HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 101; இந்து மத கலைச்சொல் அகராதி-101 (Post 16,106)

Written by London Swaminathan

Post No. 16,106

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

Part 101

ஸ்வயம்பு

சுயமாக , அதாவது தாமாக  உருவாகும் சிலைகள் ; பல பாறை வடிவங்களும் கற்களின் வடிவங்களும் இயற்கையாகவே கடவுள் உருவங்கள் போல இருத்தல்; பாணலிங்கம், சாளக்கிராமம் முதலி யன இயற்கை யில் நதிகளில் கிடைக்கின்றன ; இவைகளை சிவன், விஷ்ணு வடைவங்களாக வணங்குவர் ; கயிலாயம் , அமர்நாத்திலுள்ள ஐஸ் லிங்கம் முதலியன இயற்கையில் காணப்படும் சிவ லிங்க வடிவங்களாகும் . இவை தவிர பூமிக்கடியில் நிகழும் அதிர்வலைகளால் பூமிக்கு மேலே வடிவங்கள் தோன்றுவதும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது . பிரம்மாவுக்கும் ஸ்வயம்பூ என்று பெயர்

ஸ்வயம்பூ லிங்கம் தோன்றுவது எப்படி?

ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்..

ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!

Science behind Swayambhu Lingams

A letter published in London Times newspaper on 20th May, 1994 explains this. Anne C.A. Silk wrote this letter in reply to a reader’s query. The letter gives some interesting information about “stone growing fields” in Chiltern Hills. (These Hills are not far from London). “There was a local industry of gathering the large flints, some the size of a fist, to sell to local builders by the roadside.

There is a further reason for the ascending mode of flints and rocks worldwide, over and above the fork disturbance proposed by Brian Parker (May 14 letter). This is the natural extremely low frequency (ELF) seismic energy from deep within earth.

Micro seismic activity from faults such as Church Stratton Fault, Mere Fault, Great Glen Fault, sub terranean settling and indeed traffic at roundabouts will generate ELF energy sufficient enough to vibrate rocks and stones to the surface.

It is of relevance to note that ELF frequencies from 30 Hz to 300 Hz also cover brain waves in humans”.

***

சுகன்யா

பொது அர்த்தம் – நல்ல பெண் அல்லது  நல்ல அழகு ;இளவரசி சுகன்யா ஒரு சமயம் தந்தையுடன் காட்டுக்குச் சென்ற போது ஸ்யவன முனிவர் ஆஸ்ரமத்துக்குச் சென்றனர் ; அங்கு புற்று போல வளர்ந்திருந்த ஓரிடத்தில் இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தவுடன் விளையாட்டாக அதைக் குத்தவே புற்று மண்ணில் தவம் செய்துகொண்டிருந்த ஸ்யவன முனிவரின் கண்கள் குருடாயின. இந்தத் தவற்றுக்குப் பிராயச்சித்தமாக  சுகன்யாவின் தந்தை சர்யாதி அவளை முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். ஸ்யவன முனிவர் கிழவர் ; அஸ்வினி தேவர்கள் ஸ்யவன முனிவருக்கு இளமையைக் கொடுத்தனர் .

***

ஸ்வேதாஸ்வதர உபநிஷத்

 கிருஷ்ண-யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் இது . ஸ்வேதாஸ்வதர முனிவர் போதனை இதில் உள்ளது சிவா பெருமானையும் ருத்ரனையும் புகையும் இந்த உபநிஷத் , பிற்காலத்தில் எழுதப்பட்டது

சிவா பெருமானை உயர்த்தி பிரம்மன் ஆக — உயர்ந்த கடவுளாக – காட்டுகிறது . வேதாந்த ஸாங்க்ய விஷயங்கள் இதில் காணப்படுகிறது . ஆறு அத்தியாயங்களைக் கொண்டது .ஸ்வேதாஸ்வதர என்பதன் இன்னுமொரு பொருள் வெள்ளைக் குதிரை என்பதாகும் .

சில எடுத்துக் காட்டுகள்:-

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை

வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி  தஸ்மை 

தம் ஹ தேவம்  ஆத்மபுத்திப்ரகாசம்  முமுக்ஷுர்வை

சரணமஹம் ப்ரபத்யே

–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19

யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை,  அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர்  ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.

யோ யோனிம் யோனிமதி  திஷ்டத்யேகோ 

யஸ்மின்னிதம்  ஸம் ச  வி சைதி ஸர்வம்

தமீசானம் வரதம் தேவமீட்யம்    

நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11

எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின்  பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை,  போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை  அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.

ஆதி சங்கரர் இந்த உபநிஷத்துக்கு உரை எழுதவில்லை.

***

ஸ்வர்கம்

தமிழ் மொழியில் இதைத் துறக்கம் என்பர் ; நாகலோகம் மேலுலகம் தேவ லோகம் என்ற பொருளைகளும் உண்டு. இந்திரன் இதன் தலைவர் புண்ணியம் செய்தொரர் இங்கு இன்பத்தை அனுபவித்துவிட்டு பூமிக்குத் திரும்புவார் கள். ஆனால் இங்கு பார்வதியின் சாபத்தால் செக்ஸ் தடை செய்யப்பட்டுஉள்ளது . மேரு மலை உச்சியில் இருப்பதாகவும் சில கருதுகிறார்கள் ஸ்வர்க்க என்ற எழுத்துக்களுக்கு ஒருவித கணிதத்தில் 21 என்ற பொருளும் உண்டு  . சங்க காலாட் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை இருந்ததால் மேற்கூறிய ட்கமிழ்ச் சொற்களை பயன்படுத்தியுள்ளனர்.

 . ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா ஆகியோர் இங்கு நடனமாடி எல்லோரையும் மகிழ்விப்பார்கள் என்பது புராணம் சொல்லும் செய்தி .

***

ஸ்வஸ்திகா

 1200 YEAR OLD SWASTIKA WELL NEAR TRICHY

SWASTIKA IN INDUS VALLEY SEALS

இந்துக்களின் புனிதத் சின்னம் ; மணங்களாம் சுபம் என்று பொருள்; சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படுகிறது உலகின் பழைய கிரேக்க, ரோமானிய பாண்டங்களிலும் இந்தச் சின்னம் உள்ளது ; ஆயினும் இன்றுவரை இந்துக்கள் மட்டுமே இதை 4500 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர் . சம்ஸ்க்ருத தமிழக கல்வெட்டுகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றே துவங்குவம் .

மாக்ஸ்முல்லர் , ஜெர்மானியர்களும் ஆரியர்கள் என்று சொன்னதை மனதில் கொண்டு ஹிட்ட லரும் ஜெர்மனியின் கொடி மற்றும் அரசாங்க   சின்னங்களில் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார் . ஆகையால் மேலை உலகம்  முழுதும் இந்த சின்னத்தத் த்தை தடை செய்துவிட்டார்கள்; எங்காவது இந்த சின்னத்தைக் கண்டால்  கூச்சல் போட த்துவங்குவார்கள் . சில கட்டடங்கள் இயற்கையாக இந்த வடிவத்தில் இருந்ததையும் இடித்து வேறு வடிவத்தில் கட்டிய செய்திகளை அ வ்வப்போது பத்திரிகைகளில் படிக்கலாம் . இந்துக்களுக்கு இது சுப சகுனம் என்பதால் கல்யாணப் பத்திரிகைகள் , அழைப்பிதழ்களிலும் போடுவார்கள்; மேலை நாட்டினருக்கோ இது சிம்ம சொப்பனம்!

1200  ஆண்டுகளுக்கு  முன்னால் திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் தந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சியில் சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு தோண்டி அமைக்கப்பட்டது . அதில் ஒரு பாடல் கல்வெட்டும் உள்ளது  . மேலை நாட்டில் இந்த வடிவத்தில் எந்த அமைப்பு,  கட்டிடம்,  குளம், கிணறு இருந்தாலும் மக்களும் அரசாங்கமும்  சேர்ந்து இடித்துத் தள்ளிவிடுவார்கள்! ஹிட்லர் மீது அவ்வளவு கோபம், வெறுப்பு  .

–Subham— .

Tags– ஸ்வஸ்திகா, துறக்கம், ஸ்வயம்பூ, லிங்கம், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL -101; இந்து மத கலைச்சொல் அகராதி-101

Leave a comment

Leave a comment