ஐந்திணை ஐம்பது : கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,596

Date uploaded in London –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஐந்திணை ஐம்பது

(மாறன் பொறையனார் இயற்றியது)

காலம் – கி.பி. நான்காம் நூற்றாண்டு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

ச.நாகராஜன்

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 27

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் பாயிரம் 1நூல் 50,

 1. பண்புள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய (பாயிரம்)

 2. ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் தெரியாதவர் (பாயிரம்)

 3. அணிநிற மஞ்ஞை அகல இரங்கி (பாடல் எண் 2)

  4.  மணி நிற மாமலை மேல் (2)

  5.  நமர் சென்ற நாட்டுள் (3)

  6.  நல். லார் மனம் கவரத் தோன்றி (4)

  7. யாரும் இல் நெஞ்னினேம் ஆகி (6)

  8. வானம் பொழியவும் வாரார் கொல் (8)

  9.  நூல் நின்ற பாக! (10)

10.  தேன் நின்ற கானத்து எழில் நோக்கி (10)

11.  காவல் இயற்கை ஒழிந்தேம் (12)

 12. பொன் விளையும் பாக்கம் எம் இடம் (12_

 13. மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட! (17)

 14. என்னாவாள் என்னும் என் நெஞ்சு (19)

 15. வியலூரன் வாய்மொழியைத் தேற எமக்குரைப்பாய் நீ (21)

16. அறிவு அயர்ந்து (22)

17. அறிவது அறியும் அறிவினார் கேண்மை (23)

18.  அழல் அவிழ் தாமரை ஆய் வயலூரன் (25)

 19.  நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல் (27)

 20. வெண்மரல் போல திரிந்து (27)

 21. ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு (28)

 22.  வல்லென்று என் நெஞ்சம் (28)

 28.  ஒல்லேன் ஒலி புனல் (29)

 29. தென்றல் வளியெறியின் மெய்யிற்கு இனிதாம் (30)

 30.  ஊடி இருப்பினும் ஊரன் நறுமேனி கூடால் இனிதாம் எமக்கு (30)

31. உதிரம் துவரிய வேங்கை உகிர் போல் (31)

 32. இன்பம் பயந்த இளவேனில் (31)

33. பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளி (33)

34. பால் போலும் ஆய்ந்த மொழியினாள் (33)

35. காதலன் பின் போதல் வல்லவோ மாதர் நடை (37)

36. காதலர் உள்ளம் படர்ந்த நெறி (38)

37. ஆழியால் காணோமா யாம் (43)

38. ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம் (46)

39. எக்கர் இடுமணல் மேல் ஓதம் தரவந்த நித்திலம்

   நின்றிமைக்கும் (48)

40. புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடல் தண் சேர்ப்பன் (49)

41. மணி அரவம் என்றெழுந்து போந்தேன் (50)

42. உள்ளுருகு நெஞ்சினேன் ஆய் (50)

***

Rare Pictures from Sri Lanka- Part 2 (Post 12,595)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,595

Date uploaded in London – –  –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

 In the following pictures we see from Tea Plucking to Tea boxing and exporting. These are from 100 year old book by Henry W Cave

xxxxx

Tags — Rare pictures, Sri Lanka, Part 2, Tea plucking, Henry W Cave

New புது Tamil தமிழ்  Lessons பாடங்கள்  – பகுதி 1-Part 1 (Post No.12,594)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,594

Date uploaded in London – –  –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

E mail to me

A J <

To:Santhanam Swaminathan

Sun, Oct 15 at 7:15 PM

Namaskāram sir, please start a series on verbal roots in Tamizh and the upasarga and pratyaya that exist in Tamizh. Also explaining the words in Tamizh formed by those verbal roots. Please do it sir. Unfortunately very few books exist which deal with those topics and all of them are in Tamizh which makes it very difficult for people who cannot read the Tamizh script but are interested in learning them. We very much miss your sessions you took in October 2020. The first thing I checked in the mornings of 2020 was your page dealing with Tamizh words. Please start this. 

🙏🙏🙏🙏🙏

xxxxx

In the last session we saw over 40 lessons. Now I have ben receiving requests to start the lessons again. The reason being no one teaches in four ways. They treat everyone as a Tamil speaking family member and leave many things without explaining.

If some one teaches “I am going home” and translates it as

Naan நான் (I) Veettukku வீட்டுக்கு  (House to) Poykkondu போய்க்கொண்டு Irukkiren இருக்கிறேன் (going) then they have to explain it.

1.Sentence construction is different from English sentence

2. Home is translated as “to home”; strictly speaking “Home to” is there in Tamil. The case suffix “To”  comes after house or home.

3. Am is missing in Tamil, because the present tense end part shows it is First Person Present Tense “Kiren” in Tamil

4. They miss one more point; As a teacher I will explain Going is a compound verb with Kondu= ing.

All these things should be explained to a foreign student.

Reading = Padiththuk Kondu படித்துக் கொண்டு

Writing= Ezuthik Kondu  எழுதிக் கொண்டு

Coming= Vanthu Kondu வந்து கொண்டு

Eating = Sappittuk Kondu சாப்பிட்டுக் கொண்டு

So “ING= KONDU”. கொண்டு PRESENTCONTINUOUS

Xxx

Now let us study case suffix

Tamils and Sanskrit speakers have 8 same case suffixes in the same order. That shows both languages came from the same source. (Usage may be slightly different; but let us not discuss Sanskrit usage here)

First case is same (nominal)

Fourth case is called Dative case

If you want to say To Rama in Tamil you have to say Rama To

To= UKKU உ க்கு

Rama “nukku” = To Rama (Raman + ukku) ராமன்+ உக்கு = ராமனுக்கு  (ன் +உ =னு )

Krishnana “nukku “= To Krishna (Krishnan + ukku) கிருஷ்ணனுக்கு

Seethaa “vukku “= To Sita (sita +v+ ukku) சீதா+வ் +உக்கு = சீதாவுக்கு

Kazuthai “kku” = To Donkey (Kazuthai + kku) கழுதை +க்கு = கழு தை+க்கு

Santhai “kku” = to Market(Santhai+kku) சந்தை+ க்கு

Singaththukku = To Lion (Singha (m) +ththukku சிங்கம் – சிங்கத்துக்கு

Kangalukku = To the eyes (Kangal + ukku)

கண்கள் +உக்கு = கண்களுக்கு

Now I will explain one by one.

First I said in Tamil “Ukku = to” உக்கு comes after Rama, Krishna, Sita, Donkey, Lion.

Second thing is if Tamil has a dotted consonant at the end—Rama+n, Krishna+n, Kanga+l, then it joins smoothly with N or L.

The result is Ramanukku, Krishnanukku, Kangalukku. ராமனுக்கு, கிருஷ்ணனுக்கு,  கண்களுக்கு

But with AA ஆ sounding words the rule is different;

You cant say Seethaa+ kku, (To Sita) சீதாக்கு X wrong

You cant say Kamala+kku கமலாக்கு X wrong

You have to insert V and say Vukku. வுக்கு correct

The result is Seethaa+V+ukku சீதாவுக்கு correct

To Kamala  — Kamalaa+V+ ukku கமலாவுக்கு  correct

Xxx

Now if the noun ends in I , E , sound, then you join “Ikku”க்கு

Kazuthai “kku” = To Donkey (Kazuthai + kku) கழுதை + க்கு =  கழுதைக்கு

Santhai “kku” = to Market(Santhai+kku) சந்தை+ க்கு =சந்தைக்கு

Xxx

All foreign students will write

Singamukku (to lion) சிங்கமுக்கு X Wrong

Padamukku (to picture)படமுக்கு X Wrong

But the Tamil learning  students invariably write Singamukku /Wrong

Padamukku, that is wrong.

All ‘AM’ அம் ending words such as Padam(Picture), Singham (lion) will be changed as

அத்து+க்கு

பட+த்து+க்கு =படத்துக்கு to the picture

சிங்க+த்து+க்கு = சிங்கத்துக்கு to the lion

அம்  = குடம் pot, இடம் place or seat மடம்Mutt , விமானம் Airplane

குடத்துக்கு Kudaththukku – to the  pot

இடத்துக்கு idaththukku – to the place, to the seat

மடத்துக்கு Madaththukku – to the Mutt/AShram

விமானத்துக்கு Vimaanaththukku – to the plane

xxx

We will look at more case suffixes later

Case வேற்றுமை suffixes உருபுகள் :

To (Raman/John/Mary/India) ராமனுக்கு

Of (Raman/Kannan/Mary/John) ராமனுடைய

From(London/Paris/Madras/Colombo) ராமனிடமிருந்து

In/At (London/Raman/John/Newyork) ராமனிடத்தில்

With (Raman/John/Mary/Krishna) ராமனுடன் , ராமனோடு

Me/Him/Her(accusative) ராமனை என்னை, அவனை, அவளை

To be continued……

 tags- New Tamil   Lessons ,Part 1 ,புது தமிழ் பாடங்கள்  ,பகுதி 1

தெஹிவளை விஷ்ணு: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற- 29 (Post.12,593)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,593

Date uploaded in London – –  –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Tags– இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 29

59.தெஹிவளை விஷ்ணு ஆலயம், கொழும்பு

கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள முக்கிய இந்து சமயக் கோவில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா மஹாவிஷ்ணு மூர்த்தி கோவில் ஆகும். இந்தக் கோவிலின் பின்னணியில் சுவையான வரலாறு ஒன்று உள்ளது.

டச்சுக்கார (HOLLAND)ஆட்சியின்போது கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வைணவ பக்தருக்கு கனவு ஒன்று வந்தது  அவர் அப்பணியில் சூப்பர்வைசர் ஆக இருந்தவர். விஷ்ணுவைக் கும்பிடும் இடத்தைத் தேடும்படி அவர்க்கு கனவில் கட்டளை பிறந்தது. அவரும் அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் ஏதேனும் வைணவ சின்னங்கள் இருக்குமோ என்று தேடிப்பார்த்தார் . மொத்தத்தில் ஏமாற்றமே மிஞ்சியது; மீண்டும் கனவு வந்தது . அதே உத்தரவு. சரி, இந்த முறை வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் விக்ரமாதித்த மன்னன் போல முயற்சியைத் தொடர்ந்தார். நல்லவேளை இந்த முறை வேதாளம் முருங்கை மரத்தில் ஏறவில்லை. ஒரு அற்புதக் காட்சியைக் கண்டார். ஒரு பசு மாடு அவர்க்கு முன்னர் நடந்து சென்று வழிகாட்டியது திடீரென்று அது ஒரு பாம்புப் புற்றின் மீது நின்று பாலைச் சொரிந்தது . அதிசயித்துப்போன அவர் அந்த இடத்தில் தேடியபோது  ஒரு விஷ்ணு கோவிலின் இடிபாடுகளைக் கண்டார்..

அந்த இடத்தில் விஷ்ணுவுக்குப் பிரியமான துளசிச் செடிகளும் செழித்து வளர்ந்தன ; அவர் கோவில் கட்ட முயன்றபோது பலரும் கைகொடுத்து உதவினார்கள் அங்கு எழுந்ததுதான் தெஹிவளை நெடுமால் விஷ்ணு ஆலயம். அங்கே விஷ்ணுவை வழிபடத்துவங்கினர். பிள்ளை வரம் வேண்டிப் பலரும் வலம் வந்தனர்

அந்தக் காலத்தில் ஆறுமுகம் என்பவருக்கு ஒரு மகன் பிறந்தான். நீண்டகாலம் இறைவனை வேண்டிப் பெற்ற மகனை இறைவன் பணியில் ஈடுபடுத்த ஆசை கொண்டார். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல ஒரு குருவும் வந்து சேர்ந்தார். ஆறுமுகம் மகனுக்கு அவர் தீரன் என்று நாமகரணம் செய்தார்.. அவனும் காலப்போக்கில் கடவுள் நூல்கள்  அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவுடன் தீரன் சுவாமி என்று அழைக்கப்பட்டார். தென் இந்தியாவுக்குச் சென்று பல இடங்களில் யாத்திரை செய்யும்போது ஒரு வேல் கிடைத்தது. அதை தெஹிவலைக்குக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். வேலை வணங்குவதே நமக்கு வேலை என்று மகா கவி பாரதியார் பாடியது போல வேலை வணங்கினார்.

அந்த வேலை இன்றும் காணலாம். அதை ரத்தத்தில் ஏற்றி கொழும்பு நகர் வரை பவனியும் வந் தார். .

இதற்குப்பின்னர் 1971ம் ஆண்டில் புத்துணர்ச்சி பிறந்தது நிறைய சந்நிதிகள் எழுந்தன. 1975ம் ஆண்டில் கண்ணன் பிறந்த கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது  மோ கன்  என்ற வணிகர் ஒருவர் கோவில் நிர்வாகிகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அறிமுகப் படுத்தினார். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருப்பதி- திருமலை தேவஸ்தானமும் விக்ரகங்களை அனுப்பி உதவினர்  1983 ஐனவரி முதல் தேதியில் வேங்கடேச  பெருமாள் -பத்மாவதி தாயார் கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ தேவி , பூ தேவி  சகிதம் நின்று காட்சி தருகிறார் .

தென்னந்தோப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தை ஈழத்துத் திருப்பதி என்று பக்தர்கள் போற்றினார்கள். ருக்மிணி சத்யபாமா உடனுறை கிருஷ்ணர் , விஷ்ணு பாதம், பள்ளி கொண்ட பெருமாள், , சனைச்சரன் , நாக தம்பிரான் , பிள்ளையார், வேல் சந்நிதிகள் பக்தர் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது .

மேல் விவரம் வேண்டுவோர் 1979ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் பெறலாம் .

Xxxx

60. இலங்கையில் அழிந்துபோன விஷ்ணு கோவில்கள்

சோழர்கள்  இலங்கையை ஆண்ட காலத்தில் (1017-1070) இந்துக்களுக்காக பல சிவன் கோவில்களையும், விஷ்ணு கோவில்களையும் கட்டினார்கள். அவர்கள் பொலன்னறுவையில், புலஸ்திபுரம் என்ற இடத்திலிருந்து ஆட்சி புரிந்தனர். அந்த ஊருக்கு ஜனநாத மங்கலம் என்ற புதுப்பெயரையும் சூட்டினார்கள். அங்கே தோண்டி எடுக்கப்பட்ட விஷ்ணு சிலை தொல்பொருட்  துறையினரின் பாதுகாப்பில் உள்ளது .

1901ம் ஆண்டிலிருந்து தொல்பொருட் துறை கமிஷனர் வெளியிட்டு வரும் ஆண்டு அறிக்கைகளில் பல அரிய விஷயங்கள் கிடைக்கின்றன. ஆறு விஷ்ணு ஆலயங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்திருக்கின்றன.

வடக்கு நுழைவாயிலில் இருந்த கோவில்

ஜனநாதபுரத்தின் வடக்கு வாசலில் இடிந்த சிவன் கோவில்,  விநாயகர் கோவில்கள் உள்ளன . 1886-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு சிலை இடிந்த கோவிலில் பீடத்தில் நிற்கிறது. அர்த்த மண்டபம், மஹா மண்டபம் முதியன கருங்கற்களால்  கட்டப்பட்டிருந்ததும் தெரிகிறது 1907ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணுவின் சிலை மூன்றேகால் அடி உயரம் உடையது.

அதற்கு முன்னர் 1887ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்சசியில் விநாயகர், சுப்பிரமணியர், ஈஸ்வரன் முதலிய மூர்த்திகள் கிடைத்தன.

1902- ஆம் ஆண்டில் நத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சிவ தேவாலய எண் -4 க்கு எதிரே கண்டுபிடிக்கப்பட்ட 3 அடி 9 அங்குல உயர விஷ்ணு சிலை பற்றிய தகவல் கிடைக்கிறது. அங்கும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் இருந்தன.

மிகப்பெரிய விஷ்ணு ஆலயத்தின் தகவல்கள் 1913-ம் ஆண்டு அறிக்கையில் கிடைக்கின்றன.  இந்த ஆய்வு 1908ம் ஆண்டில் நடந்தது இதுதான் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம்.. மண்டபங்களின் அஸ்திவாரத்தை அளவு எடுத்தபொழுது இது தெரிய வந்தது.

சிவ தேவாலய- 6 என்று Report ரிப்போர்ட் கூறும் இடத்தில் விஷ்ணுவுக்கும் கோவில் இருந்தது. இங்கு கிடத்த விஷ்ணு ஸ்ரீ தேவி , பூதேவி ஆகியோருடன் நிற்கிறார். ஏனைய இடங்களில் கிடைத்த விக்ரகங்களில் அவர் மட்டும் சங்கு சக்கரத்துடன் நிற்கிறார் .

Picture from Dehivala Vishnu Temple

இலங்கையில் சிவன் கோவில்கள் பற்றி நிறைய புஸ்தகங்கள் பேசுகின்றன. ஆனால் பெருமாள் கோவில்கள் பற்றி அதிக விவரம் கிடைப்பதில்லை.

தொடரும்……………………………

Tags- தெஹிவளை,  நெடுமால் , விஷ்ணு ஆலயம், கொழும்பு, இலங்கை, 108 ,  Part 29 , வேங்கடேசப் பெருமாள்

வியாஸர் யார்? (Post No.12,592)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,592

Date uploaded in London –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

வியாஸர் யார்? 

