Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Panini , author of the world’s first grammar book Ashtadhyayi, gives lot of interesting information through his 4000 aphorisms (sutras) and the additional woks such as Ganapatha and Dhatupatha. It helps us the understand the life in India 2700 years ago
Tlkappian is the author of 2000 year old Tamil grammar Tolkappiam. Like Panini’s work is called Paniniyam, Tamils called Tolkappian’s work Tolkappiam.
In all cultures we see long names are shortened for day today conversation and it would be almost uniform in that area. For instance, my name is Swaminathan. All Swaminathans in Thanjavur Region are abbreviated as SAMA ( SAAMAA) English names such as Juliette and Samantha will be July , Sam etc.
Throughout Sanskrit grammar books they used Devadatta’s name for all examples. Devadatta may be used in 11 different ways according to Panini and his commentator Patanjali.
Deva Datta’s name may be shortened in 11 different ways. It should be a Guinness book entry .
Panini says ,
Devadattaka ,Devika, Deviya , Devila, can be used. Patanjali who wrote the greatest and biggest commentary on Panini’s book adds,
Devaka , Dattika, Dattila , Dattiya , Dattaka , Deva , Datta . In total 11 forms are grammatically available.
So it is very interesting. Even if you commit some typographical errors you will be excused!!
(Devika is not feminine; in Sanskrit ‘a’ ending name is masculine. If it ends with ‘aa’ (long sound) then it is feminine. Krishna is one of the Avatars. But Krishnaa is Draupadi.)
***
Plan of a treatise
A book should have a plan. It is not a collection of articles written at different times on different unconnected topics. Like planning, presentation is also important. This plan is called tantra yukti.
The work of Kautilya / Chanakya has 32 tantra yuktis .
Charaka and Susruta also mentioned them, but Charaka added three more to the list .
The ancient Tamil grammar Tolkappiam , based on the tradition of the Aindra school , enumerates in its Porulatikaram section 32 principles of which 22 agree with those of Kautilya.
The Mimamsakas with their flare for analysis have indicated the principles of a literary composition. Of these they have singled out ‘samgati’ inherent consistency or internal order and ‘mangala’ benedictory opening. These tantra yuktis were known to Panini. The first of these , ADHIKARA is in three important Tamil works. It is Sanskrit word that is found in
Tirukkural, Silappadikaram and Tolkappiam .
Adhikara means domain heading – treatment of the matter within the purview of a work is referred to in Panini 4-3-87.i.e. A work that is composed in accordance with the principle od ‘adhikara’, or sense of the relevant. Tamil Veda Tirukkural has 133 adhikaras . Silappadikaram has three major divisions. Tolkappiam has three adhikaras.
Panini’s own work is model of Vidhana or the treatment of topics in their inherent order.
***
Charaka
Another interesting detail about Charaka . We know one Charaka associated with the great book Charaka Samhita. Charaka means one who always wander; they are wandering professors going to different places for teaching. Now almost all universities have Charakas i.e. Visiting Professors . There are followers of Vedic Charaka in three different areas. We don’t know whether the medicine man Charaka and Vedic Charaka are one and the same.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2(Post.8764)
கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது . நல்ல காரியங்களை முடிவு செய்யும்போது கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்தல் மரபு என்ற அரிய விஷயத்தை நச்சினார்க்கினியர் குறிப்பிட்டதை நேற்று பார்த்தோம்.
உரை எழுதுவதில் மன்னன் நச்சி. .அவரை “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் போற்றுவர். அவர் மேலும் ஒரு அதிசயச் செய்தியை சொல்கிறார்.
தொல்காப்பிய நூல் பாயிரத்தில் ‘வட வேங்கடம் தென் குமரி’ என்று ஏன் வடதிசையை முதலில் வைத்தனர் என்ற விவாதத்தில் நச்சினார்க்கினியர் கூறும் மேலும் ஒரு கருத்து இதோ :–
இதில் அதிசயம் என்ன வென்றால் தெற்கு யமனுடைய திசை என்பதும் தென்புலத்தார் என்பவர் இறந்து போன நம்முடைய முன்னோர்கள் என்பதும் வேதங்களிலும் சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த திருக்குறளிலும் உளது ;ஆனால் மேற்கு பற்றி நச்சினார்க்கினியர் சொல்லும் கருத்து எகிப்திய நாகரீகத்தில்தான் உளது.
சூரியன் மறையும் இருண்ட திசை; அதனால் அதை இறந்தோர்க்கு ஒதுக்கினர் என்று சிலர் விளக்கம் காணக்கூடும்; அது சரியல்ல என்பதற்கு நான் சொல்லும் காரணங்கள் இதோ :-
1. எகிப்திய பெயர்கள்- தமிழ் பெயர்கள் இடையே ஒற்றுமை உளது.
2.எகிப்திய முத்திரைகள் தமிழ் சித்தர்கள் முனிவர்கள் முத்திரை போல உளது.
3. எகிப்திய குள்ளர் தந்தத்தில் கிடைத்தது இந்திய முனிவர் போல உள்ளது
4. மிக முக்கியமாக, சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற வர்ணனை அகநாநூற்றிலும் (மாமூலனார் பாடல்) எகிப்திலும் உளது. சம்ஸ்க்ருத இலக்கியத்தில் சூரியன் 7 குதிரை பூட்டிய ஒரு சக்கரத் தேரில் ஊர்பவன் என்ற கருத்தே உளது. அதையும் தமிழ் இலக்கியத்தில் காணலாம்.
