100 Wonders of Karnataka- Part 1(Post No.4160)

Temple in Badami

Compiled by London Swaminathan

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 6-12 am

 

Post No. 4160

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

Karnataka state in South India has several natural, architectural, historical and religious wonders. It was once called Mysore state. It has got huge monoliths, gateways, Nandhis (bulls) and Palaces. Everything is massive in Karnataka. The Hindu kings aimed high and achieved the best in architecture.

I will list them district wise.

Bengaluru (Bangalore is the capital of the state.

1.BASAVANGUDI OR BULL TEMPLE

It was built by Kempe Gowda around 1500 CE. The temple has a huge Nandhi (bull). It is a monolith sculpture measuring 4-57 metres in height and 6-10 metres in length.

There are other wonders like Lalbagh Botanical Gardens Tippu Sultan’s palace, Planetarium and several museums.

Dodda Ganapathi temple has a huge monolithic statue.

Badami Caves

2.CHANNAPATNA

Its wooden toys, wooden beads, bangles, boxes and light furniture are very popular.

 

3.KUDALA SANGHAMA

This is the confluence of Krishna and Malaprabha rivers. It is famous for the Sanghameswara temple. It is built in Chalukyan style.

Bagalkot district

 

4.AIVALLI (AIHOLE)

It was capital of Chalukyas for 400 years between 4th and 7th centuries. 140 temples with exquisitely carved sculptures are in the Vishnu and Shiva temples. It is a holy place for the Hindus, Jains and Buddhists

 

5.BADAMI

It was the capital of Early Chalukyas from 540 to 760 CE. The cave temples and museum are very popular tourist attractions. Buddhist rock cut caves, Hindu and Jain sculptures attract the tourists.

6.MUDHOL

It has got famous places of worship belonging to different religions. It is on the bank of Ghataprabha river. Shiva temple, Kamaleswara temple, Mahavir Basadi, Brahmagaddi Veerashiva mutt and Syed Beer dargah are located here.

It is very rare to get so many different religious spots in one place.

Hampi Stone Ratha

7.PATTADAKAL

It is on the banks of River Malaprabha and famous for 10 temples. It is declared as a UNESCO WORLD HERITAGE centre. The Virpakshesvara Temple has a beautiful huge gateway adorned with inscriptions. It has a huge Nandhi (bull) which is 2-6 metres tall.

 

Belagaavi (Belgaum) District

  1. BELAGAAVI

It is very near Maharashtra border. It was the capital of Ratta Kings during 13th century. Several temples are in the town Kittur Rani Chennamma is associated with the place. She was one of the first freedom fighters.

 

9.GOKAK FALLS

Gokak falls is over the Ghataprabha river. It is 170 feet high. Because of its horse shoe shape it looks like a Mini Niagara falls. It is a natural wonder. Relics of ancient temples are in this place.

 

10.SAUNDATTI

It was the original capital of the Ratta Kings. There is also a fort built in 1734 Two famous temples are here.

 

Bellari District

 

11.HAMPI

It was once the capital of the mighty Vijayanagara Empire which destroyed the Muslim invaders. It is on the banks of the River Tungabadra. Harihara and Bukka founded the city in 1336 CE. It has got the relics of old temples destroyed by the Muslim invaders. Vittala Temple has the famous Kalyana Mandapa and Stone Chariot. The musical pillars in the temple are architectural wonders.

Virupaksha Temple 50 metre high gateway and pillared halls. It is famous for Vijayanagara period paintings. Lotus Maha was built for women. Ugra Narasimha temple has a huge Narasimha statue under the seven headed snake. It is 6-7 metre high. A huge Linga is also located in running water. Mahaswami Dibba buit by Krishna Deva Raya is here. Queen’s bath here is 15 metre square with a lotus headed fountain. Even in dilapidated condition Hampi stands as a symbol of Vijayanagara samrajya. In its glorious days it excelled all the capital cities in the world.

 

Bidar District

BIDAR

  1. Bidar was the capital of Bahamani Sultans and Barid shah. Ahmed Shah rebuilt the old Hindu fort and changed it into a Muslim (style wise) Fort. It has got lot of tombs and buildings and famous for its Muslim architecture.

 

13.BIDAR FORT

It was built around 1426 CE. There are five big Gateways, Royal residence Rangin Mahal. This Mahal has ornately carved wooden pillars with  Persian couplets engraved on it. Royal Kitchens, Royal baths, Ladies Apartments and 16 pillared prayer hall are popular attractions.

  1. 71 FEET HIGH WATCH TOWER

The 71 feet high watch tower ‘Chaubara’ stands in the middle of the town. A bird’s eye view of the town is available from the top of the tower.

 

15 & 16 NANAK JHEERA AND NARASIMHA JHEERA

Nanak Jheera is associated with Guru Nanak. When the town was undergoing a severe famine, his visit made the water to gush out as a spring (jheera). The sacred site is marked with a huge Gurudwara.

Narasimha Jheera (spring) is the only subterranean stream in Karnata.The subterranean cave has a water spring and Narasimha statue. Papanash, a Shiva temple is also located here.

Both the springs are natural wonders.

—to be continued

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 3 (Post No.4159)

Written by S.NAGARAJAN

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 4-53 am

 

Post No. 4159

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

      

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 18-8-2017 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 26வது) கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 3

 ச.நாகராஜன்

 

“ரஸவாதக் கல்லை எப்படிச் செய்வது என்பதைச் சத்தியமாகக் கூறி விடுகிறேன். எனக்கு வார்த்தை ஜாலம் தெரியாது. சில எளிய, நேரடியான வார்த்தைகளிலேயே இதைச் சொல்லி விடுகிறேன்.– பேஸிலியஸ் வாலெண்டினஸ் (Basilius Valentinus)

    

       கெபரின் எண்ணம் கந்தகத்தை எடுத்து விட்டு பாதரஸத்தைச் சேர்த்தால் தங்கமாக மாற்றி விடலாம் என்பது தான். அவர் மனித ரத்தம் மூலம் தங்கத்தை உருவாக்கலாம் என்ற கருத்தை எள்ளி நகையாடினார்.

 

     பூமிக்கு அடியில் இயற்கை உருவாக்கிய உலோகங்களில் மனித ரத்தம் கலந்திருக்கிறதா என்ன என்று அவர் தர்க்கரீதியான கேள்வியை எழுப்பினார். இதை அனைவரும் ஆதரித்தனர்.

