பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)

Indo Greek King Demeritus

Written by London Swaminathan

Post No. 16,189

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பல்லவ மன்னர்கள் பற்றிய செய்திகளை எத்தனை செப்பேடுகளிலிருந்து (Copper Plates) நாம் அறிய முடிகிறது? அந்த செப்பேடுகளின் பெயர்கள் என்ன ?

2

இவைகளைப்பற்றிய மேல்விவரங்களை எங்கே பெறலாம்?

3

அப்பர் என்னும் திருநாவுக்கரசரை மஹேந்திர பல்லவன் கொடுமைப்படுத்திய பின்னர் மீண்டும் இந்து மதத்   க்குத் திரும்பி வந்ததை நாம் அறிவோம் ; கல்வெட்டுகளில் அவர் பற்றி உள்ள வியப்பான செய்திகள் என்ன ?

4

பல்லவர்களுக்கும் பாரத நாட்டின் வடமேற்கில் ஆண்ட ஒரு மன்னருக்கும் இடையேயான தொடர்பினைக் காட்டும் அதிசய சம்பவம் என்ன ?

5

இந்தோனேஷியாவுக்கும் பல்லவர்களுக்கும் இடையேயான அதிசயத் தொடர்பு என்ன ?

6

மஹேந்திர பல்லவன் குறித்து செப்பேடுகள் தரும் செய்திகள் என்ன ?

7

கூரம் செப்பேட்டின் சிறப்பு என்ன ?

8

பல்லாங்குழி விளையாட்டு பற்றி தகவல் தரும் செப்பேடு எது?

9

பல்லவர்களின் கோத்திரம் குறித்து செப்பேடுகள் என்ன சொல்கின்றன ?

10

பல்லவர்கள் எந்த நகரிலிருந்து ஆண்டனர் ? எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் ?

************************

விடைகள்

1.முப்பத்துக்கும் மேலான செப்பேடுகள் (Copper Plates) கிடைத்துள்ளன. அவைர்களின் பெயர்கள்:

பள்ளங்கோயில் செப்பேடுகள்

கூரம் செப்பேடுகள்

உன்னக்குரவயபாளையம் செப்பேடுகள்

ரேயுருச் செப்பேடுகள்

ராயக்கோட்டை செப்பேடுகள்

உதயேந்திரம் செப்பேடுகள் -1

காசக்குடி செப்பேடுகள்

புல்லூர்ச் செப்பேடுகள்

தண்டந்தோட்டம் செப்பேடுகள்

பட்டதாள் மங்கலம் செப்பேடுகள்

வேலூர்பாளையம் செப்பேடுகள்

பாகூர் செப்பேடுகள்

ஓங்கோடு செப்பேடுகள் -1

உருவப்பள்ளி செப்பேடுகள்

மாங்களூர் செப்பேடுகள்

பீகிரச் செப்பேடுகள்

நெடுங்கராயச் செப்பேடுகள்  

வேஷந்தச் செப்பேடுகள்

விழவெட்டிச் செப்பேடுகள்

செந்தலூர்ச் செப்பேடுகள்

ஓங்கோடு செப்பேடுகள் -2

தர்சி உதிரி செப்பேடுகள்

சுராச் செப்பேடுகள்

உதயேந்திர செப்பேடுகள் -2

மயிதவோலு செப்பேடுகள்,

ஹீரஹடஹள்ளி செப்பேடுகள்,

குணபதேயம் செப்பேடுகள்

ஹொசக்கோட்டை செப்பேடுகள்

ஹெல்லகரே  செப்பேடுகள்

ஹால்திபூர் செப்பேடு செப்பேடுகள்

****

2.இவைகளைப்பற்றிய மேல்விவரங்களை பல்லவர் செப்பேடுகள் முப்பது (year 1966) என்ற உலகத்த தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலிலிருந்து அறியலாம் ; பல கல்வெட்டு நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய நூல் இது.

***

3.உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்

டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.

“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்றும் நாகசாமி விளக்கினார்  .மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்

“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,

என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;

“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.

செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே  ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.

****

Indo Greek King Demeritus

4.யானைத் தலை மகுடம் கண்டு அதிசயம் அடைந்த பல்லவ மன்னன் ! வடமேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க மன்னன் அணிந்த ஒரு யானைத்தலை கிரீடம்

பல்லவ மன்னனுக்குச் சூட்டப்பட்டவுடன் எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர்

இந்த வியப்பான விஷயம் பல்லவர் கல்வெட்டில் உள்ளது. இது பற்றி வரலாற்றுப் பேரறிஞர்   டாக்டர் இரா.நாகசாமி , “யாவரும் கேளிர்” என்ற அவரது நூலில் கூறுவதாவது:-

“காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் நந்தி வர்மனின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்தி வர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும், யானை உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத்தலை  போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு இவ்வாறு கூறினும் சிற்பத்தில் யானைதத்லை போன்ற முடி காணப்படவில்லை”.

***

5.பல்லவ மன்னர்களின் பெயர்கள் அனைத்தும் வர்மன் என்ற பெயரில் முடியும் இதே போல இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூல வர்மன் பூர்ண  வர்மன் என்ற இரண் டு பெயர்களைக் கொண்டுள்ளது மேலும் தென் கிழக்காசிய மொழிகளின் லிபிகள் இன்றுவரை பல்லவ கிரந்தத்திலிருந்து உருவான லிபியைப் பயன்படுத்துவதும் பல்லவர் தொடர்பைக் காட்டுகிறது போர்னியோ தீவின் அடர்ந்த கட்டுக்குள் கண் டுபிடிக்கப்பட்ட அந்த சம்ஸ்க்ருத மொழிக்கல்வெட்டுகள் பிராமணர்கள் யாகம் செய்தபோது கொடுக்கப்பட்ட தானங்களைக் குறிக்கின்றன . வேத விற்பன்னர்கள் யாகம் செய்யும் போது நாடும் யூபத் தூண்கள் அங்கே உள்ளன. பல்லவ கிரந்தமும் வர்மன் என்ற மன்னர் பெயரும் பல்லவர் தொடர்பைக் காட்டுகின்றன; வியப்பான விஷயம் என்னவென்றால் நாம் அறிந்த பல்லவ மன்னர்களின் காலத்துக்கு முற்பட்ட தேதியுடைய கல்வெட்டுகள் இவை.

***

6.செப்பேடுகளும் கல்வெட்டுகளும் தரும் செய்திகள்

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

    சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.

பட்டங்கள்

   இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.

   புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.

மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.

   சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

***

7.கூரம் செப்பேடுகள் 

கூரம் செப்பேடுகள் என்பது பல்லவ மன்னர் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு, தோராயமாக கி.பி. 679) வெளியிட்ட புகழ்பெற்ற செப்பேட்டுத் தொகுப்பாகும். இது சென்னை அரசு அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டுள்ளது

காலம்: கி.பி. 7-ஆம் நூற்றாண்டு (சுமார் கி.பி. 679)வெளியிட்டவர்: பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன்மொழி & எழுத்து: சமஸ்கிருதம் (முதல் 4.5 பக்கங்கள்) மற்றும் தமிழ் (மீதமுள்ள பகுதிகள்), கிரந்த எழுத்துகள்அளவு: 7 ஏடுகள் (14 பக்கங்கள்), நந்தி இலச்சினைக் கொண்ட மோதிரத்தால் கோர்க்கப்பட்டதுஆய்வு செய்தவர்: இ. ஹூல்ட்ஸ்

முக்கியச் செய்திகள்1. கோவில் அமைப்புகாஞ்சிபுரம் அடுத்த கூரத்தில் பல்லவர் காலத்துப் தூங்கானை மாடவடிவிலான முதல் கல்லாலான சிவன்கோயில் (வித்யா விநீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்) எழுப்பப்பட்டதை இது தெரிவிக்கிறது

2. அருகில் உள்ள பரமேஸ்வரமங்கலம் நகர் உருவாக்கத்திற்கு 6,300 குழி (98.44 ஏக்கர்) நிலம் தேர்வு.பரமேஸ்வர தடாகம் ஏரி வெட்டுதல் மற்றும் பாலாற்றில் இருந்து பெரும்பிடுகு கால்வாய் வெட்டுதல்.நீர் பகிர்மான உரிமைகள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டன.செங்கல் உற்பத்திக்கு சூளைமேட்டுப்பட்டி உருவாக்கப்பட்டது.

3. ஊருக்கு நடுவில் மகாபாரதம் வாசிக்கும் மண்டபம் மற்றும் தண்ணீர், தீ பந்தம் செலவுக்கு நிலப்பங்கு ஒதுக்கப்பட்டது.

வணிகர்கள், பொற்கொல்லர்கள், மருத்துவர்களுக்கு முக்கிய இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது

***

8.பள்ளன்கோயில் செப்பேடுகள்: பல்லவ மன்னன் சிம்மவர்மனால் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு) அவனது 6-வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது; இச்செப்பேடு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட இருமொழிப் பட்டயமாகும். தமிழரசனின் ஆணையைத் தமிழில் கொண்டு வெளிவந்த செப்பேடுகளில் இதுவே காலத்தால் முற்பட்ட மிகப்பழமையான செப்பேடு என்ற பெருமையைப் பெறுகிறது.இச்செப்பேடு தரும் முக்கிய வரலாற்றுச் செய்திகள் 1. பல்லவ மன்னன் சிம்மவர்மன், காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்று (ஜீனகாஞ்சி) பகுதியைச் சேர்ந்த சமண (ஜைன) முனிவரான வஜ்ரநந்திக்கு நிலத்தைத் தானமாக வழங்கியதை இச்செப்பேடு முக்கியமாகப் பதிவு செய்கிறது.2. நிலத்தின் பரப்பளவும் எல்லைகளும்இக்கொடையின் கீழ், நாட்டார் (ஊர் சபையினர்) ‘தாமர்’ (தாமல்) என்னும் ஊரிலிருந்த 16.5 பட்டி நிலத்தை வழங்கினர். இந்தத் தானத்தை வழங்குவதற்கான அரச ஆணையை நிறைவேற்றியவர் பல்லவ அமைச்சரான நரபயன் ஆவார்.தானமாக வழங்கப்பட்ட அந்த நிலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதமான வரிகளும் நீக்கப்பட்டு , முழு உரிமையோடு முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல்லாங்குழி விளையாட்டு பற்றிய குறிப்பு:

இச்செப்பேட்டின் எல்லைகளைக் குறிப்பிடும் பகுதியில் ‘பல்லாங்குழி கா’ (Pallankuzi Ka) என்ற நில எல்லைக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, கி.பி. 550-களிலேயே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தது என்பதற்கான மிக முக்கிய வரலாற்று ஆதாரமாக இச்செப்பேட்டு வரிகள் கருதப்படுகின்றன.

***

9.பல்லவர்களின் கோத்திரம் பாரத்வாஜ கோத்திரம் என்று செப்பேடுகள் சொல்கின்றன.

***

10.காஞ்சீபுரம், பல்லவர்களின் தலை நகரமாகத் திகழ்ந்தது. அவர்கள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். 

–subham–

Tags- பல்லவர் செப்பேடுகள், முதல், 10 கேள்விகள், காஞ்சீபுரம், பல்லாங்குழி, யானைத் தலை மகுடம், மகேந்திர வர்மன்

Leave a comment

Leave a comment