Written by London Swaminathan
Post No. 16,034
Date uploaded in London – 30 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பண்டிகை நாட்கள்: ஆடிப்பெருக்கு 3, திங்கட்கிழமை; ஆடி அம்மாவாசை 12, புதன் ; ஆடிப் பூரம் 14, வெள்ளி ; சுதந்திர தினம் 15 சனி; நாக பஞ்சமி: 17 திங்கட்கிழமை; ஓணம்: 26, புதன்; & ரிக் உபாகர்மா; யஜுர் உபாகர்மா 27 வியாழன் ; ரக்ஷா பந்தன்: 28, வெள்ளி , காயத்ரி ஜெபம் & வரலக்ஷ்மி விரதம் .
ஆடி அம்மாவாசை 12; பெளர்ணமி 28.
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 9; 23; சுப முகூர்த்த தினங்கள் – 30, 31.
****
ஆகஸ்ட் 2026 காலண்டரில் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (நாலாயிர திவ்யப்பிரபந்தம்) பாடலிலிருந்து பொன்மொழிகள்;
தமிழ் வைஷ்ணவர்கள் திருமணங்களில் இந்தப் பாடலின் சில பகுதிகளை பாடுவதைக் கேட்டிருக்கிறேன் ; 143 பாடல்களில் சில முக்கியப்பாடல்களைக் காண்போம்.
ஆகஸ்ட் 1 சனிக்கிழமை
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா-504
***
ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா-505
***
ஆகஸ்ட் 3 திங்கட்கிழமை
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும்
கவரி பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டி தந்தேன் கண்டாய் காமதேவா-507
***
ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே-514
***
ஆகஸ்ட் 5 புதன்கிழமை
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம்—518
***
ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய்—524
***
ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை
மாட மாளிகை சூழ் மதுரை பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—538
***
ஆகஸ்ட் 8 சனிக்கிழமை
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே-545
***
ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்—551
***
ஆகஸ்ட் 10 திங்கட்கிழமை
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும்
தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழீ நான்–556
***
ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத கனா கண்டேன் தோழீ நான்–557
****
ஆகஸ்ட் 12 புதன்கிழமை
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திர கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழீ நான்—558
***
ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை
நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூ புனை கண்ணி புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்ட கனா கண்டேன் தோழீ நான்–559
***
ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை
கதிர் ஒளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான்–560
***
ஆகஸ்ட் 15 சனிக்கிழமை
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை
கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான்–561
***
ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழீ நான்–562
***
ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை
இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழீ நான்–563
***
ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை
வரி சிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்ட கனா கண்டேன் தோழீ நான்—564
****
ஆகஸ்ட் 19 புதன்கிழமை
குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனமாட்ட கனா கண்டேன் தோழீ நான்–565
****
ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே—566
***
ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திரு பவள செ வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே—567
***
ஆகஸ்ட் 22 சனிக்கிழமை
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தல
திடரில் குடியேறி தீய அசுரர்
நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே—568
***
ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை
தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோல பெரும் சங்கே—569
***
ஆகஸ்ட் 24 திங்கட்கிழமை
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே—570
***
ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே—571
***
ஆகஸ்ட் 26 புதன்கிழமை
போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு
சேய் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்-தன்னுடைய
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே—572
***
ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை
செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செம் கண் கரு மேனி வாசுதேவனுடைய
அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும்
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே—573
***
ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்_வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே—574
****
ஆகஸ்ட் 29 சனிக்கிழமை
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ட-கால்
சிதையாரோ உன்னோடு செல்வ பெரும் சங்கே–575
***
ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—576
***
ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள்
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே–646
—Suhamm–
Tags- ஆகஸ்ட் 2026 காலண்டர், ஆண்டாள், நாச்சியார் திருமொழி, பொன்மொழிகள்