 

     இடைக்காலத்தில் வாழ்ந்த ரஸவாத நிபுணர்கள் பாதரஸத்தை வடிகட்டி பல்வேறு உலோகங்களைச் சேர்த்து ரஸவாதக் கல்லை உருவாக்க முயன்றனர்.

 

    15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பாதரஸத்தை வடிகட்டுவதில் மட்டும் ஈடுபடவில்லை. மேட்டர் எனப்படும் மூலப் பொருள் பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

 

       மத்திய ஐரோப்பாவில் வெள்ளியையும் தாமிரத்தையும் வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் தாதுப் பொருள்கள் மரம் போல வளர்வதாகவும் அதைத் தாங்கள் நேரடியாகப் பார்த்ததாகவும் கூறவே இந்தப் பரபரப்புச் செய்தி எங்கும் பரவியது.

 

    சில மரங்களுக்கும் தாதுப் பொருள்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் ஆராய்ச்சியாளர்களைக் கவர்ந்தது.

இந்த தாதுப் பொருள்களை நீண்ட காலம் பூமியிலேயே இருக்க விட்டால் அவை “வளர்ந்து: தங்கமாக ஆகி விடும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

 

 

     எப்படி ஒரு செடியிலிருந்து மலரை எடுத்தவுடன் அது வளராமல் “இறந்து விடுகிறதோ அது போல தாதுப் பொருள்களை எடுத்து விட்டால் அவை தங்கமாக மாறாமல் “இறந்து விடுவதாக சில ரஸவாத நிபுணர்கள் கூறலாயினர்.

 

     ஆகவே சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றை திரும்பி தங்கமாக மாற்றுவது சுலபம் தான் என்ற கருத்து பரவவே கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

     நன்கு பயிற்சி பெற்ற ரஸவாத நிபுணர்கள் பெரும் செல்வந்தர்களுக்கு ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி என்பதைச் சொல்லித் தர முன்வந்தனர். இதனால் எங்கும் தங்கம் என்பதே பேச்சு என்ற நிலை உருவானது.

    சாமானியர்களும் இந்த ‘கலிபோர்னியா கோல்ட் ரஷ் எனப்படும் தங்க வேட்டையில் ஈடுபடவே இப்போது நமது நாட்டில் டீக்கடைகள் இருப்பது போல ஆங்காங்கே சிறு சிறு சமையலறை போன்ற லாபரட்டரிகள்  உருவாகின. ஈயத்தைத் தங்கமாக்க அனைத்து குட்டி லாபரட்டரிகளும் முயன்றன!

     இந்தக் காலகட்டத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ஃ மர்மமான ஒரு யோகியும் ரஸவாத நிபுணருமான இரேனஸ் பிலாலெதெஸ் (Eirenaeus Philalethes) என்பவரின் நூல் ஐரோப்பா முழுவதும் பரவியது. அனைவரும் அதை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தனர்.

 

 

         இன்னொரு குறிப்பிடத்தகுந்த ரஸவாத நிபுணர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்டார்கி (George Starkey) என்பவர்.  தான் ஒருவர் மட்டுமே நிஜமாக பிலாலதெஸைப் பார்த்ததாகக் அவர் கூறினார், அத்துடன் அவர் விஞ்ஞானியான ராபர்ட் பாயிலை நேரில் சென்று சந்தித்தார்; ரஸவாதக் கல்லை எப்படிச் செய்வது என்ற ரகசியத்தை தன்னிடம் மட்டுமே பிலாலதெஸ் கூறியிருப்பதாகச் சொன்னார்.

1651ஆம் ஆண்டில் ஸ்டார்கியிடம் தனக்கு ரசாயன ரகசியங்களைக் கற்பிக்குமாறு பாயில் வேண்டினார்.

உண்மையில் நவீன அறிவியல் ரசாயத்துறையின் தந்தை என்று கருதப்படும் ராபர்ட் பாயிலுக்கு ரசாயனம் பற்றி எதுவுமே தெரியாது என்றும் அவர் ஸ்டார்கியிடம் தான் ரசாயனம் பற்றிச் சிறிது தெரிந்து கொண்டார் என்றும் அறிஞர்கள் வட்டாரத்தில் இன்றளவும் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.

 

 

      பாயில் தனது நோட்டுப்புத்தகத்தில் தான் நாடோடியாக அலையும் ரஸவாதி ஒருவரைச்  சந்தித்ததாகவும அவர் தன் கண் முன்னேயே ஈயத்தைத் தங்கமாக ஆக்கிக் காட்டியதாகவும் எழுதி வைத்துள்ளார். அந்த தங்கத்தின் எடை அரை அவுன்ஸ் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நேரடி நிரூபணத்தால் அவர் ஈயத்தைத் தங்கமாக மாற்றுவது சாத்தியமே என்று உறுதியாக நம்பினார்.

 விஞ்ஞானி நியூமென்னின் நண்பரான பிரின்ஸிப் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதே அவருக்கு ஈயத்தைத் தங்கமாக்கும் அபூர்வ கலை மீது கவனம் திரும்பியது. அவருக்கு இப்படி ஒரு ஆர்வம் உருவாகக் காரணம் அவர் படித்த ஒரு புத்தகம் தான். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி ட்வெல்வ் கீஸ் (The Twelve Keys) என்பதாகும். இது ஒரு மர்மமான நூல். சங்கேத பாஷையில் எழுதப்பட்ட நூலும் கூட. 15ஆம் நூற்றாண்டில் இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதியவர் பேஸிலியஸ் வாலெண்டினஸ். இவர் கத்தோலிக்க பிரிவில் ஒன்றான பெனிடிக்டின் பிரிவைச் சேர்ந்த ஒரு துறவி.

இவர் எழுதிய நூலை வாசக அன்பர்கள் இணையதளத்தில் படிக்க்லாம். 24 பக்கங்களே கொண்ட இந்த நூல் தங்க ரகசியத்தைத் தரும் நூல்!

                         (தங்கமான ரகசியம் தொடரும்)

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் நடந்த சம்பவம் இது  கம்ப்யூட்டர் முழுவதுமாக உருவாகாத காலம். பிரம்மாண்டமான அறையில் வயர்களும் டியூப்களும் தொங்க ஏராளமான தகடுகள் அவற்றை மூட கருவியானது ஒரே களேபரமாக இருக்கும்.