5. இதைவிட முக்கியமாக ஆத்மாவை கூண்டுப் பறவை (Cage bird) என்ற வர்ணனையை திருக்குறளிலும் எகிப்திலும் காணப்படுகிறது; பகவத் கீதை போன்ற நூல்களில் பழைய உடைகளுக்கே உடல் ஒப்பிடப்படுகிறது. பறவைக் கூண்டுக்கு அல்ல.
6. திருமூலர் கருத்து எகிப்தில் இருப்பதையும் முன்னர் கட்டுரைகளில் கண்டோம்.
சுருக்கமாகச் சொன்னால் சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களோடு, கூடுதல் எகிப்திய – இந்திய ஒற்றுமையைக் காணப்படுகிறது. நச்சி . சொல்லும் இறந்தோர் திசை மேற்கு எனபது புதிய விஷயம்.
யக்ஷர்கள் (Hyksos) எகிப்து மீது படை எடுத்த விஷயம், தசரதன் எழுதிய கடிதங்கள் (Amarna Letters) எகிப்தில் இப்பொழுதும் மியூசியத்தில் உள்ளது என்பதெல்லாம் நான் முன்னரே எழுதிய விஷயங்கள்தான்.
***
வடக்கு உணர்ந்தே தெற்கு உணரப்படுதலின் பிற்கூறப்பட்டது என்பர் அரசஞ் சண்முகனார்.
இனி தொல்காப்பிய பாயிரத்திலுள்ள பிற சுவையான செய்திகளைக் காண்போம்.
வட வேங்கடம் என்பது திருப்பதி வேங்கடாசலபதி உறையும் புனித மலை ; குமரித் துறையோ புனித நீராடும் துறை. (தேவாரத்திலும் சிலப்பதிகாரத்திலும் காண்கிறோம்). இதனால்தான் — புனிதம் கருதித்தான் — இதைக் குறிப்பிட்டனர் என்று மிகப் பழைய உரை ஆசிரியரான இளம்பூரணர் எழுதுகிறார். சுருங்கச் சொன்னால் தமிழர்கள் என்பவர் இந்துக்களே ; சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களே இமயம் முதல் குமரி வரை உள்ளதும என்று அடித்துப் பேசுகிறார் இளம்பூரணர். அதாவது தமிழையும் இந்துமதத்தையும் பிரிக்க எண்ணுவோருக்கு சாவுமணி அடிக்கிறார்.
நச்சினார்க்கினியர் மேலும் ஒருபடி போகிறார் :-
“நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும் , எல்லாராலும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . குமரியும் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டும் காலையே ஓதுவார்க்கு நல்வினை (புண்ணியம்) உண்டாம் என்று கருதிக் கூறினார்” .
ஆக, மதுரை நகர பாரத்துவாஜ கோத்ர ப்ராஹ்மணன் நச்சினார்க்கினியர் இங்கே மேலும் ஒரு புதிய செய்தியை நமக்கு அளிக்கிறார். இந்துக்கள் 7 புனித நதிகள், 7 புனித நகரங்கள், 7 சிரஞ்சீ விகள் , 7 புனிதக் காடுகள், 5 புண்ய ஸ்திரீக்கள்/பெண்கள் பெயரை தினமும் காலையில் பிரா த ஸ்மரணத்தில் சொல்லுவார்கள். இன்றும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்களில் இதைக் கேட்கலாம். பல லட்சம் இந்துக்கள் தினமும் காலையில் சொல்லுவர்; இதில் இல்லாதவை குமரியும் வேங்கடமும். 7 என்பது ஒரு தொடக்கம்தான் . அவற்றைச் சொல்லுகையில் அதுபோன்ற பல்லாயிரம் புனிதம் மிக்க என்ற பொருளும் தொனிக்கும். அதில் குமரி , வேங்கடம் என்ற பெயரைக் காலையில் சொன்னால் புனிதம் என்பதால்தான் தொல்காப்பியத்தில் – பாயிரத்தில் – அது இடம்பெற்றது என்பது நச்சி. தரும் நல்ல செய்தி ; அவரை மெச்சிப் போற்றுவோம்.
****
இவ்வாசிரியர் ‘அகத்தியனார்க்குத் தமிழை செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபு பற்றி என்பது’ எனக்கூறுவர்.
(இவ்வாசிரியர் என்பது தொல்காப்பிய விருத்தி ஆசிரியர் மாதவ சிவஞான யோகிகள்/ முனிவர் என்று நான் நினைக்கிறேன் . முனிவரின் சொற்களுக்கு தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கப் பகுதியில் இவை உள்ளன )
****
அரசஞ் சண்முகனார் கருத்து :-
“வேங்கட மலையின் வடக்கிலிருந்து இமயமலை வரை ஆரியமும், வேங்கட மலையின் தெற்கிலிருந்தது குமரிமலை வரைத் தமிழும் பரவியிருந்த படியா லும், அக்காலத்து வடதிசைக்கண் கங்கை யாறும் இமயமலையும் போல தென்றிசைக்கண் பஃறு ளி யாறும் குமரி மலையும் எல்லோரானும் அறியப்பட்டுக் கிடந்தமையின் வடக்கும் தெற்கும் பிறவெல்லையும் உளவாக அவற்றைக் கூறாமல் , எல்லாரும் உணர்தற்பொருட்டு மறைவின்றி நெடுந்தூரந் தோன்றற்பாலவாகிய மலைகளைக் கூறினார் என்பர் .
****
ZOGILLA PASS IN THE HIMALAYAS BY RADHIKA BALAKRISHNAN
முடிவுரை
இதிலிருந்து நாம் பெறும் கருத்துக்கள் என்ன?