ச.நாகராஜன்

வியாஸரே பிரம்மாவிஷ்ணுசிவன்!

அசதுர்வதனோ ப்ரஹ்மா த்விபாஹுரபரோ ஹரி: |

அபாலலோசன: சம்புர் பகவான் பாதராயண: ||

புனிதரான வியாஸ மஹரிஷி பிரம்மாவே தான் ஆனால் அவருக்கு நான்கு முகங்கள் இல்லை.

அவர் விஷ்ணுவே தான். ஆனால் அவருக்கு இரண்டு கைகள் தான் உண்டு.

அவர் சிவனே தான். ஆனால் அவருக்கு மூன்றாவது கண் கிடையாது.

ஆக வியாஸர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று இப்படி போற்றப்படுகிறார்.

நிரந்தரமான உடலைக் கொண்டவர் யார்?

அசலா கமலா கஸ்ய கஸ்ய மித்ரம் மஹீபதி: |

சரீரம் ச ஸ்திரம் கஸ்ய கஸ்ய வஷ்யா வராங்கனா ||

எவருடைய செழிப்பான வளம் நிரந்தரமானது?

யாருடைய நண்பன் அரசன்?

எவருடைய உடல் நிரந்தரமானது?

வேசியின் காதலைக் கொண்டவர் யார்?

விடை இது தான்; செல்வம் வரும் போகும். எவருக்கும் அது நிரந்தரமல்ல!

அரசனுடன் பழகுபவர் குளிர்காலத்தில் நெருப்பில் குளிர் காய்பவர் போல விலகாமலும் கிட்ட நெருங்காமலும் இருக்க வேண்டும்.

அரசனுக்கு யார் தான் நண்பர்? ஒருவருமில்லை!

யாருக்கு உடல் நிரந்தரம். பிறந்தவர் இறக்க வேண்டும். இது நியதி; விதி.

காசுக்கு உடலை விற்கும் வேசி காதலிப்பது போலப் பேசினாலும் அவளது காதலைக் கொண்டவர் யார்? யாருமில்லை!

எட்டு சித்திகள்

அணிமா மஹிமா சைவ லகிமா கரிமா ததா |

ப்ராப்தி: ப்ராகாம்யமீஷித்வம் வசிஷ்த்வம் சாஷ்ட சித்தய: ||

யோகிகள் அடையும் சித்திகள் எட்டு.

அவையானவன:

அணிமா – அணுவைப் போல மிகச் சிறியதாக ஆதல்

மஹிமா – மலையை விடப் பெரியதாக ஆதல்

லகிமா – காற்றைப் போல லேசாக ஆதல்

கரிமா – மலை, வாயு போன்ற எதாலும் அசைக்க முடியாதபடி கனமாக ஆதல்

ப்ராப்தி – அனைத்தையும் தன்வயப்படுத்தல், மனதில் நினைத்த அனைத்தையும் அடைதல், பெறுதல்

ப்ராகாம்யம் – தனது உடலை விட்டு இன்னொரு உடலில் புகுதல் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்

ஈசத்வம் – பிரம்மா போன்ற தேவர்களிடத்திலும் கூட தனது ஆணையைச் செலுத்தி அவர்களைக் கட்டுப்படுத்தல்

வசித்வம் – அனைத்தையும் வசப்படுத்தல்

இவையே அஷ்டமாசித்திகள் – எட்டு சித்திகள் எனப்படும்!

படைத்தவனின் மூன்று மாபெரும் தவறுகள்!

நம்மைப் படைத்தவன் மூன்று மாபெரும் தவறுகளைச் செய்து விட்டான்.

அவை என்னென்ன?

இந்த ஸ்லோகம் சொல்கிறது:

அத்யல்பசம்பத: சந்த: புமானிஷ்டஸ்ச துர்குலே |

லக்ஷ்மீரனபிஜாதஸ்ய வேதஸ: ஸ்வலிதத்ரயம் ||

படைத்தவனின் மூன்று தவறுகள்:-

1) அருமையான மனிதர்கள் செல்வமின்றி ஏழ்மையில் இருப்பது.

2) தாழ்ந்தகுலத்தில் பிறந்தாலும் அருமையான மனிதர்களாய் இருப்பது.

3) மோசமான கெட்டவர்களிடம் ஏராளமான பணம் இருப்பது.

தனது இடத்தில் இருப்பதே பலம்!

ஒருவன் தனது சொந்த இடத்தில், சொந்த நாட்டில் இருப்பதே அவனுக்கு பலம். இல்லை என்றால் என்ன ஆகும்?

இதோ ஸ்லோகத்தைப் பார்ப்போம்:

அதேஷஸ்யோ ஹி ரிபுணா ஸ்வல்பகேநாபி ஹன்யதே |

ப்ராஹோல்ப்யானபி ஜலே கஜேந்த்ரமபி கர்ஷதி ||

ஒருவன் தனது சொந்த இடத்தில் இல்லையெனில் சிறிய எதிரியால் கூட வீழ்த்தப்படுவான். முதலை ஒன்று மிகச் சிறியதாக இருந்தாலும் கூட ஜலத்தில் இருக்கும் போது யானைகளின் அரசனான கஜேந்திரனைக் கூட இழுத்துச் சென்று விடும்.

அஞ்ஞானமே வாழ்க்கையில் வியாதி

அஞ்ஞானமிஹ நிதானம் ப்ராப்யூபம் ஜனனமேவ பவரோகே |

பரிபாக: சம்சரணம் பைஷஜ்யம் நைஷ்டிகீ சாந்தி : ||

உலக வாழ்க்கையின் வியாதிக்கான முதல் காரணம் அஞ்ஞானமே.

அதனுடைய முதல் அறிகுறி இந்த உலகில் பிறப்பது – ஜனனம் தான்!

உலகியல் வாழ்க்கை அதன் அபிவிருத்தியாகும்.

இதற்கான பரிகாரம் அல்லது தீர்வு நிரந்தரமான சாந்தி தான்!

***

Rare Pictures of Sri Lanka from 100 Year Old Book-1 (Post No.12,591)


Picture of Lanka Tilake Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,591

Date uploaded in London – –  –  15 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I am posting some pictures from 1908 year od book about Sri Lanka

Title of the book- The Book of Ceylon

Author – Henry W Cave

Year 1908

Hundreds of black and white pictures are in the book; but most of them are about gardens and plants. I am producing pictures of men and buildings only.

to be continued………………………..

Hinduism Crossword Puzzle15-10-2023 (Post No.12,590)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,590

Date uploaded in London – –  –  15 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1   2  3  4  5 
               
               
6     7        
               
  8            
      9        
               
10              
    11         12 

ACROSS

1.King who thrashed Ravana and jailed him for years

6.Voice from the sky

8. Skanda/Muruga’s abode near Kumbakonam

9.Ragle in Rigveda; Gold or Strong winged

10.His discussion with his son Svetaketu is popular in Changogya Upanishad

11.Hymn on Earth in Atharvana Veda

xxx

DOWN

1.Vatsyayana’s most famous book

2. Place/ Hill where Hanuman was born

3.Gem in Sanskrit

4.King of Ayodhya where Nala served as cook and chariteer

5. Loan Collector who was sent by Viswamitra to Harischandra

7.Nightless; no master above him (Vishnu);  continuous, uninterrupted

12.Rudra Hymn’s proper name in Yajur Veda ⇡ 

K1ARTA2VIR3YAR4JUN5A
A   N  A  I  AA
M   J  T  T  KR
A6KASAVA7NI U  SD
S   N NA  P  AU
U 87WAMIMALAI TR
T   T S9UPARNARA
R   R H   N  ET
A10RUNI A   A  YA
    B11HUMISUKTAS12 

Answers :

ACROSS

1.Kartavirya Arjuna; 6.Akasavani ;8.Swamimalai; 9.Suparna ; 10.Aruni ; 11.Bhumisukta

DOWN

1.Kamasutra ; 2. Anjananatri ; 3.Ratnam; 4.Rituparna ; 5. Nakshatreya ;

7.Anisha; 12.Satarudriya  

–subham–

திமிலைத் தீவு விஷ்ணு, வல்லிபுர ஆழ்வார் கோவில்கள் – Part 28 (Post No.12,589)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,589

Date uploaded in London – –  –  15 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 28

57.வல்லிபுர ஆழ்வார் கோவில்

இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறையிலிருந்து  4 கிலோமீட்டர் தொலைவில் வல்லிபுரம் கிராமம் இருக்கிறது . இங்கு  புகழ்மிகு வல்லிபுர ஆழ்வார் கோவில், எழில்மிகு கோபுரத்துடன் காட்சி தருகிறது .

முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் BULLET POINTS

இலங்கை இந்துக்களிடையே உள்ள வினோத விஷயம் மூர்த்திக்குப் பதிலாக அவரது ஆயுதத்தை வைத்து வழிபடுவதாகும் . யாழ்ப்பாண நல்லூர் கந்த சாமி கோவிலில் முருகனுக்குப் பாதிலாக அவரது ஆயுதமான வேல், மூலஸ்தானத்தில் வழிபடப்படுகிறது . அதே போல வல்லிபுரத்தில் திருமாலின் சுதர்சன சக்கரமே மூலஸ்தானத்தில் வழிபட ப்படுகிறது.

இரண்டாவது விநோதம், பிள்ளையாருக்குப் பூஜை செய்த பின்னரே வல்லிபுர ஆழ்வாருக்கு பூஜை நடைபெறும். விநாயகர் வழிபாட்டை பெளத்த மதத்திலும் கூடக் காணலாம். ஆயினும் தமிழ்நாட்டில் தற்கால வைணவக் கோவில்களில்  பிள்ளையார் வழிபாடு அரிது. வல்லிபுரத்திலோ, குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் தான் பெருமாளுக்குப் பூஜை.

இன்னும் ஒரு அரிதான விஷயம், தீபாவளி தினத்தன்று நரகாசுர வதம் விழாவாக அனுஷ்டிக்கப்படுவது ஆகும். தீபாவளிக்கு சமண மதம் வரை பல காரணங்கள் சொல்லப்பட்டு கொண்டாடுகின்றனர். ஆயினும் கிருஷ்ணன் செய்த நரகாசுர வதத்தை  தீபாவளியுடன் தொடர்பு படுத்துவது தமிழ்நாட்டில்தான் பரவலாக இருக்கிறது .

வல்லிபுரம் புகழ் அடைய மற்றோர் காரணம் அங்கே கிடைத்த சிறிய தங்கத் தகட்டில் உள்ள கல்வெட்டு ஆகும். இதில் பிராமி லிபியில் சில வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன . 1936–ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத் தகடு .

பல கோவில்களைப்ப போல இதுவும் இந்தியாவுடன் தொடர்புடைய கோவில்.

ஐந்தாவது அதிசயம் இங்கு விபூதியும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் வைவணக் கோவில்களில் இதைக் காண முடியாது

Xxxx

கொஞ்சம் கிசு, கிசு ; சொந்த புராணம்

(லண்டனுக்கு வந்த ஒரு வைணவ உபன்யாசகரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். காரணம் அங்குள்ள ஹாலில் நடந்த நிகழ்ச்சி. அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஒரு கவரில் பணமும் அன்பளிப்பாகக் கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. உபன்யாசம்/ சொற்பொழிவு முடிந்த பின்னர் முருகன் சந்நிதிக்கு அழைத்துச் சென்றேன்.; அவரும் மறுக்காமல் என்னுடன் வந்தார்.

முருகன் சந்நிதியில் தக்க மரியாதைகளைத் செய்த குருக்கள் , அவர் கையிலும் விபூதியைக் கொடுத்தார். அதை அவர் தமிழ் நாட்டின் திராவிட முரடர்கள்முட்டாள்கள் செய்வதைப்போல கீழே உதறிவிட்டார். குருக்கள்மார்களின் முகங்கள் சிவந்தன . ஆயினும் வைதாரையும் வாழவைப்பவன் முருகன். அவனைத் தமிழிலில்  திட்டினால் கூட அவன் மகிழ்வான் என்று அருணகிரி  பாடியதை  நெஞ்சில் குடிகொண்ட குருக்கள்கள் ஒன்றும் சபிக்கவில்லை. ஆயினும் அவருக்காக எல்லா குருக்கள்களும்  ஒரு கவரில் போட்டுவைத்த பணத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் மனம் ஒப்பவில்லை. நானும் வந்த உபன்யாசகரை காரில் ஏற்றிவிட்டுத் திரும்பினேன்; கார் சிட்டாகப் பறந்தது.

திரும்பிப் பார்த்தேன்; தலைமைக் குருக்கள் கையில் (ENVELOPE ) பண உறையுடன் ஓடிவந்தார்; அவரிடம் சொன்னேன் — கவலைப் படாதீர்கள்; நீங்கள் ஏன் பண முடி ப்பைக் கொடுக்கத்  தயங்கினீர்கள் என்பதை நானும் கவனித்தேன். நீங்கள் செய்த காரியம் முற்றிலும் சரியானதே; எனக்கும் உங்களைப் போலவே வருத்தம் ஏற்பட்டது என்றேன்..

திராவிட அசடுகள் போல பலர் உண்டு.

உலகம் முழுதும் ஹரே கிருஷ்ண (ISKCON) இயக்கத்தைப் பரப்பி, வெள்ளைக்காரர்களையும் குடுமி வைத்துக்கொள்ள வைத்து, உலக நகரங்களில் வெள்ளைக்கார பெண்களை டான்ஸ் ஆட வைத்த பெரியவர் பக்தி வேதாந்த பிரபுபாத ( FOUNDER OF ISKCON) ஆவார் . அவரும் பகவத் கீதை பேருரையில் ஸ்லோகத்துக்கு ஸ்லோகம் சிவபெருமானை வம்புக்கு இழுத்து அவரை டெமி காட் DEMI GOD – குட்டி தேவதை – என்று திட்டுகிறார். ஆக உலகில் இப்படிப் பல அசடுகள் உண்டு.

மதுரையில் ஒரு ஜீயர் உபன்யாசம் செய்தார்; மதுரையிலுள்ள பிரபல தொழில் நிறுவனம்  வைணவர்களால்  நடத்தப்படுவதால் அவருக்கு ராஜ உபசாரம் செய்தனர். அவர் ஒருநாள் உபன்யாசத்தில் சிவபெருமானை வம்புக்கு இழுத்துசிவன் ஜடை நாற்றம் பிடித்தது. அதிலிருந்து புனித கங்கை எப்படிவரும் ? என்று அங்கலாய்த்தார். நுணலும் தன வாயால் கெ டுமென்பது பழமொழி; அவர் உபன்யாசத்தைக்  கேட்கப்போன சைவர்கள் அன்றோடு அவர் இருக்கும் பக்கத்துக்கே செல்லவில்லை . இப்போதும் தமிழ் நாட்டு வைணவக கோவில்களில் அந்தந்த வகை நாமம் போட்டோருக்கு அந்தந்த கோவில்கள் (வடகலையா, தென் கலையா , யூ நாமமா, ஒய் Y நாமமா)  சிறப்பு மரியாதை செய்வதையும் என்னைப்போல விபூதி பூசியோருக்கு வேறுவித, மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டுவதையும் பார்க்கலாம் ).

xxxxx

நிற்க; ஊர் வம்பு, கிசு கிசுக்களை ஒதுக்கிவிட்டு வல்லிபுரம் ஆழ்வாரை தரிசிப்போம். இங்கும் ஒரு அதிசயக் கதை சொல்லப்படுகிறது . நேற்று பொன்னாலை  வரதப்பெருமாள் கோவிலில் விஷ்ணு, கூர்ம அவதாரம்  எடுத்த கதையைக் கண்டோம். வல்லிபுரத்தில் மச்சாவதாரம் எடுத்த கதையைக் காண்போம்.

வல்லி நாச்சியார் என்ற மீனவப் பெண்ணுக்கு நீண்ட காலத்துக்குக் குழந்தையே பிறக்கவில்லை.அவர் வல்லிபுரம் அருகில் கடலில் பயணித்தபோது ஒரு அதிசய மீன் ,பெரிய மீன், துள்ளிக் குதித்தது ; அது அவருடைய மடியில் வந்து விழுந்தது.  அதை அவர் அன்போடு அர வணைக்கவே  அது குழந்தையாகிப் பின்னர்  திருமாலின் ஸுதர்சனமாக மாறியது. அந்த சுதர்சன சக்கரத்தை மேளதாள முழக்கத்துடன் ஏற்றிவந்தனர். பல்லக்குத் தூக்கிகள் ஓய்வெடுப்பதற்காக சற்று நேரம் பல்லக்கினை இறக்கிவைத்தனர் ; மீண்டும் வந்து தூக்க முயன்றபோது  அதைத் தூக்க முடியவில்லை. அந்த ஊரின் மகிமையை உணர்ந்த அவர்கள் அங்கேயே சுதர்சன சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்தனர் . இன்றுவரை உயர்ந்த கோபுரம் கட்டி , முறையான பூஜைகள் விழாக்களுடன் அவரை ஆராதித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெறுகின்றன .

புரட்டாஸி மாதம் பெளர்ணமியில்  தீர்த்த உற்சவத்துடன் 15 நாள் திரு விழா பூர்த்தியாகும்  16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகளும்  நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு விசேஷ நாளாகும். இவ்வாறு பலவிதமான சிறப்புகள் உடைத்து .

இந்த வல்லிபுரம், யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் இருக்கிறது; இங்கு தொண்டை நாட்டின்  மறவர்கள் குடியேறியதால் இந்தப் பெயர் என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர் .

இயற்கை எழிலும், நல்ல கடல் மணலும் நிரம்பிய இந்த ஊர், ஒருகாலத்தில் சிங்கை நகர் என்னும் தலை நகராக விளங்கியது  மேற்கண்ட பல விஷயங்களுக்கு ஆதாரம் வல்லிபுர வைபவம் என்ற தலைப்பில் தட்சிண கைலாச மான்மியம் , தட்சிண கைலாச புராணம் என்ற இரண்டு நூல்களில் இருக்கிறது.

ஆழ்வான் என்பது வைணவத் தொண்டரையும், நம்மை எல்லாம் ஆளும் பெருமாளையும் குறிக்கும்

இந்தக் கோவிலில் விஷ்ணு, விநாயகர், நாகர், நாச்சியார், ஹனுமார், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன . 71 அடி உயர ராஜ கோபுரம் கிருஷ்ண லீலைகளை சித்தரிக்கிறது .

கோவில் பற்றி தற்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் ,

வல்லிபுரம் பதிகம், புலவர் பீதாம்பரம், 1819

வல்லிபுரம் பதிகம், சிவசம்பூ புலவர், 1852-1910

கும்பாபிஷேக மலர், 1977

Xxx

58. மட்டக்களப்பு விஷ்ணு கோவில்கள்

மட்டக்களப்பு வட்டாரத்தில் விஷ்ணு, கிருஷ்ணன் கோவில்கள் அதிகம் இருக்கின்றன . முல்லை நிலம் மலிந்துள்ளதாலும் பாலுக்கும் நெய்யுக்கும் பஞ்சமில்லாத மேய்ச்சல் நிலங்களில் கறவைப் பசுக்கள் நிறைந்திருப்பதாலும் கிருஷ்ணனுக்குக் குறைவின்றி பாலும் வெண்ணெயும் கிடைக்கின்ற்ன கலிங்க மகா மன்னன்/ மாகோன்  1215-1255 இந்தியாவிலிருந்து  வ  து ஆண்டதாலும் அவன் ராமர், கிருஷ்ணர் மீது பக்தி கொண்டவன் என்பதாலும் இங்கே பெருமாள் கோவில்கள் பெருகின..  சில கோவில்கள் ஆண்டுதோறும் கல்யாண உற்ச வத்துக்கு மட்டுமே திறக்கின்றன அப்போது 9 நாட்களுக்கு கண்ணனின் வீரதீரச் செயல்களை வருணிக்கும் கஞ்சன் அம்மானை பாராயணம் நடைபெறும். . ருக்மிணி– கிருஷ்ணர் கல்யாண வைபவத்துடன்  விழாக்கள் நிறைவுபெறும்.

திமிலை  தீவு , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு விஷ்ணு கோவில்கள் , மட்டக்களப்பு திருப்பழுகாமம் – அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில், குருக்கள் மடம் , குருகல்மாதம் ,களுதாவளை கோவில்கள் குறிப்பிடத்தக்கன. திமிலை  தீவு , வந்தாறு மூலை கோவில்களில் நாடகங்கள் வாயிலாக புராண, இதிஹாஸக்  கதைகளை  நடிப்பது குறிப்பிடத்தக்கது .

EVERYONE MUST WATCH THE BEAUTIFUL SCENES , DRAMAS IN FACEBOOK

இதோ திமிலைத் தீவுக் காட்சிகள் (பேஸ்புக்,  Facebook, You Tube யூ ட்யூபில் பொம்மலாட்ட நாடகக் காட்சிகளைக் காணலாம்)

FOLLOWING IS FROM FACEBOOK

“ஈழமணித் திருநாட்டின் கீழ்க்கரையின் பாடும் மீன் பண்ணிசைக்கும் கதிர் நாடாம் மட்டுமாநகரின் செந்தமிழும் சைவமும் சேர்ந்து மணம் பரப்பும் #திமிலைதீவு# எனும் பதிதனிலே விஷ்ணு ஆலயம் எனப் பெயர்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த உற்சவம் தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் .திருவிழா நிகழ்வுகள் யாவும் நாடகபாணியில் இடம்பெற்று 10ம் நாள் ( ருக்மிணி )கல்யாண அமுதுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்

திருவிழா காலங்களின் எம் பெருமாள் வெளி ஊர்வலம் வரும் வேளையில் இவ் பொம்மை ஆட்டங்கள் மிகவும் அழகான முறையில் ஆடப்படும். இப் பொம்மைகளை எமது ஆலயத்தினை சார்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் தாமாகவே வடிவமைத்து திறன்பட நிகழ்த்துவார்கள் இக் கலையானது பல வருடங்களாக திருவிழாக் காலங்களில் எமது ஆலயத்தில் செய்யப்பட்டு வருகின்றது .

முதலாம் நாள் திருவிழா: மாங்கனி பறித்தல்             வேட்டைக்கு செல்லும் கம்சன் தனது சகோதரிக்காக மாங்கனி பறித்து சாபம் பெறுதல்.

 இரண்டாம் நாள் திருவிழா : பூதகி வதம்-  நச்சுப்பால் கொடுத்து கண்ணனைக் கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்ட பூதகியை வதம் செய்தல்..

மூன்றாம் நாள் திருவிழா: மருதுகால் சாய்தல் —  கம்சனின் ஏவலால் கண்ணைக் கொல்ல வந்து மருத மரங்களாய் நின்ற அசுரர்களை ஊர்ந்து அழித்தல்.  ஶ்ரீ கிருஷ்னரின் லீலைகள் யாவும் திருவிழாக் காலங்களில் நாடக பாணியில் நடைபெறுவது எமது ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.

  ·

நான்காம் நாள் திருவிழா: கன்று கொன்று கனிக்கெறிதல் – கண்ணணைக் கொல்ல வந்து கன்றுகளாவும் விளாமரமாகவும் நின்ற அசுரர்களை வதம் செய்தல் .   ·

5ம் நாள் திருவிழா: கூத்தரைக் கொல்லுதல்.             கண்ணனை அழிக்கக் கூத்தாடிகளாய் வந்த அசுரர்களை கூத்தாடியே வதம் செய்தல்

  ·ஆறாம் நாள் திருவிழா: வாணன் யுத்தம் – கண்ணன் தன் எதிரியான வாணனைக் யுத்தம் செய்து மாய்த்தல்

  ·

ஏழாம் நாள் திருவிழா- நரகாசூரன் வதை – அனைத்து உலக உயிர்களையும் தன் கொடுமையால் துன்புறுத்திய நரகாசூரனைப் திருமால் வதம் செய்து அருள்பாலித்தல் –

எட்டாம் நாள் திருவிழா- கம்சன் சம்ஹாரம் – தன்னைக் கொல்வதற்காக சதா சூழ்ச்சிகள் புரிந்த தன் தாய்மாமன் கம்சனைக் கிருஷ்ணர் சம்ஹாரம் செய்தல்

RUKMINI KALYANAM

ஒன்பதாம் நாள் திருவிழா – திருக்கல்யாணச் சடங்கு – ஶ்ரீ கிருஷ்ணர் தன்னைக் காதலித்த மங்கை உருப்பினி (RuminiIயைச் சிறையெடுத்துச் சென்று திருமாங்கல்யதாரணம் செய்தல்.

To be continued……………………………..

Tags-  திமிலைத் தீவு, பொம்மலாட்டம், கஞ்சன்(Kamsan)  அம்மானை , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு,  விஷ்ணு கோவில்கள், Rukmini Kalyanam, மட்டக்களப்பு

ஶ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி (Post No12,588)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,588

Date uploaded in London –  15 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஶ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி

(திருவரங்கத்தமுதனார் அருளியது)

ச.நாகராஜன்

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 8

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் : 88

 1. இராமானுசனென்னைக் காத்தனனே (பாடல் எண்

                      நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளபடி 3913)

 2. இராமானுசனென்றன் சேம வைப்பே (3914)

 3. வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே   

    எப்போதும் வைக்கும் இராமானுனை (3915)

 4. காரேய் கருணை இராமானுச (3917)

 5. கொள்ளக் குறைவற்றிலங்கிக் கொழுந்து

    விட்டோங்கியவன் (3919)

 6. கூட்டும் விதியென்று கூடுங்கொலோ (3921)

 7. இன்பம் தரு பெரு வீடு வந்தெய்திலன்? எண்ணிறந்த துன்பம் 

    தருநிரயம் பல சூழிலென்? (3922)

 8. பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல   

    திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் (3924)

 9. நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலி (3926)

10. படி கொண்ட கீர்த்தி இராமாயணமென்னும் பத்தி வெள்ளம் (3929)

11. இருள் கொண்ட வெந்துயர் மாற்றி (3931)

12. சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற் காமமும்

    என்றிவை நான்கென்பர் (3932)

13. சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் (3936)

14. எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் (3936)

15. அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆளவந்த கற்பகம்

    கற்றவர் காமுறு சீலன் (3945)

16. நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது (3946)

17. தொகையிறந்த பண்டரு வேதங்கள் (3947)

18. பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர் அடியைத்

    தொடரும் (3955)

19. சரணம் அடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை மரணம்

    அடைவித்த மாயவன் (3959)

20. தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் (3960)

21. பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து (3971)

22. பெரியவர் பேசினும் பேதையர் பேசினும் (3979)

23. கலைப்பெருமான் ஒலி மிக்க பாடல் உண்டு

    தன்னுள்ளம் தடித்து (3980)

24. புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் (3984)

25. நுண்ணருங்  கேள்வி நுவன்றுமிலேன் (3984)

26. கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும் (3985)

27. தவந்தரு செல்வம் தகவும் தரும் சலியாப் பிறவிப் பவந்தரும்

   தீவினை பாற்றித் தரும் பரந்தாமமென்னும் திவந்தரும் (3986)

28. பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் (4000)

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post 12,587)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,587

Date uploaded in London – –  –  14 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1கிழக்கு இலங்கையில் உள்ள சிவன் தலம் இயற்கைத் துறைமுகம் ,

 5.பெரிய தத்துவ அறிஞர், 5 இடங்களில் மடங்களை நிறுவினார்

7.பாக்கு மரத்தின் மற்றும் ஒரு பெயர் ,

8.மூன்று அடி என்பதை இப்படியும் சொல்லுவர்.

9.மரத்தை அறுக்க உதவும்அதிகம் பேசினால் நண்பர்கள் நமக்கு  சூட்டும்பெயர் ,

Xxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

 1.கந்த புராணத்தின் சர்ச்சைக்குரிய முதல் அடி.

3.மலைக்கொடி  உடையவன்  ,  

2.பாய்ண்ட் கலீமியர் என்றும் சொல்லுவர் 

4.கழுத்தில் போடலாம் (Go up) , 

4.இந்த நாளில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பகோணம் ஜன சமுத்திரம் ஆகிவிடும்.,

6.மேடைஸ்டேஜ் என்று பொருள்  

1 2 3 
     4
      
5  6  
      
7  8  
9     

விடைகள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1திருகோணமலை , 5.சங்கர 7.கமுகு, 8.கஜம், 9.ரம்பம்

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.திகடசக்கர ;3.மலையத்வஜன் ,  2.கோடிக்கரை, 4.மாலை (Go Up), 4.மாசிமகம்,  6.ரங்கம்

தி1ருகோ2ம3லை
 டி லைமா4
 க் சி
ச5ங்ர6த்
க் ரைங்
க7முகுக8ம்
ர9ம்ம்ன் 

 —-subham—–