பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)

Written by London Swaminathan

Post No. 16,122

Date uploaded in London – 23 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாபநாசம் சிவன் மூன்று விஷயங்களால் பெருமை பெற்றார் : 1.தமிழில் பாடும் கீர்த்தனைகளை இயற்றினார் ; 2.திரைப்படங்கள் மூலம் கர்நாடக இசையையும் தமிழையும் வளர்த்தார்; 3. தாமே நடித்தும் நாடகங்களுக்கு இசை அமைத்தும் திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் புகழ்பெற்றார்.

இறைப்பற்றும் தேசப்பற்றும் மிக்க பாபநாசம் சிவன் அவர்கள் தமது 83-வது அகவையில் 1.10.1973 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவருடைய பாடல்களை ஆறு தொகுதிகளாக இவருடைய புதல்வி ருக்மிணி ரமணி வெளியிட்டுள்ளார்.

லண்டனில் பாபநாசம் சிவன் விழா, 2019 ஆம் ஆண்டு மே மாதம்  26-ஆம் தேதி நடந்தது . நான் அவர் பற்றி சிறப்புரை ஆற்றினேன் .

1

மோஹன ராகத்தில் காபாலி பற்றி அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது ; அதன் வரிகள் கொஞ்சசமாவது நினைவிருந்தால் சொல்லுங்கள்.

2

சிவ பெருமானை நம்பியவர் கெட்டுப்போனதில்லை என்று ஹிந்தோள ராகத்தில் அவர் பாடிய பாடலையும் பலரும் பாடிப்  பரப்பியுள்ளார்கள் ; அது என்ன பாடல் ? முதல் சில வரிகளைச் சொல்லுங்கள் போதும்.

3

நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள் — என்ற வரியை பாபநாசம் சிவன் இயற்றிய எந்தப்பாடலில் கேட்கலாம்?

4

அந்தக்காலத்திலேயே இவர் இயற்றிய பாடல்களை எம் கே தியாகராஜ பாகவதர் பாடியதால் இருவரும் புகழடைந்தனர் .திருநீலகண்டர் திரைப்படத்தில் குந்தளவராலி ராகத்தில் பாடினார். முதல் வரியாவது நினைவிருக்கிறதா ?

5

தமிழ் திரைப்படத் துறையின் தொடக்க காலத்தில் (1930 மற்றும் 1940களில்) கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டு பல புகழ்பெற்ற பாடல்களை எழுதினார்; இதனால்  “தமிழ் தியாகையா” என்றும் அழைக்கப்பட்டார் . அவர் எத்தனை திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதினார்; அவர் எழுதிய பாடல்கள் எத்தனை ?

6

அவர் பாடல்கள் இயற்றிய சில திரைப்படங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா ?

7

பாபநாசம் சிவன் கி.பி.1890 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26 ஆம் நாளில் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள போலகம் என்னும் சிறிய கிராமத்தில் இராமாமிர்த அய்யருக்கும், யோகாம்பாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். பாபநாசம் சிவனின் இயற்பெயர் “இராமைய்யா” என்பதாகும். பின்னர் என் இவரை பாபநாசம்  சிவன் என்று அழைக்கிறோம்?

8

இராஜ முக்தி படத்தில் இவர் மஹாத்மா காந்தியைப்பற்றி இயற்றிய பிரபல பாடல் என்ன ?

9

கிருஷ்ணா முகுந்தா முராரே- என்ற பாடலை எந்தப்படத்துக்காக இயற்றினார் ?

**************************************************

London Swaminathan paying tributes to Sri Papanasam Sivan on 26, 2019 in a meeting held at London Mahalakshmi Temple organised by Mr and Mrs Prabhakar Kaza.

விடைகள்

1.காபாலி -ராகம் மோஹநம் தாளம் ஆதி

பல்லவி

காபாலி, கருணை நிலவுபொழி வதந மதியனொரு (காபாலி)

அனுபல்லவி

ஆபால கோபாலம் ஆழிசூழ் தலத்தவரும்

பூபாலரும் அஷடதிக் பாலரும் போற்றும் அத்புத (காபாலி)

சரணம்

மதிபுனல் அரவுகொன்றை தும்பை அறுகுந்

மத்தைபுனை மாசடையான்

விதிதலைமாலை மார்பன் உரித்தகரியின்

வெம்புலியின் தோலுடையான்

அதிர முழங்கும் உடுக்கையும் திரிசூலமும்

அங்கியும் குரங்கமும் இலங்கிடு கையான்

த்யுதிமிகு திருமேனி முழுதும் சாம்பல்

துலங்க எதிர்மங்கையர் மநங்கவர் ஜகந் மோஹந (காபாலி)

****

2,நம்பிக்கெட்டவர் எவரய்யா

ராகம்: ஹிந்தோளம்                                        

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||

உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||

அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்

அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||

ஒன்றுமே பயனில்லை என்று

உணர்தபின் பலனுண்டேன்பார்

ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்

இந்நிலை எய்துவதுருதி  இதை மறந்தார்

அன்று செயலழிந்தல  மறு பொழுது

சிவன் பெயர் நாவில் வாறதே

ஆதலினால் மனமே இன்றே

சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||

***

3.ராகம்: கல்யாணி

உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை 

என்னையோர் வேடமிட்டு உலகநாடக அரங்கில் ஆடவிட்டாய் (அம்மா)

இனி ஆடமுடியாது(என்னால்) திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க | |

நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள்

என்மன கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் | |

****

4.தீன கருணாகரனே

தீன கருணாகரனே நடராஜா  நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும்

என்னையும் இறங்கி அருளும்

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||

மீனலோசனி மணாளா

தாண்டவமாடும் சபாபதே

ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||

ஆதியந்தம் இல்லா ஹரனே

அன்பர் உள்ளம் வாழும் பரனே

பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே

****

5. சுமார் 120 திரைப்படங்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை 1933 முதல் 1960 வரை எழுதியுள்ளார்.

***

6.பாபநாசம் சிவன் பணியாற்றிய முக்கிய திரைப்படங்கள்: சீதா கல்யாணம் (1934)பக்த குசேலா (1936)சிந்தாமணி (1937)அம்பிகாபதி (1937)சேவாசதனம் (1938)அசோக்குமார் (1941)சிவகவி (1943)ஹரிதாஸ் (1944)இரும்புத் திரை.

****

7.பாபநாசம் சிவன் முனிவர் போல் புலித்தோலணிந்து கோவில்களுக்குச் சென்று பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த காரணத்தினால் “சிவன்” என்று அழைக்கப்பட்டார். மேலும், பாபநாசத்தில் தங்கிய பொழுது, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சாம்பசிவ ஐயர் இவரைப் ‘பாபநாசம் சிவன்’ என்று அழைக்க, அன்று முதல் பாபநாசம் சிவன் என்ற பெயர் இசையுலகில் வழங்கப்படலாயிற்று.

***

8. காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை

படம்: இராஜமுக்தி

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1948

காந்தியைப் போலொரு

சாந்த சொரூபனைக்

காண்பதும் எளிதாமோ  – மஹாத்மா  (காந்தியை)

மாந்தரிலே

ஞான யோகம் மேவும் – தவ

வேந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா

மாந்தரிலே

சுயநலம் சிறிதும் இல்லா

அஹிம்சை தனிலே புத்தரவர்

ஆத்ம சோதனையில் யேசு நாதரவர்

அறுபகையும் வென்ற கர்ம சீலரவர் – நமது

ராஜ்ஜியத்தாய் இந்திய நாட்டிலவதரித்த

குழந்தை உள்ளமும்  – அன்பு

கனிந்த மொழியும் கொண்டு

கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்

முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்

தவழப் பகைவரும் கண்டஞ்சும் சுத்தன் – இனிமேல்  (காந்தியை)

***

 9.மன்மத லீலையை வென்றார் உண்டோ?

திரைப்படம் : ஹரிதாஸ்

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1944

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு

என்மதி மயங்கினேன் நான்

என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

***

10. கிருஷ்ணா முகுந்தா முராரே

திரைப்படம் : ஹரிதாஸ்

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

இசை: ஜி. இராம நாதன்

பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1944

கிருஷ்ணா முகுந்தா முராரே – ஜெய

கிருஷ்ணா முகுந்தா முராரே

கருணா சாகர கமலா நாயக

கனகாம்பர தாரி கோபாலா

காளிய மர்த்தன கம்சனி தூஷன

கமலாயத நயனா கோபாலா

குடில குண்டலம் குவலய தளநீலம்

மதுர முரளீ ரவலோலம்

கோடி மதன லாவண்யம்

கோபி புண்யம் பஜகோபாலம்

கோபி ஜன மன மோகன வியாபக

குவலய தள நீலா கோபாலா

—subham—

Tags- பாபநாசம் சிவன் பாடல்கள் , 10 கேள்விகள் ,

Leave a comment

Leave a comment