கர்நாடகத்தில் இசை பற்றிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! (Post.15,819)

Written by London Swaminathan

Post No. 15,819

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கர்நாடக மாநிலத்தில் கொப்பல் என்னும் இடத்தில் இசை பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ; 740 ஆண்டுகளுக்கு முன்னர் இசைக்க கலைஞர்களுக்கு  கிடைத்த ஆதரவையும்  கெளரவத்தையும் இந்தக் கல்வெட்டு புலப்படுத்துகிறது ;இது பற்றி ஆர்கனைஸர் வார இதழ் ஆங்கிலத்தில் வெளியிட்ட தகவல் இதோ:

கொப்பல் மாவட்டத்தில் தலக்கல் என்ற இடத்தில் இந்தக் கல்வெட்டு கிடைத்தது; கிராமத்திலுள்ள உடச்சலம்மா கோவிலில் உள்ள இந்தக் கல்வெட்டு பற்றி  Dr. Sharanabasappa Kolkar கல்வெட்டு அறிஞர் டாக்டர் சரணபசப்பா விளக்கினார் . சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தில் கலாசார, சமூக நிலைமை எப்படி இருந்தது என்பதை இந்தக் கல்வெட்டு காட்டுகிறது; பருவ நிலைக் கோளாறினாலும் கவனிப்பின்மையாலும் கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்து போயின.  ஆயினும் முக்கியத் தகவல்களை  அப்  படியே உள்ளன; சங்கீதக் கலைஞர்களுக்கு செய்யப்பட பண உதவி மற்றும் நில தானம் ஆகியவற்றைக் கல்வெட்டு சொல்கிறது.

கல்வெட்டில் இருபது வரிகள் இருக்கின்றன ; அதற்கு மேல் திரிசூலம் தாங்கிய கோவில், குதிரை , வாள், சாமரம் ஆகிய சுப சின்னங்கள் காணப்படுகின்றன . இவை  மத்திய காலத்தில் பிரபலமாக இருந்த மைலாரலிங்கேஸ்வர சம்பிரதாயத்தின் சின்னங்கள் ஆகும் . அக்கழக் கல்வெட்டுகளை போலவே கணபதி சரஸ்வதி , சிவபெருமான் அகியோரைப் போற்றி கல்வெட்டு துவங்குகிறது சக வருடம் 1201ல் ஏற்பட்ட கிரகணத்தைக் குறிப்பிடுவதால், 1279 CE என்று இதன் காலத்தைத் துல்லியமாகச் சொல்ல முடிந்தது.

அங்கு வேத விற்பன்னர்கள் வாழ்ந்த அக்ரஹாரம் பற்றிய செய்தியும் கிடைக்கிறது உதவி பெற்ற கலைஞர்களில் மஹேஸ்வரி என்ற பெண்ணுக்கு 12 பணம் கொடுக்க உத்த்ராவாகியிருக்கிறது அவருடைய சங்கீதப் புலமையைப் பாராட்டி இது அளிக்கப்பட்டது ஜோகன என்பவரின் பாடல் திறமையைப் பாராட்டி அவருக்கும் 12 பணம் தரப்படுகிறது கேமண்ணா என்பவருக்கு இரண்டு பணமும்  12 ஹொன்னு(பொன்னு)ம் தரப்படுகிறது

(கன்னடத்தில் ப என்பதை ஹ என்று மாற்றி உச்சரிப்பார்கள் பத்து- ஹத்து, பள்ளி- ஹல்லி , பொன்- ஹொன்னு ).

அக்காலத்தில் எல்லாக் கல்வெட்டுகளிலும் நிலத்தனம் பற்றி வருகையில் அதன் நான்கு எல்லைகளைக் குறிப்பார்கள் இதன் மூலம் அந்த ஊரின், வட்டாரத்தின்  புவியியல் செய்திகளும்  கிடைக்கின்றன .

இப்போது இந்தக் கல்வெட்டினை கோவில் சுவருக்கு அருகில் ஒரு மேடை எழுப்பி அதில் பாதுகாப்பாக நிறுவியுள்ளனர் .

இந்தக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பும் பஹூகாப்பிலும் ஈடுபட்ட பெரியோர்களின் பெயரையும் ஆர்கனைஸர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

–Subham—

Tags- கர்நாடகத்தில் ,இசை , கல்வெட்டு ,கண்டுபிடிப்பு

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-42; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15818)

Written by London Swaminathan

Post No. 15,818

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PART 42

திருவல்லா

திவ்ய தேசம்    திருவல்லவாழ் – ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்

மூலவர்   கோலப்பிரான், திருவாழ் மார்பன், ஸ்ரீ வல்லபன்

தாயார்    செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி

திருக்கோலம்   நின்ற திருக்கோலம்

திருமுகமண்டலம்   கிழக்கே திருமுக மண்டலம்

பாசுரங்கள்     

மங்களாசாசனம்     நம்மாழ்வார் 11 பாடல்கள் 

திருமங்கை ஆழ்வார் 11 பாடல்கள்

தீர்த்தம்   கண்டாகர்ண தீர்த்தம் பாம்பா நதி

விமானம் சதுரங்க கோல விமானம்

இக்கோயிலில் தினமும் கருடனுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடும், பிரம்மாண்டமான கொடிமரமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்த திவ்ய தேசம் ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று மிகவும் பிரபலம். இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் பிரம்மச்சார்ய விரதம் அனுஷ்டிக்கிறார். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தின் அன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்றும் மட்டுமே, எம்பெருமானுக்கு திருமார்பு தரிசனம் என்பதால், இத்தலத்தில் அந்த இரண்டு தினங்கள் மட்டும் பெண்கள் சன்னதி சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், பெண்கள் சன்னதிக்கு வெளியில் இருந்து சேவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மாசி மாதம், பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு என்ற விழா நடைபெறுகிறது. இது ஒரு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். மார்கழி திருவாதிரை அன்று சிவன் எம்பெருமானின் கோலத்தை காண வந்ததாக ஐதீகம், அதனால் இந்த திருத்தலத்தில் விபூதி பிரசாதமும் அளிப்பார்கள். கண்டாகர்ணனின் சிவபக்தியைக் குறிக்கும் வகையில், சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் விபூதி வழங்கப்படுகிறது.

மே மாதத்தில், ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது, அருகிலுள்ள கோயில்களில் இருந்து 3 பகவதிகள் (காவில் கோயில் தேவதை, படப்பட் கோயில் மற்றும் ஆலம்துரத் கோவில்கள்) இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். கோவில் வடக்கு வாசலில் இருந்து போத்திகளால் சிறப்புப் பல்லக்குகளில் இந்த தெய்வங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாளில் மட்டுமே, இந்த கதவு திறக்கப்படுகிறது.

மற்ற கேரளக் கோயில்களைப் போலவே, இந்த திருக்கோவிலும் கர்ப்பகிரகம் வட்ட வடிவில் உள்ளது. கிழக்குப் பக்கம், வல்லபப் பெருமானின் சன்னதியும், இக்கோயிலுக்குப் பின்னால் சுதர்சன ஆழ்வாருக்கு ஒரு சிறிய சன்னதியும் உள்ளது.

இந்த திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானது என்றும் இன்றும் கூட பூமிக்கு அடியில் இருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப் படுகிறது. மலையாளத்து பாணியில் இந்த திருத்தலத்திலும் பக்தர்களுக்கு பூக்களும் சந்தனமும், பிரசாதமாக ஒரு இலையில் அளிக்கப்படுகிறது.

இங்கு உள்ள இன்னொரு ஆச்சரியமான விஷயம், 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல். இந்த கல் பூமிக்கடியில் இதே 50 அடி ஆழத்தில் சென்று இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. மேலும் இந்த சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லை என்பது இன்னொரு தகவல். இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தால் உருவான ஒரு கருடாழ்வாரை வைத்து உள்ளார்கள். கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து உடனே புறப்படுவதை போல் உள்ளது. இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு (கொடிக் கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. நாலாம்பலம் (துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்) கிரானைட் கற்களால் ஆனது. த்வஜஸ்தம்பத்தின் உச்சியில் சுமார் 3 அடி உயரத்தில் கருடன் பஞ்சலோக சிலை உள்ளது. கோயில் மிகப் பெரியது, த்வஜஸ்தம்பமும் பெரியது.

மலையாள திவ்ய தேசங்களில், சுதர்சன ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கும் திருத்தலம் இது. அதே போல, துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு தனிச் சிறப்பாகும்..

இந்த கோவிலில் துர்வாச ரிஷியின் சிலை உள்ளது, மேலும் அவர் ஒவ்வொரு இரவும் பெருமாளுக்கு பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கள் செல்வம் வேண்டி அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நிகழ்ச்சியின் மூலமாக  எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவது என்பது இதன் பொருள்.

ஸ்தல வரலாறு

சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்த திவ்ய தேசத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று அதிதிகளுக்கு உணவு படைத்து அதன்பின் விரதத்தை முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாள். அப்படி அவள் இந்த விரதத்தில் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அந்த பெண், இந்த அரக்கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக் கொண்டாள். எம்பெருமான் அவளுக்கு தெரியாமல் அந்த அசுரனை வாமன ரூபத்தில் வந்து, சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை பல துண்டுகள் ஆக்கியது. அப்படி வதம் செய்து அவசரம் அவசரமாக துவாதசி பாரணை (விரதம் முடிக்க) செய்யவரும் போது, எம்பெருமான் திருமார்பில் மறைத்து வைத்து இருந்த மகாலக்ஷ்மியை தரிசனம் செய்து, இந்த சிறுவன் எம்பெருமான் தான் என்று நிச்சயம் செய்து, அவனிடம் எம்பெருமானின் திருமார்பு தரிசனம் வேண்டி இந்த பெண் மோக்ஷம் பெற்றாள் என்பது வரலாறு. அவளின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் இங்கே, திருவாழ்மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயர் இந்த திருத்தலத்திற்கு உண்டானதாக வரலாறு.

துர்வாசர் இந்த பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அவர் அப்படி செய்யும் போது 12000 வாழை பழங்கள் எம்பெருமானுக்கு சமர்பித்ததாகவும், அதே போல இன்றும் வருடம் ஒருமுறை இந்த விழா, பன்னீராயிரம் விழா என்று இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

கேரளாவின் கோட்டயம் (Kottayam) மற்றும் செங்கன்னூர் (Chengannur) நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக எளிதில் அடையலாம்.

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி மார்க்கத்திலும் திருவல்லா புகைவண்டி நிலையத்தை அடையலாம். அங்கு இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இந்த திருதலம் உள்ளது. திருவல்லாவை தொடர்ந்து அதனை சூழ்ந்த மற்ற ஐந்து திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம்.

கோட்டயத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செங்கனாச்சேரி

செங்கனாச்சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம்.

திருக்கடித்தானத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவல்லா.

திருவல்லாவிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்வண்டூர்

திருவண்வண்டூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செங்குன்றூர்.

திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புலியூர்

***

பாசுரங்கள்

1808.  

தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*

பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*

மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)     

1809.  

மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*

அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*

மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

 1810.  

பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை ‘மெய் இது’ என்று,*

பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*

மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1811.  

பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று*

எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-

வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1812.  

மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*

துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-

மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1813.  

உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*

அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*

மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1814.  

நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா-

பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*

மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1815.  

மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*

அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-

வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1816.  

வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*

கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*

வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

1817.  

மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*

சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*

இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)

2775.  

அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*

என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-

பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*

மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்-

3321.  

மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய*

வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*

தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்-

கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)  

3322.  

என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*

பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி*

தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்-

நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*   

3323.  

சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய*

பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க*

மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்*

நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*     

3324.  

நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*

பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்*

மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்*

நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.            

3325.  

நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை*

மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்*

கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை*

என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*  

3326.  

காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்*

பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்*

சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்*

மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*

3327.  

பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*

ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*

மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*

நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*

3328.  

நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*

ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*

மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்*

நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*   

3329.  

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ*

குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*

மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்*

சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?* 

3330.  

தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்*

தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்*

நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்*

நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*  

3331.  

நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்*

சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த*

நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்*

சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*   

–SUBHAM—

TAGS- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-42; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவல்லா

S Nagarajan Articles index for MAY 2026 (Post No.15,817)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,817

Date uploaded in London – 2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Articles index for MAY 2026

1-5-26  15679 ஹம்பியில் உள்ள ஊசி துவார கேமரா அமைப்புள்ள     விருபாக்ஷர் ஆலய அதிசயம் (24-4-26 கல்கி கட்டுரை)                 2-5-26 15685 S.Nagarajan Articles index April 2026                              3-5-26 15689 பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம் (30-4-26 மாலைமலர் கட்டுரை)                                              4-5-26 15693 பெருமை மிகு தமிழகத்தில் சோழ மண்டலம் (30-4-26 மாலைமலர் கட்டுரை)                                               5-5-26 15696 பெருமை மிகு தமிழகத்தில் கொங்கு மண்டலம் (30-4-26 மாலைமலர் கட்டுரை)

6-5-26 15702 பெருமை மிகு தமிழகத்தில் தொண்டை மண்டலம் (30-4-26 மாலைமலர் கட்டுரை)                                                                                                             7-5-26 15706 இசை தரும் உற்சாகம் (3-5-26 தினமணி கட்டுரை)                           8-5-26 15709 விஜயபாரதம் முப்பெரும் விழா – எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு – சப்த ரிஷிகள் நூல் வெளியீட்டு விழா          9-5-26 15714 டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் – தனித்துவ வழி கண்ட தலைவர்                                                                                                                       10-5-26 15718 பரமபூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் – பன்முகம் கொண்ட பண்பாளர்                                                                                                              11-5-26 15722 ஶ்ரீ ஏக்நாத் ரானடே – தீர்வு கண்ட தீரர் – சப்தரிஷிகளின் வரிசையில் மூன்றாவது ரிஷி!                                          12-5-26 15727 ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி – பல்துறை கண்ட வித்தகர் – சப்தரிஷிகளில் நான்காவது ரிஷி!                                    13-5-26 15731 ஶ்ரீ சிவராம்ஜி – சாமானிய சாதனையாளர் சப்தரிஷிகளில் ஐந்தாவது ரிஷி                                                           14-5-26 15735 ஶ்ரீ சூரியநாராயணராவ் ஜி அசாத்திய சாதகர் சப்தரிஷிகளில் ஆறாவது ரிஷி!

15-5-26 15739 வீரத்துறவி இராம.கோபாலன் – சப்தரிஷிகளில் ஏழாவது ரிஷி!                                                             16-5-26 15743 மரணத்தைக் கண்டு அஞ்சாதே – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை (கல்கிஆன்லைன் 4-5-26 கட்டுரை)                          17-5-26 15747 வள்ளுவர் கூறும் நீடித்து வாழ்வார் யார்? (கல்கிஆன்லைன் 9-5-26 கட்டுரை)                                                                                                                                 18-5-26 15753  மனதில் குடியிருக்கும் ஆறு பாம்புகளை அடக்குங்கள்! ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை (10-5-26 கல்கிஆன்லைன் கட்டுரை)             19-5-26 15757 ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசய உலகம் தான்! நவீன மூளை இயல் தரும் செய்தி! (தினமணி 17-5-26 கட்டுரை)              20-5-26 15761 ஜாக்கிரதை! சபலங்கள் உங்களை வாழ்க்கையில் ஆபத்தில் கொண்டு விடும்! (18-5-26 கல்கிஆன்லைன் கட்டுரை)                  21-5-26 15765 நாஸ்திகனுக்கு என்ன வேலை சனாதன தர்மத்தில்?                 22-5-26 15769 நீண்ட ஆயுள் தரும் ‘ப்ளூ ஜோன்ஸ்’ ரகசியங்கள்: டான் பூட்னர் கூறும் 8 பழக்க வழக்கங்கள் என்ன? (19-5-26 கல்கிஆன்லைன் கட்டுரை)-5-26                                                      23-5-26 15774

பெண் சாமுராய் உண்டா? ஆச்சரியத் தகவல் (15-5-26 மங்கையர் மலர் கட்டுரை)                                          24-5-26 15779 எல்லன் ஒச்சுவா – அதிசயப் பெண்மணி! (13-5-26 மங்கையர் மலர் இதழில் பிரசுரமான கட்டுரை)                                25-5-26 15783 மா ஆனந்தமயி (30-4-26 கல்கிஆன்லைன் கட்டுரை)             26-5-26 15787 ராம நாம மஹிமை – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை (24-5-26    தீபம் கட்டுரை)                                                    27-5-26 15791 உணவை எப்படி சாப்பிட வேண்டும்? நூறு வார்த்தைகளில் பதில் (ஹெல்த்கேர் ஏப்ரல் 26 கட்டுரை)                              28-5-26 15796 புதிய ஆய்வு –  ஜங்க் ஃபுட் மூளையை பாதிக்கும்! (ஹெல்த்கேர் ஏப்ரல் 26 கட்டுரை)                                   29-5-26 15800 மரணத்தை வெல்ல ஒரு மாநாடு (கல்கிஆன்லைன் கட்டுரை)                                                         30-5-26 15805 ஏரோபிக் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள் யாவை? (ஹெல்த்கேர் மே 26 கட்டுரை)                                         31-5-26 15808 உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள 81 கட்ட வரைபடம்! (கல்கி ஆன் லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

**

Humility and Sweet Speech: Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 91-95) Post.15,816

Written by London Swaminathan

Post No. 15,816

Date uploaded in London –1 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

In the following five couplets Tiru Valluvar advised all to be humble and speak softly, gently and pleasantly; we see the same advice from Vedas to modern day Tamil poet Bharati.

Valluvar used Sanskrit word Mukham is used in two of the following couplets.

Vinaya is humility. We have Sanskrit sayings

  Vidya vinayena shobhate: “Knowledge is adorned by humility.” This popular proverb highlights that learning is only beneficial when tempered with a modest character.

  Namanti phalino vriksha namanti gunino janaah: “Trees laden with fruit bend low; similarly, virtuous people bow with humility.” This classic verse (from the Subhashitaratnabhandagara) illustrates that greatness and humbleness go hand-in-hand

Humility makes one to see all with kindness says Bhagavad Gita 5-18:

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि ।

श‍ुनि चैव श्वपाके च पण्डिता: समदर्शिन: ॥ 5-18 ॥

vidyā-vinaya-sampanne

brāhmaṇe gavi hastini

śuni caiva śva-pāke ca

paṇḍitāḥ sama-darśinaḥ- 5-18

The humble sages, by virtue of true knowledge, see with equal vision a learned and gentle brāhmaṇa, a cow, an elephant, a dog and a dog-eater [outcaste].

Great men think alike!

Krishna washed the feet of poor Sudama; Christ also followed Krishna.

Jesus washing feet of desciples; he followed what Hindus did.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Part 19

Chapter 10  இனியவை கூறல் kind words ; Pleasing speech or Courtesy;

1.2.6 The Utterance of Pleasant Words

91.What are sweet words but the guileless utterance of the love of a mighty heart that has seen the light of truth?- A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

91.The speech of enlightened men will be both pleasant

And kind, with no trace of perfidy- S M Diaz, I G of Police- SMD Year 2000

***
91.Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.- Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***
91.The words of Seers are lovely sweet
Merciful and free from deceit – Suddhananda Bharathiyar- SB

***
91.Pleasing words are those spoken with love by the virtuous who are free from guile- EVS Publishers, Singapore- EVS. Year 1986

***

91.Kind speech is love-filled, guile-free speech;

The speech of those who have seen the Real – H A Popley – HAP (not full book) Year 1931

***

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

92.Lovelier than the gift flowing out of fulness of heart is a kind word that graces the lips of a cheerful one- ANM+2

***

92.The kindly word and loving smile, accompanying a spontaneous gift,

Make the gift even more valuable – SMD

***

92.A pleasant word with beaming smile’s preferred,
Even to gifts with liberal heart conferred.
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind. – GUP

***

92.Sweet words from smiling lips dispense
More joys than heart’s beneficence.         – SB

***

92.Pleasing words uttered with a cheerful look are even better than giving with a willing heart—EVS

***

92.Better than giving with a willing mind

Is giving with a cheery smile and kindly word-– HAP

***

92. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல் னாகப் பெறின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

93.Where there is a gracious smile, a kindly look and a  sweet word gushing out from a heart sincere, there righteousness has its solemn throne- ANM+2

***

93.Gift becomes a virtue when it is given spontaneously

With cheerful countenance and kind words- SMD

***

93.With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue. – GUP

***

93.Calm face, sweet look, kind words from heart
Such is the gracious virtue’s part– SB

***

93.Speaking pleasingly with a loving heart and a cheerful look is true virtue—EVS

***

93.With smiling face and kindly look kind words to say

If from the heart they come, is Virtue real-– HAP

***

93. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

94.Poverty, that aggravates man’s woes, never clouds the happiness of one who utters words that breathes gladness to all- ANM+2

***

94.Distressing poverty will not affect a man,

Who please everyone by his kind words- SMD

***

94.The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow’s prey be found.
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech. – GUP

***

94.Whose loving words delight each one
The woe of want from them is gone– SB

***

94.There is no woeful poverty for those who speak pleasing words to all—EVS

***

94. not translated– HAP

***

94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

95.Humility and sweetness of speech are the twin ornaments a man can boast on earth- ANM+2

***

95.Humility and pleasant speech constitute one’s ornaments;

Other things do not count- SMD

***

95.Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments). – GUP

***
95.To be humble and sweet words speak
No other jewel do wise men seek.   – SB     

***

95.No jewels are more befitting a man than humility and pleasing speech—EVS

***

95.Humility and kindly speech are jewels rare;

All else are baubles of no worth—HAP

***

95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

To be continued………………………

Tags- Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 91-95) , Part 19, Chapter 10  இனியவை கூறல், kind words ; Pleasing speech

மதுரையில் ஒரு மர்மப் பெண்ணின் சிலை! புதிரை விடுவிக்க வாருங்கள்! (Post.15,815)

Written by London Swaminathan

Post No. 15,815

Date uploaded in London –1 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் செய்த ஆராய்ச்சியில் திரு விளையாடல் புராணத்தில் வரும் கதைதான் பொருத்தமாக உள்ளது ஆயினும் படத்தை வெளியிட்ட ஓவியர் சில்பி அவர்களோ  இது பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகின்றன என்ற வரியுடன் முடித்துவிட்டார்; விவரங்கள் எதையும் சேர்க்கவில்லை ; உங்களுக்குத் தகவல் தெரிந்தால் எழுதுங்கள்! மதுரைப் பெண்ணின் மர்மத்தை விடுவிப்போம்

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணக் கதை ஓரளவுக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது:

விருத்த குமாரன் பாலரான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 23வது படலமாகும்.

 விருத்த குமாரன் பாலரான படலம்

விக்கிரம பாண்டியன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விரூபாக்ஷன் என்னும் வேதியன் ஒருவன் இருந்தான்.

(விரூபாக்ஷன்—சிவனின் பெயர்;மாறுபட்ட கண்களை உடையவன்; அதாவது மூன்று கண்களை உடையவன் அல்லது அப்பர் சொல்வது போல ஒன்றரைக் கண்ணன் ; ஏனெனில் சிவபெருமான் பாதிக்கண்ணை பார்வதிக்குக் கொடுத்துவிட்டான் அர்த்நாரீஸ்வர வடிவத்தில்)

அவன் மனைவி சுபவிரதை; இருவரும் நெடுங்காலம் குழந்தைகளின்றிப் பின் தான தருமங்கள் செய்ய ஒரு குழந்தை பிறந்தது. கெளரி என்பது அவள் பெயர்; இளம் வயது முதல் சிவனிடம் சிந்தை கொண்டு சைவ நெறியினைப் போற்றி வழிபட்டு வந்தாள். மணப்பருவம் வந்தது.

வேதியர் குலத்து இளைஞன் ஒருவன் இவர்கள் வீட்டுக்கு விருந்தினனாக வந்தான். கோத்திரம் குலம் விசாரித்துச் சாத்திரப்படி அவனுக்கு மணம் முடித்தார்கள்  ; அவனோ வைணவ குலத்தைச் சார்ந்தவன்.

ஐயர்- ஐயங்கார் மோதல்

வாழ்க்கைப்பட்ட இடத்தில் சிக்கல் ஏற்பட்டது; அவளை அவர்கள் மதித்து நடத்தவில்லை. வீட்டை விட்டு வெளியேறும் போது அவள் சமையல் கட்டுக்குப் போகாதபடி தடுக்கப் பேரறையில் விட்டுப் பூட்டி வைத்தனர். ஏனெனில் சைவப்பெண் கையால் சமைக்கக் கூடாது என்பது அவர்கள் விதி. சமையல் அறைக்குப் பூட்டுப்போட்டனர்.

சிவனடியாருக்குச் சோறு போட்டுப் பழகிய அவள் இப்பொழுது வெறும் சடமாக அறையில் கிடப்பதை வெறுத்தாள்.  ஒருநாள், வயது முதிர்ந்த சிவனடியார் ஒருவர் பசியால் இளைத்து இவள் வீட்டுக்கு வந்தார் வெளிக்கதவைத் திறந்து அவரை உள்ளே விட்டாள்.

சமைக்க முடியாதபடி பூட்டும் தாளும் அவளைத் தடுத்து நிறுத்தின. சிவனடியார் இதை உணர்ந்து அவர் ஒரு பார்வை பார்த்தார். தாளும் பூட்டும் தாமாகக் திறந்து கொண்டன; இலை போட்டுச் சோறு பரிமாறி அவர் பசியையும் போக்கினாள்

வெளியூருக்குச் சென்றிருந்த அவள் மாமனும் மாமியும் கணவனும் அலுத்துக் களைத்து திடீரென்று வீட்டுக்குள் நுழைந்தனர்.அவளுக்கு அச்சம் மேலிட்டது அவளுடைய அச்சத்தைப் போக்கும் வகையில் முதியவாகராக  வந்தவர் சிறு குழந்தையாக மாறினார் !

 அவர் குழந்தையாகத் தவழ்வதைக் கண்டு கெளரி வியப்படைந்தாள்; இறைவன் திருவிளையாடல் இது என்பது அவள் அறிந்து கொண்டாள்.யார் இந்தக் குழந்தை? என்று கோபத்தோடு கூச்சலிட்டார்கள் மாமனும் மாமியும்.

“பக்கத்து வீட்டுத் தத்தனுடைய குழந்தை அது; பார்த்துச் கொள்ளச் சொல்லிச் சென்றார்கள்” என்று அவள் சொன்னாள். எனினும் அக்குழந்தை சைவ வீட்டுப் பிள்ளை என்பதால் அவர்கள் திட்டினார் கள் “தூக்கி வெளியே எறி” என்று சொல்லி அக்குழந்தையை வெளியே போட்டார்கள். அவளையும் வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னார்கள்.

குழந்தையோடு வெளியே நடந்தாள். சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டு அழுதாள்; அவள் காணும்போதே குழந்தை உருவம் மாறிப் பரம் பொருளாகிய சிவனார் பார்வதியோடு காட்சியளித்தார்.

இது திருவிளையாடல் புராணக் கதை ; ஒரு அதிசயம் என்னவென்றால் சைவப்பெரியார்கள் நால்வரும் பாடிய அதிசய நிகழ்ச்சி இது; ஆகவே 1500 ஆண்டுகளுக்கு அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவம் இது .

சிலையில் உள்ள பெண் நகை நட்டுக்களைப் பார்க்கையில் அவள் தெய்வீகப்பெண் அல்லது மஹாராணி போலத் தோன்றுகிறார்; ஆகவே வேறு ஏதேனும் கதை அல்லது சம்பவத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்; தெரிந்தால் எழுதுங்கள் .

–subaham-

Tags- விருத்த குமாரன் பாலரான படலம், மதுரையில் ஒரு மர்மப் பெண்ணின் சிலை, புதிரை விடுவிக்க வாருங்கள், திருவிளையாடல் புராணம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 67; இந்து மத கலைச்சொல் அகராதி-67 (Post No.15,814)

Written by London Swaminathan

Post No. 15,814

Date uploaded in London –1 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 67


Mātaṅga (Sanskrit: मातंग) literally means an elephant.

MATANGA. ‘An elephant.’ A man who was brought up as a Brahman but was the son of a Chandala. His story, as told in the Mahabharata, relates that he was mercilessly goading an ass’s foal which he was driving. The mother ass, seeing this, tells her foal that she could expect no better, for her driver was no Brahman but a Chandala. Matanga, addressing the ass as ” most intelligent,” begged to know how this was, and was informed that his mother when intoxicated had received the embraces of a low-born barber, and that he, the offspring, was a Chandala and no Brahman. In order to obtain elevation to the position of a Brahman, he went through such a course of austerities as alarmed the gods. Indra refused to admit him. He persevered again for a hundred years, but still Indra persistently refused such an impossible request, and advised him to seek some other boon. Nothing daunted, he went on a thousand years longer, with the same result. Though dejected he did not despair but proceeded to balance himself on his great toe. He continued to do this for a hundred years, when he was reduced to mere skin and bone, and was on the point of falling. Indra went to support him, but inexorably refused his request, and, when further importuned, “gave him the power of moving about like a bird, and changing his shape at will, and of being honoured and renowned.” In the Ramayana, Rama and Sita visited the hermitage of Matanga near Rishyamukha mountain

***

ME Words

Medathithi

Name of a Vedic seer in Kanwa clan. There is a legend in one of the Upanishads that he was carried up to heaven by Indra in the form of a ram, because the god had been pleased with his austerities.

He is compared with Ganymede of Greece who was abducted by the eagle of Zeus. His Phrygian cap denoting an eastern origin, and a river god.

***

Medhavi

Son of rishi Baladhi. As a result of his father’s severe penances, he had obtained a boon that he wouldn’t die as long as the mountain remain standing. Thinking that he was immortal he became arrogant and illtreated other brahmana. At last rishi Dhanusaksha caused a ram to be born and this ram destroyed the mountain with its horns and thus brought an end to Medhavi’s life. This episode was related by Bharadwaja to his son Yavakrita to impress upon him that he who became arrogant came to grief in the end.

***

Menaka

A beautiful apsaras whom Indra sent to earth to entice Vishwamitra rishi and distract him from his severe penances because Indra became concerned at the thought that Vishwamitra may accumulate too much merit and thus threaten his own security. Menaka appeared before him and seduced him. He lived with her for long and Menaka gave birth to Shakuntala .

***

Mena

In the rig Veda Mena was the daughter of Vrishanaswa. Indra fell in love with here. In the puranas, wife of Himavat and mother of Uma and ganga and of a son named Mainaka .

***

Meru

A fabulous mountain  in the centre of the earth, on which is situated swarga, the heaven of Indra. It is north of Himalaya. It is depicted as north pole in some descriptions. Other names are Sumeru, Hemadri Ratnasaanu, Karnikaachala, Amaraadri, Deva Parvata .

***

Mithila

Capital city of Videha, north Bihar. It was the country of king Janaka and the name of his capital Janakapura, now called Janakpur. Since Sita devi was born here she was called Mythili.

***

Mlechcha

Foreigners, barbarians, people who came from out side india. Sangam tamil books also referred to them as people of harsh words “incomprehensible speech” or unintelligible accents; During medieval times, the term was frequently used to refer to Arab, Persian, and Muslim invaders who came into the subcontinent.

Mlecha in Mullaippattu:

In the200 year old  Sangam Tamil literature we come across the word Mlecha in Mullaippaattu (line 66). Poet Napputhanar called the Yavanas as Mlechas. He described them as dumb who used only sign language. Lot of Roman or Greek bodyguards were used by the Tamil kings. Tamils called the Yavanas (Romans) ‘mlechas’ because they did not speak Tamil and they were from foreign soil.

Mlecha in Mahabharata: In the Adiparavam and Drona Parvam we come across the word Mlecha referring to an engineer (Purochana) who constructed the lac house and kings who fought in the Great Bharata War. They were all from the North West of India. Vidura was said to have spoken to him in the Mlecha language

Nigel Lewis observation on Mlecha in his book ‘The Book of Babel’ is very interesting. He says “the Greek equivalent of barbarians was Aglossoi, the speechless, while the Poles  had the same idea about Germans, whom they called ‘niemiec’, the dumb people. The Turks got this word from the Poles and used it for the Austrians. Even Coleridge used it as nimiety with regard to Germans”.

“Commenting on the word vealh, oe wealh, the Barbarian British, or Welsh, Max Muller writes it is supposed to be the same as the Sanskrit mlekkha, and, if so,  it meant originally a person who talks indistinctly. Mlekkah has also been identified with ‘Beluchi’: a strange area of probable common ground between Beluchistan and the principality of Wales, whose very name was an Anglo Saxon insult”.

“Also insulting was the now defunct nickname for the Jamaican Jabbering crow, it was called the Welshman because according to Edward Long ‘with their strange , noisy gabble of guttural sounds’… they are thought to have much  the confused vociferation of a party of Welsh people”

-from ‘ The Book of Babel’

Mleccha (म्लेच्छ).—A tribe of people of ancient India. This tribe was born from the tail of the celestial cow Nandinī, kept by Vasiṣṭha for sacrificial purposes when there was a fight between Viśvāmitra and Vasiṣṭha. Mahābhārata gives the following information regarding them.

The mlecchas who sprang up from the tail of the celestial cow Nandinī sent the army of Viśvāmitra flying in terror. (Śloka 38, Chapter 174, Ādi Parva)

***

Meganatha

Eldest Son of Ravana ; his epithet is Indrajit, one who conquered indra. His heroic acts were described in Ramayana.

***

Meghaduta

Cloud messenger is the meaning. It is a celebrated work by Kalidasa. It is the oldest travelogue describing the beauty of central india and north India; it is the oldest meteorological work I Sanskrit about the progress of South West Monsoon. A banished yaksha implores the monsoon cloud to covey his message to his wife

***

Mitra (Varuna)

Vedic god Mitra meant sun, positive energy and light. He is associated with Varuna in the Vedic hymns; there Varuna meant sea, darkness and negative energy. They were like positive and negative nodes in a battery. Both are required to produce heat or light or energy. Mitra was the ruler of the day and Varuna was the ruler of night. They together uphold and rule the earth and sky, guard the world, encourage religion, and chastise sin. Mitra was one of the Adityas or sons of Aditi. One more example for link is sun/Mtra draws sea water/Varuna and pours down as rain/ Indra that goes to Sea/Varuna.

Mitra is a Vedic god. He is associated with the Sun. Mitra is another name of Sun as well. This Vedic god was worshipped throughout the Roman empire 2000 years ago. At one time there were 700 temples for Mitra in Rome. The worship reached Rome from Iran in a degenerated form. Wherever the rule of the Romans was extended there the cult of Mitra was also practised. Even in London they have excavated one Mitra temple sixty years ago.

In London an inscription dated to 310 CE was discovered. It said, “For the salvation of our Lords, the four emperors and the Caesar, and to the God Mithras the invincible sun from the east to the west”. Most of the British Christian churches were built in the model of Mithraeums.

Mithra in Germany, Picture by Subhashini, THF

To be continued……………………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 67; இந்து மத கலைச்சொல் அகராதி-67 ,Mitra, Menaka, Medathithi

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-41; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post 15,813)

Written by London Swaminathan

Post No. 15,813

Date uploaded in London –1 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 41

திருவித்துவக்கோடு 

மண்டலம் : மலை நாடு

கடவுளர்கள்: அபாயபிரதன் ,பத்மபாணி நாச்சியார்

மூலவர்   உய்ய வந்த பெருமாள் ; அபயபிரதன்

தாயார்    வித்துவகோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார்

திருக்கோலம்   நின்ற திருக்கோலம்

திருமுகமண்டலம்   தெற்கே திருமுக மண்டலம்

பாசுரங்கள் 10

மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார் 10 பாடல்கள்

தீர்த்தம்    சக்கர தீர்த்தம்

விமானம்  தத்வ காஞ்சன விமானம்

கோவிலின் சுவர்களில் அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி, தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த வண்ணங்களில் பேரழகு பொருந்தியதாக உள்ளன.

இந்த திவ்ய தேச கோவிலில் நுழைந்த உடன் சிவன் சந்நிதி உள்ளது. அதன் பின் எம்பெருமான் சந்நிதி உள்ளது; இங்குள்ள எல்லா நான்கு விஷ்ணு மூர்த்திகளும் நின்ற திருக்கோலத்தில், சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஏந்தி காட்சி அளிக்கின்றனர். இந்த நான்கு மூர்த்திகளும், வாசுதேவ, சங்கர்ஷணன், பிரத்யூமன அனிருத்தர் என்று எம்பெருமான் வியூகத்தில் தன்னை பிரித்துக்கொண்டது போல உள்ள வடிவுகளாக காட்சி அளிக்கின்றன.

முன்னே இருக்கும் சிவனுடன் சேர்ந்து, இது ஐந்து மூர்த்தி தலம் என்றும், ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்றும் கூறபடுகிறது. இங்கு தீபம் ஏற்றி துளசி கொண்டு பூஜை செய்தால், மனதில் உள்ள கவலைகள் நீங்கும் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்றும், வேலை தடை உள்ளவர்களுக்கு உத்தியோக தடைகள் நீங்கி வேலை கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.

மாதாமாதம் வரும் திருவோணம் நக்ஷத்திரம் மற்றும் வைகுந்த ஏகாதசி ஆகியவை இங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஆகும். காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளி இருப்பதாலும் பத்து நதிகள் இணைந்து பாரத புழா நதிக்கரையில் உள்ளதாலும் இதுவும் பித்ரு தர்ப்பணம் கொடுக்கும் இடமாக கருதப் படுகிறது.

குலசேகர ஆழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களா சாசனம், செய்யபட்ட பெருமாள். மூலவரின் திருநாமத்தை உய்ய வந்த பெருமாள் என்ற அர்தத்தில் உன்னைவிட்டால் எங்ஙனம் நான் உய்வேன் என்று குறிப்பிட்டது இந்த பெருமாளைத்தான்.

துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள்வழிபாட்டிற்காக சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர். முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மானித்தனர்.

 வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது. நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.

கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ஷோரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஷோரனூரிலிருந்து குருவாயூர் செல்லும் பாதையில் 16 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து குறுகிய பாதையில் சுமார் 1 கிலோ மீட்டர் நடந்தால் வரும். பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து பாரதபுழாய் ஆற்றை கடந்து 1.5 கிலோமீட்டர் நடந்தால் கோவிலை அடையலாம்.

***

பாசுரங்கள்

688.  

தரு துயரம் தடாயேல்*  உன் சரண் அல்லால் சரண் இல்லை*

விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மானே*

அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன்

அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே (2)   

689.  

கண்டார் இகழ்வனவே*  காதலன்தான் செய்திடினும்*

கொண்டானை அல்லால்*  அறியாக் குலமகள் போல்*

விண் தோய் மதில் புடை சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ

கொண்டாளாயாகிலும்*  உன் குரைகழலே கூறுவனே

690.  

மீன் நோக்கும் நீள் வயல் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்-

பால் நோக்காயாகிலும்*  உன் பற்று அல்லால் பற்று இலேன்*

தான் நோக்காது*  எத்துயரம் செய்திடினும்*  தார்-வேந்தன்

கோல் நோக்கி வாழும்*  குடி போன்று இருந்தேனே

691.  

வாளால் அறுத்துச் சுடினும்*  மருத்துவன்பால்*

மாளாத காதல்*  நோயாளன் போல் மாயத்தால்*

மீளாத் துயர் தரினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ

ஆளா உனது அருளே*  பார்ப்பன் அடியேனே

692.  

வெங்கண்-திண்களிறு அடர்த்தாய்*  வித்துவக்கோட்டு அம்மானே*

எங்குப் போய் உய்கேன்?*  உன் இணையடியே அடையல் அல்லால்*

எங்கும் போய்க் கரை காணாது*  எறிகடல்வாய் மீண்டு ஏயும்*

வங்கத்தின் கூம்பு ஏறும்*  மாப் பறவை போன்றேனே

693.  

செந்தழலே வந்து*  அழலைச் செய்திடினும்*  செங்கமலம்

அந்தரம் சேர்*  வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்*

வெந்துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்

அந்தமில் சீர்க்கு அல்லால்*  அகம் குழைய மாட்டேனே

694.  

எத்தனையும் வான் மறந்த*  காலத்தும் பைங்கூழ்கள்*

மைத்து எழுந்த மா முகிலே*  பார்த்திருக்கும் மற்று அவை போல்*

மெய்த் துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்

சித்தம் மிக உன்பாலே*  வைப்பன் அடியேனே

695.  

தொக்கு இலங்கி யாறெல்லாம்*  பரந்து ஓடித்* தொடுகடலே

புக்கு அன்றிப் புறம்நிற்க*  மாட்டாத மற்று அவை போல்*

மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்

புக்கு இலங்கு சீர் அல்லால்*  புக்கிலன் காண் புண்ணியனே

696.  

நின்னையே தான் வேண்டி*  நீள் செல்வம் வேண்டாதான்*

தன்னையே தான் வேண்டும்*  செல்வம்போல் மாயத்தால்*

மின்னையே சேர் திகிரி*  வித்துவக்கோட்டு அம்மானே*

நின்னையே தான் வேண்டி*  நிற்பன் அடியேனே

697.  

வித்துவக்கோட்டு அம்மா*  நீ வேண்டாயே ஆயிடினும்*

மற்று ஆரும் பற்று இலேன் என்று*  அவனைத் தாள் நயந்து*

கொற்ற வேல்-தானைக்*  குலசேகரன் சொன்ன*

நற்றமிழ் பத்தும் வல்லார்*  நண்ணார் நரகமே (2)

–subham—

Tags- திருவித்துவக்கோடு Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-41; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

கொஞ்சம் போனை ஆஃப் செய்யுங்கள்! மூளைத் திறன் கூடும்! (Post No.15,812)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,812

Date uploaded in London – 1 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தினமணி 31-5-26 இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை

கொஞ்சம் போனை ஆஃப் செய்யுங்கள்! மூளைத் திறன் கூடும்! 

