நோபல் பரிசை வாங்க மறுத்த நாவல் ஆசிரியர் ஷான் பால் சார்த்ர (Post.9891)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9891

Date uploaded in London –25 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகப் புகழ் பெற்ற பிரஞ்சு மொழி நாவல் ஆசிரியர் , நாடக ஆசிரியர், தத்துவ ஞானி ஷான் பால் சார்த்ர JEAN PAUL SARTRE   1964-ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்  “எழுத்தாளர்களை ஒரு நிறுவனம் போல நடத்துவதை  தான்  ஏற்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.

இருபதாம் நூற்றாண்டின்  தலை சிறந்த சிந்தனையாளர்களில் (THINKER ) ஒருவர்; பெரிய தத்துவ ஞானி (PHILOSOPHER) ; புகழ்பெற்ற புதின எழுத்தாளர் (NOVELIST) ஷான் பால் சார்த்ர,  பாரிஸ் நகரில் பிறந்து அங்கேயே கல்வி கற்றார். வாழ்நாளின் பெரும் பகுதியை பாரிஸ் நகரிலேயே கழித்தார். மாணவப் பருவத்திலேயே சிமோன் த பொவ்வார்  (SIMONE DE BEAUVOIR)  என்ற பெண்ணைச் சந்த்தித்து துணைவராக ஏற்றார் . அவர் இருபதாம் நூற்றாண்டின் பெண்ணிய (FEMINIST WRITER) எழுத்தாளர்களில் முன்னனியில் நின்றவர் ஆவார்.

ஷான் பால் சார்த்ர , பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியர் பணியில் அமர்ந்தார். தத்துவ இயலைக் கற்பிக்கும்போதே எழுத்துத் துறையில் நுழைந்தார். 33 வயதில் நாசியா NAUSEA என்ற நாவலை எழுதி அச்சிட்டார். அதில் தான் நம்பிய புதிய தத்துவக் கருத்தைப் பரப்பினார். அந்தக் கருத்துக்கள் பிற்காலத்தில் ஒரு தத்துவ நூலாகவும் BEING AND NOTHINGNESS  வெளிவந்தது

இரண்டாவது உலகப் போரில் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றினார். ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் ராணுவம் இவரைப் பிடித்தது. ஆனால் அங்கிருந்து தப்பி ஓடினார் . ஜெர்மானிய ஆக்ரமிப்பைக் கண்டித்து எழுதினார். போர் அனுபவத்தால் இவர் அரசியலில் காலடி எடுத்துவைத்தார். இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து, தனது தத்துவ நூல்களில் கம்யூனிச விதைகளை விதைத்தார்; தீவிர இடதுசாரிக் கட்சியைத் துவக்கினார் .

நாவல்கள் எழுதுவதைவிட நாடகம் எழுதுவதில் முனைந்தார். உலக மஹா யுத்தம் முடியும் தருவாயில் அவருடைய நோ எக்சிட்  NO EXIT நாடகம் மேடை ஏறியது மூன்று ஆட்கள் ஒரு அறையில் சிக்கிக் கொள்கின்றனர். போகப்போக அது ஒரு நரக வாழ்வு என்பதை அவர்கள் உணர்கிறார்கள் என்பதே இந்த நாடகத்தின் மையக்  கருத்து.

அரசியல் பற்றியும் தார்மிக நெறிகள் பற்றியும் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை  சுவையான நாடகக் கதைகளிடையே வைத்தார். வாழ்நாள் முழுதும் அரசியல் கருத்துக்களை விடாப்பிடியாக , குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டார். அமெரிக்கா நடத்திய வியட்நாம் போரையும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அல்ஜீரியா நாட்டை பிரான்ஸ் ஆளுவதையும் கண்டித்தார்.

பிறந்த தேதி – ஜனவரி 21, 1905

இறந்த தேதி – ஏப்ரல் 15, 1980

வாழ்ந்த ஆண்டுகள் – 74

எழுதிய நூல்கள் :–

PUBLICATIONS

1938- NAUSEA

1939- INTIMACY

1943- THE FLIES

1943- BEING AND NOTHINGNESS

1944 – NO EXIT

1945 – THE AGE OF REASON

1945 – THE REPRIEVE

1948 – DIRTY HANDS

1959- THE CONDEMNED OF ALTONA

1960 – THE CRITIQUE OF DIALECTICAL MATERIALISM

–SUBHAM—

tags- பிரஞ்சு மொழி ,நாவல் ஆசிரியர் , நாடக ஆசிரியர், தத்துவ ஞானி, ஷான் பால் சார்த்ர, JEAN PAUL SARTRE

உத்வேகமூட்டும் தகவல்கள்! (Post No.9890)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9890

Date uploaded in London – 25 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 4 – 19-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

உத்வேகமூட்டும் தகவல்கள்!

அறிவியல் வளர வளர அற்புதமான செய்திகள் நமக்கு ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகின்றன

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு உலகெங்கும் 90 கோடி ஹெக்டேர் அதாவது 220 கோடி ஏக்கர் நிலத்தை மறுபடி காடாக்க முடியும் என்று கண்டிருக்கிறது. இது மனித குலம் வெளியிடும் கார்பன் நச்சுப் புகையில் மூன்றில் இரண்டு மடங்கை உறிஞ்சி விடும். அதாவது மனித குலம் பிழைத்து, தழைத்து வாழும்! ஜூரிச்சை சேர்ந்த விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு எந்தெந்த பகுதியில் என்னென்ன மரங்களை நடலாம் என்பதையும் பரிந்துரைக்கும்.

உலகெங்குமுள்ள பத்து லட்சத்து நாற்பதினாயிரம் தோட்ட உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து உலகளாவிய விதத்தில்  பசுமைத் தோட்டங்களை அதிகரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் இன்னொரு நற்செய்தியாகும். இதன் மூலம் அருகி வரும் இனங்களான தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் அழிவது தடுக்கப்படுவதோடு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதாகவும் அமையும்.

பசுமையான காடுகளும் தோட்டங்களும் அதிகமாக ஆக, வளி மண்டல மாசு குறையும், தட்பவெப்ப நிலை சீராக அமையும், அத்துடன் நீர் வளம் அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் இவை நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமிப்பதால் ஆண்டு முழுவதும் நன்னீர் கிடைக்கும். வெள்ளப் பெருக்கையும் தடுக்கும்.

நகரில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைவதால் நகரின் உஷ்ணநிலையில் ஒரு டிகிரி செண்டிகிரேட் குறைய வாய்ப்புண்டு. அத்துடன் ஒலி மாசும் குறையும். ஒலி பிரதிபலிப்பது குறைந்து, சுமார் 3 டெசிபல் முதல் 8 டெசிபல் வரை ஓசை குறையும். இதனால் அதிக ஓசையினால் ஏற்படும் உடல் கோளாறுகள் நீங்கும்.

ஆங்காங்கே பூங்காக்களும் தோட்டங்களும் இருப்பதாலும் நகர்ப் புறங்களை ஒட்டிக் காட்டு வளம் ஏற்படுவதாலும் மனதிற்கு இனிமையுடன் கூடிய சுகம் ஏற்படும்; மன அழுத்தம் குறையும். உடலுக்குத் தேவையான ஓய்வு ஏற்படும்;

மனோவியாதிகள் குறையும்.

அத்துடன் நமக்குத் தேவையான கீரைகள், கறிகாய்கள், பழங்கள் ஆகியவையும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். தோட்டங்கள் ஒரு நகரின் ஜீவ நாடி என்றே சொல்லலாம் என்பதால் வீட்டு மாடியில் தோட்டம், வீட்டைச் சுற்றித் தோட்டம் என, வாய்ப்பு உள்ள அனைவரும் இதில் ஈடுபடலாம். உலகெங்கும் பெருகி வரும் ஊக்கமூட்டும் இந்தப் பசுமைக் கலை பரவட்டும்; சுற்றுப்புறம் மாசின்றி ஆரோக்கியமான வாழ்வை அனைவருக்கும் நல்கட்டும்!

***

tags- வீட்டு மாடி, தோட்டம்

PLEASE JOIN US TODAY SUNDAY 25-7-2021

25-7-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON PALANI MURUGAN TEMPLE8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 65 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS-   PUBLICITY25721

November 2019 London Swaminathan Articles; Index 84 (Post No.9889)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9889

Date uploaded in London –24 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

November 2019; Index No.84

Terrorist Columbus,7164;1 November 2019

Mesopotamian and Vedic Medicines,7165;1/11

Swami s crossword 11119;7166

Hindu wonders- Iron Pillars of India, 7170;2/11

Big Treasures in Tibet Kanzur and Tanzur,7175;3/11

Rare Chemistry/ Alchemy/Medicine Books of India, 7178;5/11

Hello Girls, 7179;5/11

Big Guns of India, longest and the largest, 7182;5/11

Swami s crossword 71119;7188

Difference s between Charaka and Susruta, 7189;7/11

Hindu s 12 Medical Apparatusses,7193;8/11

Swami s crossword 101119;7199

Indian Music and Western Music,7203;11/11

Rat Doctor, Rat Detective a Rat Driver, 7207;12/11

Amazons of India, 7210;13/0

Ban Betting and Gambling-Manu,7214,14/11

Lord Krishna’s Story for Prince Charles, 7218;15/11

Water Worship in South America,7219;15/11

Age of Panini and his knowledge about South India,7222,16/11

Please send a doctor and Medicines- Hittite Letter to Egypt,7226;17/11

Great Service to Hinduism through Stamp Collection, 7228;18/11

Swami s crossword 181119;7232

Swami s crossword 191119;7235

Golden Statue and stinking Smell, Jain Story,7236;19/11

Queens and Princesses of Ancient India-part 1;7240;20/1@

Swami s crossword 211119;7243

Queen Anupama inspired famous Delwara Temple, 7248;22/11

Number 10 in Hindu and other Cultures,7252;23/11

Number 10 in Buddha and Judaism and Manu 7255

Let us enter fire before Muslim s touch us – Ranibhai

761; 25/11

Aindra Grammar, Panini and Tolkappiar,7266;26/11

Japanese Shomyo chanting and Hindu Sama Veda, 7268;27/11

Swami s crossword 281119;7273

Good Thought December  2019 calendar , Character quotes,7277;29/11

Bhartruhari Notes -1; 30/117281; November 30,2019

xxxx

TAMIL ARTICLES FROM NOVEMBER 2019

கொலம்பஸ் பற்றிய அதிசயச் செய்திகள் ,7164, நவம்பர் 1, 2019

சுமேரிய மருத்துவமும் அதர்வண வேத கால மருத்துவமும்,7168, 2/11

நியூயார்க்கில் இந்திய அழகி சிலை ஏலம் , 7169,2/11

மாநகரங்களில் அதிசய இரும்புத் தூண்கள், உத்தரங்கள் 7172, 3/11

உலகப் பேரழகி Cleopatra க்ளியோபாட்ரா தற்கொலை செய்துகொண்டாரா?7173, 3/11

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி= த .கு.போ.31119, 7174

ஆஸ்கர் பரிசுக்கு ஏன் அப்பெயர் வந்தது?7177, 4/11

திபெத்தில் பெரிய பொக்கிஷம்- தாஞ்சூர் , காஞ்சூர் ,7178,4/11

லண்டன் எஸ்.ஐ எஸ், நாடக வெள்ளி விழா, 7181, 5/11

பாதரசம் பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம் , 7184,6/11

லண்டலில் ஆண்டுதோறும் நவமார் 5ம் தேதி தீபாவளி, 7185, 6/11

கணவனை எரித்த காரிகை , 7187, 7/11

த.கு.போ.81119, 7191

பிரிட்டனில் பேய் வீடுகள்  பட்டியல் வெளியீடு , லண்டன்

பேய் தோல்வி , 7192, 8/11

இந்தியாவின் அதிசய பீரங்கிகள், 7194, 9/11

சீனாவில் பரம்பரை ஆட்சி , 7196,9/11

எட்னா எரிமலை மீது குண்டு வீச்சு, 7198,10/11

தொல்காப்பியத்தில் எண் 9, 7201, 11/11

ஹோமர், உமர்கய்யாம் ஷேக்ஸ்பியர் , 7202,11/11

அக நானூற்றில் Miss Good Friday மிஸ் குட் ப்ரைடே , Rice Beer ரைஸ் பியர், 7205, 12/11

காக்கா , காக்கா , கண்ணுக்கு மை கொண்டுவா ,7206, 12/11

டாக்டர் எலி  – நோய் கண்டுபிடிக்க உதவி, 7209, 13/11

அமேஜான் அல்லி ராணி கதை- 7212, 14/11

நெல்சன் மண்டேலாவும் வின்னி மண்டேலாவும், 7213,14/11

யானை அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும் . மலைப்

பாம்பு? 7216, 15/11

பாப்பா, பாப்பா கதை கேளு, புறாத் திருடன் கதை கேளு ,7217, 15/11

மநுவை வள்ளுவர் காப்பி அடித்தாரா?, 7221, 16/11

(மநு – பகுதி 45)

மண்டைக்கு கனம் அதிகமானால் நல்லதே !

குழந்தை பேசவில்லையா?டால்பின் சிகிச்சை தரலாமே! , 7125, 17/11

ஜப்பானில் வினோத கோல்ப் தேவதை கோவில், 7229, 18/11

ராக்கெட் தங்க! பேனா தர்ரேன் , 7230, 18/11

த .கு.போ .181119, 7231

தமிழில் எண் 10, 7234,19/11

புற்றுநோய்-அணுகுண்டு-கதிரியக்கம், 7238, 20/11

மன்னர்களை வசப்படுத்திய பேரழகி , 7239, 20/11

ரங்க பதாக, குந்தவை, சொரப்பை, செள்ளை – தமிழ் ராணிகள், 7242, 21/11

டம் டம் குறுக்கெழுத்துப் போட்டி, 211119, 7244, 21/11

இசையில் எண்  10, குளியல் முறை பத்து வகை, 7247,22/11

மைக்கேல் ஜாக்சன், 7249, 22/11

அவன் கண்ட உண்மை, 7246, 22/11

பத்து சந்யாசிகள் பிரிவு, 7251,23/11

இதாலியில் மாபியா வன்முறை, 7253, 23/11

ஆணுக்குப் பிறந்த குழந்தை, 7256, 24/11

கம் கம் கம் குறுக்கெழுத்துப் போட்டி, 7257,24/11

பாதரசம் என்னும் அற்புத உலோகம் ; விண்ணில் பறக்க  7260, 25/11

தமிழ் ரம் ரம் ரம்  குறுக்கெழுத்துப் போட்டி, 7263, 26/11

25 ஜேம்ஸ் பாண்டு படங்கள் பற்றிய சுவையான

விஷயங்கள், 7264, 26/11

உடலில் பாதரச விஷம் ஏறினாள் ஆபத்து, 7265, 26/11

அதிசய ஏரி பைகால், 7269, 27/11

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி271119, 7270

ஜப்பானில் சாம வேதம் , வேத கால இசைக்க கருவிகள், 7272, 28/11

மஹாபாரத நடிகர் சிகரெட் குடிக்கலாமா?7274, 28/11

சுறாமீன் பற்றிய சுவையான செய்திகள், 29/11, 7276

டிசம்பர் மாத 2019 காலண்டர், பாரதி பொன்மொழிகள், 7278, 30/11

தனிமையில் கடல் தாண்டிய வீராங்கனை, 7280, 30 நவம்பர், 2019

மூலிகைக் கேள்வி பதில், 7282,30/11/2019

-subham–

 tags–November 2019, Inde 84, Map of India stamps,

‘உலகம் சுற்ற 80 நாட்கள்’ புகழ் நாவல் ஆசிரியர் ஜுல்ஸ் வெர்ன் (Post No.9888)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9888

Date uploaded in London –24 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்ச் மொழியில் விஞ்ஞான கற்பனைக் கதைகளை எழுதிப் புகழ் பெற்றவர் ஜுல்ஸ் வெர்ன் (JULES VERNE) . இவர்தான் முதலில் துணிகரச் செயல்கள் அடங்கிய அறிவியல் புனைக் கதைகளை எழுதினார். இவருக்குப் பின்னர் எச்.ஜி. வெல்ஸ் , ஆர்தர் கிளார்க், ஐசக் அஸிமோவ் ஆகியோரும் எழுதினர்.

ஜுல்ஸ் வெர்ன் , மேற்கு பிரான்சில் நான்டேஸ் (NANTES) துறைமுக நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். இவரும் பாரிஸ் நகரில் சட்டம் பயிலச் சென்றார். அங்கே அவருடைய மாமா, ஜுல்ஸ் வெர்னை  எழுத்தாளர் பலருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்களில் ஒருவர் புகழ் பெற்ற ஆசிரியர் அலெக்ஸ்சாண்டர் டூமா ஆவார்.

படிக்கும் காலத்திலேயே ஜுல்ஸ் வெர்ன் நாடகங்களை எழுதத் துவங்கினார் . சட்டப் படிப்பிலும் தேறினார். அவருக்கு 22 வயதாகும்போதே அவருடைய ப்ரோக்கன் ஸ்ட்ரா (Broken Straw) என்னும் நாடகம் பாரிஸில் மேடை ஏறியது. பின்னர் அவருடைய சிறுகதைகளும் வெளியாகின.

28 வயதில் ஜுல்ஸ் வெர்ன், ஒரு இளம் வயது விதவையை மணந்து 2 குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்றார் . வாழ்க்கையை நடத்துவற்குத் தேவையான பொருள் ஈட்டுவதற்காக ஸ்டாக் ப்ரோக்கர் (Stock Broker) ஆனார் (பங்குச் சந்தை ). 35 வயதில் அவருடைய முதல் நாவல் வெளியானது. ‘பலூனில் ஐந்து வாரம்’ என்பது அதன் பெயர். அடுத்த ஆண்டிலேயே ‘பூமி உருண்டையின் மையத்துக்குப் பயணமாதல்’ என்ற நூலை வெளியிட்டார். ஸ்டாக் ப்ரோக்கரை விட இந்தப் பணியில் நிறைய பணம் கிடைக்கும் என்று கருதி முழுநேரமும் எழுத்துப் பணியில் இறங்கினார்.

வினோதமான எந்திரங்களில் விசித்திரமான சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் புதினங்களை இவர் எழுதியது பிற்காலத்தில் எச். ஜி. வெல்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களுக்கு புதிய ‘ஐடியா’க்களைக் கொடுத்தது 19ஆம் நூற்றாண்டில் விமானம் முதலியன கண்டுபிடிக்கப்பட்ட தருணத்தில் இவருடைய புதினம் வெளியானது . அந்தக் காலத்தில் எவரும் அறியாத விண்வெளிக்கலம் (Spacecraft) முதலியனவும் இவரது நாவல்களில் பவனி  வந்தன. ‘கடலுக்கடியில் 20000 லீக் ஆழத்தில்’ என்ற நாவலும் எண்பதே ‘நாட்களில் உலக வலம்’ என்ற நாவலும் இவருக்கு மிகவும் புகழைக் கொடுத்தன. இவை சினிமாக்களாகவும் (திரைப்படம்) உருவெடுத்தன. அவற்றில் வரும் நீர்மூழ்கிக்  கப்பல் கேப்டன் நீமோ , பிலியாஸ் ஃபாக் என்ற கதா  பாத்திரங்கள் உலகறிந்த  மனிதர்களாக ஆயினர்.

பிறந்த தேதி – பிப்ரவரி 8, 1828

இறந்த தேதி – மார்ச் 24, 1905

வாழ்ந்த ஆண்டுகள் – 77

PUBICATIONS  எழுதிய கதைகள்

1863- FIVE WEEKS IN A BALLOON

1864- A JOUNEY TO THE CENTRE OF THE EARTH

1865- FROM THE EARTH TO THE MOON

1870- TWENTY THOUSAND LEAGUES UNDER THE SEA

1873 – AROUND THE WORLD IN 80 DAYS

1904- THE MASTER OF THE WORLD

PUBLISHED AFTER HE DIED

1994- PARIS IN THE 20TH CENTURY.

–SUBHAM–

tags- ஜுல்ஸ் வெர்ன் , Jules Verne,

சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள்! (Post No.9887)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9887

Date uploaded in London – 24 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 3 – 18-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள்!

சுற்றுப்புற சூழலைக் காக்க ஏராளமான எளிய வழிகள் உள்ளன.

சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எந்தப் பொருளையும் வேண்டாம் என்று உறுதிபடச் சொல்லும் மன உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்க மாட்டேன் என்ற மன உறுதி இப்பொருள்களைச் சந்தைப் படுத்தலைத் தவிர்க்கும்.குளிர்பானங்கள், நீர், தேநீர், காப்பி ஆகியவற்றைப் பருகுவதற்கு பேப்பரிலான கோப்பைகளைத் தரும் போது அவற்றை வாங்க மறுப்பதும் பருகுவதற்கு தரும் ஸ்டிராக்களைத் தவிர்ப்பதும் எளிய செயல்களானாலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் அரிய வழிகளாகும்.

ஒரு T ஷர்ட்டை உருவாக்கத் தேவையான பருத்தியை வளர்க்க 700 காலன் தண்ணீர் தேவை என்பதை உணர்ந்தால் தேவைக்கு அதிகமானவற்றை வாங்க மாட்டேன் என்ற மனப் பக்குவம் உருவாகும். இது போல தேவைக்கு அதிகமாக நாம் வாங்க விழையும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பார்த்து வாங்க ஆரம்பித்தால் விற்பனைச் சந்தையின் போக்கும் மாறும்; ஒருவரின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் அண்டை அயலாரும், நட்பும், சுற்றமும் உத்வேகமடைந்து இப்படிப்பட்ட பழக்கங்களை மேற்கொள்வர்.

பாக்கிங்கிற்காகப் பயன்படுத்தப்படும் ஏராளமான கார்ட்போர்ட் பாக்ஸ் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க, கூடுமான மட்டில் நமக்குத் தேவையானவற்றை உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்தே வாங்க வேண்டும். எந்தப் பொருளையும் உள்ளூர் உற்பத்தியாளரிடம் வாங்குவது செலவையும் குறைக்கும், உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும், சுற்றுப் புறச் சூழலையும் மேம்படுத்தும்.

உடலுக்கானாலும் சரி, தோட்டத்திற்கானாலும் சரி, வயலுக்கானாலும் சரி கெமிக்கல்களை – இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் இயலாவிடில் குறைக்க வேண்டும்.

அறிவியல் ஆய்வு தரும் தகவலின்படி ஒரு வாகனமானது 4.6 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடை ஒரு வருடத்தில் வெளியேற்றுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் எவ்வளவு நச்சு வாயுவை வெளியேற்றி சுற்றுப் புறத்தை மாசு படுத்துகிறது என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.

அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல், சைக்கிளை அதிகம் பயன்படுத்தல் ஆகியவை சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வல்ல எளிய வழிகளாகும்.

தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தலைத் தவிர்ப்பது நீர் வளத்தைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும். ஒழுகும் குழாய்களை உடனடியாகப் பழுது பார்த்தல் வேண்டும். குழாயைத் திறந்து விட்டுக் கொண்டே பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பதால் நீர் சேமிப்பு அதிகமாகும்.

சிந்தித்தால் சிறப்பான வழிகள் தோன்றும் என்பதில் ஐயமில்லை

***

INDEX

Plastic avoid

T shirt

Chemicals to avoid

Water harvesting

TAGS- பிளாஸ்டிக், சுற்றுப்புற சூழல்

நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதையை பரத முனி சொல்கிறார் (Post.9886)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9886

Date uploaded in London –23 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதையை பரத முனி சொல்கிறார்நாட்டிய சாஸ்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் 6000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனியால் இயற்றப்பட்டது . இதில் 36 அத்தியாயங்கள் இருக்கின்றன. முதல் 

tags- இந்திர விழா, ‘ஜார்ஜர’, நாட்டியம்,  நாடகம் கதை, பரத முனி

விஞ்ஞான புனைக் கதை முன்னோடி எச்.ஜி.வெல்ஸ் (Post No.9885)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9885

Date uploaded in London –23 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விஞ்ஞான புனைக் கதை  எழுதிய முதல் ஆசிரியர்  எச்.ஜி.வெல்ஸ் (H G WELLS) என்பது பலருடைய கருத்து ஆகும்.

ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் என்பது அவருடைய முழுப் பெயர் ஆகும். அவர் இங்கிலாந்தில் பிராம்லியில் (Bromley)  பிறந்தார்.அவரது குடும்பம் ஏழைக் குடும்பம்.. ஒரு கடையில் உதவி செய்பவராகப் போனவருக்கு லண்டனிலுள்ள ஒரு விஞ்ஞானப் பள்ளியில் படிப்பதற்கு உபகார சம்பளம் கிடைத்தது.

கல்லூரியில் அவருடைய ஆசிரியர் பிரபல அறிவியல் நிபுணரான தாமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxley) ஆவார். அவர் டார்வின் எழுதிய பரிணாமக் கொள்கையை இவருக்குப் போதித்தார். பிராணிகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்து பரிணாம வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் அவை எவ்வாறு வளர்ச்சி அடையும் என்று எச்.ஜி.வெல்ஸ் கற்பனை செய்தார். அவற்றைப் பல நாவல்களில் எழுதினார்.

29 வயது வரை கணக்கராகவும், ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார். பின்னர் முழு நேர எழுத்துப் பணியில் குதித்தார். தன் வாழ்நாளில் சுமார் 80 கதைகளையும் ,நாவல்களையும் எழுதினார். அவற்றில் பல விஞ்ஞான கற்பனைக்கு கதைகள். அது போக மீதிக்க தைகள் சமூக, அரசியல் விஷயங்கள் பற்றியவை. வரலாற்றைச் சுவைபட படிக்கும் வகையில் ஒரு புஸ்தகமும் (Outlines of History) எழுதினார்.

வெல்ஸ் எழுதிய முதல் விஞ்ஞான கற்பனைக் கதை டைம் மெஷின் (Time Machine)  எனப்படும் காலப் பயண யந்திரம் ஆகும். ஒருவர் வருங்காலத்துக்குப் பயணம் செய்து இந்த பூமி அழியும்  காலத்தைக் காணும்  கதை அது. எதிர்காலத்தில் இரு வகை மனிதர்கள் உருவாகலாம்; முதல் ரகம் ‘ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் போன்ற இலோய்’ வகுப்பு. இரண்டாவது, செயல் முறைக்கு உகந்த ‘மார்லக்ஸ் வகுப்பு’. இதற்கு அடுத்த படியாக  கிரகங்களுக்கு இடையே எழும் சண்டை (வார் ஆ ப் தி ஒர்ல்ட்ஸ்)  பற்றி ஒரு கற்பனைக் கதை  எழுதினார்.

செவ்வாய்க் கிரக மக்கள் பூமி மீது படை எடுப்பதாவும் அவர்களை பூமியிலுள்ள புழு அளவேயுள்ள கிருமிகள் அழி ப்பதாவதும்  எழுதினார் . இந்த இரண்டு புஸ்தகங்களும் இவருக்கு புகழ் ஈட்டின

மனித குலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல், அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் உண்டு என்று நம்பினார். ஆயினும் காலம் செல்லச் செல்ல மனித குலத்தின் கொடூரச் செயல்களும் சுயநலமும் அவருக்கு கவலை ஏற்படுத்தின.

பிறந்த தேதி — செப்டம்பர் 21, 1866

இறந்த தேதி –  ஆகஸ்ட் 13, 1946

வாழ்ந்த  ஆண்டுகள் -79

H G WELLS PROFILE

BORN SEP.21, 1866

DIED AUG.13, 1946

AGE AT DEATH – 79

PUBLICATIONS

1895 THE TIME MACHINE

1896 THE ISLAND OF DR MOREAU

1897 THE INVISIBLE MAN

1898 THE WAR OF THE WORLDS

1899 WHEN THE SLEEPER AWAKES

1901 THE FIRST MEN IN THE MOON

1908 THE WAR IN THE AIR

1920 THE OUTLINE OF HISTORY

1933 THE SHAPE OF THINGS TO COME

1939 THE HOLY  TERROR

H G Wells | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › h-g…

  1.  

Translate this page

15 Aug 2018 — H G Wells has such a big head that he has trouble getting hats to fit. Once when he found one that balanced nicely on his head he just …


H G Wells meeting | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › h-g…

· Translate this page

16 Jan 2019 — Written by London swaminathan. swami_48@yahoo.com. Date: 16 JANUARY 2019. GMT Time uploaded in London –15-51. Post No. 5943

Tags- விஞ்ஞான புனைக் கதை  எச்.ஜி.வெல்ஸ்

October 2019 London Swaminathan Articles; Index 83 (Post No.9884)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9884

Date uploaded in London –23 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

October 2019, Index 83

Manu on Property Rights of Women , 7042;October 1,2019

Swami s crossword 21019;7047

I will toast in Water, not in Champagne,diplomats anecdotes,

7048;2/10

London Eagle gets a New Job,7051;3/10

Gotra System in Ancient Rome and Greece, 7052;3/10

Finance Minister s wife s gown – uncovered deficit,7055:4/10

Swam’i s crossword 4102019:7057

Metals in Vedas ,7060;5/10

Swami ‘s crossword 51019; 7062;

Chemistry in the Vedas, 7065;6/10,

Mysterious Medicinal Properties of Soma plant in Rigveda,7069:7/10

Swami’ s crossword 81019, 7072

American Indian Contest Anecdotes , 7074; 8/10

51 interesting Hindu couples ,Four types of Women in

Natyasastra, 7077;9/10

Eight Steps in Rajayoga,7081;10/10

Vedic Poets Word search 7082;10/10

Horse Racing anecdotes, 7086;11/1

Big Hindu Festival in Vietnam, 7089;12/10

Medicinal Properties of saffron ,7093;13/10

Hindu Temples in Vietnam, 7096;14/10

New Siva,Agastya Statues discovered in Vietnam,7099:15/10

Bhagavad Gita- New Discovery,7100;15/10

Nagarani- Soma Kauundinya Marriage Story in Vietnam,7103;16/10

Skanda in Vietnam, Lost his head in 1988;7107;17/10

Singapore is Sanskrit,7109;18/10

Shower of Gold and Gems on Lord Shiva 7113:19/10

Swami s word search 201019;7116

Story of the Bell that traveled to60 Towns,7118;20/10

Pandya and Choza Inscriptions in S.E.A.,7125;21/10

China plundered Vietnam, took one lake pounds of Gold,7126;21/10

Swami s crossword 211019;7122

Footprints of Lord Shiva and Vishnu in Cambodia,7129;23/10

Diwali in British parliament, Warning to Hindu s ,7134;24/10

Swami s crossword 251019;7138;

Significance of Number Nine in Hindu and other cultures,7146;27/10

Diwali, Deepavali Stamps from around the world,7143;26/10

Nine Muses in Greece and Nine Ceremonies in China , 7150;28/10

84 Kinds of Wine in Charaka Samhita, 7155;29/10

30 Sumerian Proverbs that reflect Hindu Views,7159:31/10,

/2019

TAMIL ARTICLES IN OCTOBER 2021

கவிதையில் இலக்கண அதிசயம் ! வேற்றுமைக் கவிதைகள், 7040, அக் டோ பர்1, 2019

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி = த .கு.போ.11019, 7041

கபொடியாக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 3, 7044,2/10

தமிழர்களின் எண்பேராயம் , 7046, 2/10

சைவத்தில் எட்டு, வைணவத்தில் எட்டு, 7050, 3/10

மநு நீதி நூலில் சினிமாப்பாட்டு, பாரதியார் பாடல் வரிகள்,7053, 4/10

த .கு.போ.41019, 7056

த .கு.போ.51019, 7061

மருத்துவத்தில் எட்டு, திருமூலர் சொல்லும் அதிசய எட்டு, 7059,5/10

இராமாயணங்களின் பட்டியல் , 7063, 6/10

த .கு.போ.51019, 7061

கழுதை வைத்தியம் 7066, 7/10

சூ ரியகாந்திச் செடிகளும் வள்ளுவர் குறளும் 7067, 7/10

சோம லதையி ன் ஆபூ ர்வ மருத்துவ பயன்கள், 7070,8/10

த .கு.போ.51019, 7073

அஷ்ட சரஸ்வதி, அஷ்ட சக்தி 7075, 9/10

மனத்தின் ஏழு நிலைகள்; முனிவர்களின் ஏழு நிலைகள் ,7084, 11/10

இசையில் எண் எட்டு, யோகத்தில் எண்  எட்டு , 7079, 10-10

பெண்கள்  4 வகை – நாட்டிய சாஸ்திரக் கூ ற்று.

அவ்வைப்பாட்டியின் வாசகங்களைக்  கண்டுபிடியுங்கள் 7083,11/10

உலகில் 2.5 கோடி குண்டர்கள், 7087, 12/10

வியட்நாமில் மஹாளய அமாவாசை ,7090, 13/10

த .கு.போ.131019, 7092

குங்குமப் பூவே! கொஞ்சசும் புறாவே! 7091, 14/10

வியட்நாமில் அகஸ்தியர், சிவன் சிலைகள் கண்டுபிடிப்பு,7098, 15/10

கவுண்டின்யன் – நாகராணி சோமா கதை, 7102, 16/10

அதிசய பாலைவனத் தாவரம், 7105, 17/10

ஏழு யக்ஞங்கள், 7 சந்தங்கள், 7 ஸ்வரங்கள், 7106, 17/10

உலகின் மிகப் பெரிய வெளவால் ,7110,18/10

சிங்கப்பூரில் சிவபெருமான்! வியட்நாமில் முருகன், 7112, 19/10

தமிழ் வோர்ட் செர்ச் word search  191019, 7114

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி, 7117, 20/10

அனைவரும் போற்றும் 500 வயது மரம், 7124, 22/10

அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி, சுவையான சம்பவங்கள், 7121, 21/10

காட்டு ராணி பூலான்தேவி, 7120, 21/10

பையனின் உடைவாள் எலாம், 128, 23/10

த .கு.போ.231019, 7130,

பழைய கதைகள்-1992நோபல் பரிசு கயானா அதிபர், 7132, 24/10

கம்போடியாவில் சிவன் விஷ்ணு பாதங்கள்; 7133, 24/10

திகில் சினிமா படம் எடுக்க கதை வேண்டுமா?7137,25/10

இமய மலையில் புற்று நோய்க்கு மருந்து, 7136, 25/10

பேகன் புதையல் எங்கே? 7145, 27/10

பாட்டில் படத்தின் விளை 1 லட்சம் டாலர், 7140, 26/10

ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்? மநு நீதி நூல் 44, 7142, 26/10

ஒன்பதாம் எண்ணின் அற்புத சக்தி, 7148, 28/10

வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறும் அவர் செய்த அற்புதங்களும், 7149, 28/10

வேதாந்த …… 2, 7152, 29/10

ஒன்பது செல்வங்கள், நவராத்ரி தேவதைகள், 7153, 29/10

கலைப் பொக்கிஷங்கள் திருட்டு- நான் அன்றே சொன்னேன், 7154, 29/10

போரில் பிறந்த புஸ்தகங்கள், 7157, 30/10

சரக சம்ஹிதையில் 84 வகை மது பானங்கள், 7158, 30/10

ஆடு பற்றிய 30 பழமொழிகள், 7161, 31/10

மாணவர்கள் அதிக மார்க் வாங்க  வைட்டமின் மாத்திரையை

உதவுமா?7162, 31-10-2019

—subham —

Tags- October 2019, Index 83

தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு! (Post.9883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9883

Date uploaded in London – 23 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 2 – 17-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

தட்ப வெப்ப  மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!

கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் பயன்படுத்தி வரும் வாகனங்களில் படிம எரிபொருள் பயன்படுத்தப் படுவதால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பசுமை வாயுக்கள் வளி மண்டலத்தை மாசு படுத்தி வந்துள்ளன. கடந்த 130 ஆண்டுகளில் புவியின் வெப்பத்தில் 0.85 டிகிரி செண்டிகிரேடு கூடுதலாகி உள்ளது. ஒவ்வொரு பத்து ஆண்டையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இப்போது வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.இதனால் தட்பவெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.

உலகின் மொத்த ஜனத்தொகையில் பாதிக்கு மேல் கடலுக்கு 60 கிலோமீட்டர் அருகிலேயே வசித்து வருவதால் கடல் மட்டம் உயர்வதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாவர். 

அதிக வெப்பமான நிலையில் நாம் காற்றை சுவாசிக்கும் போது சுவாசக் கோளாறுகளும் இதயக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. 2003ஆம் ஆண்டு கோடை காலத்தில் மட்டும் எப்போதும் இல்லாதபடி 70000 கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. சுத்தமான ஆற்றல் அமைப்புகளை உருவாக்குமாறும் பயன்படுத்துமாறும் அது இடைவிடாது வலியுறுத்தி வருகிறது.

குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது, நடந்து செல்வது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்கள் படிம எரிம பொருளைப் பயன்படுத்தும் வாகனப் பயன்பாட்டை மட்டுப் படுத்தும்,

2015ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் செயல்பட, ஒரு செயல்திட்டத்தைத் தந்துள்ளது. அத்துடன் உலகெங்கும் தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து மனித குலம் விழிப்புணர்ச்சிப் பெற அனைத்து இடங்களிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்ப வலியுறுத்தியுள்ளது.

ஐந்து வயதுக்கும் கீழாக உள்ள குழந்தைகளும், முதியோரும் தட்ப வெப்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த அபாயத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

பல அறிவியல் ஆய்வுகள், ‘தட்ப வெப்ப மாற்றத்தால் பஞ்சங்கள் ஏற்படும்’, ‘சூறாவளிகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும்’, ‘தொற்று வியாதிகள் பரவும்’, ‘பல தீவுகளில் வசிப்போரும் கடலோரம் வசிப்போரும் அபாயத்திற்கு உள்ளாவர்’ ஆகியவற்றைத் தெரிவித்துள்ளன. ஆகவே இதைத் தடுக்க ஒவ்வொருவரும் இந்தச் சீர்கேட்டைத் தடுக்கும் ஒரு தலைவனாக தம் தம் பகுதிகளில் செயல்பட வேண்டும்.

Lungs and Heart

–subham–

tags-தட்ப வெப்பம், மாற்றம், ஆரோக்கியம் , சீர்கேடு