
Written by London Swaminathan
Post No. 16,437
Date uploaded in London – 29 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தலைப்புச் செய்திகள்
RAMAYANA- WORLD’S FIRST BOOK ON DEMOCRACY; CONSULTATION WITH MINISTERS AT EVERY STAGE! UNLIMITED WONDERS IN RAMAYANA.
ராவணன் – விபீஷணன் மீண்டும் மோதல்
விபீஷணன் கட்சி தாவல் ;
சரணாகதி தத்துவத்தை ராமன் விளக்கல்
ராமன் வீடணனை ஏழாவது தம்பி என்று அறிவித்தல்;
WORLD’S FIRST EXILE GOVERNMENT! RAMAYANA WONDER! உலகின் முதல் எக்ஸைல் கவர்ன்மென்ட்; ராமன் செய்த புதுமை ; நேதாஜியின் AZAD HIND முன்னோடி
***
511
யாரும் கவனிக்காத இரண்டு மிகப்பெரிய இராமாயண அதிசயங்கள் என்ன ?
512
இரணியன் வதையுண்ட சம்பவத்தைச் சொல்லி புதிபுகட்ட முயன்ற விபீஷணன் மீது ராவணன் எப்படி எரிந்து வீழ்ந்தான்?
513
வீடணன் இலங்கையை விட்டுப் போவதற்கு முன்னர் ராவணனை எப்படி எச்சரித்தான்?
514
விபீஷணனுடன் இலங்கையை விட்டு வெளியேறிய நான்கு அமைச்சர்கள் யாவர் ?
515
நான்கு அமைச்சர்களும் வீடணனுக்கு என்ன யோஜனை நல்கினார்கள் ?
516
வானர வீரர்கள் கடற்கரையில் வீடணனைக் கண்டவுடன் சந்தேகம் கொண்டு, மயிந்தன் என்பவனை அனுப்பி என்ன விசாரணை செய்தனர் ?
517
இராவணனிடம் மிகுந்த அன்புடைய தம்பி இவன். ‘தஞ்சம்’என்று, நம்மிடம் வந்தது வஞ்சகச் செயலே என்று சுக்கிரீவன்சொன்னபோது அனுமன் என்ன சொன்னான்?
518
ராமன் விளக்கிய சரணாகதி தத்துவம் என்ன? ராமன் சொன்ன புறாக்கதை என்ன ?
519
இலங்கைக்கு நீயே அரசன் என்று இந்திய மண்ணில் அரசு அறிவித்து விபீஷணனுக்கு முடிசூட்ட ராமன் கட்டளையிட்டது எவ்வாறு ?
520
மிகவும் புகழ்பெற்ற கீழ்கண்ட பாடலின் பொருள் என்ன ? உலகத்தில் யாரும் காட்டாத அன்பினை எல்லோரிடமும் காட்டி உலகப் புகழ் பெற்றது எப்படி?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடைகள்


511. யாரும் கவனிக்காத, எழுதாத இரண்டு மிகப்பெரிய இராமாயண அதிசயங்கள்:-
ஏராளமான வெளிநாட்டு முட்டாள்கள் கிரேக்க நாட்டினை ஜனநாயகத்துடன் தொடர்புபடுத்திப் புகழ்வார்கள் ; இன்னும் பல ஆங்கிலம் படித்த அடி முட்டாள்கள் லண்டனிலுள்ள பாரிமெண்ட் கட்டிடத்தை மதர் ஆப் பார்லிமெண்டுகள் MOTHER OF PARLIAMENTS என்பார்கள்; இவர்களின் அறியாமைக்கு காரணம் ரிக் வேதத்தைப் படியாமை ஆகும் ; ரிக் வேதத்திலுள்ள சபா , சமிதி ஆகிய இரண்டு சொற்களும் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும்(சபா= அவை) இன்று லோக் சபா, ராஜ்ய சபா என்ற பெயரிலும் நீடிக்கின்றன ; சமிதி என்பதை முட்டாள்கள் கமித் தி (கமிட்டி) என்று இன்று வரை ஆங்கிலத்தில் உச்சரித்து வருகிறார்கள்.
இன்றைய பகுதியில் வீடணனை REFUGEE என்று ஏற்பதா வேண்டாமா என்று ராமபிரான் கன்சல்ட் CONSULT செய்கிறான். பால காண்டத்தில் ராமனுக்கு முடி சூட்டுவதா வேண்டாமா என்று தசரதன் மந்திரிகளுடனும் ஊர்பெரியோர்களுடனும் கன்சல்ட் செய்கிறான் ; ராவணனும் இலங்கை எரியுண்ட பின்னர் சபையைக் கூட்டி விவாதிக்கிறான்; இன்றைய பகுதிக்கு முன்னர் யார் யாரை எந்த திசைக்கு அனுப்பி சீதையைத் தேடலாம் என்று சுக்ரீவன் ஆலோசித்ததையும் காணலாம் . தனி ஒருவனாக முடிவு செய்யாமல் பிறரைக் கலந்து பேசி முடிவெடுத்த அதிசயத்தை ராமாயணம் முழுதும் காணலாம் .
