ராமாயணத்தில் வரங்கள் 67 – வருண பகவான் மற்றும் யமன் ஹனுமாருக்கு வரம் அளித்தது! (Post No.16,002)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,002

Date uploaded in London – 22 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 67  – வருண பகவான் மற்றும் யமன் ஹனுமாருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஒவ்வொருவராக வரம் கொடுத்ததைக் கூறி வருகிறார். அதில் சூரியனுக்கு அடுத்ததாக வருண பகவான் மற்றும் யமன் ஹனுமாருக்கு வரம் அளித்ததை இப்படிக் கூறுகிறார்: :

வருணஸ்ச வரம் ப்ராதாந்நாஸ்ய ம்ருத்யுர்பவிஷ்யதி |                 வர்ஷாயுசதேநாபி மத்ஷாஷாதுதகாதபி ||                               யமோ தண்டாதவத்யத்வமரோகித்வம் ச நித்யஷ: ||

                          (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 15)

வருண: – வருணன்                                                        அஸ்ய – “இவனுக்கு                                                   வர்ஷாயுசதேநாபி – எந்நாளிலும்                                                  மத்பாஷாத் ச – எனது பாசத்தாலும்                                          உதகாதபி – தண்ணீராலும்                                                           ம்ருத்யு: – மரணம்                                                          ந பவிஷ்யதி – உண்டாகாதிருக்கக் கடவது”” என்கிற                     வரம் – வரத்தை                                                             ப்ராதாத் – தந்தருளினார்                                                         யம: – யமன்                                                               தண்டாத் – தண்டத்தால்                                                      அவத்யத்யம் – மரணமில்லாமையையும்                                      நித்யஷ: – எந்நாளிலும்                                                      அரோகித்வம் – திடகாத்திரத்தையும்                                          ச – அப்படியே தந்தருளினார்

**

Leave a comment

Leave a comment