தமிழ் மொழி எக்காலத்தும் வட வேங்கட மலைக்கு அப்பால் — திருப்பதிக்கு அப்பால் வழங்கவில்லை. எமனோ, பர்ரோ , ஐராவதம் மகாதேவன் , அசுகோ பர்போலா சொல்வதெல்லாம் மஹா ‘பேத்தல்- உளறல்’;. வட திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள் என்பனவெல்லாம் மஹா ‘கப்ஸா’ . அங்குள்ள தமிழ் சொற்கள் என்று அவர்கள் கூறுவது போல உலகில் வேறு எந்த இரண்டு பழைய மொழிகளிலும் நான் சொற்களையும் காட்ட முடியும்; இலக்கண விதிகளையும் காட்ட முடியும் . அவையெல்லாம் ஒரு மொழியின் 100 சதவிகிதத்தில் 2 அல்லது 3 விழுக்காடே. ஜப்பானிய, கொரிய , ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க செனகல் மொழிகளை ஒப்பிடும் கட்டுரைகளை படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வரும். உண்மையான நெருக்கம் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும்தான் என்பதை சந்தி / புணர்ச்சி விதிகள் காட்டுகின்றன. தேவாரமும் திருவிளையாடல் புராணமும் இரு மொழியும் ஒரே இடத்தில் தோன்றியவை என்பதைக் காட்டும்.
இரண்டாவது முக்கிய விஷயம், தமிழை சிவன், முருகன், அகத்தியனிடமிருந்து எவனாலும் பிரிக்க முடியாது. பழைய உரைகாரர்கள் அனைவரும் இதை ஆதரிக்கின்றனர். தேவாரமும் திருவாசகமும் திவ்வியப்பிரபந்தமும் தெய்வத் தமிழ் என்பதை மீண்டும் மீண்டும் செப்புகின்றன.
மூன்றாவது முக்கிய விஷயம், இமயம் முதல் குமரி வரை புனித பூமி; நச்சி. சொல்லுவது போல ‘வடவேங்கடம் தென்குமரி’ என்று தொல்காப்பியத்தை படிக்கத் துவங்கினாலேயே புண்ணியம்!!
கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக ஒரு எச்சரிக்கை. ‘ஆரியம்’ என்ற சொல் தேவாரம் முதல் தொல்காப்பிய விருத்திவரை காணப்படும் . இதன் பொருள் “பண்பட்ட” (மொழி, மக்கள் ) என்பதேயாம் என்பதை சங்க இலக்கிய தேவார உரைகளை படிப்போர் அறிவர் . கால்டு வெல்களும் மாக்ஸ்முல்லர்களும் பயன்படுத்தும் ‘விஷமேற்றிய சொல்’ (Polluted/poisoned) அல்ல. நேற்று வந்த கழிசடைகளை ஒதுக்கி விட்டு பழந்தமிழ் உரைகாரர்களை நம்புவோமாக.
வாழ்க தமிழ் !!
–சுபம்–
tags- வட திசை -2, தொல்காப்பியம் , நச்சினார்க்கினியர்
மஹாத்மா காந்திஜி ஒரு திறந்த புத்தகம். உண்மையே கடவுள் என்றார் அவர்.
அந்த உண்மையின் வழி வாழ நினைத்தார்; வாழ்ந்தும் காட்டினார்.
சத்திய சோதனையில் அவர் ஜெயித்தார். சாதாரண ஆத்மா மஹாத்மா ஆனார்.
ஹிந்து மதத்தை விட்டு அவரை விலக வைக்க நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியோ அல்லது அவரை மடக்கி மாட்டி விட அவரிடம் கேட்கப்பட்ட ஏராளமான கேள்விகளோ அவரை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. மாறாக சூதுடன் வந்து வாது செய்தவர்களே தோற்றுப் போனார்கள். ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவராக அவர் இருந்ததற்கு கீதை, காயத்ரி, இறைவன் நாமத்தைக் கூறும் பஜனைப் பாடல்கள், ஈசோபநிஷதம் உள்ளிட்டவையே!
இது பற்றி அவரே தெளிவாக உரைத்திருக்கிறார்.
உதாரணத்திற்கு அவரே கூறிய மூன்று விஷயங்கள் இதோ:-
கீதை ஒன்று தான் ஆட்சேபிக்க முடியாத ஆதார நூல் என்று நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஒரு சம்ஸ்கிருத பண்டிதர் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் கீதையை தான் போற்றுவதற்கான காரணத்தை காந்திஜி இப்படி எழுதினார்:
“வாசித்துப் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற அக்கரையுடன் ஒவ்வொரு ஹிந்துவும் வாசிக்கக் கூடிய தெளிவான புத்தகம் கீதை தான். மற்ற எல்லாத் தரும சாஸ்திர நூல்களும் எரிந்து சாம்பலாகி விட்டால் கூட, ஹிந்து மதம் என்றால் என்ன, அதன்படி ஒருவர் எப்படி வாழமுடியும் என்பதைக் கூறுவதற்கு 700 ஸ்லோகங்கள் அடங்கிய அழிக்க முடியாத இந்த நூல் ஒன்றே (கீதையே) போதுமானது. என்னை ஒரு சனாதனி என்றே நான் கூறிக் கொள்கிறேன். ஏனெனில், சென்ற நாற்பது ஆண்டுகளாக நான் முற்றிலும் கீதையின் உபதேசங்களுக்கு இணங்கவே வாழ்க்கையை நடத்த முயற்சித்து வருகிறேன். அதனுடைய முக்கியமான கொள்கைக்கு முரணாக இருக்கும் எதையும் ஹிந்து மதத்திற்கு உகந்ததன்று என்று நான் தள்ளி விடுகிறேன். அது எந்தச் சமயத்தையும், எந்த போதகரையும் நிராகரிக்கவில்லை”
ஹரிஜன் 25-2-1923
2
காந்திஜியும் காயத்ரி மந்திரமும்!
