Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 21 December 2018 GMT Time uploaded in London – 18-07 Post No. 5810
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Fate decides your Wealth, say Shakespeare, Bhartruhari and Valluvar (Post No.5810)
Bhartruhari and Tamil poet Valluvar agree on several points in this sloka of Niti Sataka.
1.A person’s wealth is decided by his fate
2.Fate is written by Brahma, Hindu God of Creation on one’s head or forehead.
3.Saint Vidyaranya’s story shows that Harihara and Bhukka got it even whenthey were in arid land. But Saint Vidyaranya couldn’tget in the present birth (Read the story given below)
4.Valluvar explains it more clearly. One needs effort to get wealth. Inspiration and perspiration give wealth. But that comes only when your Good Karma (Punya done in one’s previous birth) acts. If you have bad Karma (papa), then laziness will engulf you.
44. Whatever fate has written on the forehead of each,
that shall he obtain, whether it be poverty or riches.
His abode may be the desert, but he shall gain no more if
he live even on Mount Meru. Let your mind be constant.
Do not be miserable through envy of the rich. The
pitcher takes up the same quantity of water whether it be
Except as ordained by the Lord, who measures out each man’s meet
Even the millionaire cannot enjoy his hoards -377
Even a millionaire cannot enjoy his wealth except as ordained by Fate. This is exactly what Shakespeare meant when he said in Hamlet,
There is a Divinity that shapes our ends
Rough-hew them how we will– Hamlet
Another couplet
The constructive industry that produces wealth, and the destructive indolence
That brings about adversity in life ,are both the outcome of fate-371
The last couplet of the chapter on fate is as follows,
What is more potent than Fate? It forestalls every expedient one may resort to for averting it- 380
Another translation of the same couplet
Destiny is supreme, because its intended consummation will surely come about
Even if planned efforts are made to overcome it-380
STORY:- Vidyaranya found Golden Treasure!
Kanchi Shankaracharya (1894-1994 Paramacharya) in his Madras Discourses (1957-1959) gives the story of Vidyaranya’s discovery of gold and using it for establishing Vijayanagara Empire. Born as Madhava in a village in Karnataka he prayed to Goddess Mahalakshmi, Goddess of Wealth, for enormous amount of wealth. Lakshmi appeared before him and told him that he can’t enjoy wealth in this birth but it was possible for him to get it in the next birth. An idea flashed in his mind immediately. He told Goddess Lakshmi that he would take Sanyas ( Renunciation) which is considered a ‘second birth’ for a Hindu. Lakshmi agreed and gave him tons of gold. As soon as he saw rocks of gold and hills of gold he wept loudly. He knew that sanyas (renunciation ) means no attachment to anything worldly. “Oh My God, What Have I done? How can I touch gold when I have become a Sanyasi (an ascetic)”, he cried. Goddess Lakshmi disappeared while he was wondering what to do next.
At that time of history in 14th century AD, Muslim forces invaded South India and destroyed most of the temples along its routes. Madhava, who was later known as Vidyaranya, called two goatherds Harihara and Bhukka and asked them to build a city at the chosen place at the appointed auspicious time. Both of them did it and utilised the entire gold to establish a mighty and wealthy Hindu empire—later known as Vijaya Nagara Samrajya.
There is another story about Sri Vidyaranya, who later became Jagadguru of Sringeri Mutt, about making gold shower in the lands of Vijayanagara Empire. When there was a draught, Harihara and Bhukka approached Vidyaranya swami for help. He prayed to goddess Lakshmi again and there was a shower of gold in the capital city.
Water pot simile
Another interesting information in this sloka is Bhartruhari’s simile of water pot in in the ocean; This is followed by Tamil poetess Avvaiyar as well. Avvaiyar lived a few centuries after Bhartruhari. Another Avvaiyar lived before him in Sangam Age.
“Though you dip the measure/pitcher deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny”—Muthurai by Poetess Avvaiyar
Tag- water pitcher, Wealth,Fate, Valluvar, Bhartruhari
“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும் இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.
தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–
வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,
அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.
ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்; அதைத் தருகிறேன் என்றாள்.
வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது அடுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.
தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்
வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று இருக்கக் கூடாது என்பது.
அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.
விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.
விதியே வலியதுஎன்னும் வள்ளுவன் கருத்து
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.
கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,
சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.
இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்
வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி- 371
பொருள்
ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்
பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377
கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்- 380
தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?
statue of Brahma
அவ்வையார்
ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.
இதோ அந்தப் பாடல்
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி – தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன்.18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும் உள.
இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.
எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
இந்த உயரத் தூக்கும் தியானம் பற்றி ச. நாகராஜன் ஆங்கிலத்தில்ஆற்றும் உரையை காணொளிக் காட்சியாகக் காணலாம். இது யூ டியூபில் A Sacred Secret என்று புதிதாக சந்தானம் நாகராஜனால் துவங்கப்பட்ட சேனலில் இடம் பெற்றுள்ளது. இதற்கான தொடுப்பு https://www.youtube.com/watch?v=WqdoxY673qk
இந்த சேனலில் Subscribe செய்ய வேண்டுகிறேன். அதில் உள்ள சப்ஸ்க்ரைப் என்ற வார்த்தையை அமுக்கினால் போதும், (இலவசம் தான்) உங்களுக்கு சேனலில் இடம் பெற்ற, பெறப் போகும் அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும். உங்களது like and comments-ஐயும் அங்கு பதிவு செய்யலாம். நண்பர்களையும் சேரச் சொல்லலாம். 19-12-2018 முடிய இடம் பெற்றுள்ள காணொலிக் காட்சிகள் மொத்தம் 11.
தியானத்தின் உச்ச கட்ட ஆச்சரியங்களில் ஒன்று தான் உயிருடன் புதைக்கப்பட்டு மீண்டு வருதல்! பாரதத்தின் உயரிய யோகிகள், அற்புதமான கற்பனைக்கும் அப்பாற்பட்ட சூப்பர் செயல்களைச் செய்து காண்பித்தவர்கள்! இவர்களின் அதிமானுடச் செயல்கள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விஞ்ஞான ரீதியாகவும் சரி பார்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளன!
அப்படிப்பட்ட ஒரு அதி மானுட செயல் தான் உயிருடன் ஒரு நாளோ அல்லது பல நாட்களோ புதைக்கப்படும் ஒரு செயல்.இப்படிப் புதைக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிருடன் வருவர்!
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் ஹரிதாஸ் இப்படிப் புதைக்கப்பட்டு மீண்டும் எழுந்து வந்த அதிசய மஹாபுருஷர் ஆவார்.
‘திபெதியன் யோகா அண்ட் சீக்ரட் டாக்ட்ரின்ஸ் (Tibetan Yoga and Secret Doctrines) என்ற புத்தகம் ஹரிதாஸ் பற்றிய ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறது. மகான் ஹரிதால் உயிருடன் நான்கு மாதங்கள் புதைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரைக் குழியிலிருந்து வெளியில் எடுத்தனர். இது லாகூரை ஆண்டு வந்த பிரசித்தி பெற்ற மஹாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையிலும் பிரிட்டிஷ் ஜெனரல் சர் க்ளாட் வேட் (Sir Claude Wade) முன்னிலையிலும் நடை பெற்ற சம்பவமாகும்.
மஹாராஜாவின் ராஜ முத்திரை ஹரிதாஸ் உயிருடன் வைக்கப்பட்டு மூடப்பட்ட பெட்டியின் மீது இடப்பட, சுற்றி சுவர் எழுப்பப்பட்டு காவலர்களால் இடைவிடாது கண்காணிக்கப்பட்டது. அந்த இடத்தில் பார்லி விதையும் புதைக்கப்பட்டது. சரியாக குறிக்கப்பட்ட தேதியில் அவர் எழுப்பப்பட்டார். ஒரு பெரிய அதிசயம், புதை குழியில் வைக்கப்பட்ட போது எப்படி அவர் முக க்ஷவரத்தைச் செய்து கொண்டு அழகிய முகத்துடன் இருந்தாரோ அதே போல முக க்ஷவரம் செய்து கொண்ட அதே நிலையிலேயே அவர் எடுக்கப்பட்ட போதும் காணப்பட்டார்.
1986ஆம் ஆண்டு ஆர்மி ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் (Army Research Institute) , இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக் கழகத்தைச் (University of Hull) சேர்ந்த ப்ரெனர் மற்றும் கன்னாலி (Brener and Connally) ஆகிய இரு ஆய்வாளர்களை ஆய்வுக்கென ஒரு குழுவாக அமைத்து ஆய்வு செய்யப் பணித்தது. அவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையில் குழியில் புதைத்தல் போன்ற நிகழ்வுகள் தியானத்தின் விளைவு என்றும் அல்லது metabolism எனப்படும் வளர்சிதை மாற்றத்தின் மீது ஆழ்ந்த ஓய்வை ஏற்படுத்தும் விளைவு என்றும் கூறினர். இப்படி வளர்சிதை மாற்றத்தைக் குறைத்தால் குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருக்கும் நிலையிலும் கூட உயிருடன் இருக்க முடியும் என்று அவர்கள் கூறினர். வளர்சிதை மாற்றத்தின் மீதான விளைவுகள் யோகிகள் கடைப்பிடிக்கும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் வழியால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறினர்.
லெவிடேஷன் எனக் கூறப்படும் பூமியிலிருந்து உயர எழுதலும் கூட யோகிகளின் மூச்சைக் கட்டுப்படுத்தும் பிராணாயாமத்தின் ஒரு சக்தி தான்! இந்த சித்தி அதனால் அடையப்படுவது தான்!
பாரிஸில் 1927ஆம் ஆண்டு பன்னாட்டு அதீத உளவியல் மாநாடு (International Psychical Congress) ஒன்று நடந்தது. அங்கு மூனிச் பல்கலைக் கழக உளவியல் பேராசிரியரான புரபஸர் வான் ஷ்ரெங்க் நாட்ஸிங் (Professor Von Schrenck Notzing, Professor of Psychology, University of Munich) ஒரு ஆய்வுப் பேப்பரை சமர்ப்பித்தார். அதில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் யோக சித்தியால் ஒரு இளைஞன் அந்தரத்தில் மிதப்பதை 27 முறை செய்து காண்பித்ததைக் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக யோகா மூலம் அடையப்படும் நன்மைகளைப் பற்றி உலகெங்கும் ஏராளமான அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தியானத்தை இடைவிடாமல் செய்து வந்தால் உயரிய மனோசக்தியை அடைய முடியும். இந்த சக்தி மூலம் உடலையும் மனதையும் உயரிய நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை யோகிகள் நிரூபித்த வண்ணம் இருக்கின்றனர்.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 20 December 2018 GMT Time uploaded in London – 11-15 am Post No. 5806
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
வீடு கட்ட செங்கற்கள் தேவை. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க மூலகங்கள் தேவை. நாம் இது வரை கண்டறிந்த மூலகங்கள் 118. அவற்றில் ப்ளுட்டோனியம், தோரியம் முதலிய கதிரியக்க மூலகங்களின் கதைகளை சொன்னேன். இன்று நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி க்யூரியையும், நமக்கு ரேடியம் (Radium) டயல் (Dial) கொண்ட ஒளிவீசும் கடிகரங்களை செய்து கொடுத்த அழகிகளையும் கொன்ற ரேடியத்தின் கதையைச் சொல்வேன்.
1898-ம் ஆண்டில், மேரி க்யூரியும் மற்றொரு விஞ்ஞானியும் கணவருமான பியர் க்யூரியும் (Marie Curie, Pierre Curie) ரேடியத்தைக் கண்டுபிடித்தனர்.
உலகில் முதலில் நோபல் பரிசு பெற்ற பெண்மணி–மேரி க்யூரி
உலகில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி– மேரி க்யூரி
உலகில கணவருடன் நோபல் பரிசு பெற்ற பெண்மணி— மேரி க்யூரி
ரேடியம், கதிரியக்கம் உள்ள வெள்ளி நிற உலோகம். யுரேனியமும், தோரியமும் இயற்கையில் தேய்ந்து போகும் போது ரேடியம் உருவாகிறது. பூமியே ஒரு கதிரியக்கம் உள்ள கிரஹம்தான். அதற்குக் காரணம் இந்த ரேடியமும்தான்.
அந்தக் காலத்தில் ரேடியத்தின் ஒளிவீசும் தன்மையக் கண்டோர் இதை கடிகாரத்தின் நேரம் காட்டும் டயலில் பூசினர். அது இரவில் ஒளி வீசி மணியைக் காட்டியது. இதன் ஆபத்தை அறியாதோர் புற்று நோயில் இறந்தனர். இளம் பெண்களே பெரும்பாலும் இந்தக் கடிகாரத் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கடிகார டயலில் ரேடிய உப்புக் கலவையைப் பூசுகையில் நல்ல கூர்மையாக வர்ணம் பூசுவதற்காக அவ்வப்பொழுது தூரிகையை– பிரஷை–நாக்கில் தடவிகொண்டு வர்ணம் பூசினர். அவர்கள் அனைவரும் பிற்காலத்தில் புற்று நோய் முதலிய நோய்களால் இறந்தனர்.
1900-முதல் 1930 வரை மருத்துவ உலகில் ஒரே பரபரப்பு. ரேடியம் தான் சகல நோக நிவாரணி என்று பிரச்சாரம். பல வகைப் புதிய கருவிகள் மார்க்கெட்டுக்கு வந்தன. உண்மையில் புற்று நோயைக் குணப்படுத்தவும் ரேடியம் ஊசிகள் பயன்படுதப்பட்டன. ஆனால அதைச் செய்தோருக்குப் புற்று நோய் வந்து இறந்தனர்!
ரேடியம் வாங்கக் காசு பணம் இல்லையா? இதோ எங்கள் பிளாஸ்கை (Flask) வாங்குங்கள்; அதில் இரவு முழுதும் தண்ணீரை ஊற்றி வைத்து அதைக் காலையில் பருகுங்கள்! அடடா என்ன சுகம், என்ன சுகம்! என்றெல்லாம் விளம்பரம்! அப்படிக் குடித்து வந்த சில ஆண்டுகளில் அவர்கள் அனைவரும் மேல் உலகம் சென்றனர். மூட்டு வலியா, மணக் கோளாறா? இதோ ரேடியம் சிகிச்சை என்றெல்லாம் போலி மருத்துவர்களின் விளம்பரங்கள் வேறு!
இவ்வாறு தண்ணீர் குடித்து வந்த ஒரு தொழிலதிபர், அமெரிக்காவில் நாலே ஆண்டுகளில் இறந்தவுடன், அது பெரிய செய்தியாகி ரேடிய சிகிச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
ஒளி வீசிய பெண்கள்!
ரேடியம் தொழிற்சாலைகளில் வேலை செய்ததால், புற்று நோய் கண்ட பெண்மணிகள் ‘யு.எஸ். ரேடியம்’ என்ற கம்பெனி மீது வழக்குப் போட்டனர். அவர்களை உலகம் ரேடியம் பெண்கள் Radium Girls என்று அழைத்தன. ஆனால், அந்தக் கம்பெனியும், ( இந்தியாவின் போபால் விஷ வாயு வழக்கு போல), அந்த வழக்கையே தடுக்க பல விஷமத்தனங்களை செய்தது. இறுதியில் கோர்ட்டுக்கு வெளியே ஆளுக்கு 10,000 டாலர் கொடுத்து வழக்கையே இல்லாமற் செய்தனர். ஏமாந்து பணம் வாங்கிய அழகிகள் அனைவரும் சில ஆண்டுகளுக்குள் புற்று நோயால் செத்து மடிந்தனர்.
பெரிய கம்பெனிகளுக்குத் தெரியும்; வழக்கைத் தாக்காட்டினால்,வழக்குப் போட்டவர்கள் அனைவரும் சில ஆண்டுகளில் செத்துப் போய் வழக்கே பிசுபிசுத்துவிடும் என்று.
ரேடியம் பெண்மணிகளின் முகம், கை, தலை முடியெல்லாம் இரவு நேரத்தில் ஒளியை உமிழ்ந்தன. அந்த அளவுக்கு அவர்களுடைய உடம்பில் கதிரியக்கம் ஏறி விட்டது!
இப்படிப் பல நூறு மனிதர்களின் உயிரைப் பலி வாங்கிய ரேடியம் 1930-க்குப் பின்னர் பாதுகாப்போடு பயன்படுத்தப் பட்டு வருகிறது. இன்றும் ஒளி வீசும் ரேடியம் பெயிண்டுகள், கடிகார டயல்கள் உண்டு. ஆனாலவை எல்லாம் ஆபத்தானவை அல்ல. அதைச் செய்வோரும் பாதுகாப்பு அறையில் செய்வர் .அதை அணிவோருக்கும் கதிரியக்கம் வராதபடி கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும். மருத்துவத் துறை, பெயிண்ட் துறை ஒளிரும் பொருள்களைச் (Luminous) செய்யும் துறைகளில் ரேடியம் பயன்படுத்தப் படுகிறது.
இரசாயன குணங்கள்
ரேடியத்தின் குறியீடு – Ra ஆர் ஏ
அணு எண் -88
கொதி நிலை—1400 C
உருகு நிலை—700 C
ரேடிய ஆராய்ச்சியில் இறங்கிய மேரி க்யூரியும் ரேடிய அதிசயம், பற்றி விளம்பியுள்ளார்
“இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நாங்கள் அனைவரும் சோதனைச் சாலைக்குள் நுழைந்து இரவில் இருட்டில் எங்கள் குடுவைகளை நோக்குவோம். அப்பொழுது அவை நீல நிற ஒளியைக் கசிந்து இருப்பது எங்களுக்கு அதிசயமாக இருக்கும். அதை நாங்கள் இரவு நேர தேவதைகள் போலக் காண்போம். அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது”.
இந்த இரவு நேர தேவதைதான் பின்னர் அனைவரையும் சொர்க்க லோகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது!
TAGS– மேரி க்யூரி, ரேடியம்,நோபல் பரிசு, ஒளி வீசிய பெண்கள்!
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 20 December 2018 GMT Time uploaded in London – 7-13 am Post No. 5804
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
There are 118 known elements and Radium is one of them. Since it emits light it was named Radii (ray). It killed many beautiful girls who worked in the Radium Industry and the famous French scientist Marie Curie (born in Poland). Marie Curies was the first woman to receive a Nobel Prize. She was the only woman who won the prize twice. She was the only person to get noble Prize with her husband (Pierre Curie).
Radium is a radio active element. It is a silvery metal.
Radium craze gripped America at one time and it killed hundreds of people by cancer. Radio activity from Radium caused cancer and other health problems.
Here is the story of Radium:-
Radium is highly dangerous because of its intense radio activity. It was discovered by Marie and her husband Pierre Curie in 1898.
Soon after its discovery, radium was regarded as a wonder drug. USA saw a radium craze in 1900s. For 30 year,s all kinds of quack cures were sold. Cosmos bags, Raithor, Ravigorator were few names that attracted people in those days. They advertised that it cured cancer, mental illness, arthritis etc.
Those who could not buy expensive radium bought a flask lined with radium. People were asked to drink water stored in it overnight to cure several illnesses. Those who drank that water died of cancer in the following years. Eben Beyers, an American steel magnate , was one of the victims. After his death in 1931, the radium wonder drugs were stopped.
Beautiful girls emitted light!
The dangers came to public notice in a well publicized case of Radium Girls. They sued their former employer US Radium. The company used devious methods to prevent the case coming to trial. In the end the company settled the case out of court, awarding each girl $10,000 , but they all died within a few years. (It may remind us of Bhopal Gas Disaster in India).
Some of the girls from the factory were so contaminated with radium that their hair, faces, hands and arms glowed luminously in the dark!
Radium Dial Wrist Watches
In the first half of the20th century radium was an essential part of medical treatment for cancer. They implanted radium needles in the cancerous parts. Several workers who made such needles died later because of cancer. This element was used in luminous alarm clocks and wrist watches. The girls who worked there painted the dials with their hands. The young girls who worked there had the habit of licking the brush to make the painting sharp. They died of cancer later.
During II World War, precautionary measures were taken and the workers did such jobs by staying behind protective glass screens.
In the words of Marie Curie,
“One of our joys was to go into our work room at night when we perceived the feebly luminous silhouettes of the bottles and capsules containing our products. It was really a lovely sight and always new to us. The glowing tubes looked like faint fairy light.”
Chemical Qualities
Symbol of Radium – Ra
Atomic Number 88
Melting Point 700 C
Boiling point – 1400 C
Even today it is used in industries, but radiation levels are measured and human beings are protected. Luminous paints contain radium salts. Luminous dialled watches or clocks are no danger because the rays cannot penetrate the glass cases.
Earth is a naturally radio active planet. Radium also contributes to the background level of radiation.
Radium is produced naturally during the decay of Uranium and Thorium. 25 radium isotopes are known.
Source book:- Nature’s Building Blocks by John Emsley.
tags-Radium, Marie Curie, Radium watch, beautiful girls
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஜப்பானிய இலக்கியம்
ஹைகூ கவிதைகள்!
ச.நாகராஜன்
ஜப்பானியக் குட்டிக் கவிதை தான் ஹைகூ. 6 விநாடிகளில் இதைச் சொல்லி முடித்து விடலாம்.
3 வரிகளில் அமையும். 17 அசைகளைக் கொண்டிருக்கும். முதல் வரியில் 5 அசைகள், அடுத்த வரியில் 7 அசைகள், இறுதி அடியில் 5 அசைகள்!
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதைகள் இவை.
நிகழ்காலத்தைக் குறிக்கும்.
ஹொக்கு என்பதிலிருந்து உரு மாறி 17ஆம் நூற்றாண்டில் பிரபலமானது ஹைகூ.
பாஷோ (Basho-1644-1694) என்ற கவிஞர் தான் ஜப்பானில் ஹைகூவிற்கு முன்னோடியாக இருந்தார். ஆயிரத்தி எண்ணூற்றி ஐம்பதுகளில் ஹைகூ மேலை நாடுகளுக்குப் பரவியது.
இதன் வடிவமோ சிறிது. கருத்தோ பெரிது. ஆகவே பல அறிஞர்களும் கவிஞர்களும் இதைப் போற்றிப் பாராட்டினர்.
ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.ஹெச். லாரன்ஸ், அமி லொவெல் (Amy Lowell)என இதை விரும்பும் மேலை நாட்டு அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் பட்டியல் நீ விரிகிறது.
ஆனால் 17 அசை என்பது ஆங்கிலத்தில் முடியாது என்பதால் சுருக்கமான மூன்று வரிக் கவிதை என்று வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் ஹைகூ உருவாக ஆரம்பித்தது.
பாஷோ ஜப்பான் முழுவதும் சுற்றி வந்தவர். தனது அனுபவங்களை ஹைகூவில் குழைத்துக் கொடுத்தார். அதை ஜப்பானியர் பெரிதும் விரும்பினர்.
உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு உன்னதக் கவிதைக் கலையாக ஹைகூ வளர ஆரம்பித்தது. மசாவொ ஷிகி(Masaoka Shiki),டகஹாமா க்யோஷி(Takahama Kyoshi), கவாஹிகஷி ஹெகிகோடோ (Kawahigashi Kekigoto) ஆகியோர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இதை வளர்த்தனர்.
21ஆம் நூற்றாண்டிலோ ஹைகூ இயற்றுவோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தொட்டு விட்டது.
மூன்று வரிகள், சிறிய சொற்கள் என்ற வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் உள்ளிட்ட உலக மொழிகளில் ஹைகூ பாடுவது வளர்ந்து விட்டது.
பாஷோவின் கவிதை இது:
Summer grasses-
All that remains
Of warriors’ dreams
பாஷோ தனது பயணத்தில் இயற்றிய யுத்தம் பற்றிய கவிதை இது. ஃப்யூஜிவாரா வமிசத்தில் நடந்த ஒரு போரை அவர் பார்த்தார்.யுத்த களம் முற்றிலும் ரத்தம் ஆறாக ஓட, சதைத் துண்டங்கள் சிதறிக் கிடந்தன. அவர் அழுதார்.அனைத்தும் அழியும் உலகில் அழியாத உண்மை பற்றிய சிந்தனை அவர் உள்ளத்தில் எழுந்தது.
யுத்தகளத்தில் மாண்டு கிடந்த போர்வீரர்களின் சடலங்கள் அவருக்கு நிலையாமையை உணர்த்த என்றும் நிலைத்திருக்கும் பேருண்மையை அவர் ஒரு கணத்தில் உணர்ந்தார்.
பெரும்பாலும் இப்படி பேரனுபவ ஞானம் ஒரு கணத்தில் உள்ளத்தில் ஒளிரும் போது எழுவது தான் ஹைகூ.
இன்னொரு கவிதையைப் பார்ப்போம்.
சோடோ யமகுச்சி எழுதிய ஹைகூ இது.
This spring in my hut
there is nothing
there is everything (Sodo Yamakuchi)
எளிமையில் தான் எல்லா அடங்கி இருக்கிறது. மகாத்மா காந்திஜி உலகில் விட்டுச் சென்ற பொருள்களின் எண்ணிக்கை இரு கை விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டாது. ஹென்றி தோரோ எளிமையைப் போற்றினார்.
எளிமையாக வாழும் போது வளமையின் உச்சத்தை அவர்கள் பெற்றனர்.
சொத்தைச் சேர்க்கச் சேர்க்க மனம் கனமாகிறது. வெளியில் செல்வம்; ஆனால் அகத்தினுள் தரித்திரம்!
வசந்த காலத்தில் என் குடிலில்
ஒன்றுமே இல்லை
எல்லாம் இருந்தது.
என்ன அழகிய ஹைகூ.
கை (Kai) என்ற இடத்தில் பிறந்த சோடோ (1643-1716) பின்னர் டோக்கியோ சென்றார். அங்கு பாஷோவுடன் நெருங்கிப் பழகி அவரது நண்பரானார். சீன இலக்கியத்தில் பாண்டித்யம் கொண்ட இவரது அறிவைப் பார்த்து பாஷோ பிரமித்தார்.
இன்னொரு அருமையான கவிதை இது.
இதை எழுதியவர் கிறிஸ்டோபர் ஹெரால்ட்.
First light
Everything in this room
Was already here (Christopher Herold)
ஒளி அனைவருக்கும் பொதுவானது. அது புகாத இடமில்லை. அது உள்ளே புகுந்தவுடன் நமது பார்வை திறக்கிறது.
இதுவரை இருளில் தெரியாத அனைத்தும் தெரிகிறது.
ஆனால் அவை அங்கு தான் இருந்தன. நமக்குத் தான் தெரியவில்லை.
பார்வையை மாற்றுங்கள். அனைத்தும் பிரகாசமாகும்.
சிறையில் தூக்கிப் போடப்பட்டவன் வெளியில் வந்தவுடன் சுதந்திரமான உலகத்தைப் பார்க்கிறான்; பிரமிக்கிறான். அட, என்ன ஒரு அற்புதமான உலகம் இது!
மருத்துவமனையில் மாதக் கணக்கில் அடைந்து கிடந்தவன் உடல் நலம் தேறி வெளியே வருகிறான்.
அடடா, அனைத்தும் அற்புதம் தான் அவனுக்கு.
ஆனால் உலகம் மாறவில்லை. அவன் பார்வை தான் மாறி இருக்கிறது.
இந்த ஹைகூ அனைத்தையும் ஒளியுடன் பார்க்க உத்வேகம் ஊட்டுகிறது. அந்த ஒளியில் புதிய பார்வை இருக்க வேண்டும். அப்போது அனைத்துமே நமக்குச் சரியாகப் புலப்படும்.
இதை எழுதிய அமெரிக்கரான கிறிஸ்டோபர் ஹெரால்ட் 1948இல் பிறந்தவர். ஜென் பிரிவில் அடங்காத ஆர்வம் கொண்டவர். அதை அனைவருக்கும் போதிக்கும் ஆசிரியரும் கூட.The Heron’s nest என்ற பன்னாட்டு ஹைகூ பத்திரிகையின் ஆசிரியரும் கூட.
ஆயிரக் கணக்கில் ஹைகூ கவிதைகள் இன்று உருவாகின்றன.
ஆனால் மூன்று வரிகளில் இருப்பதெல்லாம் ஹைகூ அல்ல. நூற்றுக் கணக்கில் ஈசல் போலப் பிறக்கும் கவிதைகள் வெறும் சொற் கதம்பம் தான்.
நிஜமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் தான் ஹைகூவின் அருமை தெரிய வரும்.
108 ஹைகூ கவிதைகளைத் தொகுத்து பாட்ரியா டொனெகன் (Patricia Donegan) எழுதிய ஹைகூ மைண்ட் (Haiku Mind) குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம்.
இது போல நூற்றுக் கணக்கில் உள்ள சிறந்த ஹைகூ தொகுப்பு நூல்களைப் படித்தால் மனம் சிறக்கும்; சிறகடித்துப் பறக்கும். இருளகன்று உளத்தில் ஒளி பிறக்கும்!
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 19 December 2018 GMT Time uploaded in London – 7-29 am Post No. 5801
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
உலகின் முதல் சட்டப் புத்தகம் மநு நீதி நூல்- 12 அத்தியாயங்களைக் கொண்டது. ஹமுராபி எழுதிய சட்டப் புத்தகத்தைவிட முந்தியது. ஆனால் அவ்வப்பொழுது UUDATE ‘அப்டேட்’ செய்யப்பட்ட ஸரஸ்வதி நதி தீர நாகரீக நூல். 2600 ஸ்லோகங்களுக்கு மேல் கொண்டது. ஒன்பது முழு நீள வியாக்கியானங்கள் (உரைகள்) இப்பொழுது கிடைக்கின்றன. நாம் இது வரை வெற்றிகரமாக ஆறு அத்தியாயங்களைக் கண்டு களித்தோம்.
இன்று ஏழாவது அத்தியாயத்தில் அடி எடுத்து வைப்போம். இதில் அரசனுக்குரிய நீதிகள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. அவைகளை இன்று உலகை ஆளுவோருடன் ஒப்பிட்டாலும் பொருந்தும்.
முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டு BULLET POINTS களில் தருகிறேன்.
1.அரசனைக் கடவுள் என்று இந்துமத நூல்கள் போற்றும். இது சங்க இலக்கியத்திலும், தமிழ் வேதமான திருக்குறளிலும் உள்ளது தமிழில் ‘கோ’,’இறை’ என்பன கடவுளையும் மன்னர்களையும் குறிக்கும் சொற்கள்.
ஸ்லோகம் 1 முதல் 8 வரை காண்க
2.அரசனை இந்திரன் முதலான எட்டு தேவதைகளின் சக்தியுடன் ஒப்பிடுதல்— இதுவும் சங்க இலக்கியப் பாடல்களில் உள. அவன் அக்னி போன்றவன் ,யமன் போன்றவன்,இந்திரன் போன்றவன்; பகைவர்களுக்கு யமன், சூரியன் நெருப்பு; வேகத்தில் காற்று என்றெல்லாம் புற நானூற்றுப் புலவர்கள் வருணிப்பது மநுவின் ஸ்லோக அடிப்படையிலேயே. ஸ்லோகம் 1 முதல் 8 வரை.
3. திருக்குறளில் அதிகாரம் 55, 56 செங்கோன்மை, கொடுங்கோன்மை,அதிகாரம் 39 இறைமாட்சி, அதிகாரம் 70 மன்னரை சேர்ந்தொழுகல் ஆகியன மநுவின் ஏழாவது அத்தியாயத்தின் எதிரொலி.
மன்னன் கடவுள்- குறள் 388= மநு 7-5
மன்னன் நெருப்பு- குறள் 691
இப்படி தொடர்ந்து ஒப்பிட்டுக்கொண்டே போகலாம் நிற்க.
4.கெட்ட மன்னர்களும் நல்ல மன்னர்களும்
ஸ்லோகம் 41,42-ல் மக்களால் தூக்கி எறியப்பட்ட, போற்றப்பட்ட மன்னர்களின் பட்டியல் உளது. இதில் சுமுகன் என்னும் மன்னர் பெயர் சுமேரியாவில் மட்டும் உளது. இந்திய அறிஞர்களைத் திணற வைக்கும் பெயர். இது பற்றி ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன். மநு நூல் ரிக் வேத கால நூல் என்பதற்கு நான் தரும் பல சான்றுகளில் ‘சுமுகன்’ பிரச்சனையும் ஒன்று
5.தண்டனைகள்
மநு, தண்டனை பற்றிக் கூறும் ஸ்லோககங்கள் மிக முக்கியமானவை. தமிழர்களின் கல்வெட்டுகள் மன்னர்களை மநு நீதி வழுவாது ஆண்டவன் என்று போற்றுகின்றன. மநு நீதிச் சோழன் கதையை முன்னரே கொடுத்துவிட்டேன் ஸ்லோகங்கள் 9-31
6. உவமைகள்- மீன், நாய் காகம், நீரில் சிந்திய எண்ணைத் துளி, நீரில் விழுந்த நெய் முதலியன ஸ்லோகங்கள் 20, 21, 33, 34
7. 18 கெட்ட செயல்கள்
அரசர்கள் தவிர்க்க வேண்டிய 18 தீய செயல்கள், குணங்கள்
ஸ்லோகங்கள்-45 -53
8. எண்பேராயம், ஐம்பெருங்குழு
தமிழர்கள் அக்காலத்தில் பஞ்சாயத்து (5), எட்டு அமைச்சர் குழு முதலியன வைத்திருந்தது சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணப்படுகிறது மநுவும் 7 அல்லது 8 அமைச்சர் குழு பற்றிப் பேசுகிறான். வீர சிவாஜி, கிருஷ்ண தேவ ராயர் முதலியோர் எட்டு அமைச்சர் அமைப்பைப் பின்பற்றினர். காண்க ஸ்லோகம் 54
9. பிராமணர்களுக்கு சலுகை
உலகில் இன்று வரை ஒழுக்கம் மிக்கவர்களும் அறிஞர்களும், ஒரு சிறு தவறு செய்தால் மன்னிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிராமணர்களுக்கு தண்டனை விஷயத்தில் மென்மை காட்டும் படி மநுவும் அறிவுரை தருகிறான். அண்மையில் பிரிட்டனில் ஒரு டாக்டருக்கு வழங்கிய தீர்ப்பு, சோவியத் ரஷ்யாவில் அரசை எதிர்த்த அணு விஞ்ஞானி ஷகாரோவுக்குக் கிடைத்த சலுகைகள் முதலியவற்றைப் பல கட்டுரைகளில் பகர்ந்துவிட்டேன். ஸ்லோகம் 38, 82 முதல்
10. தூதர்கள்
உலகில் தூதர்கள், கொடி , சின்னங்கள் ஆகியவற்றை முதலில் கையாண்டது பாரதமே என்பதை சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து விட்டேன். தூதர் நியமனம் பற்றி ஸ்லோகம் 63 முதல் மநு கதைக்கிறார். வள்ளுவனும் தூது (அதிகாரம் 69) என்னும் பொருள் பற்றிப் பத்துகு றள்களில் கதைக்கிறார்.
11. மலை மேல் கோட்டை கட்டுவதில் உள்ள சாதகங்களை மநு எடுத்துரைக்கிறான். இவ்வாறு செய்ததால் ராஜஸ்தானியர்களும், வீர சிவாஜியும் துலுக்கப் படைகளை துவம்ஸம் செய்தனர். வள்ளுவனும் அரண் என்னும் அதிகாரத்தில் இதை ஆராய்கிறார். ஸ்லோகம் 71-75 .
12. தர்ம யுத்தம்
ஸ்லோகம் 90- 98 தர்மயுத்தம் பற்றியவை. அந்தக் காலத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில், ஊருக்கு வெளியே, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே சண்டை போடுவர். பிராமணர்கள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகளை அந்தப் பக்கம் வரக்கூடாது என்று முன் எச்சரிக்கை செய்துவிடுவர். மநுவும் போர் பற்றிப் பேசிவிட்டு போரில் வென்ற பொருள்கள் யாருக்குச் சொந்தம் என்றும் சொல்கிறான். மநு சொல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அரச நீதி முறை பற்றிய ஏழாவது அத்தியாயத்துக்கு ஒன்பது பாஷ்யக் காரர்களும் வழங்கிய வியாக்கியானங்களைப் படிப்போருக்கும் மநு உலக மஹா ஜீனியஸ், (Great genius) மேதாவி என்பது விளங்கும். இதனால்தான் உலகம் முழுதும் இன்று வரை மநுவைப் புகழ்கிறது. 40 Anti-Shudra சூத்திர எதிர்ப்பு ஸ்லோககங்களை மட்டும் வைத்துக்கொண்டு கூத்தடிக்கும் மார்கஸீயங்களுக்கும் திராவிடங்களுக்கும் கரி பூசும் பகுதி இது.
மநு, ஒவ்வொரு அதிகாரத்திலும், மன்னரானாலும், பிராஹ்மணன் ஆனாலும் ஒழுக்கத்தையும், புலன் அடக்கத்தையும் வலியுறுத்துகிறான். காம, க்ரோத, லோபம் கூடாது என்கிறான். அப்படிப்பட்ட ஆட்சி இருந்தால் எவருக்கும் குறைவில.