Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிலந்தியின் ஆயுள் எத்தனை ஆண்டுகள் ?
2006ம் ஆண்டில் லண்டன் டெய்லி மெயில் பத்திரிகையில் சிலந்திப் பூச்சி பற்றிய ஒரு கேள்வி பதில் வெளியானது. இதோ அதன் மொழி பெயர்ப்பு.
பொதுவாக சிலந்திகள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை வாழ்கின் றன
சிலந்திகளில் 80, 000வகை இருக்கி ன்றன
ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியுடன் கூடிய வுடன் இறந்து விடும். பெண் சிலந்திகள் முட்டையிட்டவுடன் இறந்து விடும்.
வீட்டி ல் காணப்படும் சிலந்திப் பூச்சிகள் ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை உயிர் வாழும்.
தோட்டத்தில் வாழும் ,,,,,,, ஒன்றரை ஆண்டுமுதல் இரண்டு ஆண்டுகள் வரை வாழும்.
பபூன் சிலந்திகள் பிடித்து வைக்கப்பட்ட கூண்டுகளில் 20 ஆண்டுகள் வரை வாழ்ந்ததும் உண் டு .
சிலந்தியின் அளவுக்கும் வாழ்நாளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பெரிய போன் வலைச் சிலந்தி ஓராண்டு மட்டுமே வாழ்கிறது சிறிய வயலின் சிலந்தியோ மூன்று ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 60 – சித்ரகுப்தா!
R. Nanjappa
சித்ரகுப்தா!
ஹிந்தித் திரை இசையில் சித்ரகுப்தா (1917-1991) தனி இடம் பெற்றவர். 1946 முதல் (எஸ்.டி.பர்மன் காலம்) 80கள் வரை (பர்மனுக்கும் பின்னும்) துறையில் இருந்தவர். சுமார் 150 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல படங்கள் நல்ல இசையைக் கொண்டிருந்தும் திரையில் வெற்றிபெறவில்லை. பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ஆனாலும் இவரை முதல் வரிசையில் வைத்து எண்ணுவதில்லை. இன்று இவரை பலருக்கும் தெரியாது. இசையமைப்பாளர்கள் ஆனந்த்-மிலிந்த் அப்பா என்றால் தெரியுமோ என்னவோ!
புராணப் படங்கள், ராஜா-ராணி கதை, ஸ்டண்டு படம், சமூகப் படம் என எல்லாவித படங்களுக்கும் இசை அமைத்ததால் இவர் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இவர் இனிமையை என்றும் கைவிட்டதில்லை. இவர் இசையில் உருவான பல அருமையான பாட்டுக்கள் இருக்கின்றன, இரண்டை இங்கு பார்ப்போம்.
This is a great composition, with sublime lyrics, No one can listen to this song without tears welling up in the eyes!
ராஜேந்த்ர க்ருஷ்ணனின் அருமையான கவிதை, ரஃபியின் குரலில் ஒலிக்கும் பாட்டு! மனதை உருக்கும் படியான கவிதை, உருக்கமாகப் பாடியிருக்கிறார் ரஃபி. மிக அருமையான இசை.கண்கள் பனிக்காமல் இப்பாட்டைக் கேட்க இயலாது. இந்த மாதிரி மனதைத் தொடும் பாடல்களை தற்காலத்தவரால் தரவே இயலாது! Their songs come from the computer, not from the heart!
இது கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய ஏவிஎம் படம்- குலதெய்வத்தின் ஹிந்தி வடிவம் என்று நினைக்கிறேன்.
[I am including the audio track because often the original audio tracks have better recording]
இது படம் தொடர்பான பாடல்தான், ஆனாலும் மஜ்ரூஹ் சுல்தான்புரியின் கவிதை சிறப்பானது. இசையும் அருமை. முகேஷின் குரலில் இயல்பாக இருக்கும் உருக்கம் இத்தகைய பாடல்களை உணர்ச்சிக் காவியமாகச் செய்கிறது!
இத்தகைய பல ‘B Grade’ படங்கள் வெற்றிபெறவில்லை, பலருக்கும் தெரிவதில்லை ஆனால் பலவற்றில் அரிய இசை பொதிந்திருக்கிறது. சித்ரகுப்தா இசையமைத்த பல பாடல்கள் இத்தகைய படங்களிலேயே புதைந்து கிடக்கின்றன!
60 ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதை விட்டு நீங்காத பாட்டுகள்!
அற்புத சித்தர்கள் தோன்றி அருள் தரும் அற்புத பூமியாகத் தமிழகம் தொன்று தொட்டு விளங்கி வருவதை நமது அறநூல்களும் இலக்கியங்களும் தெளிவாக விளக்குகின்றன.
தன் நலம் கருதாமல் உலக நலம் ஒன்றையே கருதி வாழும் இவர்கள் பஞ்ச பூதங்களையும் மனித குல மேம்பாட்டிற்காக எப்படியெல்லாம் இயங்க வைக்க முடியுமோ அப்படியெல்லாம் இயங்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.
சமீப காலத்தில் வாழ்ந்து வரலாற்றுக் குறிப்புகள் மூலமாகவும் உரிய ஆவணங்கள் மூலமாகவும் நாம் பல சித்தர்களைக் காண முடிகிறது.
உலகையே வியக்க வைத்து இறைவனுடன் வெளியில் கலந்த பெருமையைக் கொண்டவர் வடலூர் வள்ளலார் பெருமான் அவர்கள்.
சாகாப் பெருநிலையை மனித குலத்திற்கு கற்பிக்க வந்த பெருமானின் வாழ்வில் நடந்த அற்புதங்கள் பல.
அற்புதங்களை நடத்துவது என்பது அப்படி அற்புதங்களைக் காண்பிக்க வேண்டும் என்பது எந்தக் காலத்திலும் எந்த ஒரு சித்தரும் மனதால் நினைத்துச் செய்வதில்லை.
ஆனால் இயல்பாகவே இறையருளால் அவை நிகழும் போது மனித குலம் வியக்கிறது; பிரமிக்கிறது; குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, வரும் சந்ததியினருக்குத் தருகிறது.
சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றி வந்த தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்களுள் ஒருவர்.
அவர் வள்ளலார் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை உள்ளது உள்ளவாறே எழுதி வைத்துள்ளார்.
Seshadri Swamikal of Tiruvannamalai
அங்கங்கள் தனித்தனியே இருந்த காட்சி!
வள்ளலாரின் தொண்டர்களுள் ஒருவர் வேலூரைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை என்பவர். ஒரு நாள் வெளியே சென்ற ஐயா அவர்கள் வரவில்லையே என்று எண்ணிய அவர் வள்ளலாரை வெளியே போய்த் தேட ஆரம்பித்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்க வைத்தது. வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் தனித்தனியாகக் கிடந்தன. அதைக் கண்ட அவர் நடுநடுங்கி, “ஐயோ! இவர் இப்படி ஆகி விட்டாரே” என்று அலறி ஓவென அழலானார்.
ஆனால் திடீரென்று அவர் முன் முழு உருவமாகத் தோன்றிய வள்ளலார் பெருமான், ”நீர், இனிமேல் இது போல வந்து பார்க்காதீர்” என்று அருளுரை புகன்று அகன்றார். வள்ளலார் முன்னே நடக்க அவர் பின்னே தொடர இருவரும் சத்திய தருமச் சாலையை அடைந்தனர்.
இப்படி உடலைப் பிரிப்பது, பின்னர் பூட்டுவது என்பது சித்தர்கள் பலரின் வாழ்விலும் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவமாக அமைந்திருக்கிறது.
பல இடங்களில் காட்சி தரல்
திருவதிகைக்கு வருகை புரிந்த வள்ளலார் பகலில் இறை வழிபாட்டிற்காகச் சென்றார். அவரைக் காணக் கூட்டமோ கூட்டம். ஏராளமான பக்தர்கள் தம்மைக் காண விரும்புவதை உணர்ந்த அவரது அருளுள்ளம் உடனே தனது உருவை ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் தோன்ற வைக்க அன்பர்கள் அந்தக் காட்சியைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தனர்.
சித்தர் கொடுத்த லட்டு!
ஒரு சமயம் வள்ளலார் கூடலூர் சென்றிருந்தார். அங்கு தமது சீடரான அப்பாசாமி செட்டியார் இல்லத்தில் ஒரு அறையில் தனித்திருந்தார். அபோது அங்கு ஒரு பெரியவர் வேகமாக வந்தார். யாருடைய அனுமதியும் பெறாமல் அவர் வள்ளலார் இருந்த அறையினுள் சென்றார். உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை. பக்தர்கள் திகைத்தனர். ஒருவாறாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவர்கள் வள்ளலார் இருந்த அறையின் கதவைத் தட்டி உள்ளே சென்று நடந்ததைக் கூறினர். வள்ளலார் சிரித்தார். நம்மைக் காண வந்த சித்தர் அவர் என்று கூறிய அவர், ‘இந்நேரம் அவர் காசியில் இருப்பார்’ என்று கூறினார். அவர் தனக்குக் கொடுத்த லட்டையும் காண்பித்தார்.
சித்தர்கள் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்கு நினைத்த சமயத்தில் காலமும் இடமும் கடந்து வருவர் என்பதை பக்தர்கள் உணர்ந்து வியந்தனர்.
இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் வள்ளலார் பெருமானின் வாழ்க்கையில் உள்ளன. இவை இறையருளால் ஏற்பட்டனவே தவிர விளம்பரத்திற்காகவோ அல்லது தன் பெருமையை உலகிற்குக் காட்டவோ அவர் செய்ததில்லை. அனைவருக்கும் இறையருளைத் தன் மூலம் வாரி வழங்கிய வள்ளலார் தமிழகம் கண்ட அற்புதமான மகான்;
பிராட்லி கட்டளை
மதுரையை அடுத்த சமயநல்லூரில் நாயக்க மன்னர்களின் ஆரம்ப காலத்தில் அவதரித்து சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து மதுரையில் சமாதி எய்தியவர் குழந்தையானந்த சுவாமிகள். இவரது சமாதி அரசரடியில் உள்ளது. பக்தர்கள் வழிபாட்டுக்கென இங்கு தினமும் குழுமுவது இன்றும் நடைபெறுகிறது. சமாதியில் ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை பிரபல தேசபக்தர் சுப்ரமணியம் சிவா அவர்களின் நெருங்கிய உறவினரும் காசியில் வாழ்ந்து வந்தவருமான கேதாரநாத் சிவம் அவர்கள் கூறிய சம்பவம் இது.
குழந்தையானந்தர் வடநாட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் அவர் காசி சென்றார். அப்போது காசியில் சப்-கலெக்டராக இருந்தவர் பிராம்லி துரை என்பவர். ஒரு நாள் அவர் ஓரிடத்தில் தன் மனைவியுடன் உல்லாசமாக வீற்றிருந்தார். அப்போது சுவாமிகள் அவதூத கோலத்தில் ஆடையின்றி அவ்வழியே சென்றார். இதைக் கண்ட அவருக்குக் கடும் கோபம் வந்தது. உடனே தன் கையிலிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். அது சுவாமிகள் மீது விழாமல் அவர் மனைவி மீது விழுந்தது. மனைவி ஓவென்று அலறினாள். துரைக்கு இன்னும் கோபம் அதிகரித்தது.எதிரில் இருப்பவர் ஒரு மாயாஜால மந்திரவாதி என அவர் நினைத்தார். சேவகர்களை அழைத்து அவரை தன் வீட்டிற்கு இழுத்து வர உத்தரவிட்டார்.
வீட்டிற்குச் சென்ற போது அவர் அடித்த அடி அங்கிருந்த அனைவர் மீதும் பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் ஆத்திரம் இன்னும் அதிகமானது.
“இந்த ஆள் ஒரு மாயாவி. இவனை இருட்டறையில் அடையுங்கள்” என உத்தரவிட்டார்.
