிப்பிடப்படும் சம்பவம் இது:

சுந்தரர் பரவையாரோடு திருவாரூரில் வாழ்ந்து வந்த போது குண்டையூர் கிழவர் என்பவர் சுந்தரருக்கு நெல்லைத் தவறாது அளித்து வந்தார். ஒரு சமயம் மழை இல்லாமல் போகவே நெல் கொடுக்க முடியாமல் அந்தக் கிழவர் வருந்தினார். அவரது வருத்தம் நீங்கும் படி சிவபெருமானே நெல் மலை அளித்தார்.

இந்த வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.

19) பழநி

பலபல பைம்பொற் பதக்க மாரமு

 மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப் பனீரொடு

  பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு – மணிவோனே

  பாடல் எண் 183 : மலரணி கொண்டை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பற்பல விதமான பசும் பொன்னால் ஆகிய பதக்கங்களையும், மாலைகளையும், அடிமையாகிய நான் சொல்லுகின்ற திருப்புகழ் என்னும் தமிழ்ப் பன்னீரையும், நறுமணம் மிக்கு வீசும் கடப்ப மாலையையும் அணிபவனே!

 20) சுவாமிமலை

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

  அரியதமிழ் தான ளித்த – மயில்வீரா

  பாடல் எண் 216 : சரண கமலாலயத்தை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சிவந்த தாமரை இதழ் போன்ற உன் பாதங்களைத் தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான தமிழ் ஞானத்தைத் தந்த மயில் வீரனே!

*** 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

புத்தக அறிமுகம் – 96 

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3) 

பொருளடக்கம்

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. நீங்களும் படைப்பாளி ஆகலாம்!  

 2. இசை கேட்டால் அறிவு வளரும்  

 3. குழந்தைகளும் ‘யோசனை’ கூறலாம்   

 4. குழந்தைகளின் அறிவுத்திறன்

 5. அறிவு வளர குழந்தைகளுடன் பேசுங்கள்    

 6. குட்டிக் குழந்தைகள் பேசுகின்றன…

 7. உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி?    

 8. ஜாக்கிரதை! வருகிறது ந்யூரோ மார்க்கடிங்!  

 9. அறிவியல் அலசலில் ‘காதல்’

10. கர்ப்பம், பிரசவம் இல்லாமல் குழந்தை! 

11. இதோ கருத்தடைப் பட்டை! இனி வேண்டாமே மாத்திரைகள்!!

12. மார்பகப் புற்றுநோய் இனி பயமில்லை…

13. மார்பகத்தை பாதுகாக்க டிப்ஸ்…   

14. மொபைல் போன்

15. வேண்டாமே சிசேரியன்!

16. ஏ டு இஸட் – உங்கள் கணவரை அலசுங்கள்

17. உடல் பேசும் மொழி   

18. நூறு வரும் வாழும் சூப்பர் மனிதன்!   

19. ஹிட்லரின் சங்கேத மெஷின்!    

20. ஹிட்லரின் தங்கப் புதையல்!

21. ஷீபா ராணியைத் தேடி…    

22. விந்தை மனிதர் செஷைர்   

23. கில்லடின் கதை  

24. உலகின் முதல் அணுகுண்டைப் போட்டவர்! 

25. வினாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்தது 

26. கல் வட்டம்

27. கல்மரங்கள்

28. உலகிலேயே தன்னந்தனியான சின்னத்தீவு   

29. மான் வடிவத்தில் ஒரு தோட்டம்! 

30. பயோமெட்ரிக் பாஸ்போர்ட்! 

31. கான்சர் நோய்க்கு ஒலி சிகிச்சை  

32. நோய் தீர்க்கும் காந்தசக்தி!  

33. சேற்றைப் பூசினால் பொலிவு கூடும்!   

34. மனிதனுக்குப் பன்றியின் உறுப்புகள்!   

35. ஆர்டர் கொடுத்தால் உங்கள் குரூப் ரத்தம் தயார்!  

36. ஆக்சிஜன் குளியல்    

37. விஷமே வியாதிக்கு நிவாரணம்  

38. கிரீனிச்

39. உப்பு உயிரைக் குடிக்கும்!   

40. சாக்லெட், சாக்லெட்!                                          

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

The marvels of science and inventions are expanding in an amazing way, so the book has come in its third installment to astonish the readers. Reading the three parts altogether, makes the reader to go awe. The very names of the articles such as Kaalap Payanam (Time Travel), Jaakkirathai! (Caution!), Varugirathu Neuro Marketing (Here comes the Neuro Marketing) and Manithanukkup Pandriyin Uruppugal (Pig’s Organs for Humans) enthrall the readers. Read the full book to reach the peak of excitement.

அறிவியல் அதிசயங்களும், கண்டுபிடிப்புகளும் வியக்கத்தக்க வகையில் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. எனவே ‘அறிவியல் அதிசயங்கள்’ நூல் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ளது. மூன்று பாகங்களும் சேர்த்துப் படித்தால், விஞ்ஞானத்தின் வளர்ச்சியை எண்ணிப் பிரமிக்கச் செய்கின்றன.‘காலப் பயணம்’, ‘ஜாக்கிரதை! வருகிறது ந்யூரோ மார்க்கெடிங்’, ‘மனிதனுக்குப் பன்றியின் உறுப்புகள்’ என நூலின் சில அத்தியாயங்களின் பெயர்களே மிரள வைக்கின்றன. முழு நூலையும் படித்துப் பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்லலாம்.*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 3’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Happy Diwali

Wish You all a Very Happy Deepavali

See You all on 27th October 2022

Let us enjoy Holidays!!

–Subham–

More Details about Akbar’s Sun Worship (Post No.11,388)

More Details about Akbar’s Sun Worship (Post No.11,388)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,388

Date uploaded in London – 23 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 Five years ago, I wrote an article about Akbar’s interest in Sun Worship (Surya Namaskara). In a footnote to a sloka in Rajatarangini of Kalhana (History of Kashmir) R.S.Pandit gives more interesting details of Sun Worship of Moghul emperor Akbar.

Kashmir is famous for Sun Worship . It was ruled by Hindu Kings until 12th century. Later Muslim rulers invaded and captured power . But yet Babar and Akbar followed some ancient customs.

Here is what R S Pandit says in his translation of Rajatarangini from Sanskrit into English:

Sloka 7-709

Thinking there had been divine anger owing to the destruction of the image of Taamra svaamin (Sun), he (Kashmir king) proceeded to seek refuge with Maartanda to save his life.

xxx

Foot note to sloka 709 in Seventh Taranga of Rajatarangini (raajataranginii)

This is the famous shrine at Matan, according to Prof.Foucher “rise proudly like a Greek Temple on a promontory”. Apparently, sun worship was prevalent in Kashmir in the time of Kalasa. We know that Akbar attempted to revive the worship of the sun.

The Portuguese account is as follows: It is quite true that he held the law of Mahomed of no account but he was much addicted to the worship of the sun to which he made prayers four times a day, namely in the morning when he rose, at noon , on retiring to bed and again at midnight. On each occasion he repeated as many as a thousand and fifty names of the luminary, which he counted by means small balls threaded like our paternosters, but consisting of beautiful precious stones.” This is corroborated by Badaoni , who tells us that people used to crowd every morning “opposite the window near which his Majesty  used to pray to the sun…….. No sooner his Majesty finished saying the thousand one names of the “Greater Luminary” and stepped into the balcony, then the whole crowd prostrated themselves” (Muntakhab ut-law-arikh Vol.II, page 336)

The worship of the “dazzling Surya” is still the living faith of India of millions of people including the remnant of the ancient Iranians , the Parsis. It is being revived in recent times through physical culture exercises known as ‘Surya Namaskars’ which the Maratha generalissimo at Panipat Sadasiva Rao Bhau practised thousand times a day.

Rajatarangini English Translation, Year 1935

–subham–

My Old articles:

Akbar was a Hindu Saint in his Former Life! (Post No.3988)

https://tamilandvedas.com › 2017/06/10 › akbar-was-a-…

10 Jun 2017 — Akbar worshipping sun, Asian Civilisations Museum, Singapore. Compiled by London Swaminathan. Date: 10 June 2017.

Babar | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ba…

·Translate this page

20 Aug 2018 — Akbar did worship Sun God like Hindus. But not many people knew what Babar did. Picture shows Babur standing on a strip of white cloth.

Tags- Sun worship, Akbar, Portugese, Badaoni

அருணகிரிநாதரும் தமிழும்! – 1 (Post No.11,387)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,387

Date uploaded in London – –    23 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 1

ச.நாகராஜன்

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

1) திருப்பரங்குன்றம்

வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்

பாடல் எண் 14 – சருவும் படி எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வளமான தமிழைப் பயில்கின்றோர் பின்னால் திரிகின்றவன்

2) திருச்செந்தூர்

தமிழினி தென்காற் கன்றிற்

   றிரிதரு கஞ்சாக் கன்றைத்

     தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச்

சிவ வடி வங்காட் டுஞ்சற் குருபர

பாடல் எண் 26 அவனி பெறுந்தோட்டம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தமிழ் போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, அன்று அற்புதமாக நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு பேரின்ப உண்மையாம் மங்களப் பொருளைக் காட்டிய சற்குருபரனே!

3) திருச்செந்தூர்

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழைரு

   செவி குளிர இனியதமிழ்     பகர்வோனே

பாடல் எண் 28 : அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவனான அகத்தியனின் உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர இனிய தமிழை ஓதியவனே!

4) திருச்செந்தூர்

தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே

பாடல் எண் 52 : கொடியனைய எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தமிழில் வல்லவனே! உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே!

5) திருச்செந்தூர்

புகலரியதாம் த்ரி சங்கத்

   தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்

     புவியதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர்

புனிதம் இலி  மாந்தர் தங்கள்

   புகழ் பகர்தல் நீங்கி நின் பொன்

       புளக மலர் பூண்டு வந்தித்   திடுவேனோ

பாடல் எண் 60 : தகர நறை பூண எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சொல்வதற்கு அரியதாம் முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும் பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும் புனிதமில்லாத மக்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பேசுதலை விட்டு விட்டு உனது அழகிய இன்பம் தருகின்ற திருவடி மலர்களை மனதில் கொண்டு துதிக்க மாட்டேனோ?

6) திருச்செந்தூர்

தகைக்கும் தனி திகைக்கும் சிறு

   தமிழ்த் தென்றலி னுடனேநின்

றெரிக்கும் பிறையெனப் புண்படு

   மெனப் புன்கவி சிலபாடி

     இருக்கும் சிலர்

பாடல் எண் 64 : தரிக்குங்கலை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தனிமையில் நின்று திகைக்கின்றேன். மெல்லிய இனிய தென்றல் காற்றுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன் என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.

தமிழ்த் தென்றல் – இனிய தென்றல்

7) திருச்செந்தூர்

மழுக்கைக் கொண்ட சங் கரர்க்குச் சென்று வண்

  தமிழ் சொற் சந்தமொன்று அருள்வோனோ

பாடல் எண் 71 : நிதிக்குப் பிங்கலன் எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  மழுவைக் கையில் ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று வளமான தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே!

8) திருச்செந்தூர்

துணைச் செம்பொற் பதத்து இன்புற்று

 எனக்கென்று அப் பொருள் தங்கத்

     தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்

பாடல் எண் 79 :பருத்தந்த எனத்  தொடங்கும் பாடல்

பொருள் :  உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படியாகத் தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய்!

9) திருச்செந்தூர்

முந்து தமிழ் மாலை கோடிக் கோடி

   சந்தமொழு நீடு பாடிப் பாடி

     முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே

பாடல் எண் 91 : முந்து தமிழ் மாலை கோடிக் கோடி எனத்  தொடங்கும் பாடல்

 பொருள் :  மொழிகளில் முந்தியுள்ள தமிழ் மொழியில் பாமாலைகளை கோடிக் கோடிக் கணக்கில் சந்தப் பாக்களின் வகையில் நீண்டனவாகப் பாடிப் பாடி அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள் எங்கே உள்ளன என்று தேடித் தேடி அலையாமல்… 

10) திருச்செந்தூர்

வாய்ப்புற்ற தமிழ் மார்க்கத் திண் பொருள்

   வாய்க்குச் சித்திர முருகோனே

பாடல் எண் 93 : மூப்புற்றுச் செவி கேட்பற்று எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என ருத்திரசன்மனாக வந்து அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே!

விளக்கம் : இந்தப் பாடல் விளக்கும் சம்பவம் இது:

மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் ஒரு உரையை எழுதினார். அந்த உரையே சிறந்த உரை என்று சங்கப் புலவர்களிடையே முருகனே ருத்திரசன்மனாக வந்து நிலை நாட்டினான்.

இதைத் திருவிளையாடல் புராணத்தில் விளக்கமாகக் காணலாம். 

*** 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

 புத்தக அறிமுகம் – 95

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. சூரியனிலிருந்து பூமியை நகர்த்தப் போகிறார்களா?

 2. சூரியனில் வெடிப்பு – பூமியைப் பாதிக்குமா? 

 3. நிலவில் குண்டு போட அமெரிக்கா திட்டம்  

 4. பூமி ஒரு குக்கிராமம்  

 5. புதிய கோணத்தில் பூமியின் வளர்ச்சி….

 6. சூடாகும் பூமி    

 7. ஓஸோன் துளை பெரிதாகிறது   

 8. விண்வெளிச் சாலை  

 9. விண்கலத்தின் ஓட்டுநர் அறை எப்படி இருக்கும்?  

10. ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்த நாஸா.  

11. விண்வெளியில் குப்பை கூட்ட லேசர் விளக்குமாறு

12. விண்வெளி ஜோதி

13. வானிலையை மாற்றும் நட்சத்திர ரகசியம்  

14. சிரியஸ் நட்சத்திரம்   

15. அமெரிக்காவில் சுனாமி ஆபத்து  

16. அண்டார்டிகா ஆபத்து 

17. அண்டார்டிகா பனி நெடுஞ்சாலை 

18. பனி மனிதன் இருக்கிறானா?

19. பனி மனிதன் இருக்கிறான்  

20. முதல் மனிதன் தோன்றியது எங்கே?   

21. தூக்கம் விளக்கும் ரகசியங்கள்    

22. ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி? 

23. அரிய வகை மரம்

24. நோய் தீர்க்கும் மூலிகைகள் 

25. சிகரெட்டும் போதைப் பொருளே  

26. அபாயத்தில் மனித குலம்   

27. லோகி பேர்ட்

28. ஆயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்த அபூர்வ மேதை 

29. காலப் பயணம்   

30. மூளையை நூறு விழுக்காடு முழுவதுமாகப் பயன்படுத்த ஏழு

   அதிசய வழிகள்  

31. சித்திரவதை

32. வியர்வை ஊசி!  

33. பெண்களைக் கவரும் நீலக் கண்கள்    

34. டெலிவிஷனிலிருந்து விஷப்புகை

35. செயற்கைப் பெண் இயந்திரம் தயார்                                              

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

This amazing book consists of incredible phenomenon and peculiar astonishing facts from all over the world. Interesting to read about the use of Laser Cannons to sweep up the galaxial garbage and also America’s plan to bomb the moon and galaxial road. The statistical analysis of imagining the earth as a tiny city excites the readers wondrously. This book also contains segments such as igloo men, first man of the world and time travel etc. 

