விநாயகரின் 32 திருநாமங்களும் திருத்தலங்களும்! (Post.16,196)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,196

Date uploaded in London – 14 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-9-2026 விநாயக சதுர்த்தி – சிறப்புக் கட்டுரை!

விநாயகரின் 32 திருநாமங்களும் திருத்தலங்களும்! 

ச. நாகராஜன்

எந்த வழிபாட்டிற்கும் தொடக்கம் விநாயகர் வழிபாடு தான்.

விநாயகர் பட்டிதொட்டிகளிலெல்லாம் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற பழமொழி அவரது வழிபாட்டில் உள்ள எளிமையைக் காண்பிக்கிறது.

கணபதி பூஜை கை மேல் பலன் என்பது இன்னொரு பழமொழி. இது வழிபாட்டின் உடனடி பலனைக் குறிக்கிறது.

பிள்ளையாருக்கு 32 திருநாமங்கள் உண்டு.

அவையாவன:

1)      பால கணபதி

2)      தருண கணபதி\

3)      பக்தி கணபதி

4)      வீர கணபதி

5)      சக்தி கணபதி

6)      துவிஜ கணபதி

7)      சித்தி கணபதி

8)      உச்சிஷ்ட கணபதி

9)      விக்ன கணபதி

10)   க்ஷிப்ர கணபதி

11)   ஏரம்ப கணபதி

12)   லட்சுமி கணபதி

13)   மஹா கணபதி

14)   விஜய கணபதி

15)   நிருத்த கணபதி

16)   ஊர்த்துவ கணபதி

17)   ஏகாட்சர கணபதி

18)   வர கணபதி

19)   திரயாட்சர கணபதி

20)   க்ஷிப்ரப்ரசாத கணபதி

21)   ஹரித்ரா கணபதி

22)   ஏகதந்த கணபதி

23)   சிருஷ்டி கணபதி

24)   உத்தண்ட கணபதி

25)   ரணமோசன கணபதி

26)   துண்டி கணபதி

27)   துவிமுக கணபதி

28)   மும்முக கணபதி

29)   சிங்கமுக கணபதி

30)   யோக கணபதி

31)   துர்க்கா கணபதி

32)   சங்கடஹர கணபதி

பிள்ளையாரின் திருவிளையாடல்கள் அற்புதமானவை.

திருநாரையூரில் இருந்து அருள் பாலிப்பவர் பொல்லாப் பிள்ளையார்.

சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள தலம் இது.

இதில் ஆதிசைவர் மரபில் நம்பியாண்டார் நம்பி என்ற பக்தர் ஒருவர் தோன்றினார். அவரது தந்தையார் பிள்ளையார் கோவில் அர்ச்சகர்.

ஒரு நாள் வேலை நிமித்தமாக அவர் அயலூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே சிறுவனான தன் மகனை அழைத்து நைவேத்யம் செய்யக் கூறினார்.

நைவேத்யத்தைப் படைத்த நம்பி அது அப்படியே இருக்கக் கண்டு அழத் தொடங்கினார். விநாயகரை உண்ணுமாறு வேண்ட அவரும் அருள் பாலித்து நைவேத்யத்தை உண்டார். பின்னர் நம்பிக்கு அவர் அருளால் கவிதா திறம் தோன்றியது. விநாயகர் மீது பல பாடல்களைப் புனைந்தார். அவரது அருளால் திருமுறைகள் இருக்கும் இடம் தெரிந்து அவற்றை எடுத்து உலகுக்கு அளித்தார்.

இப்படி விநாயகரின் திருவிளையாடல்கள் தலம் தோறும் உண்டு;

ஒவ்வொரு தலத்திலும் பிள்ளையாருக்குச் சிறப்புப் பெயர் உண்டு.

சில தலங்களும் அங்குள்ள பெயர்களையும் காணலாம்:

திருவாவடுதுறை : துணைவந்த விநாயகர், அழகிய விநாயகர், சிவப்பிரகாச விநாயகர்,

திருநறையூர்ச் சித்திச்சுரம் : திருவிடைமருதூர் : ஆண்ட விநாயகர்.

திருவையாறு : ஆதி விநாயகர்.

விருத்தாசலம் : ஆழத்துப் பிள்ளையார்

திருச்சிராப்பள்ளி : உச்சிப் பிள்ளையார்

குமாரவயலூர் : பொய்யாக் கணபதி

குடந்தைக் கீழ்க்கோட்டம் : கங்கை கணபதி

திருக்காறாயில் : கடுக்காய் விநாயகர்.

திருக்கச்சூர் : தாலமூல விநாயகர், சருக்கடி விநாயகர்.

திருக்கடவூர் : கள்ளவாரணப் பிள்ளையார்

கடிக்குளம், திருக்கருகாவூர், சிதம்பரம் : கற்பக விநாயகர்.

திருமுருகன்பூண்டி : கூப்பிடு விநாயகர்.

திருநாட்டியத்தான் குடி: கைகாட்டி விநாயகர்.

திருக்கொட்டையூர் : கோடி விநாயகர்.

திருமறைக்காடு : சிந்தாமணி விநாயகர், வீரசத்தி விநாயகர்.

கீழ்வேளூர், திருமழபாடி : சுந்தர கணபதி

திரு உசாத்தானம் : சூதவனப் பிள்ளையார்

அன்பிலாந்துறை : செவி சாய்த்த விநாயகர்

திருநள்ளாறு : சொர்ண விநாயகர்.

சிதம்பரம் : திருமுறை காட்டிய விநாயகர்,  கற்பகப் பிள்ளையார், க்ஷேத்ரபாலப் பிள்ளையார், முக்குறுணி விநாயகர், முகக் கட்டண விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், நரமுக விநாயகர்.

திருப்பனையூர் : துணையிருந்த விநாயகர்.

நாகப்பட்டினம் : மாவடிப் பிள்ளையார், நாகாபரணப் பிள்ளையார், பஞ்சமுக விநாயகர்.

திரு இன்னம்பர் : நிருத்தன விநாயகர்.

திருவீழிமலை : படிக்காசு விநாயகர்.

திருப்புறம்பயம் : தேன் விநாயகர், பிரளயங்காத்த பிள்ளையார்

திருமாகறல் : பொய்யா விநாயகர்.

சீகாழி : ஆபத்துக் காத்த விநாயகர்.

திருநாரையூர், திருவெண்ணெய்நல்லூர் : பொல்லாப் பிள்ளையார்

அம்பல் : சுட்டு விநாயகர்.

திருவாரூர் : மாற்றுரைத்த விநாயகர், வாதாபி விநாயகர்

மதுரை : சித்தி விநாயகர், முக்குறுணிப் பிள்ளையார்

வல்லம் : வரசித்தி விநாயகர்.

திருக்களர், காஞ்சீபுரம், அத்திகிரி : வலம்புரி விநாயகர்.

திருப்புகலூர், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் : வாதாபி விநாயகர்.

காஞ்சீபுரம் : விகடச் சக்கர விநாயகர்.

திருவலஞ்சுழி : வெள்ளை விநாயகர்.

திருவேதிகுடி : வேதப் பிள்ளையார்

திருநல்லூர் : சாளக்கிராம விநாயகர்.

திருந்துதேவன் குடி : கர்க்கடக விநாயகர்.

மயூரபுரம் : மயூரேச விநாயகர்.

காசி : துண்டி விநாயகர்.

காளத்தி : மஞ்சந்தி விநாயகர்.

திருச்செந்தூர் : தூண்டுகை விநாயகர்.

திருக்கோகர்ணம் : மகா கணபதி

செல்வக் கதிர்காமம் : மகா கணபதி

திருநெல்வேலி : பொல்லாப் பிள்ளையார், முக்குறுணிப் பிள்ளையார், திருப்பணி விநாயகர். கற்பக விநாயகர், அக்கசாலை விநாயகர், வெள்ளந்தாங்கி விநாயகர், வினைதீர்த்த விநாயகர், அன்னதான விநாயகர்.

இந்தத் தலங்கள் ஒவ்வொன்றிலும் விசேஷமான திருவிளையாடல்களை விநாயகர் நிகழ்த்தி இருப்பதை அந்தந்தத் தல வரலாறு மூலமாகக் காணலாம்.

விநாயகரை வழிபட்டால் :

திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்; செஞ்சொற்

பெருவாக்கும்: பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர் தம் கை.        – கபில தேவ நாயனார்

*** 

Leave a comment

Leave a comment