அதன்படியே உடனடியாக குழந்தையானந்தர் ஒரு இருட்டறையில் அடைக்கப்பட்டார். அறையின் கதவைத் தானே மூடிய துரை அதை நன்கு பூட்டி விட்டுச் சாவியைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.
பிறகு தனது கோச்சில் ஏறிச் சென்றார்.
என்ன ஆச்சரியம். அவர் வண்டி செல்ல, அதன் முன்னே குழந்தையானந்தர் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த துரை பிரமித்தார். அவருக்குக் கோபம் போய், இப்போது பயம் வந்து விட்டது. அங்குள்ளவர்களிடம், ‘இவர் யார்’ என விசாரித்தார்.
அனைவரும் அவரது மகிமை பற்றி எடுத்துரைத்தனர். அத்தோடு அவர்கள், “நீங்கள் செய்தது பெரும் குற்றம்; அவரிடமே போய் மன்னிப்புக் கேளுங்கள். இது தவிர இந்தக் குற்றத்திற்குப் பிராயசித்தம் கிடையாது’ என்று கூறினர்.
பிராம்லி துரை நேரடியாக குழந்தையானந்தரிடம் சென்று சுவாமிகளைப் பணிந்து தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினார்.
சுவாமிகளின் அருள் உள்ளம் இரங்கியது; அவரை ஆசீர்வதித்தார்.
அன்று முதல் சுவாமிகளின் அணுக்க பக்தனாகி விட்ட பிராம்லி துரை தனது அஞ்ஞானம் நீங்கிய அந்த நாளையே தனது வாழ்வின் புனித நாளாகக் கருதினார். அந்த தினத்தில் ஆராதனை நடத்தக் கட்டளையிட்டார். வருடந்தோறும் அந்த ஆராதனை நடக்க ஆரம்பித்தது. இன்றளவும் காசியில் நடந்து வரும் அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
நகராத ரயில்!
குழந்தையானந்தர் மதுரை ரயில் நிலையத்திற்கு ஒரு முறை சென்றார். சென்னைக்குச் செல்லவிருந்த மெயிலில் ஏறிய குழந்தையானந்தர் ஆங்கிலேய துரை ஒருவருக்கு ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு சீட்டில் அமர்ந்தார்.
தனது இருக்கைக்கு வந்த துரை அதிர்ந்து போனார். சுவாமிகளை உடனடியாகக் கீழே இறங்கச் சொன்னார். ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தவர் கல்யாணராமையர் என்பவர். சுவாமிகளிடம் டிக்கட் இல்லை என்பதால் அவரை இறங்குமாறு அவரும் வேண்டினார். பின்னர் பெரும் கூட்டம் கூடவே, வலுக்கட்டாயமாக சுவாமிகள் கீழே இறக்கி விடப்பட்டார்.
சுவாமிகள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அமர்ந்த வண்ணம் இருக்க கார்டு விசிலை ஊதினார்; டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் நகரவில்லை. எவ்வளவோ முயன்றும் ரயில் நகராததால் அனைவரும் அயர்ந்தனர். பின்னர் அனைவரும் ஸ்டேஷன்மாஸ்டரிடம் சுவாமிகளிடம் சென்று வேண்டுமாறு வற்புறுத்தினர். ஸ்டேஷன்மாஸ்டரும் அவரிடம் சென்று அவர் முதலில் அமர்ந்த சீட்டையே அவருக்குத் தருவதாகக் கூறி துரைக்கு வேறு ஒரு சீட் ஏற்பாடு செய்தார். சுவாமிகள் இருக்கையில் ஏறி அமர்ந்தார். சந்தோஷத்துடன், ‘இனி ரயில் போகும்டா’ என்றார். ரயில் நகர்ந்தது. அன்றிலிருந்து ஸ்டேஷன்மாஸ்டர் அவரது அணுக்க பக்தராக ஆனார்; அவர் பணி ஓய்வு பெற்ற பின் அடுத்தபடி ஸ்டேஷன்மாஸ்டராக வந்த மெரிட் துரையும் சுவாமிகளின் பரமபக்தரானார். சுவாமிகள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் ஓடிச் சென்று அவரைத் தூக்கி வந்து தனது ஆசனத்தில் அமர்த்தி விடுவார் அவர்.
சுவாமிகள் மெரிட் துரையிடம் அலாதி அன்பு செலுத்தி அவரை விசேஷமாக ஆசீர்வதிப்பது வழக்கம். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளால் பலரையும் தனது அன்பு வட்டத்தில் இழுத்து ஆசீர்வதித்து அனுக்ரஹிப்பது குழந்தையானந்தரின் இயல்பு.
சுவாமிகள் 1932ஆம் ஆண்டு சமாதி எய்தினார்.
கிரிவலப் பாதையில் புலி உருவில் வந்த சித்தர்கள்!
பகவான் ரமணர் திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து வந்த காலத்தில் அவரை தரிசிக்க ஏராளமான சித்தர்கள் வருகை புரிவதுண்டு.
இப்படி சித்தர்கள் வருவதை பகிரங்கமாக அவர் ஒரு போதும் சொல்வதில்லை. ஆனால் ஒரு சமயம் சாம வேதத்தை ஓதிக் கொண்டே திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தர்கள் சிலர் ஓடோடி வந்து ரமண மஹரிஷியிடம் தாங்கள் சென்ற வழியில் ஐந்து பெரிய புலிகள் சாலையின் நடுவில் அமர்ந்திருந்ததாகவும் 15 நிமிடங்கள் அவை நகராமல் அங்கேயே இருக்கவே அலறி அடித்துக் கொண்டு ஓடி வருவதாகவும் பயத்துடன் தெரிவித்தனர்.
ரமணரோ மெதுவாக, “எதற்காக சாம வேதத்தை நிறுத்தினீர்கள்? அவர்கள் சித்த புருஷர்கள். உங்கள் வேத கானத்தைக் கேட்பதற்காக அல்லவா அவர்கள் அங்கு வந்துள்ளனர், ஓடி வந்து விட்டீர்களே” என்று கூறினார்.
பக்தர்கள் வியப்பும் பிரமிப்பும் அடைந்தனர்.
நினைத்த இடத்தில் நினைத்த உரு எடுத்து வருவது சித்தர்கள் இயல்பு என்பதையும் பகவான் ரமணர் இருக்கும் இடத்தில் தங்களுக்குப் பெரும் பாதுகாப்பும அருளும் உண்டு என்பதையும் அறிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரமணரின் வாழ்வில் நூற்றுக் கணக்கில் அற்புதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பது போல அவை அமையவே எல்லையற்ற இறையருள் ரமணரின் அருளாசி மூலமாகத் தம்மைக் காக்கிறது என்பதை ரமண பக்தர்கள் உணர்ந்து அந்த அனுபவங்களை மற்ற அனைவருடனும் பங்கிட்டு ஆனந்தித்தனர். அவர்களது பொக்கிஷமான குறிப்புகளை பல்வேறு நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது
பொதுவாக தமிழகம் சித்தர் பூமி என்பதை சங்க காலம் முதற் கொண்டு நவீன மயமான இந்த அறிவியல் யுகம் வரை நடக்கும் பல சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன.
வித்தக சித்தர் கணம் போற்றுவோம்; அருளாசியை அனைவரும் அடைவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
விடை
1.கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
SRI TYAGARAJA-27, Devotion is a Divine Gift
It is a fundamental tenet of the bhakti schools that true devotion is a gift from God. The Gita explains that some people are born with the divine qualities, which generally incline one to an astika style of living. Apart from that, one should strive to get devotion in the heart; even then, it is only by Divine grace or dispensation that one gets true bhakti. Even to worship God, we need God’s grace. “Worshipping His Feet by his grace”- அவனருளாலேஅவன்தாள்வணங்கி says Manikkavachaka.Sri Tyagaraja belongs to this school.
Devotion due to divine grace
Rama nee pai tanaku prema bodu Sita
Damarasa nayana needemo mayagaani
O Sitarama, with the lotus eyes! I do not understand what this is-your maya! My fondness for you will never vanish.
Manasu nee padamulane jera
Ganulu nee roopamune kora
Vinu nee paerulake noroora
Tanapai idi nee karunera
For my mind to be always seeking your holy Feet, for my eyes to be always wishing to behold your divine form, my tongue to be always eager to utter your names which my ears hear- is not all this due to your grace?
Worldly pleasures are also due to grace
Bhoganubhava mulandu
Baaguga buddhi neeyandu
Tyagarajuni hrudayamandu
Vaageesa nandamandu
Even when I enjoy worldly pleasures, my buddhi is fixed on you. Due to that, the heart of this Tyagaraja is experiencing divine bliss. Is this not due to your grace? I do not understand this mystery.
This sentiment he expresses in another kriti too.
Bhogamu landuvela buddhi neeyedanunche
Tyagaraja (nammina vaarini)
Even when I enjoy worldly pleasures, this Tyagaraja’s heart lies with you.
It is remarkable how the great saints say the same things in the same words! For, we have a hymn sung by Tirujnanasambandha on Tiruchotrutturai which expresses the same thing! It begins: ” Cheppa nenje nerikol sitrinbam tuppan ennadu arule tunaiyaga”.
செப்பநெஞ்சேநெறிகொள்சிற்றின்பம்
துப்பன்என்னாதுஅருளேதுணையாக
ஒப்பரொப்பர்பெருமான்
It conveys the idea that the mind should never forget that even when one gets to enjoy the worldly pleasures which are obtained in a dharmic way, they come due to the blessings of the Lord! We know that Jnanasambandha received the Lord’s blessings even when he was a small child. Our Tyagarajaswami also says:
Catch them young!
Ento nanu paalanamu chetunani
Chinnanade na cheyi battidive
Assuring me that you will always protect me, you caught hold of my hand when I was very young!
Just think of this scene: a child is crossing a busy road along with his father. In one case, the child is holding on to the hands of his father. In another, the father is taking the hand of the child in his own and leading him across! Which is safer? Here, Tyagaraja says Rama took hold of him even when he was very young-chinna naade! Can he ever go astray? Is this not due to divine grace?
Nee japamu nee smarane neepada puja
Neevaari chelimi yochaki rajika dayavucheyu
(Narasimha)
Please grant me with willing kindness your nama japa, your remembrance, puja to your blessed Feet, and association with your devotees!
If they do not get such blessing, can they experience the taste of Ramanama?
Rama niyada premarahitulaku namaruchi telusuna?
Neevadanune nani lokulu
balkaga dhanyudanaitini…
tolijanmamulanu jesina puja phalamo
leku neetu kataksha balamo
Daivadeenamuga neetu roopamu
naadu maanasabjamuna naadi yundaga
ne nentati bhagyasaalino
Dittatanamu nanu bhakti stiramau
nattuga Sri Rama yennatiki
gattigaanu Tyagarajuni cheyi
batti rakshimchelukovayya (Sita manohara)
People say I belong to your side! I am so fortunate to hear this! I do not know whether this is due to the merit of the puja I did in previous births, or due to the power of your blessings!
By the grace of God , your form is fixed in the lotus of my heart. How much merit I should have accumulated to get this fortune!
Rama! I should have fixed bhakti for you at all times.
So, catch hold of the hands of this Tyagaraja firmly, and always protect him.
Rama neeve gaani nannu
rakshinchevarevare
Rama! Other than you, who else will protect me?
Changing the analogy, we may say Tyagaraja pleading for Rama taking hold of his hand is akin to marchala nyayam – the way of the cat, where the mother cat carries the young in its mouth- as against markata nyayam- the way of the monkey, where the young one has to hold on to the mother! We can easily see which is safer!
Ramuni daya galgina yatani vina
Kanugonu saukhyamu
kamalajukaina kalguna (kanugonu)
Unless one is subject to the grace of Rama, can this kind of bliss that Tyagaraja enjoys be obtained even by Brahma?
Vayasu nooraina eevasudha naeligani
Rama daya leni bratukemi (dayaleni)
Even if one lives for a hundred years, or reigns over this world, what is that life worth without your grace?
Puja japamula vela ponduka neduta
rajilli lokantarangamarmamu delipi
rajiseyani…..dayaleni
At the time of performing puja, and doing japa, if you do not appear before us with love, and pacify us explaining the innate mysteries of the world, what is the use of that kind of birth?
Life’s mysteries resolved due to grace What are these mysteries? Tyagaraja explains them next.
Saguna nirgunapu nijadab baralanu
Shanmatamula marmam
Ashta siddhula vagalu
joopa sandasilli gantini (Nee bhajana gana)
The truth or falsehood behind the saguna and nirguna upasana, the secret of the six matas, the bogus but pompous nature of ashtasiddhis – you explained and I happily understood!
Here Tyagaraja is touching on very important subjects vexing the Hindu sects. The arguments between the advocates of saguna and nirguna forms are endless. This is dealt with in the Gita. This question was also raised before Sri Ramakrishna repeatedly by the English educated youngsters of Calcutta, fifty years after Tyagaraja!
So are the arguments among the followers of the “six systems” endless. These may mean the shanmatas, as are supposed to have been fixed by Sankara ( Saivam, Vaishnavam etc) or the six systems of Indian philosophy like Sankhya, Yoga, Nyaya, Vaisesika, Mimamsa and Vedanta etc. In either case, the debates are intense and often, ugly. Then there is the general fascination with acquiring so called siddhis- extraordinary or supernatural (thaumaturgic) powers . Tyagaraja means to convey that the truth behind these can be understood only by genuine God experience due to the grace of God, and that true devotion is the way to get such grace!
Tyagaraja says Rama taught him more!
Nityaanityamulanu bodhinchi
krutyaa kriyamulanu delipinchi
prayyekudu neevani kanipinchi
bhrutyudaina Tyagaraju cheyi
Pattividuvaradu nacheyi
Patti viduvaradu (Pattividuaradu)
You taught me what is real and unreal.
You made me understand what karmas should be done and what should not be done.
You revealed to me that you are unique among the Forms of God.
So you caught hold of me. Now you should not leave me.
Here too Tyagaraja is dealing with fundamental aspects of our religion/philosophy. Nitya-anitya vastu vivekam is a basic tenet of our philosophy- the serious aspirant should always discriminate between what is real and what is unreal.
Karmas are of many kinds and we should know what to do and what to avoid- karma, akarma, vikarma, as the Gita terms it. There are so many forms for upasana in the Hindu fold, but the two Avatars- Rama and Krishna are preeminent amongthem. The very name Rama is unique and special, as we have already seen. These three subjects are discussed in detail in the Gita! Tyagaraja means that such things can be understood only by personal divine experience- not any amount of reading, theoretical discussion or other means- what is called aparoksha anubhuti!
Swanubhavam
Leelasrushta jagatrayamane kolahala…
Eelaagani vivarimpalenu
Chala swanubhava vedhyame
(Ramabhakti samrajyam)
The three worlds have been created by Rama just as a leela, and they are full of noisy attractions. Only devotion to Rama will confer bliss. Its nature cannot be described by me. It can only be understood by each one through personal experience!
The corpus of Tyagaraja kritis constitute a deep and vast ocean. But it is not one containing ” “dark unfathomed caves”. There are innumerable gems and each time we dip into it, we can bring at least a handful! For this we should study them as literature, which indeed they are! The concert musicians often mutilate the kritis in the name of singing- [ there is a Tamil saying here: பாடினவன்பாட்டைக்கெடுத்தான் ] they do not normally render the full kriti, nor do they enunciate the words in intelligible ways. We should read them as literature. Tyagaraja Kritis are sublime literature.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘நல்லா சாப்பிடுங்க, ஜமாய்ங்க’ — 2700 ஆண்டுகளுக்கு முன் கேட்ட பேச்சு !
உலக மஹா இலக்கண வித்தகன் , உலகத்தின் முதல் மொழியியல் அறிஞன் , கவிஞன் பாணினி ஒரு மக்கள் கவிஞன் . அவன் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சாமான்ய மனிதன் பேசிய பேச்சுக்களை அப்படியே உதாரணமாகத் தந்துள்ளான் . ஒரு வேளை கல்யாண மஹால் அல்லது பெரிய விருந்து நடந்த ‘டைனிங் ஹால்’ (Dining Hall) போயிருப்பார் போல; அதுமட்டுமல்ல சமையல் நடைபெறும் அடுப்பங்கரைக்கும் போயிருப்பார் என்றே தோன்றுகிறது. அவர் கேட்ட நான்கு வசனங்கள் இதோ :–
காதத – மோததா = சாப்பிடுங்க, சந்தோஷமா இருங்க;
அஸ்நீத – பிபதா = நல்லா சாப்பிடுங்க , குடிங்க;
பசத – ப்ரிஜ்தா = (சிக்கிரம்) சமைங்க, வறுங்க ;
பிந்த்தி – லவணா = (இதில்) உப்பு போடுங்க .
சமையல் நடைபெறும் இடத்தில் தலைமை ‘குக்’ (Chef) மற்ற பரிசாரகர்களை விரட்டி வேலை வாங்கியதையும் அவர் கேட்டிருப்பார் போலும். இவைகளையும் இன்னும் 20 உதாரணங்களையும் பட்டியலிட்டுவிட்டு சம்ஸ்க்ருதம் அக்காலத்தில் பேச்சு மொழியாக இருந்தது என்கிறார் டாக்டர் வி.எஸ். அக்ரவாலா . அவர் 1950களில் லட்சுமணபுரி பல்கலைக் கழகத்தில் பாணினி இலக்க ணத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்..
பாணினி இலக்கணத்தைக் கற்ற வெளிநாட்டினரான கோல்ட் ஸ்டக்கர், கீத் , லைஃபிச் ஆகியோரும் நகர மக்களின் பேச்சு மொழியாக சம்ஸ்க்ருதம் இருந்தது என்பதை உறுதிப் படுத்துகின்றனர்.
பாணினி இலக்கண நூலான அஷ்டாத்யாயீதான் உலகின் முதல் இலக்கண நூல், முதல் மொழியியல் நூல் என்பதை உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பாணினி தனது புஸ்தகத்தில் சம்ஸ்கிருதம் என்ற மொழி யின் பெயரையே எங்கும் சொல்லவில்லை. அவர் ‘பாஷா’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார். மொழி என்பது இதன் பொருள்; இந்தியா முழுதும் அறிஞர்களுக்குத் தெரிந்த மொழி என்பதாலும், உலகில் ஒரு இனத்தின் பெயரால் அமையாத ஒரே மொழி என்பதாலும் பாஷா என்றே சொல்லுவார். தமிழ், கிரேக்கம், சீனம் , லத்தின் , ஹீப்ரூ போன்ற ஏனைய பழங்கால மொழிகள் அனைத்தும் அந்தந்த இனங்களின் பெயரால் அமைந்தவை.
பாணினி, அவருக்கு மிகவும் முன்காலத்தில் இருந்த வேதகால கவிதை இலக்கணத்தையும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறார். அந்த இடங்களில் எல்லாம் ‘சந்தஸ்’ அதாவது ‘கவிதையில்’ என்று எழுதினார்.
அக்காலத்தில் உலகியல் வழக்கு என்பது சம்ஸ்கிருத மொழியாகவும், நாடக வழக்கு என்பது வேத கால கவிதை வழக்காகவும் அவர் கொண்டார் போலும்.
***
உமா துணி , அணு சாப்பாடு
இவர் சொல்லும் சில சொற்கள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் கூட இல்லை. பாணினி ‘உமா’ என்னும் தாவரத்தையும் ‘அணு’ என்ற தானியத்தையும் குறிப்பிடுகிறார். சுமார் ஆறு வகை அரிசியையும் இலக்கண மொழி உதாரணங்களாகக் காட்டுகிறார். இதில் ‘அணு’ என்பது தினை வகை தானியம். ஏழைகளின் உணவு. ‘உமா’ என்பது துணி நெய்வதற்குப் பயன்பட்ட தாவரம். அதிலிருந்து வரும் ‘அவுர்ண’ என்ற துணியையும் குறிப்பிடுகிறார். இவரை எல்லாம் அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் என்பதைக் காட்டுகின்றன. இவர் பயன்படுத்தும் பணம், நாணயம் தொடர்பான சொற்களும் அர்த்தசாஸ்திர (கௌடில்யர்) காலத்துக்கு முந்தையவை. இவர் நந்தர் போன்ற மன்னர்களின் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை.
அதுமட்டுமல்ல . இவரால் குறிப்பிடப்படும் எந்த இலக்கண ஆசிரியரின் நூலும் நமக்குக் கிடைக்கவில்லை..ஆக இவர் காலம் 2700 ஆண்டுகள் அல்லது அதற்கும் முந்தையவர் என்பதை சம்ஸ்கிருத நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
Tags– நல்லா சாப்பிடுங்க, உமா, , அணு, பாணினி, 2700 ஆண்டு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 59 – இரு மணிகள் – முகுல் ராய்!
R. Nanjappa
முகுல் ராய் [1926-2009] கீதா தத்தின் சகோதரர். இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். முதல் படம் “சைலாப்” 1956 கீதா தத்தே எடுத்தது, குருதத் இயக்கினார். முகுல் ராய் நல்ல இசையமைத்திருந்தார் – ஆனால் படம் ஓடவில்லை. இதில் கீதா தத் தன் செல்வம் அனைத்தையும் இழந்து, இன்சால்வென்ட் ஆனார். 1958ல் முகுல் ராயே ‘டிடெக்டிவ்” என்று படமெடுத்தார், சக்தி சமந்தா இயக்கி படம் பெரும் வெற்றிகண்டது. இதில் இவருடைய இசையும் நன்கு அமைந்தது. இதில் கீதா தத் பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றன. இருந்தும் என்ன, அவரை பிற படங்களில் பாட குருதத் அனுமதிக்கவில்லை! இந்தப் படத்திலிருந்து இரு பாடல்களைப் பார்க்கலாம்.
இதயத்தைத் தொடும் சோகம் இந்தப் பாட்டில் அடக்கியிருக்கிறார் ஷைலேந்த்ரா. எளிய சொற்களில் உணர்ச்சிக் கடலை அடக்கிவிட்டார்.
கீதா தத்தின் குரலில் இயற்கையாகவே சோகம் இழையோடுகிறது. சொந்த வாழ்க்கையிலும் அவர் மிகுந்த சோகம் அனுபவித்தார்.
இந்தப் பாட்டின் மெட்டு Harry Belafonte பாடிய Jamaica Farewell என்ற பாட்டின் மீது அமைந்தது. ஆனால் பெரிய மாற்றங்களும் செய்திருக்கிறார். ‘மூட்” முற்றிலும் மாறிவிட்டது! மூலத்தைக் கேட்க:
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தியா மறந்து விட்ட ஆனால் ஜப்பான் போற்றும் ஒரு மகத்தான இந்தியர்!
ச.நாகராஜன்
‘டோக்கியோ ட்ரையல்ஸ்’(Tokyo Trials) – நடிகர் இர்ஃபான் இந்திய நீதிபதியாக நடிக்கும் படம் இது!
யாருக்காவது வரலாற்றின் இந்தப் பகுதி தெரியுமா? விடை ‘இல்லை’ என்று தான் பெரும்பாலோரிடமிருந்து வரும். இதோ படியுங்கள் ..
நாள் 1948, நவம்பர் மாதம் 12ஆம் நாள்.
‘டோக்கியா விசாரணை’ டோக்கியோவின் வெளிப்புறத்தில் ஒரு பெரிய தோட்ட வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்ற பின்னர் 55 ஜப்பானிய போர் குற்றவாளிகள் – அவர்களில் ஜப்பானிய அப்போதைய பிரதம மந்திரி டோஜோ உட்பட அதில் இருந்தார் – பற்றிய விசாரணை அது!
அதில் 28 பேர்கள் க்ளாஸ் –A (சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள்) போர்க் குற்றவாளிகள் ஆவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான ஒரே தண்டனை – மரண தண்டனை தான். சர்வதேச நீதிபதிகள் பதினோரு பேர்கள் “குற்றவாளி”.. குற்றவாளி.. குற்றவாளி என்று அறிவித்தனர்.
திடீரென்று ஒரு குரல் முழங்கியது : “குற்றவாளி இல்லை!”
ஹாலில் அமைதி நிலவியது. யார் இப்படி மறுத்துக் கூறியவர்?
அவர் பெயர் ராதாவிநோத் பால், இந்தியாவிலிருந்து வந்திருந்த நீதிபதி!
1886ஆம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் குமில்லா என்ற இடத்தில் அவர் பிறந்தார். அவரது தாய் ஒரு வீட்டில் வேலை பார்த்ததோடு அவர்களின் பசுவையும் பராமரித்து வந்தார். பசுவிற்கு தீனி போடுவதற்காக, ராதா அந்தப் பசுவை அருகிலிருந்த உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் இருந்த மேய்ச்சல் நிலத்திற்கு இட்டுச் செல்வது வழக்கம்.
பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் போது ராதா வெளியிலிருந்து அதைக் கேட்பது வழக்கம். ஒரு நாள் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் நகரிலிருந்து பள்ளிக்கு விஜயம் செய்தார். வகுப்பினுள் நுழைந்த அவர் மாணவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டார். அனைவரும் அமைதியாக இருந்தனர்…
வெளியில் வகுப்பின் ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்த ராதா கூறினார்; “எனக்கு நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியும்” பிறகு ஒவ்வொரு கேள்விக்கும் அவர் விடையைக் கூறினார்.
இன்ஸ்பெக்டர், “பிரமாதம். எந்த வகுப்பில் நீ படிக்கிறாய்?” என்று கேட்டார்.
விடை வந்தது : “நான் படிக்கவில்லை. பசுவை மேய்க்கிறேன்.”
இந்த பதிலைக் கேட்ட் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். தலைமை ஆசிரியரை அழைத்த இன்ஸ்பெக்டர் அந்தப் பையன் பள்ளியில் சேர அட்மிஷனுக்கு உதவ வேண்டுமென்றும் உதவித் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இப்படியாகத்தான் ராதா விநோத் பாலின் பள்ளிப் படிப்பு ஆரம்பித்தது.
பின்னர் பள்ளி இறுதிப் படிப்பை மிக அதிக மதிப்பெண்களைப் பெற்று முடித்த அவர் பிரஸிடென்ஸி கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
கல்கத்தா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ் சியை முடித்த அவர் பிறகு சட்டப்படிப்பை முடித்து டாக்டரேட் பட்டத்தையும் பெற்றார். இப்படி நேர் எதிர்துருவம் போல இருக்கும் இரு துறைகளைப் பற்றி அவர் ஒரு முறை இப்படிக் கூறினார் : “ சட்டமும் கணிதமும் அவ்வளவு ஒன்றும் வித்தியாசமானதில்லை”.
டோக்கியோ சர்வதேச நீதி மன்றத்திற்கு வருவோம் :-
அனைவரையும் ஈர்த்து ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு வாதத்தை மற்ற ஜூரிகளின் முன் அவர் வைத்தார். அதில் அவர் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேசநாட்டினர் கூட சர்வதேச சட்ட விதிகளையும் நடுநிலையையும் மீறியதையும் சுட்டிக் காட்டினார். அத்தோடு மட்டுமின்றி ஜப்பானின் சரணாகதி குறிப்புகளையும் அவர்கள் ஒதுக்கி விட்டதையும், இரண்டு லட்சம் அப்பாவி மக்களை அணுகுண்டு போட்டுக் கொன்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
1232 பக்கங்கள் அடங்கிய ராதா விநோத் பாலின் தர்க்கரீதியான குறிப்பைப் படித்த மற்ற நீதிபதிகள் குற்றவாளிகளை ‘க்ளாஸ் A’ குற்றச்சாட்டிலிருந்து பலவற்றை ‘க்ளாஸ் B’க்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
இந்த க்ளாஸ் B போர் குற்றவாளிகள் அவர்கள் நிச்சயமாக அடையவிருந்த மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சர்வதேச நீதிமன்றத்தில் அளித்த அவரது தீர்ப்பு அவருக்கும் இந்தியாவிற்கும் ஒரு பெரிய கௌரவத்தை அளித்தது.
ஜப்பான் இவரைப் பெரிதும் போற்றுகிறது. 1966ஆம் ஆண்டு சக்ரவர்த்தி ஹிரோஹிடோ அவருக்கு ஜப்பானிய குடிமகனுக்கு அளிக்கக் கூடிய உயரிய விருதான, ‘கொக்கோ குன்சாவோ’ விருதை வழங்கினார்.
டோக்கியோவிலும் க்யோடோவிலும் உள்ள இரண்டு முக்கிய சாலைகளுக்கு அவர் பெயர் இடப்பட்டது. அவரது தண்டனை பற்றிய விவரங்கள் சட்டப் படிப்பில் பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டது. டோக்கியோவின் சுப்ரீம்கோர்ட்டின் முன்புறத்தில் அவரது சிலை நிறுவப்பட்டது.
2007ஆம் ஆண்டு ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஸோ டெல்லியில் உள்ள அவரது குடும்பத்தினரைப் பார்க்க தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அங்கு வந்து அவரது மகனைப் பார்த்தார்.
டாக்டர் ராதா விநோத் பால் (27, ஜனவரி 1886 – 10, ஜனவரி 1967) ஜப்பானிய வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார். ஜப்பானில், டோக்கியோவில் ஒரு கண்காட்சி சாலை அவருக்கென உள்ளது. அவரது சிலை யாசுகுனி தலத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
ஜப்பான் பல்கலைக் கழகத்தில் அவர் பெயரால் ஒரு ஆராய்ச்சி மையமும் உள்ளது.
அவரது போர் குற்றவாளிகள் பற்றிய தீர்ப்பால் சீனர்கள் அவரை மிகவும் வெறுக்கின்றனர். அவர் பல சட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில், பெரும்பாலும் ஒருவருக்கும் அவரைப் பற்றித் தெரியாது, ஏன் அவரது அண்டையில் வாழ்வோருக்கும் கூட அவரைப் பற்றித் தெரியாது!
‘டோக்கியோ ட்ரையல்ஸ்’என்ற பெயரில் அவரைப் பற்றி ஒரு ஹிந்திப் படம் எடுக்கப்பட்டது. இர்ஃபான் கான் அதில் நடித்தார். ஆனால் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளே வரவில்லை. மிக பிரமாண்டமான மனிதர்- ஆனால் யாருக்கும் தெரியாத மிகவும் குறைவாக மதிக்கப்பட்ட மனிதர்களுள் அவரும் ஒருவர்!
சுயநலமே உருவான அரசியல்வாதிகளால் நாம் மிக மோசமாக ஏமாற்றப்படுகிறோம். அவர்கள் புத்திசாலித்தனமாக நமது தேசத்தின் பெருமையை மறைப்பதோடு இந்த நாட்டை பெருமைக்குரியதாக ஆகிய பெருமைவாய்ந்தவர்களையும் மறைத்து விட்டனர்.
எல்லையே இல்லாத, காலத்தையும் மீறிய தங்களது சுயபுராணம் ஒன்றில் தான் அவர்களுக்குக் குறி!
சீச்சீ! என்ன ஒரு வெட்கக்கேடு இது!
நன்றி : Kolata Weekly : TRUTH, 08-05-2020
*
இந்தக் கட்டுரையின் மூலத்தை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக அது கீழே தரப்படுகிறது.
Snippets from Social Media
STATUE IN KOLKATA HIGH COURT
Remembered in Japan, forgotten in India……..
Tokyo trials on Netflix, Actor Irfan plays the Indian judge!
Do anyone in India know this piece of history? Answer must be a firm “No” from most of us! Now please read on.
The day was 12 November, 1948. Tokyo Trials are going on in a huge garden house on the outskirts of Tokyo. The trial of fifty-five Japanese war criminals including Japan’s then Prime Minister Tojo, after losing WWII.
Of these, twenty-eight people have been identified as Class-A (crimes against peace) war criminals. If proved, the only punishment is the “death penalty”.
Eleven international judges from all over the world are announcing… “Guilty”…. Guilty”…. “Guilty”……
Suddenly one thundered, “Not Guilty!”
A silence came down in the hallway. Who was this lone dissenter?
His name was Radhabinode Pal, a Judge from India.
Born in 1886 in the Kumilla of East Bengal, his mother made a living by taking care of a household and their cow. For feeding the cow, Radha used to take the cow to the land near a local primary school.
When the teacher taught in school, Radha used to listen from outside. One day the School Inspector came to visit the school from the city. He asked some questions to the students after entering the class. Everyone was silent.
Radha said from outside the classroom window…. “I know the answer to all your questions.” And he answered all the questions one by one. The Inspector said, “Wonderful!.. Which class do you read?”
The answer came, “… I do not read…I graze a cow.”
Everyone was shocked to hear that. Calling the Head teacher, the School Inspector instructed that the boy should be helped to take admission in the school and provided some stipend.
This is how education of Radha Binode Pal was started.
Then after passing the School Final and securing the highest marks in the district, he was admitted to Presidency College.
After completing M Sc. from the University of Calcutta, he studied law again and secured the Doctorate title. In the context of choosing the opposite of two things he once said, “Law and mathematics are not so different after all.”
Coming back again to the International Court of Tokyo–
In his convincing argument to the rest of the jurists he signified that the Allies, (winners of WWII), also violated the principles of restraint and neutrality of international law. In addition to ignoring Japan’s surrender hints, they killed two hundred thousand innocent people using nuclear bombardment.
The judges were forced to drop many of the accused from Class-A to B, after seeing the logic written on twelve hundred thirty-two pages by Radhabinod Pal.
These Class-B war criminals were saved by him from a sure death penalty. His verdict in the International Court gave him and India a great reputation.
Japan respects this great man. In 1966 Emperor Hirohito awarded him the highest civilian honor of the country, ‘Kokko Kunsao’. Two busy roads in Tokyo and Kyoto have been named after him. Contents of his sentence has – been included in the syllabus of their Law. In front of the Supreme Court of Tokyo, his statue has been placed.
In 2007, Prime Minister Shinzo Abe expressed his desire to meet his family members in Delhi and met his son.
Dr. Radhabinod Pal’s (27 January 1886 – 10 January 1967) name is remembered in the history of Japan. In Tokyo, Japan, he has a museum and a statue in Yasukuni shrine.
Japan University has a research center in his name.
Because of his judgment on Japanese warcriminals, Chinese intensely hate him.
He is the author of many books related to law. In India, almost nobody knew him and perhaps not even his closest neighbors knew him!
A hindi movie was made on him, TokyoTrials, starring Irfan Khan but that movie never
made any headlines……just one of the many many under-rated and unknown Indians,who were Great.
We have been terribly cheated by self-serving politicians. They have cleverly hidden the greatness of our nation and that of many great persons who made this country great! . They were interested only in self glory beyond all limits all the time!
What a shame!∎
Source : Thanks to weekly : TRUTH, 08-05-2020
TAGS – ஜப்பான் , இந்தியர், ராதாவிநோத் பால், Radhabinode Pal
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
விடை
1.மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன
2.மான் கண்ணிலும் அழகு விரைவிலும் விரைவு
3.மான் கூ ட்டத்தில் புலி புகுந்தது போல
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு