
Written by London Swaminathan
Post No. 16,143
Date uploaded in London – 29 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தேவாரம்
சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ; தேவர்களுக்கு அதாவது தெய்வங்களுக்குப் போடப்பட்ட பா மாலை (ஆரம்). இவைகளைப் பிற்காலத்தில் தொகுத்து வகுத்தவர்கள் பன்னிரு திருமுறைகளில் முதலில் வைத்தனர் ; சுமா 9000 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன . இதன் மூலம் தெரியவரும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டில் சுமார் 275 கோவில்கள் மஹேந்திர பல்லவன் காலத்திலேயே புகழ்பெற்றவையாக விளங்கின அதனால்தான் தேவார மூவரான அப்பர், சம்பந்தர், சுந்தரர் அங்கே சென்று பாடிப் பரவினர் ; அதைவிட அதிசயம் என்னவென்றால், யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட நம சிவாய என்ற சம்ஸ்க்ருத மந்திரம் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பரவியதை தேவார மூவர் காட்டுகின்றனர் . அதைவிட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், திராவிட விஷமிகளும் வெள்ளைக்கார இந்து விரோதிகளும் சிவன் வேறு , ருத்திரன் வேறு என்று பரப்பியோருக்கு செமை அடி கொடுக்கின்றனர் தேவார மூவர் ; அதை விட அதிசயம் என்னவென்றால், சிவன் கோவில்கள் எல்லாம் சமணர் இடங்கள், புத்தர் இடங்கள் என்போருக்குத் தேவாரப் பாடல்களும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணமும் வகையடி, தொகையடி, செமையடி கொடுக்கின்றன ; இதையெல்லாம் விட உலக மஹா அதிசயம்- பெளத்தர்களும் சமணர்களும் பரப்பிய பாலி, பிராக்ருதத்துக்கு சமாதி கட்டி நம்மை எல்லாம் இன்று வரை தமிழரகளாகவே காத்த பெருமை அப்பர் சம்பந்தரையே சாரும்! அதைவிட அதிசயம்– தமிழ் இசையை முதலில் பண்ணோடு அமைத்துப் பாடியவர்கள் இவர்களதான் .
பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,469 பாடல்கள்
இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,331 பாடல்கள்
மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,346 பாடல்கள்
நான்காம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,060 பாடல்கள்
ஐந்தாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,015 பாடல்கள்
ஆறாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 980 பாடல்கள்
ஏழாம் திருமுறை (சுந்தரர்): 1,026 பாடல்கள்
வேத பண்டிதர்கள் வேதங்களை குருமார்களிடம் வாய்மொழியாக கற்று, பாதுகாத்து வருவதுபோல ஓதுவார்கள் அவர்களுடைய குருவிடமிருந்து கற்று இன்றுவரை சிவன் கோவில்களில் பாடி வருகின்றனர் இதன் மூலம் தமிழ் இசை பரவியது ; ஓதுவார்கள் இல்லாவிடில் தமிழ் இசை இல்லை.
***
தாயுமானவர் (thaayumaanavar)

1705 to 1744 CE. செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர். சைவ சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துப் பாடியது இவருடைய ஒப்பற்ற அணுகுமுறைக்குச் சான்றாகத் திகழ்கிறது ; இந்துக்களின் சமயப்பிரிவுகள் அனைத்தும் ஒரே இறைவனை நாடுவதை பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்; தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன. ஸ்வாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து வருகிறது.
சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார். கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.
அவர்களுக்குப்பிறந்த முதல் குழந்தையை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.பின்னர் பிறந்த குழந்தைக்கு தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் திருச்சியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர்.
தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின. தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசன், அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆன்மீக தாகம் அதிகரிக்கவே , மௌனகுருசாமிகள் என்ற பெரியாரைக் குருவாக ஏற்றார். இதற்கிடையில் திருமணம் நடந்து மட்டுவார் குழலம்மை என்ற நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார் குழலியார் சிவபதம் அடைந்தார். இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். இறுதியில் ராமநாதபுரத்தில் சமாதி ஆனார் .அவருடைய பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பாடல்கள் :
அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா
யானந்த பூர்த்தியாகி
யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
யகிலாண்ட கோடி யெல்லாந்
தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினிற்
றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்
தந்தெய்வ மெந்தெய்வ மென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா
யென்றைக்கு முள்ள தெது மேற்
கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது
கருத்திற்கிசைந்த ததுவே
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
XXXXX
கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;
கண் செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;
மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;
ஜலம் மேல் நடக்கலாம்;
கனல் மேல் இருக்கலாம்;
தன் நிகர் இல் சித்தி பெறலாம்;
என்று பட்டியலிடும் அவர்
“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;
சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோமயானந்தமே.
****
தில்லை (சிதம்பரம்)

தமிழ் நாட்டிலுள்ள சைவர்களுக்கு கோயில் என்றால் அது தில்லை என்னும் சிதம்பரமே . சோழ, பல்லவ மன்னர்கள் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடும் இடம் ; நாட்டியத்துக்கு மூல காரணமான இறைவன் என்பதால் புகழ் வாய்ந்த கோவிலில் நாட்டிய கரணங்களும் உள்ளன; அரியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் வகையில் ஒரே கோயிலில் கோவிந்தப்பெருமாளும் சந்நிதி கொண்டுள்ளார் ; ஊரில் உள்ள தில்லை காளியம்மன் கோயிலும் முழு சக்தி பெற்ற தெய்வமாக தரிசனம் தருகிறார் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுந்தரர் முதலியோரால் புகழப்பட்ட தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்கள் இந்தக் கோவிலை சீரும் சிறப்புடனும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது . சென்னையிலிருந்து தெற்கே 229 கிலோமீட்டர் தூ ரத்திலுள்ள இக்கோயிலை ஐந்து மணி நேரத்தில் அடையலாம் . கோவிலில் உள்ள பொன்னம்பலம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம். இங்கு உருவம் இல்லாத இடத்துக்கு திரை போட்டு மூடியிருப்பார்கள் அதைத்த திறந்தால் வில்வ இலைகளும் வெற்றிடமும் மட்டுமே இருக்கும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் பஞ்ச பூதங்களில் ஆகாச வடிவினன் என்பதைக் காட்டும் இந்த இடத்தை சிதம்பர ரஹஸ்யம் என்றும் சொல்லுவார்கள் .

***
திலகம்
இந்துக்களின் நெற்றியிலும் உடலின் பன்னிரு பாகங்களிலும் வரையப்படும் சமய சின்னங்கள் இவை; பொட்டு என்று பெண்கள் அழைக்கும் இந்தக் குறியீடுகள், புத்தரின் பழைய சிலைகளிலும் உள்ளதால் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்துக்களின் உட்பிரிவுகளான சாக்தம், வைணவம், சைவம் முதலிய ஆறு பிரிவினரும் விபூதி, நாமம், கோபி, குங்குமம் என்று பலபெயர்களில் விதவிதமாக இட்டுக்கொள்வார்கள்; சந்தனம், குங்குமம், விபூதி, நாமக்கட்டி முதலியன முக்கிய இடுபொருட்கள் ஆகும். பெண்களை பொறுத்த மட்டில் திருமணமான சுமங்கலியாக இருக்கும் வரை இது கட்டாயச் சின்னம் . வெளிநாட்டில் வாழ்வோர் இனவேற்றுமைத் தாக்குதால்களால் இதை முழுதும் பின்பற்றுவதில்லை . நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை பாடிப் போற்றியுள்ளனர்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர் விபூதி பூசி பாண்டிய மன்னன் நெடுமாறனின் நோய் நீக்கி அற்புதம் செய்ததை தமிழ் நூல்களில் காணலாம்.
***
பால கங்காதர திலகர் 1856-1920
மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் . பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்; கணேஷ் சதுர்த்தியை பிரபலமாக்கி அதன் மூலம் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இப்போது அது மஹாராஷ்டிரீயர்களின் தேசீயத் திருவிழாவாக மாறிவிட்டது . இவர் வானசாஸ்திரக் குறிப்புகளைப் பயன்படுத்தி ரிக்வேதம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிரூபித்தார் ;அதிசயம் என்னவென்றால் ஜெர்மனியில் ஹெர்மன் ஜாகோபியும் ஆராய்ந்து இதே காலத்தைக் குறிப்பிட்டார்; இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்த ஆராய்ச்சியின் முடிவு இது.
***
திலோத்தமை
அப்சரஸ்; மூவுலகிலும் கிடைத்த நல்ல பொருட்களைக்கொண்டு பிரம்மா படைத்த பேரழகி . பூவுலகில் சுந்தன், உப சுந்தன் என்ற இரண்டு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர் . இவளைத் தேவர்கள் பூமிக்கு அனுப்பி அவர்கள் முன்னால் ஆடவைத்தார்கள் . இருவரும் இவள் எனக்கே சொந்தம் என்று சண்டை போட்டு ஒருவரின் மண்டையை அடுத்தவன் வெட்டி மாய்ந்தார்கள் .
***
த்ரஸாதஸ்யு
அகஸ்திய முனிவருக்கு அவரது மனைவி லோபாமுத்ரா ஒரு நிபந்தனை போட்டாள்; படுக்கை அறைக்குள் வருவதற்கு முன்னால், எனக்கு ஏராளமான நகை நட்டுகளைக் கொண்டு வாருங்கள்; பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்று ; அவர் முதலில் பணம் கேட்ட இரண்டு மன்னர்களும் பணம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த மன்னரிடம்தான் வந்தார். இவரும் இல்லை என்று கைவிரித்தவுடன் மிகப்பெரும் பணக்காரனான அரக்கன் இல்வலனிடம் அகஸ்தியர் சென்றார் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம்– தஸ்யு என்ற சொல் பற்றி வெள்ளைக்காரன் கிளப்பியது எல்லாம் புரளி என்பதாகும்; அதைவிட முக்கிய விஷயம், இல்வலன் என்ற அரக்கன் மூன்று மன்னர்களும் வந்து கேட்கும் அளவுக்கு பணக்காரனாக இருந்ததாகும்; இவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகையால் வெள்ளைக்காரர்களின் வாதங்கள் பொய் என்பதைக் காட்டும் இலக்கியச் சான்றுகள்ய்வை ; ஆகையால் தஸ்யு என்பவனோ அரக்கன் என்பவனோ கீழ் ஜாதியும் இல்லை; திராவிடனும் இல்லை .மன்னர்கள் செல்வந்தர்கள்.
****
த்ரிஜடை (திரிசடை)
ராமாயணத்தில் வரும் நற்பண்புகள் கொண்ட அரக்கர் குல பெண்மணி த்ரிஜடை ஆவார். இலங்கையில் ராவணனால் கடத்தி வரப்பட்டு, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவிக்கு காவல் இருக்கும்படி நியமிக்கப்பட்ட அரக்கிகளில் இவரும் ஒருவர். இவர் ராவணனின் தம்பியும் தர்மவானுமான விபீஷணனின் மகள் ஆவார்.அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தன் தந்தை விபீஷணனைப் போலவே தர்ம சிந்தனையும், கருணையும், நற்குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்தார். அசோக வனத்தில் மற்ற அரக்கிகள் சீதையை மிரட்டி, துன்புறுத்தி, ராவணனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது, த்ரிஜடை மட்டுமே சீதைக்கு ஆதரவாக இருந்தார்.சீதைக்கு தாயைப் போலவும், ஒரு நல்ல தோழியைப் போலவும் இருந்து, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.சீதை துயரம் தாங்காமல் தற்கொலை செய்ய முயன்ற பல தருணங்களில், அவரை தடுத்துப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்.
த்ரிஜடையின் தீர்க்கதரிசனக் கனவு (திரிசடை சொப்பனம்)
ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் த்ரிஜடையின் கனவு மிகவும் பிரபலமானது.அவர் ஒரு தீர்க்கதரிசனக் கனவு கண்டார்; அதில் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணன் வெற்றி பெறுவதையும், ராவணனும் அவனது அரக்கர் குலமும் முற்றிலும் அழிவதையும், லங்காபுரி எரிவதையும் கண்டார்.இக்கனவை அசோக வனத்து அரக்கிகளிடம் கூறி, “இனி சீதையைத் துன்புறுத்தாதீர்கள், அவளிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று எச்சரித்தார். இது சீதையின் மனக்கவலையைப் போக்கி, ராமன் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை அளித்தது. போர்க்களத்தில் ராம-லட்சுமணர்கள் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்தபோது, ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி அதைக் காட்டி கலங்கடித்தான்.அப்போதும் த்ரிஜடை சீதையுடன் சென்று, “அம்மா, கவலைப்படாதே! ராம-லட்சுமணர்கள் இறக்கவில்லை, இது அரக்கர்களின் மாயாஜாலம். புஷ்பக விமானம் சுமங்கலிகளை மட்டுமே சுமக்கும், ஸ்ரீராமனுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் இந்த விமானம் உன்னைச் சுமக்காது” என்று கூறி சீதையின் கற்பின் வலிமையையும் ராமனின் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதையும் உணர்த்தினார். யுத்தம் முடிந்து ராவணன் மடிந்த பிறகு, ஆஞ்சநேயர் சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி கேட்டார்.ஆனால் சீதா தேவி, த்ரிஜடையின் காவலால்தான் தான் உயிர் பிழைத்ததாகக் கூறி, மற்ற அரக்கிகளையும் மன்னித்து விடுவித்தார். ஸ்ரீராமனும் சீதையும் த்ரிஜடைக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
***
திரி-லோக
திரி என்றால் மூன்று ; ஆங்கில எண் த்ரீ என்பதும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததை நாம் அறிவோம்
மூடு உலகங்கள் என்பது பூ லோகம் புவர் லோகம் ஸ்வர் லோகம் ஆகும் . பிராமணர்கள் இன்றும் மூன்றுமுறை செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த மூண்டு உலகங்களுடன் மொத்தமுள்ள ஏழு உலகங்களையும் சொல்லி வணங்குவார்கள்
போர் புவசுவரோம் என்பது சுருக்கம்
Triloka (त्रिलोक).—அவையாவன —பூமி, பூமிக்கு மேலுள்ள வெளி, ஸ்வர்கம்
தேவ ரிஷியான நாரதரை திரிலோக சஞ் சாரி என்பார்கள் ; இவர் ஐன்ஸ்ட்டின் தத்துவத்தை எல்லாம் பொய்யாக்கி ஒளியை மிஞ்சும் வேகத்தில் பயணம் செய்ட்வார் .
பூர்லோக: நாம் வாழும் பூமி;
புவர்லோக: காற்று மண்டலம்; தெய் வீக புருஷர்கள் வலம் வரும் இடம்;
ஸ்வர்(க)லோக (Svargaloka): திண்திறன் வாழும் சுவர்க்கம்;
மஹர்லோக: ரிஷிகளும் ஞானிகளும் வாழும் இடம்;
ஜனலோக: பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் இருக்கும் இடம்;
தபோலோக: தவசீலர்கள் எப்போதும் தவம் செய்யும் இடம்;
சத்தியலோக (ப்ரஹ்மலோக): சத்தியத்தின் உறைவிடம்; பிரம்மா வாழும் இடம் .
மூன்று அல்லது ஏழு உலகங்களுக்கு யோக சாஸ்திரப்படியும் விளக்கம் உண்டு
***
திரிசங்கு

அயோத்திலிருந்து ஆட்சிபுரிந்த சூர்ய வம்ச அரசர்களில் ஒருவன் ; இளவரசனாக இருந்தபோது தந்தையால் நாடு கடத்தப்பட்டு பின்னர் விசுவாமித்திரர் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தார் . அவருக்கு ஒரு ணப்பபஸ்ஸை பிறந்தது உடலோடு சுவர்க்கத்துக்குப் போகவேண்டும் என்று வசிஷ்ட முனிவரிடம் போய் சொன்னார் அவர் முடியவே முடியாது என்றார் ; திரும்பாத திரும்ப சொன்னதையே சொன்னவுடன் வசிட்டரின் மகன் சாபம் கொடுத்தார் பின்னர் விச்வாமித்திரரிடம் வைத்து அதே கோரிக்கையை முன்வைத்தார் அதுக்கென்ன செய்கிறேன் என்று யாகாதீ வளர்த்தார் ; முடிவில் போ போ மேலே போ என்று உடலோடு திரிசங்குவை ஏற்றினார் .உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.
அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால் நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான். உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார். உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான். இதை திரிசங்கு சுவர்க்கம் என்பார்கள் . தமிழில் அரைக்க கிணறு தாண்டியவன் என்போம்; இங்கும் இல்லை அங்கும் இல்லை என்ற அந்தர நிலைமை!. சிலுவை போலத் தோன்றும் நட்சத்திரக் கூட்டத்தை இந்துக்கள் திரிசங்கு நட்சத்திரம் என்பார்கள் மேலை நாட்டினர் இதை சதர் ன் க்ராஸ் என்பார்கள் ஆஸ்திரேலியா பிரேசில் நியூசிலாந்து, சமோவா , பப்புவா நியூ கினி என்ற ஐந்து நட்டுக்கொடிகளில் இந்த நட் சத் திரத்தைக் காணலாம் .

பத்துப்பாட்டு என்னும் சங்கநூல்களில் பதிற்றுப்பத்து என்ற ஒரு நூல் இருக்கிறது; அதில் ஒரு புலவரும் மனைவியும் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பியவு டன் அவர்கள் சொன்னபடி, சேர மன்னன் யாகம் செய்தான். பத்தாவது யாக முடிவில் இருவரும் மாயமாய் மறைந்தனர் .
***
த்ரித
த்ரித, த்வித, ஏகத என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; மூவரும் பெரிய ரிஷிகள். தமிழில் மொழிபெயர்த்தால் ரிஷிக ளின் பெயர்கள் 3, 2, 1 எண்கள் ஆகும் ; மூவரும் யாக யக்ஞங்களுக்குச் சென்று நிறைய பசு மாடுகளைத் தானம் வாங்கி இருந்தார்கள் . ஒரு முறை காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஓநாய் தாக்கவே மூவரும் ஓடினார்கள் அவர்களில் திரித ரிஷி கிணற்றில் விழுந்து விட்டார் வேறு பக்கம் ஒடிய ஏகத ரிஷியும் த்வித ரிஷியும் அவர்களுடைய அண்ணன் கூக் குரலைக் கேட்ட போதும் காப்பாற்றச் செல்லவில்லை ; மூத்தவருடைய பசுமாடுகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசை பிறந்தது . ஆனால் திரித மனம் தளரவில்லை ;பூசலார் நாயனார் மனத்திலே கோவில் எழுப்பி, சிவபெருமானை அழைத்தது போல இவரும் மனத்திலே யாகப்பொருட்களைத் தருவித்து பெரிய யாகம் செய்தார். இந்திரனும் தேவர்களும் மனம் மகிழ்ந்து அவரைக் காப்பாற்றினார்கள்; வெளியே வந்த இவர் மற்ற இருவரையும் ஓநாயாக போகும்படி சாபம் இட்டார் என்பது மஹாபாரதத்தில்உள்ள கதை. மனத்தின் அபாரசக்தியை விளக்கும் கதை இது.
To be continued…………………
–subham—
Tags- திரிசங்கு,த்ரித, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105, தாயுமானவர்