தலையணையில் இருக்குது ரகசியம்! (Post.160,33)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,033

Date uploaded in London – 30 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜூலை 2026 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

தலையணையில் இருக்குது ரகசியம்!

ச. நாகராஜன்

நம் அனைவருக்குமே நன்கு தெரியும் தூக்கம் நமக்குப் பல நன்மைகளைச் செய்கிறது என்று!

உயிரணுக்களை அது மீட்கிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. நம் உடல் எடையைக் குறைத்து மெலிய வைக்கிறது. இதனால் டயபடீஸை நீக்க உதவுகிறது. எதிர்காலத்தில் டெமின்ஷியா வராமல் தடுக்கிறது.

இவையெல்லாம் போக இப்போது சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய உண்மையைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.

தூக்கத்தில் நாம் எப்படி தலையணையை உபயோகிக்கிறோம் என்பதும் ஒரு முக்கியமான விஷயமாக அமைகிறது என்பதை சீன ஆய்வு தெரிவிக்கிறது.

கண்களின் பாதுகாப்பிற்கும் பார்வைத் திறனுக்கும் உதவுவது நாம் எப்படி உறங்குகிறோம் என்பது தான்!

க்ளாகோமா பற்றி ஆய்வு நடத்தும் க்ளீவ்லாந்து க்ளினிக், “கண்களில் உள்ள விழிக்கோளத்தில்  (Eyeball) ஏற்படும் அழுத்தமானது கண்ணைப் பாதிக்கும் என்று தெரிவிக்கிறது. இதனால் க்ளாகோமாவின் பாதிப்பு அதிகமாகி, சிலருக்குப் பார்வையே போய்விடும் நிலையையும் ஏற்படுத்துகிறது.

இதைப் பற்றி ஆராயப் புகுந்த கண் இயல் (Opthalmology)

மருத்துவக் குழு ஒன்று இது பற்றி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தால்மொலோஜியில், 2026ம் ஆண்டு,  வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் தூக்கத்தின் போது உடலின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த கண் அழுத்தமாகிறது என்று தெரிவிக்கிறது

.

இரண்டு தலையணைகளைத் தலைக்குப் பின்னால் வைத்து 20 முதல் 35 டிகிரி வரை சாய்ந்த கோணத்தில் இருக்க வைத்துப் பார்த்ததில் கண்களின் அழுத்தம் அதிகமாகிறது என்றும் தலையணை இல்லாத போது இந்த அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு 144 பேர்களிடத்தில் நடத்தப்பட்டது.

ஆக தலைக்குப் பின்னால் உயரமாக இரண்டு தலையணைகளைப் பயன்படுத்தக் கூடாது.

தூங்கச் செல்லும் போது நமக்குப் பிடித்த பாடலைக் கேட்பது நமக்கு நல்ல ஒரு ஓய்வை மூளைக்குத் தருகிறது.

முதலில் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பது முக்கியமானது. அடுத்து எப்படித் தூங்குகிறோம் என்பது முக்கியமானது.

ஒரு நாளைக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். ஆல்கஹால் (மது அருந்துவது) அருந்துவது, தூக்க மருந்தை உட்கொள்வது, கண்ட நேரத்தில் உறங்குவது ஆகிய இவையெல்லாம் தூக்கத்தின் தரத்தை வெகுவாகத் தாழ்த்தும்.

அடுத்து எப்படி உறங்குவது என்று பார்த்தால் இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது மிகவும் மேலான நிலை என்பது தெரியவருகிறது.

ஒரு தலையணையை முழங்காலுக்குக் கிழே வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்க ஆரம்;பித்தால் உடல்நலம் மேம்படும் என்பது ஆய்வின் முடிவு.

ஆகவே ஒரு தலையணையத் தலைக்கும் ஒரு தலையணையை இடது புறமாகப் படுக்க முழங்காலுகுக் கீழேயும் வைத்து சீராக ஒரே நேரத்தில் அன்றாடம் உறங்கும் பழக்கத்தை மேற்கொண்டு இசையைக் கேட்டவாறே தூங்க ஆரம்பிக்கலாம். ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை உறங்கலாம்.

 **

Leave a comment

Leave a comment