திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)

திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)

 

Written by London Swaminathan 

 

Date: 6 April 2018

 

Time uploaded in London –  7-41 am (British Summer Time)

 

Post No. 4887

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு தெலுங்கு தேச நாட்டுப்புற கதை

 

ஒரு வயதான வர்த்தகன் வீட்டில் திருடன் வந்து மரத்தடியில் ஒளிந்து கொண்டான். இதை அந்த புத்திசாலி வணிகன் பார்த்தும் பாராமலும் இருந்துவிட்டான். பின்னர் திருடனைப் பிடிக்க எப்படி பக்கத்து வீட்டுக்காரர்களை அழைப்பது என்று யோசித்தான்.

 

திருடன், திருடன் என்று கத்தினால் அவன் ஓடி விடுவான் அல்லது வணிகரைத் தாக்குவான். ஆகையால் ஒரு IDEA ஐடியா செய்தார்.

 

மனைவியைக் கூப்பிட்டு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போடச் சொன்னார். கணவனுக்கு ஏதோ என்னமோ ஆகிவிட்டதோ என்று பயந்து அந்த அம்மாளும் ஒரு நாற்காலியைப் போட்டார்.

 

‘கடவுளே, பயங்கர பல் வலி. சீக்கிரம் ஒரு குடத்தில் சுடுநீரும், வாயில் அடக்கிக்கொள்ள கிராம்பும் கொண்டு வா’ என்றார். மனைவியும் அப்படியே செய்தார்.

 

அவர் ஒவ்வொரு முறையும் வாயைக் கொப்பளித்து அந்த எச்சிலைத் திருடன் இருக்கும் புதர் மீது துப்பினார்.  குடத்தில் கடைசி நாலு வாய்க்கு சுடு நீர் இருக்கும் நேரத்தில் அதை இரண்டு மூன்று முறைக் கொப்பளித்து மனைவி மீது துப்பினார். அவள் கணவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று சப்தம் போடத் துவங்கினாள். உதவி, உதவி என்று எல்லோரையும் கூப்பிடத் துவங்கினார் .

எல்லோரும் ஓடி வந்தனர்; உடனே அந்த வணிகர் மனைவியைப் பார்த்து திட்டத் துவங்கினார்:- “நான் யாருக்காக லட்சக் கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்தேன்? இது என்ன அநியாயம்? இரண்டு முறை எச்சில் விழுந்ததற்கு இவ்வளவு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டி விட்டாளே!! இதோ பாருங்கள், அந்தப் புதருக்கு அடியில் ஒளிந்திருக்கும் திருடன் மட்டும் நான் ஒரு மணி நேரத்துக்கு எச்சில் நீரை துப்பியும் கூட எவ்வளவு அமைதியாக இருக்கிறான்? அவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? என்று கேட்டார்.

 

உடனே எல்லோரும் அந்த்ப் புதர் மீது பாய்ந்து, திருடனை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

எந்தப் பிரச்சினையையும் சமயோசித புத்தியால் சமாளிக்கலாம்.

 

–subham–

நான் ஏன் நன்றாக இருக்கிறேன்? (Post No.4886)

Date- 6 April 2018

 

British Summer Time- 6-42 am

 

Written by S Nagarajan

 

Post No.4886

 

Pictures are taken from various sources; thanks.

 

 

ச.நாகராஜன்

 

 

நல்ல மனிதர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் அவர் நன்றாக இருப்பதற்கான காரணத்தைப் பணிவுடன் கேட்டேன். அவர் கூறிய பதில்:

 

நான் ஏன் நன்றாக இருக்கிறேன்?

நான் யார் சொத்துக்கும் ஆசைப்படுவதில்லை. ஒரு பைசா என்றாலும் கூட அடுத்தவர் காசு என்றால் தவறாக தரப்பட்டாலும் திருப்பித் தந்து விடுவேன். ஏனெனில் கர்ம பலன் விடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

தினமும் லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து; சர்வே ஜனா சுகினோ பவந்து; எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று சொல்லத் தவறுவதில்லை. இதில் எனது சுயநலமும் இருக்கிறது என்பதை நான் பூரணமாக உணருகிறேன். ஏனெனில் அனைவரும் நலமாக இருந்தால் அதில் நானும் ஒருவன் தானே. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

பிரார்த்தனை செய்ய நான் தவறுவதில்லை. அது அனைத்துச் சமயங்களிலும் உடனடியாகப் பலிப்பதில்லை என்று தெரியும். ஆனால் எது தரப்பட வேண்டும் என்பதை நம்மை விட எங்கும் நிறைகின்ற பொருளுக்குத் தெரியாதா என்ன? ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

எனது சம்பிரதாயங்களை நான் விட்டுக் கொடுப்பதில்லை. எனது வழிபாட்டு மதம் எனக்கு போற்றத் தகுந்தது. ஆனால் மற்றவர் வழிபாட்டு முறையையும் நான் மதிக்கிறேன். ஆகாயத்திலிருந்து விழும் நீரானது எப்படி கடலைச் சென்று கலக்கிறதோ அதே போல எந்த்த் தெய்வத்தை வழிபட்டாலும் அது கேசவனைச் சேர்கிறது என்ற மந்திரத்தைச் சிறு வயது முதலே நான் சொல்லி வருகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

முன்னோர் வழிபாடு முக்கியம் என்பதால் எனது முன்னோர்களை நினைக்காமல் இருப்பதில்லை. தேவையான வழிபாடுகளைச் செய்வதால் அவர்களின் பரிபூரண ஆசி எனது குடும்பத்திற்கு இருக்கிறது.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

அடுத்தவர் விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. அவர்கள் மனம் புண்படும் படி பேசுவதில்லை. வலியச் சென்று பிறருக்கு யோசனைகள் கூறுவதில்லை. சொற் குற்றம் நேரக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

வருமானம் பெரிதாக இல்லாவிட்டாலும் நான் கவலைப் படுவதில்லை. ஆனால் வருகின்ற வருமானம் அறத்தின் அடிப்படையில் லஞ்சம் போன்ற ஊழல் பணம் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். வருகின்ற வருமானத்திற்குள் செலவு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.

ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

சொந்த நாட்டில் வாழ்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

பெண்களை நான் நன்கு மதிக்கிறேன். அவர்களிடம் கண்ணியத்துடன் பழகுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

உடல் ஆரோக்கியத்திற்கு முதலிடம் தருகிறேன். உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற படி உடல் பெரும் பேறை அடைவதற்கான சாதனம் என்பதை உணர்ந்து செயல் படுகிறேன். உடல் பயிற்சி, தியானம் இவற்றில் முழுமனதுடன் ஈடுபடுகிறேன். அதே சமயம் சுற்றுப்புறச் சூழ்நிலையால் என்னை மீறி வரும் வியாதிகளை ஏற்க வேண்டியதிருந்தால் ஏற்று உரிய மருத்துவ உதவியால் மீள்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

ஆடம்பரப் பொருள்கள் என்னிடம் ஏதுமில்லை. தீமை விளைவிப்போர் செய்யும் அரசியலுக்குள் நுழைவதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

