
Written by London Swaminathan
Post No. 16,128
Date uploaded in London – 25 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தந்தை பெயர் – ராமச்சந்திர வாதுளர்; தாயார் -கமலநாராயணி;
பிறந்த ஊர் -மன்னார்குடி; வளர்ந்த ஊர்- ஊத்துக்காடு;
சங்கீத குரு-நீடா மங்கலம் நடேச ரத்தின பாகவதர், கிருஷ்ண பரமாத்மா;
வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765)
SWAGATHAM KRISHNA SONG.
1
கிருஷ்ணரின் நடனத்தைப் பற்றி இவர் பாடிய பாடலை பித்துக்குளி முருகதாஸ் குரலில் கேட்டு மகிழ்கிறோம் ; அது என்ன பாடல் ?
2
அதே பித்துக்குளி முருகதாஸ் கிருஷ்ணரே வருக, வெல்கம் டு கிருஷ்ணா என்று சம்ஸ்க்ருத மொழியில் சொல்லும் பாடலும் மிகவும் பிரசித்தம்;அது என்ன பாடல்?
3
கானடா ராகத்தில் இவர் பாடிய பாடல்தான் அந்த ராகத்தையே நினைவு வைத்துக்கொள்ள உதவும் பாடல்; அந்தப் பாடல் நினைவு இருக்கிறதா ?
4
அவர் எந்தெந்த கடவுளரைப் பாடிப் பரவினார் ?
5
ஊத்துக்காடு வேங்கட கவி எத்தனை பாடல்களை இயற்றினார் ?
6
தாயே யசோதா பாடலின் முழு வடிவம் என்ன ?
7
வேங்கட கவியின் பாடல்களை நமக்கு தமிழ் ஆங்கிலம், சம்ஸ்க்ருத மொழிகளில் தரும் வெப்சைட் எது ?
8
ஷண்முகன்/ முருகன் மீது இவர் பாடிய பாடல் எது ?
9
திரைப்படங்களில் ஊத்துக்காடு வேங்கட கவி பாடல்கள் இடம்பெற்றனவா ?
10
கண்ணன் வருகின்ற நேரம் – என்ற இவருடைய பாடல் அண்மைக்காலத்தில் பிரபலமாகிவிட்டது. பாடலின் முழு வரிகள் என்ன ?
***
விடைகள்
1.ஆடாது அசங்காது வா கண்ணா (உன்)
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுதே எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா (உன்)
ஆடலை காண தில்லை அம்பலத்திறைவனும்
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்
ஆதலினால் சிறு யாதவனே ஒரு மாமயில் இறகணி மாதவனே நீ
சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே மயில்
பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிறு கை இறைவன் ஏறு மயிலொன்று தன்
பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே
பாடி வரும் அழகா உன்னை காண
வரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திரு நடனம்
கண் பட்டு போனால் மனம் புண்பட்டு போகுமே.
ஆடாது அசங்காது வா கண்ணா (உன்)
****
ராகம் : மோகனம்
2.ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
இக ஸ்வாகதம் கிருஷ்ணா ||
மதுராபுரி சாதனா மிருது வதனா
மதுசூதனா( இக ஸ்வாகதம் கிருஷ்ணா )
போகதாப்த சுலபா சுபுஷ்பா கந்த கலபா
கஸ்துரி திலமஹிபா மமகாந்தனந்த கோபகந்த (ஸ்வாகதம் கிருஷ்ணா)
முஷ்டிகாசூர சாநூரமல்ல
மல்லவிசாரத மதுசூதனா (குவலயபீட்ட)
மர்தன காளிங்கனர்தன
கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவ
சிஷ்டஜனபால சங்கல்பகல்ப
கல்ப சதகோடி அசமபராபாவ
தீரமுநிஜன விஹார மதன
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா
மதுர மதுர ரதிசாகச சாகச
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ
ஸ ரி க ப த
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ
ஸ ஸ ரி ரி க க ப த
ஸ் ஸா த ப ப க ரி ரி
ப க ரி ஸ த ஸ
ஸ ரி க ரி க ப க ப த
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ
தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம் தகஜனுதோம்
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ
தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம் தகஜனுதோம்
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ
தகதறி குகுந்தன கிடதகதீம் (8)
(ஸ்வாகதம் கிருஷ்ணா )
****
கானடா ஆதி
3.அலைபாயுதே கண்ணா ! என் மனம் மிக
அலைபாயுதே உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
நிலைபெயராது சிலை போலவே நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா – ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா
கதறிமனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ – குழ-
லூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
****
4. அவரது பாடல்களை ஆராயும் நிலையம் இந்தப் பட்டியலைக் கொடுக்கிறது:-
அகோர வீரபத்ரர் ,ஆஞ்சநேயர், தேவி, கிருஷ்ணன், நரசிம்ஹர் , பார்த்தசாரதி, ராமர்,
ரங்கநாதர், சரஸ்வதி, ஷண்முக, சவுரிராஜா (விஷ்ணு), சிவன், ஸ்ரீனிவாச, சூர்யன் , தியாகராஜ (சிவ)
விநாயக, விஷ்ணு, விட்டல.
***
5.சுமார் 400 முதல் 500 பாடல்கள் இருக்கும் என்று சங்கீதக் கலைஞர்கள் சொல்கிறார்கள். இவை தமிழ் சம்ஸ்க்ருதம் மராட்டி மொழியில் அமைந்துள்ளன.
***
தோடி ஆதி
6.தாயே யசோதே உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
தையலே கேளடி உந்தன்ப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யயயா நான் கண்டதில்லை
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடிசைந்து வர
நீல வண்ணக் கண்ணனிவன் நர்த்தமாடுகிறான்
பாலனென்று தாவியணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டீ
பாலனல்லடி உன் மகன் ஜாலம்மிக செய்வதெல்லாம்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக வாகுதடீ
அன்றொரு நாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த் வெண்ணையை அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தானே
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி நாங்கள் என்ன செய்வோமடி
எங்கள் மனை வாழவந்த நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனா நதிப் போகையிலே கண்ணன்
சங்கையுமில்லாதபடி பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
உங்கள் மகன் நான் என்றான் சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி எண்ணித் தவிக்கின்றார் நாங்கள் என்ன செய்வோமடீ
தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்
கட்டின கன்றையவிழ்த்து எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் மாட்டிக் கொண்டான்
விட்டு விட்டு அம்மே என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் அம்மா என்றதே
கிட்டின குவளையோடும் எட்டினால் உன் செல்வமகன்
பட்டியில் கறவையிடம் பாலையூட்டுறானடி
சுற்றி சுற்றி என்னை வந்து அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து மெத்தவும் வளர்த்து விட்டாய்
இத்தனை அவனைச் சொல்ல குத்தமில்லையேயடி
வெண்ணை வெண்ணை தாருமென்றான் வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும் என்று கண்ணடிக்கிறான்
வண்ணமாய் நிருத்தமாடி மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்
பண்ணிசையும் குழலூதினான் கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து வம்புகள் செய்தான்
பெண்ணினத்துக்கென்று வந்த புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணி உனக்காகுமடி கண்ணியமாய்ப் போகுதடீ
முந்தா நாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன் தான் அடி யசோதே
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினானடி
***
7.இந்த அருமையான இலவச சேவையைச் செய்து வருவோர் ஊத்துக்காடு வேங்கட கவி ஆராய்ச்சி நிலையம் ஆகும் ; அதை நடத்துவோர், உதவுவோர் விவரங்களையும் பாடல்களையும் கீழ்கணட இணைய தளத்தில் காணலாம்.
***
8.அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம்அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்!
பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம்
அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்!
அனுபல்லவி
இசையாறும் குழல் கொண்டு வந்தான் – இந்த
ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்;
திசை தோறும் நிறைவாக நின்றான் – என்றும்
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்.
எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
சரணம்
அசைபோடும் ஆவினங்கள் கண்டு – இந்த
அதிசயத்தில் சிலை போல நின்றதுவும் உண்டு;
நிஜமான சுகம் என்று ஒன்று – இருந்தால்
ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று [1]
இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம்அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்!
***
8.சேனாபதே நமோஸ்துதே (கெளல ராகம் )
தீநார்த்தி பஞ்ஜன சரவணபவ சிவ குரு குஹ தேவ
தானவ சம்ஹார வேல
சக்த்யாக்ஷி பால ச்ருங்கார
புலிந்த கன்யா மனமோஹன லோல
பூத கணாதி சேவித பால
சனக சனந்தனாதி முனிகண சன்னுத
ஷண்முக ஞான தயாபர சிவ
சேனாபதே நமோஸ்துதே
***
9.ஊத்துக்காடு வேங்கட கவி இயற்றிய புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப் பாடல்கள் சில தமிழ்த் திரைப்படங்களில் பின்னணி இசையாகவும், நடனக் காட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- அலைபாயுதே கண்ணா (Alai Payuthey Kanna):
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே‘ (2000) திரைப்படத்தின் தலைப்பு மற்றும் விளம்பரக் காட்சிகளில் இவரின் புகழ்பெற்ற ‘அலைபாயுதே கண்ணா’ பாடல் (கானடா ராகம்) பின்னணியில் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது. [1, 2, 3] - அசைந்தாடும் மயிலொன்று (Asaindhadum Mayil):
இவருடைய இந்த அழகிய பாடல் பல ஆவணப்படங்களிலும், பாரம்பரிய செவ்வியல் மற்றும் குறும்படத் திரைப்படங்களின் பின்னணி இசைத் தொகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. [1] - தாயே யசோதா (Thaye Yashoda):
கண்ணனின் பால் லீலைகளைச் சொல்லும் இப்பாடல் பல திரைப்பட விழாக்கள் மற்றும் கலை சார்ந்த நடனப் படங்களில் இடம்பெற்றுள்ளது - ***
காவடிச்சிந்து திச்ர கதி
10.கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும் – இந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிடையானத்தரம்
ஆனக் குழலிசைக் கேளும் – போன
ஆவியெல்லாம் கூட மீளும்
சல்லச் சலனமிட்டோடும் நதி பாடும்
வனம் தங்கித் தங்கி சுழன்றாடும் – நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோல் என
துள்ளி துள்ளிக் குதித்தோடும் – புகழ்ச்
சொல்லிச் சொல்லி இசைபாடும்
நீலத்தமாலத்தின் கூட்டம் களியாட்டம் தொட்டு
நெஞ்சத்து மாலையின் ஆட்டம் – அந்த
நினைவோ வர நிறமாறினதறவேயற துளிராகிடும்
நேசனினைவினுக்கீடு எங்கும்
நேராது என்றிங்கு பாடு
கண்ணன் நகைபோலும் முல்லை இணையில்லை
என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை – இவை
கனவோ அல நனவோ என கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன் எங்கள்
கண்ணனன்றி வேறு இல்லேன்
நேரம் அறியாத கானம் நீலவானம் இங்கு
நேசன் புகழ்பாடும் மோனம்
நெஞ்சத்தொடு நிறைவானவன் கொஞ்சத் திணையது போலவும்
நேர்ந்திடும் கோடானு கோடி – யுகமும்
நீரும் நானும் சொல்வோம் பாடி
சித்தம் குளிருதே சொன்னால் சொல்லுமுன்னால்
தோணுதே இன்பங்கள் தன்னால்
தெள்ளத் தெளிவாயமுதுற மெள்ளக் குழலது ஊதிடும்
தேவாதி தேவனின் பெயரும் பாட
தெள்ளுதே நாவினில் பாரும்
தாழை மடனீத்து நோக்கும் முல்லை பார்க்கும் என்ன
சௌக்கியமோ என்று கேட்டும் அட
மொழிபேசிட இதுவோ பொழுதெனவே வரு மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் அங்கே
மெத்தப் பேசிப் பேசி நேர்வோம்
–Shubham –
Tags- கண்ணன் வருகின்ற நேரம், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், அலைபாயுதே கண்ணா,
பாடல்கள் ,10 கேள்விகள், ஆடாது அசங்காது வா கண்ணா, தாயே யசோதே,ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா