சின்னச் சின்ன செயல்கள்; பெரிய லாபம்! (Post No.7789)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7789

Date uploaded in London – – 6 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்

ஏழாவது உரை

(7-3-2020 அன்று ஒலிபரப்பானது)

சின்னச் சின்ன செயல்கள்; பெரிய லாபம்!

சுற்றுப்புறத்தை மாசின்றி காக்க அரசாங்கம் அல்லவா பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்னால் என்ன செய்ய முடியும் என்று பலரும் தவறாக எண்ணுகின்றனர்.

ஒவ்வொருவரும் சிறுசிறு செயல்களால் கூட சுற்றுப்புறச் சூழலை மாசு கெடாமல் பாதுகாக்க முடியும்; அரிய நீர் வளம். மின் ஆற்றல் உள்ளிட்டவற்றைச் சேமிக்க முடியும்.

எடுத்துக் காட்டாக பெரிய டம்ளரில் நீர் எடுத்துக் கொடுப்பதை விட்டு விட்டு சிறிய டம்ளரில் நீர் தந்து, தேவையெனில் மேலும் கொடுக்கும் பழக்கம் ஏராளமான அளவில் குடிநீரைச் சேமிக்கும். உத்தரபிரதேச சட்டசபை கூட இந்தச் சின்னச் செயலைச் செய்ய ஊக்குவித்துப் பயனடைந்து வருகிறது.

சைக்கிளில் செல்லக் கூடிய தூரத்தில் உள்ள இடங்களுக்கு அதில் செல்வதன் மூலம் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். இதனால் கார்பன் நச்சுப்புகை வளிமண்டலத்தில் சேரும் அபாயம் தவிர்க்கப்படும்.

ஒரே இடத்திற்குச் செல்லும் அடுக்குமாடிக் குடியிருப்பு அண்டை அயலார் முன்னமேயே பேசி வைத்து ஒரே வாகனத்தில் செல்வதன் மூலம் ஏராளமான எரிபொருளைச் சேமிப்பதோடு காற்று மாசையும் தடுக்கலாம்.

வீட்டில் உள்ள ஏர் கண்டிஷன் சாதனம் மற்றும் வாட்டர் ஃபில்டரிலிருந்து வெளியேறும் நீரை ஒரு பக்கெட்டில் பிடித்து அதை செடிகளுக்கு ஊற்றலாம்.

கைகளால் சுத்தம் செய்யக் கூடிய துணிகளை வாஷிங் மெஷினில் போடாமல் தவிர்த்து மின்னாற்றல், நீர் வளம் ஆகியவற்றைக் கூடியமட்டில் சேமிக்கலாம்.

துணிப்பைகளைக் கட்டாயமாக கடைகளுக்குக் கொண்டு சென்று, கடைகளில் தரும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் பைகளைத் தவிர்க்கலாம்.

கணினியில் மின்னஞ்சலை அதிகம் சேர்க்காமல் அவ்வப்பொழுது அதை நீக்கி விடலாம். சின்னச் செயல் தானே இது என்று அலட்சியம் செய்யாமல் விளைவு என்ன என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். 1 GB அளவுள்ள email எனப்படும் மின்னஞ்சல் ஒரு வருடத்திற்கு 32.1 Kilowatt hour ஐ எடுத்துக் கொள்கிறது. பிரான்ஸில் இது பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸில் உள்ள ஒவ்வொருவரும் 50 மின்னஞ்சல்களை நீக்கினால் அதனால் சேமிக்கப்படும் ஆற்றலை வைத்து ஈபில் டவரை 42 ஆண்டுகளுக்கு ஒளிபெறச் செய்யலாம் என்று ஆய்வு கூறிய போது அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் செய்தியாக அது அமைந்தது.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஒவ்வொரு சிறு செயலும் பல்லாயிரக்கணக்கானோர் செய்யும் போது அது பெரும் சேமிப்பைத் தருகிறது.

அவரவர் வசதிக்கும் இடத்திற்கும் மனப்பான்மைக்கும் தக, தங்கள் செயலை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் உத்வேகமூட்டும் நபராக ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொண்டால் விளையும் பயன் பெரிதாகும்!

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி542020 (Post No.7788)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7788

Date uploaded in London – 5 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. –(6) — உலகிலேயே நீண்ட இதிஹாச நூல்

5. – (3) பலராமனின் மனைவியான ரேவதியின் தந்தை

6.. –  (4) தமிழ் போர் வீரர்கள்

7. – (8) மழை பொழிவதற்கு முன்னர் கருத்த நிறத்தில் கூட்டம் கூட்டமாக வரும்.

10. — (3) – இனிப்பு, யாக குண்டம் (வலமிருந்து இடம் செல்க

11. – (4) புலி வம்சம்; ஆனால் உடலில் புள்ளிகள் இருக்கும்

12 – (4) சிவப்பு நிறம்; உடலில் ஓடும்

13. – (8) அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தவனும் அவனுக்குப் பிறந்தவனும்

Xxxx

கீழே

1.  — (7)- தலையாலங்கானத்துச்  செருவென்ற நெடுஞ்செழியனைப் புகழ்ந்து மாங்குடிமருதன் நூல்.

2. — (4) — பாம்பு

3. – யுதிஷ்டிரன்; புறநாநூற்றில் கோதமனாரால் பாடப்பட்டவன்

4. — (5) வானுல கவாசிகள் ; அசுரர்களின் எதிரி

8. –  (2) எருமை; நெற்களம், வெந்தயம்

9. – லாக்கரைத் திறந்தால் கரன்சி நோட்டுகள் இப்படி இருக்கும்.

14. – சுதந்திரப்  போராட்ட வீரர்கள் ராட்டையில் நூற்று அ ணிந்த வெள்ளைத் துணி / கீழிருந்து மேலே செல்க

—subham—

ADVERTISING ANECDOTES (Post No.7787)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7787

Date uploaded in London – 5 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Chiselling and Swindling Anecdotes

What is a bonanza ?

A lesson well learned is demonstrated by the remarks made by a man who had , at one time in the past, lost a great deal of money in a gold mine speculation. When asked by a friend to define the term “bonanza” he said .

A bonanza is a hole in the ground owned by a champion liar.”

Xxx

No need for you to live !

A man whom Dr Johnson reproved for following a useless and a demoralizing business said,

You know, doctor, that I must live.

Dr Johnson replied that “he did not see the least necessity for that”.

Xxx

Not all inhabitants of the Tobacco Road region of Georgia are as indigent as the Lester family. Witness the case of the motorist who had become bogged down in the sticky clay of an unpaved Georgia road and had paid ten dollars to be pulled out by a Georgia cracker with a team of mules.

“I should think, said the motorist, just about to get into his car to continue, that you would be pulling people out of this stuff day and night”.

“Nope, drawled the mule driver, at nights when we tote the water for the roads.”

Tote- convey something heavy

Xxxx

Unique in the entire field of advertising is S Klein, celebrated New York dress merchant. Klein advertises only occasionally to announce, in connection with holidays or other special days, that his store will be closed in order to keep immense crowds from being disappointed and needlessly cluttering up Union Square. He dares not advertise in any other way for, on the one or two times in the past when he attempted to do so and the result was an actual riot in Union Square, with cordons of police and fleets of squad cars required to restore peace.

Xxx

From the Lost and Found Column of a Nashville paper; Bird or Hat:- Flew in or Blew in out of car passing Daanacker’s service station, Franklin Road. It’s sorta round with green and red polka dot quills or feathers in it. If you have lost a bird or a hat, drive by and see it — it’s funny.

Xxx SUBHAM XXX

சங்க இலக்கியத்தில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ (Post No.7786)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7786

Date uploaded in London – 5 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் 450 தமிழ்ப் புலவர்கள்  ஏறத்தாழ 2500 கவிதைகள் இயற்றினர். இதில் 4 வரிப் பாட்டிலிருந்து 782 அடிகள் உள்ள மதுரைக்காஞ்சி வரை 18 நூல்கள் உள . இவற்றில் மதுரைக் காஞ்சி என்ற நூல் மதுரையின் சிறப்பைக் கூறுகிறது. ஆயினும் ஒரு வியப்பான செய்தி மதுரை என்ற சொல் 782 அடிகளில் வரவில்லை. அதைப் பாடிய மாங்குடி மருதனுக்கு ‘மதுரை பாக்காதவன் கழுதை’ என்ற மலையாளப் பழமொழி நினைவுக்கு வந்திருக்கும். அட, ஊரறிந்த பார்ப்பானுக்குப் பூணுல்  எதற்கு என்ற பாணியில் பாட்டின் தலைப்பில் மட்டும் மதுரையை வைத்துவிட்டு உள்ளே கூடல் முதலிய பெயர்களை பயன்படுத்துகிறார். அதில் மதுரை நகரில் அந்தணர் பள்ளி பற்றியும் பாடுகிறார். பிராமணர்களின் வீடுகள் மலைக்குடைவரை போன்ற அமைப்பில் வீடுகளில் வசித்ததாகவும் பாடுகிறார். அவர்கள் ‘தத்  த்வம் அசி (நீயே அது ) , அஹம் பிரஹ்மாஸி  (நானே பிரம்மம் /இறைவன் ) என்ற கருத்தை உணர்ந்தவர் அந்தணர் என்றும் போற்றுகிறார். இதற்கு அடுத்தபடியாக மதுரையில் அக்காலத்தில் இருந்த சமணர், பவுத்தர் பற்றியும் குறிப்பிடுகிறார்.

இக்கருத்தை ‘ஏகமேவ அத்விதீயம்’ என்ற பிரம்ம சூத்திர சொற்களாலும் விளக்குவார்கள். அதாவது ‘ஒன்றேயன்றி இரண்டல்ல’ என்னும் அத்வைத தத்துவம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

Nachiketas meeting Yama, Katopanishad

நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சி அந்தணர் பள்ளிக்கு எழுதிய உரைதனில்  ‘ஒருதாம்’ என்ற சொல்லை விளக்குகிறார்.