எனது நேரத்தின் ஒரு  பகுதியை சமுதாயப் பணிக்காக ஒதுக்குகிறேன். மருத்துவ உதவி, படிப்பு உதவி, ஆலயங்களைச் சுத்தம் செய்தல், அன்ன தானம் ஆகியவற்றைப் புரிவோருடன் இணைந்து என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

எனது வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்காக ஒதுக்குகிறேன். இந்தப் பணத்திற்கு பலன் ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

மொழிச் சண்டை, இனச் சண்டை, மதச் சண்டை போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

நண்பர்களை பெரிதும் மதிக்கிறேன். அவர்கள் நட்பினால் ‘இடித்தல்’ செய்தாலும் அதை ஏற்கிறேன். ஆனால் நம்பிக்கை துரோகிகளுடன் மட்டும் நான் பழகுவதில்லை. அவர்களை ஏற்பதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

குடும்ப உறுப்பினர்கள் நலமே முக்கியம் என உழைக்கிறேன்.அவர்களை உயர்த்தப் பாடுபடுகிறேன். ஒரு குடும்பம் முன்னேறினால் ஒரு தெரு உயரும். ஒரு தெரு உயர்ந்தால் ஒரு நகர் உயரும். நகர் உயர்ந்தால் நாடு உயரும்.  ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

 

 

தேச பக்தியும் தெய்வ பக்தியும் எனக்கு இரு கண்கள். தேச சேவை எனக்கு மிக முக்கியம்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

முன்னோர்களின் அற நூல்கள் உள்ளிட்ட புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் என்னிடம் உள்ளது. அவ்வப்பொழுது அதைப் படித்து என்னை உற்சாகப்படுத்திக் கொள்கிறேன், அறிவைப் பெருக்க விழைகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

இசை தரும் பயன்கள் அனைத்தும் தெரியும் என்பதால் அதைப் பயன்படுத்தி மன அமைதி பெறுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

ரிஷிகள், பெரியோர், மகான்கள், அறவோர் ஆகியோரை மிகவும் போற்றுவதாலும் அவர்களை அணுகி ஆசி பெறுவதாலும் கஷ்டங்கள் வருவதில்லை. சிறிய கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பெரியோர் ஆசியால் எதிர் கொண்டு சமாளித்து மீள முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

அறநூல்களின் அறிவுரைப்படி இரகசியமாகக் காக்க வேண்டிய விஷய்ங்களைக் காக்கிறேன். அடுத்தவர் இரகசியங்களை அறிய விழைவதில்லை. வம்புப் பேச்சை ஆதரிப்பதுமில்லை. அப்படி வம்பு பேசுவோருடன் பழகுவதுமில்லை.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

வயதாக ஆக, நல்ல செயலகளும் செய்த நற்பணிகளும் மனதில் நிழலாடுவதால் அமைதியுடன் இருக்க முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.

 

***

 

ROLE OF PADDY PLANTS IN TAMIL ASTROLOGY (Post No.4885)

ROLE OF PADDY PLANTS IN TAMIL ASTROLOGY (Post No.4885)

 

Compiled by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  18-50 (British Summer Time)

 

Post No. 4885

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

Tamil Hindus have been using plants in astrological calculations and forecasts. It is found in their 2000 year old Sangam Tamil literature.

V R Ramachandra Dikshitar has detailed it in his ‘Studies in Tamil Literature’ published in 1936.

Following is the summary of his observations:

“In the age of Tolkappianar (First Century BCE) and perhaps much earlier, the ancient Tamils were superstitious and god fearing. It was an age of crude astrology. The aid of astrology was sought whenever anyone feel sick and the illness was persistent. It was also pressed into service when calamities of any sort, providential or otherwise threatened the country.

 

The astrologers belonged to the class of mountain tribe, known as ‘Kuravar’ and what is more remarkable is that it was largely the ‘Kurava’ women (‘Kuraththi’) who adopted fortune telling as their profession.

 

The term ‘Kuramakal Kuri Eyini’ occurring in the Sangam works like the Narrinai ( Verse 357) and Purananuru ( verse 157) shows that these ‘Kurava’ women alone were engaged in this fortune-telling practice. That the male member also took to this profession is evident from the Ainkurunuru (verse 394). The relic of this very ancient custom is still preserved by the class of ‘Nari-kurattis’ and ‘Kudukuduppandis’ who go about begging from door to door in every village and town predicting good or evil for every member of the family.

There were two modes of arriving at a solution. it was either by what is known as’ Kattu’ or ‘Kalangu’. The method of Kattu consisted in taking a handful of paddy grains at random and counting it by twos to arrive at a decision favourable or unfavourable. She who did this was known as ‘Kattuvicci’. This practice of predicting fortune by means of paddy grains mention in the works of Saivite saint Manikka vasakar and Vaishnavite saint Tirumangai Alvar. In the epoch of the Tirukkovai (verse 285), it was one of the ways of thought-reading. By the counting of paddy one would be able to give out what the other had in his mind.

 

Again Tirumangai Alvar refers to the practice of seeking the advice of ‘kattuvicci’ by the relatives of a girl who was ailing from love sickness for Tirumal (Vishnu). Reference is also made to this custom in a later work entitled Minatchiammai Kuram by Kumaragurupara swamikal.

 

The other mode of divination was with the help of Molucca beans (nickernut= ‘Kazarchikay’). Fortune-telling by from Molucca beans by the ‘Velan’ is as much as an ancient custom as the counting of paddy for the same purpose. About the exact method adopted we have no authentic material. All that we know is that it was done by Velan the priest offering worship to Murugan (Lord Kartikeya). The Velan acted as the oracle and gave out what would happen and what would not happen. There are two ways of Velan telling the fortune or misfortune. One was ‘Veriyatal’ and the other was the choice of a root. Yet another method of appeasing the wrath of the deity was to draw a figure just like the diseased person and make a present of it to the temple.

The Velan method of fortune-telling is current even today in Malabar and in Cochin. These persons are generally known as ‘Mantravadins’ and four kinds of Velans are distinguished: Bharatavelan, Vaagaivelan, Paanavelan, ad Mannavelan. These resort to different practices by which they are said to effect sure cures for incurable diseases”.

–by V R Ramachandra Dikshitar (Year 1936).

 

My Old Articles:

sand circles | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/sand-circles/

tamilandvedas.com/tag/நாடி… Posts about நாடி ஜோதிடம் written byTamil and Vedas. Tamil Astrology: Rope Trick for Predictions! | Swami’s … swamiindology.blogspot.com/2013/02/tamil-astrology-rope… Today’s article is about a Rope Trick. It is not a magic like the famous Indian Rope Trick by the …

Tamil astrology | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/tamil-astrology/

tamilandvedas.com/2013/02/27/tamil-astrology… Tamil Astrology: RopeTrick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to happen. They watch … நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி | Tamil and Vedas.

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/tamil-astrology-rope-trick-for-predicti…

27 Feb 2013 – Tamil AstrologyRope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to happen. They watch the flight of birds and tell your future. They bring parrots to your door step and the parrot picks up a card to tell what is going to happen at your …

 

methods | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/methods/ – Translate this page

Written by London Swaminathan. Date: 7 October 2017. Time uploaded in London- 15-58. Post No. 4280. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Some time ago I wrote about Tamil’s Rope Trick astrology. Like orthodox Hindus find some ..

 

கூடல் இழைத்தல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கூடல்-இழைத்தல்/

Translate this page

tamilandvedas.com/tag/நாடி… Posts about நாடி ஜோதிடம் written byTamil and Vedas. Tamil Astrology: Rope Trick for Predictions! | Swami’s … swamiindology.blogspot.com/2013/02/tamil-astrology-rope… Today’s article is about a Rope Trick. It is not a magic like the famous Indian Rope Trick by the …

 

–Subham–

 

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

 

Research article Written by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  8-49 am (British Summer Time)

 

Post No. 4884

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ராமாயணத்தைத் தந்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். அவன் காலத்தில் சோழ வள நாடு சோறு மட்டுமின்றி ரத்தினக் கற்களிலும் செழிப்பாக இருந்தது. இதை அ வனது பாடல்களில் காண முடிகிறது. அது மட்டுமா?

 

அதிசய நாக ரத்தினம் பற்றியும், தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் ‘ஸ்பர்ஸ்வேதிக்’ கல் பற்றியும் கம்பன் பாடுகிறான். இது அக்கால நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது

 

‘ஸ்பர்ஸவேதி’ என்னும் கல்லை சித்தர்கள் வைத்திருந்தார்கள் என்றும் அதனால் அவர்கள் வேண்டிய அளவுக்குத் தங்கக் கட்டிகளைப் பெற்றார்கள் என்றும் இந்துக்கள் நம்புவர். மேலை நாட்டிலும் மத்திய காலத்தில் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.

 

கம்பன் சொல்வான்; ராமன் ஒர் ஸ்பர்சவேதிக் கல் போலும்; அவன் தொட்டதெல்லாம் தங்கம் ஆகி விடுகிறதே என்று!

 

நாகரத்தினம் உண்டு என்றும், இதைக் கொண்டே நாகங்கள் இரை தேடும் என்றும் தமிழர்கள் நம்பினர் (காளிதாசன் காவியங்களிலும், சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ள விஷயங்களை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்)

 

கம்பன் இதைச் சொல்கிறான்:-

 

சுந்தர காண்டத்தின் நிந்தனைப் படலத்தில் சீதையைத் தேடி அசோக வனத்துக்குள் வந்த ராவணனை வருணிக்கும் கம்பன் செப்புவான்:-

 

ஒரு மணி தேடும் பல் தலை அரவின்

உழைதொறும் உழைதொறும் உலாவி

 

காம மயக்கத்தால் சீதை இருக்கும் இடத்தை மறந்து போன ராவணன், தன் ஒப்பற்ற மாணிக்கத்தை  இழந்த பல தலைப் பாம்பு போலப் பற்பல இடங்களிலும் அவளைத் தேடித் திரிந்தபடி வந்தான்.

 

 

அனுமன் கடலைத் தாண்டிய வேகத்தில் கடல் நீர் கிழிந்ததாம். அதில் பாதாள லோகமும் அங்கே வாழும் நாகர்களுடைய ரத்தினங்களும் மின்னியதாம்.

 

கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்

வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன

–கடல் தாவு படலம், சுந்தர காண்டம்.

 

உருக் காட்டுப் படலத்தில் ராமனின் மோதிரத்தை அனுமான் சீதையிடம் கொடுத்தவுடன், மாணிக்கத்தைத் தேடும் பாம்புக்கு அந்த ரத்தினம் கிடைத்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அது போல சீதையின் மன நிலை இருந்ததாம்.

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்– என்பான்.

 

வேதிகை மணி

அதிசயமான வேதிகை மணி பற்றிய பாடலும் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்திலேயே வருகிறது:-

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்

பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே

ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்

தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிகொல்லோ

 

பொருள்:-

நீண்ட கண்களையும் சிறந்த அணிகலன்களையும் உடைய சீதையின் மின்னல் போன்ற உடலின் நிறமானது, மோதிரத்தின் ஒளியால் பொன்னிறம் பெற்றுப் பொலிவும் பூண்டது. இது உண்மை! எனவே, இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் எல்லாப் பொருள்களும் தன்னைத் தீண்டுகிற மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத் தன்மை பெற்ற ஸ்பரிசவேதி என்னும் ரசவாத குளிகைதானோ?

 

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணன் மாணிக்கத் தேரில் ஏறி வந்ததாகவும் அங்கே ஒன்பது மணிகளால் (நவரத்னம்) ஆன மரங்கள் இருந்ததாகவும் கூறுகிறான்

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்

பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற

 

 

நவரத்தினத் தேர், நவரத்தின மோதிரம்!

 

 

ராமன் ஏறிய தேர் பற்றிய வர்ணனை மிகவும் சுவையானது;-

பொன் திரள் அச்சது வெள்ளிச் சில்லி புக்கு

உற்றது வயிரத்தின் உற்ற தட்டது

சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்து

ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடும் ஒப்பதே

–பால காண்டம்

 

ராமனின் தேரின் அச்சு-தங்கம், சக்கரம்-வெள்ளி, தேர்த் தட்டு- வைரம், பார்டர்- நவ அர் ரத்தினக் கற்கள், சூரியனின் ஒற்றைச் சக்கரம் போன்றது.

 

 

கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலத்தில் நவ ரத்தின மோதிரம் பற்றிய வருணனை வருகிறது:

நானிறச் சுரும்பும் வண்டும் நவமணி அணியின் சார- என்ற பாடலில் பல நிறங்களுடைய சுரும்புகளும் வண்டுகளும் நவ மணிகள் இழைக்கப் பெற்றுக் கைகளில் அணிந்து கொள்ளும் மோதிரம் வளை போலக் காந்தள் மலரில் மொய்த்தன– என்று வருகிறது.

இவ்வாறு நவரத்தினம், தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் நிறையவே உள்ளன. இவை சோழர் கால செல்வ வளத்தின் எதிரொலி என்றால் மிகையாகாது.

 

My Old Articles: –

 

கம்பன், காளிதாசன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-காளிதாசன்/

18 Oct 2016 – விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள். மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218).காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32. திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த …

ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரத்தினக்-கற்கள்/

22 வகை ரத்தினக் கற்கள். மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம்என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது அறிஞர்கள் இருந்ததை …

 

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று …

https://tamilandvedas.com/…/நாகரத்தினம்-பற்றி-…

13 Feb 2015 – முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது …

 

மாணிக்கம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மாணிக்கம்/

முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே …

 

TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி,  தங்கம் ஆக்கும் கல்

 

சுபம்–

உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில் (Post no.4883)

Compiled by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  5-42 am (British Summer Time)

 

Post No. 4883

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழ்கண்ட பொருள் பொதிந்த — அர்த்த புஷ்ட்யுள்ள – அக்ஷர லக்ஷம் பெறும் வாசகங்களை யார் சொன்னார்கள்? எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு! செப்படா, தமிழா!

 

1.வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்

தோதி யுலகெங்கும் விதைப்பாள்

xxx

2.இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்

xxxx

3.மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்

xxx

4.ஊன நாடகமாடு வித்தவா

உருகிநானுனைப் பருகவைத்தவா

ஞானநாடகமாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே

xxx

5.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

xxxx

6.வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி

சேணியன் போற்றக், கடல் பள்ளிமுன் தொழ தீங்கரும்பைக்

கோணியன் வாழ்த்தக், கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த

வேணியன்  ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே

xxx

7.இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை

xxx

8.முத்தமிழ்த் துறையின் முறை போகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

xxx

9.பதினோர் ஆடலும், பாடலும் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு

xxxx

10.விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே

xxx

 

விடைகள்

1.பாரதி, பாரதியார் பாடல்கள்; 2. திருமூலர் எழுதிய திருமந்திரம்; 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்; 4. மாணிக்கவாசகர், திருவாசகம்; 5. பாரதிதாசன் பாடல்கள்; 6. காளமேகம்,  தனிப்பாடல்கள்; 7. சங்க கால அவ்வையார் ,புறநானூறு; 8. கம்பன், கம்ப ராமாயணம்; 9. இளங்கோ, சிலப்பதிகாரம்; 10. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70 & 71 (Post No.4882)

Date- 5 April 2018

 

British Summer Time- 4-59 am

 

Written by S Nagarajan

 

Post No.4882

 

Pictures are taken from various sources;thanks.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70

  பாடல்கள் 570 முதல் 578

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

பாரதி பத்துப்பாட்டு

 

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

 

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்

 

காதல் போயின் சாதல் என்றே

    கழறும் படிசெய்தாய்

நீதம் அதுவே என்றிடும் வண்ணம்

    நீடுற உரைத்திட்டாய்

ஆதலி னாலே நீயே எந்தன்

    ஆரு யிரைக்கவரும்

காதல னாக வந்தாய் எந்தன்

    கான மதைக்கேட்டாய்

 

பாட்டினில் உன்போல் இதயந் தன்னை

    பறிகொடுத் திடுவோர்கள்

நாட்டினி லெங்கும் இருந்திடு வாரோ

    நானுந் தன்மேலே

காட்டிய காதலில் உள்ளம் நெகிழ்ந்தாய்

    கனிவுட னதையேற்றாய்

ஏட்டிலும் காணா காதல் இதுவென

    எனைப்பி ரிந்தே சென்றாய்

 

ஆயினு மென்ன காதல் தனையே

    அவம தித்தல்போல்

ஆயிடை மறுநாள் நானொரு குரங்கிடம்

    அதே பாடல் பாட

ஏயின அம்பாய் காயம் பட்டாய்

    என்மேல் கோபமுடன்

போயினை எந்தன் காதல் தனையே

    போலியென் றேநினைத்தாய்

 

குரங்கி லிருந்தே மனிதன் வரவென

    குறித்தார் நூல்களிலே

மரங்க ளின்மேல் தாவிட லாலே

    மனமே குரங்கென்றார்

குரங்கை விரும்பும் எந்தன் மனமும்

    குரங்காய் நினைத்தாயோ?

தரங்கெட்ட குயில் எனவே வெறுத்துத்

     தனியாய் தவித்தாயோ?

 

மூன்றாம் நாளில் நீவரும் போதில்

    முன்னிலும் கொடுமையதாய்

நான்செய் செயலை நேரினில் கண்டாய்

    நாடியோர் மாட்டினிடம்

மீண்டும் அந்தக் காதல் பாடல்

    மோகத் துடனிசைக்க

ஏன்தான் இந்தக் குயிலைக் கண்டேன்

    எனநீ நொந்தனையே

 

காதலைநீ மதித்திடல்தான் உண்மை யென்றால்

    கருத்தற்ற குரங்கிடமும் மாட்டைக் கண்டும்

காதல்பாட் டிசைத்திடுதல் சரியா என்றே

    கடுங்கோபத் துடன்நீயும் கேட்டு நின்றாய்

வாதமேதும் செய்யாமல் கண்ட தெல்லாம்

     மாயையென்றே நானெடுத்து உரைத்த போதில்

ஏதமென அதையேற்க மறுத்து விட்டாய்

     என்றாலும் அதையுணர்த்தல் எளிதே யல்ல

 

நடவாத ஒன்றினையே நடந்த தாக

     நாமறிந்தோர் சிலநேரம் சொல்வ துண்டு

திடமாக அதைநம்பும் சிலபே ராலே

     தீங்குகளும் சிலநேரம் நிகழ்வ துண்டு

படமாகக் கண்முன்னே நீயே நேரில்

    பார்த்ததையே நானிங்கு மாயை யென்றால்

தடம்மாறும் என்பேச்சை நம்பப் போமோ

     தானதனைச் சிந்தித்தென் கதையைச் சொன்னேன்

 

முன் ஜென்மச் சிந்தனை இல்லாத பேரிந்த

     மேதினியில் எங்கும் இல்லை

இன்றதனை உணர்ந்திடின் அதிலுற்ற காதலையே

     எண்ணுவார் மாற்ற மில்லை

அன்றந்தப் பிறவியில் நான் கொண்ட காதலை

     அழகாகப் பாடித் தந்தாய்

என்றுமென் நினைவினை எந்நாளும் நிலைபெறும்

    இலக்கியமாய் சூடத் தந்தாய்

 

இக்காலம் கதைகளை எவ்வடிவில் கண்டாலும்

    யாவிலும் ஆழமாக

முக்கோணக் கதைகளே பெருமளவில் வருமதன்

     முன்னோடி நீயே யன்றோ

அக்காலந் தனில்நீயும் அருமையுள நாடகமாய்

     அரியயென் முன்ஜென் மத்தை

எக்காலத் திலுமெவரும் எண்ணியே வியந்திடவே

     ஏற்றமுற இயம்பலானாய்

  குயில் பார்வையில் பாரதி தொடரும்.

xxxxxxxxxxxxxxxxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 71

  பாடல்கள் 579 முதல் 587

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

30 முதல் 38 வரை உள்ள பாடல்கள்

இருவ ரென்னை விரும்பி நின்ற போதில்

ஒருவர் மீதும் உளம்தி ரும்பா நாளிலே

அருமை யான அரச மரபின் செம்மலாய்

பெருமை மிக்க இளவ லங்கு வந்தனன்

 

கண்ட போதே காத லென்றால் பொருந்துமோ?

பண்ப தல்ல என்ற சொல்லும் பொய்த்ததே

கண்ட போதில் இதயம் மாறி கலந்ததால்

மண்ணின் மாண்பு மாறி யாவும் மறந்ததே

 

திடமு டனிரு மனமி ணைந்து திளைத்ததால்

உடலி ரண்டும் உளமுருகி ஒன்றலால்

இடமு டனொரு கால மென்ப தின்றியே

தடம்ப திக்கத் தந்து விட்டேன் தன்னையே

 

காத்தி ருந்த இருவ ரதனைக் கண்டனர்

ஆத்தி ரத்தில் அறிவி ழந்து வந்தனர்

நேத்தி ரத்தில் ரத்தம் வாளில் நேர்பட

தீத்தெ றித்தல் போல வெட்டிச் சாய்த்தனர்

 

உடலினையான் தந்திட்ட காத லர்தாம்

     உயிரையே எனக்காகத் தந்த போதில்

திடமுடனே கலக்கமின்றி என்னைப் பார்த்து

    திரும்பவும்நாம் மறுபடியும் பிறப்போ மென்றார்

மடமையென சிலர்சொல்வார் ஆனால் என்னே

     மறுபடியும் நானிங்கு பிறந்து வந்தேன்

கடவுளே செய்திட்ட சதியோ என்ன

     கருங்குயிலாய் நானிங்கு தோன்றி வந்தேன்

 

முன்பிறப்பில் தனிலுற்ற இவற்றை யெல்லாம்

     முழுமையாய் உன்னிடத்தில் சொன்ன போதில்

என்னயிது இவையெல்லாம் மெய்யோ பொய்யோ

     ஏற்பதோ வேண்டாமோ எனக்கு ழம்பி

பின்னுமதன் உண்மைதனைக் காண்ப தற்கு

    பேடையேஉன் காதலன்யார் என்று கேட்டாய்

முன்னிற்கும் நீயேதான் என்று சொல்ல

     முகமலர்ந்து எனைத்தொட்டாய் பெண்ணானேன் நான்

 

 குயிலாக எனையேற்றல் இயலா தென்றே

     குமரியாய் மாற்றினாய் என்ற போதும்

செயிரறு செல்லம்மா தனைவி டுத்து

     சேர்ந்தென்னு டனிங்கு சிலநாள் வாழ்தல்

உயிர்ப்புள மட்டிலும் கனவில் கூட

     ஒருபோதும் பொருந்தாது எனயெ ழுந்தாய்

பயின்றிடத் தக்ககாவி யமாய் மாற்றி

     பாவடிவில் யாவையுமே பாடித் தந்தாய்

 

இக்கதையின் பொருள்தன்னைக் காண்ப தற்கு

     எவரேனும் முனைவாரோ என்று கேட்டாய்

அக்கறையாய் அவ்விதமே கூர்ந்து நோக்கி

     ஆய்வு செய்தோர் உண்டெனினும் அவர்க்குள் ளேயும்

மிக்கபல முரண்பாடும் அதனா லிங்கே

     மேலும்பல விவாதமும் விளைந்த தன்றோ?

தக்கபடி இதன் பொருளை நீயும் அந்தத்

     தெய்வமும் அன்றியார் உணர்ந்து சொல்வார்?

 

பாரதி உன் குயில்பாட்டை பூரணமாய் உணர்ந்தவர்கள்

      பாரினிலே எவரு மில்லை

சாரமுள அதன்பொருளை உணர்ந்திட்டேன் என்றெவரும்

      சாற்றிடவும் துணிச்ச லில்லை

வேரத்னைக் காணாமல் வேதாந்த விருட்சத்தை

      விளைவிப்பார் யாரு முண்டோ?

யாரதனைப் படித்தாலும் பொருள்பலவாய் தோன்றிடவே

     யாத்தாயோர் கவிதை வாழி!

 

குயில் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

 

***

 

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்! (Post No.4881)

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்! (Post No.4881)

 

Written by London Swaminathan 

 

Date: 4 April 2018

 

Time uploaded in London –  17-51 (British Summer Time)

 

Post No. 4881

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பழமொழி விளக்கக் கதை

எல்லோருக்கும் பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தியாஜ்யம் என்றால் பலருக்கும் தெரியாது.

தியாஜ்யம் என்றால் நல்ல காரியங்கள் செய்யக்கூடாத காலம்.

 

 

‘ஒவ்வொரு நாளிலும் கழிவாகிய மூன்றே முக்கால் நாழிகை’ என்று ஆனந்த விகடன் அகராதி கூறும். ‘நக்ஷததிரங்களில் சுபகாரியம் செய்யக்கூடாத காலம்’ என்று அபிதான சிந்தாமணி சொல்லும்.

‘த்யஜ’ என்ற ஸம்ஸ்க்ருத வினைச் சொல்லுக்கு ‘விடுதல்’ என்று பொருள். எல்லாவற்றையும் விட்டவரை ‘தியாகி’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லுகிறோம். தமிழிலும் அந்தச் சொல் எல்லோருக்கும் தெரிந்ததே.

 

ஒரு நாளில் 60 நாழிகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 24 நிமிடங்களுக்குச் சமம். ஆக ஒரு நாளில் விலக்கப்பட்ட காலம் என்பது மிகவும் குறைவே  .பஞ்சாங்கத்தில் நல்ல நேரமும், அல்லது நல்லது, கெட்டது இல்லாத சம நிலைக் காலமே அதிகம். அப்படி இருந்தும் சிலர்  எப்போதும் கெட்ட காலம் என்றே கருதுவர்.

 

இதைக் கொஞ்சம் விளக்கமாகக் காண்போம். சிலர் முழுக்க முழுக்க Negative நெகட்டிவ் – எதிர் மறைச் சிந்தனை உடையவர்கள். எதைச் சொன்னாலும் அதில் குறையை மட்டுமே எடுத்துக் காட்டுவர். நாவிலிருந்து நல்லதே வராது.

 

மழை பெய்தால் விமானம் பறக்காது என்பர். இடி இடித்தால் விமானம் கீழே எரிந்து விழும் என்பர்.

 

வட இந்தியாவில் ரயில் விபத்து நடந்தால் சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டை ரத்து செய்துவிடுவர். இப்படித் தான் மட்டும் கெட்டது போதாது என்று நிற்காமல், மற்றவர்களுக்கும் துர் போதனை செய்வர். சுருக்க மாகச் சொன்னால் வாயில் நல்லதே வராது.

 

மதுரையில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்புறம் ‘எல்லீஸ் நகர்’ என்று பழைய பிரிட்டிஷ் துரையின் பெயரில் ஒரு பொட்டல் காடு இருந்தது. அங்கு வீட்டு வசதி வாரியம் வீடுகள் கட்டி விளம்பரம் செய்தது. எனக்கும் ஏ.என்.சிவாரமனின் (Editor, Dinamani) மகனுக்கும் பத்திரிக்கையாளர் கோட்டாவில் (ஒதுக்கீட்டில்) போட்டியே இல்லாமல் வீடு கிடைத்தது.

 

என்னுடன் வேலை பார்த்த மற்றொரு சப் எடிட்டர் வீட்டுக்கு நல்ல செய்தி சொல்லப் போனேன். அவர் தனது தந்தை பற்றி முன்னரே எச்சரித்திருந்தார். அவர் கண்களுக்குப் படாமல் மாடிக்கு வரும்படி சொல்லி இருந்தார். இருந்த போதிலும் அவர் தந்தை என் கண்ணில் பட்டு விட்டதால், மரியாதையின் பொருட்டு “மாமா சௌக்கியமா?” என்று கேட்டுவிட்டேன்.

 

அவ்வளவுதான்!

 

“ஏண்டா! சுடுகாட்டில் வீடு வாங்கி இருக்கிறாயாமே!”– என்று துவங்கி விட்டார். அவர் சொன்னது ஓரளவு உண்மைதான். அந்த எல்லீஸ் நகர் கிறிஸ்தவர்களுக்கு இடுகாடாகவும் மற்றொரு பக்கம் இந்துக்களுக்குச் சுடுகாடாகவும் இருந்தது. ஆயினும் நான் சிரித்துக் கொண்டே ‘’ஆமாம் ஆமாம் சிவனுடைய பூமியில் வீடு கிடைத்தது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிக்கொண்டு மாடிக்குப் போனேன்.

அந்த சஹ ஊழியர்- சப் எடிட்டர் என்னைக் கடிந்து கொண்டார். நான் தான் என் அப்பா கண்ணில் படாமல் ஓடி வா என்றேனே’ என்றார் நான் சிரித்து மழுப்பி விட்டேன்.

 

சிலருக்கு நல்லதையே காண முடியாது. எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த சுமாமிஜி, அந்தப் பெரியவரை – துரியோதணன் என்று அழைப்பார். அப்படியானால் என்ன என்று நாங்கள் சிரித்துக் கொண்டே கேட்போம். பெரிய செல்வந்தன் என்று சொல்லி சுவாமிஜி மழுப்பி விடுவார். பின்னர்தான் எனக்கு மஹாபாரதக் குட்டிக்கதை தெரிய வந்தது.

 

 

குட்டிக்கதை

ஒரு முறை கிருஷ்ண பரமாத்மா தர்மபுத்ரனையும் (யுதிஷ்டிரன்) துரியோதணனையும் அழைத்து உலகில் உள்ள நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று அனுப்பினார். 24 மணி நேரம் கழித்து இருவரும் திரும்பி வந்தனர்.

என்ன! கண்டு பிடித்தீர்களா? என்று கண்ணன் கேட்டான்.

தருமர் சொன்னார்: கண்ணா, உலகில் கெட்டவரே இல்லையே; எப்படி எனக்கு இப்படி ஒரு கஷ்டமான பணியைக் கொடுத்தாய்? யாரை நான் கெட்டவர் அல்லது நல்லவர் என்று சொல்ல முடியும்; எல்லோரும் நல்லவர்களே என்று சொல்லி ஒவ்வொருவரின் நல்ல குணங்களையும் விளக்கத் துவங்கிவிட்டார்.

 

துர்யோதணனோ நேர் மாறாக, கண்ணா! இது என்ன அசட்டுப் பிசட்டு என்று நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று என்னை அனுப்பினாய். அவ்வளவு பெயர்களும் அயோக்கியர்களே என்று எல்லோருக்கும் அயோக்கியப் பட்டம் கட்டினான்.

 

கண்ணன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு இருவரையும் சென்று வாருங்கள் என்று அனுப்பினார்.

 

உலகில் பல அயோக்கியர்கள் மற்றவர்களை அயோக்கியர்கள் என்று அழைக்கும் போதே நமக்கு அந்த கீழ்ஜாதிகளின் தன்மை புரிந்து விடுகிறது.

 

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் கெட்ட காலம் (தியாஜ்யம்= விலக்கப்ப்ட்ட காலம்) என்பது போல இவர்களுக்கு தங்களைத் தவிர மற்ற எல்லோரும் அயோக்கியர்களே.

 

ஆகவே Negative Vibrations நெகட்டிவ் வைப்ரேஷன் உடையோரைச் சந்திக்காமல் இருப்பதே நலம். அவர்களுடைய வியாதி சில நேரத்தில் நம்மையும் தொற்றிக் கொள்ளக் கூடும். ஏனெனில் கல்யாணத்துக்காக ஜாதக் கட்டைக் கையில் தூக்குவோர் கூட ஏதேனும் நெகட்டிவ்/ வேண்டாத செய்தி வந்தால் அப்பொழுது அக்காரியத்தை நிறுத்தி விடுவர்; அல்லது அப்போது கைக்குவந்த ஜாதகத்தை ஒதுக்கி விடுவர்.

 

ஆகவே கனியிருப்பக் காய் கவறாமல் இனிய சொல்லைச் சொல்ல வேண்டும். மங்களச் சொற்களைச் சொல்ல வேண்டும். எப்போதும் இப்படி எண்ணிப் பழகினால்தான் உரிய நேரத்தில் உரிய சொற்கள் வரும்.

 

பல அரசியல்வாதிகள், திருமணக் கூட்டங்களில் அபசகுன, அமங்களச் சொற்களைப் பேசுவதை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்; நகைக்கிறோம்!!!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

 

–subham–

POEMS ON INDIA (Post No.4880)

Compiled by London Swaminathan 

 

Date: 4 April 2018

 

Time uploaded in London –  7-42 am (British Summer Time)

 

Post No. 4880

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Following are some of the poems about India composed by famous people. Tamil poet Bharati has composed lot of verses on India in Tamil. I will give the English translations of those separately.


FREEDOM

Freedom from want and hunger
Freedom from disease
Freedom from ignorance and illiteracy
Freedom from caste and communal tensions
Freedom from foreign interference
These are not just dreams
These are free India’s aspirations
And for their fulfilment each one of us must be
Prepared for hard work and sacrifice
Together we can
Together we must
—–Directorate of Advertising and Visual Publicity, Govt. of India

Xxx

 


HAIL TO THE MOTHER!

Mother, I bow to thee!
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleams
Cool with thy winds of delight
Dark fields waving, Mother of might
Mother free.
Glory of moonlight dreams
Over thy branches and lordly streams,
Clad in thy blossoming ,
Mother, giver of ease
Laughing low and sweet!
Mother, I kiss thy feet
Speaker sweet and low!
Mother, to thee I bow.
——Bankim Chandra Chatterjee

Xxx

 

An Adieu

 

India, farewell! I shall not see again

Thy shining shores, thy peoples of the sun

Gentle, soft mannered, by a kind word won

To such quick kindness! O’er the Arab main

Our flying flag streams back; and backwards stream

My thoughts to those fair open fields I love,

City and village, maidan, jungle, grove,

The temples and rivers! Must it seem

Too great for one man’s heart to say it holds

So many many Indian sisters dear,

So many unknown brothers? That it folds

Lakhs of true friends parting? Nay! But there

Lingers my heart, leave-taking; and it roves

From hut to hut whispering “he knows and loves!”

Good-bye! Good-night! Sweet may your slumbers be,

Gunga! And Kasi! And Saraswati!

—Edwin Arnold

March 8, 1886

 

xxxx

Past Glory

My country! In thy days of glory past
A beauteous halo circled round thy brow
and worshipped as a deity thou wast—
Where is thy glory, where the reverence now?
Thy eagle pinion is chained down at last,
And grovelling in the lowly dust art thou,
Thy minstrel hath no wreath to weave for thee
Save the sad story of thy misery!
Well—let me dive into the depths of time
And bring from out the ages, that have rolled
A few small fragments of these wrecks sublime
Which human eye may never more behold
And let the guerdon of my labour be,
My fallen country! One kind wish for thee!

 

Henry Louis Vivian Derozio (1819-1831,Kolkata)

 

xxxx

Munshi’s Poem

Beyond the rugged plane

Andd the flowing stream

And life on these

Shines forth the

Light of knowledge

That Indian stands for.

–Kulapati K M Munshi

 

xxx

Sarojini Naidu’s Poem

Thy Future calls thee with a manifold sound

To crescent honours, splendours, victories vast;

Waken, O Slumbering Mother, and be crowned,

O friend, my country’s friend, O voice incarnate, free,

O India’s soul!

–Sarojini Naidu

 

xxx

 

Concern for India

Heavens have concealed thunderstorms under the horizons
Let not the nightingale of the garden remain unaware of the danger
Get concerned about the motherland
O! I innocent compatriot. Trouble is
In store for you,
There are signs of your destruction
In the skies above
Look at what is happening now, and
What is in store for the future,
Nothing would be gained by harping-on the tales of the past
Take heed, sons and daughters of Hind

—Poet Iqbal’s  poem,
Taswir I Dard

 

SARE JAHAN SE ACCHHA SONG

 

Our India is the best amongst the countries of the world. We are its nightingales and it is our garden.

That highest peak – neighbour of the sky is our guard.

A thousand rivulets play in its lap.

And due to them it has become the envy of the heaven.

religion does not teach us mutual hatred. we all are Indians and India is our country.

—Poet Iqbal (English translation of his Sare Jahan se achha Hindustan Hamara

 

xxx

BHARAT AMAR
INDIA, my INDIA, where first human eyes awoke to heavenly light!
All Asia’s holy place of pilgrimage, great Motherland of might!
World mother, first giver to human kind of philosophy and sacred lore,
Know ledge thou gav’st to man, God love, works, art, religions open door,
O even with all that grandeur dwarfed or turned to bitter loss and maim
How shall we mourn who are thy children and can vaunt thy mighty name?
Before us still there floats the ideal of these splendid days of gold
A new world in our vision wakes, Loves India we shall rise to mould.
India, my India, who dare call thee a thing for pity’s grace today?
Mother of wisdom, worship, works, nurse of the spirits inward Ray!
—-Dwijendra lal

Xxx

 


BHARATHOM

Spreading her glory everywhere
India is developing
Adding strength and influence
India prospers day by day.

At the onset of dawn
With her darkness gone
Happiness flourishes on
In the minds of everyone

Oh, Motherland, like a Kamadhenu
When your chains are broken
There in the faces of villages
Is seen the smile of prosperity

The depressed, and the lazy
The sufferer and the greedy
Shall have no place
And with these will go illiteracy.
Vennikulam Gopalakurup

—A poem in Malayalam prescribed for fourth standard in Kerala

Xxxx

 

from A H H Murray’s book Highway to Empire

–subham–

எண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்! (Post No.4879)

Date- 4 April 2018

 

British Summer Time- 6-03

 

Written by S Nagarajan

 

Post No.4879

 

 

எண்களின் ரகசியம்

 

பதிமூன்றும் முப்பதும்! : மேலை நாட்டினரின் மூட நம்பிக்கை!

 

ச.நாகராஜன்

 

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களை மூட நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று பிரிட்டிஷார் கேலி செய்வது வழக்கம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால் அதிக மூட நம்பிக்கைகள் கொண்டவர்கள் அவர்களே!

 

இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு. இங்கு 13ஆம் எண்ணைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

 

13 என்றாலே மேலை நாட்டவர்களுக்கு அலர்ஜி. பல மாடி அடுக்குக் கட்டிடத்தில் 12ஆம் மாடிக்குப் பிறகு 14ஆம் மாடி தான். பதிமுன்றே கிடையாது.

 

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இப்போது இந்தியாவிலும் கூட இதே நிலை தான். அதே போல 13ஆம் எண் அறையும் கிடையாது. 12 ஏ என்று இருக்கும்!

இதற்கான காரணங்கள் பல.

 

13 ஒரு அதிர்ஷ்டமற்ற எண்.

என்றாலும் ஏசு கிறிஸ்துவிடமிருந்து தான் இந்த எண்ணைப் பற்றிய கெட்ட அபிப்ராயம் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஏசுவின் இறுதி சாப்பாட்டில் அவர் 12 சீடர்களுடன் இருந்தார்.ஆகவே 13 என்பது அதிர்ஷ்டம் கெட்ட எண்!

தூக்குமரத்தில் தூக்குப் போடுபவனுக்கான கட்டணம் 13 பென்ஸ்.

ஆகவே 13 என்பது அதிர்ஷ்டமற்ற எண்ணாம்! உண்மையில் தூக்குப் போடுபவனுக்கு 13 ½ பென்ஸ் தரப்பட்டது. அரை பென்ஸ் தூக்குக் கயிறுக்கான பணம். ஆகவே 13 பென்ஸ் என்று கொள்ளப்பட்டது.

தூக்கு மேடைக்கு ஏறும் படிகள் 13. ஆகவே 13 அதிர்ஷ்டமற்ற எண்.

 

பெண்களின் மாதவிடாயும் கூட 13 எண்ணின்

அதிர்ஷ்டமின்மைக்கு ஒரு காரணமாம். ஆண்டுக்கு 13 முறை அவர்கள் மாதவிலக்கை அடைகின்றனராம்!

 

13 எழுத்துக்கள் பெயரில் இருந்தால் அபாயமாம். ஏனெனில் கொடும் கொலைகளைச் செய்த கொலையாளிகள் 13

எழுத்துக்களைக் கொண்ட பெயர்களையே உடையவர்களாக இருந்தார்களாம். இதற்கான பெரிய் பட்டியலே தயார்!

13ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்தால் மாபெரும் ஆபத்து! அன்று எந்த வித வியாபாரமும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் நஷ்டமும் துரதிர்ஷ்டமும் பீடிக்கும். ஆகவே பல பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் முடங்குமாம் அன்று!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

ஆகவே பிரிட்டிஷாரோ அல்லது இதர மேலை நாட்டினரோ ஹிந்துக்களைப் பற்றி இழிவாகக் கூறுவதற்கோ அல்லது விமரிசிப்பதற்கோ தகுதியானவர்கள் இல்லை.

அடுத்து எண் முப்பது சபிக்கப்பட்ட எண்ணாம் – அவர்களின் கருத்துப் படி! ஏனெனில் ஜுடாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்க அவன் பெற்ற பணம் 30 வெள்ளிக் காசுகள். இன்னொரு நம்பிக்கை ஏசு கிறிஸ்து தனது உபதேசங்களை அவரது 30ஆம் வயதில் செய்ய ஆரம்பித்தாராம்!

 

ஆக ஐஸ்பெர்க்கின் டிப் என்று சொல்வார்களே அது போல மேலை நாட்டினரின் ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இந்த 13!

 

இப்படி ஏராளம் உண்டு. பின்னால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது விரிவாகக் காண்போம்!

***

 

பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்? (Post No.4878)

 

பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்? (Post No.4878)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 3 April 2018

 

Time uploaded in London –  14-59 (British Summer Time)

 

Post No. 4878

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

((நல்லவர்களுக்குப் பிறந்தவர்கள் இதை ஷேர்‘ share  செய்வார்கள்; அல்லாதோருக்குப் பிறந்தவர்கள் இதை எழுதியவர் பெயரை வெட்டிவிட்டு தான் எழுதியது போலப் போடுவர்; அப்படிப் போடுவோரின் குடும்பத்தினரை நம்பாதீர்கள்))

பெண்களிடம் ஏன் ரஹசியத்தைச் சொல்லக்கூடாது என்பதற்குப் பல கதைகள் உள்ளன. நாகர்களும் ஒரு நாட்டுப்புற கதை சொல்லுவார்கள் (நாகர்கள் யார் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வாசிக்கவும்).

