WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,119
Date uploaded in London – 23 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சீன ஆக்கிரமிப்பா? பலூசிஸ்தானின் கவலை!
ச. நாகராஜன்
China Pakistan Economic Corridor – CPEC என்பது 3000 கிலோமீட்டர் நீளமுடைய சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கடலிடைப் பாலம். இது வணிகத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு தாழ்வாரம்.
இதை பலூசிஸ்தானுக்கான ஆக்கிரமிப்பிற்கும் சீனா பயன்படுத்தப் போகிறது என்பதை பலூசிஸ்தான் மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.
பலூசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கவும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் மிர் யார் பலூச், “பாகிஸ்தான் என்பது பலூசிஸ்தானில் ஒரு விருந்தாளி தான். இன்னும் சில வருடங்களில் இங்கிருந்து பாகிஸ்தான் போய்விடும்” என்று உறுதிபடக் கூறுகிறார். சீனா பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக ராஜீய ரீதியில் பயன்படுத்துகிறது என்று அவர் குற்றமும் சாட்டுகிறார்.
சீனாவும் பாகிஸ்தானும் சட்டத்திற்கு எதிராக பலூசிஸ்தானை ஆக்கிரமித்திருப்பதாகவும் அதனுடைய ஆதாரவளங்களைக் கொள்ளையடித்து வருவதாகவும் இதற்கு – CPEC ஐப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
பலூசிஸ்தானில் பாகிஸ்தானும் சீனாவும் செய்து வரும் செயல்களை உலகளாவிய விதத்தில் தெரியப்படுத்தப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். பீகிங் பாகிஸ்தானுக்கு தொழில்நுட்பம், நுண்ணறிவு மற்றும் இதர பல விதங்களில் உதவி வருவதாகவும் தெரிவித்த அவர் பலூசிஸ்தானின் தேவைகளை அந்த இரு நாடுகளும் அலட்சியப்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இந்தியா ஐ.நா.வில் சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்களை சுட்டிக் காட்டி அவற்றைத் தடுக்க முனைந்திருக்கிறது.
இந்த நிலையில் பலூசிஸ்தானை விடுவிக்கப் போராடும் பலூசிஸ்தான் விடுதலை இயக்கப் பிரதிநிதிகள் இந்தியாவின் வெளி விவகார மந்திரி ஜெய்சங்கரிடம் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். பலூசிஸ்தானில் CPEC தனது ராணுவ வீரர்களை நிரந்தரமாக இருக்க வைக்கத் திட்டமிடுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காந்தாரம் என்பது பாரதத்தின் பகுதியாக முன்னர் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மஹாபாரதத்தில் வரும் சகுனி இங்கு ஆண்ட மன்னன் என்பதையும் அனைவரும் அறிவர்.
வங்காளத்தில் ‘மா காளி கி கஸம்’ என்று காளியின் பெயரால் உறுதிமொழி கூறுவது போல ஆப்கானிஸ்தானத்தில் இன்றளவும் ‘ஹிந்து கா கஸம்’ என்றே உறுதிமொழி கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் ராணுவ வீரரும் நிர்வாக அதிகாரியுமான கர்னல் ஸ்லீமன் தனது அபிப்ராயத்தை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்
துகீஸ் என்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருந்த மத்யபிரதேசத்தில் கிரிமினல்களுக்கு எதிராக நடந்த ஒரு வழக்கை அவர் பார்வையிட்டிருந்தார். அவர் தனது கனவில் எலும்புக்கூடுகளின் குவியலையும் அது எப்படி ஏற்பட்டது என்பதையும் கண்டார்.
அவர் எழுதினார்: “எனது வாழ்க்கையில் நூற்றுக் கணக்கான கேஸ்களை பார்த்திருக்கிறேன். தனது சொத்து, உயிர், கௌரவம் ஆகிய அனைத்தும் ஒரு பொய் சொன்னால் போதும் என்ற நிலையில் உள்ள கேஸ்கள் அவை. இப்படிப்பட்ட கேஸ்களில் ஒரு ஹிந்து ஒருபோதும் பொய் சொன்னதில்லை. பொய் சொல்லமாட்டான்.”
இது தான் அவர் கொடுத்த அறிக்கை. 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்துவின் வாழ்க்கை முறை சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததை அவர் அறிக்கையிலிருந்து உணரலாம்.
அப்படிப்பட்ட ஹிந்துத்வத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் காந்தாரம் தனது உறுதிமொழியை ‘ஹிந்து கா கஸம்’ என்று இன்றளவில் சொல்லி வருவதில் ஆச்சரியமே இல்லை.
பலூசிஸ்தானை காப்பது நமது கடமையும் கூட; ஏனெனில் கொல்லப்புற வழியாக வரும் சீனாவையும் அதற்கு வழி விடும் பாகிஸ்தானையும் நம்ப முடியாது அல்லவா?
**
ஆதாரம், நன்றி : கொல்கத்தா வார இதழ் ட்ரூத் தொகுதி 94; இதழ் 16
31-7-26 தேதியிட்ட இதழ் (Truth, English Weekly)