நேதாஜிக்கு முன்னோடி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜனநாயக முறையில் வெற்றி பெற்றதை எதேச்சதிகார காந்திஜி வெறுத்ததால் நேதாஜி சிங்கப்போருக்குச் சென்று ஆஜாத் ஹிந்த் AZAD HIND என்னும் முதல் சுதந்திர இந்திய அரசாங்கத்தை அறிவித்தார் ; இதற்கெல்லாம் முன்னோடி ராம பிரான் ஆவர்; விபிஷணன் சரணாகதி அடைந்தவுடன் அவனை இலங்கை அரசனாக இந்திய மண்ணிலேயே முடி சூட்டுகிறார் ; இதுதான் உலகத்தின் முதல் வெளிநாட்டு அரசு ; இவ்வாறு வெளிநாட்டில் அரசாங்கம் அமைப்பதை EXILE GOVERNMENT எக்ஸைல் கவர்ன்மென்ட் என்பார்கள்.
****************
512.இராவணன் வீடணன் சொல்லைக் கேட்டுச் சினந்து கூறுதல் (6492-6500) ஓடிப் போடா; உன்னைக் கொன்று விடுவேன்
6370. ‘நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;
எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு
உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;
திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ ?
(படை யெடுக்கும் எதிரிகளான மானிடர்களிடம் நட்புடைய வனாய் இருக்கிறாய்; நீ ஏற்கனவே ஒரு முடிவு செய்து விட்டாய்; என்னைப் போரில் வெற்றிகொள்ள திட்டமிட்டு இலங்கை ஆட்சியினைக் கைப்பற்ற எண்ணுகிறாய்; உன்னை விட வேறான பிற பகைவர்களும் எனக்கு வேண்டுமோ? (நீ தாண்டா முதல் எதிரி)
6372. ‘பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை;
ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி’ என்றனன் –
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.
தனக்கு அழிவை அடைவதற்கேற்ப நல்லறிவு நீங்கப் பெற்ற இராவணன் (வீடணனை நோக்கி) எனக்கு நேர இருக்கும் பழியை எண்ணி உன்னை நான் கொல்ல மாட்டேன்; (எனக்கு இது போன்ற அறிவுரைகள்) கூறுவதை விட்டு விடு; சீக்கிரம் இங்கிருந்து போய்விடு; என்கண் எதிரில் நீ இனி நிற்பாயானால் ‘சாவாய்’ என்று கூறினான்.
******
513.வீடணன் நீதி பல மொழிதல்
‘புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர்
மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர்,
இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம்
சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ ?
உன் புத்திரர்கள், குருமார்களாகிய மேலோர்கள், உறவினர்கள், உனக்குரிய நண்பர்கள் , உன் ஆதரவில் வாழும் மக்கள், வாழ்க்கையில் மெலிந்தவர்கள், வீரர்கள் இத்தனை பேரையும் இராமபிரானுடைய கொடிய அம்புகள் வதை செய்வதைப் பார்த்துவிட்டு நீயும் அழியப் போகிறாயோ- என்று பல அறிவுரைகளைக் கூறிவிட்டு இலங்கையை விட்டு வெளியேறினான் வீடணன்
****************************
514.விபீஷணனுடன் இலங்கையை விட்டு வெளியேறிய நான்கு அமைச்சர்கள்:–
6377. அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும்
வினையவர் நால்வரும், விரைவின் வந்தனர்:-
கனை கழல் காலினர், கருமச் சூழ்ச்சியர், –
இனைவரும் வீடணனோடும் ஏயினார்.
அனலன்,அனிலன், அரன், சம்பாதி என்ற நல்வினை உடைய நான்கு பேரும் வீடணனிடம் விரைந்து வந்தனர்; வீரக் கழல் அணிந்த கால்களை உடையவர்களும், ஆராய்ந்து செயல்படும் தகுதி உடையவர்களும் ஆகிய அவர்கள் வீடணனுடன் சேர்ந்து கொண்டனர்.
வீடணன் இலங்கை விட்டுப் போனபோதும் அவனை விட்டுப் பிரியாதவர்களாக, அவனுடன் சேர்ந்து கொண்டனர் என்பதனை ‘வீடணனோடும் ஏயினார்’ என்றார் கம்பர்.
