மஹரிஷி வியாஸரின் பூர்வ ஜென்மம் பற்றிய விவரம் ஒன்றை மஹாபாரதம் கூறுகிறது.
இதை சாந்தி பர்வம் 359வது அத்தியாயத்தில் காணலாம்.
இந்த வரலாறை ஜனமேஜயர் வைசம்பாயனரிடம் கேட்கிறார். ஜனமேஜயர் முன்னொரு காலத்தில் நடந்ததை விவரிக்கிறார்.
வராகம், நரசிம்மம், வாமனம், முதலிய அவதாரங்களை எடுத்த பகவான் ஸ்ரீ ஹரியானவர் அசுரர்களை அழித்து பூபாரத்தை நீக்கினார்.
பின்னர் அவர் ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும்படியாக ‘போ:’ என்ற சப்தத்தை உச்சரித்து அருளினார்.
அதிலிருந்து ‘ஸாரஸ்வத்’ என்ற ஒரு ரிஷி உண்டானார். அவருக்கு அபாந்த்ரதமஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
அவர் மிகுந்த தவ மஹிமை உடையவர். முக்காலங்களையும் உணர்ந்தவர். சத்தியத்தையே பேசுபவர். திடமான விரதங்களை அனுஷ்டிப்பவர். அவர் அஞ்ஞானத்தை முற்றிலும் போக்கியபடியால் அவ்விதத் தன்மை உடையவர் என்ற பொருள் படும்படி மேலே கூறியபடி ‘அபாந்த்ரதமஸ்’ என்ற பெயரும்
ஸ்ரீமந் நாராயணருடைய வாக்கிலிருந்து ஜெனித்ததால் ‘ஸாரஸ்வதி’ என்றும் காரணப் பெயர்கள் உண்டாயின.
அம்முனிவர் நாராயணரை வணங்க அவர் முனிவரை நோக்கிக் கூறலானார் இப்படி :” ஓ! அறிவை உடையவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! நீர் வேதங்களைப் பகுக்கும் தொழிலை மிகவும் கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஆகவே, நீர் எனது கட்டளைப் பிரகாரம் செய்யக் கடவீர்”
அதன்படியே அந்த முனிவரும் வேதங்களைப் பிரித்து ஒழுங்காய் அமைத்தார்.
அவருடைய அரிய செய்கையைக் கண்ட ஸ்ரீ ஹரி மிகவும் திருப்தி அடைந்தார். அவரது அரிய தவம், ஆசார ஒழுக்கம், விரதம், இந்திரிய நிக்ரஹம் ஆகியவற்றைக் கண்டும் பகவான் மகிழ்ச்சியுற்றார்.
பின்னர் அவர் முனிவரைப் பார்த்து, “ஓ! குமாரனே! ஒவ்வொரு மன்வந்தரத்திலும் நீர் இந்தப் பிரகாரம் வேதங்களை வகுத்துத் தருவீராக. இந்தப் பணியால் ஒருவராலும் மீற முடியாததும் மாறுதலை அடையாததும், சாஸ்வதமுமான உயரிய நிலையை அடையக் கடவீர்.
கலியுகம் ஆரம்பிக்கும் காலத்தில் பரத வம்சத்தில் உதித்து கௌரவர்கள் என்ற பெயரை உடைய ராஜகுமாரர்கள் உம்மிடத்திலிருந்து பிறப்பார்கள். அவர்கள் சிறந்த நாடு நகரங்களை அரசாண்டு கீர்த்தி பெற்றவராய் விளங்குவர். நீர் இல்லாத காலத்தில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு நாசத்தை அடைவார்கள். அப்போது நீர் மிகுந்த சக்தி உடையவராய் வேதங்களை எல்லாம் பல பிரிவுகளாகப் பகுப்பீர். தர்மக் குறைவால் இருளுண்ட அந்த யுகத்தில், உம்முடைய தேகமும் கறுப்பு நிறமாக இருக்கும். அநேக தர்ம சாஸ்திரங்களையும், நியாய சாஸ்திரங்களையும் நீர் ஏற்படுத்துவீர். அவ்வளவு தவ மஹிமையை நீர் பெற்றாலும், உலகப் பற்றுகளிலும்,
ஆசாபசங்களிலுமிருந்து நீர் நீந்த முடியாதவராக இருப்பீர். ஆனால் உமது புத்திரனோ, மஹாதேவருடைய அருளால், எவ்விதப் பற்றும் அற்றவனாய் பரமாத்மாவைப் போல விளங்குவான். இப்படியே நடக்கும்.