சினேக பாவமுள்ள ஒரு ஆட்சேபவாதி ‘தாழ்மையுடன்’ சில கேள்விகளை காந்திஜி முன் வைத்தார். அதில் கடைசியாக அவர் கேட்டிருந்தார் இப்படி:” நீங்கள் உங்களுடைய இரண்டாவது பிறவியில் ஒரு நாள் கூட உங்களுடைய தினசரிப் பிரார்த்தனைகளில் காயத்ரி ஜபத்தையும் சேர்த்துக் கொள்ளாமல் இருந்ததில்லையா?”
இந்தக் கேள்வியில் இரண்டாவது பிறவி என்று அவர் குறிப்பிட்டிருந்தது பூணூல் போடுவதற்கு முன் உள்ள பிறவி முதல் பிறவியாகும்; பூணூல் போட்ட பிறகு ஏற்படுவது இரண்டாவது பிறவியாகும் என்ற அடிப்படைக் கருத்தைக் கொண்டதாகும்.
அவர் கேட்ட கேள்விகளுக்கு காந்திஜி நீண்ட பதிலைத் தந்தார். அதில் ஒரு பகுதி இது:-
“(கடைசியாக) நன்மை பயக்கும் சில சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு. காயத்ரி ஜபம் செய்வதற்கு ஒரு சம்பிரதாயம் உண்டு. அதாவது, குறிப்பிட்டபடி ஸ்நானம் செய்து சுத்தமாக இருந்து கொண்டு, சில் குறிப்பிட்ட காலங்களில் மாத்திரமே காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். அந்தச் சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இருப்பதாலும், எப்போதும் அவற்றை அனுஷ்டிக்க என்னால் இயலாததாலும், அவ்விஷயமாக நான் பிற்காலத்தில் தோன்றிய மகான்களைப் பின்பற்றி வந்திருக்கிறேன். அதாவது, பாகவதத்தில் உள்ள துவாதச மந்திரங்கள் அல்லது எளிமையான துளஸிதாசரின் உபதேச விதி, கீதையிலிருந்தோ, வேறு நூல்களிலிருந்தோ சில ஸ்லோகங்கள், பிராகிருத பாஷையில் (காந்திஜி இங்கு குறிப்பிடுவது சம்ஸ்கிருத பாஷையில் உள்ள பேச்சு வழக்கு மொழியை) சில பஜனைகள் இவற்றுடன் நான் திருப்தியடைந்து வந்துள்ளேன். இவை தான் தினசரி என் ஆன்ம உணவாக, எனது காயத்ரியாக இருந்து வந்திருக்கின்றன. அவை எனக்கு தினசரித் தேவையான மனச்சாந்தியையும் ஆறுதலையும் கொடுக்கின்றன.”
எங் இந்தியா 27-8-1925
3
காந்திஜியும் ஈசோபநிஷத்தும்!
ஹிந்து மத சாரம் என்ன என்பதை அவர் தெளிவாக உணர்ந்து கொண்ட விதத்தையும் அவர் விளக்கியுள்ளார். ஹிந்து மதம் அழியவே அழியாது அதில் உள்ள ஒரே ஒரு மந்திரம் மட்டும் ஹிந்துக்களின் மனதில் பதிந்தால் என்று அவர் மிக்க கம்பீரமாக எழுதினார்.
அதில் ஒரு பகுதி இதோ:-
“ஆனால், நான் இப்போது கூறப் போகும் ஒரு மந்திரத்தில் ஹிந்து மதத்தின் சாரம் முழுவதும் அடங்கியிருக்கிறது என நிர்ணயித்துள்ளேன். ஈசோபநிஷத்தை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். மொழி பெயர்ப்புடனும் வியாக்கியானத்துடனும் அதைப் பல ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்தேன். எரவாடா சிறையில் அதை மனப்பாடமும் செய்து கொண்டேன். ஆனால், அப்போது என்னை அது கவரவில்லை. சமீப காலமாகத் தான் அது என்னை முற்றிலும் கவர்ந்து விட்டது. மற்ற எல்லா உபநிஷத்துக்களும், மற்ற எல்லா வேத நூல்களும் திடீரென்று எரிந்து சாம்பலாகி விடுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது ஈசோபநிஷத்தின் முதல் ஸ்லோக்ம் மாத்திரம் ஹிந்துக்களின் மனதில் பதிந்திருந்தால், ஹிந்து மதம் எக்காலத்திலும் அழிவின்றித் திகழும்.
அந்த ஸ்லோகம் இது தான்:
ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்
யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா
மா க்ருத கஸ்யஸ்வித் தனம்
இதன் மொழிபெயர்ப்பு வருமாறு:-
“இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும் சிருஷ்டிகர்த்தாவான இறைவன் வியாபித்துள்ளார். எனவே, எல்லாவற்றையும் தியாகம் செய்து அவருக்கு அர்ப்பணம் செய்யுங்கள். பிறகு உங்களுக்குக் கிடைக்கும் ஒரு பங்கை மாத்திரம் உபயோகப்படுத்திக் கொண்டு அனுபவியுங்கள். யாருடைய உடைமைகளுக்கும் ஒரு காலத்திலும் பேராசைப்படாதீர்கள்.
ஒரே கடவுள்; ஒரே சிருஷ்டிகர்த்தா, ஒரே தலைவர் எல்லாவற்றிலும் வசிக்கிறார்; அகில உலகிலும் வியாபித்திருக்கிறார். ஒரு மனிதர் இதைக் காட்டிலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்க முடியும்?”
– ஹரிஜன் 30-1-1937
4
மேலே கண்ட மூன்று பகுதிகளில் முதலாவது பகுதியில் காந்திஜி எப்படி கீதையைப் போற்றினார் என்பது தெரிய வருகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வாக அவர் நாடியது கீதையைத் தான்!
இரண்டாவது பகுதி அவர் எப்படி காயத்ரி மந்திரத்தில் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க விரும்பினார் என்பது தெரியவருகிறது. அவற்றைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் எளிய பஜனையையும் ஸ்லோகங்களையும் அவர் விரும்பி மேற்கொண்டதையும் அறிய முடிகிறது.
மூன்றாவது பகுதியில் ஈசோபநிஷத் மீது அவர் கொண்ட பெரும் மதிப்பும் நம்பிக்கையும் தெரியவருகிறது.
அதன் “ஈசாவாஸ்யம்” என்று ஆரம்பிக்கும் ஒரு ஸ்லோகம் இருந்தாலும் போதும், ஹிந்து மதம் என்றும் அழியாது என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கையையும் நம்மால் அறிய முடிகிறது.
காந்திஜி, மஹாத்மா காந்திஜிதான்!
மஹாத்மா காந்திஜி சிறந்த ஹிந்து காந்திஜி தான்!! என்பது இதிலிருந்து புலனாகிறது அல்லவா!
வாழ்க பாரதம்! வாழ்க காந்திஜி நாமம்!! ஓங்கி உயர்ந்து வளர்க ஹிந்து மதம்!!!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் நூலுக்கு — முதல் தமிழ் நூலுக்கு– பாயிரம் எழுதியவர் பனம்பாரனார் .
“வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுல கத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
…………………………”
இந்தப் பாயிரம் நமக்கு அரிய பெரிய செய்திகளை வழங்குகிறது.
முதல் செய்தி —
தமிழனுக்கும் சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஏனெனில் தமிழ் பேசிய பகுதிகள் தென் குமரி முதல் வடவேங்கடம் வரைதான். திருப்பதிக்கு அப்பால் வேறு மொழிகள் வழங்கின. இதைப் பனம்பாரனார் மட்டும் சொல்லவில்லை; தொல்காப்பியத்துக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக வந்த அத்தனை உரைகாரர்களும் சொல்கின்றனர் . அதுமட்டுமல்ல. 30,000 வரிகளைக் கொண்ட சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் கங்கை, இமயம், அருந்ததி, சப்த ரிஷிக்கள் முதலிய குறிப்புகள் உள . ஆனால் சிந்து நதி , சமவெளி பற்றிய குறிப்பே இல்லை. சிலர் இந்தியாவின் வடமேற்கில் வசித்த யவனர் பற்ரிய குறிப்புள்ளதே எனலாம். யவனர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆயினும் இஃது ரோமானியர்களையே குறிக்கிறது என்பதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
இரண்டாவது செய்தி
வடதிசை புனிதமானது !
கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலியோர் வட திசை நோக்கி அமர்ந்து, உண்ணா விரதம் இருந்து, உயிர் துறந்ததை புறநாநூறு செப்பும்.
பாண்டவர் ஐவரும் வட திசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறந்ததை மஹாபாரதம் செப்பும்.
வடதிசை கயிலை நோக்கி சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சென்றதை பெரிய புராணம் செப்பும்.
பனம்பாரனாரும் ‘வட’வேங்கடம் என்ற சொல்லை முதலில் வைத்ததற்கு அதன் புனிதத் தன்மையே காரணம் என்று உரைகாரர்கள் புகல்வது படித்து இன்புறத்த தக்கது. அதில் இந்தியாவை அரச இலையின் வடிவத்துக்கு ஒப்பிடுவதும் இமயம் முதல் குமரி வரை புனித நிலப்பரப்பு என்று நவில்வதையும் படிக்கையில் ஆனந்தம் பொங்கும். வெள்ளைக்காரன் வந்து இந்திய ஒருமைப்பாட்டினை நமக்குக் கற்பித்தான் என்று உளறும் அரை வேக்காடுகளின் தலையின் பாறை இடி கொடுக்கும்.
இதோ உரைகாரர்களின் விளக்கம். சிவஞான முனிவரின் ‘தொல்காப்பிய விருத்தி’ நூலுக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது —
1
தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . அகத்தியனார்க்குத் தமிழைச் செவி அறிவுறுத்த செந்தமிழ் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது . தெற்கட் குமரியாறாகலின் , அதுவே எல்லையாயிற்று . கிழக்கு, மேற்கு கடல் எல்லையாகலின் , வேறெல்லை கூறா ராயினர் .
ஈண்டு வடக்கை முற் கூறியதற்கும் , வேங்கட முதலிய இடங்களைக் குறித்தமைக்கும் ஆசிரியர்களால் காரணங்கள் தனித்தனியே கூறப் பெறுகின்றன–
சிவஞான முனிவர் —
வேங்கடம் வடக்கின் கண்ணுள்ளது என்பதும் குமரி தெற்கின் கண்ணுள்ளது என்பதும் உலகறிந்ததொன்று . அவற்றைத் திசையுடன் சேர்த்து வடவேங்கடம் தென் குமரி என்றதற்குக் காரணம் திசை கூறி எல்லை கூறுதலே முறைமையாதலின் என்க.
(இங்கே நமக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது; சுப காரியங்களை முடிவு செய்கையில் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்ய வேண்டும்.)
அரசஞ்சண்முகனார் —
வடக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையையும் உணர்த்தற்குத் தானே காரணமாய்நிற்கும் மங்கலத் திசையாகலின் தம்பாயிரமும் நூலும் நின்று நிலவுதல் வேண்டி முற்கூறப்பட்டது . மற்றும் என்றும் மாறாத துருவ நட்சத்திரத்தை அடையாளமாகக் கொண்டு அறியப்படுத்தலானும் இற்றைய விஞ்ஞான திசையறி கருவி எ ஞஞான்றும் வடக்கையே காட்டலானும் கூறினார் எனவும் உரைப்பர் .
உலக வழக்கில் தென்வடல் , கீழ்மேல் எனவே எல்லை கூறும் வழி ஆடசியுண்மையானும் யாண்டும் வடக்குத்தெற்கு -மேல் கீழ் என்ற வழக்காறிண்மையானும்
“இரு திசை புணரின் ஏயிடைவருமே “
என்னும் சூத்திரத்தினும் ‘தெற்கே வடக்கு கிழக்கே மேற்கு’ என்ற வழக்குண்மையே எடுத்துக் காட்டப் பெறுதலானும் , இக்கூறிய இவைகளேயன்றிப் பிற காரணங்களும் உளவாதல் வேண்டும். . அவை – திசைகளுள் வடக்கும் தெற்கும் பெருந்திசைகளாக, இமயம் முதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பைக் கொண்டு உணரப்பெற்று வந்தன .
‘திரிபு வேறு கிளப்பின் ‘ என்னுஞ் சூத்திரத்துக்குப் பெருந்திசைகளோடு கோணத் திசைகள் புணரின் என்று உரையெழுதப்பெறுவதும் ‘பெருந்திசை’ என்ற வழக்குண்மையை வலியுறுக்கும் .
அரச இலை = இந்தியா !
இமயமுதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பு ஓரரசிலைபோல்வது .அதன் அடிப்பகுதி வடக்கு; அகன்று பரந்து கிடப்பது. அதன் நுனி போல நீண்டு ஒடி வளைந்த பகுதி தெற்கு. ஆதலால் அகன்று பரந்த வடபகுதியை முற்கூறி , நீண்டு பரந்த தென் பகுதியைப் பிற் கூறினார் எனலுமாம். . காந்த மலையும் வடவைத் தீயும் இருத்தலிற் கூறினார் என்றலுமாம் .
புறநானுற்றில் இமயம் !
இங்ஙனமே புறத்தினும்
‘வடா அது பனி படு நெடுவரை வடக்கும் – தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’ எனவும், சிகண்டியார்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
தலையாய ஹிந்து மகனை, முன்னணித் தலைவரை இழந்தோமே!
ச.நாகராஜன்
இன்று 30-9-20 மாலை கிடைத்த செய்தி மனதையும் உடலையும் வெகுவாக பாதித்து நோகவைத்து செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டது.
மானனீய கோபால்ஜி நம்மிடையே இல்லை என்ற செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் நினைவுகள் அலை அலையாய் நினைவில் வந்து மோதுகின்றன.
ஒன்றா, இரண்டா ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட அற்புத நிகழ்வுகள்.
வருடம் 1968.
சந்திரசேகர் என்ற நண்பர், ‘இராம கோபாலன் எனது வீட்டில் இருக்கிறார், வருகிறீர்களா’ என்று கேட்டார்.
கரும்பு தின்னக் கூலியா, ஆர் எஸ் எஸ் இயக்க பிரசாரக் என்றால் பார்ப்பதற்கு கேட்கவா வேண்டும், உடனே புறப்பட்டோம்.
அவரைச் சந்தித்த முதல் சந்திப்பே காந்தத்தால் இரும்புத் துளிகள் இழுப்பது போல இருந்தது. இழுக்கப்பட்டோம்!
முதல் சில நிமிடங்களில் அவர் பேசியதையே நாங்கள் உடனடியாக வீட்டில் வந்து ‘கமெண்ட்’ அடித்த போது விவேகானந்தரைப் பார்த்தது போல இருக்கிறது என்று பேசினோம்.
பின்னர் ‘சங்க வேலையாக’ அவருடன் நெடுங்காலம் தொடர்பு ஏற்பட்டது.
எங்கள் வீட்டில் அவருக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது.
இறுதியாக நான் அவரைத் தொடர்பு கொண்டது சில நாட்களுக்கு முன்னர்.
மதுரையில் உள்ள பெருமாள் தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்ரமிக்கப்பட்டிருந்த கடைகள் இடிக்கப்பட்டன என்ற செய்தியை உடனே அவருக்குத் தெரிவிக்க போன் செய்தேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது உதவியாளரிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.ஏனெனில் இதற்காக உற்சாகமும் உத்வேகமும் அவரிடமிருந்தும் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் செயலாளர் திரு எம்.ராமசாமியிடமிருந்தும் பெற்றிருந்தேன்.
மதுரையில் ஆத்திக சமாஜங்களை ஒன்றிணைத்து ஊர்வலம் நடத்தினோம்.
ஆலயப் பாதுகாப்பு மாநாட்டின் மதுரை செயலாளராக இருந்து எட்வர்ட் ஹாலில் பெரிய மாநாடு நடத்தினோம். அதில் முக்கிய தீர்மானமாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருந்தோம்.
இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்னதாக அவரே என்னை அழைத்தார் போனில்.
மாலைமலரில் வெளியான எனது கட்டுரை ஒன்றை அவர் பாராட்டினார்.
ஏன் பேசவில்லை என்று அவர் என்னைக் கேட்ட போது அவருக்குள்ள இடைவிடாத பணியில் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என்றேன். ‘இல்லை பேசு’ என்று அவரது தனி செல் நம்பரைத் தந்தார்.
பாராட்டத் தயங்காத பெரிய உள்ளம் கொண்டவர் அவர். அவரது உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் ஹிந்து சிந்தனை கொண்டதே.
மகா தைரியசாலி.
கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறையை சில விஷமிகள் தகர்க்க முயன்ற போது கடல் நீச்சுக்காரர்களுடன் படகில் சென்று விஷமிகளை எதிர் கொண்டு அவர்களை எச்சரித்தது யாரும் அறிந்திராத ஒன்று. விளம்பரத்தை விரும்பாதவர் அவர்.
காலையில் 4 மணிக்கு எழுந்து காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பல யோகாசனங்களைச் செய்வது அவர் பழக்கம். நாள் தவறாமல் இதைச் செய்யும் அவர் உடனடியாக சஙகப் பணிக்கு ஆயத்தமாவார். இரவு நெடு நேரம் வரை பணி தொடரும்.
இடைவிடாத பயணத்தை மேற்கொண்ட அவர் தமிழ்நாட்டில் செல்லாத ஊரே இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவு நெருங்கிய தொடர்பை அனைத்து சங்க ஸ்வயம்சேவகர்களுடனும் அவர் கொண்டிருந்தார்.
பெரிய எழுத்தாளர். நல்ல மொழிபெயர்ப்பாளர். பல்மொழி வல்லுநர்.
எழுமின் விழிமின் என்ற புத்தகத்தை அவர் தான் அற்புதமாக மொழிபெயர்த்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். விவேகானந்தரின் அற்புதமான உத்வேகமூட்டும் உரைகளைக் கொண்டது இந்த நூல். இது ARISE! AWAKE என்று ஆங்கிலத்தில் ஏக்நாத்ஜி ரானடே அவர்களால் தொகுக்கப்பட்டது.
தொட்டதெல்லாம் தங்கமாகும் என்ற மொழிக்கேற்ப அவர் தொட்ட ஒவ்வொருவரும் ஹிந்து சிந்தனை கொண்ட பெரும் தொண்டராக மாறினர்.
பலர் கவர்னராக ஆகி உள்ளனர். பலர் தேசியத் தலைவர்களாக பாரத நாட்டுத் தொண்டில் இன்று ஈடுபட்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலையைப் போக்க் அவர் ஹிந்து முன்னணியைத் தொடங்கினார்.
ஹிந்து முன்னணி ஆற்றிய, ஆற்றி வரும் அற்புதப் பணிகள் மகத்தானவை.
இன்று தலையாய ஒரு ஹிந்து மகனை, முன்னணித் தலவரை இழந்து வாடுகிறோமே!
அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைவதாக. அவரது நினைவே நமக்கு உத்வேகம் ஊட்டி நமது பணியைத் தொடரச் செய்யுமாக!
ஆபஸ்தம்பரைப் பற்றி பிரம்ம புராணம் கூறும் இன்னொரு சம்பவம் இது :
ஒரு முறை அகஸ்திய மஹரிஷி ஆபஸ்தம்பரின் ஆசிரமத்திற்கு வந்தார்.ஆபஸ்தம்பர் தன் சிஷ்யர்களோடு கூட அகஸ்தியரை நன்கு வரவேற்று உபசரித்தார்.
பின்னர் அவரிடம் கேட்டார்: “ஓ! மஹரிஷியே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்த மூவரில் எவர் மிகவும் பூஜிக்கத் தகுந்தவர்? எவரிடமிருந்து சுகானுபவத்தையும் முக்தியையும் அடைய முடியும்? எவர் அன்ன தாதா? எவர் அழிவற்றவர்? எவர் தேவர்களுக்கெல்லாம் தேவர்? எவர் யாகங்களால் பூஜிக்கப்படுகிறார்? வேதங்கள் யாருடைய புகழை விசேஷித்துச் சொல்கின்றன? எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சந்தேகங்களைத் தயவுசெய்து தீர்த்தருள்வீராக.”
அகஸ்தியர் உடனே அவரை நோக்கிப் பின்வருமாறு நீண்ட பதிலை உரைத்தார்:” அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய இந்த நான்குமே உலகில் உலகியல் பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. இந்த நான்கு சப்தங்களை விட வேத சப்தமே முக்கியமான பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. வேதத்தால் எவர் துதிக்கப்படுகிறாரோ அவரே பராத்பரர்.
அபரர் என்பது யார் என்றால் ம்ருதர் – அதாவது அழியை அடைபவர்.
பரர் என்பது யார் என்றால் அம்ருதர் – அதாவது அழிவை அடையாமல் என்றும் இருப்பவர்.
எவர் சரீரம் இல்லாதவரோ அவரே பரர்.
சரீரமுள்ளவர் அபரர்.
அபரன் என்பது குணம், ரூபம், வியாபகம் ஆகிய இவற்றின் வேறுபாடுகளினால் – அதாவது பேதங்களால் – மூன்று விதங்களாக மாறுகிறது. ஒருவரே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாகச் சொல்லப்படுகிறார். இம்மூன்று பேர்களில் அறியத்தக்கதான பதார்த்தம் ஒன்று தான். அது தான் பரம் என்று சொல்லப்படும். அந்தப் பரம் என்ற பொருளே உலகத்தின் நன்மையின் பொருட்டு வியாபகம், குணம், செயல் ஆகிய பேதங்களாக இப்படி மூன்று ரூபங்கள் உள்ளதாக ஏற்படுகிறது.
இதுவே முக்கியமான உண்மை.