*****************
515.நான்கு அமைச்சர்களும் வீடணனுக்கு சொன்ன யோஜனை
‘நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.
(அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட வீடணன்) நமக்கு நன்மையாவ தொன்றையே நீங்கள் கூறினீர்கள்; இராமபிரானைச் சென்று அடையாவிட்டால் அரக்கத்தன்மையினர் ஆவோம்; எல்லையில்லாத நல்ல குணங்களை உடையவனான இராமபிரானுடைய திருவடிகளைச் சேருவோம்; சேர்ந்து இந்தப் பிறவி நோயைப் போக்கிக் கொள்வோம்.
*********************
516.மயிந்தன் நடத்திய விசாரணை
6405. ‘யார்? இவண் எய்திய கருமம் யாவது?
போர்அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்,
சோர்விலீர், மெய்ம் முறை, சொல்லுவீர்’ என்றான்.
(அனுமன்ஆணைப்படி வந்த காவலரில் மூத்தவனான மயிந்தன் வீடணன் முதலியோரை நோக்கி) நீங்கள் யார்? இங்கு வந்த காரியம் யாது? போர் செய்ய வந்தீர்களா?; அல்லது, வேறு ஒரு எண்ணத்துடன் வந்தீர்களா? இந்த வானரப் படை அருகில் நின்றிருக்கும் நீங்கள் நினைத்து வந்ததை உண்மையை மறைக்காது கூறுங்கள் என்று மயிந்தன் கேட்டான்.
********************
517.அனுமனின் கருத்து
‘உள்ளத்தின் உள்ளதை, உரையின் முந்துற,
மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால்,
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ?
மனத்திலே இருப்பதை பேசுவதற்கு முன்னால் முகங்களே காட்டிக்கொடுத்து விடும்); கள்ளத்தின் விளைவை இருள் நிறைந்த முகமே காட்டிக் கொடுத்துவிடும் . “அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” (706) என்ற குறள் ஒப்பு நோக்கத்தக்கது.
6466. ‘ஆதலால், “இவன் வரவு நல் வரவே”
என உணர்ந்தேன், அடியேன்; உன்தன்
வேத நூல் எனத் தகைய திருவுளத்தின்
குறிப்பு அறியேன்’ என்று விட்டான்-
காதல் நான்முகனாலும் கணிப்ப அரிய
கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று
ஓதினான், ஓத நீர் கடந்து, பகை கடந்து,
உலகை உய்யக் கொண்டான்.
கலைகளில் விருப்பம் மிக்க பிரமனாலும் இவ்வளவினதென்று கணிக்க இயலாத எல்லாக்கலைகளையும் சூரியனிடம் கற்றுத் தேர்ந்தவனும், குளிர்ந்த நீர் நிறைந்த கடலைத் தாண்டி பகைவர்களாகிய இலங்கை அரக்கரை வென்று, இவ்வுலகத்தை உய்யுமாறு செய்தவனுமான அனுமன் (இராமனை நோக்கி) ஆதலினால் இந்த வீடணனது வருகை நன்மையான வருகையே என நான் உணர்ந்தேன்; வேத நூல் போன்ற உன் மனத்தில் நீ என்ன நினைக்கிறாயோ எனக்குத் தெரியாது என்று அனுமன் பகர்ந்தான்
இராமன் திருவுள்ளத்தில் வேதக்கருத்துக்கள் நன்கு பதிந்திருந்ததால் ‘வேத நூல் எனத்தகைய திருவுள்ளம்’ என்றான்.
ஓடுகின்ற கதிரவனுக்கு முன்னால் முகம் காட்டிப் பின்புறமாக ஓடிக்கொண்டே கதிரவனிடம் எல்லாக்கலைகளையும் கற்றவன் அனுமன்.
***********************
518.அடைக்கலம் தருவது பற்றி ராமன் கூறிய கருத்துக்கள்
6472. ‘இடைந்தவர்க்கு, “அபயம், யாம்!” என்று
இரந்தவர்க்கு, எறி நீர்வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற்
கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று
ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என்
ஆம்? ஆண்மை என் ஆம்?
பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி விலகி தேவர்களுக்காக நஞ்சைத்தான் உண்டு, அவர்களைக்காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? தோல்வியால் நொந்தவர்களுக்கு உதவவில்லை என்றால், தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டு வந்தவர்களுக்குத் தரவில்லை என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணைகாட்டி அருள் செய்யவில்லை என்றால் அறத்தால் பயன் ? ஆண்மையால் என்ன பயன்?
ராமன் சொன்ன புறாக்கதை
6473. ‘பேடையைப் பிடித்து, தன்னைப் பிடிக்க வந்து
அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து, விறகிடை வெந் தீ மூட்டி,
பாடுறு பசியை நோக்கி, தன் உடல் கொடுத்த
பைம் புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது
அன்றோ?