உலகின் பல்வேறு அதிசய நிகழ்வுகளையும், வித்தியாசமான செய்திகளையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல். விண்வெளியில் குப்பையைக் கூட்ட லேசர் விளக்குமாறு தேவைப்படும் எனும் செய்தி அதிசயிக்க வைக்கிறது. நிலவில் குண்டு போட அமெரிக்கா எடுத்திருக்கும் திட்டம், விண்வெளிச் சாலை போன்றவை பிரமிக்க வைக்கின்றன. பூமியை ஒரு குக்கிராமமாகக் கற்பனை செய்தால் எப்படி இருக்கும் என ஒரு புள்ளியியல் விவரணை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இன்னும் பனிமனிதனைப் பற்றிய செய்திகள், உலகின் முதல் மனிதனைப் பற்றிய சேதிகள், காலப்பயணம் என பலதரப்பட்ட விஷயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது இந்நூல்.*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Learn Tamil Verbs Lesson 16 (8 Birds in One Stone)- Post No.11,386

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,386

Date uploaded in London – 22 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Tamils divided the entire living beings into two divisions

உயர் திணை Uyar Thinai= Higher beings (Devas, Gods, Human beings)

xxx

அஃறிணை Ah Rinai = that which is not higher (animals, in animate objects)

You use the same verb for in animate objects and animals

Xxx

 Today I gave you eight verbs in two tables; that is eight mangoes in one stone in Tamil or 8 birds in one stone in English.

If u know the stem and suffix you will be able to do the conjugation.

NEW VERBS

Kala= mix= கல

Ira = die= இற

Iza (ila) = lose = இழ

xxx

In another table

Ala = measure= அள

Kada= pass by = கட

Mudi = finish = முடி

Tholai = lose something = தொலை

Kalai  -= shuffle, change the order, disperse கலை

xxx

இதுவரை நாம் கற்றதை நினைவு கூறுவோம்

Remember – Irregular verbs such as Vaa= come and Po=Go do not obey the rules; you just memorise them.

xxxx

நிகழ்காலம் Present

Add KIRA and then PGN suffix

வினைச் சொற்களுடன் ‘கிற’ என்பதைச் சேர்த்து இறுதியில் தன்மை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஆண் , பெண் , ஜடப்பொருள் அல்லது அஃறிணை  என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இறுதியில் ஒருவரா பலரா என்பதற்கு ஏற்றவாறு விகுதியை சேர்க்கவேண்டும் .

‘கிற’ என்பதையும் கின்ற KINDRA is also similar to KIRAஎன்பதையும் பயன்படுத்தலாம். ஆனால் அது பேச்சு வழக்கில் அதிகம் இல்லை

சாப்பிடுகிறேன் ,சாப்பிடுகின்றேன்

xxx

வருங்காலம் Future

Add V or PP and then PGN

மேற்கூறி யது போலவே ; ஆனால் கிற என்பதற்குப் பதிலாக வ் அல்லது ப் ப் என்பதை பயன்படுத்துவோம்

சாப்பிடுவேவ்  sasppiduVen

படிப்பேன் padiPPen

இறந்த காலம்  Past Tense (very difficult 7 different types with sub divisions as well

ஏழு வகுப்பு வினைச் சொற்களும் வேறு வேறு விதமாக செயல்படும்

xxx

கட்டளை வாக்கியம் Command or Request (Imperative)

ஒருமையில் வினைச் சொல்லை அப்படியே பயன்படுத்தலாம்

வா, போ , செய், சாப்பிடு , படி

பன்மை அல்லது மரியாதை கொடுக்கையில் உங்கள் என்பதை சேர்க்க வேண்டும்

அப்படிச் சேர்க்கையில் இடையில் சில எழுத்துக்களை சேர்ப்போம் அல்லது நீக்குவோம் Add Ungal following  morphophonemic rules

xxxx

Negative Imperative

எதிர்மறை கட்டளை வாக்கியங்களில்

ஆதே அல்லது ஆதீர்கள் என்பதை வினை எச்சகத்துடன் சேர்க்கவும்

Add AATHE or AATHEERKAL

To be continued………………………….

 Tags- 8 verbs

தீ எரிக்காது- இந்து மத அற்புதம்-3 (last part)-Post No.11,385

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,385

Date uploaded in London – 22 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடக்கூடாது என்று சீதா தேவி வெளியிட்ட வேண்டுகோளை அக்கினி பகவான் ஏற்றான் . ஏனெனில் அவள் கற்புக்கரசி.; மனம், மொழி, மெய் மூன்றின் மூலம் வேறு ஆடவணை நினையாத பெண்களுக்கு அற்புத சக்தி உண்டு என்று வள்ளுவனும் சொன்னான்.

சீதையின் ஸ்லோகங்களை வால்மீகி முனிவரின் வாயிலாகத் தொடர்ந்து பார்ப்போம்:- இவை சுந்தர காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள்

हनुमज्जनकश्चापि पुच्छानलयुतोऽनिलः।।5.53.33।।

ववौ स्वास्थ्यकरो देव्याः प्रालेयानिलशीतलः।

ஹநுமஜ் ஜனகஸ் சாபி  புச்சானலயுதோ அனிலஹ

வவெள ஸ்வாஸ் த்ய கரோ தேவ்யாஹா ப்ராலேயானில சீதலஹ 

தெய்வீகப்  பெண்ணின் (சீதையின்) மனதைச்  சாந்தப்படுத்தும் முகமாக,  வாயு பகவானும் அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ மீது குளிர்ந்த காற்றை வீசினான்.

(அனல = அனல்/ தீ ; அநில= காற்று; சீதல   = குளிர்ச்சி), புச்சம்= வால்

Xxx

दह्यमाने च लाङ्गूले चिन्तयामास वानरः।।5.53.34।।

प्रदीप्तोऽग्निरयं कस्मान्न मां दहति सर्वतः।

தஹ்யமானே ச லாங்கூலே சிந்த்யாமாச வானரஹ

ப்ரதீப்தோ அக்னிரயம்  கஸ்மான்ன மாம் தஹதி ஸர்வதஹ 

வால் எரியும்போது , எல்லா பக்கங்களிலும் எரியும் தீ  எப்படி தன்னைச் சுடவில்லை என்று அந்த வானரமும் வியப்புற்றது .

வானர = மனிதக் குரங்கு= வன+ நர = வனத்தில் வாழும் மனிதன்/நரன்

லாங்கூலம் = வால் ; தஹ்ய = தகித்தல் ; மாம் = என்னை; சிந்த்யா = சிந்தித்தது ; அக்னி = தீ

Xxx

दृश्यते च महाज्वालः करोति न च मे रुजम्।।5.53.35।।

शिशिरस्येव सङ्घातो लाङ्गूलाग्रे प्रतिष्ठितः।

த்ரச்யதே ச மஹா ஜ்வாலஹ கரோதி  ந ச மே ருஜம்

சிசிரஸ்யேவ ஸங்காதோ  லாங்கூலாக்ரே ப்ரதிஷ்டிதஹ

இந்த பெரிய தீ எனக்கு கெடுதல் எதையும் செய்யவில்லை ; என்னுடைய வாலில் ஐஸ் கட்டியை வைத்தது போலல்லவா இருக்கிறது (மேலும் வால் பகுதிக்கு மேல், தீ பரவவும் இல்லை )

லாங்கூல அக்ரே – வாலின் நுனியில் மட்டும்; ப்ரதிஷ்டிதஹ = நிலையாக நிற்கிறதே

xxxx

अथवा तदिदं व्यक्तं यद्दृष्टं प्लवता मया।।5.53.36।।

रामप्रभावादाश्चर्यं पर्वत स्सरितां पतौ।

அதவா ததிதம் வ்யக்தம் யத் த்ருஷ்டம் ப் லவதா மயா

ராம ப்ரபாவாதாஸ்சர்யம் பர்வத ஸரிதாம் பதெள

ராமபிரானின் சக்தியால்தான் இது நிகழ்கிறது . நான் கடலைக் கடக்கும்போது கூட எனக்கு பாதுகாப்பு தருவதற்காக (ஓய்வு எடுப்பதற்காக ) ஒரு அற்புத மலை எழுந்து நின்றது (இப்போது வால் எரியாமல், சுடாமல் இருப்பதற்கும் ) ராமனின் சக்திதான் என்பது வெளிப்படை

Xxx

यदि तावत्समुद्रस्य मैनाकस्य च धीमतः।।5.53.37।।

रामार्थं सम्भ्रमस्तादृक्किमग्निर्न करिष्यति।

யதி தாவத்  ஸமுத்ரஸ்ய  மைநாகஸ்ய  தீமதஹ

ராமர்த்தம் ஸம்ப்ரமஸ்தா த்ரவ்கிமக்னீர்  ந கரிஷ்யதி

கடல் என் மீது காட்டிய அக்கறை காரணமாக , புத்திசாலியான மைநாக மலையே எனக்காக எழுந்து வந்ததே ! மலை கூட ராமனுக்கு சேவை செய்கையில் தீ செய்ய முடியாதது என்ன ?

xxx

सीतायाश्चानृशंस्येन तेजसा राघवस्य च।।5.53.38।।

पितुश्च मम सख्येन न मां दहति पावकः।

ஸீதாயாஸ் சா ன்ருசம் ஸ்யேன தேஜஸா ராகவஸ்ய ச

பிதுஸ்ச  மம  ஸக்யேன ந மாம் தஹதி பாவகஹ

சீதையின் உறுதியான கற்புராமனின் சக்தி அக்னி பகவானுடன்  உள்ள என் தந்தையின் நட்புறவு ஆகியவற்றால்தான் தீ என்னை எரிக்கவில்லை .

மம பிதுஸ்  ஸக்யேன= என் தந்தையின் நட்புறவு ; பாவக = தீ

இந்த கடைசி ஸ்லோகத்த்தில்தான் வால்மீகி முத்தாய்ப்பு வைக்கிறார். ஒரு அற்புதம் நிகழ்கையில், ஒரு மனிதன், மனதில் என்ன என்ன எண்ணங்கள் ஏற்பட்டு வியப்புறுவான் என்ற உளவியலை (Psychology) இங்கே பார்க்கிறோம். ஸீதா, ராமனின் மஹத்தான சக்தியைப் புகழ்ந்துவிட்டு இறுதியில் மட்டும் தன் குடும்பத்தை நினைக்கிறார் ; காற்றுக்கும் தீ க்கும் உள்ள நட்புறவு இயற்கையில் நாம் காண்பதே ; அதை வாயு புத்திரனான அனுமன் கடைசியில் நமக்குக் காட்டுகிறான் . வால்மீகி முனிவரின் எளிய சம்ஸ்க்ருத நடையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உலகம் முழுதும் தோன்றிய 3000 ராம காதைகள்  , பாடல்கள், கிருதிகள் , திரைப்படங்கள், டிவி சீரியல்கள் எல்லாவற்றுக்கும் மூல புருஷன் வால்மீகி. காலத்தால் அழியாத காவியத்தை நமக்கு அளித்தவர் வால்மீகி!!

— சுபம் —

 தீ எரிக்காது-, இந்து மத அற்புதம்-3 , சுந்தர காண்டம், வால்மீகி 

யோகி ஆதித்ய நாத் கேட்கும் ஒரு கேள்வி ? (Post No.11,384)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,384

Date uploaded in London – –    22 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகி ஆதித்ய நாத் கேட்கும் ஒரு கேள்வி பதிலை செகுலரிஸ்டுகள் சொல்வார்களா?

ச.நாகராஜன் 

யோகி ஆதித்யநாத் அவர்கள் தனது நிலை பற்றி இப்படித் தெளிவாகக் கூறுகிறார்.

1. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஹிந்து மதத்தை  மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் இஸ்லாத்தை மதிக்கிறேன்.

2. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஶ்ரீ ராமரை மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் அல்லாவையும் மதிக்கிறேன்.

3. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு கீதைக்கும் இராமாயணத்திற்கும் மதிப்புக் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு நான் குர்-ஆனுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.

4. இஸ்லாமியர் எந்த அளவுக்கு ஹனுமான்ஜிக்கு மதிப்புக் கொடுக்கிறார்களோ அதே அளவுக்கு நான் மஹம்மது நபி அவர்களுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.

5. ஒரு முஸ்லீம் கோவிலை எந்த அளவுக்குப் புனிதம் என்று கருதுகிறாரோ அதே அளவிற்கு மசூதியை நான் புனிதம் என்று மதிக்கிறேன்.

6. இஸ்லாமிய ஆண்கள் ஹிந்துப் பெண்களுக்கு எந்த அளவு மதிப்பைத் தருகிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமியப் பெண்களுக்கும் மதிப்புத் தருகிறேன்.

7. இஸ்லாமியர் ஹிந்துப் பண்டிகைகளை எந்த அளவு மதிக்கிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமிய பண்டிகைகளை மதிக்கிறேன்.

இப்படி இருக்கும் போது என்னை  மதவெறியன் என்று எப்படிச் சொல்ல்லாம்?

நன்றி : ட்ரூத் ஆங்கில வார  தொகுதி 90 இதழ் 5 13-5-2022

இதன் ஆங்கில மூலம் இதோ:

I. Brilliant Yogi Adityanath says:

1. I respect Islam to the same extent that a Muslim respects Hinduism.”

                      2. “I respect Allah as much as a Muslim respects Lord Ram.”         

                   3. “I give the same respect to the Quran as a Muslim gives to the Gita or Ramayana.”

4. “I respect Prophet Mohammed as much as Muslims respect Lord Hanumanji.”

5. “I consider a mosque as pure as a Muslim considers a Mandir pure.”

6. “I respect Muslim women as much as Muslim men respect Hindu women.”

7. “I respect Muslim festivals as much as Muslims respect Hindu festivals.” “

Then how can I be called communal?” –from Social Media

Thanks : Truth

Source  : Truth Weekly Volume 90 Issue இதழ் 5  Dated 13-5-2022

***

புத்தக அறிமுகம் – 94

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. செவ்வாயில் மனிதன் இறங்குவது நிச்சயம்                        

2. செவ்வாயில் மனித முகம்                                        

3. சூரியன் இறக்கும் நாள்                                      

4. பூமியின் மீது 76 லட்சம் அணுகுண்டுகள் மோதும் நாள்       

5. 2028ல் பூமி சுக்கு நூறாகச் சிதறுமா?                               

6. இன்னொரு பூமி எங்கே?                                     

7. வானத்தில் வைரச் சுரங்கம்                                  

8. மறைந்த விண்கலங்கள்                                     

9. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம்                            10. ராட்சஸ அலைகள் உண்மையே – ஒப்புக்கொள்ளும் விஞ்ஞானிகள்    

11. மேகத்தில் பாக்டீரியாக்கள்!                                       

12. பனி மனிதனின் கால்                                            

13. தேவை நல்ல தூக்கம்                                            

14. உலகை மாற்றிய ஆறு தாவரங்கள்                               

15. சார்லஸ் பாபேஜ்                                           

16. வருகிறான் இயந்திரன்                                           

17. மூளைக்கும் பயிற்சி தேவை                                      

18. அறிவியல் புதிர்                                            

19. மிஸ் மெமரி                                                

20. பிளாஸ்டிக் நுரையீரல்                                            

21. எதிர்காலத்தைக் கலக்க இருக்கும் சயின்டிஃபிக் சினிமா            

22. கண்ணில் அணியும் சினிமா                                      

23. மூளை உள்ள எதிர்கால வீடு                                     

24. காற்றில் எழுதும் எழுத்தையும் பிடிக்கும் பேனா                   

25. ஆக்ஸிஜன் குளியல்                                             

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Knowing the human brain is the most important invention of the country and this book serves in understanding the left and right section of the human brain and its impact on the human behavior and actions. Researches have proved that a human brain is never utilized to 100% of its capability. This book answers the 100% utilization issue and tells us the ways and means for cent percent usage of our brains to the full capability. A must read of all age groups.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனை என்றால் அது மனித மூளை பற்றிய ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். இடப்பக்க, வலப்பக்க மூளைப் பகுதிகளின் குணாதிசயங்களும், அவை மனிதர்களின் பண்புகளில், நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கும் நூல். மனிதர்களின் மூளை அதன் தகுதிக்கேற்பச் செயல்படுத்தப்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான செயல்பாட்டிற்கான முறைகள் இந்நூலில் எளிமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. கூடவே, எதிர்கால நியூரல் எந்திரங்கள், மாற்று எரிபொருள், தாவரங்களின் அறிவு ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 1’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*tags- யோகி ஆதித்யநாத்

Learn Tamil Verbs -Lesson 15 -Imperative Negative (Post No.11,383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,383

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

FREE TAMIL LESSONS

THOSE WHO WANT TO JOIN SKYPE TAMIL CLASS BEGINNING IN NOVEMBER 2022, PLEASE CONTACT ME-

swami_48@yahoo.com

IT IS ABSOLUTELY FREE. THURSDAYS;  London Time GMT 12 NOON; Indian Time : EVENING 5-30 PM (17-30). ONE HOUR ONLY.

MEDIUM OF INSTRUCTION – ENGLISH; IT WILL BENEFIT ‘Non-Tamils’.

Xxx

LESSON 15

I AM POSTING TWO MORE TAMIL VERBS TODAY:

PANNU – MAKE, DO

KOL – KILL ; IS CONJUGATED LIKE Mel= Chew, Vel=Win, Sol=say  (but past tense is different for Sol=say, tell)

Xxx

Negative Imperative கட்டளை வாக்கியங்கள் (எதிர்மறை/ எதிர்ப்பதம் )

Add ஆதே to the INFINITIVE of the verb ,  or ஆதீர்கள் (for plural or respectful singular)

(Strictly speaking Infinitive Stem)

போக +ஆதே = போகாதே ,

வர+ஆதே = வராதே

போகாதீர்கள் , வராதீர்கள் (Used for more than one person; or one person whom you  want to give respect  due to Age or Status)

செய்ய +ஆதே = செய்யாதே

செய்ய +ஆதீர்கள் =, செய்யாதீர்கள்

சாப்பிட + ஆதே = சாப்பிடாதே

சாப்பிட + ஆதே = சாப்பிடாதே

சாப்பிட + ஆதீர்கள்  = சாப்பிடாதீர்கள்

Xxx

INFINITIVES

தமிழ் வினைச் சொற்கள் ‘அ’ ஒலியில் முடியும்

வா= வர To come , போ= போக To go, சாப்பிடு =சாப்பிட To eat,

தூங்கு = தூங்க; To sleep

Xxx

Note words ending  உ with sound

கொடு = கொடுக்க (க்க ) To give

எடு(க்க ) To Take

படு  (க்க ) To lie down or to sleep

விடு  (க்க ) To leave

சொடு  (க்க ) To click

To be continued…………………………….Tags- Tamil verbs, Make, Kill, Imperative, Negative

Tamil Hindu Encyclopaedia – 15 (ARUNDHATI அருந்ததி)-Post.11,382

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,382

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Arundhati is praised very high in Sangam Tamil literature and later literature. She was the model of conjugal excellence and a woman of paragon virtues. Tamils even used just Northern Star (vada meen) to mention her. Ancient Tamils were great Hindus and they made Arundhati a part of their life. They followed what exactly said about Arundhati in Sanskrit scripture. Natrinai verse say that Seven Stars are worshipped by the Tamils.

On the day of wedding, the couple were taken out to show the star in the Northern Sky. The woman is advised to be as chaste as Arundhati and her husband is advised to stick to his wife like Vasistha.  It is a double star system in the Ursa Major/ Great Bear/ Dipper/ Sapta Rishi constellation in the Northern Sky. People living in India and other parts of Northern Hemisphere can easily see the Seven Stars in the night.

2000 year old Sangam literature referred to her in the following books:

Arundhati –   Ainkuru -442-4

Xxx

Seeing / viewing Arundhati star in the night of the Wedding Day–  Pathitup paththu 89-17

xxx

Vada meen – Northern star –

Kali 2-21; Puram 122-8;

Post Sangam Tamil epic- Silappadikaaram 1-27;5-229

Xxx

In Puram verse 122, the Brahmin poet Kabilar praised the wife of Chieftain Malayamaan Thiru Mudik Kaari as chaste as Vada meen/northern star (Arndhati); he also added that the three great Tamil Kings seek your help. You donated all your lands to Brahmins who perform Yagas. Now you have only your wife only who is like Arundhati.

Kalittokai verse 2–21 :Poet Paalai Paatiya Pernkatunko also praised the wife of a king as chaste as Northern Star which is worshipped by everyone.

Xxx

Ainkuru nuuru poet Peyanaar used the name Arundhati praising her for chastity.

Xxx

Rare Medical Information

Perum Kundrur Kizaar (kilaar), author of verse Pathitup paththu 89-17 gives us one rare , scientific information.

He mentioned that newly married woman sees the star on the wedding day and your wife is chaste like that star while praising the Chera/Kerala king.

He added the star is seen also to ‘measure one’s life’. Since Arundhati and Vasistha stars in the Sapta Rishi Mandala are double stars,one revolving the other,  less luminous Arundhati is faintly visible at times. If one has a ‘good vision’ to see it that person is considered healthy. If one is not able to see it his/her days are numbered (Read my research article on Alcol ; Valluvar also called it ‘ghost’,  like the Arabs; since it is seen sometimes and disappears at some times Valluvar used Alakai in Tiruk Kural to refer to Ghost; Alakai= alcol/Arabic word)

Following is from my old article :- 

Chaste Woman Arundhati in Literature!

