சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு! (Post No.8579)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8579

Date uploaded in London – – –27 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!

ச.நாகராஜன்

சுந்தர மூர்த்தி நாயனார் சிவபிரானைத் தோழனாக நினைத்து வழிபட்ட ஒரு அபூர்வமான சிவ பக்தர்.

இவர் வாழ்வில் நடந்த திருவிளையாடல்கள் ஏராளம்! அனைத்தும் ஆச்சரியமூட்டுபவை.

ஒரு விளையாடல் இதோ:

பேரூர் உள்ளிட்ட மேல் கொங்கு நாட்டுத் தல வழிபாட்டை மேற்கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். அவருக்குப் பொன் கொடுக்கத் திருவுளம் கொண்டார் சிவபிரான் – விக்ருதேசுரர்! ஒரு முதிய அந்தணர் வேடம் பூண்டார் விக்ருதேசுரர்! மூத்த பிள்ளையார் முதலிய திருக்குமாரர்கள் பின் தொடர்ந்து வர, தினந்தோறும் உள்ளார்ந்த அன்புடன் தன்னைப் பூஜித்து வரும் ஒரு கிழமையுற்ற ஆய்மகளிடம் அவர் சென்றார். இந்தக் குழந்தைகளை ஈடாக வைத்துக் கொண்டு பொன் தர வேண்டுமென்று வேண்டினார் அவர். அதற்கு இசைந்த அந்தக் கிழ மாது அந்த முதிய அந்தணர் குறிப்பிட்ட அளவுக்குப் பொன் கொடுத்து உதவினாள். அதைப் பெற்றுக் கொண்ட அந்தணர் தன் முன்

திருப்பதிகம் பாடிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு அந்தப் பொன்னைக் கொடுத்தருளினார்.

இந்த நிகழ்வு வெங்கால நாட்டில் நிகழ்ந்தது.

இதை திருவெஞ்சமாக் கூடற்புராணம் பாடிச் சிறப்பிக்கிறது.

பாடல்:-

கொள்ளை வண் டியிரு நாட்பூங் கோதையோர் பாகர் முன்பு

கள்ளமி லுள்ளத் தன்பு கனிந்துள கிழவி யார்பாற்

பிள்ளைக ளீடு காட்டிப் பெற்றசெம் பொன்னை யெல்லாந்

தெள்ளிய தமிழ்ப்பா சொன்ன திருத்தொண்டர்க் குவந்த ளித்தார்

                           (திருவெஞ்சமாக்கூடற் புராணம்)

இந்த அருமையான நிகழ்ச்சியைப் போற்றிப் பதிவு செய்கிறது கொங்கு மண்டல சதகம் தனது பத்தாம் பாடலில்!

கிழவே தியவடி வாகி விருத்தையைக் கிட்டியெந்தன்

அழகாகு மக்க ளடகு கொண் டம்பொ னருடியென்றேற்

றெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொரு

மழுவேந் தியவிகிர் தேசுரன் வாழ்கொங்கு  மண்டலமே

பொருள் :-

சுந்தர மூர்த்தி நாயனார்க்குப் பொன் கொடுக்க வேண்டும் என்று அருளுள்ளம் கொண்டு, மூத்த பிள்ளையார் உள்ளிட்ட திருக்குமாரர்களை ஈடு வைத்துப் பொன் பெற்று அதை ஈந்த விகிர்தேஸ்வரர் விளங்குவதும் கொங்கு மண்டலமே தான்!

tags — சுந்தர மூர்த்தி நாயனார், பொன்

***

கம்பளி பற்றிய ஆறு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (8578)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8578

Date uploaded in London – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்பளி பற்றிய ஆறு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (8578)

பல பழமொழிகளில் கம்பளி என்று மீண்டும் மீண்டும் வந்தாலும் , கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே  காணப்படும். விடைகள் கீழே உள்ளன.

1.கரடி கையில் உதை  பட்டவனுக்கு கம்பளிக்காரனை கண்டால்  பயம்

2.கம்பளி மூட்டை என்று  கரடி மூட்டையை அவிழ்த்தானாம்

3.கம்பளிமேல் பிசின்

4.கம்பளியிலே   சோற்றைபோட்டு மயிர் மயிர் என்கிறதா?

5.கம்பளியில் ஒட்டின கூ ழைப் போல

6.கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்திருக்கிறதா?

tag– கம்பளி

KALI YUGA FINITO! NOW IT IS DWAPARA YUGA ! (Post .8577)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8577

Date uploaded in London – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DAVID FRAWLEY   has written in his book (year 1995) ‘GODS, SAGES AND KINGS’ about SRI YUKTESWAR’s new concept of Four Yugas.  Though it is 25 years old, it becomes relevant because of latest news about magnetic pole change. It is in the second part of this article.

Sri Yukeswar is a great man respected and followed by millions of people. He was born in Bengal and attained Samadhi in 1936 at Puri. His disciple Sri Paramahamsa Yogananda (1883-1952) is more popular because of his book ‘AN AUTHOBIOGRAPHY OF A YOGI’.  Yukteswar’s Guru was Lahiri Mahasaya and whose Guru was Baba Mahavatar. All these saints popularised Kriya Yoga and Tamils came to know about him through actor Rajni kanth.

According to Yukteswar, Dwapara Yuga is between 1699 CE and 4099 CE.

So Yukteswar’s theory cannot be ignored easily. Even Manu gives only small numbers for four Hindu Yugas – Krita, Treta, Dwapara and Kali.

Here are some bullet points from Frawley’s book:

  1. Satya Yuga known as Krita Yuga began in 11,501 BCE and finished in 6701 BCE, says Yukteswar

Manu existed at that time. Rig Veda is also dated around that date.

  • A Yuga Cycle consists of 24,000 years (12+12)
  • This 12,000 years is based on Manu Smriti(1-69-72) . Manu allocates, 4000, 3000, 2000, 1000 years for Krita to Kali. Sanskrit words for Yuga also meant 4,3,2,1 (Treta-3, dwa-2 etc). Manu beautifully explained that Dharma/ honesty loose one leg in every yuga . in Hindu symbolism the Holy Cow is with one leg in Kali Yuga.
  • Both Manu and Yukteswar allocate interval period between Yugas and it is known as Yuga Sandhi. Manu gave 10+10 percent for this interval and that is how we arrive at 12,000 years.
  • Manu is not the only person who gave different numbers. Even Atharva Veda gave 10,000 years for each yuga. But now we give very big numbers, the smallest being 4,32,000  years for Kali Yuga.
  • Probably different people used the same words with different numbers. Even English dictionary gives two numbers for Billion (100 crore and 1000 crore).
  • To avoid confusion, we have to look at them with correct interpretation.
  • Yukteswar gives 24,000 years for Earth’s precession instead of approximate 26,000 years.
  • Anyway all these numbers are related to the change of magnetic pole which is also interpreted differently by

different scientists. Please read the second part and my old article on the same subject (see the link below)

xxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Second Part

THE SPINNING EARTH

Alanna Mitchell has published a book ‘The Spinning Earth’ in 2018 with latest details on the subject of Magnetic pole change (flipping of the Pole). She says the change has happened several times in the life of earth and the life continues without destruction. She discounts the fear that the change would destroy the life on earth ; the last change happened approximately 7,80,000 years ago. Next change cannot be predicted.

