புத்திமானும் பலவானும் பேயை விரட்டிய கதை! (Post No.5069)

Written by London Swaminathan 

 

 

Date: 2 JUNE 2018

 

 

Time uploaded in London – 14-54

 

Post No. 5069

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

பல நாட்டுப்புறக் கதைகள் பழங்காலத் தமிழில் உள; அவைகளை நான் அவ்வப்பொழுது புதுத் தமிழில் செதுக்கிக் கொடுக்கிறேன்

ஒரு கிராமத்தில் ஒரு பயில்வான் இருந்தான்;  உடல் பலம் இருந்தும் அவனுக்கு புத்தி ‘மந்த புத்தி’தான்; ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல ஐந்து நிமிடமாவது ஆகும். ஆனால் வேறு எவரும் அசைக்கக்கூட முடியாத பாரத்தை மிக எளிதாகத் தூக்கி விடுவான். அவனை எல்லோரும் வல்லாள கண்டன் என்று அழைப்பர்.

 

அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் உடல் பலம் இல்லாத, ஆனால் மஹா புத்திசாலியான ஒருவன் இருந்தான். அவனை வாய்ச்சொல் வீரன் என்று அழைப்பர். மிகவும் புத்திநுட்பம் உடையவன். மற்றவர்களுக்குத் தோன்றாத விஷயங்கள் அவனுக்கு எளிதில் புலப்படும் தட்டுத் தடங்கலின்றி பேசுவான். பதில்கள் அனைத்தும் அக்ஷர லக்ஷம் பெறும்.

வாய்ச்சொல் வீரனின் புகழ் எங்கும் பரவவே வல்லாள கண்டனுக்குப் பொறாமை ஏற்பட்டது. உடல் பலமின்றி வாய்ச் சொல் வீரம் இருந்து என்ன பயன் என்று கிண்டல் செய்தான். ‘பேச்சுக்கு ராவணன், பின்னர் பார்த்தால் கும்பகர்ணன் போல’ இருக்கிறதே என்பான். ‘சொல்லுதல் யார்க்கும் எளிதாம்; சொல்லியவாறு செய்தல் அல்லவோ கடினம்’ என்பான். இருவரும் சந்திப்பது நல்லது என்று இரண்டு கிராம மக்களும் முடிவு செய்தனர்.

 

இருவரும் வாய்ச்சொல் வீரனின் கிராமத்தில் சந்தித்தபோது வல்லாள கண்டன் சொன்னான்; ஒரு நாள் முழுதும் உன்னுடன் தங்கியிருந்து உடல் பலமே பெரிது என்பதைக் காட்டப்போகிறேன் பார்! என்று சவால் விடுத்தான்.

முதல் சோதனை

 

சரி அடுத்த கிராமத்திலுள்ள இடையன் நிறைய ஆடுகள் வைத்திருக்கிறான். அதை என் உடல் பலத்தால் களவாடி வருகிறேன். உன்னால் முடியுமா என்றும் யோசித்துப் பார் என்றான் வல்லாள கண்டன் . மாலையில் இருட்டத் துவங்கியது

 

இடையன் எப்போதும் சாப்பிடப் போகும்போது,  ஒரு ஆள் இருப்பது போலத் தெரியட்டும் என்று ஒரு கம்பளியைக் கம்பின்மீது போட்டுவிட்டுப் போவான்; யாரோ ஒருவர் கூடவே இருப்பது போல பாவனை செய்து பெரிதாச் சொல்வான்: . “தம்பி ஆடுகளைப் பார்த்துக்கொள்; இந்தப் பக்கம் திருடர்களும் பேய்களும், சிப்பாய்களும் அதிகம். ஆடுகளைத் தூக்கிச் செல்லாமல் பார்த்துக்கொள்” என்பான்; இது வழக்கமான பல்லவி.

 

இதை எல்லாம் கவனித்த மஹா புத்திசாலி வா, வா, போய் ஒரு ஆட்டை  எடுத்துக்கொண்டு ஓடி விடுவோம் என்றான். வல்லாளகண்டனுக்குப் புத்தி குறைவு என்பதால் அந்தக் கம்பின் மீது போட்ட கம்பளியை ஆள் என்றே நினத்துத் தயங்கினான். பின்னர் அது வெறும் கம்பளி அங்கு யாரும் இல்லை என்று காட்டவே வல்லாளகண்டனுக்கு ஒரே ஆச்சர்யம்!! ஒரு ஆட்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

 

அந்தக் கிராமத்தில் உண்மையிலேயே பேய்கள் உண்டு;  அவைகளும் இடையனின் பேச்சை கேட்டு ‘’சிப்பாய்கள்’’ என்றால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது ஆட்டைத் திருடிய வல்லாளகண்டனும்  வாய்ச்சொல் வீரனும் வந்தனர். இதுவரை இந்த மாதிரி ஆட்களைப் பார்த்ததே இல்லை. ஓ! இவர்கள்தான் சிப்பாய்கள் போல என்று நினைத்து ஆடுகள் உருவத்தில் போய் செடி கொடிகளை பேய்கள் மேய்ந்தன. அப்படிச் செய்தால் வெறும் ஆடுகள் என்று எண்ணி இருவரும் போய்விடுவர் என்று அவை எண்ணின

அவைகளைப் பார்த்துக் கொண்டு வந்த வல்லாள கண்டன் ஒரு பேய் ஆட்டைத் தொட்டுப் பார்த்து, அட, இது நாம் திருடிய ஆட்டை விடக் கொழுத்து இருக்கிறது என்று கருதி அதில் ஒன்றைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.

பேய் ஆட்டுக்குப் பயம் வந்துவிட்டது. எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்த போது, பின்னால் வாய்ச் சொல்வீரன் நடந்து வருவதைப் பார்த்து அவனும் ஒரு சிப்பாய் என்று பயந்தது. அந்த நேரத்தில் கொழுத்த ஆட்டின் எடை தாங்காமல் ‘ஏய், இதை ஒரு நிமிடம் உன் தோளில் வைத்திரு. கொஞ்சம் முதுகை நெளித்து வளைத்து உடலைச் சரி செய்கிறேன் என்று சொல்லி மஹா புத்திசாலியின் தோளில் வைத்தான். அவனுக்கு உடல் வலு இல்லாததால் அவன் அதை ‘தொபுக்’ என்று கீழே போட்டான். பேய் ஆடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டது பின்னர் மாயமாய் மறைந்தும் போனது.

 

ஏற்கனவே இடையன் பேச்சில் பேய்கள் பற்றிச் சொன்னதைக் கேட்டு இருந்ததால் அது பேய்தான் என்று பயந்து இருவரும் வேகமாக நடந்தனர்.

 

இதைப் பார்த்த சில பேய்கள் நம்மைத்தான் ‘சிப்பாய்கள்’ பிடிக்க வருகிறார்கள் என்று பேசிக்கொண்டு தலை தெறிக்க ஓடின. மற்ற பேய்கள் சிரித்துக் கொண்டே சிப்பாய்களும் இல்லை, குப்பாய்களும் இல்லை என்று நக்கல் அடித்தன.

இருவரும் வீட்டுக்குப் போய் தாங்கள் பார்த்த கொழுத்த ஆடு பேய்தான் என்று பேசிக்கொண்டே தூங்கிவிட்டார்கள். அந்த வீட்டில் அன்று எதேச்சையாக பேய்கள் போய் மதில் ஏறிக் குதித்தன. இதைப் பார்த்த வல்லாள கண்டன் அவனது நண்பன் வாய்ச்சொல் வீரனிடம் போய் பேய்கள் இங்கும் வந்து விட்டன. நாம் என்ன செய்வது? என்றான். உடனே மஹா புத்திசாலியான வாய்ச்சொல் வீரன் ‘’நீ ஒன்றும் தெரியாதது போல உருண்டு போய் உன்     இடத்திலேயே படுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு ரஹஸியமாக தாழ்ந்த குரலில் தனது பெண்டாட்டியிடம் சொன்னான்: நீ போய் இலை போட்டு, இருக்கும் சாப்பாட்டைப் பரிமாறு; என்ன இது? இன்று காலையில் நான் பிடித்து வந்த மூன்று பேய்களைச் சமைக்கவில்லையா? அவை எல்லாம் பழையதாய்ப் போனால் நன்றாக இராது என்பேன்; நீ உடனே  மூன்று பேய்களையும் உங்கள் மகன் பக்ஷணம் பண்ணிவிட்டு மேலும் வேண்டும் என்றான்; நான் இல்லை என்று சொன்னவுடன் கோபித்துக்கொண்டு பேய் பிடிக்கப் போய்விட்டன் என்று சொல்லு’’ என்றான். மனைவியும் சரி என்று சொல்லிவிட்டு அவன் சொன்ன படியெல்லாம் செய்தாள்.

 

இதைக் கேட்ட பேய்கள் நடுநடுங்கி ஓட்டம் பிடித்தன. ஏற்கனவே ஆடாக இருந்து தப்பித்த பேயிடம் அவை எல்லாம்,’ நீ சொன்னது உண்மைதான்; சிப்பாய்கள் பொல்லாதவர்கள்; அவன் மகனே மூன்று பேய்களைத் தின்றுவிட்டு நம்மையும் பிடிக்க அலைகிறானாம். நாம் வேறு காட்டுக்குப் போய்விடுவோம் என்று ஓடி விட்டன. அப்போதுதான் வல்லாளகண்டனுக்குப் புரிந்தது: உடல் பலத்தை விட புத்தி பலமே பெரிதென்று.

 

இருவரும் மறு நாளைக்கு வேறு ஒரு கிராமத்துக்குப் போவோம் என்று புறப்பட்டனர். பேய்கள் போன புதுக் காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாலை நேரம் ஆகி இருட்டத் துவங்கியது. வல்லாள கண்டனுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா’கத் தென்பட்டது. ஆகையால் நாம் ஒரு அரச மரத்தின் மீது ஏறி இரவைக் கழிப்போம்; பொழுது விடிந்ததும் புறப்படுவோம் என்றான். அதற்கு இணங்கிய மஹா புத்தி சாலியும் இரவு முழுதும் பல கதைகளைச் சொல்லிப் பொழுதைக் கழித்தான். அதே மரத்துக்கு அடியில் நள்ளிரவில் பேய்கள் வந்து குழுமி கூட்டம் போட்டன. அதைப் பார்த்த வல்லாள கண்டன் பயந்து நடுங்கி பேய்கள் மீது தொபுக் என்று விழுந்தான். அவன் வாய் குளறிப் போய் ஏதோதோ பிதற்றத் துவங்கினான்.

அவைகளைக் அதைக் கேட்ட மஹா புத்தி சாலி, அட நீ ஏன் இந்தப் பேய்களையும் தின்ன வேண்டும் என்று துடிக்கிறாய்? இன்றுதான் ஐந்தாறு பேய்களை அடித்துக் கொன்று தின்னோமே; இவைகளை நாளை இரவுச் சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்வோம். சூடாகச் சாப்பிடுவோம்’’ என்று மரத்தின் மீதிருந்து சொன்னான்.

 

இதைக் கேட்ட அவை அனைத்தும் அடக்கடவுளே! இவன் மூன்று பேய்களை பக்ஷணம் பண்ணியவனின் தகப்பன் அல்லாவா? என்று பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்தன.

 

மறு நாள் காலையில் வல்லாள கண்டன் சொன்னான்: “புத்திமான் பலவான் ஆவான்; உடல் பலம் இருந்தும் என்னால் பேய்களை விரட்ட முடியவில்லை; நீ உன் புத்திசாலித் தனத்தால் விரட்டிவிட்டாய் என்று புகழ்ந்துவிட்டு தனது கிராமத்துக்கே சென்றான்.

 

–சுபம்–

காசு மேலே காசு வரும்! வாஸ்து சாஸ்திரம்!! (Post No.5068)

Written by S NAGARAJAN

 

Date: 2 JUNE 2018

 

Time uploaded in London –  7- 11 am  (British Summer Time)

 

Post No. 5068

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வளமான வாழ்க்கைக்கு வாஸ்து

 

காசு மேலே காசு வரும்!

 

ச.நாகராஜன்

வாஸ்து சாஸ்திரம் ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. அது பொய்க்காது.

வாஸ்து சாஸ்திரத்தின் பெருமை எல்லையற்றது. அதன்  பெருமைகளைக் கேட்பதை விட உடனடி பலன்களை எதிர்பார்ப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

எப்படி மின்சாரத்தின் தியரி பகுதியை அனைவரும் அறிய விரும்பாமல் ஸ்விட்சைப் போட்டால் விளக்கு எரிவதை மட்டும் விரும்புகிறார்களோ அது போல, வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அதன் பயனை உடனடியாக அனுபவிக்கத் துடிப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ஒம்’ஸ் லாவும் (Ohm’s Law) கிர்சாஃப்ஸ் லாவும் (Kirchoff’s Law) யாருக்கு வேண்டும். ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும்; ஃபேன் சுற்ற வேண்டும்.

சரி, நேரடியாக அனைவருக்கும் பிடித்த விஷயத்திற்கு வருவோம்.

காசு மேலே காசு வரும்!

அது தானே வேண்டும்.

‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும்”

 

அதாவது குற்றமுற்ற பூமியில் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கின்ற பொருளை அடைந்து விட்டால் அறமும் இன்பமும் தானே வரும் என்பது ஆன்றோர் வாக்கு.

சரியாகத் தான் சொன்னார்கள்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

வாஸ்து மூலம் காசு மேலே காசு வர வழி என்ன?

சுலபமானது; அதிகம் செலவில்லாதது – ஒரு வழி!

வடக்கு திசையைக் கவனியுங்கள் என்பது தான் அது.

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.

செல்வம் வேண்டுவோர் முதலில் பார்க்க வேண்டிய திசை அது.

வடகிழக்கு மூலையில் – ஹாலில் –  தினமும் ஒரு நல்ல பாத்திரத்தில் ஜலத்தை நிரப்பி வைக்க வேண்டும்; அதை மறு நாள் காலையில் அகற்றி விடவேண்டும். மறுபடியும் புதிய நீரை நிரப்ப வேண்டும்.

வடக்கு திசையில் – ஹாலில் – முக்கியமாக குப்பை கூளங்கள் இருக்க கூடாது.

வடக்கு திசையில் ஸ்டோர் ரூம் இருக்க கூடாது.

வடகிழக்கில் டாய்லட் இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால் அங்கு கல் உப்பை ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும். அது ஈரமாகப் போனவுடன் அதை அகற்றி புதிய உப்பை வைக்க வேண்டும்.

வடக்கு திசை செல்வத்தின் திசை என்பதால் அங்கு காசு, பணம் உள்ள பீரோவை வைக்கலாம்.

வடக்கில் செய்யக் கூடாத ஒன்று – வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பது தான். அது மூளையின் செயல் இயக்கத்திற்குப் பாதகத்தை விளைவிக்கும்.

வடக்கு நீரின் திசை.

இந்தத் திசை வீட்டில் சுத்தமாக இருந்தால் அந்தஸ்து உயரும்; உயர் பதவி வரும்; செல்வம் சேரும். சொத்துக்கள் சேரும்.

இது மிகவும் பலவீனப்படுத்தப்பட்டால் – ஸ்டோர் ரூம், அழுக்கு மூட்டைகள், குப்பைகள் சேர்தல், செருப்புகளை வைத்தல் ஆகியவற்றால் பலவீனப்படுத்தப்பட்டால் – வீட்டில் செல்வம் வந்தாலும் அது உடனடியாக அகன்று விடும். இல்லத்தில் இருப்பவர் நோய்வாய்ப்படுவர். சொத்துக்கள் வில்லங்கமாகி விடும்.

ஆகவே வடக்கு திசையைக் கவனித்து வடகிழக்கு மூலையில் ஒரு பேஸினில் நீரை வைத்து 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் கவனியுங்கள்.

நிச்சயம் ஒரு நல்ல அறிகுறி தோன்றும்.

உடனடியாக இந்தப் பழக்கத்தை பலப்படுத்துங்கள்.

 

 

 

நீரில் ரோஸ் வாட்டர், பன்னீர், கங்கை ஜலம் போன்றவற்றை ஊற்றி வரவை அதிகமாக்கலாம்.

இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தவுடன் உங்கள் பணவரவைப் பாருங்கள்.

வடக்கில் Clusterஐ அகற்றுங்கள்.

வாஸ்து தரும் காரண்டி – காசு மேலே காசு வரும்!

***

பயனடைந்தவுடன் அன்பர்கள் தங்கள் அனுபவத்தை எழுதி அனுப்ப மறக்க வேண்டாம்!

EFFECTIVE MEDICINE TO KILL YOUR MOTHER IN LAW! (Post No.5067)

Written by London Swaminathan 

 

Date: 1 JUNE 2018

 

Time uploaded in London – 13-25

 

Post No. 5067

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

VERY EFFECTIVE MEDICINE WHICH KILLS MOTHERS IN LAW IS AVALABLE AROUND THE WORLD AND THE SURPRISING THING IS THAT IT IS FREE!  t

 

The following anecdote is the proof; I will narrate it very briefly.

 

A newly married couple enjoyed their life for the first one year and there came a thorn in the beautiful rose plant- that is the mother in law thorn! The thorn became sharper and stronger every time the husband called his wire @  Hi, Honey!”.

 

Mother in law was boiling when he heard her son saying, ‘Hi Honey I have never tasted such a tasty food in my life’ (about her cooking). Now the jealousy mother in law was fed with more fuel. She used all that fuel to torture her daughter in law. Every evening when her son came back from the office she boy’s mother submitted a list of the ‘crimes’ she did on that day; but he never listened to them; just ignored his mother.

In the meantime, the torture of mother in law went beyond the tolerance level and so the daughter in law approached a spiritual Guru. Guru listened to her patiently and said to her,

“This is no problem; I have solved lot of cases like yours. I will give a bottle of medicine. But keep it away from children; it is a slow killing poison; it will solve the problem in nine months; just add one drop of this medicine to her favourite food. and it is absolutely free. You may come to my Ashram whenever you need my help”.

 

She was very happy and literally snatched the medicine from the Guru and was about to rush outside. Guru called her and said to her there two important conditions which she must strictly follow them:

  1. She must prostrate to her Mother in Law every morning and cook her favourite dish

2.She must ask her the favourite dish and then cook it.

Guru told her to pretend like a very kind and caring person so that mother in law wont suspect her. Daughter in law said to swamiji:-

 

“Guru! you don’t need to worry about me. I have been watching  lot of T V Serials and films; So I can easily act like a good girl.”

 

Months went by. The mother in law started praising her sky high to every one who visited the house. Friends of the daughter in law phoned her and asked about the secret potion which made her mother in law soft. But she did not tell anyone the 9 month project.

One day mother in law called her daughter in law and praised her as ‘Maha Lakshmi (Goddess of wealth)’, most beautiful girl she ever saw and her son was lucky to get her. She also whispered into her ear that she asked her son to give her a diamond necklace very soon. She sent her old jewellery for recycling into a diamond necklace.

Now the daughter in aw felt very guilty for mixing the slow killing poison in her food. Next day she ran to Guru’s ashram and started talking. Guru interrupted, “I knew everything; the medicine is working very well; she will have to wait for a few more months to finish her off”.

 

But the girl said, No, Guruji, I don’t want to kill my mother in law.

Guu said to her that he cant stop it half way through. It would create more problems for her, because the poison has already started working. When she felt sad, Guru promised her to give her a better medicine which will make her happier and take away her guilt after ‘project mother in law’ finish . Half heartedly she went back.

In course of time, she got her diamond necklace  and there was a big function to celebrate her birth day—it was a surprise party!

 

Now she felt guiltier. Next day she ran to her Guru and told him in stronger terms. She even threated the Guru that if he did not stop the slow killing poison she would commit suicide on the day her mother in law dies and both the sins would come to the Guru.

As soon as the Guru heard this, he burst into laughter.- Big laughter- It went through the roof. And he said

Hello, my girl! your mother in law will never die; she will for long. The medicine—the slow killing poison- was nothing but sugar syrup. The real medicine was given to you (the girl)  in the form of two conditions to prostrate to mother in law every morning and cook her favourite dish. Actually, that was the medicine which worked very well”. Saying this, Guru gave her Kunkum, flowers and blessings to her.

Tears of Joy rolled over her cheek. She couldn’t speak a single word.

Be the change you wish to see in others- Mahatma Gandhi.

( This story was told by Mr M K Angajan in a spiritual talk held yesterday in London; I have given it in my words)

–subham–

மாமியாரைக் கொல்லும் அதிசய மருந்து! (Post No.5066)

Written by London Swaminathan 

 

Date: 1 JUNE 2018

 

Time uploaded in London – 10-58 AM

 

Post No. 5066

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

BE THE CHANGE YOU WANT SEE IN THE WORLD—MAHATMA GANDHI

 

ஒரு ஊரில் ஒரு அழகி; அவளுக்கும் ஒரு அழகனுக்கும் கல்யாணம்; தேன் நிலவு (ஹனி மூன்) நிறைவு; சுக போக வாழ்க்கை!

ஆனால் ரோஜாச் செடி முள் போல, ஒரு மாமியார்; வந்தது பிரச்சனை; புற்று நோய் போலப் புரையோடத் துவங்கியது. ‘போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்’ என்ற பழமொழிக்கு இணங்க, பையன் வேறு, புதுப் பெண்ணைப் புகழ்ந்து தள்ளினான். அவள் சமைத்தது எல்லாம் அமிர்தம் என்றான். பெத்த வயசு கேட்குமா? வயிற்று எரிச்சல் அதிகரித்தது. பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

 

அந்த வயிற்றெரிச்சலை எல்லாம் புகார் மனுவாக மாற்றி பையன் காதில் ஊதினாள் மாமியார்; அதாவது பையனின் அம்மா.

அவனுக்கு அது ஏறுமா? அது ‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல’ இருந்தது.

மாமியாரின் கோபம் எல்லாம் மருமகள் மீது பாய்ந்தது.

நாள் ஆக நாள் ஆக மருமகளுக்குப் பொறுக்க முடியவில்லை; அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். இந்தப் பெண்ணும் அந்த சாமியார் காலில் விழுந்தாள்; காதில் ஓதினாள்.

சாமியார் சொன்னார்:

“மகளே அஞ்சற்க; என்னிடம் மாமியாரைக் கொல்லும் அரு மருந்து இருக்கிறது. ஆனால் இது மெதுவாகக் கொல்லும் விஷம்; கூட இருந்தே ‘கழுத்தை அறுக்கும் உறவினர் போலக் கொல்லும்’ சக்தி வாய்ந்தது; நண்பன் போலவே நடித்து ‘பின்னுக்குக் குழிபறிப்பவன் போல’ உன் மாமியாருக்குக் குழி பறிக்கும் வல்லமை வாய்ந்தது. இந்தா, சின்ன (BOTTLE) பாட்டில்; ஆனால் ஒன்று சிறுவர் கையில் இது சிக்கி விடக் கூடாது. மாமியார்க்குத் தெரியாமல் தினமும் ஒரு சொட்டுக் கலந்து விடு அவள் சாப்பாட்டில்; பின்னர் பார்; உன் வாழ்வில் இன்பம் செழிக்கும்” என்றார்.

 

 

மருமகளுக்கு ஏக சந்தோஷம்; பாட்டிலை சாமியாரின் கையிலிருந்து பிடுங்காத குறைதான்; விரைவாக வெளியே ஓடினாள். சாமியார் சொன்னார்:

பெண்ணே நில்! நில்! இரண்டு முக்கிய நிபந்தனைகள் உண்டு.

இதில் உள்ள விஷம் உன் மாமியாருக்குத் தெரியாமல் இருப்பதற்காக நீ தினமும் இரண்டு காரியம் செய்ய வேண்டும்:–

  1. காலையில் எழுந்தவுடன் அம்மா! என்று சொல்லி அவள் காலில் விழுந்து நம்ஸ்காரம் செய்து ஆஸீர்வாதம் பெறு!

2இரண்டாவதாக, அம்மா! உங்களுக்கு இன்று என்னம்மா சமைக்க? உங்களுக்குப் பிடித்த கறி, காய், கூட்டு, பலகாரம் சொல்லுங்களம்மா!! என்று அன்போடு கேள்; டி.வி ஸீரியல், சினிமா நடிகைகளை விட நன்றாக நடி; வெற்றி நமதே! ஒன்பதே மாதம்!”

 

பெண்ணும் ஓடினாள்; கன கச்சிதமாக காரியங்களைச் செய்தாள். மாமியாருக்கு முதலில் கொஞ்சம் சம்ஸயம் (DOUBT); ஈதென்னடா; இப்படி அதிசயம்! என்று ஆச்சர்யத்தாள்; ஆனால் நாளடைவில் பழகிப் போயிற்று; நம்பிக்கையும் பிறந்தது.

மாதங்கள் உருண்டோடின; மருமகள் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த கணவனின், மருமகளின் நண்பர்களிடம் எல்லாம் மாமியார் மருமகளைப் புகழ்ந்து தள்ளினாள். இது மெதுவாக மருமகள் காதுக்கும் எட்டியது. அவளுக்கும் அதிசயம்; என்னடா இது, புகார் பட்டியல் போய்,  புகழ்ச்சிப் பட்டியல் வருகிறதே என்று.

 

நாள் தோறும் நமஸ்காரம்; வேளை   தோறும் பிடித்த தளிகை. மாமியாருக்கு ஒரே மகிழ்ச்சி.

அட வீட்டுக்கு வந்த லெட்சுமியே! என் மகனைப் போல அதிர்ஷ்டசாலி உலகில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வந்த மகராசி! என்றெலாம் மாமியார் பகிரங்கமாக, பல்லோர் முன்னிலையில், புகழ்பாடத் துவங்கினாள். ‘நீ ஒரு அழகி; உனக்கு என் மகனை விட்டு வைர நெக்லஸ் வாங்கித் தரச் சொல்லி இருக்கிறேன்’ என்றாள் மாமியார்.

 

மருமகளின் மனதும் இளகத் துவங்கியது; ஓடினாள், ஓடினாள், ஓடினாள் சாமியாரின் ஆஸ்ரமத்துக்கு ஓடினாள்  .

வா, மகளே வா, ” வந்து விட்டாயா; ஏறத்தாழ ஆறு மாதம் ஆகி விட்டது ; இன்னும் மூன்றே மாதம்தான்; பின்னர் மாமியார் தொல்லை என்பதே இல்லை என்றார்.

“இல்லை, குருவே……………………. என்று இழுத்தாள் மருமகள். என் மனச் சாட்சி என்னை உறுத்துகிறது; மாமியார் கொடியவள் அல்லள்; அவளைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை……”

சாமியார் இடை மறித்தார்

“பெண்ணே மருந்தை நிறுத்தி விடாதே; அது தெய்வக் குற்றம்; அபசாரம்; தொடர்ந்து நான் சொன்னபடி செய்; ஒன்பது மாதம் கழித்து வா; பின்னர் உன் குற்ற உணர்வு போகவும், பாபம் தொலையவும் இதை விட சக்தி வாய்ந்த மருந்து தருகிறேன்” என்றார்.

அவளும் வருத்தப் பட்டுக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினாள்; தினசரி நம்ஸ்காரம் செய்து கதையைத் தொடர்ந்தாள்;

ஒன்பது மாதம் போயின.

ஓடினாள்; சாமியார் ஆஸ்ரமத்துக்கு.

குருவே! மிகவும் மனக் கவலை; ஒரு நல்ல ஆத்மாவைக் கொன்று விட்டு நான் உயிர் வாழ விரும்பவில்லை; எனக்கு உடனே இறக்கும் மருந்து கொடுங்கள்; என் மாமியார் இறந்தால் நான் ஒரு கணமும் உயிர் வாழேன்; அவள் ஒரு புனிதவதி” என்று சொல்லி அழுதாள் மருமகள்.

 

சிரித்தார்! சாமியார் சிரித்தார்!!  கூரை அதிரச் சிரித்தார்!!

“பெண்ணே! உன் மாமியார், இன்று போல என்றும் நலமாக இருப்பாள்; நான் அவளுக்கு மருந்து கொடுக்கவில்லை; உனக்குத்தான் மருந்து கொடு த்தேன்; இரண்டு கட்டளைகள் என்ற ரூபத்தில்!

 

மாமியாருக்குக் கொடுத்த பாட்டிலில் இருந்தது வெறும் டானிக்; வைட்டமின் மருந்து!!

உன் மனம் மாறுவதற்கும் அதன் மூலம் மாமியார் மெச்சிய மருமகள் என்று பெயர் கிடைக்கவும் உன்னை தினமும் நமஸ்காரம் செய்ய வைத்து நல்ல உணவு வகைகளைச் சமைக்க வைத்தேன்.

 

பிரச்சனை என்பது வெளியே இல்லை; நம்மிடம்தான் உள்ளது; எந்த ஒரு பிரச்சனைக்கும் உலகி மருந்து உண்டு. அதன் மூலம் பிரச்சனைகளையே வரமாக மாற்ற இயலும்; தீயோரையும் திருத்த இயலும்; இந்தா! பிரஸாதம்! என்று குங்குமம், பழங்களைப் பெண்ணின் கையில் போட்டார்.

“தீர்க்க சுமங்கலி பவஹ” என்று ஆசீர்வதித்தார்.

மருமகளின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வெள்ளம் போலக் கரை புரண்டு ஓடியது.

(தென் ஆப்ரிக்கவில் இருந்து வந்த அங்க ஜ ன் என்ற பேச்சாளர் லண்டனில் ஆற்றிய சொற்பொழிவில் ஆங்கிலத்தில் சொன்ன கதை; தமிழில் பிழிந்தவர்- லண்டன் சுவாமிநாதன் )

 

–சுபம்–

உடனடித் தேவை – தாய் மதம் திரும்புவோருக்கு வரவேற்பு! (Post No.5065)

Written by S NAGARAJAN

 

Date: 1 JUNE 2018

 

Time uploaded in London –  7-50 am  (British Summer Time)

 

Post No. 5065

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

உடனடித் தேவை – தாய் மதம் திரும்புவோருக்கு வரவேற்பு!

 

ச.நாகராஜன்

ஹிந்துக்களின் தொகை இந்தியாவில் குறைந்து கொண்டே போகிறது. மைனாரிட்டிகளான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் தொகை கூடிக் கொண்டே போகிறது.

இஸ்லாமியர்களின் அதிரடி வாசகம்: நாங்கள் எப்போது 51% சதவிகிதம் ஆகிறோமோ அப்போதே 100 சதவிகிதம் ஆகி விடுவோம்.

இதற்கு விளக்கவுரை தேவையில்லை. மாறாவிட்டால் மரணம் என்பது தான் தீர்வு என்ற பாணியில் 51% என்பது 100 % ஆகும் என்பது தெளிவு.

கிறிஸ்தவ போப்போ இந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் நல்ல அறுவடை கிடைக்கும் என்று இந்த ஆயிரமாவது துவக்கத்தில் 2000ஆம் ஆண்டு ஆசியுரை வழங்கி இருக்கிறார்.

மாறாக ஹிந்து மதம் எப்போதும் போல எல்லா மதங்களும் சம்மதம்; வஸுதைவ குடும்பகம் என்ற சகல உலக நலத்திற்காகப் பிரார்த்தித்து வருகிறது.

ஹிந்துக்களின் ஜனத்தொகை குறைவது ஹிந்து மதத்திற்கு ஆபத்து என்பது மட்டுமல்ல; உலக நலனுக்கே ஆபத்து!

ஏனெனில் ஹிந்து மதம் ஒன்றே சகல மதங்களையும் சமமாக பாவிக்கிறது. எப்படி வழிபட்டாலும் இறைவனை அடையலாம் என்பது ஹிந்து மதத்தின் ஆணிவேர் கொள்கை.

ஆகவே தான் ஆர்னால்ட் டாய்ன்பி, “இப்படிப்பட்ட கொள்கை உடைய ஹிந்து மதம் ஒன்றே உலகின் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒளி” என்றார்.

ஆக அந்த மதத்தைத் தேய விடக்கூடாது.

இதற்கு ஒரே வழி.

மத மாற்றத்தைத் தடுக்க வேண்டும்; தாய் மதம் திரும்ப விரும்புவோரை வரவேற்க வேண்டும்.

மத மாற்றம் கீழ்க்கண்டவற்றால் ஏற்படுகிறது:-

 

  • அதிரடி பயமுறுத்தல்; கையில் கத்தி கொண்டு பயமுறுத்தல் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
  • மண்ணாசை – இடம் தருதல்
  • பெண்ணாசை – மணமுடிக்க மதம் மாறுதல்
  • பதவி ஆசை – பெரிய பதவி சுகத்திற்காக மதம் மாறுதல்
  • பண ஆசை – பணத்தைக் காட்டி கும்பல் கும்பலாக மதம் மாறுதல்
  • ஏமாற்றி மாற்றுதல் – கடலோர கிராமங்கள்; எல்லையோர மாநிலங்கள் ஆகியவற்றில் உள்ள மக்களை பல்வேறு ஆசை காட்டி ஏமாற்றி மதம் மாற்றுதல்

இவற்றை நிறுத்த தனது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் (Freedom of Religion Billa) சட்டமாக்கப் பட வேண்டும். மதமாற்றுவதை சட்ட விரோதச் செயலாக ஆக்க வேண்டும்.

இதற்கு பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

குழம்பிய குட்டையில் மீன் பிடித்தல் அல்லது தெளிவான குட்டையைக் குழப்பி விடல் இதுவே எதிர்க்கட்சிகளின் செயல்முறை.

நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா தனித்து என்ன செய்ய முடியும்!

மக்களே இப்போதைய நிலையில் தாய் மதம் திரும்ப தாமே முன்வருவோரை வரவேற்க வேண்டும்.

மதுரையில் மதுரை ஆதீனம் சோமசுந்தரத் தம்பிரான் செய்தது போல சடங்கை எளிதாக்கி புதுப் பெயரைத் தந்து தாய் மதத்திற்கு வரவேற்க வேண்டும்.

மதமாற்றத்திற்காக வெளி நாடுகளிலிருந்து வரும் பணத்தைத் தடுக்க வேண்டும்.

வாடிகனில் ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது; அந்தத் தொகைக்கு மதம் மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதன் அடிப்படையில் ஒரு தலைக்கு  மதம் மாற ஆகும் தொகை இவ்வளவு என்பது கணக்கிடப்பட்டு நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான மதமாற்ற பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.

இந்த விஷயத்தை அருண்ஷோரி மிக அழகுற விளக்கியுள்ளார். (இது பற்றித் தனிக் கட்டுரை தான் எழுத வேண்டும்)

 

ஆக தினசரி ஒரு கலாட்டா, கோஷ்டி கானம், மறியல் போன்றவற்றைத் தூண்டி அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு நாடு துண்டாடப் பட திட்டம் தீட்டும் மதமாற்ற கோஷ்டிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து ‘செக்’ வைக்க வேண்டும்.

தாய் மதம் திரும்புவோரை அனைத்து ஹிந்துக்களும் வரவேற்று, அரவணைத்து அணைத்து உரிய மரியாதை செலுத்தி அவர்களை சகோதர சகோதரிகளாக ஏற்க வேண்டும்.

உலகிற்கே வழி காட்டும் ஹிந்து மதம் அழியாமல் இருக்க இது ஒன்றே வழி!

***

 

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த போது! (Post No.5064)

Written by London Swaminathan 

 

Date: 31 May 2018

 

Time uploaded in London – 20-46

 

Post No. 5064

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த  போது! (Post No.5064)

பழங்கால இந்தியாவில் கடல் வாணிபம் எப்படி நடந்தது என்ற சுவையான தகவல்களை பழைய நூல்கள் தருகின்றன. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் பாண்டிய இளவரசி மீனாட்சியையும் சூர சேனப் பெண்மணி காஞ்சன மாலையையும் தொடர்பு

படுத்திப் பேசுவதைக் காணலாம்; சூரசேனர் என்பது வட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்கள். துவாரகை (குஜராத்) முதல்- மதுரா வரை ( உத்தரப் பிரதேசம்) ஆண்ட இனம்.  இதை புராணம் என்று ஒதுக்கிவிடலாம். பிற்கால நூல்களிலும் இத்தகைய தொடர்பு நீடித்து வந்தது  சமண மத நூல்களில் காணக்கிடக்கிறது.

(தெற்கிலிருந்து வடக்கே போன பிராமணர்களை அந்தந்த தேசத்தின் பெயர் சொல்லி அழைப்பர்; திராவிட தேசத்திலிருந்து சென்ற பிராஹ்மணர்களை திரவிட் (கிரிக்கெட் வீரரின் பெயர் த்ரவிட்) என்றும் பாண்டிய தேசத்திலிருந்து போன பிராஹ்மணர்களை பாண்டே, பாண்ட்யா (குஜராத்தி பிராஹ்மணர்) என்றும், தெலுங்க தேச பிராஹ்மணர்களை ‘தில்லான்’ (த்ரிலிங்க=தெலுங்க தேச) என்றும் அழைப்பர்.

 

ஆவஸ்யகா சூர்ணி என்ற சமண மத நூல் சில சுவையான விஷயங்களைச் சொல்கிறது:-

மதுரை நகரிலிருந்து சௌராஷ்டிரத்துக்கு  வழக்கமான கப்பல் போக்குவரத்து உண்டு; மதுரை மன்னன் பாண்டுசேனனின் (பாண்டிய மன்னன்) இரண்டு மகள்கள் அந்தக் கப்பலில் சௌராஷ்டிரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இடையிலே புயல் வீசி கப்பல் கவிழத் துவங்கியது. உடனே கப்பலைக் காப்பாற்ற எல்லோரும் கந்தனையும் ருத்ரனையும் (சிவன்) பிராத்தித்தார்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது.

 

 

இப்போதைய மதுரையில் கடல் கிடையாது; 60,70 மைல்களுக்கு அப்பால்தான் கடல் உண்டு. கிருஷ்ணர் இருந்த மதுராவிலும் கடல் கிடையாது. ஆக இவர்கள் சொல்லுவது கடல் கொண்ட, இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாகவே இருக்க வேண்டும்; பாண்டு சேனன் என்பது பாண்டிய மன்னனின் திரிபே; மேலும் அவர்கள் முருகனையும் (கந்த) சிவனையும் (ருத்ர) கும்பிட்டது தமிழர்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்குப் புறநானூற்றில் நக்கீரர் பாடிய பாடலே சான்று; ஒரே புற நானூற்றுப் பாடலில் சிவன், முருகன் எல்லோரையும் போற்றுகிறார் நக்கீரர்.

 

இந்த நூல் 16 வகை கடற்காற்றுகளைப் பற்றி பேசுகிறது. அவையாவன

 

1.ப்ராசீன வாத (கீழைக் காற்று)

2.உதீசீன வாத (வாடைக் காற்று)

3.தக்ஷினாத்ய வாத (தென்றல் காற்று)

4.உத்தர பௌரஸ்த்ய ( எதிர்க்காற்று)

5.சத்வசுக (எல்லாத் திசைகளிலும் வீசும் காற்று)

6.தட்சிண பூர்வ துங்கார (தென்கிழக்கில் வீசும் புயல்)

7.அபர தக்ஷிண பீஜாபா (தெ. மே. திசைக் காற்று)

8.அபர பீஜாப (மேலைக் காற்று)

9.அபரோத்தர கர்ஜப (வ.மே. திசைக் காற்று)

10.உத்தர சத்வசுக

11.தக்ஷிண சத்வசுக

12.பூர்வ துங்கார

13.தக்ஷிண பீஜாப

14.பஸ்சிம பீஜாப

  1. பஸ்சிம கர்ஜப
  2. உத்தர கர்ஜப

 

இவ்வளவு வகையான பிரிவினைகள் இருப்பதால் இந்துக்கள் அல்லது பொதுவில் இந்தியர்கள் கடல் வாணிபத்திலும் கப்பல் போக்குவரத்திலும் வேறு எவரையும் சார்ந்து இருக்கவில்லை என்பது வெள்ளிடை மலையென விளங்கும். பதினாறு வகைக் காற்றுகளுக்கு தனிதனி ஸம்ஸ்க்ருதப் பெயர்களைத் தந்துள்ளனர்.

 

இந்தியா ஒரு விவசாய நாடு; பருவக் காற்று மழை நாடு; அதனால்தான் உலக மஹா கவி காளிதாசன் ஆறு பருவ காலங்கள் பற்றி ‘ருது சம்ஹாரம்’ எனும் நூலை இயற்றினான. மேக தூதம் என்னும் காவியத்தில் மத்தியப் பிரதேச உஜ்ஜைனி நகரிலிருந்து இமயமலை வரை பருவக் காற்று அடித்துச் செல்லும் மேகத்தின் காட்சிகளைப் பாடுகிறான். மேலும் சாகுந்தல நாடகத்தில் ஏழு வகை மேகங்கள் பற்றியும் பாடுகிறான்

காளிதாசன் சாகுந்தல நாடகத்தில் வானத்திலுள்ள ஏழு வகைக் காற்று மண்டலங்கள் பற்றியும் பேசுகிறான்.

மனைவியைக் கொன்ற பிராஹ்மணன்!

 

‘குவலய மாலா’ என்னும் நூலில் ஒரு சுவையான சம்பவம் வருகிறது.

குவலய மாலா நூலை உத்யோதண என்பவர் கி.பி.779ல் இயற்றினார்.

ஒரு ஏழைப் பிராஹ்மணன் பிழைப்பு தேடி ஒரு கழைக் கூத்தாடி, பாணர்கள் கூட்டத்தைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் அவன் மனைவி, மகன்களும் வருகின்றனர். ஒரு கிராமத்தில் கழைக் கூத்தாடிகள் கூடாரம் அடித்துத் தங்கி வித்தைகளைச் செய்து காட்டினர். அவன் மனைவியும் ஆசையோடு அதைப் பார்க்க வந்தாள். அவன் ஆத்திர ப்பட்டு அவளைத் தவறாக நினைத்து கொன்று விடுகிறான். பின்னர் ஆத்திரத்தில் அறிவு கெட்டுப் போய்விட்டேனே என்று அழுது புரண்டு தானும் மனைவியின் சிதைத் தீயில் பாய்கிறான்.

 

எல்லோரும் அவனை எரியும் நெருப்பிலிருந்து மீட்டு பண்டிதர் சபைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவன் பாவ  மன்னிப்புப் பரிகாரம் என்ன என்று கேட்ட போது எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி புண்ய தலங்களுக்க்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்கள்; அதோடு அவனிடமுள்ள கொஞ்ச நஞ்சத்தையும் தானம் செய் வேண்டும் என்றனர். (அவனும் அவ்வாறே செய்தான்)

 

இது போன்று கழைக் கூத்தாடிகள் கிராம ,கிராமமாகச் சென்று வியாபாரம் செய்தது முதலிய பல செய்திகள் அக்காலத்தின் போக்குவரத்து வசதிகளைக் காட்டுகின்றது.

 

சுபம்—

ANCIENT HINDU TRAVEL STORIES (Post No.5063)

Written by London Swaminathan 

 

Date: 31 May 2018

 

Time uploaded in London – 16-58

 

Post No. 5063

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

The ‘Kuvalayamaalaa’ written by Udyotana Suri, dated 779 Ce gives several interesting real life stories. In one story, it is said that a Brahmin by name Chandrasoma accompanied a party of acrobats and bards to a village because of utter poverty.

The people has assembled to see the show. Chandrasoma’s wife also came to see it. He suspected his wife’s fidelity and killed her in a rage. After realising that he had done a heinous crime, he started lamenting over his deed and decided to immolate himself in the funeral pyre. But people pulled him out and took him out to the assembly of learned scholars. The majority of the Pandits advised him to quit his home and go on a pilgrimage to various holy places. They asked him to donate all his belongings to Brahmins. After offering oblations to manes he will be freed from punishment.

 

Jain literature also give lot of information about business travel.

 

16 types of Winds

Jain monks and Jain merchants did lot of sea voyages. Jain literature gives very realistic accounts of sea voyages. The Avasyaka churni informs us there were regular sailings from Madurai to Saurashtra (During Sangam Tamil times, South Madurai was on the sea shore; later it was destroyed in a Tsunami). It is mentioned in a story that the ruler of Madurai, Pandusena had two daughters. When they were sailing to Saurashtra, they met a shipwreck during a storm and they offered prayers to Skanda and Rudra.

 

(From Skanda and Siva, we come to know they were Tamil princesses of Pandya Kingdom). The successful termination of a sea voyage depended on favourable wind. The sea wind is divided into sixteen categories, namely:

1.Praaciina vaata (Easterly wind)

  1. Udiiciina vAaata (Northerly wind)
  2. Daakshinaatya vaata (Southerly wind)
  3. Uttarapaurastya (Northerly wind moving against forward movement)
  4. Sattvasuka ( wind blowing in all directions)
  5. Dakshina-Puurva tungaara ( astrmy wind in S E direction)
  6. Apara- Dakshina Bijaapa ( the wind blowing from S.W.)
  7. Apara Biijaapa ( West wind)
  8. Aparottara garjabha (N W Storm)
  9. Uttara sattvaasuka
  10. Dakshina sattvaasuka
  11. Puurvatungaara
  12. Dakshina Bijaapa

14.Paschima Biijaapa

  1. Paschima garjaabha
  2. Uttariyaa Garjaabha

 

All these technical terms show that the merchants had their own jargon of sea travel. A sailor would understand such terms better than  laymen.

 

 

Kalidasa in his famous drama Sakuntala talks about seven types of winds and he was the poet who composed a long poem on Six Seasons (Rtu Samharam). Since India is affected by monsoons the society is weather conscious. Kalidasa composed his famous Meghaduta on the basis of South West monsoon’s progress from the middle of India to the Himalayas. Since he was a resident of Ujjain in Madhya Pradesh he begins the monsoon story from MP instead of Kerala or Andaman Islands where from it enters India.

From my earlier post:

 

Seven types of Atmospheric Layers

Sakuntala drama of Kalidasa has a reference to the different pathways in the heaven (Act 7-5); commentators explain all the seven paths as follows:

“According to Hindu mythology, the heavenly region is divided into Seven Paths, with a particular Vayu/wind is assigned for each.

 

The first of these Vayupathas or vayu margas is identical with the bhuvar loha., or atmospheric region, extending from earth to sun. The wind assigned to this area is AVAHA.

 

The other six make up the Swar loka or heavenly region with which Swarga (paradise) is often identified in the following order:-

The second marga/path is that of the sun; and its wind called PRAVAHA, causes the sun to revolve.

Third path is that of moon and its wind is SAMVAHA impels the moon

Fourth is that of the stars or lunar constellations and its wind is known as UDVAGA; this causes the stars to revolve.

Fifth path is that of the planets and its wind is VIVAHA

Sixth is that of the Saptarishi or Greta Bear Constellation and the Milky Way; its wind PARIVAHA bears along these luminaries.

And the last- seventh- is that of the Dhruva or Pole Star; the pivot or axis of the whole planetary system; its wind is PARAVAHA, causing the revolution of the Pole Star (Dhruva Star).

 

–Subham–

 

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3 (Post No.5062)

Written by S NAGARAJAN

 

Date: 31 MAY 2018

 

Time uploaded in London –  7-52 am  (British Summer Time)

 

Post No. 5062

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 1-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதிமூன்றாம்) கட்டுரை

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3

.நாகராஜன்

திருஷ்டியைப் பற்றி அறிவியல் முத்தாய்ப்பாக என்ன சொல்கிறது என்பதைக் காண்பதற்கு முன்னர் தமிழர் தம் பழக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.

 

கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீய பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள்.

சில பொல்லாத கண்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.

 

மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம்.

 

தொன்று தொட்டு இருந்து வரும் இந்த தமிழர்களின் பழக்கம் பல இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

எடுத்துக் காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும், சமீப கால இலக்கியத்திலிருந்து இங்கு சுட்டிக் காட்டலாம்.

திருஅருட்பாவை அருளிய அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பா, ஆறாம் திருமுறையில் 4225ஆம் பாடல் இந்த கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

 

 

“கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்”

என்ற வரிகள் கற்பூரத்தைப் பயன்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதைக் காணலாம்.

 

இதன் பொருள் : என் கணவராகிய சிவபிரான் என்னிடம் வந்தருளுவாராயின் அவருக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) கழிக்கும் பொருட்டுக் கற்பூரம் கொண்டு வந்து வைப்பீராக என என் செவிலியரிடம் சொன்னேன். அவரது திருவடியின் கீழ்நிலை ஒளியுடைய பூத தத்துவங்களின் நிலையாகும் என்று சொன்னேன். அதனாலோ, வேறு யாது காரணத்தாலோ அவர் வந்திலர்.

 

இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் திருஷ்டி கழிக்கப் பல்வேறு வழிமுறைகள், தாயத்துக்கள் மணிகள் அணிவது ஆகியவற்றைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்; வருகின்றனர்.

 

கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அராபியர்கள் கல், மரம் உள்ளிட்டவற்றால் செய்த தாயத்துகளை பாதுகாப்பிற்காக அணிந்தனர்.

 

பழைய கால ஹீ ப்ரு, எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் அணிந்த தாயத்துகளையும் அவர்கள் அணிந்தனர். ஆனால் இன்றைய நவ நாகரீக காலத்திலோ அவர்கள் ஒரு சிறிய பேப்பரில் பிரார்த்தனை மந்திரம் ஒன்றை எழுதி வைத்துக் கொள்கின்றனர். இது குர் ஆன் வசனமாக இருக்கும். இதை ஒரு வயதான ஆன்மீகப் பெரியார், தான் தேர்ந்தெடுத்த பொருள் ஒன்றில், கறுப்பு மையால் எழுதித் தருவார்.

 

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேச மை பேப்பரில் நன்கு ஆழமாகப் பதிவதால் அந்த மைக்கு மவுசு அதிகம்.

இப்படிப் பட்ட தாயத்துக்களை இடது கையிலோ அல்லது கழுத்திலோ அணிவது பாரம்பரிய பழக்கம்.

 

ஒவ்வொரு நாகரிக மக்களின் தாயத்துக்களை எழுதப் புகுந்தால் அது பெரிய அளவு நூலாக மலரும்.

இனி அறிவியலுக்கு வருவோம்.

உலகம் கண்ட மிகப் பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவர் ராபர்ட் ஓப்பன்ஹீமர். அணுகுண்டைக் கண்டு பிடித்த அவர் அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படுகிறார். அது வெடிப்பதை நேரில் பார்த்து மலைத்தவர்.

 

ஹிந்து மதத் தத்துவத்தின் பால் ஆழ்ந்த மதிப்புக் கொண்ட அவர் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி கீதையின் சுலோகம் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

 

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனத்தை கீதையின் 11வது அத்தியாயம் விளக்குகிறது. அதில் 12வது ஸ்லோகம் “திவி சூர்ய சஹஸ்ரஸ்ய” என்று கூறுகிறது. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் எப்படி இருக்குமோ அதே போல அணுகுண்டி வெடிப்பு இருந்தது என்று மலைத்துக் கூறினார் ஓப்பன்ஹீமர்.

 

ஹிந்து பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் பால் பற்றுக் கொண்டவர் அவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை ஆப்ரஹாம் பயஸ் என்பவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

 

அதில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.

ராபர்ட் ஓப்பன்ஹீமர் ஹிந்துக்களின் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தார்.

அதன் முடிவில் பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார்.

“ஹிந்துக்கள் உப்பை (கடல் உப்பு அல்லது கல் உப்பு, உப்புப் பொடி அல்ல) ஒரு சிறு பாத்திரத்தில் (பழைய கால ஆழாக்கு அல்லது படி) போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர்.

அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் (Negaive Ions) அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.”

லட்சக் கணக்கான நெகடிவ் ஐயான்கள் என்ற சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.

 

ஆக இப்படி உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியே ஹிந்துக்களின் திருஷ்டி கழிப்பை அறிவியல் ரீதியாக ஆமோதித்துப் புகழ்கிறார்.

 

திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் இதைப் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கினால், உங்கள் வீட்டார் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டி வரும்.

என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

சமீபத்தில் மறைந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கின் கடைசி பேப்பர் (ஆய்வுத் தாள்) வெளியாகியுள்ளது. அதில் அவர் மிகவும் சிக்கலான விஷயமான மல்டி வர்ஸ் (Multi Verse) எனப்படும் பல் பிரபஞ்சக் கொள்கையைப் பற்றி எழுதியுள்ளார்.

பிரபஞ்சம் என்பது ஒரு பிரபஞ்சம் மட்டும் அல்ல; ஒவ்வொரு பிரபஞ்சத்தின் மேலாகவும் அடுக்கடுக்காக பிரபஞ்சங்கள் உள்ளன என்பது பல் பிரபஞ்சக் கொள்கையின் தத்துவம்.

 

முதலில் எள்ளி நகையாடப்பட்ட இந்தக் கொள்கைக்கு சமீப காலமாக மதிப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இதை ஆதரித்தவர்களுள் முக்கியமானவர் ஸ்டீபன் ஹாகிங்.இவருடன் இணைந்து இதை ஆராய்ந்த ஹெர்டாக் (Hertog) என்ற விஞ்ஞானி பல பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை ஹோலோகிராபி என்ற உத்தி மூலம் கண்டோம் என்கிறார்.

டபிள்யூ.டன் என்பவர் நத்திங் டைஸ்  (Nothing Dies) என்ற நூலில் அனைவரும் “எங்கேயோ இருந்து கொண்டே இருக்கிறோம்” என்கிறார். அதாவது யாரும் சாவதில்லை; ஒவ்வொரு கண வாழ்க்கையையும் இன்னொரு பிரபஞ்சத்தில் பதிவாகியுள்ளது அப்படியே இருக்கும்!

 

நவீன விஞ்ஞானம் கூறும் இப்போதைய பல் பிரபஞ்சக் கொள்கைப்படி நாம் அனைவருமே வாழும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்ற இந்தக் கொள்கையைக் கூட ஆதரிப்பதாக ஆகி விடும்.

சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வுப் பேப்பரின் கொள்கையை மறுத்து ஹாகிங் செய்தது ஒரு டாய் மாடல் (Toy Model) தான், தீர்க்கமாக இது பற்றி இன்னும் ஆராய வேண்டும் என்று சொல்கின்றனர்.

 

ஆக தனது கடைசி ஆய்வுத் தாளினாலும் கூட மிகவும் பேசப்படுபவராக ஆகி விட்டார் ஸ்டீபன் ஹாகிங்!

***

அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post 5061)

Written by London Swaminathan 

 

Date: 30 May 2018

 

Time uploaded in London – 22-18

 

Post No. 5061

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கடந்த சில கட்டுரைகளில் ரிக் வேத, பாகவத, புத்தமத, சமண மத நூல்களில் உள்ள ‘தண்ணீர் மேல் நடக்கும்’ அதிசயங்களைப் பார்த்தோம். இதே போல பார்ஸி மதத்திலும் ஒரு கதை உண்டு. அதைவிட அதிசயம் என்ன வென்றால் மாமன்னன் அலெக்ஸாண்டரையும் அதிசய புருஷர் ஆக்கிவிட்டனர் கிரேக்க எழுத்தாளர்கள். அலெக்ஸாண்டரும் இப்படிச் சில அதிசயங்கள் செய்ததாக கதை எழுதி (கட்டி) விட்டனர்.

முதலில் பாரஸீக நாட்டில் தோன்றிய பார்ஸி மதத் தலைவர் ஜொராஸ்டர் (ஜராதுஷ்ட்ரா) பற்றிக் காண்போம்.

ஜொராஸ்டர், தனது குடும்பத்துடன் அராக்ஸஸ் நதிக்கரைக்கு வந்தார். வெள்ளத்தில் இறங்கி துணிமணிகள் நனைந்து போனால் எல்லோரும் பார்த்து சிரிப்பாளர்களே என்று தயங்கினார். பின்னர் நீர் மீது நடந்து சென்று அக்கரைக்குப் போய்விட்டார். ஆனால் இக்கதை பன்னிரெண்டாம்  நூற்றாண்டில்தான எழுதப்பட்டது.

 

இதற்கு முன்னுள்ள கீழே குறிப்பிடப்படும் எல்லா கிரேக்க எழுத்தாளர்களும் முதல் இரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தவர்களே.

அர்ரியன் என்பவர் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தில் வாடைக் காற்று வீசும்போது மட்டுமே நீர்வழியைக் கடக்க இயலும் ஆனால் அலெக்ஸாண்டருக்காக திடீரென தென்றல் காற்று  வீசி வழிவிட்டது. இதற்கு தெய்வத் தலையீடே காரணம் என்பார்.

 

ப்ளூடார்ச் என்பாரும் இந்த  வரலாற்றை மீனேந்த்திரன் (மெனாண்டர்) சொல்வதாக எழுதியுள்ளார்

 

சீஸரின் யவனக் கடல் சாகசத்தை விளக்கும்போது அப்பியன் என்ற எழுத்தாளரும் இதைக் குறிப்பிடுவார்.

 

அலெக்ஸாண்டரின் படைகள் நாள் முழுதும் நதிகளைக் கடந்த போதிலும் தண்ணீர் இடுப்பளவே இருந்ததாக ஸ்ட்றாபோ கூறுகிறார்.

 

காலிஸ்தெனிஸ் என்பவர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு அடி மேல் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டருக்காக் கடல் திறந்து வழி ஏற்பட்டதாவும், அத்தோடு நில்லாமல் கடல் அலைகள் மேலும் கீழும் எழுந்து அலெக்ஸாண்டருக்கு வணக்கம் செலுத்தியதாகவும்  கூறுகிறார். இது தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போலத் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்; இயற்கையில் நாள்தோறும்  நடக்கும் நிகச்சிகளை புலவர்கள் இப்படிப் பயன்படுத்துவர். நாம் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ள  வேண்டும்.

ரோமானிய வரலாற்று எழுத்தாளர் ஜோஸபஸ்,  அலெக்ஸாண்டரின் அற்புதத்தை விவரித்து விட்டு அது மோஸஸ் தெய்வீக சக்தியால் செங்கடலைக் கடந்தது போல என்று எழுதியுள்ளார்

 

இறுதியாக அலெக்ஸாண்டர் பற்றி இன்னும் ஒரு சுவையான செய்தியும் உண்டு.

அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னர் , மாறு வேஷத்தில் பாபிலோனில், டேரியஸ் நடத்திய ராஜ விருந்துக்குச் சென்றாராம். அங்கிருந்த ஒரு படைத் தளபதி அவரை அடையாளம் கண்டு மன்னர் டேரியஸிடம் சொன்னவுடன் அலெக்ஸாண்டர்  தப்பித்தோம் பிழைத்தோம்  என்று சிட்டாகப் பறந்து வெளியேறினார். அவரது அதிர்ஷ்டம், அப்போது வாசலில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஒருவருடைய தீவட்டியைப் பிடுங்கிக் கொண்டு வெளிச்சம் போட்டுக்கொண்டே சென்றாராம்.

அலெக்ஸாண்டரின் குதிரை ஒரு ஆற்றைக் கடந்து சென்று எதிர்க் கரையில் முன்காலை வைக்கவும், நதி உருகத் துவங்கியதாகவும் இதனால் குதிரையின் பின்கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும் அலெக்ஸாண்டர் ஒரே தாவாகத் தாவி தரையில் குதித்துத் தப்பிவிட்டதாகவும் கதைகள் சொல்லும்.

 

-சுபம்–

 

 

ALEXANDER ‘PURANA’ AND ZARATHUSHTRA MIRACLE (Post No.5060)

Picture of Zoroaster

Written by London Swaminathan 

 

Date: 30 May 2018

 

Time uploaded in London – 15-27

 

Post No. 5060

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

I have already given the stories of walking on the water and flying through the air from Hindu, Buddhist and Jain sources. There is one more story from the Parsi religion. When we talk about religion, we believe in the miracles done by great saints. But the strange thing about the Greek writers is that they wrote fanciful stories and  interesting stories about Alexander the Great. The stories range from Alexander falling in love with Hindu and other women to walking on the water etc.

Purana= mythology

Here is the story about Z of Persian/Parsi religion (Persia= Modern Iran)

ZARATHUSHTRA , appearing in the Zerdsht Nama, dated 1278 CE has the following anecdote:

ZARATHUSHTRA  having arrived at the banks of River Araxes, found no boat. He worried about his wife and himself exposing themselves semi naked just to cross the river.  There were lot of people watching them. He prayed to the Lord and then they all walked safely on the surface of the water and crossed the river. Since Muslim invaders destroyed most of the Parsi scriptures, we wouldn’t know whether this story is from any ancient book or a later one. The fact that ZARATHUSHTRA  and his family walked on the surface of the water may be due to Indian influence. From Rig Vedic seers to Vasudeva (father of Krishna) we have many stories in Hindu religion about walking on water or rivers obeying the commands of the saints.

Alexander ‘Mahatmyam’ (Great Holy  Story)

Alexander, the hero of much fairy tale, figures in some marvellous affairs with the waters, of which one is the passage of the sea at Pamphylia. Greek Historian Arrian (First century CE) in his Anabasis of Alexander 1-26 says that there is no passage along beach except when the north wind blows; “at that time after strong South wind, rendered his passage easy and quick, not without divine intervention, as he and his men interpreted.”

Greek biographer Plutarch (46-120 CE) in his life of   Alexander refers to the same legend and quotes Menander in connection with it, but Alexander himself made no claim of anything miraculous in the passage.

 

Greek historian Appian (First century CE) also knew the legend and in his Civil Wars mentioned it in connection with an adventure of Caesar’s in the Ionian Sea.

 

Greek geographer Strabo (First century CE) said the army passed in the water for a whole day and the water was up to navel.

 

Greek historian Callisthenes, however, said that sea not only opened for him but even rose and fell in homage. He quoted Eusthatius for his statement. But this statement should not be taken literally but may be looked upon as a rhetorical embellishment to something which was understood more prosaically.

 

Roman historian and hagiographer Josephus (First century CE) gives the event an undeniably miraculous touch. In the Antiquities, he described the Hebrew crossing of the Red Sea (under Moses), he cites this legend in confirmation of that in Exodus, and the sea divided for Alexander, in an offhand way referring to the other historians as his authority.

There is another story about in the Pseudo Callisthenes. When Alexander arrived in Babylon, he himself went in disguise as an ambassador to Darius. He received and entertained him, with a banquet in the evening. During the course of the banquet a Persian Lord recognised Alexander, and informed Darius, Persian King.  Alexander, finding himself discovered, fled from the hall, snatching a torch to light him through darkness. Fortunately, he chanced upon a horse at the door. Now by the might of the gods, Alexander crossed the river, but when he had reached the other side and the fore feet of the horse rested on dry land, the water which had been frozen over suddenly melted, and the hind legs of the horse went down into the river. Alexander however leaped from the horse to land, and the horse was drowned in the river.

 

So all cultures have similar stories, which in course of time, changed into mythology.  When religions had such stories, they were all attributed to help from the gods.  When historical figures appear in such stories some find heroic adventures there and some others say they are nothing but lucky coincidences. These stories make the history interesting to read.

Source: The Indian and Christian Miracles of Walking on the Water, William Norman Brown, 1928

–Subham–