இதை எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வித்வான். (கற்றறிந்தவன்)
இந்த விஷயத்தில் எவன் ஒருவன் பேதத்தைச் சொல்கிறானோ அவன் லிங்கபேதி என்று சொல்லப்படுகிறான்.
அப்படிப்பட்டவனுடைய பாவத்திற்குப் பிராயச்சித்தமே கிடையாது.
இந்த மூன்று தேவர்களுடைய மூர்த்தி பேதமானது வேதத்தில் தனித்தனியே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீரம் இல்லாமல் இருக்கும்படியான அந்த ஒரே பதார்த்தமாகிய பரம் மேற்சொன்ன மூன்றிலும் மேலானதாகும்.”
என்று இப்படி முடித்த அகஸ்தியரை நோக்கி ஆபஸ்தம்பர் கேட்டார்:” நீங்கள் கூறிய இந்த பதிலில் எனக்கு எந்த வித நிச்சயமும் ஏற்படவில்லை. என்றாலும் கூட அதற்குள் ரகசியமாய் இருக்கும் விஷயத்தை எனக்குச் சொல்வீராக!”
அகஸ்தியர் உடனே, “ இந்த மூன்று உலகங்களிலும் ஒருவருக்கொருவர் பேதம் என்பதே கிடையாது. என்றபோதிலும் மங்கள ரூபமாய் இருக்கின்ற சிவனிடமிருந்தே எல்லா சித்திகளும் உண்டாகின்றன. அவரே இந்த ஜெகத்திற்குக் காரணம். அவரே ஜோதி ரூபமாக விளங்குகிறார். ஆகவே தண்டகாவனத்தில் உள்ள கௌதமி நதிக்கரை ஓரத்தில் சேவிப்பவர்களின் பாவத்தைப் போக்கும் பரமசிவன் இருக்கிறார். அங்கு சென்று மிகுந்த பக்தியுடன் அவரை பூஜித்து வாரும்” என்றார்.
இதைக் கேட்ட ஆபஸ்தம்பர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.
நேராக கங்கை நதிக்குச் சென்று அங்கு ஸ்நானம் செய்து பரமசிவனை நோக்கி இப்படித் துதித்தார்:-
“ கட்டைகளில் நெருப்பும், மலர்களில் வாசனையும், விதைகளில் மரமும், கற்களில் தங்கமும் போல எல்லாப் பிராணிகளிலும் எவர் மறைந்திருக்கிறாரோ அப்பேர்ப்பட்ட சோமநாதரை நான் சரண் அடைகிறேன்.
எந்த பரமசிவன் விளையாட்டினால் ஜெகங்களை சிருஷ்டித்து காப்பாற்றி வருகிறாரோ, எவர் விஸ்வரூபரோ, எவர் ஸத்துக்கும், அஸத்துக்கும் மேலானவரோ, எந்த ஒருவரை நினைத்த மாத்திரத்தில் ஒருவன் தரித்திரம், பாபம், சாபம், ரோகம் ஆகியவற்றின் கொடுமைகளிலிருந்து பாதிக்கப்படாமல் இருக்கிறானோ எவரால் ஆதியில் பிரம்மா முதலியவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தர்மத்தை அறிந்து அதில் ஆசை கொண்டார்களோ, யாரால் இவ்விதம் இரு சரீரங்களை அடைந்தார்களோ, மந்திரத்தினால் பரிசுத்தமாயிருக்கிற நமஸ்காரமும் அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட பதார்த்தமும் எவரைச் சென்று அடைகிறதோ, எவரைக் காட்டிலும் வேறொரு பிரசித்தமான வஸ்து இல்லையோ, எவரைக் காட்டிலும் பெரிது, சிறிது வேறொன்றும் இல்லையோ, எவரது ஆணையால் இந்த உலகம் ஆச்சரியகரமாகவும், பெரிதாகவும் இருக்கிறதோ, எவரிடத்தில் ஐசுவரியம், கர்த்தத்வம், மகத்துவம், அன்பு, கீர்த்தி, சுகம், சாஸ்வதமான தர்மம் ஆகிய அனைத்தும் இருக்கின்றனவோ, யார் எல்லோரையும் காக்கிறாரோ, சரணம் அடைந்தவர்களிடம் யார் ஒருவர் பிரியமுடன் இருக்கிறாரோ அந்த சோமேஸ்வரரை நான் சரணடைகிறேன்.”
இந்த ஸ்தோத்திரத்தினால் மகாதேவர் சந்தோஷமடைந்து ஆபஸ்தம்பர் முன் தோன்றினார்.
ஆபஸ்தம்பர் மகாதேவரிடம், “ யார் ஒருவர் இவ்விடத்தில் ஸ்நானம் செய்கிறார்களோ, அவர்கள் இஷ்டப்படி அனைத்தையும் அடைய வேண்டும்” என்று தனக்காகவும் மற்ற அனைத்து மக்களுக்காகவும் இப்படி வேண்டினார்.
பரமசிவனும்,” அப்படியே ஆகுக” என்று கூறி அனுக்ரஹித்தார்.
அது முதல் அந்த தீர்த்தம் ஆபஸ்தம்ப தீர்த்தம் என்ற பெயரில் பிரஸித்தம் அடைந்தது.
அதில் ஸ்நானம் செய்பவர்கள் வெகு காலம் தன்னைத் தொடர்ந்து வரும் அஞ்ஞான இருளிலிருந்து நீங்கி ஞான ஒளியைப் பெறுவான் என்ற நிலை உருவானது.
மஹரிஷி ஆபஸ்தம்ப சூத்ரத்தை அனுஷ்டிப்போர் இன்றும் ‘ஆபஸ்தம்ப சூத்ர:’ என்று தங்கள் சூத்ரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது.