HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 98; இந்து மத கலைச்சொல் அகராதி-98 (Post.16,084)

Written by London Swaminathan

Post No. 16,084

Date uploaded in London – 13 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 98; English version posted yesterday

ஷ்யாமா சாஸ்திரி (1762-1827)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் சியாமா சாஸ்திரிகள் ; தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரைவிட மூத்தவர் ; திருவாரூரில் பிறந்தார் ; தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவில் மூலம் பிரபலமானார் ; 300 கிருதிகளுக்கும் மேலாக, பெரும்பாலும் தமிழ் நாட்டில் உறையும் தேவியர்கள் மீது , இயற்றினார். தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் ஆதரவையும் பெற்று பல வித்வான்களை சங்கீதப்போட்டிகளில் வென்றார். தமிழ் பிராமணர் குடும்பத்தில், விஸ்வநாத அய்யரவுக்கும் வெங்கலட்சுமி அம்மாளுக்குக்கும் புதல்வனாக அவதரித்தார் ( at Tiruvarur on April 26, 1762)  வேங்கட ஸுப்ரஹ்மண்ய என்பது தாய் தந்தையர் சூட்டிய பெயர்

தந்தைதான் சங்கீதத்தில் முதல் குரு; ஆனால் குடும்பம் அர்ச்சககர் குடும்பம்; கால சூழ்நிலை காரணமாக திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு குடும்பம் குடியேறியபோது காசியிலிருந்து யாத்திரை வந்த சந்நியாசி சங்கீத சுவாமியைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது ; சுமார் நான்கு மாதங்களுக்கு அவர் சங்கீத நுணுக்கங்களைக் கற்பித்தார் ; பின்னர் தஞ்சாவூர் அரசவை வித்வான் பச்சிமிரியம்  ஆதியப்பையாவிடம் அவர் அனுப்பினார் ; சியாமா சாஸ்திரிகளின் இசை மெருகேறியது ; மதுரை மீனாட்சி கோவில் உள்பட பல அம்மன் கோவில்களுக்குச் சென்று இசை மழை பொழிந்தார் .தியாகராஜரைச் சந்த்தித்து இசை பற்றியும் அளவளாவினார்; முமூர்த்திகளில் இவர் ஒருவர்தான் தமிழில் பாடியவர்; தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளிலும் கிருதிகளை இயற்றினார் ; இவருடைய பாடல்களில் ஷியாம கிருஷ்ணா என்று முத்திரை இருக்கும்; இறைவனடி சேர்ந்த நாள்  பிப்ரவரி 6, 1827, அப்போது வயது 65. சங்கீத கணிதத்தில் அவர் ஆற்றியுள்ள சேவையை அவர் தன் கைப்பட எழுதியுள்ள 79 அக்ஷர தாள பிரஸ்தார வரைபடங்களில் கண்டு மகிழ முடியும்வியக்க முடியும்!

***

சிந்து

இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதி திபெத், இந்தியா பாகிஸ்தான் வழியாக ஒடி அரபிக் கடலில் சங்கமிக்கிறது . இதன் நீளம் 1980 மைல்;3180 கிலோமீட்டர். இந்தியா என்ற பெயர் ஏற்பட இந்த நதிதான் காரணம் ; கிரேக்க பாரசீக மொழிகளில் ச என்ற எழுத்து இல்லாததால் இதை ஹிந்து ; இந்து என்று உச்சரிக்கவே நதியின் பெயர் இண்டஸ் ஆகியது ; அதை அடுத்த பகுதி இந்தியா ஆனது  .கங்கை நதியை 17 முறை குறிப்பிட்ட சங்க காலத் தமிழர்களுக்கு இந்த நதி பற்றி எதுவும் தெரியாது ; ஆகவே இப்போது பாகிஸ்தானிலுள்ள ஹரப்பா, மொஹஞ்ச தாரோ நகர நாகரீகத்துக்கும் தமிழர்களுக்கும் தொடர்பே இல்லை என்பது வலுவான வாதம். சிந்து நதியின் முக்கிய உபநதிகள் –  ஜீலம் , சீனாப், , ரவி, வியாஸ் ,  சட்லெஜ்; ரிக் வேதத்தில் சிந்து நதி பற்றி கூறப்பட்டுள்ளதால் அவர்களுக்கு 6000 ஆண்டுகளுக்கு உன்னரே இந்த நதி பற்றித் தெரிந்திருந்தது ; ஹரியுபா என்ற இடப்பெயரும் ரிக்வேதத்தில் இருப்பதால் பிராமணர்கள் வேத வேள்வி இயற்றி யூப ஸ்தம்பங்களை நிறுவிய ஊர்தான் ஹரப்பா என்பதும் அறிஞர்கள் கூற்று .

***

சிகண்டி

Śikhaṇḍī (शिखंडी).—மஹாபாரதப்போரில் பாண்டவர்கள் தரப்பில் போரிட்டவர் துருபத மன்னனுக்கு பெண்ணாகப் பிறந்த போது அவர் பெயர் சிகண்டினி. பின்னர் ஆணாக மாறினார்; மஹாபாரதப்போரில் 18 ஆவது நாள் யுத்தத்தில் இவரை அஸ்வத்தாமன் கொன்றான். காசி நகர மன்னன் அம்பாவின் மறு  அவதாரம் இவர் என்பது ஐதீகம்; பீஷ்மரால் அவமதிக்கப்பட்ட இளவரசி அம்பா சாகும்போது, தான் மீண்டும் பிறந்து பீஷ்மரைக் கொன்று பழிவாங்குவேன் என்று சொல்லியிருந்தாள்;   மஹாபாரதப்போரில் அர்ஜுனன் இவருக்குப் பின்னால் நின்று அம்புகளை எய்தான் ; சிகண்டியை ஆண் என்று கணக்கில் பீஷ்மர் சேர்க்கததால் வில் அம்புகளைக் கீ ழே போட்டுவிட்டு வெறுமனே நின்றார் ; பெண்களைக் கொல்லக் கூடாது என்பது இந்து தர்ம சட்டம்; இதைப் பயன்படுத்தி அர்ஜுனன் சரமாரி பெய்யவே பீஷ்மர் படுகளத்தில் வீழ்ந்தார் ; பீஷ்மரைக் கொன்றதற்குப் பழிவாங்குவதற்கு 18 நாள் போர் முடிந்த இரவில் பாண்டவர் கூடாரத்தில் படுத்திருந்த அனைவரையும் தீ வைத்து அஸ்வத்தாமன் கொன்றான்; அதில் சிகண்டி உயிர்நீத்தான் ; போர் என்பதில் விதிகளை விட அக்கிரமங்களே அதிகம் என்பதை மஹாபாரதப் போர் காட்டுகிறது; ஆயினும் தர்ம விரோதிகள் அடியோடு அழிந்தனர்.

***

சீதா

ராமனின் மனைவி ; இந்துக்களின் முன்னுதாரணப் பெண்மணி; கணவனின் துன்பங்களை மனமுவந்து பகிர்ந்து கொண்டாள்; 14 ஆண்டு வனவாசத்தின்போது இலங்கை அரக்கன் ராவணனால் கடத்தப்பட்டவள் ; ராமபிரான் வானர சேனை உதவியுடன் அவளை மீட்டு வந்தான்; ஒரு சலவைத்தொழிலாளி அவளது கற்பினைப்   பற்றிக்கேலி செய்தவுடன் சீதா தேவியை, வால்மீகி ஆஸ்ரமத்தின் அருகில் இறக்கி  விட, லெட்சுமணனை அனுப்பினார்  ராம பிரான்  ; அங்கே குசன் லவன் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுத்தாள்  சீதா தேவி;  அந்த இரட்டையர் ராமபிரானைச் சந்தித்து ஆட்சி உரிமையைப் பெற்று நீண்ட காலம் சூர்ய வம்ச ஆட்சியை நிலை நாட்டினார்கள்; சீதாதேவியோ தனது கடமை முடிந்து விட்டது என்று எண்ணி தான் தோன்றிய பூமிக்குள் இறங்கிச் சென்றாள்; அவள் நிலத்தில் பிறந்தவள்; ஜனக மஹாராஜா ஆண்டுதோறும் நடக்கும் ஏர் உழும் சடங்கினைச் செய்தபோது அவளை நிலத்தில் கண்டெடுத்தான்; அவள் இள மங்கையாக இருந்தபோது விசுவாமித்திர முனிவர் மூலம் மிதிலை நகருக்கு வந்த ராம பிரான் சிவ தனுஷை முறித்து சீதையை மணந்தான் .

சங்க இலக்கியத்தில் வரும் இரண்டு ராமாயணப்     பாட ல்கள் சீதையை, ராம பிரானைப் போற்றியும் ராவணனைக் கண்டித்தும் புதிய செய்திகளைத் தருகின்றன.

கம்பனும் வால்மீகியும் சீதா தேவிக்குச் சூட்டிய புகழ் மாலையைப் படிப்போர் மனதிலிருந்து அந்தக் கற்புக்கரசி  என்றும் நீங்கமாட்டாள்

.***

சிவன் .

ரிக்வேதத்தில் ஒரே ஒரு முறை சிவபெருமான்  வருவதாகப் பேராசிரியர் வில்சன் பகர்கிறார்; ஏனைய இடங்களில் மங்களம் என்ற பொருளில் வருகிறது ; யஜுர் வேதத்தில் உள்ள நமக்கும்- சமகம் என்னும் ருத்ர மந்திரத்தின் மூலம் சிவாய நம என்ற மந்திரம் உலகிற்குக்கிடைத்தது ; சிவனும் ருத்ரனும் ஒருவரே என்பதை இந்த மந்திரம் நிரூபிக்கிறது; தேவாரம் திருவாசகத்தில் இருவரையும் ஒருவராகவே பாடினர் அடியார்கள் ; இந்து விரோத வெள்ளைக்காரர்கள் மட்டும் வேற்றுமை கற்பித்து தோல்வி அடைந்தனர்.தமிழ் மொழியிலும் சிவன் என்ற சொல் சங்க இலக்க்கி யத்திலும் தொல்காப்பியத்திலும் இல்லை; ஆயினும் சிவ பெருமானின்  நீலக் கழுத்தும் , மூன்று கண்களும் ரிஷ்பக் கொடியும் புறநானூற்றில் உள்ளது; இதே போல லிங்கம் என்ற உருவமற்ற சிவனையும் சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் மிகவும் பிற்காலத்தில்தான் காண முடிகிறது ; சிவனுடைய ஐந்து உருவங்களையும் ஐந்து நிறங்களையும் தேவார  மூவரும் மாணிக்கவாசகரும் பாடிப்பரவியுள்ளார்கள்

சிவன் தோன்றும் ஐந்து முகங்கள் :

1.           ஈசான;

2.           தத் புருஷ;

3.           அகோர;

4.           வாமதேவ;

5.           ஸத்யோஜாத.

***

சோம

சோம என்ற சொல்லுக்கு நிலவு என்றும் சோமபானம் என்றும் பொருள்; சுரா பானம் என்ற கள்ளுக்கும் சோமபானம் என்னும் அபூர்வ பானத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு என்பதை வேதங்களே சொல்கின்றன.  6000 ஆண்டுகள் பழமையான ரிக்வேதத்தில் ஒன்பதாவது  மண்டலம் முழுதும் சோமபானம், சோம ரஸம் பற்றிப் பாடியுள்ளனர்.

சோமம் என்னும் மூலிகை குறித்து வெளிநாட்டினர் நிறையவே பிதற்றி உள்ளனர். காரணம் என்னவெனில் இதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்திருந்தால் அதைப் பயிரிட்டு, சோம ரசத்தைப் புட்டியில் அடைத்து கோடி கோடியாகச் சம்பாதித்திருப்பர். ஆகையால் காளான் என்பர்; கொடி என்பர்; இல்லை செடி என்பர்; உளறலுக்கு அளவே இல்லை. அதிலுள்ள 114 துதிகளைத் தவிர இன்னும் ஏராளமான இடங்களில் சோமரசத்தின் பெருமையைப் பாடியுள்ளனர் .

இந்தியாவில் இருந்து ஈரானுக்குச் சென்று பார்ஸி மாதத்தை ஸ்தாபித்த ஜொராஸ்தரும் இதைப் புகழ்ந்து பேசியுள்ளார் பழங்கால உலகில் இவ்வளவு கீர்த்தி பெற்ற செடி கொடி வேறு எதுவும் இல்லை. தென் புற ஆந்திரம், தமிழ் நாடு, கீழ்ப்புற கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை இதன் புகழ் பரவியது

ஒரு மண்டலம் முழுதும் ரிக் வேதம் பாடியும் , வேதத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் வெள்ளைக்கார்கள் வெட்டி முழக்கியுள்ளனர்.

சோம பானத்தின் நன்மைகளை தமிழ்க் கல்வெட்டிலும் காணலாம். ஒருவரை “மனோ சுத்த சோம யாஜி” என்று அழைக்கிறது.

இதன் பொருள் மனதைச் சுத்தப்படுத்தும் சோம யாகம் செய்தவர்.

1.சோம பானம் ஆயுளைக் கூட்டும்

2.மனதைச் சுத்தப்படுத்தும்

3.உற்சாகத்தைத் தரும்

4.இது ஒரு தெய்வீக மூலிகை

5.இதைக் கருடன் கொண்டு வந்து கொடுக்கும்

6.இது முஜாவத் பர்வதத்தில் விளையும்

சோம பானம் பற்றிய 114 துதிகளையும் படித்தவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்; இது போதைப் பொருள் அல்ல என்பது விளங்கும்

உலகில் போதைப் பொருளைப் போற்றி ஆயிரம் ஆண்டுகள் குடித்து/ சாப்பிட்டு வளர்ந்த எந்த இனமும் கிடையாது. இது போதை தரும் குடியாக இருந்தால் இந்துக்களும் அவர்கள் பாடிய வேதமும் அழிந்து போய் இருக்கும். மேலும் கள் போன்ற சுரா பானத்தையும் சோம ரசத்தையும் ஒரு பாடல் ஒப்பிட்டுவேறு காட்டுகிறது.

வெள்ளையர்களோவெனில் பரம்பரைக் குடிகாரர்கள்; போதை மருந்து மன்னர்கள் அடிமைகள்; பாவம் அவர்களுக்கு வேறு பொருள் தெரியவில்லை.அவ்வளவு துதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு அவர்களே வேண்டிய ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்வர்.

சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும். காலையில் சூரியன் உதவுவது போலத் தாவரங்களுக்கு இரவில் சந்திரன் உதவுகிறான் என்று வேதம் பாடுகிறது. இது வெள்ளைக்காரர்களுக்கு விளங்கவில்லை.. ஏன் ஒரே சொல் ஒரு மூலிகையையும்  நிலவையும் குறிக்கிறது என்பது விளங்காததால் அதைத் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் விட்டு விடுவர். நிலவுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பை இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.

7.சோம லதை களைப்பை நீக்கும்

8.மனத் தொய்வை நீக்கும்

9.இது சாவின்மையை—மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும்

இதை மூன்று காலங்களில் மந்திரம் சொல்லிப் பிழிய வேண்டும்

மந்திரம் சொல்லி யாகத்தில் விட வேண்டும்; மந்திரம் சொல்லி சாப்பிடவேண்டும்

இதெல்லாம் குடிகாரர்களோ, போதை மருந்து அடிமைகளோ செய்வதில்லை.

10.சோம மந்திரம் ஒன்று சொல்கிறது:

“எல்லா சக்திகளும் அவனுடையதே

நிர்வாணமாக உள்ளோருக்கு ஆடை அணிவிப்பான்

நோயாளிகளைக் குணப்படுத்துவான்

கண் பார்வையற்றோருக்கு கண் பார்வை அளிப்பான்

ஆண்மை குறைந்தோருக்கு ஆண்மை தருவான்

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் முக்தி தருவான்”

11.”ஓ, பவமான, அழியாத, என்றுமுள உலகில் என்னை வைப்பாயாக. எந்த இடத்தில் அழியாத ஒளியும், புகழும் உள்ளதோ அந்த இடத்தில் என்னை வைப்பாயக.”

பிரார்த்தனை முழுதும் பாஸிட்டிவ் எண்ணங்களுடன் கூடியது.

சோம லதை பற்றி பல “மறை” பொருளுடைய கதைகளும் உள. இதுவும் வெள்ளைகளுக்கு விளங்காமல் பேந்தப் பேந்த முழிக்கின்றன

பிரம்மாவின் மனைவியான காயத்ரீ ஒரு பறவை வடிவத்தில் சென்று அதைக் கொண்டுவரச் சென்றாள். ஆனால் அதைக் காக்கும் கந்தர்வர்கள் தடுத்து விட்டனர். பின்னர் “வாக்” தேவதை சென்றாள் கந்தர்வர்களுக்கு பெண்கள் மீது ஆசை உண்டென்பதால் தாம் செல்வதாக வாக்கு தேவதை சொன்னாள். நீ எப்படி திரும்பி வருவாய் என்று தேவர்கள் கேட்டதற்கு நீங்கள் அழைத்தால் நான் வருவேன் என்றாள் வாக் (சொல்) தேவதை.

இதெல்லாம் அடையாள பூர்வ கதைகள்

சோமக் கொடியை முதலில் பார்த்தபோது யார் முதலில் சாப்பிடலாம் என்று போட்டி ஏற்பட்டது. ஒரு பந்தயம் வைப்போம்; முதலில் யார் ஓடிச் செல்கிறார்களோ அவருக்கே என்று முடிவு செய்தனர். வாயுதேவன் முதலிலும் இந்திரன் இரண்டாவதாகவும் வந்தான். முதலில் இந்திரன், நிறைய பங்கு கேட்டான். வாயு மூன்றில் இரண்டு பங்கைச் சாப்பிட்டது. இந்திரனுக்கு நாலில் ஒரு பங்கு கிடைத்தது.

இப்படிப் பல அடையாள பூர்வ கதைகள்.

எங்கு எங்கு விளங்கவில்லையோ அங்கு எல்லாம் விநோத வியாக்கியானம் செய்வர் வெள்ளையர்.

சங்கத் தமிழ் நூல்களில் அமிர்தம் பல இடங்களில் வருகிறது. அருந்ததி, இந்திரன், வருணன் முதலியோரைக் குறிப்பிடுகிறது. ஆனால் சோம லதை பற்றிய பேச்சே இல்லை. ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதற்குப் பின் எழுந்த சங்கத் தமிழ் நூல்களில் சோம லதை பற்றி எதுவும் சொல்லவில்லை. வேள்வி தொடர்பான வேறு பல சொற்கள் காணப்படுகின்றன.

இந்து இளைஞர்கள் இந்த சோம லதையைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்; இதன் மூலம் உய்வும் பெறலாம்; பணமும் கிடைக்கும்..

***

சோமாஸ்கந்த

சிவனுடன், உமையுடன் சேர்ந்து ஸ்கந்தன்/ முருகன் அமர்ந்திருக்கும் உருவம் சோமாஸ்கந்தர் எனப்படும்; தென்னிந்தியக் கோவில்களில் மட்டும் இந்த மூர்த்தி காணப்படுகிறது .