 

கருடனுக்கும் நாகர்களுக்கும் உள்ள பகைமை மஹா பாரதக் கதைகளில் இருந்து உலகம் எங்கும் பரவியதால் இன்றும் பல நாடுகள் பாம்பைக் கவ்வும் கருடனைக் கொடியிலும், அரசாங்க முத்திரைகளிலும், கரன்ஸி நோட்டுகளிலும், நாணயங்களிலும் பொறித்துள்ளார்கள்

 

கருடன்- நாகர் சண்டை பற்றிய ஒரு கதைதான் இது. கருடனுக்குப் பயந்து ஒரு நாகம் ஓடி வந்தது. மனித உருவம் எடுத்துக் கொண்டது.  ஒரு பெண் பரிதாப்பப்பட்டு அவனுக்கு  அடைக்கலம் கொடுத்தாள். உடனே அந்த நாகம் உனக்கு கைம்மாறாக 500 யானைகள் தருகிறேன் என்று சொன்னது; நாட்கள் உருண்டோடின. அந்தப் பெண்ணின் பேராசை எப்போது எனக்கு 500 யானைகள் தருவாய்? எப்படித் தரப்போகிறாய் என்று நச்சரிக்க வைத்தது.

 

இந்த நாகமோ அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி , தான் யார் என்ற உண்மையைச் சொல்லிவிட்டது. பெண்களுக்கோ ரஹஸியத்தைக் காக்கும் சக்தி கிடையாது. உடனே அவள் இன்னொரு பெண்ணிடம் சொன்னாள். அந்தப் பெண்ணோ ஊருக்கே அச்செய்தியை தம்பட்டம் அடித்தாள்.

 

இந்த நாகத்தைத் தேடிக்கொண்டிருந்த கருடனும் மனித உருவில் சுற்றியதால் அவனுக்கும் செய்தி எட்டியது. உடனே நாகத்தைத் தேடி வந்து கொன்றது.

 

கதை புகட்டும் நீதி:– பெண்களிடம் ரஹஸியம் எதையும் சொல்லக் கூடாது.

உதயணனும் வீணையும் கதை

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் வத்ஸ நாட்டை ஆண்ட மாபெரும் மன்னன் உதயணன். அவனுடைய கதை ஏராளமான தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. அந்த உதயணனின் ஒரு கதை இதோ:

 

உதயணன் ஒரு காட்டில் மான்களைத் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சபர (வேட்டைக்காரன்) குலத்தவன் ஒரு அழகிய பாம்பைப் பிடித்துக் கூடைக்குள் அடைத்தான். அதைப் பார்த்த உதயணன் பரிதாபப்பட்டு, ‘’அன்பனே அந்த பாம்பை வெளியே விட்டு விடேன்’’ என்றான்.

பாம்பைப் பிடித்த வேட்டைக்காரன் சொன்னான்:

இதோ பார் என் தொழில் பாம்பாட்டி வேலை; இதை ஆட வைத்து காசு பணம் சம்பாதிப்பது என் தொழில். ஆகவே என்னை வற்புறுத்தாதே என்றான்

 

 

உதயணன் சொன்னான்: இந்தாருங்கள் எனது தங்க கங்கணம். இதை வைத்துக் கொண்டு   பாம்பை விடுதலை செய்யுங்கள் என்றான். அந்த நாகம் அவனுக்கு ஒரு வீணையைக் கொடுத்தது. அதை அவன் வாசித்தால் யானைகளும் வந்து நிற்குமாம். அவன் வேண்டிய யானைகளைப் பிடித்துக் கொள்வானாம்.

 

 

அந்த கங்கணத்தில் ஸஹஸ்ரநீகா என்று மன்னன் பெயர் எழுதி இருந்ததால், அதை வேட்டைக்காரன் கொண்டு சென்று மன்னனிடம் கொடுத்தான். அதை யார் கொடுத்தார்கள்? அது எப்படி வந்தது? என்பதை எல்லாம் விசாரித்து அதன் மூலமாக அவன் 14 ஆண்டுகள் பிரிந்திருந்த தன் மனைவியையும் மகனையும் (உதயணன்) கண்டு பிடித்தானாம்.

ஜீமூத வாஹனன் கதை

 

உதயணன் கதை போலவே ஸம்ஸ்க்ருத நாடகம், கதைகளில் அதிக இடம் பிடித்தது ஜீமூத வாஹனன் கதை ஆகும். அவனது தியாகம், கருடனிடமிருந்து நாகர்களை விடுவித்தது. இந்தக் கதை ஹர்ஷனின் நாகானந்தம், பிற்காலத்தில் ப்ருகத்கதை, கதாசரித் சாகரம் முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது.

 

பஞ்ச தந்திரக் கதைகளில் இரண்டு கதை

 

ஹரிதத்தா என்ற விவசாயி எவ்வளவோ சாகுபடி செய்தும் விளைச்சல் கிடைக்க வில்லை. ஒரு நாள் அவனுடைய நிலத்தில், ஒரு பெரிய பாம்பைக் கண்டான். அதற்குப் பால் வார்த்தான். மறு நாள் அந்த இடத்தில் ஒரு தங்க நாணயம் கிடைத்தது. அதுமுதல், தினமும் பாம்புக்குப் பால் வார்த்தான். தினமும் ஒரு தங்கக் காசு கிடைத்தது. இதை அவன் மகன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேராசை பிடித்தவன். ஒரு யோஜனை தோன்றியது. பாம்பு வசிக்கும் இடத்தில் புற் றில் நிறைய தங்கக் காசுகள் இருக்கிறது போலும் ஆகையால் அதைத் தோண்டிப் பார்ப்போம் என்று சென்றான.

 

பாம்புப் புற்றைத் தோண்டுகையில் பாம்பு கடித்து இறந்தான். தன் மகனின் தீய செயலுக்கு தந்தை வருத்தம் தெரிவித்தான். பாம்பும் அவனுக்கு ஒரு விலை உயர்ந்த நகையைக் கொடுத்து இனிமேல் வரவேண்டாம் என்று சொன்னது.

இன்னொரு கதையும் நாகம் பற்றியது. மனிதர்களுக்கு ஒரு நாகம் பிறந்தது. அதை ஒரு அழகிய பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். முதல் நாள் இரவில், அந்த நாகம் மனித உரு எடுத்து முதல் இரவு அறைக்குச் சென்றது. அந்த நேரத்தில் நாகத்தின் பெற்றோர்கள் அந்தப் பாம்பின் தோலை எரித்து விட்டனர். பின்னர் அந்த நாகம் மனித உடலுடனேயே இருந்தது.

 

 

இவ்வாறு நாகம் பற்றிய பல கதைகளில் அதைப் பாம்பாகாவும், மனிதனாகவும், பாதி பாம்பு, பாதி மனிதனாகவும் சித்தரிப்பது உண்டு.

 

உண்மையில் நாகத்தின் உருவத்தை வரைந்தோ அதன் முத்திரையை அணிந்தோ இருந்தோரை நாகர்கள் என்று சொல்லி இருக்க வேண்டும்; காலப் போக்கில் பாம்பும் மனிதனும் இடம் மாறி சுவை ஊட்டும் கதைகளாக மாறிவிட்டன.

–சுபம்–