Sodium Liquid Globe in Maryland

But in my previous article I have shown one prediction that it would happen in 2030 and destroy life. Those who don’t know much about this, please read the National Geographic Interview with Alanna Mitchell and other scientists (see the link below) .

In short, the earth is a big magnet. It is a dynamo. Thousands of miles deep under our feet, the iron and nickel metals are boiling very hot. This liquid produces magnetism because the earth rotates on its axis. This magnetism only protects us from harmful radiation from the space. During the magnetic pole change the magnetic shield around may be weakened or completely disappear. In which case life on earth would be affected and all our electric and electronic equipment would go berserk. Migrating birds, whales, butterflies and fish use magnetism to navigate. If north pole becomes south pole , it would confuse them and eventually destroy them. Further research in this field is done through satellites and artificial earth dynamos. One such 30 ton globe with liquid sodium is in Maryland, USA. Current research shows more anomaly around South pole which covers 20 % of earth. But the magnetic north pole is moving slower. When it would flip, no one knows, according to Alanna Mitchell.

A radiation expert from Colorado University says life on earth would be affected, if the shield is weakened.

Now the question is what is the link between our Chatur Yugas (Four Eras) and this change; the numbers are interesting. Some numbers correlate with our Yuga calculations. All this needs further research.

For further information , please go to

https://www.nationalgeographic.com/news/2018/02/earth-magnetic-field-flip-poles-spinning-magnet-alanna-mitchell/

xxxx

Link to my old article

Science behind Hindu’s Four Ages (Chatur Yugas …

tamilandvedas.com › 2014/12/04 › science-behind-hin…

  1.  

4 Dec 2014 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Science behind Hindu’s Four Ages (Chatur Yugas): …

tags – Yugas, Yukteswar, Magetic pole, Spinning Magnet book, Kali Yuga

கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது (Post.8576)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8576

Date uploaded in London – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது

இப்போது நடப்பது கலியுகம் அல்ல; இது துவாபர யுகம் – என்ற வியப்பான செய்தியை நடிகர் ரஜினி  காந்த்தின் குரு கூறுகிறார். அவர் பெயர் யோகி யுக்தேஸ்வர் . அவர் பரம ஹம்ச யோகானந்தாவின் குரு;  பரம ஹம்ச யோகானந்தா எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதை ‘(An Auto Biography of a Yogi by Paramahamsa Yogananda)  என்பது தமிழ் உள்பட பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யுக்தேஸ்வரின் குரு லாஹிரி மஹா சயர் . அவருடைய குரு பாபா மஹாவதார் என்று சொல்லுவர் . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ் ந்தவர் .

நாம் இப்போது காணப்போகும் யுக்தேஸ்வர் கிரி என்பவர் வங்காளத்தில் பிறந்து பூரி நகரில் 1936ல் சமாதி அடைந்தார் . இவர்கள் அனைவரும் கிரியா யோகம் என்னும் முறையைப் பிரபலப்படுத்தினர்.

யுக்தேஸ்வர் கிரி என்ன சொல்கிறார்?

துவாபர யுகம் 1699-ல் துவங்கிவிட்டது கி.பி. 4099ல் முடிவடையும் . ஊர் பேர் தெரியாத ஒரு ஜோதிடர் இதையே சொல்லி இருந்தால் ஏதோ ‘பப்ளிசிட்டி’க்காக நம்மூர் அரசியல்வாதிகளும் நடிகர்களும் அவ்வப்போது சர்ச்சசைக்குரிய (Tweet) ட்வீட் செய்வது போல இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்  (Publicity stunt) என்று நினைக்கலாம். ஆனால் சொன்னவரோ அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் போற்றும் குரு .

இனி அவர் சொல்லுவதை விளக்கமாகக் காண்போம்.

க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் சதுர் யுகங்களும் — அதாவது 4 யுகங்களும் 12,000 ஆண்டுகளில் முடிவடையும் இதைப்போல் இருமுறை நடப்பது ஒரு முழு வட்டம் அதாவது ‘முழு யுகச் சுழற்சி’ (One Full Cycle of Yugas) என்கிறார்.

இதற்கு ஆதாரம் என்ன ?

மிகவும் பழைய ஸ்ம்ருதியான – அதாவது சட்டப்புத்தகமான– மனு ஸ்ம்ருதியில் முதல் அத்தியாயத்தில் க்ருத யுகம் முதல் கலியுகம் வரை 4000, 3000, 2000, 1000 ஆண்டுகள் என்ற கணக்கில் நடக்கும் . ஒவ்வொரு யுகத்துக்கு இடையே ‘யுக சந்தி’ என்னும் இடைவெளி பத்து +பத்து = 20 சதவிகிதம் இருக்கும் என்கிறார். ஆக மொத்தம் 12000 ஆண்டுகள்தான் மொத்தம் 4 யுகங்களுக்கும்.

அது சரி, யுக சந்தி என்னும் இடைவெளி பற்றிச் சொல்லுகையில் ஏன் பத்து + பத்து என்று சொல்கிறீர்கள்? என்று சிலர் நினைக்கலாம். அதாவது உதயமும் சந்தியாகால வெளிச்சமும் 10, 10 சதவிகிதம். இங்கே விளக்கத்தை நிறுத்திவிட்டு சிறிது சிந்தித்துப் பார்ப்போம். முதலில் 4000, 3000, 2000 , 1000 ஆண்டுகள் என்று 4,3,2,1 என்ற இறங்கு வரிசையில் பார்க்கிறோம். பின்னர் 10+10 இடைவெளிக் காலம் என்று பார்த்தோம். எவ்வளவு கண்ணக்குப்போட்டு இதைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

இப்படிக் கணக்குப் போட்டதற்கு என்ன காரணம் ?

இப்போதுதான் மேலை நாட்டு  விஞ்ஞானம் இதை ஆராயவே துவங்கி இருக்கிறது; அதாவது பூமியின் காந்த மண்டலம் ‘பல்டி’ அடிக்கிறது ; வட துருவம், தென் துருவம் ஆகிறது; அப்போது பூமியில் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஒப்புக் கொள்கின்றனர்.

இதுவரை அவர்கள் சொல்லும் ஆண்டுகளுக்கும் நாம் சொல்லும் ஆண்டுகளுக்கும் முழு ஒற்றுமை இல்லாவிடினும் அவர்களிடையேயும் கருத்து வேறுபாடு இருக்கிறது ; ஒருவர் 2030ம் ஆண்டில் துருவங்கள் பல்டி அடிக்கும் என்கிறார். இதை முன்னரே சொல்லி இருக்கிறேன். அதுமட்டுமல்ல 4, 3, 2, 1 என்ற இறங்கு வரிசையில் க்ருத, த்ரேத , த்வாபர , கலி  என்று சொல்வதில் தர்மம் என்னும் வண்டி அல்லது பசு மாடு ஒவ்வொரு காலாக இழந்து கலி யுகத்தில் ஒற்றைக் காலில் தள்ளாடும் என்று மனு சொன்னதை முன்னரே கண்டோம்.

இப்போது மீண்டும் யுக்தேவர் கிரி என்னும் மஹான் சொல்லும் விஷயத்துக்கு வருவோம்.

அவர் சத்ய யுகம் என்னும் கிருத யுகம் என்பது கி.மு. 11,501-ல் துவங்கி 6701-ல் முடிந்துவிட்டது. பின்னர் த்ரேதா யுகம் கி.மு.3101-ல் துவங்கியது என்கிறார். ஆனால் நமது பஞ்சாங்கங்களோ அதை கலியுகத்தின் துவக்கமாகக் காட்டுகின்றன.

சுவாமி யுக்தேஸ்வர் கீரியும் யுக சந்தி கணக்கு முதலியவற்றை ஒப்புக்கொள்கிறார். ஆனால் கலியுகம் முடிந்து இப்போது துவாபர யுகம் நடப்பதாகவும் இதே போல ‘கார் ரிவர்ஸ் கியரி’ல் (Reverse Gear) போவது போல கலி, துவாபர, த்ரேதா, சதுர் என்று முடிக்கையில் ஒரு சுழற்சி முடியும் என்றும் சொல்கிறார். மொத்தம் 24,000 ஆண்டுகள்..

அதர்வ வேதத்தில் 4 யுகம் பற்றிய ஒரு குறிப்பில் ஒரு யுகம் என்பது 10,000 ஆண்டுகள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆக கலியுகம் என்பது 4,3,2000 ஆண்டு என்று நாம் சொல்லுவதை யுக்தேஸ்வர் மறுக்கிறார். அவரே மனு என்பவர் கி.மு 6701ல் வாழ்ந்தவர் என்றும் சொல்லுவதால் வேதகால நாகரீகம் அப்போது சரஸ்வதி நதிக்கரையில் இருந்தததை நாம் அறிய முடிகிறது

இதை முடிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளுவோம்.இந்து மதம் என்பது நீண்ட வரலாறு உடையது ; ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் (Herman Jacobi and B G Tilak)  முதலியோர் வான சாஸ்திரக் குறிப்புகளின் அடிப்படையில் ரிக் வேதத்துக்கு கி.மு. 6000 அதாவது இற்றைக்கு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தேதி குறித்ததுள்ளனர் ; காலப்போக்கில் சொற்களும் வேறு வேறு பொருள் கொள்ளும்; ஆங்கில அகராதியைப் புரட்டினால் பில்லியன் (Billion)  என்பதற்கு 1000 கோடி என்ற பொருளையும் காணலாம். ஆனால் இப்போது நாம் 100 கோடி என்ற

எண்னைக் குறிக்கத்தான் பில்லியன் என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துகிறோம். இதே போல யுகக் கணக்கும் மாறி இருக்கலாம். அல்லது பெரிய யுகம், சின்ன யுகம் என்று இரண்டு கணக்கு இருக்கலாம்.

எங்கள் மதுரை நகரில் பேச்சு வழக்கில் ‘சின்ன எட்டு’,’ பெரிய எட்டு’ என்று சொல்லுவார்கள். வீடு , மனை, நிலம், முதலியவற்றை விலை பேசுகையில் முதலில் ‘சின்ன எட்டு’ 80,000 ஆகவும் பெரிய எட்டு , 8 லட்சமாகவும் இருந்திருக்கும் . இப்போது விலைவாசி பத்து மடங்கு உயர்ந்து விட்டதால் பெரிய எட்டு என்பது  எட்டு மில்லியன் அல்லது எட்டு கோடியாகக் கூட இருக்கும்.

 அதாவது RELATIVE  TERMS டெர்ம்ஸ் .

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்த காலத்தில் BIG HOUSE பிக் ஹவுஸ், SMALL HOUSE ஸ்மால் ஹவுஸ் என்பதை மொழி பெயர்க்கச் சொல்லுவேன். அவர்கள் பெரிய வீடு , சின்ன வீடு என்று மொழி பெயர்ப்பார்கள்  உடனே அவர்களைத் தமிழ் நாட்டுக்குப் போய் எனக்கு ஒரு சின்ன வீடு வேண்டும் என்று சொல்லிவிடாதீர்கள். அதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. கள்ளக்காதலி வீட்டை ‘சின்னவீடு’ என்பர் என்று சொன்னவுடன் எல்லோரும் சிரிப்பார்கள். ஆகையால் ஒரு எண் அல்லது கணக்கு என்பது எந்த இடத்தில் எந்தக் கட்டத்தில், எந்தக் காலத்தில் சொல்லப்படுகிறது என்பதை நோக்க வேண்டும். ‘வெள்ளம்’ என்றால் மலையாளத்தில் ‘குடிப்பதற்கு நீர்’ என்று பொருள்; இன்றைய தமிழ்நாட்டில் வெள்ளப் பெருக்கு FLOODS ‘பிளட்ஸ்’ என்று பொருள். சங்க இலக்கியத்தில் அது ஒரு பெரிய எண் . ஆக இடம், காலம் என்பது முக்கியம்.

இந்துக்கள் 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் தலை ஒரு சுற்றுச் சுற்றுவதைக் கூட அறிந்து இருந்தனர். இதனால் துருவ நட்சத்திரம் மாறுவதையும் அவர்கள் அறிந்து இருந்தனர். ஒரு பம்பரம் சுற்றி முடியும் தருவாயில் ஒரு சுற்று சுற்றிவிட்டு தரையில் படுக்கும். அப்படித் தரையில் படுப்பதற்கு முன்னர் அது ஆடும் ஆட்டத்தை பூமியின் அச்சு ஆடும் ஆட்டத்துக்கு (Precessional Cycle) ஒப்பிடுவர். பம்பரம் ஒரு நிமிடத்தில் தலை ஆட்டத்தை முடிக்கும். ஆனால் பூமியின் தலையோ 26,000 ஆண்டுகளுக்கு மெதுவாக தலையைச்  சுற்றும். இதையும் அவர்கள் யுகக் கணக்கில் கொண்டனர் . அவர்கள் கொண்ட அறிவியல் அணுகுமுறையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது!!

tags – கலியுகம், துவாபர யுகம்,யுக்தேஸ்வர் .

–subham–

ஜோதிடக் கட்டுரை- சொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா! (8575

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8575

Date uploaded in London – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜோதிடக் கட்டுரை– சொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா!

சார்! சார் !! உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேண்டுமே?? ஒரு

பெண்ணின் குரல்…….

நான்- வாங்க மேடம் (Madam) …..வாங்க, உங்களுக்கென்ன அப்பாயிண்ட்

MISS NILANSHI PATEL WITH LONGEST HAIR IN GUINNESS BOOK OF RECORDS

மெண்ட் appointment ??? என்று பக்கத்துத்  தெரு மேடத்திற்கு ஒரு சேரைப் போட்டு

உட்காரச் சொன்னேன். ரொம்ப தெரிந்தவர் .

பேமலி family friend நண்பரும் கூட….வெகு நேரம் அமைதியாக

உட்கார்ந்திருந்தார் அவர்…….. சோகமே வடிவாக……

உங்களுக்கென்ன கஷ்டம், சின்ன வயசு(40) உங்கள்

வீட்டுக்காரர்  மற்றவருக்கெல்லாம் வீடு கட்டி கொடுக்கிறார்

உங்களுக்கும் 2 வீடுகள் உள்ளன. 2 “ஆடி” (Audi) கார்கள் உள்ளன…..

உங்களுக்கென்ன கொடுத்து வைத்தவர்……என்றேன் நான்.

