செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்(Post.16,142)

 Written by London Swaminathan

Post No. 16,142

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்; சதகம் என்றால் 100 பாடல்கள் என்று பொருள்; அனைத்தும் பழங்கால பாண்டிய நாட்டின் எல்லைக்குள் நடந்த  சம்பவங்களையும் அறிஞர்களையும் கவிகளையும் குறிப்பிடுகிறது. 30 பாடல்களை மட்டும் காண்போம்.

பாண்டிமண்டல சதகத்தை இயற்றியவர் மதுரை ஐயம்பெருமாள். http://www.projectmadurai.org/

பண்டிகைகள் செப்டம்பர் 4 கோகுலாஷ்டமிஸ்ரீஜயந்திகிருஷ்ணன் பிறப்பு13 சாமவேத  உபாகர்மா14 விநாயக சதுர்த்தி15 ரிஷி பஞ்சமி19 தூர்வாஷ்டமி23 வாமன ஜயந்தி27 மஹாளய பக்ஷ ஆரம்பம்29 மஹா பரணி.

சுப முகூர்த்த தினங்கள் – செப்டம்பர் 1317,

அமாவாசை 10பெளர்ணமி 26ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் 722;

***

செப்டம்பர் 1 செவ்வாய்க் கிழமை

தென்கும ரிக்கும் வடக்குவெள் ளாற்றுக்குந் தெற்குவரு

மன்புறு திண்டுக்கல் லுக்குங்கா ரைக்காட்டிற் குங்கிழக்கா

யன்புறு சேதுவின் மேற்கான வெல்லைக்கு ளானதெல்லாம்

வன்பெரு மாறன் புரக்கின்ற பாண்டியன் மண்டலமே. (98)

***

செப்டம்பர் 2 புதன் கிழமை

திருமிக்க சேரற் கரசு பெறத்தமிழ் செப்பிடவுந்

தருமிக்கு மிக்கசுத் தித்தமிழ் கொங்கென்று தான்சொலவும்

கருணைக் கடல்நங் கடம்பா டவியிற் கலந்திருக்க

வரிசைப் புலமை செலுத்திய பாண்டியன் மண்டலமே. (93)

***

செப்டம்பர் 3 வியாழக்கிழமை

 கல்லாடம் சிற்றம் பலக்கோவைக் கொப்பக் கடம்பவனத்

தெல்லோருங் கொண்டேத்து வாரலா திந்தமேல் காரிகைக்குத்

துல்லிய சங்கத்தார் கொண்ட வுரைநற சுருதியெனச்

சொல்லிய வேளாளர் சூழ்வதும் பாண்டியன் மண்டலமே. (92)

***

செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை

இடைக்காடர் முன்செல்லப் பின்செலு மீச னிருப்பதுபோல்

தடைக்கான காட்டினில் முட்டையென் றேபெயர் சாற்றிச்செஞ்சொற்

றொடைக்கான பாடல்பொய் யாமொழி யார்தொடுத் தேத்துமடி

மடக்கான பாடல்கொள் செவ்வேளும் பாண்டியன் மண்டலமே. (81)

***

செப்டம்பர் 5 சனிக் கிழமை

தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர் தென்னவன்றன்

கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்

தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து

மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே. (78)

***

செப்டம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை 

ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்

துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்

தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்

வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே. (71)

***

செப்டம்பர் 7 திங்கட் கிழமை

நரதுங்கன் கொண்டாடு முச்சங்கங் கூறுநற் காசிகண்ட

மரதுங்க மேசொல் இலிங்க புராணமந் நைடதஞ்செய்

கரதுங்க சீல னதிவீர ராமனுங் காசினியில்

சரதுங்க ராமனும் வாழ்வது பாண்டியன் மண்டலமே. (66)

***

செப்டம்பர் 8 செவ்வாய்க் கிழமை

அகத்திய ரேவிட வாட்சேபஞ் செய்ததங் கோட்டுமுனி

மிகக்களி கூரப் புலவோர்கள் வாழ்த்த வியன்மதுரைச்

செகத்தர சென்பவன் முன்னேதொல் காப்பியச் செந்தமிழை

மகத்துவ மாயரங் கேற்றிய பாண்டியன் மண்டலமே. (64)

***

செப்டம்பர் 9 புதன் கிழமை

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமுந்

தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்

நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை

வரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே. (60)

***

செப்டம்பர் 10 வியாழக்கிழமை 

அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்

தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்

கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்

வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே. (56)

***

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை BHARATI MEMORIAL DAY

பந்தா முலையுமை தாயென வாரிதன் பால்முழுகத்

தந்தீரம் விட்டுக் கடவாத வாரிதி தானைமுன்னம்

செந்தே னொழுகுங் கடம்பா டவியில் திருக்குளத்தில்

வந்தே யெழுகட லானதும் பாண்டியன் மண்டலமே. (54)

***

செப்டம்பர் 12 சனிக் கிழமை

பாலினும் வெண்ணெ யினுந்தயிர் மீதினும் பட்சம்வைத்த

வேலினுங் கூரிய கண்ணா ளகோதைதன் வீட்டிடத்தே

ஆலினும் வேலையி னுந்துயில் சங்கத் தழகரெனு

மாலிருஞ் சோலை மலையாரும் பாண்டியன் மண்டலமே. (53)

***

செப்டம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை 

மடலுற்ற புட்ப மணிநாச்சி யாரம்மை மாமணஞ்செய்

திடமிக்க வாசை யுடனே புதுவையிற் சென்றுமென்றே

யடல்பெற்ற வேங்கடத் தாருமன் னாரு மழகருந்தென்

வடபத்ர சாயியுந் தாமமர் பாண்டியன் மண்டலமே. (52)

***

செப்டம்பர்  14 திங்கட் கிழமை

தெள்ளிய சங்கப் புலவோரும் வாணியுஞ் செஞ்சடைமே

லொள்ளிய கங்கை தரித்தோருங் கூறி யொரோர்கவிதை

வெள்ளிய செஞ்சொற் றொடர்பா வகையை வியந்துகொண்டு

வள்ளுவர் மாலை பகர்ந்தாரும் பாண்டியன் மண்டலமே. (49)

***

செப்டம்பர் 15 செவ்வாய்க் கிழமை

திருவாத வூரரெம் மாணிக்க வாசகர் தென்னவன்முன்

வெருவாது காட்டு நரிபரி யாய்விற்க மீண்டவைதாம்

நரியாக வைகை நதிபெருக் காய்வரும் நாளிற்சொக்க

ரறியாது போய்மண் சுமந்ததும் பாண்டியன் மண்டலமே. (48)

***

செப்டம்பர்  16 புதன் கிழமை

செய்கை தவத்த சமண்குண் டரையவர் சென்றுசெய்த

துய்யற்கு மங்கைக் கரசி குலச்சிறை யுண்மகிழ்ந்து

சைவத்தை யோங்கச்செய் சம்பந்த ரேட்டைத்தண் ணாற்றெதிரே

வையைக்கு ளேயோடச் செய்தது பாண்டியன் மண்டலமே. (45)

***

செப்டம்பர்  17 வியாழக்கிழமை 

முதியவர் மூவர் தமிழ்கொள் சுழியல் முதிரநெல்லை

துதிசெய் பரங்குன்ற மாடானை காளையார் தூவாப்பனூ

ரெதிர்கொடுங் குன்று புனவாயில் பூவண மேடகமே

மதுரைகுற் றால மிராமேசம் பாண்டியன் மண்டலமே. (44)

***

செப்டம்பர்  18 வெள்ளிக்கிழமை

தணவா வறுபத்து மூவரிற் றாமும் முதன்மைபெற்றுப்

பணவா ரணிகின்ற பெம்மான்பொற் பாதத்தைப் பற்றவைத்துக்

குணமான சைவ நெறிநின்று வாழுங் குலச்சிறையும்

மணமேற் குடியில்வாழ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (43)

***

செப்டம்பர்  19 சனிக் கிழமை

புகுந்த சமயம் விடார்தேரர் ஞானமில் புல்லவரா

லுகந்தவர் போலவர்க் குள்ளாகி யின்மை யொழிக்குமருள்

மிகுந்த சிவனிடத் தன்பாகிப் பூவென மேற்கல்லினால்

மகிழ்ந்தெறி சாக்கியர் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (41)

***

செப்டம்பர்  20 ஞாயிற்றுக் கிழமை 

தேனலர் கொன்றை யணிசிவன் கோயிலைச் செம்பொன்னினால்

தூநல மாகும் பிராகாரங் கோபுரங் தூபிமுத

லூன மிலாது புரிவாயி லாரென்று முள்ளத்திலே

மானத பூசைசெய் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (40)

***

செப்டம்பர்  21 திங்கட் கிழமை

வேட்கையிற் றண்டி யடிகட் கமுதிட வேண்டிவைத்தும்

பாட்பட வேயெடுத் துண்டிடுஞ் சுற்றத்தைப் பற்றறுத்துக்

கோட்புலி யாரென் றிடுபேர்கொண் டார்முன்பு கொண்டுபெற்ற

வாட்படை யாளரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (38)

***

செப்டம்பர்  22 செவ்வாய்க் கிழமை

ஈசனைத் தூது விடுத்தாரைக் காணி னிறப்பனென்று

பேசுவார் முன்னரவ் வன்றொண்டர் நக்கர் பிரான்வரவே

காசுறும் வாளால் வயிற்றைக் கிழித்த கலிக்காமரு

மாசற்ற தொல்குடி வேளாளர் பாண்டியன் மண்டலமே. (37)

***

செப்டம்பர் 23 புதன் கிழமை

பொல்லாச் சமண ரிடுந்துன்ப நீறிட்டுப் போக்கிக்கடல்

கல்லாற் கடந்து படிக்காசு வாங்கிக் கபாடந்திறந்

தெல்லாரும் பேறு பெறத்திருத் தாண்டக மேத்துமையர்

வல்லாள ராகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. (34)

***

செப்டம்பர்  24 வியாழக்கிழமை 

நாமா ரடிமைவே ளாள ரடிமையெந் நாளுமென்று

கோமான் வளவன்முன் கூற வவனுரை கூறித்தென்னன்

பாவாண னாகவந் தாண்டவ னென்று பகருங்கஞ்ச

மாவார் களந்தைப் புகழேந்தி பாண்டியன் மண்டலமே. (33)

***

செப்டம்பர்  25 வெள்ளிக்கிழமை

கடிமணக் கோலஞ்செய் மங்கைநற் கூந்தலைக் கண்டுசிவன்

அடியவர் பஞ்ச வடிக்கா மெனவடி யோடரிந்து

படிமிசைக் கீர்த்தி கொளக்கொடுத் தேயரன் பாற்கருணை

வடிவான மானக்கஞ் சாறனும் பாண்டியன் மண்டலமே. (32)

***

செப்டம்பர்  26 சனிக் கிழமை

பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் பிள்ளைத்தமிழ்

கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக் கோவைமுதல்

தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்

பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே. (30)

***

செப்டம்பர்  27 ஞாயிற்றுக் கிழமை 

தென்றிசை மேலும் வடதிசை தாழவுந் தேவிமண

மன்றுசெய் கின்ற வரனா ரகத்திய வப்பொதிகைக்

குன்றினி லேகு கெனவுந் தமிழ்பொதி கூடல்வெள்ளி

மன்றினில் வந்து சமானஞ்செய் பாண்டியன் மண்டலமே. (4)

இரண்டு பாடல்களில் அகத்தியர் பெருமை

தண்டமிழ் கொண்டு சிவத்தலம் விண்டு தலம்விளக்கி

யெண்டரு முற்சங்க மேறி யிலக்கண லக்யஞ்செய்து

குண்டிகை நீர்கொண்டு காவேரி தந்து கொழுந்தமிழின்

மண்டலங் கண்ட குறுமுனி பாண்டியன் மண்டலமே. (5)

***

செப்டம்பர்  28 திங்கட் கிழமை

உழுதுண்டு வாழ்பவ ரேவாழ் பவர்மற் றுலகிலுள்ளோர்

தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரப்

பழுதின்றி யேகம்ப னாரே ரெழுபது பாடியவர்

வழுவொன்றி லாதவவ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (23)

***

செப்டம்பர் 29 செவ்வாய்க் கிழமை

பொருந்திய சீவில்லி புத்தூரின் மேவிய புண்டரிகத்

திருந்தரு ளேசெய் திடுநாச்சி யாரம்ம னென்பவரைத்

தரும்பெரும் பொன்மதிச் சீர்க்கரு ணைப்பெயர் தாங்குகின்ற

வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (16)

***

செப்டம்பர் 30 புதன் கிழமை

ஒருகவிக் கோரொரு தேங்காய்பொன் னாற்செய் துருட்டிக்கல்வி

பெருகச்செய் நாவலர் வாழக் கொடுத்துப்ர தாபம்பெற்றான்

திருமலி தஞ்சையிற் கோவைத் தமிழ்கொண்டு செல்வமிக

வருதரு வாகிய வாணனும் பாண்டியன் மண்டலமே. (6)

–SUBHAM—

TAGS- செப்டம்பர் 2026 காலண்டர், பாண்டி மண்டல சதகம், பொன்மொழிகள், ஐயம்பெருமாள்.

Leave a comment

Leave a comment