பிரம்மாவினுடைய மானஸீக புத்ரர் என்று கற்றறிந்த பிராமண சிரேஷ்டர்களால் கூறப்படும் மஹா புத்திமானாகிய சிறந்த தேஜஸும் கொண்ட வசிஷ்ட முனிவருடைய வம்சத்திலிருந்து பராசரர் என்ற ஒரு சிறந்த முனிவர் பிறப்பார். அவர் நீர் கலியுகத்தில் அவதரிக்கும் போது உமக்குப் பிதாவாக இருப்பார்.
மூன்று காலத்தையும் அறியும் சக்தி உடையவராக நீர் இருப்பீர். உமது தவ மஹிமையினாலும், எனது அருளாலும் அநேகமாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததைக் கூட அறியும் சக்தியை நீர் கொண்டிருப்பீர்.
நீர் அந்தப் பிறப்பில் என்னை யது வம்சத்தில் அவதரித்த கையில் சக்ரமேந்திய கிருஷ்ணனாகக் காண்பீர்.
KUTHI IN TAMIL IS JUMP; IT IS A JUMPING/GALLOPING ANIMAL
IF YOU LOOK A THE MIRROR IMAGE, YOU WILL GET ‘THURAGA’ WHUCH LENT THE NAME TO TURKEY TO THE COUNTRY. ARCHAEOLOGICAL EVIDENCE SHOWS TURKEY WAS RULED BY SANSKRIT SPEAKERS FROM 1800 BCE.
E.19. ERROR – ARISHTA IN SANSKRIT AND ARIL IN TOLKPPIAM அரில்/ அரிஷ்ட
E.20.- EVE- IN BIBLICAL ADAM AND EVE STORY, ADAM/ADMA/ATMA – PARAMATMA; EVE IS JEEVA / EVE/ JEEVATMA ; FROM PARAMATMA’S LEFT CAME EVE. IT IS IN ARDHANARI STATUE AS WELL. ஆத்மா /ஆடம் , ஈவ் – ஜீவ/ ஆத்மா அர்த்தநாரீஸ்வர
KANCHI SRI PARAMACHARYA (1894-1994) HAS ATTRIBUTED ADAM AND EVE STORY TO UPANISHAD STORY OF TWO BIRDS EATING FRUITS.
E.21. ETE/FRENCH- KOTAI IS SUMMER K/ETE- SUMMER- KOTEI IN TAMIL கோடை
E.22.ETAT /FRENCH- STATE ; CAME FROM STAN/STANAM IN SANSKRIT
PAKISTAN, AFGHANISTAN, UZBESKISTAN, KAZAKASTAN ETC – STATE= STAN ஸ்தான் , பாக்கி-ஸ்தானம் , ஆப்கானிஸ்தானம் முதலிய நாடுகள்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோறு கண்ட இடம் சுவர்க்கம் — என்ற பழமொழி எல்லோரும் அறிந்த மொழி. மேலும் 7 சோற்றுப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் . ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது. விடைகள் கீழே உளது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
HARRY POTTER AND JURASSIC PARK AND KAMBAN
கம்பன் சொல்ல வந்த விஷயம் தாடகை வதம் ; சின்னக் குழந்தைகளும் அதை விரும்பிக் கேட்கும். பேய், பூதம், பிசாசு கதைகள் என்றால் லட்சக் கணக்கில் விற்கும். இங்கிலாந்தில் பெண்மணி ஜே கே ரோலிங் (HARRY POTTER BY J K ROWLING ) நம் ஊரில் உள்ள எல்லா பேய், பூத , பிசாசு, அரக்கிக் கதைகளை எல்லாம் அழகாக ஆங்கிலத்தில் HARRY POTTER ஹாரிபாட்டர் கதை என்று எழுதி உலகின் மிகப்பெரிய, மிகப் பணக்கார எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டாள்; ஹனுமானின் வீர தீரச் செயல்களை எல்லாம் SUPERMAN, BATMAN சூப்பர்மேன், பேட்மேன் என்று எழுதி பணமும் ஸம்பாதித்து விட்டனர் பலர்; நிற்க .
குழந்தைகளுக்குக் கதை சொல்லும் போது குரலை ஏற்றி இறக்கி, முகத்தை பல கோரமான வடிவங்களில் காட்டினால் அதன் மனதில் கதை அப்படியே பதிந்துவிடும்; கம்பனும் அவன் யாத்த ராமாயண பால
காண்டத்தில் தாடகை என்னும் அரக்கியை அப்படித்தான் நமக்கு இண்ட்ரட்யூஸ் INTRODUCE செய்கிறான். ஆனால் சிறு குழந்தை கதைக்கு மேலாகப் போய் இரண்டு விஷயங்களைச் சொல்கிறான்
1.பாவங்கள் அதிகம் செய்தலால் ஒருவர் அரக்கி போல ஆவர்
2.பேராசை வந்தால் அவர்கள் தாடகை போல எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அழிவினை அடைவர்
யார் கையால் அழிவினை அடைவர் ? ராம நாமம் சொல்வோர் கையால் அல்லது அவர்களுடைய சீடர்களால் .
பாடலின் மெஸ்ஸேஜ் MESSAGE இதோ பாடலிலேயே இருக்கிறது –
உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்பருங் குணங்களை அழிக்குமாறு போல்
கிளப்ப அருங் கொடுமையை அரக்கி கேடு இலா
வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினாள்
பொருள்
உள்ளத்திலே லோபம் எனப்படும் பேராசை எனும் தீய குணம் ஒன்று இருந்தால் போதும் . அது அளவிட முடியாத நற்குணங்கள் அத்தனையையும் அழித்துவிடும் . அது போல மாறாத வளம் ஊட்டும் இம் மருத நிலத்தை அழித்து பாலை நிலம் ஆக்கிவிட்டாள் தாடகை என்கிறார் விசுவாமித்திரர் .
இது எப்போது நடந்தது ?
அழகான கானகம் வழியே சென்றனர். பின்னர் பசுமையான கங்கைச் சமவெளி நிலங்களைக் கண்டனர் ஒரு பெரிய பரப்பு மட்டும் மரமும் இன்றி பசுமைப் பயிரும் இன்றி வறண்ட பாலையாகக் காட்சி தந்தது; ராமன் ஏன்? என்று விசுவாமித்ரரிடம் வினவ அவர் இவ்வாறு விடையிறுத்தார் .
பின்னர் தாடகையை வதம் செய்ததை நாம் அறிவோம் ஆக தாடகை என்பது நம் மனதிலுள்ள பேராசை. அதை அழிப்பது ராமன். அதை அழிக்க உதவுவது ராம நாமம் என்பதே கம்பன் சொல்லாமல் சொல்லும் விஷயம் . இதற்குப் பின்னர் கதை இன்னும் சுவாரஸ்யமாகப் போகிறது
தாடகையை ‘எரியும் கருப்புமலை’ — எரிமலை – என்று கம்பன் வருணிக்கவே அவள் எங்கே? என்று ராமன் கேட்கிறான். உடனே கம்பன் JURASSIC PARK ‘ஜுராஸிக் பார்க்’ சினிமா எடுத்த டைரக்டர் ஆகிவிடுகிறான் . உலகம் முழுதும் டைனோசர் என்னும் அழிந்துபோன ராட்சதப் பிராணிகள் பற்றிய படம் (JURASSIC PARK BY STEVEN SPIELBERG) எடுத்தவர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் . அவர் டைனோசர் பற்றி நமக்கு எப்படி திகில் ஊட்டுகிறார் ? காட்டில் சின்னப் பையன்களுடன் போன குழு, ‘தும்’ ‘தும்’ என்ற பிரம்மாண்டமான சப்தத்தைக் கேட்கிறது . உடனே ஒருவரை ஒருவர் வினாக்குறி முகத்தில் தோன்ற பார்க்கின்றனர். அப்போது ராட்சத டைனோஸரஸ் புகுந்து எல்லாவற்றையும் அழிக்கிறது . அந்த டைனோஸரஸ் வருவதற்கு முன்னர் தண்ணீரில் அலைகள் எழும்புவதை பார்த்து நாமும் ஏதோ நிகழப்போவதை அறிகிறோம். . இதை ஸ்டிவன் ஸ்பீல்பர்க் , கம்பனிடமிருந்து ‘காப்பி’ COPY அடித்தாரோ என்று தோன்றுகிறது. தாடகையை மனிதர்களை உண்ணும் கனிபல் CANNIBAL என்று விஷ்வாமித்ரன் வருணிக்க அவள் எங்கே என்று கேட்கிறான். அதற்கு விசுவாமித்திரர் பதில் சொல்லி முடிப்பதற்குள், ஜுராசிக் பார்க் டைனோசர் வந்தது போல, ‘மைவரை நெருப்பு எரிய வந்தாள் அரக்கி’. அவள் வந்த பொது ஏற்பட்ட குழிகளை கடல் வந்து நிரம்பியதாம். மலைகள் இடம்பெயரும் வண்ணம் பூமி அதிர்ச்சி உண்டாகியதாம். எம தர்மனோ பாதாளத்துக்குள் போய் ஒளிந்து கொண்டானாம். இதை நீங்களே கம்ப ராமாயண பால காண்டத்தில் தாடகை வதைப் படலத்தில் படித்து அறிக.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சித்த மருத்துவ ரகசியங்கள், பரிபாஷை குறித்து விளக்குவீர்களா ?- 2
Broadcast and telecast at Facebook.com/ gnanamayam on 19-10-20
First part was posted yesterday 20-10-20
சர்வ சக்தி வாய்ந்த சத்திய சித்தர்கள்
மேற்கண்ட வெறி பிடித்த மனிதர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற
தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளைப் பாடல்களாகப் புனைந்து
பரிபாஷைகளில் மறைத்து எழுதினார்கள் சித்தர்கள்!!!
அவர்கள் நினைத்திருந்தால் சொல்லாமலேயே சென்றிருக்கலாம். தங்கள் சக்தியை வைத்து உலகத்தைத் தன் காலடியில் வைத்து ஆட்டியிருக்கலாம், தங்க மழையில் குளித்திருக்கலாம், ஆனால் எந்த வியாதியையும் தீர்க்கும் நவபாஷாண சிலையை செய்து பழனியில் நிறுவினார் போகர்!!! உலகப்புகழ் பெற்ற தஞ்சைக் கோவிலைக் கட்டினார் கருவூரார்.வெளி நாட்டிற்கு சென்று
வியாதியை அவர்களுக்கு தீர்க்க யாக்கோபு என்று மதம் மாறி
மீண்டும் வந்து மதுரையில் அருகில் உள்ள அழகர்மலையில்
மறைந்தார் ராம தேவர்.நவக்கிரகங்களையே மாற்றி 12 வருடமாக மழையே இல்லாத திருவண்ணாமலையில் மழையைப் பெய்ய வைத்தார் இடைக்காடர் என்னும் சித்தர்……
தனக்குத் தெரிந்த வித்தைகளை ஜோதிடம் , வைத்தியம் என்று எழுதாத சித்தர்களே கிடையாது. பரி பாஷையில் வைத்து, உண்மையிலேயே தேடுபவர்களுக்கு கிடைக்கும், என ஆசீர்வதித்து மறைந்தனர்
பரி பாஷை என்றால் என்ன???
சின்ன வயசுலே எங்க அம்மாவை பெத்த அம்மா பாட்டி கை முறுக்கு செயது கொண்டு வருவாள் , ரொம்ப ரொம்ம சுவையாய் இருக்கும்.
நாங்க தெரியாமல் எடுத்து தின்னாமல் இருக்க ஒரு நாளைக்கு ஒரு இடமாக ஒளித்து வைப்பாள் அம்மா. நாங்கள் பாட்டியிடம் கெஞ்ச
பாட்டு அம்மாவிடம்கேட்பாள். கமு கறு க்க் க்கு க எ கங் ககே கயி
கரு க்க் க்கு?.. அம்மா சொல்லுவாள் கதூ க க் க்கி கல் கஇ கரு க க்
க்கு…..முறுக்கு எங்க இருக்கு …….தூக்கில் இருக்கு எல்லாம் கனா
பாஷை தான் அது. இது தெரியாமல் நாங்கள முழித்த காலம் அது.
அது போல, சித்த வைத்தியத்தில் சில தொழில் நுணுக்க சொற்களை அந்த பொருளின் பெயரை வேரொரு பெயரினால் குறிப்பிட்டு மற்றவர்களுக்கு தெரியாமல் சொல்லப்படும் முறைக்கே “பரிபாஷை “ எனப் படும்.
எல்லா மருந்துகளையும் வசன நடையில் எழுதாமல் சுருக்கமாக பாடல்களாக எழுதி எதுகை மோனைகளுக்காக சில இடங்களை திருத்தியும், மாற்றியும், மறைத்தும் பாடியுள்ளனர்.
உதாரணமாக “முசு” என்றால் குரங்கைக் குறிக்கும். ஒரு பாடலில்
“இரு குரங்கின் கையையும்சேர்த்து” என்றால், முசு முசுக்கை பச்சிலையும் சேர்த்து எனப் பொருள் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக,
ஒருசில மருந்து சரக்குகளின் கூட்டு எண்ணிக்கையின் பெயர்களும்
(அதாவது தொகுப்பு எண்ணிக்கையின் பெயர்களும் இதில்
அடங்கும்.) பரிபாஷையாக வரும்.
மூன்றாவதாக
வழங்கு சொல்வேறு பாடு
உதாரணமாக மணிலாக் கொட்டை, சில இடங்களில் மணிலாக் கொட்டை எனவே வழங்கப்படும். இது நிலத்தில் விளைவதினால் நிலக் கடலை எனவும், வேரிலிருந்து வருவதினால், வேர்க்கடலை என்றும் பல இடங்களில் ஒரே பொருள்
அழைக்கப் படுகிறது.
கொல்லுதல் அல்லது மடித்தல்
உலோக, ரச, கார,சாரங்களுக்கு இயற்கையாய் அமைந்த கெட்ட பண்புகளைப் போக்குவதற்கு எதிர் தன்மையுள்ள மருந்துகளால் “கொல்லுதல்” அல்லது “மடித்தல்”
உதாரணம்- தாளகத்தின் விஷத்தன்மையை கொல்ல கண்டங்கத்திரி
வெடியுப்பின் விஷத்தை கொடி வேலி வேரும்,
காரீயத்தை மனோசிலை வேரும் “மடிக்கும்” அல்லது “கொல்லும்”
சுருக்கு கொடுத்தல்
பாஷாணங்களை அகலில் வைத்து எரித்து பழுக்க வைத்து உருக்கிய பின் அததற்குரிய பால் நெய் சாறுகளில் ஊற்ற, அப்போது “சுருக்”
“சுருக்”. சப்தத்துடன் கெட்டியாகும். இதை சுருக்குக் கொடுத்தல் என்பார்கள்
சாரணையேற்றல்
நெருப்பில் உருக்கி, புகைந்து ஓடுகின்ற ரசத்தை முறைப்படி கட்டியாக்கி ஓடாமல் இருக்கச் செய்வது “சாரணையேற்றல்” எனப்படும்.
வைப்புச்சரக்கு
இயற்கையாக உள்ள உலோகத்தையும் வேறொன்றையும் சேர்த்து
புதிய உலோகமாக்குவது வைப்புச் சரக்காகும்
செம்பு 66 பங்கும், துத்தம் 34 பங்கும் சேர்ந்த புதிய வைப்புச்சரக்கு புதிய உலோகமான “பித்தளை”ஆகும்.
தொகைப் பெயர்
ஒரே தன்மையான, அல்லது ஒரே காரியத்திற்கு பயன்படக்கூடிய கூட்டுச் சரக்குகள் தொகையளவில் பெயர் சூட்டப் பட்டுள்ளன.
இங்கெல்லாம் ஆரிய தேவி என பாரத தேவியைக் குறிப்பிடுகிறார் பாரதியார்.
அடுத்து எது ஆரிய நாடு என்பதைத் தெள்ளத் தெளிவாக பாரத தேவியின் திருத் தசாங்கத்தில் குறிப்பிடுகிறார். பாரத நாட்டின் எல்லையையும் வகுத்துக் கூறும் அருமையான பாடல் இது.
குரு கோவிந்தர் பாட்டில் ஆரியர் ஒரே ஜாதி அதாவது இந்த பாரத நாட்டில் வாழும் அனைவரும் ஆரிய ஜாதி என்றும் இதைப் பிளவு படுத்தி ஜாதிகள் பல பேசும் அனைவரும் மாய்க என்றும் கூறுகிறார்.
ஹிந்து இனம் ஒரே இனம் என்பது அவரது அடிப்படைக் கொள்கையாக அமைவதை இங்கு காண்கிறோம். பாடல் இது தான்:
சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும் இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல் ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும்
லாஜபதியின் பிரலாபம் என்ற பாடலில் வரும் வரிகள் இவை:
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.
இங்கெல்லாம் ஆரிய நாடு என்றால் பாரதம் ஆரிய தேவி என்றால் அன்னை பாரத தேவி என்ற பொருளையே காண்கிறோம்.
தெய்வப் பாடல்களில் 3 இடங்களில் வரும் ஆரிய என்ற சொல்லும் சுயசரிதையிலும் ஞானப்பாடல்களிலும் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வரும் ஆரியர் என்ற சொல்லும் பண்பாடுள்ளவர் என்ற பொருளில் வருகிறது. அதே போல பாஞ்சாலி சபதத்தில் வரும் 7 இடங்களிலும் இதே பொருளே அமைகிறது.
ஆக பாரதியார் அப்படியே அடி வழுவாது இந்த பாரத நாட்டை ஆரியர் நாடு என்றும் பண்பாளரை ஆரியர் என்றும் அறநூல்கள் வழி நடப்பவரை ஆரியர் என்றும் கூறி இருக்கிறார்.
ஆரியம் என்ற சொல்லை வடமொழி என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.
ஆரியன் என்பதை ஹிந்துக்கள் வழிபடும் இறைவன் என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.
தேவாரம், பண்டைய இலக்கியம் கூறியதற்கு ஒரு படி மேலே போய், காலத்தால் பின்னால் தோன்றியதால் தெளிவாக ஹிந்து தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத நாட்டை ஆரிய நாடு என்று அறிவிப்பதோடு தேசபக்தி இல்லாதோர் ஆரியர் அல்லர் என்றும் ஆரிய இனம் ஒரே இனம் என்றும் இதில் இன, ஜாதி போன்ற வேறுபாடுகளை வகுப்பவர் மாய்ந்து ஒழிக என்றும் கூறுகிறார்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் ஆரியன் திராவிடன் என்ற பொய்யான வாதங்கள் எல்லாம் அவர் பாடல்களால் பொடிப் பொடியாகிப் போகிறது. சங்க இலக்கியமும் தேவாரமும் சுட்டிக் காட்டும் நல்ல பொருளே அவர் பாடல்களிலும் அழுத்தமாக நிலைபெறுகிறது. வாழ்க பாரதி நாமம்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 6
Now let us look at D words.
D.1. DIVINE- DEVAN- ALSO DEVI – DEO IN LATIN; தேவன், தேவி, தேவ , தெய்வ, காண்க- குறள் , புறநாநூறு DIVINE IN EGLISH; DEVAN AND DEVI ARE USED IN 2000 YEAR OLD SANGAM LITERATURE
D.2. DRAGON- ARAKKAN; த/அரக்கன்
D. 3.DOLERE / LATIN– THALARVU; THALARCHI/ தளர்வு, தளர்ச்சி
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
FACEBOOK.COM/GNANAMAYAM
19-10-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட facebook.com/gnanamayam நிகழ்ச்சியின் உரை இதோ:
ரகஸியம் பரம ரகஸியம்!
Kattukutty
சித்த மருத்துவம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் மங்காமல் வாழ்ந்திருப்பது மருந்துகளினாலும் அதனுடைய ரகஸிய மருந்துக் கலவைகளினாலுமே ஆகும்
புதிய கண்டுபிடிப்புகள், புதிய ஆய்வுகள், வளர்ச்சிகள் இருந்தாலும்
நவீன முறையில் செய்யப்படும் மருந்துகள் தாற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. சித்த மருந்துகளோ நோயின் அடித்தளத்தையே தாக்கி மக்களை நலமடையச் செய்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் மருந்துகளை தேர்ந்தெடுத்த விதமும் தயாரிக்கும் முறைகளும் தான். இவைகள் ஒருகாலத்தில ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன……. ஏன்???
புதையல் ரகசியம்
இக்காலத்திலும் சரி, முன் காலத்திலும் சரி மனிதர்களுக்குத் தேவை
காசு, பணம், துட்டு மணி, மணி, காசு,,பணம், துட்டு, மணி மணி…….
இக்காலம் போல அக்காலத்தில், பேங்க், சேப்டி லாக்கர் கிடையாது.
பணம், நகைகளைப் பாதுகாக்க ஒரு குடத்தில், பானையில் வைத்து
பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் ஒரு அரசன் தோற்று ஓடும் போதும் ஜமீந்தார்கள், குறு நில மன்னர்கள், பாளையக்காரர்கள்,
பண்ணையார்கள், தனக்கு மிகுதியான பணத்தைப் புதைத்து வைத்திருப்பார்கள்.
இது இருக்குமிடம் ரகசியமாக சங்கேத குறியுடன் அதாவது ஒரு பரிபாஷையுடன் இருக்கும்.
சிலர் மந்திரவாதிகளைக் கொண்டு பூதங்களைப் பாதுகாவலாக வைப்பார்கள்.அதற்கும் ஒரு சீக்ரட் கோடு வேர்டு உண்டு
இப்பொழுது புதையலை கண் கூடாகப் பார்க்கும் ஒரு சித்தர் பாடலை உங்களுக்கு தரப் போகிறேன். புதையல் கிடைத்தால் எனக்கும், திரு.சாமிநாதன், மற்றும் திரு கல்யாண்ஜி குழுவினருக்கும் பங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்தப்பாடல் time and vedas ல் இடம் பெறும். கண்டிப்பாக உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கும் கூறவும்.
ஆம ப்பா வெண்ணையிலே தேனை தேய்த்து
ஆதளையின் பாலைக் கூட்டிஅடைவாய்தேய்த்து
ஓம ப்பாதிலர்தமிட தன்னைக் காணார்
ஓங்கி நின்ற உரு மாற்றம் ஒருவர் காணார்
போம ப்பா வெண்டிசையும் கால் வேகங்கொண்டு
பூமிதனை மறைந்தனைத்தையும் பொலிவாய்காண்பர்
வேம ப்பா அண்டரண்டம் வழலைப்பட்டால்
வேதாந்த பஞ்சார்தனெனச் சொன்னாரே!!!
தெய்வீக ரகசியம்
முன் காலத்தில் தென்னாட்டு அரசர்களில் சேர மன்னர்களும்
முக்கியமானவர்களில் ஒருவர். தங்கள் ஆட்சியையே கடவுளிடம்
ஒப்படைத்து தங்கள் தேசத்தையே “கடவுளின் தேசம்” என்று
அழைத்தனர்.தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீ பத்மநாப
ஸ்வாமியிடம் ஒப்படைத்தனர். இவை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு
வந்தது. இந்த ரகசியத்தை ஒருவர் பொறுக்காமல் அரச குடும்பத்திற்கு எதிராக கேஸ் போட்டு ரகசியத்தை உடைக்கச் செய்தார்.
அரசாங்க அதிகாரிகள் புடை சூழ கதவுகள் உடைக்கப்பட்டன.
உலகமே வியக்கும் வண்ணம் கோடி கோடி ரூபாய்கள் பெறுமான தங்க, வெள்ளி நகைகள், தங்க காசுகள் கண்டு பிடிக்கப்பட்டு 30 நாட்கள் ஆயிற்று கணக்கெடுக்க.
கணக்கின் முடிவில் உலகத்திலேயே மிக பணக்கார சாமியாக
விட்டார் பத்ம நாப சாமி ( வேடிகன் சிடி தவிர !!!)
முதலிடத்திலிருந்த திருப்பதி சாமி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இது சம்பந்தமாக ஒரு ஜோக் ஒன்றும் நிலவியது.
திருப்பதி சாமி சொன்னாராம் பத்மநாபசாமியிடம், “நான் நின்று கொண்டே பல வருஷம் சம்பாதித்தை நீங்க படுத்தகிட்டே ஒரே நாளிலே சம்பாதிசிட்டீங்களே”!!!!
அரசாங்க ரகசியம்
மேலும் சிலவிஷயங்களை இரகசியமாக வைக்க வேண்டியதன் காரணங்கள், குடும்ப, அரசாங்க ரகசியமாகவோ இருக்கும். அரச பரம்பரை துண்டிக்கப் படக்கூடாது என்பதற்காகவும் பரம்பரை சொத்து மற்றவர் கையில் சிக்கி சீரழிந்து விடக் கூடாது என்பதற்காகவும் பரி பாஷைகள் உள்ளன.
நீங்கள் எந்த சினிமா எடுத்துக் கொண்டாலும், அரசன் அரச வாரிசை
கொல்லச் சொல்லுவான். பெரும்பாலும் அது எம் என் நம்பியாராகவோ, பி எஸ் வீரப்பாகவோ, ஆர் எஸ்.மனோகராகவோ எஸ் ஏ அசோகனாகவோ இருக்கும்
அரசனின் அந்தரங்க ஆள், பரிதாப்பட்டு தன் மனைவியிடம் கொடுத்து குழந்தையை வளர்க்கச் சொல்லுவான்.
குழந்தையின் முதுகில் உள்ள மச்சம், கழுத்தில் உள்ள தாயத்து, பிரசவம் பார்த்த தாதி இவைகள் மூலமாக கண்ணாம்பாள் கண்டு பிடித்து குடும்பத்தை ஒன்று சேர்த்து அரசை நிலை நிறுத்துவார்.
ஒரு அரிய கண்டுபிடிப்பு “ரச மணி”. பாத ரசத்தை மூலிகைகள் மூலமாகக் கட்டி, மறைந்து போக, பறக்க, எடை குறைவாக, எடை அதிகமாக ….. இன்னம் பல சித்திகள் அடைந்தனர். இது எல்லா வியாதியும் போக்கும் மிக மருத்துவ குணம் வாய்ந்தது, இதை வைத்திருந்தவர்கள் மிக சக்தி வாயந்தவர்களாக கருதப் பட்டார்கள்.
உதாரணம் காலஞ்சென்ற மதுரை திரு T M சவுந்திர ராஜனை ஒரு சித்தர் சந்தித்து அவரிடம், ஒரு ரச மணி கொடுத்து “நீ பாட்டுலகில் மிகப் புகழ் பெறுவாய் “ என்றார். T M S தன் வாய்ப்பட கூறினார் ஒரு பேட்டியில் இப்படி !!!.45 வருடமாகப் MGR குரலிலும், சிவாஜி குரலிலும் பல வகையாக பாடியதோடு மட்டுமல்லாமல் முருகன் பாடல்களைப் பாடி மெய்யுருக வைத்து புகழ்பெற்றார் ரச மணி மூலமாய்!!!
இதை கட்டும் வித்தை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது இன்று வரையிலும்!!!
சாகா வரம் பெறும் ரகசியம்
இதற்கெல்லாம் மேலாக அரசர்களும், அரசிகளும், மேலும் பணம் படைத்தவர்களும்,நூறாண்டும் அதற்கு மேல் சாகாமலும் வாழ ஆசைப்பட்டனர்!!!
உடலை திடகாத்திரமாக வைக்க உபயோகப்பட்டது சித்த வைத்திய
மூலிகைகள். இதன் இரகசியத்தை அறிய பல நூறு மைல்கள் சென்று
மலை மீது ஏறி பச்சிலைகளை பறித்து சித்தி பெற்றனர் சித்தர்கள்.
அனைத்து சித்தர்களும் முன்னூறு, நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர். இன்னும கண்ணுக்கு புவப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சர்வ சக்தி ரகசியம்
இதற்கெல்லாம் மேலாக மந்திர சித்தி பெற்று உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த மனிதனாக அதாவது உலகத்தையே தன் கால் கீழ்கொண்டுவர முயற்சித்தவர்கள் தான் அதிகம்!!!
எல்லா மொழி சினிமாக்களிலும் ஒருதிடகாத்திரமான மந்திரவாதி வருவார்
SV ரங்கா ராவ் மாதிரி…..
கண்ணாடி கண்ணாடி காட்டு என் முன்னாடி
என்னை விட சக்தி வாய்ந்தவன் உண்டா இவ்வுலகில்???
கண்ணாடியில் N T ராமா ராவோ, T R மகாலிங்கமோஜெமினி கணேசனோ தெரிவார்கள்…….பிறகு என்ன மந்திரவாதி அவனைக் கொல்ல முயலுவான். கதாநாயகன் ஒரு முனிவர் அல்லது சித்தர் வழி காட்ட மந்திரவாதியை வென்று அரசாட்சியைப் பிடிப்பார் – NTR அல்லது TRM அல்லது JEMINIயோ.
இப்பவும் இந்தப் போட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது
அரசியலில் நடக்கிறது. சமுதாயத்திலும் நடக்கிறது.
அரசியலைப பற்றி பேச விரும்ப வில்லை. ஆனால் ஒரு புள்ளி விவரம்,
இந்தியாவிலேயே மிகப் பெரிய பத்து பணக்காரர்களில் 6 பேர்கள் சாமியார்கள்!!!!