சம்ஸ்க்ருத சந்தி/ புணர்ச்சி விதிகளின்படி ,

ச+உ =சோ (ச , உமா, ஸ்கந்த)= சோமாஸ்கந்த ;

சிவனுக்கும் உமாதேவிக்கும் நடுவில் முருகப்பெருமான் அமர்ந்த இந்த உருவங்களை உலகின் பெரிய மியூசியங்களிலும் மதராஸ் மியுசியத்திலும் தமிழ் நாட்டுக்கோவில்களிலும் கண்டு மகிழலாம் ; தமிழன் கண்டுபிடித்த நடராஜர் போல இதுவும் ஒரு விக்கிரகம் ஆகும்.

***

சிருங்கேரி

சிருங்கேரி புனிதத்தலம்,  நாட்டின் நான்கு திக்குகளில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடங்களில் தென்பகுதி மடம் ஆகும் துங்கா நதியின் கரையில் அமைந்துள்ளது . கிழக்குத் திக்கில் துங்காவோடு கலக்கும் நதியே பத்ரா. இதை துங்கபத்ரா என்று அழைக்கிறோம் . இங்குள்ள சாரதாம்பிகை கோவில் மிகவும் புகழ்பெற்ற ஸ்தலம் ஆகும்.  இங்கு சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் ஆதி சங்கரர். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள்.ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரையாக வரும் சங்கராச்சாரியார்கள் மூலம் இந்து மத   சேவை ஆற்றிவரும் சிருங்கேரி மடத்துக்கு தற்போது ஜகத் குரு சங்கராச்சார்ய ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமிஜி தலைமை  வகிக்கிறார். அடுத்த பட்டத்துக்கு அவர் ,  ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளை நியமித்துள்ளார்; கர்நாட கத்திலும் கேரளத்திலும் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்  . உலகின் முக்கிய நகரங்களில்  அவர்களுடைய பக்தர்கள் யாக யக்ஞங்களை நடத்தி வருகின்றனர் .  சிருங்கேரி மடத்திலும் சாரதாம்பிகை கோவிலிலும் தினசரி பூஜைகள் சிறப்பா க நடந்து வருகின்றன.

***

சிருங்கார  ரசம்

சிருங்கார  ரசம் (शृङ्गाररस).—என்பது நவரசங்களில் ஒன்று;

காதல் மற்றும் காம உணர்வுகளை முக பாவம், அபிநயம் மூலம் பரத நாட்டியத்திலும் நாடகங்களிலும் காணலாம் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் இயற்றிய நாட்டிய சாஸ்திரத்தில் சிருங்காரம் உள்பட எட்டு ரசங்களை மட்டுமே பட்டியலிட்டார்; தமிழில் தொல்காப்பியரும் இதை அப்படியே மொழிந்தார் ; மிகவும் பிற்பட்ட  காலத்தில் சாந்தம் என்னும் ரசத்தைச் சேர்த்து ஒன்பது ஆக்கினார்கள்.

முதலில்  பரத முனி கூறிய எட்டு ரசங்கள்

சிருங்காரம் ;

ஹாஸ்யம்

கருணை; 

ரௌத்ரம்/ கோபம்;

வீரம்;

பயம்,

பீபஸ்தம் ; அருவெறுப்பு 

அற்புதம்/ வியப்பு

கடைசி ரசம் சாந்தம்

***

ஸ்தாணு

சிவ பெருமானின் பெயர்;  அசையாத, உறுதியான , நிலையானவர் என்பது பொருள்; பிரளயம் வரை அவர் இப்படி தியான நிலையில் இருந்து அழிக்கும் காலத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார் . தமிழ் நாட்டில் சுசீந்திரத்திலுள்ள புகழ்பெற்ற கோவில் தான் + மால் + அயன் = தாணுமாலயன் கோவில் ஆகும்; மும்மூர்த்திகளும்  ஒருவரே; மூன்று பணிகளைச் செய்ய  மூன்று கோலங்களை பூணுகிறார் என்பதைக் காட்டுகிறது.

To be continued…………………….

Tags- ஷ்யாமா சாஸ்திரி, ஸ்தாணு, சிவா, சோமாஸ்கந்த சிந்து நதி, நவரஸம், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, இந்து மத கலைச்சொல் அகராதி, part -98

Leave a comment

Leave a comment