 

 

ஜான் வான் நியூமேன் (John Von Neumann) என்ற பிரபல விஞ்ஞானி தனது இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி தான் இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்க ஏதுவாக இருக்கும் என்று நினைத்தார்.

பலரிடம் விசாரித்ததில் இப்படிப்பட்ட தகடு வேலை செய்வதில் பெரிய நிபுணர் ஜூலியன் பிஜ்ளோ (Julian Bigelow) என்பவர் தான் என்பதை அறிந்து கொண்டார். அவரைத் தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.

 

 

பிஜ்ளோவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார்.

குறித்த நேரத்தில் அறைக் கதவு தட்டப்படும் சந்தத்தைக் கேட்டவுடன் ஆர்வத்துடன் நியூமேன் வந்து கதவைத் திறந்தார்.

உள்ளே பிரம்மாண்டமான ஒரு நாய் மிக்க அன்புடன் வாலைக் குழைத்தவாறே உள்ளே நுழைந்தது. நாயைத் தொடர்ந்து பிஜ்ளோவும் உள்ளே வந்தார்.

 

 

ஒரு மணி நேரம் எப்படி தங்களது அமைப்பை உருவாக்குவது என்று தீவிரமாக இருவரும் விவாதித்தனர்.

நியூமேன் காலடியில் அமர்ந்து  கொண்டிருந்த நாய் இடைவிடாமல் ஒரு மணி நேரமும் குலைத்துக் கொண்டே இருந்தது.

 

 

தொந்தரவைச் சகித்தவாறு ஒருவாறு நிபுணர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது.

 

 

பிஜ்ளோ விடைபெற்று எழுந்தார். தனது காரை நோக்கி நடக்கலானார்.

 

ஒரு நிமிஷம் என்ற நியூமேன், “உங்கள் நாயை அழைத்துச் செல்லவில்லையே!” என்றார், அவர் மறந்து விட்டார் என்று எண்ணி!

என் நாயா!? அது உங்களுடைய நாய் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றாரே பார்க்கலாம் பிஜ்ளோ!

 

நியூமேன் திடுக்கிட்டார்.

யாருடைய நாயோ ஜாலியாக வந்து அறிஞர்களின்டிஸ்கஷனில் கலந்து கொண்டது!

****

 

 

 

 

பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158)

Written by London Swaminathan

Date: 24 August 2017

Time uploaded in London- 17-16

Post No. 4158

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

சமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில்  புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.

இதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று,  அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.

மத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.

இவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்;    மொழியியல் வல்லுநர்கள்! தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.

லண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.

இன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.

இந்த முறை எனது  இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன்  துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.

அந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் .  நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.

57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.

மேலே ஏறுவதற்கு 45 நிமிடம்! இறங்குவதற்கும் 45 நிமிடம்! மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.

சிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

கோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல!! அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள்  இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.

பெல  கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது!

இங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.

 

கர்நாடகத்தில் ஒரு அதிசயம்!

நாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.

இந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.

(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)

சுபம்–

பாரதியார் நூல்கள் – 37 நாமக்கல் கவிஞர் கவிதைகள்! (Post. 4157)

Written by S.NAGARAJAN

 

Date: 24 August 2017

 

Time uploaded in London- 4-59 am

 

Post No. 4157

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 37

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

 

ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் என்று நாடறியும் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

திராவிட மாயையில் வீழாது தனது சமச்சீர் தன்மையைக் கொண்டிருக்கும் அபூர்வ தமிழர்களில் நாமக்கல் கவிஞரும் ஒருவர்.

அவர் காந்தியைப் பாடினார்; உலகம் வேண்டும் சாந்தியைப் பாடினார். இவரது பாடல்களுள் பெரும்பாலானவை காந்தியைப் போற்றிப் பாடியதே என்று கூறலாம்.

ஆரிய-திராவிட வாதம் என்பதெல்லாம் பொய் என்று உரக்கக் கூவியவர் என்பதாலும் அதைப் பற்றி அருமையான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதாலும் இவர் தமிழருள் தலை சிறந்து நிற்கிறார்.

தேசமும் தெய்வமும் ஒன்று என்ற கொள்கையை உடைய இவர் ஒரு சிறந்த பாரதி பக்தர்.

பாரதியாரைப் போற்றி இவர் பாடிய ஏழு சிறந்த பாடல்கள் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தொகுப்பில் அடங்கி உள்ளன.

மூன்று பாகங்களைக்கொண்ட இந்தத் தொகுப்பு நூலில் மொத்தம் 251 கவிதைகள் உள்ளன.

முதல் பாகத்தில் பாரதி பாட்டு மற்றும் உலகம் வாழ்க ஆகிய இரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் பாகத்தில் பாரதி ஓர் ஆசான், பாரதிக்கு வெற்றி மாலை, பாரதி நினைவு, பாரதி எனும் பெயர் ஆகிய நான்கு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்ற ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

எளிய சொற்களால் அரிய பெரிய கருத்துக்களைச் சொல்லும் வன்மை படைத்தவர் நாமக்கல் கவிஞர்.

பாரதியின் பாட்டு என்ற கவிதையில் பாரதியாரின் சொல் வன்மையைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்

அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்

பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை

நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்

தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்

துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்

அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்

புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே

தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி

இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்

    பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

 

காந்தியடிகளின் சிறந்த பக்தரான நாமக்கல் கவிஞர் அவரைப் பற்றி உரிய விதத்தில் கவி பாட கம்பனோ, காளிதாஸனோ தியாகராஜரோ அல்லது பாரதியோ இல்லை என்று அங்கலாய்க்கிறார் இப்படி:
கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை

கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை

     தேசீய பாரதியின் திறமும் இல்லை

“இமயம் முதல் குமரி முனை” வரை உள்ள இந்திய நாட்டின் ஒற்றுமையை பாரதியார் வலியுறுத்தினார். அதை நாமக்கல் கவிஞர் தன் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

     ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

                               (பாரதி ஓர் ஆசான் என்ற பாடல்)

தேர்ந்தெடுத்த சொற்களால் பாரதியின் புகழை நாமக்கல் கவிஞர் பாடும்போது அந்தப் பாட்டில் நம் உள்ளம் குளிர்கிறது:

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்

சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி

சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை

அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்

பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்

அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்

     கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.
(பாரதிக்கு வெற்றி மாலை என்ற பாடல்)

பாரதி நினைவு என்ற பாடலில் பாரதி என்று நினைத்தவுடன் என்ன நடக்கும் என்பதைக் கவிஞர் கூறுகிறார்:

சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்

சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;

இந்தியன்நான்என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;

எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரியதமிழன்எனும் உவகை ஊறும் ;

     உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

தமிழர்களுக்கு நாமக்கல் கவிஞரின் அறிவுரை இது தான்:

சுப்ரமண்ய பாரதியின் பாட்டுபாடிச்

    சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.