ச. நாகராஜன் 

கையில் போனை வைத்துக் கொண்டு இடைவிடாமல் யூ டியூப், சானல்களைப் பார்த்தல், இணையதள வம்புகள், யாருடனாவது தேவையற்ற அரட்டை ஆகிய இவற்றையெல்லாம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அறிவியல் தரும் ஒரு லேடஸ்ட் அறிவுரை – கொஞ்சம் போனை ஆஃப் செய்யுங்கள் – உங்கள் மூளைத் திறன் கூடும் என்பது தான்! 

சோஷியல் மீடியாக்களின் பாதிப்பு அனைவரையும் அதற்கு அடிமையாக்குவது தான். ஒரு நிமிடம் சாலையில் நின்று பாருங்கள். ஆளுக்கொரு போனை கையில் வைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு அல்லது சில சானல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு அனைவரும் போவதைக் காணலாம்.

PNAS Nexus இதழில் சமீபத்தில் வெளியான ஒரு சுவையான ஆய்வின் முடிவை போனைக் கையில் வைத்திருக்கும் அனைவரும் அறிய வேண்டியது அவசியம்.

 467 நபர்கள் இந்த ஆய்வுக்கு உட்பட்டனர். 14 நாட்கள் இவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் போனில் பேசவும் போனில் டெக்ஸ்ட் செய்து செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இணையதளத்தில் உலாவி நேரத்தைச் செலவிடுவது தடை செய்யப்பட்டது. சோஷியல் மீடியாக்கள் அனைத்தும் போனிலிருந்து நீக்கப்பட்டது.

 ஐந்து மணி நேரம் ஸ்கீரின் டைமாகச் செலவழித்தவர்கள் இப்போது மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே அதில் செலவழிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

 இரண்டு வார முடிவில் அவர்களது கவனக் குவிப்பு அதிகரித்தது. மனநலம் மேம்பட்டது .பொதுவாக அவர்கள் உடல்நலமும் மேம்பட்டது. மனச்சோர்வுக்கான அடையாளங்களையே காணோம். அவர்கள் நடத்தையில் நல்ல மாறுதலும் தென்பட்டது.

 அட, கொஞ்சம் நேரத்தை போனில் குறைத்ததற்கே இவ்வளவு ஆக்கபூர்வமான முன்னேற்றமா என்று அனைவரும் வியந்தனர்.

 இந்த PNAS Nexus ஆய்வு ஒருபுறம் இருக்க, 2025 நவம்பரில் JAMA Network பிரசுரித்த ஒரு ஹார்வேர்ட் ஆய்வு இன்னும் பல சுவையான தகவல்களைத் தருகிறது.

 இதில் கலந்து கொண்ட 400 தன்னார்வலர்கள் சிறிது நேரம் போனை மூடி வைத்தால் கூட, – சோஷியல் மீடியாக்கள், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்டவற்றிலிருந்து தள்ளி இருந்தாலும் கூட – குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது என்பதைக் கண்டனர். மனச்சோர்வு 24.8 சதவிகிதமும், கவலை 16.1 சதவிகிதமும் இன்ஸோம்னியா எனும் தூக்கமின்மை வியாதி 14.5 சதவிகிதம் குறைகிறது என்றும்

ஆய்வறிக்கை கூறுகிறது.

 ஆக போன் மூலம் சோஷியல் மீடியாக்களுக்கு அடிமையாவதை ஒரு நாளைக்குக் கொஞ்ச நேரம் மட்டும் குறைத்து ஒரு இரண்டு வாரம் நீங்களே சோதித்துப் பார்க்கலாம் – முன்னேற்றம் ஏற்படுகிறதா இல்லையா என்று!

 போனை ஆஃப் செய்து தான் வைப்போமே – கொஞ்ச நேரம் மட்டும் – தினமும்!!

**

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-40; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்(Post.15,811)

Written by London Swaminathan

Post No. 15,811

Date uploaded in London –31 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவாட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் ஆகும். பரளி, கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய நதிகள் இந்த இடத்தை வட்டமாகச் சூழ்ந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. மலைநாட்டுத் திருப்பதியில் வரும் 13 கோயில்களில் இருப்பது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்.

திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மலைநாட்டுக் கோயில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள். அதில் நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.

மூலவர்   :     ஆதிகேசவ பெருமாள்

தாயார்     :     மரகதவல்லி நாச்சியார்.

தீர்த்தம்    :     கடல் வாய் தீர்த்தம்வாட்டாறுராம தீர்த்தம்

ஊர்       :     திருவாட்டாறு

மாவட்டம்  :     கன்னியாகுமரி

ஆதிகேசவ பெருமாள் கோயில் உலகப் புகழ்பெற்றது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

இந்த ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வக் கோயிலாக விளங்கியது. புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், இந்தக் கோயிலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டது.

மூலவர்: மூலவரான ஆதிகேசவ பெருமாள் 22 அடி நீளத்தில், கடுசர்க்கரை யோகம் என்னும் மூலிகைக் கலவையால் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.

பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.

இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். 

ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். 

கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும்மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறதுதிருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

****

பாசுரங்கள்

3838.  

அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்-

அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*

இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்*

மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)

3839.  

வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்*

கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*

பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து*

நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.

3840.  

நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி*

மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*

விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே*

எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!

3841.  

என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து*

வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*

மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்*

நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.

3842.  

வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே*

நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*

தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை-

தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே

3843.  

தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்*

நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*

மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க*

கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே.

3844.  

குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்*

திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*

வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்*

விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.

3845.  

மெய்ந்நின்று கமழ்துளவ*  விரைஏறு திருமுடியன்*

கைந்நின்ற சக்கரத்தன்*  கருதும்இடம் பொருதுபுனல்*

மைந்நின்ற வரைபோலும்*  திருஉருவ வாட்டாற்றாற்கு*

எந்நன்றி செய்தேனா*  என்நெஞ்சில் திகழ்வதுவே?

3846.  

திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்*

திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*

புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்*

இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே.

3847.  

பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்*

அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*

பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு*

வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.

3848.  

காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த*

வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*

பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்-

கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)

–subham—

Tags-40Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-40; திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவாட்டாறு ,ஆதிகேசவ பெருமாள் கோயில்

More Narada Bhakti Sutras in June 2026 Calendar with English Explanations by Swami Vivekananda (Post.15810)

Written by London Swaminathan

Post No. 15,810

Date uploaded in London –31 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 In May 2026 Calendar we saw 31 aphorisms; some more Sutras from Narada Bhakti Sutra are given below.

***

Festival Day- June 21 International Yoga Day.

Auspicious Days — June-4, 7, 17, 18, 24.

New moon day -14; Full moon days-29; Ekadasi Fasting Days-11,25.

***

नारदभक्तिसूत्राणि          

Taken from Sanskritdocuments website; thanks.


continued from last month……..

Following Sanskrit version is taken  from Sanskritdocuments.com;thanks

न तेन राजा परितोषः क्षुच्छान्तिर्वा । ३२ – २.०८

तस्मात् सैव ग्राह्या मुमुक्षुभिः । ३३ – २.०९

          तृतीयोऽध्यायः

          भक्तिसाधनानि

तस्याः साधनानि गायन्त्याचार्याः । ३४ – ३.०१

तत्तु विषयत्यागात् सङ्गत्यागात् च । ३५ – ३.०२

अव्यावृत्तभजनात् । ३६ – ३.०३

लोकेऽपि भगवद्गुणश्रवणकीर्तनात् । ३७ – ३.०४

मुख्यतस्तु महत्कृपयैव भगवत्कृपालेशाद् वा । ३८ – ३.०५

महत्सङ्गस्तु दुर्लभोऽगम्योऽमोघश्च । ३९ – ३.०६

लभ्यतेऽपि तत्कृपयैव । ४० – ३.०७

तस्मिंस्तज्जने भेदाभावात् । ४१ – ३.०८

तदेव साध्यतां तदेव साध्यताम् । ४२ – ३.०९

दुस्सङ्गः सर्वथैव त्याज्यः । ४३ – ३.१०

कामक्रोधमोहस्मृतिभ्रंशबुद्धिनाशकारणत्वात् । ४४ – ३.११

तरङ्गायिता अपीमे सङ्गात् समुद्रायन्ते । ४५ – ३.१२

कस्तरति कस्तरति मायाम् यः सङ्गं त्यजति यो महानुभावं सेवते निर्ममो भवति । ४६ – ३.१३

यो विविक्तस्थानं सेवते यो लोकबन्धमुन्मूलयति निस्त्रैगुण्यो भवति योगक्षेमं त्यजति । ४७ – ३.१४

यः कर्मफलं त्यजति कर्माणि संन्यस्स्यति ततो निर्द्वन्द्वो भवति । ४८ – ३.१५

यो वेदानपि संन्यस्यति केवलमविच्छिन्नानुरागं लभते । ४९ – ३.१६

स तरति स तरति स लोकांस्तारयति । ५० – ३.१७

          चतुर्थोऽध्यायः

          प्रेमनिर्वचनम्

अनिर्वचनीयं प्रेमस्वरूपम् । ५१ – ४.०१

मूकास्वादनवत् । ५२ – ४.०२

प्रकाशते क्वापि पात्रे । ५३ – ४.०३

गुणरहितं कामनारहितं प्रतिक्षणवर्धमानं अविच्छिन्नं सूक्ष्मतरं अनुभवरूपम् । ५४ – ४.०४

तत्प्राप्य तदेवावलोकति तदेव श‍ृणोति तदेव भाषयति तदेव चिन्तयति । ५५ – ४.०५

गौणी त्रिधा गुणभेदाद् आर्तादिभेदाद् वा । ५६ – ४.०६

उत्तरस्मादुत्तरस्मात् पूर्व पूर्वा श्रेयाय भवति । ५७ – ४.०७

अन्य मात् सौलभं भक्तौ । ५८ – ४.०८

प्रमाणान्तरस्यानपेक्षत्वात् स्वयं प्रमाणत्वात् । ५९ – ४.०९

शान्तिरूपात् परमानन्दरूपाच्च । ६० – ४.१०

लोकहानौ चिन्ता न कार्या निवेदितात्मलोकवेदत्वात् । ६१ – ४.११

न तत्सिद्धौ लोकव्यवहारो हेयः किन्तु फलत्यागः तत्साधनं च । ६२ – ४.१२

स्त्रीधननास्तिकचरित्रं न श्रवणीयम् । ६३ – ४.१३

अभिमानदम्भादिकं त्याज्यम् । ६४ – ४.१४

***

This free translation of Narada Bhakti Sutras was dictated by  Swami Vivekananda  in America.

Please note that it is NOT a verbatim translation of Sanskrit aphorisms.

June 1 Monday

14. He who gives up the fruits of work, he who gives up all work and the dualism of joy and misery, who gives up even the scriptures, gets that unbroken love for God;

***

June 2 Tuesday

15. He crosses this river and helps others to cross it.

****

June 3 Wednesday

CHAPTER IV

1. The nature of love is inexpressible.

June 4 Thursday

2. As the dumb man cannot express what he tastes, but his actions betray his feelings, so man cannot express this love in words, but his actions betray it.

***

June 5 Friday
3. In some rare persons it is expressed.

***

June 6 Saturday
4. Beyond all qualities, all desires, ever increasing, unbroken, the finest perception is love.

***

June 7 Sunday
5. When a men gets this love, he sees love everywhere he hears love everywhere, he talks love everywhere, he thinks love everywhere.

***

June 8 Monday

6. According to the qualities or conditions, this love manifests itself differently.

***

June 9 Tuesday
7. The qualities are: Tamas (dullness, heaviness), Rajas (restlessness, activity), Sattva (serenity, purity); and the conditions are: Ârta (afflicted), Arthârthi (wanting something), Jijnâsu (searching truth), Jnâni, (knower).

***

June 10 Wednesday
8. Of these the latter are higher than the preceding ones.

***

June 11 Thursday

9. Bhakti is the easiest way of worship.

***

June 12 Friday

10. It is its own proof and does not require any other.

***

June 13 Saturday

11. Its nature is peace and perfect bliss.

***

June 14 Sunday
12. Bhakti never seeks to injure anyone or anything not even the popular modes of worship.

***

June 15 Monday

13. Conversation about lust, or doubt of God or about one’s enemies must not be listened to.

***

June 16 Tuesday
14. Egotism, pride, etc. must be given up.

***

June 17 Wednesday
15. If those passions cannot be controlled, place them upon God, and place all your actions on Him.

***

June 18 Thursday

16. Merging the trinity of Love, Lover, and Beloved, worship God as His eternal servant, His eternal bride — thus love is to be made unto God.

***

June 19 Friday

CHAPTER V

1. That love is highest which is concentrated upon God.

***

June 20 Saturday

2. When such speak of God, their voices stick in their throats, they cry and weep; and it is they who give holy places their holiness; they make good works, good books better, because they are permeated with God.

***

June 21 Sunday
3. When a man loves God so much, his forefathers rejoice, the gods dance, and the earth gets a Master!

***

June 22 Monday
4. To such lovers there is no difference of caste, sex, knowledge, form, birth, or wealth;

***

June 23 Tuesday
5. Because they are all God’s.

***

June 24 Wednesday
6. Arguments are to be avoided;

***

June 25 Thursday
7. Because there is no end to them, and they lead to no satisfactory result.

***

June 26 Friday
8. Read books treating of this love, and do deeds which increase it.

***

June 27 Saturday

9. Giving up all desires of pleasure and pain, gain and loss, worship God day and night. Not a moment is to be spent in vain.

***

June 28 Sunday

10. Ahimsâ (non-killing), truthfulness, purity, mercy, and godliness are always to be kept.

***

June 29 Monday

11. Giving up all other thoughts, the whole mind should day and night worship God. Thus being worshipped day and night, He reveals Himself and makes His worshippers feel Him.

***

June 30 Tuesday
12. In past, present, and future, Love is greatest!
Thus following the ancient sages, we have dared to preach the doctrine of Love, without fearing the jeers of the world.

–subham—

Tags- More Narada Bhakti Sutras, June 2026 Calendar, English Explanations , Swami Vivekananda