(எனக்கும் கொஞ்சம்  பொறாமைதான்………)

அவள் மவுனமாக இருந்தாள். நான தயவு செய்து உங்கள்

மனக்குறை என்னவென்று சொல்லுங்கள். என்னால் முடிந்தவரை

தீர்க்க முயற்சிக்கிறேன்

சொல்ல வெட்கமாக இருக்கிறது. எனக்கும் என் மகளுக்கும்

(வயது 12) மயிர் வளர்வதே இல்லை. இருக்கிற முடியும்

கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டே வருகிறது.

கல்யாணம் காட்சி என்றால் சவரிக்கொண்டை வைத்து

கிளம்ப நேரமாவதுடன் போதும் போதும் என்றாகி விடுகிறது.

எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஓர் உணர்ச்சி……

நன ஷாக் (shock) ஆகி விட்டேன். எவ்வளவோ பேர்கள் என்னிடம்

வந்து , என் மகளுக்கு எப்போ கல்யாணம் நடக்கும்,மகனுக்கு

I I T யில் இடம் கிடைக்குமா? ,மகள் FOREIGN போவாளா?

வீடு இந்த ஜன்மத்தில் வாங்குவேனா?  என்ற கேள்விகளினால்

துளைக்கப்பட்ட நான் “எனக்கு மயிர் முளைக்க வில்லை,வளரவும்

இல்லை” என்ற கேள்விகள் என்னை துளைத்தன.

பழைய பழமொழி ஞாபகத்தற்கு வந்தது.

‘வயிற்றுக்கு கூழு இல்லை என்பவனுக்கும்

காலுக்கு செருப்பு இல்லை எனபவனுக்கும் ஒரே கவலை தான்’–

என்னடா இது மேடத்திற்கு (எனக்கு ) வந்த சோதனை??.??

மேடத்தின் முகம் சோகத்தால் நிரம்பியது. கண்களில் கண்ணீர்,

வராத குறைதான் …………

கேவலம் ஒரு மயிருக்குக்குப்போய் இவ்வளவு மரியாதையா???

சரி, இனிமேல் “அவரை “மரியாதையாக “அந்த “வார்ததையை

வாபஸ் வாங்கிக் கொண்டு முடி “என்றே அழைப்போம்.

இதில் அவருடைய புருஷனுக்கும் முடி நரைத்து வருகிறதாம்

ஏன் என்ன செய்யலாம்? என்று கேட்டுக் கொண்டு வா…….

ஆனால் எனக்கு என்று சொல்லாதே……”எங்க பேமலி (family) யில்

ஒருத்தருக்கு என்று சொல்”

தடுக்கி விழுந்தால் beauty parlours வாசப்படிமேல் தான் விழுகிறோம்.

தெருவுக்குத் தெரு அழகு நிலையங்கள் (பெண்களுக்கு மட்டும்

போர்டுகள . T V.யில்ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் விதம் விதமான

கம்பேனியிலிருந்து விதம் விதமான விளம்பரங்கள்!!!

ஐஸ்வர்ய ராய் முதல் எல்லா உலக அழகிகளும், இனிமேல்

உலக அழகிகளாகப் போகிறவர்களும் முடியை இப்படி திருப்பி

அப்படித் திருப்பி ,கழுத்தை வெட்டி, விளம்பரங்களைப் பார்த்து

அலுத்து விட்டது……..இது பெண்களுக்கு…..

(பெண்களின் அழகே முடியில் தான் இருக்கறது்

சீவி சிங்காரிச்சு…….. எத்தனை சினிமாவில் பாட்டு கேட்டிருறோம்)

ஆண்களுக்கு பத்ரிக்கையில் விதமான டோபா விளம்பரங்கள்

அதிலும முடியை கருப்பாக மாற்ற T V மிலிடரி வளம்பரங்கள்

எக்கச்சக்கம் போங்கள்!!!!

WORLD FAMOUS PICASSO WITH BALD HEAD

இதையெல்லாம் பார்த்துதான் காலஞ்சென்ற திரு சோ அவர்கள்

தலையை மொட்டை அடித்துக் கொண்டார். தலைக்கு வார

சீப்பு வேண்டாம், எண்ணெய் வேண்டாம்,தலையை அதிகமாக

துவட்ட வேண்டாம்,பார்பர் ஷாப்பில் மணிக்கணக்காக உட்கார

வேண்டாம்,அதற்கான பணமும் மிச்சம்……நேரமும் மிச்சம்

நான் எந்த விதமான மூலிகைத் தைலமோ,மருந்தோ

அல்லது டோபாவோ வைத்துக் கொள்ளச் சொல்லப் போவதில்லை.

ஆனால் எந்த கிரகத்தினால் இப்படி வருகிறது….அதற்கென்ன,

பரிகாரம்???

என்ன….எவ்வளவு பெரிய சமாசரத்தை இவ்வளவு சிம்பிளாக

முடிக்கிறீங்களே??? என்று நீங்கள் கூறுவது என் காதில்

விழுகிறது……..

மேட்டரை இத்தோடு விடுங்கள்…. ஏனென்றால் உலகெங்கும்

முடியைப் பற்றி 1232 ஆராய்சி நிலயங்கள் முடியை பிய்த்துக்

கொண்டு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன!!!!

நல்லொதொரு ரிசல்ட் வர அந்த ‘திருப்பதி பெருமாளை’த்தான்

வேண்டுகிறேன். திருப்பதி, முடி, என்றவுடன் ஞாபகத்துக்கு வந்தது

ஒரு விஷயம்.

2019 வருடம் மொட்டை அடித்துக்கொண்டவர்கள்

12 லட்சத்து 88ஆயிரம் பேர்.

முடியின் எடை-17,ஆயிரத்து 200 கிலோ!

ஏலம் போன தொகை -7 கோடியே 69 லட்சம்!!!- (தகவல்கூகுள்)

சுமார் ஒரு.  கிலோ முடி விலை சுமார் ரூ4, 700/-

உலகத்திலேயே அதிக முடி ஏற்றுமதி இந்தியாவிலிருந்துதானாம்

சரி விஷயத்திற்கு வருவோம்.

அழகான முடிக்கு அதிபதி சுக்கரன். கேதுவுக்கும் பங்கு உண்டு.

 ஆனால மெயின் பங்கு சுக்கிரனுக்கே!!!

சுக்கிரன் லக்னத்தில் இருந்தாலோ, ஆட்சி உச்சம் பெற்றாலோ

அந்த பெண் ‘லக்கி கேர்ல்!!!’ அவ்வளவு அழகான முடி அமையும்  

மகரத்தில் உச்சமானால்  கேட்வே  வேண்டாம்  நீளத்திற்கு!,,,

சரி உதிர்வதற்குக் காரணம் உடல்சூட்டினால்..

சூரியன் உச்சமானலோ செவ்வாயுடன் சேர்ந்திருந்தாலோ,செவ்வாய்

சனியுடன் ராகு சேர்தந்திருந்தாலோ முடி கொட்டோ

கொட்டுன்னு கொட்டும்.(.கொல்லை பக்கம் நின்று தலையை வாரவும்)

சனி , ராகு,கேது, சூரியன் ,செவ்வாய் இவர்களை எல்லாம் நீங்களே

வைத்துக் கொள்ளுங்கள்…… பரிகாரம் என்ன ???

தினமும்சூரிய நமஸ்காரம் செய்வது,( இது உடம்புக்கும் நல்லது)

சூரியன் சம்பந்தமான ஸ்தோஸ்திரங்கள்  சொல்வது;

உடல்சூடு தணிக்கும் உணவுப் பண்டங்களை உண்பது,

சூடு தணிக்கும் தைலங்கள் உபயோகிப்பது,

மகாலட்சுமியை வணங்கி ஸ்தோஸ்திரம் சொல்வது

பணம் வருவதற்கும் இவளே காரணம்; ஆகையினால் ஒரே கல்லில்

இரண்டு மாங்காய்!!! நிறைய முடி வளர என் ஆசீர்வாதம்!!!

திருப்தியுடன் சென்றாள் அந்தப்  பெண்மணி…….

முடி புராணம் முற்றியது…….

TAGS – சொன்னாலும் வெட்கமடா, மொட்டை, முடி, மயிர்

BOOKS INDIANS SHOULD READ – 27 (Post No.8574)

picture of C K Raju

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8574

Date uploaded in London – – – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

BOOKS INDIANS SHOULD READ – 27

Chapter – 10 (contd)

                   THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-5

Fundamentalist Christian Foolishness

Then dogmatic Christians raised a hue and cry. Based on their interpretation of the Old Testament, the Deluge had taken place in 2348 BC. How could astronomical knowledge pertaining to 3102 BC have survived?
 Biblical date was pure fiction, while the Indian astronomical observations pertaining to 3102 BC were proven according to their own science! So, the Edinburgh Review conceded that somehow, the ancient science had escaped destruction! Today, we know the Indians were correct, and the Biblical date is pure bullshit.

While conceding ancient Indian Astronomical knowledge, the Britishers thought that in the 18th century Indians knew very little. But how could they say that without contact with Indian astronomers? French astronomer M.Le Gentil did contact some Indian astronomers and received instruction in 1769. He then published some tables calculated under the Indian method in 1772. This was conceded by Encyclopedia Britannica.


Astronomy (Jyotisha) is a standard part of formal Vedic studies even today. Those who master it are able to calculate the movement of planets for years together, and routinely predict the lunar and solar eclipses and other unusual phenomena, like the conjunction of planets. They do not need telescope, periscope or any other  fancy scope. Vedic Jyotisha is pure Astronomy, based on science and mathematics.  



SATELLITES OF JUPITER AND SATURN

In 1783. Col.T.D.Pearse sent a paper to the Royal Society. London referring to the Indians’ knowledge of the four satellites of Jupiter and the seven satellites of Saturn. The satellites of Jupiter were not known in Europe before 1609. Herschel discovered the sixth and seventh satellites of Saturn only in August/September, 1789. But the Indians knew them before. The author who prepared Pearse’s memoirs remarked that the Indians must have possessed some telescopes to have been able to make these observations. He also said that though the Royal Society did not appear to have printed the paper of Pearse,  Herschel might have seen it !

Thus we see that the Britishers had to concede the scientific knowledge of the Indians at least grudgingly, indirectly. We shall see more aspects of Indian science separately.

Note:

1. In Indian traditional education, Jyotisha occupied an important place. This ‘Jyotisha’ refers to Astronomy, and not astrology. Astronomy studies the position and movements of the planets according to precise mathematical rules and calculations, and does not indulge in speculation about their effects on human affairs. 

2. Indians ought to become aware of the work of Dr.C.K Raju, mathematician and scientist.  He has shown that Eculid is a concoction, Ptolemy was fabricated after the Crusades, that Newton’s Calculus is Indian stuff based on the work of Neelkantha, translated by Jesuits in Cochin with the assistance of Brahmins and sent to Europe. Dr. Raju has shown how Newton “theologically sanitised’ the calculus to make it acceptable to the fanatical Christian clergy. Serious Indian students should study the works of DR. Raju. They may begin with the pamphlet “Is Science Western in Origin”  {Published by Multiversity, 2014.) See also his other writings, esp:”Time: Towards a Consistent Theory”, “Cultural Foundations of Mathematics.”, “The Eleven Pictures of Time.”.

                     *** chapter 10         

விலைமகளிர்க்கு மாளிகை சிலேடை – கம்பன்! (Post No.8573)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8573

Date uploaded in London – – –26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மாளிகைக் கவியை விலைமகளிர்க்கும் பொருந்த அமைத்த சிலேடை சிரேஷ்டன் கம்பன்!

ச.நாகராஜன்

கவிச் சக்கரவரித்தி கம்பனுக்கு நிகர் கம்பனே தான்! அணிகளை அமைப்பதிலும் நாம் நம்ப முடியாத இடத்தில் சிலேடையாக கவியை அமைப்பதும் அவனுக்குக் கை வந்த கலை.

ஒரு மாளிகையையும் விலைமகளிரையும் சிலேடைப் பொருள் ஆக்க முடியுமா? கம்பனால் முடியும்,

அயோத்தி நகர வர்ணனை. ஒரு மாளிகையை வர்ணிக்கிறான் கம்பன்.

பாடகக் காலடி பதுமத் தொப்பன

சேடரைத் தழீஇயன செய்ய வாயன

நாடகத் தொழிலன நடுவு துய்யன

ஆடகத் தோற்றத்த மகளிர் போன்றன

                              – பால காண்டம் நகரப் படலம் பாடல் 31

சின்னச் சின்ன சொற்களால் சீராக மாளிகையை நிர்மாணிக்கிறான் கம்பன்.

பாடு அகம் – வேலைப்பாடு அமைந்த

காலடி – தூண்களின் அடிப்பகுதிகள்

பதுமத்து ஒப்பன – தாமரை  மலர் வடிவமாக அமைந்துள்ளன

சேடரை தழீ இயன – அஸ்திவாரத்தின் ஆழத்தால் நாக லோகத்தை சேர்ந்துள்ளதாகவும்

செய்யவாயின – (அற்புதமான வேலைத் திறத்தால்) செப்பம் உடையதாகவும் ஆயின

நாடு அகம் தொழிலன – யாவரும் விரும்பிக் காணும் உள்வேலையை உடையதாக உள்ளன

நடுவு துய்யன – நடுவில் உள்ள இடமெல்லாம் சுத்த வெளியாக அமைந்துள்ளன

ஆடகம் தோற்றத்த – பொன்னினால் ஆகிய வெளி அமைப்பை உடையவனாக உள்ள மாளிகைகள்

மகளிர் போன்றன – விலை மகளிரை ஒத்து இருக்கின்றன.

விலை மகளிர்கள் பாடகம் என்ற ஆபரணத்தை அணிந்த கால் என்னும் அடித்தாமரையைக் கொண்டவர்கள்.

சேடரை அதாவது வாலிபர்களைத் தழுவுவது அவர்கள் தொழில்.

செந்நிற வாயுடன் இருப்பது அவர்களின் இயல்பு.

நாடகம் ஆடும் தொழிலைப் பயின்று அதில் வல்லவர்கள் அவர்கள்.

அவர்களது இடையோ சிறுத்த இடை. அது பஞ்சின் தொடர் நுனியை ஒத்திருக்கிறது.

ஆடகம் ஒப்ப அதாவது பொன் போல ஒளிர்கின்ற மேனியை உடையவர்கள் அவர்கள்.

மாளிகையை வர்ணிக்கையில் அதே சொற்களால் விலை மகளிரையும் வர்ணித்திருப்பதால் இது சுருங்கச் சொல்லணி என்று சொல்லப்படும்.

சேடர் என்றால் விடர் அல்லது இளைஞர்கள் என்ற பொருளைத் தருகிறது.

பாடகம் கால் என்ற சொற்கள் பக்கங்களிலும் அகத்திலும் நாட்டப்பட்ட தூண்கள் என்ற பொருளைத் தருகிறது.

சேடரைத் தழீ இயன என்பதால் பெரியோரைத் தம்மிடத்துப் பொருந்தியன என்ற பொருளைப் பெறலாம்.

செய்யவாயின என்பதால் நேர்மையான வாயிலை மாளிகைகள் கொண்டிருப்பதை அறியலாம்.

நாடகத் தொழிலன என்பதை நாடு, அகம், தொழிலன எனப் பிரித்து மனதினால் கருதி செய்யப்படும் சித்திரத் தொழில் என்றும் கொள்ளலாம்.

இப்படி தேர்ந்தெடுத்த சொற்களால் சிலேடையைத் தரும் கம்பனை சிலேடை சிரேஷ்டன் என்று சொல்வதில் தவறில்லை அல்லவா?

கம்ப ராமாயணம் முழுவதும் படித்தால் அதில் வரும் பல்வேறு அணிகளைக் கண்டு வியக்கலாம்; சிலேடைகளைக் கண்டு ரஸிக்கலாம்!

tags – விலைமகளிர், மாளிகை சிலேடை , கம்பன்

INDEX 16 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8572)

YUDDHA KANDA PICTURES FROM VALMIKI RAMAYANA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8572

Date uploaded in London – 25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்ச் 2014

தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி , கட்டுரை எண் .945; 31 மார்ச் 2014

அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள் ?, கட்டுரை 943; 30/03

தமிழ் சம்ஸ்கிருத மொழிகளின் அழகே, அழகு , கட்டுரை 943, 30/03

சிந்து சமவெளி நாகரிகம் பெயரை மாற்றுக , கட்டுரை 941, 29/03

புத்தர் செய்த தவறு : சுவாமி விவேகானந்தர்; 939; 28/03

உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா ? வினா-விடை; கட்டுரை 937; 27/03

நாம் மேல்நாட்டு வித்வங்களுடன் வாதம் செய்ய முடியாது- பகுதி 3; கட்டுரை 936; 27/03

அரியநாயகி புரம் அய்யரின் வடதுருவ யாத்திரை

மஹாபாரத மர்மங்கள் ; விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது ; கட்டுரை 934; 26/03

பகுதி 2; கட்டுரை 935; 26/03

வாழைப்பழம் வாழ்க ; கட்டுரை 932; 26/03

ஏணியா தோணியா , எது வேண்டும் ? கட்டுரை 928; 24/03

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி கட்டுரை 927; 24/03

காலா, என் காலருகே வாடா :ஞானிகளின் ஞானத்  திமிர் ; கட்டுரை 925; 23/03

ஜகத்குரு போப் தரிசனம்; அரியநாயகிபுரம் அய்யரின் வட துருவ யாத்திரை- பகுதி 2;

கட்டுரை 923; 22/03

வீடு வரை உறவு; கடைசி வரை யாரோ ? கட்டுரை 921; 21/03

அரியநாயகிபுரம் அய்யரின் வடதுருவப் பயணம் – 1; கட்டுரை 919; 20/03

சம்பந்தர் பார்த்த ‘கராத்தே’ அடி; கட்டுரை 917; 19/03

ஞானப்படகு பற்றி  தேவாரமும் கீதையும் தரும் தகவல்; போஸ்ட் 91418/03.

உஷார் கடவுள் கையில் நோட்டுப் புத்தகம்; மூன்று பேர்  பார்த்துவிட்டனர்; கட்டுரை 912; 17/03

பாட்டன் பூட்டன், ஓட்டன் = பாட்டி, பூட்டி,  ஊட்டி : தேவாரம் தரும் அதிசய தகவல் ; கட்டுரை 910; 16/03

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் , எப்ரல் 2012,

திருமூலர் சொன்ன யானைக்கதை : தெரிந்த கதை, தெரியாத உண்மைகள்

யானைக்குத் தோல்வி, பூனைக்கு வெற்றி ; கட்டுரை 902; 12/03

கொக்கைப் போல இருப்பான், கோழி  போல இருப்பான்,

உப்பைப்  போல இருப்பான் பக்தன், கட்டுரை 900, 11/03

மதுரை பார்க்காதவன் கழுதை; கட்டுரை 898, 10/03

கிணற்றுத் தவளை : அப்பரும் விவேகானந்தரும் சொன்ன கதைகள் , கட்டுரை 896; 8/03

நல்லோர் அவை புக்க நாகமும் சாகா ; கட்டுரை 894; 8/03

யானையை விழுங்கிய மலைப் பாம்புகள் : தமிழ்ப் புலவர் தகவல் ; கட்டுரை 892; 7/03

400 வகை யாகங்கள் : காஞ்சி பரமாச்சாரியார் உரை, கட்டுரை 890. 6/03

மலர்ந்தும் மணம் வீசாத மலர், கட்டுரை 887, 5/03

உலகம் கெட்டுப்போனதற்கு பிராமணர்களே காரணம் , கட்டுரை 885; 4/03

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த இந்து சாமியார் , கட்டுரை 883; 3/03

மாணிக்கவாசகரின் காலம்- பகுதி 2, கட்டுரை 882; 3/03

மாணிக்கவாசகரின் காலம் என்ன ? மிகப் பெரிய சைவப் புதிர் , கட்டுரை 880, 2/03

தமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள் , கட்டுரை 878, 1/03

கொலைகாரனைக் கட்டிக்கொடுத்த கிளி , மார்ச் முதல் தேதி, 2014

XXXXX

MARCH 2014

Agni in the oldest Tamil book Tolkappiam, Post 946; 31 March 2014

Krishna’s Names in the Bhagavad Gita, Post 944,30/03

Change Indus Valley civilisation to Ganges valley civilisation! Ulta!  post 940;29/03

Buddha made one false step in stopping Sanskrit: Swami Vivekananda , Post 938;27/03