                     (பாரதி எனும் பெயர் என்னும் பாடல்)

சுப்பிரமணிய பாரதியின் நாமம் பற்றிச் சொல்ல வரும் கவிஞர் அது கவலையை நீக்கும் சூத்திரம் என்கிறார்:

அனுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு!
         (ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்னும் பாடல்)

பாரதியைப் போற்றும் அன்பர்களுக்கு நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தேன் வந்து பாயுது காதினிலே என்ற ரகத்தைச் சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களாகும்.

நாமக்கல் கவிஞரின் பாடல்கள் கீழ்க்கண்ட இணைய தளத் தொடுப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.72,73,85 ஆகிய தொடர் எண்களில் நாமக்கல் கவிஞரின் கவிதைகள் உள்ளன.

 

இதே தளத்தில் பாரதியாரின் அனைத்துக் கவிதைகளும் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

www.projectmadurai.org

ப்ராஜக்ட் மதுரைக்கு தமிழர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.

 

Officer Anecdotes: Donkeys and Officers are Same! (Post No.4156)

 

Compiled by London Swaminathan

 

Date: 23 August 2017

 

Time uploaded in London- 16-09

 

Post No. 4156

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

General Grant once expressed his contempt for a certain officer. Another General protested that the man in question had been through ten campaigns .

General,said Grant,

So has that mule yonder, but he is still a jackass.

 

Xxx

Abraham Lincoln and Barnum

Once during the War, Barnum brought his show to Washington and invited president Lincoln to come and see its wonders.

The president noted all the exhibitions with appropriate remarks and, when shown the midgets, General Tom Thumb and Admiral Nutt, remarked to Barnum,

“You have some pretty small generals, but I think I can beat you.”

 

Xxxx

Gorge V

 

When George V was Prince of Wales , he held the rank of Lieutenant in the Marines. One day on the afterdeck of a battle ship, he was conducting drill under the supervision of a senior officer. The deck had been cleared even of its quad rails . The prince was not well versed in drills and his superior was clearly put out his awkwardness and slowness of command. At last the squad was marching full on for the stern and the unguarded edge and it seemed as though the Prince had forgotten the command to stop, or face about, or else failed to realise the situation.

Sputtering with wrath, the officer snapped, as the men neared the edge, “God Almighty, Sir, can’t you at least say Goodbye to your men!”

Xxx

No questions,please!

Stonewall Jackson sent the following telegram to the War Department at Richmond

“Send me more men and fewer questions.”

 

 

Xxxx

Only one small Complaint!

A French field marshal who had attained that rank by court favour, not by valour, going one evening to an opera, forcibly took possession of the box of a respectable Abbé, who for this outrage brought a suit.

The Abbé thus addressed the court,

I do not come here to complain of Admiral Suffrein  who took so many ships in the EastIndies ;

I do not come here to complain of Count de Grace  who fought so nobly in the West

I do not come here to complain of the Duke de Crebillon who took Minorca.

But I come to complain of Marshal B —- who took my box at the Opera, and never took anything else.

 

Xxx SUBHAM XXX

 

Napoleon’s Leadership Qualities (Post No.4155)

Written by S.NAGARAJAN

Date: 23 August 2017

Time uploaded in London- 15-56

Post No. 4155

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Napoleon Bonaparte was a great leader.

Everybody knows his famous quote: “Impossible is a word to be found only in the dictionary of fools.” His life is full of interesting anecdotes which reveal his true leadership qualities.

Here are two incidents among the hundreds.

 

Build it

Bonaparte was passing along the dreadful road across the Echelles de Savoie, with his engineer,  when he stopped, and pointing to the mountain, said, “Is it not possible to cut a tunnel through yonder rock, and to form a more safe and commodious route beneath it?” “It is possible, certainly, sire,” replied his scientific companion, and continued -“but”—

“No buts;–let it be done, and immediately,” replied the Emperor.

Such was his clarity of thinking.

Destroy the evidence

Polignac.–Monsieur le Compte de Polignac was a French Statesman.

He had been raised to honour by Bonaparte; but, from some

unaccountable motive, betrayed the trust his patron reposed in him.

As soon as Bonaparte discovered the perfidy, he ordered Polignac to be put under arrest. Next day he was to have been tried, and in all probability  would have been condemned, as his guilt was undoubted.

In the meantime, Madame Polignac solicited and  obtained an audience of the Emperor.

“I am sorry, madam, for your sake,” said he, “that your husband has been implicated in an affair which is marked throughout with such deep ingratitude.”

“He may not have been so guilty as your majesty supposes,” said the countess.

“Do you know your husband’s signature?” asked the Emperor, as he took a letter from his pocket and presented it to her.

Madame de Polignac hastily glanced over the letter, recognised the writing, and fainted.

As soon as she recovered, Bonaparte, offering her the letter, said, “Take it; it is the only legal evidence against your husband: there is a fire beside you.”

Madame de P. eagerly seized the important document, and in an instant committed it to the flames.

The life of Polignac was saved: his honour it was beyond the power even of the generosity of an emperor to redeem.

Napoleon was so great that he could even forgive his own enemies!

 

–Subham–

Marches and Regulations Anecdotes (Post No.4154)

Compiled by London Swaminathan

 

Date: 13 August 2017

 

Time uploaded in London- 7-05 am

 

Post No. 4154

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

A green young lieutenant was assigned a new detachment. He was a very small and helpless looking individual and when he first appeared before his company, there were many audible comments made about his apparent ineptness. From the rear of the ranks a voice boomed,

And a little child shall lead them

There was a roar of laughter.

Seemingly undisturbed finished the business of the day. Next morning there appeared a notice on the bulletin board

Company A will take a 25 mile hike today with full packs. And a little child shall lead them……….. on a damned big horse.

 

Xxxx

TASTY SOUP

The late Smedley D Butler, always an impulsive man, was generally careful of the welfare of his men. One time in France he encountered two soldiers emerging from the kitchen with a large soup kettle.

Let me taste that, he ordered.

Bu, Gen…………….

No buts! Give me a spoon.

Taking a taste, he sputtered,

You don’t call that soup, do you?

No sir, replied the soldier

I was trying to tell you ,sir, it is dishwater

 

Xxxx

Regulations Anecdotes : Extremely Confidential!!!!!!!!!!!!!

Strange things happen in military circles. An army officer was given the task of preparing a factual report on heavy ordnance. Partly because he was pressed for time and partly because the facts were there, arranged in their best way, he copied pretty much verbatim the article on the subject in the Encyclopaedia Brittanica , and turned it over to his superior s. Not long after, he received along with all his brother officers, a mimeographed copy of his report from the war department in an envelope heavily sealed and labelled, “Extremely Confidential”.

 

Xxxx

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – Part 2 (Post No.4153)

Written by S.NAGARAJAN

 

Date: 13 August 2017

 

Time uploaded in London- 6-04 am

 

Post No. 4153

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

  1. ஈயம் தங்கமாகும் வித்தை

11-8-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 2

 by ச.நாகராஜன்

 

 

“வில்லியம் ப்ளேக் உலகின் மிகச் சிறந்த உளவியல் யோகிகளில் ஒருவர். ஹென்றி மூர், வோர்ட்ஸ்வொர்த் போல ஆங்கிலத்தில் பேசியவர்களில் இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பெரியவர்; ஆழ்ந்த கருத்துடையவர். அவர் புகழுலகில் வாழ்ந்தார். அவர் ஆன்மக் காட்சிகளைக் கண்டவர். அது ஒன்றே தான் அவரது உலகமானது. ஜன்னல் வழியே அவர் நான்கு வயதிலேயே கடவுளைக் கண்டார். அந்தக் கணத்திலிருந்து மரணத்தின் வருகை வரை சந்தோஷ கீதங்களைப் பாடினார். தெய்வீக ஒளி மிளிரும் சூழ்நிலையில் அவர் வாழ்ந்தார். – கரோலின் எஃப்.இ. ஸ்பர்ஜியான் (1903

 

    இரஸவாத வித்தை உண்மை தான் என்பதை நியூமேன் உணர்ந்தார். சில உலோகங்களின் இயற்கையான அணுக்கூறுகள், அவற்றை வேறு விதமாக மாற்றுவதற்கான வல்லமை படைத்தது என்பது அவரது கருத்து. பழைய காலத்தில் நடந்த சோதனைகளில் சில தாதுப் பொருள்கள் ‘வளரக் கூடியவை என்பதை ரஸவாத வித்தை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோர் கண்டு பிடித்திருந்தனர். அந்தக் காலத்தில் மைக்ரோஸ்கோப் போன்ற நவீன சாதனங்கள் கிடையாது. என்றாலும் கூட தங்கள் ஆராய்ச்சியில் முனைப்போடு ஈடுபட்டு வந்தனர்.உண்மையில் சொல்லப்போனால் அவர்களே இன்றைய நவீன அறிவியலுக்கான அஸ்திவாரத்தை வலிமையாக அமைத்தவர்கள் எனலாம்.

நியூமேன் நார்த் கரோலினா பல்கலைக் கழகத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்தவர். வில்லியம் ப்ளேக் (William Blake)  மற்றும் (W.B.Yeats) டபிள்யூ.பி. யேட்ஸ் போன்ற பிரபல கவிஞர்களின் படைப்புகளில் அவர் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்களின் ரஸவாத ஆர்வத்தைக் கண்டு நியூமேன் வியந்தார். ரஸவாதம் பற்றி அவர்கள் சேகரித்த ஆதாரபூர்வமான பழைய கால விஷயங்கள் எவை என்பதை அவர் ஆராய ஆரம்பித்தார்.

   கவிஞர் ப்ளேக் 28-11-1757இல் பிறந்தவர். 12-8-1927இல் மறைந்தார்.

   டபிள்யூ.பி. யேட்ஸ் 13-6-1865இல் பிறந்தவர். 28-1-1939இல் மறைந்தார். 1923இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை அவர் பெற்றார்.வயதாக ஆக, அவரது கவிதைகள் ஆழ்ந்த அர்த்தத்தையும்,ஆன்மீக உள்ளுணர்வையும் கொண்டிருந்தன. ஹிந்து மதக் கொள்கைகளின் பால் அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது.

    இந்த இரு கவிஞர்களுக்கும் ரஸவாதத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. அதாவது 18ஆம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முடிய உள்ள கால கட்டத்தில் ரஸவாதக் கலையை ஆதரிக்கும் சிறந்த பிரதிநிதிகளாக இவர்கள் இருந்தனர். ஒரு விசித்திரமான விஷயம் என்னவெனில் இந்தக் கால கட்டத்தில் அறிவியல் அனைத்துத் துறைகளிலும் பாய்ச்சல் போட்டுக் கொண்டு முன்னேறியது. விஞ்ஞானிகளோ ரஸவாதம் ஒரு பொய் என்று உறுதி படக் கூறினர். ஆனால் இவர்களோ ரஸவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

   ப்ளேக்கையும் யேட்ஸையும் இதில் நமப வைத்த ஆதாரமான நிபுணர் யார் என்று நியூமேன் ஆராய ஆரம்பித்தார். அவருக்கு புதிய விஷயம் ஒன்று இப்போது புலப்பட்டது.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான கெபர் (Geber)

என்பவராலேயே அவர்கள் உத்வேகம் அடைந்தனர் என்பது தெரிய வந்தது. கெபர் எழுதிய மிக அரிய நூலான ‘தி சம் ஆஃப் பெர்பெக் ஷன் (The Sum of Perfection) என்ற நூலில் அனைத்து இரகசியங்களும் விளக்கப்பட்டிருந்தன!

   இந்தப் புத்தகம் ஒரு ரகசிய புத்தகம். இதில் நான்கு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் 5 அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் 15 அத்தியாயங்களும் மூன்றாம் பகுதியில் 13 அத்தியாயங்களும் நான்காம் பகுதியில் 18 அத்தியாயங்களும் உள்ளன.

   நூல் முழுவதும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியுள்ளன. சாடர்னை (Saturn) செய்வது எப்படி என்று படித்தால் ஈயத்தை எப்படிச் செய்வது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். அதே போல வீனஸை (Venus) செய்வது எப்படி என்றால் அதற்கு தாமிரத்தை எப்படிச் செய்வது என்று அர்த்தம். இதே போலவே மார்ஸ் (Mars) என்றால் இரும்பு; ல்யூனா (Luna) என்றால் வெள்ளி.

   கெபரைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட நியூமேன் கெபர் என்பது புனைப்பெயர் என்றும் உண்மையில் கெபரின் உண்மைப் பெயர் பால் என்பதும் அவர் தெற்கு இத்தாலியைச் சேர்ந்தவர் என்றும் முடிவுக்கு வந்தார்.

    அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இரஸவாதக் கலையின் உண்மை நூலாக கெபரின் நூல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது

     கெபர் கூறும் முக்கியமான ரகசியம் இது தான்:

எல்லா பொருளும் கார்புஸ்ஸெல்ஸ் (Corpuscles) என்பவற்றால் உருவாகியுள்ளன. இந்த கார்புஸ்ஸெல்ஸ் என்பவற்றை விருப்பத்திற்குத் தகுந்தவாறு மாற்றி அமைக்கலாம்இந்த மாற்றத்தை நேரடியாகப் பார்க்க முடியாது

இந்த ரகசியத்தின் அடிப்படையில் அவர் உலோகங்களை எப்படியெல்லாம் மாற்றலாம் என்பதை விளக்கமாக எழுதி விட்டார்!

இன்றைய அறிவியல் பாஷையில் இதை நாம் இன்று கெமிகல் ரீஆக் ஷன் (chemical reaction) என்கிறோம்!

கெபர் இன்னொரு ரகசியத்தையும் குறிப்பிடுகிறார். மாற்றத்தைச் செய்யும் போது அது “இயற்கையை அனுசரித்துசெய்யப்பட வேண்டும் என்கிறார்.

    இன்றைய விஞ்ஞானிகள் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் அடிப்படையிலானது என்று சொல்ல முடியாது.

இன்று விஞ்ஞானிகள் சொல்லும் உலோகங்கள், எலிமெண்ட்ஸ் (எனப்படும் மூலகங்களே) என்பதை பழைய கால இரஸவாத நிபுணர்கள் நம்பவில்லை. உலோகங்களை அவர்கள் கூட்டுப்பொருள் (Compound) என்றே கருதினர்.

ஆக அடிப்படையிலேயே ஒரு பெரிய வேறுபாடு விஞ்ஞானிகளுக்கும் ரஸவாத நிபுணர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது!

 

இரும்பு என்பது கந்தகத்தை அதிகம் கொண்டது; தங்கம் என்பது பாதரஸத்தை அதிகம் கொண்டது போன்ற கருத்துக்களை அவர்கள் கொண்டிருந்தனர்.

ஆகவே எவை உலோகங்கள், எவை கூட்டுப்பொருள்கள் என்பதைச் சரியாக நிச்சயித்து விட்டால் ஈயத்திலிருந்து தங்கத்தை எளிதாக உருவாக்கலாம் என அவர்கள் தீர்மானித்தனர்.

இதற்கான சூத்திரம் அல்லது வழிமுறையைக் கண்டுபிடித்து விட்டால் போதும், அவ்வளவு தான்!

சரி,ஈயத்தைத் தங்கமாக்க வேண்டுவது என்ன? பிலாஸபர்ஸ் ஸ்டோன் எனப்படும் ரஸவாதக் கல் தான்!

கெபருக்கு முன்னால் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் எவை எவற்றிலிருந்து இந்தக் கல்லை உருவாக்கமுடியும் என்று எண்ணினார்களோ அந்த அனைத்து வழிகளையும் முயன்று பார்த்தனர். சிலர் மனித ரத்தத்தையே கூடப் பயன்படுத்தி விட்டனர்!

      13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோஜர் பேகான் (Roger Bacon) என்பவர் சோதனைகளைச் செய்யும் விஞ்ஞான முறையை முதலில் ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவர் பிலாஸபர்ஸ் ஸ்டோனை உருவாக்க மனித ரத்தம் அவசியம் என்று கருதினார். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் பிரம்மாண்டமான உலகத்தின் ஒரு சிறு பகுதியே – மைக்ரோகாஸ்ம் -என்பதால் மனித ரத்தம் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறிதளவேனும் கொண்டிருக்கிறது என்பது அவரது கொள்கை.

        இடைவிடாத தனது ஆய்வில் இந்த அனைத்து விவரங்களையும் நியூமேன் சேகரித்தார். 

                    (தங்கமாக்கும் ரகசியம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் பிரபல வானவியல் விஞ்ஞானி ஆவார். அவர் பெரு வெடிப்பு என்னும் பிக் பேங் கொள்கையை ஆதரிக்கவில்லை. மாறாக பிரபஞ்சம் எப்போதும் போல இருந்தது, அப்படியே இருக்கும் என்ற ஸ்டடி ஸ்டேட் தியரியைக் கொண்டிருந்தார். ஆனால் 1951இல் இந்த விவாதம் உச்ச கட்டத்தை அடைந்தது. போப் பன்னிரெண்டாம் பயஸ்  பிக் பேங் கொள்கையை ஆதரித்து அகாடமி ஆஃப் ஸயின்ஸஸில் பேசி விட்டார். ஒவ்வொரு கொள்கையும் மாறி வருவதைக் கண்டு சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் வியந்தார்.

மனித குலத்தின் எதிர்காலத்தைப் பற்றி அவர் கூறுகையில் நிலைமை மிக மோசமானதாக இருக்கும் என்று கருதும் பட்சத்தில் இந்த உலகம் இருநூறு கோடி ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.

பைக்கு 14 இலக்கங்களை எளிதில் ஞாபகம் கொள்ளும் விதத்தில் அவர் ஒரு ஞாபக வாசகத்தை இப்படித் தந்தார்.

 

How I want a drink, alcoholic of course, after the heavy chapters involving quantum mechanics . இதில் உள்ள வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் பைக்கான 14 இலக்கங்கள் வரும். அதாவது 3.14159265358979.

இதை எளிதில் ஞாபகப்படுத்திக் கொள்ள அவர் தந்த வாசகம் இன்றும் உதவும்.

***

 

Great Men Praise Tamil Poet Tiruvalluvar and Tamil Veda Tirukkural! (Post No.4152)

Compiled by London Swaminathan

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 9-18 am

 

Post No. 4152

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

(Don’t cut the name of the writer and blog if you are reusing it. Give respect to the writers and get respect. Be honest and your spouse and children will be honest to you; if you cheat me, they will cheat you.)

Great Men Praise Tamil Poet Tiruvalluvar and Tamil Veda Tirukkural! (Post No.4152)

TIRUVALLUVAR TEMPLE IN MYLAPORE, CHENNAI

Tirukkural, written by Tamil Poet Tiruvaluvar, is considered as the Tamil Veda. It consists of 1330 aphorisms grouped into 133 chapters of ten couplets each. These fall into three sections Dharma (virtue), Artha (wealth) and Kama (love).

 

Tirukkural literally means a ‘book of sacred couplets’

We can ungrudgingly compare it to the Confucian Analects, Plato’s Dialogue and Aristotle’s Ethics. Western scholars who have scrutinised it in translation are unquestionably impressed by its universal content and appeal.

xxx

Tirukkural is neither a scripture nor an epic, but an extraordinary treatise on the art of living, which delves deep into the unshifting foundations of human life and attempts to provide guidelines, not for the society in general but for the individuals – the ascetic, the family member, the father, the son, the ruler, the minister, the ambassador, and in general to the individuals in society with responsibilities to themselves and others  — Dr V C Kulandaiswamy

xxx

 

“There hardly exists in the literatures of the world a book of such lofty maxims”- Albert Schweitzer

xxx

 

M.Ariel (Journal Asiatique-1848)

“The Kural is the masterpiece of Tamil literature:- one of the highest and purest expressions of human thought.”

 

xxx

Dr Graul (1856)

“No translation can convey an idea of its charming effect. It is truly apple of gold in a net work of silver.”

xxx

Dr G.U. Pope (1886)

“The Kural owes much of its popularity to its exquisite poetic form. The brevity rendered necessary by the form gives an oracular effect to the utterances of the great Tamil ‘Master of Sentences’. They are the choicest of the moral epigrams. Their resemblance to gnomic poetry of Greece is remarkable as to their subjects, their sentiments, and the state of society when they were uttered. Something of the same kind is found in Greek epigrams, in Martial and Latin elegiac verse. There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius”.

xxx

Dr Barth (Religions of India)

“The Kural is that admirable collection of stanzas in the Tamil language, which is instinct with the purest and most elevated religious emotion……………………… What philosophy he teaches seems to be of the eclectic school as represented by the Bhagavt Geeta.”

 

xxx

 

Frederic Pincott

“There are two books in India which have taken entire possession of the hears and minds of the people; the first of these is the Ramayana of Tulsidas, which is known to every peer and peasant in Northern India, and the other is the Kural of Thiruvalluvar which is equally well-known throughout the South of the Indian Peninsula. The authors of both these works were essentially moralists and monotheists, and their poems have moulded the characters and guided the lives of many generations of their countrymen.

xxx

Rev.Elijah Hoole D.D.

“Some of the sayings (of Cural) are probabaly as old as the earliest writings of the Old Testament. The Cural of Tiruvalluvar is a poetic work on morals, of great merit as literary performance”

 

xxx

Rev.W .H.Drew (1840)

“Called the first of works, from which, whether for thought or language, there is no appeal, the Cural has a strong claim on our attention as a part of the literature of the country, and as a work of intrinsic excellence”.

xxx

Rev. E.J. Robinson

“We may regard Valluvar… as Tamil Solomons, Ezras or Tuppers, who collected and arranged the ‘proverbial philosophy’ of primitive times”.

xxx

G.U. POPE’S POEM ON TIRUVALLUVAR

‘’Sage Valluvar, priest of the lowly clan,
No tongue repeats, no speech reveals thy name;
Yet, all things changing, dieth not thy fame
For thou art bard of universal man;

And still thy ‘book’ above the waters wan’
Virtue, true wealth, and joy, and being’s aim,
In sweetest mystic couplets doth proclaim
Where winds sea-wafted palmy forests fan.

Haply undreamed of ‘visions’ glad thine eyes
In reals beyond thy fabled ‘seven fold birth’,
And clouds of darkness from thy spirit roll;

While lands far off have heard with strange surprise
Faint echoes of thy song. Though all the earth
Men hail thee brother, seer of spotless soul’’
—Written by Dr G.U. Pope

xxxx

Tirukkural Commentaries

Tradition says that there were ten commentaries on the Kural in medieval times. Of these only five have been bought to light, namely those of Parimel alagar, Manakkudavar, Kalingar, Parithiyar and Paripperumal. Parmellagar was the most popular and authoritative commentary on the book. He was a native of Kanchi, where he lived and taught about 600 years ago. His style is almost as terse and vigorous as the original and all students of Kural are greatly indebted to him for his clear and convincing exposition of the couplets. His criticisms of the various readings current in his day are incisive and dignified.

Manakkudavar differs from him in many places and he often adopts a different renderings of the same text.

xxx

Tiruvalluvar’s Age

Tiruvalluvar hailed from Mylapore in Chennai and he lived at least 1500 years ago. Though the Tamil Nadu government publications place him around 31 BCE, linguistically he can be placed in the fourth or fifth century CE only. His style, language and grammatical constructions show him that he lived in the post- Sangam age. Sangam Age covers the first three centuries of modern era.

–Subham—

 

திருக்குறளில் பேய் நட்சத்திரம்! ஒரு அதிசயத் தகவல்! (Post No.4151)

Algol is a binary star

Written by London Swaminathan

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 6-53 am

 

Post No. 4151

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

(என் பிளாக்குகளில் வரும் கட்டுரைகளைப் பயன்படுத்துவோர், எழுதியவர் பெயரையும், பிளாக்கின் பெயரையும் வெட்டாமல் பயன்படுத்தவும்; இதனால் தமிழ் வாழும்; உங்களையும் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!—London swaminathan)

ஒரு திருக்குறளில் பேய் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். கடவுளை நம்பாதவன் பேய் என்கிறார். இது எல்லா நூல்களிலும் உள்ள விஷயம்தான். ஆனால் வேறு யாரும் சொல்லாத, ஒரு சுவையான விஷயத்தைச் சொல்லுகிறேன்.

 

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

 

இந்தக் குறளில் ‘அலகை’ என்ற ஒரு சொல் ‘பேய்’ என்ற பொருளில் கையாளப்படுகிறது. சங்க இலக்கியத்தில் வேறு எந்த இடத்திலும் இப்பொருளில் இச்சொல் பயிலப்பட்டதாகத் தெரியவில்லை.

 

புறநானூற்றிலும், மலைபடுகடாமிலும் சேர்ந்து மூன்று இடங்களில் ‘அலகை’ என்ற  சொல் இடம்பெற்றும் அங்கெல்லாம் பேய் என்று பொருள்படவில்லை.

 

அந்தக் கால ஆனந்தவிகடன் தமிழ் அகராதி தரும் பொருளைப் பார்ப்போம்:

அலகை:–

கற்றாழை, பிசாசம், பேய்க்குமட்டி, பேய், பிசாசு

அலகைக் கொடியாள்- காளியம்மை

அலகைத் தேர் – பேய்த் தேர் (கானல் நீர்)

 

ஆக அலகை என்பது பேய் எனப்படும். இந்தியில் ‘அலக் அலக்’ என்றால் வேறு வேறு என்று பொருள். இப்படி வேறு வேறாகத் தோன்றும் ஒரு நட்சத்திரம் ஆல்கால் (ALGOL)  எனப்படும். அது அராபிய மொழிச் சொல் என்பர். அதன் பொருள் பேய். அ தாவது தமிழிலும் அராபிய மொழியிலும்  பேய் எனப்படும் .

இப்பொழுது ஆல்கால் (அலகை) நட்சத்திரம் பற்றிக் காண்போம்:

 

இதை பேய் நட்சத்திரம் என்று ஏன் அழைக்கின்றனர்? ஏனேனில் இது திடீரென்று மறையும், திடீரென்று தோன்றும். அலக் அலக் (வேறு வேறு) என்ற இந்திச் சொல்லுக்கு ஏற்ப!

இது பெர்ஸியஸ் (Perseus) எனப்படும் பறக்கும் குதிரை நட்சத்திர மண்டலத்தில் இருக்கிறது

இதை கார்கான் (Gorgon) என்னும் கிரேக்க அரக்கியுடனும் ஒப்பிடுவர்.

இது மூன்று நட்சத்திரக் கூட்டத்தில் இருப்பதால் சுமார் பத்து மணி நேரத்திற்கு பார்ஸ்வ கிரஹணத்துக்கு (பகுதி நேர) உள்ளாகும். அதாவது மற்ற நட்சத்திரங்களின் ஒளியால் இது ஒளி மங்கிக் காணப்படும். இரண்டு நாள் 20 மணி நேரம் 49 நிமிடத்துக்கு ஒரு முறை இதன் ஒளித்தரம் குறைந்து விடுகிறது. ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் சுற்றிவருவதால் ஆல்கால் மறைந்தும் விடும் (கிரஹணம் ஏற்படும்)

 

 

3200 ஆண்டுகளுக்கு முன்னரே அதிர்ஷட் நாள்- துரதிர்ஷ்ட நாள் காலண்டரில் ஆல்கால் (ALOGOL) தோற்றத்தை எகிப்தியர்கள் பதிவு செய்து வைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவர். அவர்களுக்கு திருவள்ளுவர் ‘அலகை’ பற்றிச் சொன்னது தெரியாது

 

அல்-கூல் என்ற அராபியச் சொல்லிலிருந்து ஆல்கால் வந்ததாக எசைக்ளோபீடியாக்கள் செப்பும். அராபிய மொழியில் ‘கூல்’ (GHOUL) என்றால் பேய். ஆனால் ஆராய்ச்சியா ளர்களுக்கு இந்திய மொழிகள் தெரியாததால் வந்த குழப்பம் இது. தமிழிலும் ‘கூளி’ என்றால் பேய். கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களில் இந்தச் சொல்லைக் காணலாம்.

 

இப்பொழுது ஒரு சந்தேகம்!

தமிழ் மொழியில் உள்ள கூளி (பேய்), அலகை (பேய்) ஆகிய எல்லாம் அராபிய மொழியில் புகுந்தது எப்படி? ‘அலக் அலக்’ என்னும் இந்திச் சொல் சம்ஸ்கிருத மொழியிலிருந்தே வந்திருக்க வேண்டும். ‘மாறி மாறி’ ஒளிர்வதால் ‘வேறு வேறு’ (அலக் அலக்) என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது.

 

திருவள்ளுவரைத் தவிர, அவருக்கு முன்னதாக, பேய் என்னும் பொருளில் ‘அலகை’ பயன்படுத்திய சான்றுகளும் இல்லை. இவை அனைத்தும் பல கேள்விக்குறிகளை எழுப்புகின்றன. ஆனால் எனக்குப் பிடித்த, எனது கொள்கையான மொழிக் கொள்கையை உலகம் ஒப்புக் கொண்டால் இந்தப் புதிருக்கு விடை காணலாம்.

அதாவது உலக மொழிகள் யாவும் — பழைய மொழிகள் மட்டும் — சம்ஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டிருந்தே பிரிந்தன. ஒருவேளை சிந்துவெளி/ சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்தைப் படிக்க முடிந்தால் விட்டுப்போன — காணாமற்போன — இணைப்பு, பாலம் (Link, Bridge) கிடைத்துவிடும்.

 

சுருங்கச் சொல்லின் பழைய மொழிகளின் மூலச் சொல்லை சம்ஸ்கிருதத்திலோ தமிழிலோ கண்டு பிடித்துவிடலாம்.

 

பேய் நட்சத்திரம் பற்றி அறிந்தோ அறியாமலோ அலகை என்ற சொல்லை  வள்ளுவர் மட்டும் பயன்படுத்தி இருப்பது வியப்புக்குரியது.

வாழ்க வள்ளுவன்! வளர்க தமிழ்!!

TAGS: அலகை, ஆல்கால், பேய் நட்சத்திரம், திருக்குறள், கூளி

–subham–