திருவாசகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,001)

Written by London Swaminathan

Post No. 16,001

Date uploaded in London – 21 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பன்னிரு திருமுறையில் திருவாசகம் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது ?

2

திருவாசகத்தால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டினர் யாவர் ?

3

இந்த நூலை யாத்த மாணிக்கவாசகர் எட்டினோடு இரண்டும் அறியேனை என்று பாடியதன் பொருள் என்ன?

4

கயிலாயத்திலுள்ள எவருடைய அம்சம் மாணிக்கவாசகர் என்று திருவாசக உரைகார்கள் கருதுகின்றனர்  ?

5

வள்ளுவர் நூல் அன்பர் திருவாசகத் தொல்காப்பியமே

தெள்ளு பரிமேலகர்  செய்தவுரை – ஒல்லியா சீர்த்

தொண்டர் புராணந்தொகை  சித்தி ஓராறும்

தண்டமிழின் மேலாந்தரம் – என்று பாடிப் புகழந்தவர் யார்  ?

6

வருவாசகத்தினின் முற்றுணர்ந்தோனை  வண்தில்லை மன்னைத்

திருவாதவூர் சிவபாத்தியன் செய் திருச்சிற்றம்பலப்

பொருளார்தரு    திருக்கோவை கண்டேயு மற்றப்பொருளைத்

தெருளாத உள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பவரே —

என்று சொன்னவர் யார் ?

7

திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன ?

8

தேவர் குறளும் திருநான்மறைமுடியும்

மூவர் தமிழும் முனி மொழியும் – கோவைத்

திருவாசமுன் திருமூலர் சொல்லும்

ஒருவாசமென்றுணர் — என்று பாடியவர் யார் ?

9

எழுபதுக்கும் மேலான முறை மாணிக்கவாசகர் பயன்படுத்திய பிராணி எது ?

10

மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது இறைவனோடு ஐக்கியமான ஊர் எது?

***

விடைகள்

1.பன்னிரு திருமுறையில் திருவாசகம் எட்டாம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது.

***

2. திருவாசகத்தால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டினர்: டாக்டர் ரெவரெண்ட் ஜி. யு .போப் , வில்சன் வுட், டாக்டர் ரோஸ்ட், ஸ்டூலின் வில்சன், கெளடி எட்டி ஆகியோராவர்.

***

3.பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை

எட்டினோடு இரண்டும் அறியேனை-

என்பதற்கு உரைகள் கூறும் விளக்கம் : எட்டு என்பது தமிழ் எண்களில் ; இரண்டு என்பது உ ; இவை இரண்டும் சேர்ந்து ஓம் என்னும் எழுத்தை உருவாக்குவதால் திருவாசகம் முழுதும் ஓம்காரப்பொருள் விளக்கம் ஆகும் . முதல் பாட்டாகிய சிவபுராணத்திலேயே ஓம்காரம் வருகிறது ; இரண்டாவது விளக்கம் உ   என்பது சிவனையும் சக்தியையும் குறிக்கும் ; மூன்றாவது விளக்கம் : எட்டும் இரண்டும் சேர்ந்து பத்து என்ற என்னை உருவாக்கும் ; இதற்கான தமிழ் எழுத்து ; இது உயிரைக் குறிக்கும்; ஆக சிவனையும் சக்தியையும் தன்னையும் அறியாத என்பது ஒரு பொருள்; இந்த எட்டும் இரண்டும் அறியாத என்பது திருமந்திரத்திலும் யாப்பருங்கல உரையிலும் கூட வருகிறது.

***

4.கயிலாயத்திலுள்ள நந்திதேவரின் அம்சம் மாணிக்கவாசகர் என்று திருவாசக உரைகார்கள் கருதுகின்றனர்.

***

5.கொற்றன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிய புகழ்பெற்ற தனிப்பாடலில் வரும் வரிகளாகும்.

இப்பாடலில் சிறப்பிக்கப்படும் தமிழ் நூல்கள்:

  1. திருக்குறள்: ‘வள்ளுவர் நூல்’ என அழைக்கப்படும் உலகப் பொதுமறை.
  2. திருவாசகம்: ‘அன்பர் மொழிவாசகம்’ எனப் போற்றப்படும், மாணிக்கவாசகரால் அருளப்பட்ட பக்தி இலக்கியம்.
  3. தொல்காப்பியம்: தமிழ் மொழியின் மிக மூத்த இலக்கண நூல்.
  4. பரிமேலழகர் உரை: திருக்குறளுக்கு எழுதப்பட்ட மிகச்சிறந்த உரை.
  5. பெரியபுராணம்: ‘தொண்டர் புராணம்’ என்ற பெயரில் அறியப்படும் அடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல்.
  6. சிவஞானசித்தியார்: மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான சைவ சித்தாந்த நூல்

***

6. வருவாசகத்தினின் முற்றுணர்ந்தோனை வண்தில்லை மன்னைத்

திருவாதவூர் சிவபாத்தியன் செய் திருச்சிற்றம்பலப்

பொருளார்தரு    திருக்கோவை கண்டேயு மற்றப்பொருளைத்

தெருளாத உள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பவரே —

என்று சொன்னவர் நம்பியாண்டார் நம்பி .

  வருவாசகத்தினின் முற்றுணர்ந்தோனை: திருவாசகத்தின் உட்கருத்துக்களை முழுமையாக உணர்ந்தவரும்,

  வண்டில்லை மன்னை: வளம் நிறைந்த தில்லை (சிதம்பரம்) நகரத்தின் தலைவனும்,

  திருவாதவூர்ச் சிவபாத்தியன்: திருவாதவூரில் அவதரித்தவரும், சிவபெருமானின் அடியாராகிய மாணிக்கவாசகரையும் குறிக்கும்.

***

7.திருவாசகத்தில் 51 பதிகங்களும் 656 பாடல்களும் உள்ளன.

***

8.தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும் — கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.– இது ஔவையார் அருளிய ‘நல்வழி’ நூலில் இடம்பெற்றுள்ளது.

  • தேவர் குறள்: தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
  • **திருநான் மறைமுடி: ** ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் சாரமான (UPANISHADS) முடிவுகள்.
  • மூவர் தமிழ்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரம்.
  • முனிமொழி: அகத்தியர் போன்ற முனிவர்கள் அருளிய தமிழ் நூல்கள்.
  • கோவை: திருக்கோவையார்.
  • திருவாசகம்: மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்.
  • திருமூலர் சொல்லும்: திருமூலர் அருளிய திருமந்திரம்.

இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் தோன்றியிருந்தாலும், இவற்றின் சாரம் (உள்ளடக்கம்) அனைத்தும் ஒன்றே என்பதை உணர்ந்து, அதை ஒருமித்த கருத்தாகக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்..

***

9.திருவாசகத்தில் எழுபதுக்கும் மேலான முறை மாணிக்கவாசகர் பயன்படுத்திய பிராணி நாய்.

***

10.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர்; அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்து மந்திரி பதவி கொடுத்தான். இறுதியில் அவர்  இறைவனோடு ஐக்கியமான ஊர் தில்லை என்னும் சிதம்பரம் ஆகும் .

–subham—

Tags- திருவாசகம் ,10 கேள்விகள், மாணிக்கவாசகர், எட்டினோடு இரண்டும்,தேவர் குறளும், வள்ளுவர் நூல்

Leave a comment

Leave a comment