Medical Science solves Ten Mysteries in the Mahabharata, Post 933;26/03

Did Agastya drink ocean? Post 931;25/03

Do you want Ladder or Boat to reach God? Post 928; 24/03

Fall of Brahmin Kingdoms in Pakistan& Afghanistan; Post 926,23/03

Andal by C Subrahmanya Bharati, Post.924;22/03

Kaa te kaantaa? Kaste Putraha? Who is wife? Who is son? Post 922: 21/03

Interesting Words in the Bhagavad Gita, Post 920:20/03

The Place of Woman by Subrahmanya Bharati,Post 918;19/03

Vaishnavite saint Nammalvar, Post 915:18/03

Kandava Vana= Gondwana land , River Congo = Holy Ganga, Post 913;17/03

God’s Note book, Post 911: 16/3

Good Thoughts Calendar 2014(April) , Post 909: 15/03

Blind men and the Elephant: Known Story, Unknown Facts, Post 907, 14/03

Ganga Jal (Ganges water ) for a Donkey , Post 905: 13/09

Elephants Lost, Cats Won! A sad story from Indian History, Post 903; 12/03

God is a Thief: He has stolen My Heart, Post 901: 11/03

Saraswati Statue in Saudi Arabia, Post 899;10/03

Frog in the Mouth of a Snake :Tamil Saints Simile Post 897;9/03

Swami Vivekananda on Krishna and Gopis , Post 895;8/03

Kanchi Paramacharya s Golden Sayings, Post 893; 7/03

400 Types of Yagas ( Fire Ceremonies) , Post 891; 6/03

Art of Public Speaking: Views of Adi Shankara and Valluvar, Post 886;4/03

Hindu Saints Upadesa to a Muslim devotee, Post 884;3/03

Manikkavasagar’s Age : History Puzzle Solved, Post 881; 2/03

Monkeys in Ancient Tamil Literature, Post 879;1/03

Murder Mystery is solved by a Parrot, Post 877; First March 2014

XXXXX

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for  MARCH,  2014

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 16, INDEX 16,  LONDON SWAMINATHAN,  2014 ,POSTS

கடன் பற்றிய 6 தமிழ்ப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post.8571)

written by LONDON SWAMINATHAN

Post No. 8571

Date uploaded in London – 25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடன் என்ற சொல் மீண்டும் மீண்டும் பல பழமொழிகளில் வந்தால், கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும்;

விடைகள் கீழே உள.

1.கடன் வாங்கி செலவு செய்தவனும் மரம் ஏறி கைவிட்டவனும் சரி

2.கடன் வாங்கியும் பட்டினியா ?

3.கடன் வாங்கியும் பட்டினி , கல்யாணம் பண்ணியும் சந்நியாசி

4.கடன் வாங்கி, உடன் வாங்கி ,அம்மை கும்பிட , நீ யார் கூத்தி விழுந்து கும்பிட?

5.கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு

6.கடன் பட்டார் நெஞ்ச்ம போல் கலங்குகிறது

TAGS —  கடன், பழமொழி

–சுபம் —

நாடி ஜோதிடம் பலித்தது !!! (Post. 8569& 8570)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8569

Date uploaded in London – 25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(கத்துக்குட்டியின் சொந்த அனுபவம்)

சுமார் 40 வருடங்களுக்கு முன் நான் தொழிற்சாலையில்

வேலை செய்து கொண்டிருந்த போது எனது நெருங்கிய

நண்பர் என் வீட்டிற்கு வருகை தந்தார்.வரவேற்று காப்பி

கொடுத்து உபசாரம் எல்லாம் ஆன பிறகு நண்பர் சொன்னார்

அடுத்த ஞாயிறு எங்கேயும் அப்பாயிட்மெண்ட் (appointment) வைத்துக்

கொள்ளாதே…… ஒரு முக்கிய இடத்திற்கு போகிறோம்

என்ன இடம் ….எங்கே…..எதற்கு????

கவலைப்படதே சார், விருது நகர் பக்கத்தில் கவலூர்

என்றொரு கிராம ம் இருக்கிறது. அங்கே ஒருவர் நாடி

ஜோதிடம் பார்க்கிறாராம்.இன்னும் மூன்று பேரையும்

“செட்டப்”பண்ணியிருக்கிறேன்…….வா, ஜாலி ஆகப் போய்

வருவோம்.

நண்பர் சொல்லும் போது மறுப்பேது????

ஞாயிறு காலை 7 மணிக்கெல்லாம் மதுரை சென்ட்ரல்

பஸ் ஸாண்டில் அசெம்பிள் (assemble)ஆனோம். முதலில் டிபன்,காப்பி

பிறகு பயணம்…..மொத்தம் ஐந்து பேர்கள்.பஸ்ஸில் கூட்டமே இல்லை.

கண்டக்டரிடம் “ஐந்து கவலூர்”……கண்டக்டர்

எங்களைப் பார்த்து “எங்கே நாடி ஜோஸ்யர் வீட்டுக்கா???.”

நாங்கள் போவது இவருக்கு எப்படி தெரியும்???

அவரே பதில்சொன்னார் இன்னும் அடுத்த பஸ்ஸில் பாருங்கள்

இன்னும் கூட்டம் ஏறும் கவலூருக்கு……

கண்டக்டரே இறக்கி விட்டு வழியும் சொன்னார்……

ஹோ ,இவர் பிரபலமான ஜோதிடர் போலும்!!!!

நல்ல பெரிய வீடு. வாசலில் பெரிய பந்தல். உள்ளே 10

பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 60 வந்து மதிக்கத்குந்த

ஆசாமி நடுவில் . பக்கத்தில் ஒருவர் சாய்வு மேஜை கையில்

பேனா 10 நாற்பது பக்கம் நோட்டுகளுடன் ஒருவர்.

முதலில் வந்தது யாரு??? கணீரென்ற குரல்!!! கையில் உள்ள

ஏட்டைப் புரட்டினார்,கட்டை விரலைப் பார்தது ரேகை பெயரை

சொல்ல கட கட வென பாட்டு வடிவத்தில் சர மாரி

பாட , அருகில்  உள்ளவர் அதை எழுதிக் கொண்டே இருந்தார்

4 பேரைப்பார்ததும் கூட்டம் 20 பேராகி விட்டது………

.அங்குள்ள அனைவர் பெயர்களை தனித்தனி சீட்டில் எழுதச்

எழுதச் சொன்னார். யார் மகேந்திரன்??? கையை தூக்கினார்

அவர்……இன்று உங்கள் முறை . நீங்களதான் இன்று

எல்லோருக்கும் ஆமை வடை வாங்கித்தர வேண்டும்…….

மறுப்பே கிடையாது எனென்றால் நாடி பார்க்க வேண்டுமே??

( பிறகு தான் தெரிந்தது இது அவர் “சைடு” பிஸினஸ் என்று!!!! )

5 பேர்களை பார்த்த பின் என்முறை வந்தது. கட்டை விரல்

ரேகையைப் பார்த்து” கும்ப வெள்ளி முச்சுடர் ரேகை”……

உங்கள் பெயர்… கலியுகத்தோனின் நாமம்..சரி

உனக்கு இரண்டு கிரகம் உச்சம்….சரி

வாய்க்கப் போகும் மனைவியின் பெயரோ தாமரையின் வாசத்தாள்.

So far so good!

இதற்குப் பிறகு எல்லாம்…..flop……

கடைசியில் சொன்னாரே ஒரு வார்த்தை!!!! உனக்கு கூடிய

சீக்கிரம் “நாலு கால் ஊர்தி” கிடைக்கப் போகிறது!!!!

என் கூட வந்த ஓவ்வொருவரும் சிரித்து விட்டனர் அவ்வளவு

தான் தட்சிணையை கொடுத்து விட்டு வெளியே வந்து

சிரிப்பாய் சிரித்தோம் . ஏய் , எங்களையும் உன் காரில்

ஏற்றி கொள்ளப்பா….. சிரிப்பு!!!!

வீட்டுக்கு வந்த 3 மாதம் ஆயிற்று. ஆபீஸில் என்னைப் பார்க்கும்

போதெல்லாம் நாலு கால் ஊர்தியில் எப்பொது எங்களை கூட்டிக்

கொண்டு போகப் போகிறாய்????

ஒரு ஞாயிற்றுக் கிழமை பாத்ரூமில் வழுக்கினது தான் தெரியும்

நான் கண்விழித்த போது ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலில்

துடை வரைக்கும் பெரிய மாவுக் கட்டு…….ஒரு மாதம் ரெஸ்ட்

என்று விட்டார் டாக்டர்……டிஸ்சார்ஜ் ஆகப்போகும் நான்எப்படி

வீட்டுக்கு போகப் போகிறேன் எப்படி வெளியில் வந்து பார்ப்பேன்??

என்றெல்லாம் மன ஓட்டம்…..ஆஸ்பத்திரி ரூம் வாசலில்

ஒரு “வீல் சேர்”. அன்று என்னுடன் வந்த 4 பேரும் சொந்த

பணத்தைப் போட்டு வாங்கி எனக்கு கொடுத்த” present”!,.,

அன்று சிரித்த அவர்கள் இன்றும் விட்டுக் கொடுக்க வில்லை.

அன்று நாடி ஜோஸ்யர் சொன்ன மாதிரியே உனக்கு நாலு கால்

ஊர்தி. உனக்கு வந்திருக்கிறது பார்!!,!

நாலு சக்கரமும் என்னைப் பார்த்து சிரித்தன!!!!

XXXXX

லண்டனில் நாடி ஜோதிடம் (Post No.8570)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8570

Date uploaded in London – 25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனில் நாடி ஜோதிடம்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நானும் என் மகனும் வாரம் தோறும் வேதம் கற்க ‘சிந்தி மந்திரு’ (Sindhi Mandir) க்குப் போவோம். அங்கு திருச்சி கல்யாண சுந்தர குருக்கள் எங்களுக்கு ருத்ரம், சமகம், சூக்தம் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஏர் இந்தியா Air India வெங்கடராமன் அல்லது இந்தியன் ரயில்வே India Railways ஏஜெண்ட் Mr.தண்ட பாணி எனக்கும் என் மகனுக்கும் காரில் லிப்ட் (Lift)  கொடுப்பார்கள். ஒரு நாள் Mr.வெங்கட்ராமன் என்னிடம், ஒரு உதவி கேட்டார். அவருடைய நண்பருக்கு தமிழ் செய்யுள் சிலவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்றார் . எனக்கோ தமிழ் என்றால் நெய் ஒழுகும் கோதுமை ஹல்வா சாப்பிட்டது போல. உடனே தயங்கமால் யெஸ் YES என்று சொன்னேன்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. வீட்டு வாசலில் கார் நின்றது. காரில் செல்லுகையில் வெங்கடராமனிடம் எங்கு போகிறோம், யாரைப் பார்க்கப் போகிறோம், என்ன செய்யுள்? அவர் இயற்றியதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.

திரு வெங்கடராமன் சொன்னார்: நாம் பார்க்கப்போகும் மனிதர் லண்டனில் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவர் இராமாயண உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா என்றார் . அவர் மகனைப்பற்றி ஒரு நாடி ஜோதிடர் எழுதிக் கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்க்கத்தான் உங்களை அழைத்தார்.

இதைக் கேட்டவுடன் எனக்கும் மகிழ்ச்சி. அட ஒருவர் தன் குடும்ப ரஹசியங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரது வீட்டில் அமர்ந்து நாடி ஜோதிடர் 40 பக்க நோட்டில் அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்த்து முடித்தேன். அவர் காதால் கேட்டாரே தவிர ஒன்றும் குறித்துக் கொள்ளவில்லை. எனக்கும் வியப்பு.! என்னடா இது. இவ்வளவு கஷ்டப்பட்டு மொழி பெயர்க்கிறோம்; கவனமாகக் கேட்கிறார். ஆனால் ஒன்றும் எழுதிக் கொள்ளவில்லையே என்று நினைத்தேன்.

செய்யுட்களை மொழிபெயர்த்து முடித்ததுதான் தாமதம்.

EXACTLY SAME ! எக்ஸ்சாக்ட்லி சேம் ; ‘பில்குல் டீக் ஹை’ என்றார்

என்ன பொருள் என்று வினவினேன்.

ஏற்கனவே ஒருவர் அவ்வளவு செய்யுட்களையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார் என்றும் நான் அப்படியே அதை மொழி பெயர்த்தேன் என்றும் பாராட்டி நன்றி சொன்னார்.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

அட! பாவி மனுஷா! இதை முன் கூட்டியே சொல்லி இருக்கக் கூடாதா ? நான் இன்னும் கவனமாக பயந்து கொண்டே — பய பக்தியுடன் — மொழி பெயர்த்து இருப்பேனே! என்று மனதில் பொருமினேன் .

போகட்டும்; அவரிடம் போனபோது ஒரு புதிய விஷயம் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஒரு பிரபல நாடி ஜோதிடர் இருக்கிறார். நிறைய வெளி நாட்டுக்காரர்கள் அவரை மொய்ப்பதால் அப்பாயிண்ட்மெண்ட் APPOINTMENT இல்லாமல் பார்க்க முடியாது ; இந்த ஹிந்திவாலாவும் ஒவ்வொரு முறையும் அவரைப்  பார்த்து  ஜோதிடம் கேட்பது வழக்கம். அவர் துல்லியமாக சொல்லுவார். அருகிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதிக் கொடுப்பார்கள் என்று.

நானும் நினைப்பேன்; அடுத்த முறை காஞ்சி செல்லும்போது இவரைப் பார்த்துவிடவேண்டும் என்று. ஆ னால் நான்  ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும்போதும். காஞ்சி மடத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவே நேரம் சரியாகப் போய்விடுகிறது.

2018ல் இந்தியாவுக்குச் சென்ற போது நிறைய நேரம் மரத்துக்கு அடியில் காரை நிறுத்தி 5 மணி நேரம் வீணடித்தேன் . காலை ரவுண்டு கோவில்களை ஒன்னரை மணிக்கு (1-30 PM) முடித்தோம். அடுத்த ரவுண்டு 5 PM அல்லது 6 PM மணிக்குத்தான் கோவில்கள் திறக்கும் என்றார்கள் . சகுந்தலா நினைவு மியூசியத்தைச் சுற்றிப்பார்த்தேன்; சமண காஞ்சிக்குப் போய் கொதிக்கும் வெயிலில் பாதி மலை ஏறி வி ட்டு குரங்குகள் மட்டும் இருப்பதைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டேன்; ஜன நடமாட்டமே இல்லை. அப்போது கூட இந்த நாடி ஜோதிடர் நினைவுக்கு வரவில்லை.

உண்மைதான் ; நாடி ஜோதிடரைப் பார்க்கப்போவதும் விதிப்படிதான் நடக்குமாம். நாம் போகும் போது நம்மைப் பற்றிய நாடி அவர் தொகுப்பில் இருக்குமாம். அவரிடம்  அந்த நாடி ஓலைகள் இல்லாவிடில் அவரிடம் செல்லாமல் நம்மை விதியே தடுக்குமாம்.

வாழ்க “நல்ல” நாடி ஜோதிடர்கள் !

TAGS —  நாடி ஜோதிடம், பலித்தது, லண்டன், காஞ்சிபுரம்

CHINESE ASTROLOGY; I TOOK THESE PICTURES IN HONG AND AUSTRALIA

–SUBHAM–