Research Article Written by London swaminathan
Post No.1130; Dated 25 June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

Dravidian Tamil politicians and foreign “scholars” have been fooling the academic world for long with their Racist Aryan Dravidian Theory. But those who read the 27,000 lines in 2389 Sangam Tamil poems composed by 461 poets, 2000 years ago, will be wonderstruck when they know that the same culture, beliefs, customs, history were shared by the people of India from the Northernmost Himalayas to the Southernmost Kanyakumari. There are hundreds and hundreds of examples in the Sangam corpus.

Though Tamils have a beautiful story around the chaste woman Kannaki, they never used her name anywhere in the 27000 + lines. Only Arundhati, wife of the great Rishi (sage) Vasistha was used throughout Tamil literature- both Sangam and Post Sangam periods. In Sanskrit scriptures Arundhati’s name is synonymous with chastity. It is found in all the works. But not many people know that she was praised by many Tamil poets of the Sangam Age.

Who is Arundhati?
Arundhati is the wife of sage Vasistha, one of the seven celebrated sages. They are known as Sapta Rishis. She was distinguished for her chastity. She was the daughter of Kardama Rishi.

Chaste women are compared to Arundhati. The Bodhayana Grhyasutra rules that a married couple should see the star Arundhati and the pole star on the first day of their marriage.

Legend has it each of the primeval sages had his own wife. Of these the wives of six sages excluding that of Vasistha fell in love with Agni and gave their breast milk to Subramanya . These six became KRITHIKA NAKSHATRAS (PLEIADES );

But Arundhati stood firm in her chastity and attained an honourable place as an auspicious star fit to be seen by chaste and pure women so that they might ever lead holy lives (Mahabharata Vanaparva ,chapter 226-230)

There is another story about Arundhati in the scriptures. She was born as a low caste woman as Akshamala (Manu Smriti 9-23) and elevated to wife of a great sage. Great Tamil poet introduces Vasistha as the husband of Arundhati. Such was her elevated status in Tamil! Kamban says the “husband of Arundhati “ (Vasistha) left for Mithila to take part in the wedding of Rama with Sita in a pearl Palanquin surrounded by 2000 Brahmins.

Tamil Weddings
Main part of Tamil wedding is “Standing on the grinder stone and looking at the Arundhati Star” (Ammi mithiththal and Arundhati Kaattal in Tamil). Every couple must look at the Arundhati Star before entering the bed room for their First Night. Nowadays they do it symbolically even in the day time!!

For those who do not know the ancient Hindu astronomy some tips:
Ancient Hindus including illiterates were well versed with all the essential herbs, hymns and 27+ stars in the sky. In addition to the 27 stars in the region of 12 zodiacal signs, they were familiar with all the planets and the stars like Druva (Pole Star), Sapta Rishi Mandala ( Ursa Major or Great Bear or Big Dipper or Wagon constellation), Abhijit (Vega) stars in the north and Agastya (Canopus) and Tri Sanku (Southern Cross) stars in the south.

If you at sky in the northern direction, you will see seven stars like a flying kite.
Of the seven stars, the last but one (in the tail of the kite) is Vashista Nakshatra. It is a double star system – one revolving the other! The ingenious Hindus named them Vashista and Arundhati. Alcor is the name given for Arundhati and Mizar is the name given to Vasishta in the astronomy books. Alcor is used to test the visual acuity.

Ancient Tamils worshipped the Seven Stars representing Seven Rishis: Atri, Brhu, Kutsa, Vashista, Gautama, Kashyapa and Angirasa.
Ref.Natrinai – 231-2 (worshipful Seven Stars)

They believed worshipping chaste woman will wash away their sins:
Paripatal: 20-68 (sinthikkat thirum piniyaat sererka)

Following are the references to Arundhati
Pathitrupathu : 31-27/28; 89—17/19
Ainkuru nuru 442-4
Purananauru: 122
Perumpanatrupatai:- Lines 302/303
Kalitokai:- 2-21
In all these places either a queen or a heroine is praised as chaste as Arundhati or Arundhati herself is praised.
Post Sangam Works: —Thirikadukam 1-1
Tamil epic Silappadikaram 1-27; 1-63 (Here heroine Kannaki is praised as a chaste woman like Arundhati.)

When poets use one as a simile that must be superior to the person or thing compared and that must be known to everyone. The Tamil examples show that Arundhati was a household name in Tamil Nadu. All these references explode the myth of Aryans invading or infiltrating into India. There was only one culture 3000 years ago and that was Hindu culture. The beauty is there is an uninterrupted respect for Arundhati until today!

Arundhati-Nyaya
Sanskrit Language has got several techniques for teaching different subjects. When they teach philosophy they, use Arundhati Nyaya.

To show to a person the star Arundhati in the sky, one points out at first to a big star in the north and says that that big star is Arundhati. The person is first led to a big star that is clearly seen. Then after rejecting that star the real star is shown. The person is guided step by step towards the goal. Even so, a spiritual aspirant is led gradually to the Supreme Truth which is formless and impersonal.

 tags- Arundhati, Wedding Night, Chaste woman, Seven Stars, Sapta Rishi, Ursa Major