பெண்புறாவைப் பிடித்துக்கொண்டு அதன் ஜோடியான தன்னையும் பிடிக்கவந்திருந்த வேடன் ஒருவனுக்கு, குளிர்காலத்தில் விறகு பொறுக்கி வந்து வெப்பமான தீயை மூட்டிக் குளிரைப்போக்கி, அவனது பெரும்பசியைப் பார்த்து, அந்தத்தீயில் வீழ்ந்து தனது உடலையே அவனுக்குஉணவாகக் கொடுத்த ஒரு ஆண்புறா பரமபதம் பெற்று உயர்ந்தது என்ற வார்த்தை வேதத்தைவிட மேலான தொன்றல்லவா?
6476. ‘நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன்,
“நாளும்
தஞ்சு” என, முன்னம், தானே தாதைபால் கொடுத்து,
“சாதல்
அஞ்சினேன்; அபயம்!” என்ற அந்தணற்கு ஆகி,
அந் நாள்,
வெஞ் சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை
உண்டோ?
பாற்கடலைக் கடந்த போது அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றுவதற்காக விஷத்தை உண்டதோடு நில்லாமல், மார்க்கண்டேயனுக்கும் உதவினான் சிவ பெருமான்.
6481. ‘ஆதலான், “அபயம்!” என்ற பொழுதத்தே, அபய
தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர், என்பால்
வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்?
கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி’
என்றான்.
இன்னபிற காரணங்களால் அபய தானம் அளிப்பதே கடமை ; நீங்கள் எல்லோரும் அன்பினால் கூறிய கருத்துக்களையும் நான் கருத்தில் கொண்டேன் ; சூரியன் புதல்வனான சுக்கிரீவா, நீ போய் விபிஷணனை அழைத்து வா .
**********************
519.இலங்கைக்கு நீயே அரசன் என்று இந்திய மண்ணில் அரசு அறிவித்து விபீஷணனுக்கு முடிசூட்ட ராமன் கட்டளையிட்டது
6503. ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை
கூர,
‘ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும்
எந் நாள்
வாழும் நாள், அன்றுகாறும், வாள் எயிற்று அரக்கர்
வைகும்
தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; தந்தேன்’
என்றான்.
இராமபிரான் வீடணனைப் பார்த்து, கருணை பொங்க
பதினான்கு உலகங்களும் எனது பெயரும் எத்தனை காலம்
இருக்குமோ அக்காலம் வரை அரக்கர்கள் வாழும்
இலங்கையின் உனக்கே உரிமையுடையதாகக் கொடுத்தேன் என்று கூறினான்.
.இலங்கை அரசனான இராவணனை வெல்லுவதற்கு முன்பே இலங்கையை இராமபிரான் வீடணனுக்குத் தந்தான் என்பது வெல்லுதல் உறுதியாதலால் என்க.
****
WE ARE SEVEN NOW !
520 ‘குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று
சூழ்வான்
மகனொடும், அறுவர்ஆனேம்; எம்முழை அன்பின்
வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர்
ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான்
நுந்தை.’
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு – குகனுடன் சேர்த்து
நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள் ஆனோம் இது முன்பு நிகழ்ந்தது;
பின் குன்று சூழ்வான் மகனொடும்- அதன் பின் மேருமலையைச்
சுற்றிவரும் சூரியனது மகனான சுக்கிரீவனுடன்; அறுவர் ஆனேம் –
சகோதரர் ஆறுபேர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த அகன்
அமர் காதல் ஐய- எங்களிடம் அன்பு கொண்டு வந்த உள்ளத்திலே
நிறைந்த அன்புடையவனே; நின்னொடும் எழுவர்ஆனேம்
– உன்னுடன் சேர்த்து சகோதரர்கள் ஏழுபேர் ஆனோம்; புகல்
அரும் கானம்தந்து – எவரும் புகுதற்கரிய கானக வாழ்வை
எனக்குத் தந்து; நுந்தை புதல்வரால் பொலிந்தான்- உனது
தந்தையாகிய தயரதன் புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான்.
உன்னுடன் சேர்ந்து நாம் ஏழுபேர் ஆய்விட்டோம்.
தந்தை என்று கூறாமல் தயரதனை உனது தந்தை என்று பொருள் பெற ‘நுந்தை’ என்றது நோக்கத்தக்கது.
—சுபம்—
TAGS- உலகின் முதல் எக்ஸைல் கவர்ன்மென்ட்; ராமன் செய்த புதுமை! கம்ப ராமாயணத்தில் 520 கேள்விகள்