

Written by London Swaminathan
Post No. 16,141
Date uploaded in London – 29 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?
2
மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?
3
இவர் எழுதிய நூல்கள் யாவை ?
4
மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?
5
நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?
6
காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர் யார்?
7
மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?
8
சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?
9
தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?
10
எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை — என்ற பாடலின் வரிகள் என்ன ?
***
விடைகள்

1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)”..
XXX
இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.
மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்
அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார் போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள்.
***
2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே (ராகம்: யதுகுலகாம்போதி, தாளம்: ஆதி) – இவரின் மிகப்பிரபலமான பாடல்.
எதுக்கு இத்தனை மோடிதான் உனக்கு (ராகம்: சுருட்டி, தாளம்: ரூபகம்)
எந்நேரமும் ஒரு கால் சிவன்கை (ராகம்: ஹனுமத்தோடி)
தில்லை சிதம்பரமே (ராகம்: ஆனந்தபைரவி / காபி நாராயணி)
ஒருக்கால் சிவசிதம்பரம் (ராகம்: அரபி)
என்ன துணிவாய் நெஞ்சே (ராகம்: சாரமதி)
தரிசித்த பேருக்கு முக்தி (ராகம்: கேதாரகௌளை
***
3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.
***
4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.
***
5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :
இராகம் : தோடி தாளம் : ஆதி
பல்லவி
எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா
அநுபல்லவி
பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்
சரணம்
எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.
எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.
***
6. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – பாடல் காவேரி திரைப்படத்தில் இடம்பெற்றது; அதை சி எஸ் ஜெயராமன் பாடினார்.
****
7.மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு:
கடவுளைப்பற்றி பாடினாலும் அதை கிண்டல் தொனியில் பாடுவார்; அதாவது இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை கையாண்டார் ; இதோ ஒரு உதாரணம்
எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”
“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”
“என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”
“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”
***
8. சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல் “ஏதுக்கித்தனை மோடி தான்”
***
9.இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.
பல்லவி தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ
அநுபல்லவி
விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து
நடந் தெதிர் கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு,
கோபுரத்தைக் கண்ணாரவே கண்டு (தெரிசி)
சரணங்கள்.
1. மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா மத்திலே தொழுதேத்தித் (தெரிசி)
2. நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண் மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று (தெரிசி)
3. ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி. வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான த்தை வேறரச் சாடித் (தெரிசி)
***
10. You can all the Keerthanas from
இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்
பல்லவி.
தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை
அநுபல்லவி,
துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை சொல்லப் போமோ வொருவராலே (தெய்வீக)
சரணங்கள்
1. மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம் பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென் றுவீணே சொல்லக்கூடுமோ (தெய்வீக)
2. மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர் மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத் தருமோ சற்றுந் தராது (தெய்வீக)
3. எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக் கமலத் தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப் பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம் (தெய்வீக)
–subham—
Tags- பார்ப்பன எதிர்ப்பு, ஆதி சங்கீத மூர்த்திகள், பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது, மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள்