Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நேர்மையாக `அர்த்தம் விளங்கவில்லை` (MEANING IS OBSCURE, UNCERTAIN) என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மாலைமலர் நாளிதழில்
23-11-2019 அன்று வெளியாகியுள்ள கட்டுரை!
அச்சம் அகற்றும் பவளம்!
ச.நாகராஜன்
தெய்வீக மணி பவளம்
தெய்வீக மணி பவளம் நவ ரத்தினங்களுள்
ஒன்று. முக்கியமானதும் கூட!
சிவபிரானும் தமிழ்த் தெய்வமான
முருகனும் பவள நிற மேனியர் ஆவர்.
‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்’ என்று சிவபிரானின் தோற்றத்தை
வர்ணித்த அப்பர் பிரான் இப்படிப்பட்ட உருவத்தைத் தரிசிக்க ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே’ என்று நெகிழ்ந்து
உருகுகிறார்.
குறுந்தொகை என்ற சங்க நூலில்
அதன் கடவுள் வாழ்த்தைப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனார் ‘பவளத்தன்ன மேனித் திகழொளி’ என்று முருகனின் பவள மேனியைப்
போற்றிப் பாடுகிறார்.
முத்துகுமாரசுவாமி பிள்ளைத்
தமிழை அருளிய குமரகுருபரர் முருகன் ஆடி வரும் அழகை வர்ணிக்கையில்,
“கம்பி விதம்பொதி குண்டலமுங்குழை
காதும் அசைந்தாட
கட்டிய சூழியு முச்சியுமு முச்சிக் கதிர் முத்தொடும்
ஆட
அம்பவழத் திருமேனியும் ஆடிட
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை”
என்று போற்றித் துதிக்கிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரோ “பச்சை மாமலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்” என்று திருமாலின் உருவைக் கண்டு பரவசம் அடைகிறார்.
பவளத்தின் இதர பெயர்கள்
பிங்கல முனிவர் பவளத்தின் வேறு
பெயர்களாக துப்பு, பிரவாளம், துவர், துகிர், வித்துருமம், அர்த்தம் எனப் பல பெயர்களைத்
தருகிறார்.
ஜோதிடத்தில் பவளம்
இப்படிப்பட்ட பவளம் ஜோதிடத்தில்
செவ்வாய் தோஷம் தரும் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கும் ஒரு அரும் சக்தியாக விளங்குகிறது.
மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள்
செவ்வாயின் நற்பலன்களைக் கூட்டவும், சில சமயங்களில் ஜாதகத்தில் செவ்வாய் நற்பலன் தராத
இடங்களில் இருந்தால் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கவும் பவளம் அணிய வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
ஒன்பது எண் செவ்வாயுடன் தொடர்பு
கொண்டது என்பதால் ஒன்பது எண் பிறந்த தேதியாகவோ அல்லது கூட்டு எண்ணாகவோ அமைபவர்களுக்கு
உரியதும் பவளம் தான். ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்து சரீர சம்பந்தமான வியாதிகளை
இவர்களுக்கு பவளம் போக்கி விடும்.
மருத்துவத்தில் பவளம்
வம்புச் சண்டைகளையும், வந்த
சண்டைகளையும் தீர்ப்பது பவளமே.
உஷ்ண சம்பந்தமான அனைத்து வியாதிகளையும்
போக்குவதும் பவளமே.
பவளத்தைக் கலந்து தயாரிக்கப்படும் பல மருந்துகளை நமது பண்டைய சித்த மருத்துவ நூல்கள் விளக்குகின்றன.
பவழம் தாவரமா அல்லது விலங்கினமா!
கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாடிலும்
அவரது சீடரான தியோப்ரெஸ்டஸும் தங்களது ‘கற்கள்’ என்ற புத்தகத்தில் பவளத்தைக்
குறிப்பிடுகின்றனர். பவளம் ஒரு தாவரமா அல்லது கடல் வாழ் உயிரினத்தால் உருவானதா என்பதைப்
பற்றிய சுவையான சர்ச்சை அந்தக் காலத்திலேயே எழுந்துள்ளது. பெர்ஸிய அறிஞரான அல்பெருனீ பவழத்தை விலங்கினத்தோடு சேர்த்து அதைத் தொடும் போது
அது உணர்கிறது என்று அதற்கான காரணத்தையும் கூறினார். வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி
ஒரு மைக்ராஸ்கோப்பின் உதவி கொண்டு விலங்குகளுக்கே உரித்தான மெல்லிய
சவ்வுத் திசு பவழத்தில் காணப்படுவதால் அது விலங்கினத்தைச் சேர்ந்ததே என்று இந்த
சர்ச்சைக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தார்.
பவளத்தின் வகைகள்
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
பவளத்தைப் பற்றிப் பல உண்டு.
பவளத்தில் சிறந்த வகை சிவப்புடன் வெண்மை கலந்த வண்ணத்துடன் இருக்கும். குழிமுயலின்
இரத்த வண்ணத்தில் இது இருக்கும். பவளம் மிருதுவானது.அழகானது. மேலே எண்ணெயப்
பூச்சைக் கொண்டது போல இருக்கும். மிக சுலபமாகத் துளை போடக் கூடியபடி இருக்கும்.
பவளத்தின் அடுத்த வகை சிவப்பாக – குங்குமச் சிவப்பாக
– இருக்கும். பந்தூக மலர் அல்லது மாதுளம் பூ நிறத்திலிருக்கும். இந்த வகைப் பவளம்
சற்றுக் கடினமானதாக இருக்கும். பள பளப்பான எண்ணெய்ப் பூச்சைக் கொண்டிருக்காது.
இதில் துளையிடுவது சற்றுக் கடினமாக இருக்கும்.
மூன்றாவது ரகம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்டதாக
இருக்கும். பலாச புஷ்பம் போல நிறத்தில் இருக்கும். அழகிய இந்த வண்ணம் இருந்தாலும்
பளபளப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
நான்காவது வகை பவளம் கறுப்பு கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும். ரோஜா மலர் இதழ்கள் போல இருக்கும். அது கடினமாக இருக்கும்.
அதன் ஒளி பல நாட்கள் நீடிக்காது. அதில் துளை போடுவது மிகவும் கடினமாக இருக்கும்.
நல்ல பவளத்தை எப்படி அறிவது?
ஒரு நல்ல பவளமானது
1) சிவப்பு வண்ணம் 2) பளபளப்பான எண்ணெய் பூசப்பட்டது போன்ற தொற்றம் 3) சுலபமாகத் துளையிடக்
கூடியது 4) உருண்டை வடிவம் 5) நீடித்த காலம் இருக்கும் ஒளி 6) கனமானது 7) மேல் பரப்பு
மிருதுவானது ஆகிய இந்தக் குணங்களைக் கொண்டிருக்கும். இதுவே நல்ல பவளம்.
வெளுத்துப் போன
வெண்மை, சாம்பல் வண்ணம், சிறியது, கரடு முரடான மேற்பரப்பை உடையது, ஏராளமான பள்ளங்கள்
அல்லது குழிகளைக் கொண்டது, மிகவும் இலேசானது, தாமிர நிறமுடையது – இவை யாவும் விலக்கத்
தக்க பவளங்கள் ஆகும்.
நவரத்தினங்கள்
அனைத்தையும் எடுத்துக் கொண்டால் ஒரு இரும்பினால் கீறல் போடப்படும் தன்மை உடையவை முத்தும்
பவளமும் மட்டுமே.
பவளத்தின் பயன்கள்
பவளம் உடலை உருக்குகின்ற க்ஷய ரோகத்தைத் தீர்க்கும்.
இரத்தப் போக்கைப் போக்கும்.
இருமலைத் தீர்க்கும்.
கண் வியாதிகளைப் போக்கும்.
விஷத்தை முறிக்கும்.
தீய திருஷ்டியாலும் பிசாசு போன்ற தீய சக்திகளினால் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.
இது இலேசானது. ஜீரணத்தை அதிகரிக்கும்.
இவையே
ரஸ ஜல நிதி தரும் அற்புதத் தகவல்கள்.
பல்வேறு
வடிவங்களிலும் நிறங்களிலும், அளவுகளிலும், வடிவமைப்புகளிலும் பவளம் கிடைக்கப் பெறுகிறது.
கடலின்
சில பகுதிகளில் மட்டுமே பவளப் பாறைகள் இருக்கின்றன. (பாலிப் என்ற) ஒரு அரிய வகைக் கடல்
வாழ் உயிரினத்தின் கழிவே பவளம். ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு செண்டிமீட்டர் என்ற
குறைவான அளவில் பவளம் வளர்கிறது.
150
அடி என்ற குறைந்த பட்ச ஆழம் இருந்தால் தான் பவளம் வளரும்; 900 அடி ஆழத்திலும் அது காணப்படுகிறது!
அதே
போல உஷ்ணநிலையும் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. 70 முதல் 85 டிகிரி பாரன்ஹீட்
உஷ்ணம் அதற்குத் தேவை. தெளிவான கடல் நீரில் மட்டுமே பவளம் வளரும். பசிபிக் மற்றும்
இந்து மா கடலில் பவளங்கள் காணப்படுகின்றன.
ஆழமில்லாத
கடல் நீர்ப்பரப்பு மிகவும் சுலபத்தில் சூரியனின் வெப்பம் பட்டு வெப்பமாவதால் பவளம்
வளர வாய்ப்பில்லை. அதிக ஆழத்தில் தான் அது வளர முடிகிறது.
ஒரு
முக்கியமான விந்தையான விஷயம் நிலப் பரப்பின் கிழக்குப் பக்கம் உள்ள கடல்நீரில் தான்
பவளம் தோன்றுகிறது. உஷ்ணம் இந்தப் பக்கம் குறைவாக
இருப்பதால் இப்படி ஏற்படுகிறது என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கரை
மணல் திட்டில் பவளம் கிடைத்து விட்டது என்று கொண்டாட நினைப்போர் அது பாலிப் என்ற ஒருவகை
கடல்வாழ் உயிரினத்தின் ஓடு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடல்
அலைகள் வலிமையுடன் வேகமாக இருக்கும் இடங்களிலும் அலைகள் ஆவேசம் அடையும் இடங்களிலும்
பொதுவாக பவளத்தின் வளர்ச்சி நன்கு காணப்படுகிறது.
ஏனெனில் அங்கு கடல்வாழ் உயிரினங்களுத் தேவையான உணவுப் பொருள்கள் கிடைப்பதால்
தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரும் பவழப்பாறை எனக் கூறப்படுவது ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதை விண்ணிலிருந்தும் பார்க்க முடியும். 1,33,000 சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள இது 2900 தனிப்பட்ட பவழப்பாறைகளையும் 1400 மைல் நீளத்தில் பரந்துள்ள 1050 தீவுகளையும் கொண்டிருக்கிறது!
பவளப்
பாறைகளை நம்மால் நேரில் பார்த்து மகிழ முடியும்.
அந்தமான்
– நிகோபர் பகுதியில் உள்ள ஏராளமான தீவுகளின் கடல் பகுதியில் பவளப் பாறைகள் உள்ளன.
அந்தமானிலிருந்து
மிக அருகிலுள்ள ஜாலி பாய், பவளத் தீவு, ரோஸ் தீவு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளுக்காக
விசேஷ படகுகள் இயக்கப்படுகின்றன. இந்தப் படகின் கீழ்ப்புறத்தில் கண்ணாடி பதிக்கப்பட்டிருப்பதால்
படகில் இருப்போர் இந்தக் கண்ணாடி வழியே கடலின் அடியில் இருக்கும் பவளப் பாறைகளைப் பார்த்து
பிரமிக்க முடிகிறது.
இப்படிப்பட்ட
பவளங்கள், வளர்ந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்டு சிறிய் அளவுகளில் பட்டை தீட்டப்பட்டு
சந்தைக்கு விற்பனைக்காக வருகின்றன.
‘மோ
அலகின்’ படி பவளத்தின்
கடினத் தன்மை 3.5 முதல் 4 வரை உள்ளது.
பவளத்தின்
வளர்ச்சிக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவை.
அறிவியல் ரீதியாக பவளம் எய்ட்ஸ், கான்ஸர், தீராத வலி
ஆகியவற்றிற்கான நிவாரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன நாகரிகத்தில் சீனர்கள் பவள மாலையை அணிவது சாதாரணப்
பழக்கமாக இருந்து வந்திருக்கிறது.தெய்வீகத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள பவளம் ஆயுளை
நீட்டிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை.
ஆயுர்வேதத்தில் பவள பஸ்மம் எலும்பு சம்பந்தமான நோய்களைத்
தீர்க்கவும், கால்சியம் குறைபாடுள்ளவர்களுத் தரப்படும் மருந்தாகவும் உபயோகப்படுத்தப்பட்டு
வருகிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பில்ஜெர்
(Professor Bilger)
ஆஸ்திரேலியாவில் உள்ள ட்ரீ ஐலேண்டில் (Tree Island)ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். இங்குள்ள பவளங்களை ஆராய்ந்ததில்
அவர் பவளம் பற்றிய ஒரு அரிய உண்மையைக் கண்டுபிடித்துள்ளார். “மற்ற உலோகங்களில் ஐயான்
தாதுக்கள் (Mineral Ions) கடத்தப் படுவதை விட பவளத்தில் பத்து மடங்கு வேகத்துடன் இந்தச் செயல் நடைபெறுகிறது.ஆனால்
இது ஏன் என்பது புரியாத மர்மமாக இருக்கிறது” என்கிறார் அவர். பவளம் தனித்துவம் வாய்ந்த ஒன்று என்பது இதிலிருந்து புலனாகிறது.
பிரபலங்கள் போற்றும் பவளம்!
உலகின் ஏராளமான பிரபலங்கள் பவழத்தைத் தாங்கள் அணிவதை
உறுதிப்படுத்துகின்றனர். உலகமே பார்த்து வியந்து மயங்கிய ஸ்டைல் ராணியான எலிஸபத் டெய்லரின்
நவரத்தின ஆபரணக் குவியலில் பவளம் பதிக்கப்பட்ட அணிகள் உண்டு. இவை அனைவரையும் கவர்ந்ததில்
வியப்பில்லை.
ஹிந்தி திரைப்பட நடிகையான கரீனா கபூர், டி.வி. பிரபலமான
ஏகதா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பவளம்
பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் ஆபரணங்களை அணியத் தவறுவதே இல்லை என்பதற்கான காரணம் பவளத்தின்
மகிமை தான்!
பவளத்தில் உயரிய ரகம் 1000 டாலரிலிருந்து 6000 டாலர்
வரை விற்கப்பட்டு (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 70 ரூபாய்) உலக மக்களை ஆச்சரியப்பட
வைத்துள்ளது.
மணியாய் ஒளியாய் வருவாய்!
அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான இடங்களில் பவளத்தைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்.
முருகனின் பவள மேனி கண்டு உருகிய அவர் கந்தர் அனுபூதியில், இறுதிப் பாடலில், ‘உருவாய் அருவாய்’ என ஆரம்பித்து ‘மணியாய் ஒளியாய்’ எனத் துதித்து ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!’ என்று முடிக்கும் போது பவள மணியின் ஒளி நம் இதயத்தில் புகுந்து தெய்வீக உணர்வை எழுப்புகிறது இல்லையா!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
உலகில்
எவ்வளவோ இயற்கை அதிசயங்கள் உள்ளன. அதில் ரஷ்யாவிலுள்ள பைகால் (Lake
Baikal)
ஏரிக்கு சிறப்பிடம் உண்டு. ஆழமான, பழமையான
ஏரி என்பதோடு 1500 உயிரினங்களை உடைய ஏரி இது. ஆனால் மற்ற
ஏரிகளைப் போல இதுவும் புறச் சூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது அளவில்
சுருங்கி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது பற்றி 1992 ஆகஸ்ட் 8ம் தேதி நான் தினமணியில் எழுதிய
கட்டுரையைப் படியுங்கள்
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம்.
அவரை வழிபட்டுத் துதிப்போம்!
உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி
21-11-2019; இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019; மூன்றாம் பகுதி
கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019; நான்காம் பகுதி கட்டுரை எண் : 7258 வெளியான
தேதி : 25-11-19; ஐந்தாம் பகுதி : வெளியான தேதி
; பார்க்கவும்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6
ச.நாகராஜன்
மாணவர்களே!
உங்களது கல்வியை இங்கு தொடர்ந்து கற்றுக் கொள்வதோடு
ஸ்வாமியின் உபதேசங்களைக் கேட்டிருப்பதால் இலட்சிய மனிதராக உங்களை நீங்கள் மாற்றிக்
கொள்ள வேண்டும். தெய்வீகத் திருவுருவின் முன்னர் எப்போதும் வாழ்கின்ற புனிதமான வாய்ப்பு
உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால், அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு போதும் கடும் சொல்லைப் பேசாதீர்கள். ஒரு போதும் பொய் பேசாதீர்கள். சில சமயம் உண்மையைச்
சொல்வதானது ஆபத்தில் கொண்டு போய் விடும். அப்படிப்பட்ட நிலையில் பொய்யும் பேச வேண்டாம்;
உண்மையும் பேச வேண்டாம், மௌனமாக இருந்து விடுங்கள்.
பொய்க்கும் மெய்க்கும் அப்பாற்பட்டு அந்த இரண்டையும்
நீங்கள் கடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்தில் இருப்பதால்,
இதுவே புனிதமான பாதையில் செல்வதற்கான நல்ல தருணம். சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக
ஓட்டுங்கள், பத்திரமாகச் சேருங்கள்.
எனக்கு எனது
பிறந்த நாளைக் கொண்டாடுவதில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை. பக்தர்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளை
இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். ஆனால் நான் அவர்களை அனுமதிக்கவில்லை.
நீங்கள் ஏராளமான பேர்கள் இங்கு குழுமி விட்டதால் இந்தக் கூட்டம் இங்கு நடைபெறுகிறது.
இல்லையெனில் இந்தக் கூட்டத்திலும் கூட எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு ஒவ்வொரு நாளும்
திருநாள் தான். நான் எப்போதும் ஆனந்தமயம். நான் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின்
திருவுருவம். எந்த மாதிரியான ஆனந்தம்? மற்றவர்கள்
கொடுக்கின்றது போன்ற ஆனந்தம் அல்ல அது. மற்றவர்கள்
எனக்கு ஆனந்தத்தைத் தருவதற்காக நான் காத்திருப்பதில்லை. எனது ஆனந்தம் உள்ளிருந்து உருவாகிறது.
நித்யானந்தம், பரம சுகதம், கேவலம் ஞான மூர்த்திம், த்வந்வாதீயம், ககன சத்ருஷம், தத்வமஸ்யாதி லக்ஷ்யம், ஏகம், நித்யம், விமலம், அசலம், சர்வாதிசாக்ஷிபூதம், பாவாதீதம், திரிகுணரஹிதம் (கடவுள் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுரு. அவன் ஞானத்தின் மொத்த உரு, இரண்டு அற்ற ஏகன், ஒன்றுக்கொன்று எதிர்மறையாக உள்ளவற்றிற்கு அப்பாற்பட்டவன், ஆகாயம் போலப் பரந்தவன், அனைத்தையும் ஊடுருவி எங்கு நிறைந்திருப்பவன், தத்வமஸி என்ற மஹாவாக்யம் கூறியுள்ள லக்ஷியம், நித்யமானவன், விமலன், மாறுதலற்றவன், அறிவின் அனைத்துச் செயல்களுக்கும் சாக்ஷியானவன், அனைத்து மனநிலைகளுக்கும் அப்பாற்பட்டவன், சத்வம், ரஜஸ், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்).
நான் அனைத்து
குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்.
நம்பினால் நம்புங்கள், நான் ஆனந்தத்தின் திருவுருவமாக அமைந்தவன். நீங்கள் வேறு விதமாக
நினைத்தால் தவறு உங்களிடம் இருக்கிறது. நான் எதைச் செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே,
உங்களின் வளத்திற்காகவே, உங்களின் சந்தோஷத்திற்காகவே. ஆனந்தமயமான, கறைபடாத வாழ்க்கையை
வாழுங்கள். அதுவே உங்களிடம் நான் விரும்புவது. ஒரு காலத்திலும் நான் கவலைப்பட்டதில்லை;
துன்பப்பட்டதில்லை. என்னிடம் எல்லாமே இருக்கும் போது எதற்காக நான் கவலைப்பட வேண்டும்?
எனக்கு எந்த வித ஆசைகளும் இல்லை. நான் சொல்வதெல்லாம், நான் செய்வதெல்லாம் உங்களுக்குத்
தான் நன்மை, எனக்கு அல்ல. நான் உங்களுக்காகவே வந்திருக்கிறேன். ஆகவே என்னை முழுவதுமாகப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் புனிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நான் எப்போதுமே
தயார் தான். தெய்வீகமான வாழ்க்கை வாழுங்கள். சில சமயம் நான் உங்களுடன் பேசுவதில்லை.
“நாம் ஏதோ தவறு இழைத்திருக்கிறோம்” அதனால் தான் ஸ்வாமி நம்முடன் பேசவில்லை என நீங்கள்
நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், மற்றவர்களிடம் குறைகளைப் பார்ப்பது
எனது இயற்கையல்ல. எனது காட்சி மிகவும் புனிதமானது. நான் எப்போதுமே உங்களிடம் நல்லதையே
பார்க்கிறேன். கெட்டதைப் பார்ப்பதானது உங்களது சொந்தக் கற்பனையே. ஏனெனில் உங்களிடம்
கெட்டது இருக்கிறது, ஆகவே மற்றவர்களிடமும் அதையே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எனக்கோ
கெட்டதும் கூட நல்லதாகத் தான் தெரிகிறது. ஆகவே ஸ்வாமியைப் பற்றி எந்தவிதமான சந்தேகத்திற்கும்
இடம் கொடுக்காதீர்கள். சம்ஸ்யாத்மா வினஸ்யதி! (யார் சந்தேகப்படுகிறானோ அவன் அழிகிறான்)
திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.
அன்புத் திருவுருவங்களே!
உங்கள் விருந்தாளிகளை வரவேற்று மரியாதை செய்யுங்கள். உங்கள் அன்பை அனைவருக்கும்
கொடுங்கள். பசித்தோருக்கு உணவு கொடுங்கள். அப்போது மட்டுமே உங்களுக்கு மன அமைதி கிட்டும்.
உங்கள் எண்ண்ம், சொல், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து லயப்படுத்துங்கள். இதை விடப்
பெரிய ஞானம் வேறொன்றும் கிடையாது. ரிதமை பயிற்சி செய்யுங்கள். இதுவே தாரகத்திற்கான (முக்திக்கான) வழி. நீங்கள்
அவ்வப்பொழுது அலைபாய்ந்து கொண்ட மனதுடன் இருந்தால் நீங்கள் தான் மிகவும் துரதிர்ஷ்டசாலி.
அங்குமிங்கும் அலைபாய்வது குரங்கின் மனதிற்கான இயற்கைக் குணம். நீங்கள் மனிதகுலத்தைச்
சேர்ந்தவர்கள். மனிதனாகப் பிறந்து நீங்கள் உறுதியான மனத்தைக் கொள்ள வேண்டும். மனிதகுலம்
தாரகத்திற்கான அடையாளம். குரங்கு மனம் மாரகத்தைக் குறிப்பிடுவதாகும் (தளை).
அன்புத் திருவுருவங்களே!
இந்தப் பிறந்த நாளில் நீங்கள்
மிக முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெற்றுப் பேச்சில் வீணாக நேரத்தைக்
கழிக்க வேண்டாம். ஒரு முறை தொலைத்து விட்ட நேரத்தைத் திரும்பிப் பெற முடியாது. ஸத்தியத்தைக்
கடவுள் எனக் கொள்ளுங்கள்.
ஸத்யம் நாஸ்தி பரோ தர்ம:
(ஸத்யத்தைக் கடைப்பிடிப்பதைத்
தவிர வேறு பெரிய தர்மம் ஒன்றும் இல்லை.)
ஆகவே ஸத்தியத்தின் வழியைப் பின்பற்றுங்கள்;
தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.
***
பாபாவின் உரை இத்துடன் முற்றுப் பெறுகிறது.
23-11-2002இல் பிரசாந்தி நிலையத்தில் பாபா ஆற்றிய
உரை.
ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோர் Sathya
Sai Speaks – Vol 35, உரை எண் 23ஐப் பார்க்கவும்.
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
Tamils have
a special interest in Aindra grammar system. The reason being Tolkappiar, the
author of the oldest book in Tamil (Tolkappiam) was well versed in it.
Panamparanar who introduces Tolkappiar in his prolegomenon says this. So people
wonder whether AINDRA was prevalent before Panini or after Panini or many
systems existed at the same time in different parts of India. Tolkappiar says
Indra and Varuna are gods of two Tamil regions along with Vishnu, Skanda and
Durga representing other three Tamil regions.
Great Tamil
poet Kamban says Hanuman was well versed in Aindra grammar. He is also praised
as Nava Vyakarana Panditha. (Nava may mean NEW or NINE)
Agrawala says,
“According to
Vedic literature Brahma taught grammar to Brihaspati and he taught Indra and
Indra taught Bharadwaja. He in turn taught other Rishis (seers). Now we know
there was another system Bharadwaja grammar. Bhardwaja was a master of Aindra
as well. Panini also mentioned several teachers before him.
Tamils
believe that there was one grammar before Tolkappair, codified by Agastya as
well. Agastya’s own disciple Tolkappiya did another grammar within a short time.Why?
we don’t know. From all these things what we understand is several grammar
systems existed simultaneously, because there can’t be more than 50 years
difference between Agastya and Tolkappiyar if we believe the story of most famous
Tamil commentator Nachinarkiniyar. Tamils also believe that Shiva sent Agastya
to codify a grammar to Tamil language. It is in the old Tamil verses. Poet
Kalidasa also links Pandya with Agastya in his Raghuvamsa. It is all 2000 year
old belief.
Indra is a
Vedic God who has the highest number of hymns in the oldest book The Rig Veda. The
very construction of the word Aindra (derived from Indra) is also of Sanskrit
origin.
But many Tamils do not know much about Panini or other systems of grammar that existed in India. Agrawala in his book ‘India as known to Panini’ gives interesting details:–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பாதரசம்
பற்றிய நேற்றைய கட்டுரையில் மெர்குரி எனப்படும் பாதரசத்தால் விஷம் (Mercury Poisoning) ஏறுவது ஏன் என்று விளக்கியிருந்தேன்.
அது எங்கெங்கு நிகழக்கூடும், அதன்
அறிகுறிகள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மேலும் காண்போம்.
பாதரச
உலோகத்தின்
மூலம் விஷம் ஏறுகிறதா அல்லது பாதரச உப்புக்கள் மூலம் விஷம் ஏறுகிறதா என்பதைப்
பொறுத்து உடலின் பாதிப்பு இருக்கும். நுரையீரல், தோல், ஜீரண உறுப்புகள் மூலம் விஷம் உடலில்
பரவும்.
விளைவுகள்
வாயில்
உலோகத்தைச் சுவைத்தது (metallic taste) போலத் தோன்றும். தலைவலி, வாந்தி, வயிற்று வலியும் ஏற்படும். சில
நாட்களுக்குப் பின்னர் உமிழ்ழ்நீர் (salivary glands) சுரப்பிகள் வீங்கும்; ஆதலால் நிறைய எச்சில் சுரக்கும்.
பின்னர் பற்கள் ஆட்டம் காணும்.
தொழிற்சாலைகளில்
ஏறும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட காலத்துக்கு ஏறுவதால் வேறு விதமான விளைவுகளைக்
காணலாம். இது களைப்பு, தூக்கமின்மை, பலவீனம், ஞாபக சக்திக் குறைவினை உண்டாக்கும். மனத்தொய்வு, பிறர் மீது சந்தேகப் படுதல் (Paranoia) முதலியன ஏற்படும்; கை நடுக்கத்தினால் எழுத்துக்கள்
கோணும்.
1810-ம் ஆண்டு விபத்து
1810-ல் ஸ்பெயின் நாட்டிலிருந்து லண்டனுக்கு, சிறிய கப்பலில் பாதரச பிளாஸ்குகளை
கொண்டு வந்தனர். புயல் வீசியதால் அதில் ஒன்று உடைந்தது. இதன் மூலம் பரவிய
விஷத்தால் மூவர் இறந்தனர். 200
பேர் பாதிக்கப்பட்டனர்.
கப்பலில் இருந்த ஆடு மாடுகள் அனைத்தும்
இறந்துபோயின.
குற்றம்
நடந்த இடங்களில் தடயங்களை ஆராயும் குற்றவியல் நிபுணர்களுக்கும் இது ஆபத்தாக
விளங்குகிறது. ஏனெனில் அங்கு பயன்படுத்தும் (Dusting) பொடியில் பாதரசம்
இருக்கிறது.
ஆங்கிலத்தில்
ஒரு மரபுச் சொற்றொடர் ‘தொப்பிக்காரன் போல பைத்தியம்’ (Mad as a hatter) என்பதாம். அதாவது தொப்பித் தொழிலில்
ஈடுபட்டவர்கள் பாதரச உப்புக்களைப் பயன்படுத்தியதால் பைத்தியக்காரான் போல நடந்து கொண்டனர். இது அவர்களின் உடலில்
பாதரசம் ஏறியதால் ஏற்பட்ட விளைவு. அதிகமான பாதரசத்தை சிறுநீர், மலம் மூலம் உடல் வெளியேற்றும். பாதரச விஷம் ஏறியவர்களுக்கு விஷத்தை
முறிக்க மருந்துகள் கிடைக்கின்றன.
வரலாறு
பாதரசம் 118 மூலகங்களில்
ஒன்று.
30,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆதி மனிதர்கள் ஸ்பெயின் குகைகளில் சின்ன பார் எனப்படும் மெர்குரி சல்பைடை (Mercury
sulphide)
வண்ணம் ஏற்றப் பயன்படுத்தினர். குர்னா (Kurna) என்னும் எகிப்திய நகரில் 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் பாதரசம் பயன்படுத்தப்பட்டது. அதை தேங்காய் வடிவக் குடுவையில்
வைத்து இருந்தனர்.
சின்னபார்
(Mercury sulphide) என்னும் சிவப்பு நிற உப்பை உருக்கி பாதரசம் எடுத்ததை சீன ரசவாதி கு
ஹோங் (281-361) எழுதிவைத்துள்ளார். அரிஸ்டாடில், ப்ளினி ஆகியோரும் இதை அறிந்திருந்தனர்.
ரோம் ஆண்டுதோறும் 4 டன் பாதரசத்தை வாங்கியதாக ப்ளினி
கூறுகிறார்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்மேடன் சின்னபார் சுரங்கம் 2500 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.. தென் அமெரிக்காவின் இன்கா (Incas) நகரீகம் இதை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தியது.
பொருளாதார
உபயோகம்
சின்னபார்
(cinnabar)
என்னும் பாதரச உப்பை உருக்கினால் பாதரசம் கிடைக்கும். இது ஸ்பெயின், ரஷ்யா, சீனா, இதாலி, ஸ்லோவீனியவில் அதிகம்
கிடைக்கிறது; பாதரசத்தை குடுவைக் (Flask) கணக்கில் விற்கிறார்கள். ஒரு
குடுவையில் 34-5 கிலோ அல்லது 76 பவுண்டு எடை உள்ள பாதரசம் இருக்கும்.
சோளப்
பயிரைப் பாதுகாக்க இது பயன்பட்டது. ஆனால் இதில் 280 பேர் இறந்ததால் கைவிடப்பட்டது. காளான்
வகை (Fungal disease) நோய், பயிரைத் தாக்காமாலிருக்க பாதரச உப்புக் கரைசல்
தெளிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் முதலியவற்றில் இதைப் பயன்படுத்துவது குறைந்து
விட்டது மின்சார கியர், சுவிட்சுகள், மின் விளக்குகள், பாட்டரிகளில் இப்போது பயன்படுகிறது.
கில்டிங் (gilding)
எனப்படும் முலாம் பூசும் தொழிலில் இது
பயன்படுகிறது ஆயினும் அதனால் விஷம் பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவின்
செயின்ட்பீட்டர்ஸ் பர்க் நகர மாதாகோவிலுக்கு 100 கிலோ தங்க முலாம் பூசியபோது 60
தொழிலாளர்கள் பாதரச விஷம் ஏறி இறந்தனர்.
கழிவுப்பொருள்களில்
இருந்து டன் கணக்கில் பாதரசம் கிடைக்கிறது. மனிதர்கள் பயன்படுத்திய பாட்டரிகள், பல் செட்டுகள் ஆகியவற்றிலிருந்து
ஆயிரக்கணக்கான டன் பாதரசம் கிடைக்கிறது.
ஜப்பானில்
நடந்த மீனமாட்டா குடா விபத்து (Minamata Bay Disaster) எல்லோரும் அறிந்ததே. ஒரு தொழிற்சாலைக்
கழிவுகள் கடலுக்குள் விடப்பட்டு அதை உண்ட மீன்கள் மூலம் மனிதர்களும் பாதிக்கப்பட்டனர்.
10,000
பேருக்கு மினமாட்டா நோய் ஏற்பட்டது (மெர்குரி விஷ ஏற்றம்). பின்னர் அப்பகுதியில்
மீன் பிடிப்பதை தடை செய்தனர்.
5 Sep 2018 – நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396).
Written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 5 September 2018. Time
uploaded in …
7 Sep 2018 – பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401).
written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 7 September 2018. Time
uploaded in London – 6-47 am (British Summer Time). Post No.
6 Nov 2019 – பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! … this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously.
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
நான்
தினமணியில் 1992-ம் ஆண்டில் எழுதிய கட்டுரைக்குப்பின்னர் 27 ஆண்டுகளில் நடந்த சுவையான பாண்ட்James Bond
செய்திகள்–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
கொஞ்சம் தமிழ் ‘ரம்’ குடியுங்கள்; சுவையாக இருக்கும்!
1. –
காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஜபிக்கவேண்டிய மந்திரம்