மதுரைக் காஞ்சி என்னும் சங்க கால நூல் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் நூல். எழுதியவர் மாங்குடி மருதனார்

உ.வே.சாமிநாதையர் வெளியிட்ட ‘பத்துப் பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்’ என்ற நூலும், ‘வேதங்களை ஏற்றுப்  போற்றும் தமிழ் இலக்கியங்கள்’ என்ற தலைப்பில்  கே.சி. லட்சுமிநாராயணன் எழுதிய மிகப் பெரிய நூலும் ‘ஒருதாம்’ பற்றிய விளக்கத்தைத் தருகின்றன .

முதலில் மதுரைக் காஞ்சி நூலில் வரும்  அந்தணர் பள்ளி வரிகள் – 468-474

“சிறந்த வேதம் விளங்கப் பாடி

விழுச்சீர்  எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி

உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்

அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்

பெரியோர் மேஎய் இனிதின் உறையும்

குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்”

பொருள்

மதுரை மாநகரில் அந்தணர்கள் வாழ்ந்த இடம் குறித்து இந்த அடிகள் தெரிவிக்கின்றன. அந்தணர்கள் வேதங்களை பொருள் விளங்க கற்று அறிந்தவர்கள்.  அவர்கள் அந்த வேதங்கள் கூறுகின்ற ஒழுக்கங்களின்படி வாழ்பவர்கள் . அவர்கள் தாங்களே இறைவர்கள்களாக ஆனவர்கள். அவர்கள் மிக உயர்ந்த மோட்சத்தை இந்த உலகத்தில் இருந்தபடியே அடைபவர்கள். அவர்கள் கர்ம நெறியிலிருந்து ஒரு போதும் விலகாதவர்கள். அவர்கள் உயிர்களிடத்தில்  அருள் நிரம்பியவர்களாக இருப்பவர்கள் .

ஒரு தாம் ஆகி – என்ற சொற்றொடர்  மிக ஆழமான பொருளைக் கொண்டது  அவனே தானே ஆகிய  நிலை. ஒன்றான பிரமம் தாங்களே ஆய் — என்பது பொருள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘தத் த்வம் அசி’ – ‘அது நீ ஆகிறாய்’ – என்ற வேத மஹா வாக்கியம் இது. இதை ‘அஹம்  பிரஹ்மாஸ்மி’ – ‘நான் பிரம்மம் ஆக இருக்கிறேன்’ என்றும் சொல்லுவார்கள்.

நச்சினார்க்கினியர் வேறு சில சுவையான செய்திகளையும் சேர்க்கிறார்.

“வேதங்கள் மூன்றே என்பதும் அதர்வ வேதம் மந்திர சாகை என்பதும் இங்கே அறியற்பாலன .

இருக்கும் யசுரும் சாமமும் – இவை தலையாய ஒத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தாற் காரியப்படுத்தலின் இலக்கியமுமாயின.அதர்வமும் ஆறங்கமும் தரும நூலும் இடையாய ஒத்து . அதர்வம் ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடு சூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று” — என்று தொல்காப்பிய புறத்திணை சூத்திரம் 20 க்கு நச்சி. எழுதிய உரையை உ.வே.சா . எடுத்துக்காட்டியுள்ளார்.

அந்தணர் என்போர் வேதாந்தத்தை எப்போதும் பார்ப்பார்.

இதனால் அந்தணர், பார்ப்பார் என்று அழைக்கப்படுவர்.

வேத+அந்தம்= வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு/ துணிபு. அதாவது உபநிஷதம் கூறும் உண்மை. tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீயே கடவுள் – என்னும் உயர் நிலை.

இதை அஹம் பிரம்மாஸ்மி , தத் த்வம் அசி என்பர்; இவை மகா வாக்கியங்கள் நான்கினில் இரண்டு.

மற்ற இரு வாக்கியங்கள்

பிரக்ஞானம் பிரம்ம

அயமாத்மா பிரம்ம

அந்தணர் என்போர் மூன்று வேதங்களைக் கற்றவர்கள்; நான்கு வேதங்களை அறிந்தவர்கள்  என்பதையும் நச்சி . உரை தெளிவாக உரைக்கிறது. சம்ஸ்கிருதத்தை அறியாதோர் வேதத்தைப் பயிலவும் இயலாது.

XXXXX

மூன்று கின்னஸ் நூல் சாதனையாளர்கள்

இந்தியாவில் மூன்று பேர் பிரம்மாண்டமான சாதனை செய்தனர். எழுதி, எழுதி, எழுதி, எழுதி …………. வாழ்நாள் முழுதும் எழுதித் தள்ளினார்கள். அவர்களில் முதலாமவர் வேத வியாசர். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் துவாபர யுகத்தில் வாழ்ந்தவர். கலியுகம் வந்தவுடன் ஒவ்வொரு வேத நூலாக அழியப் போகிறதை ஞானக் கண்களால் கண்டு  18 புராணங்களையும், உலகிலேயே மிகப் பெரிய நூலான  மகா பாரதத்தையும் எழுத்து வடிவில் கொணர்ந்தார்.வேதங்களையும் நான்காகப் பிரித்து 4 சீடர்களை அழைத்து  இதை பரப்புங்கள் என்றார் . அதனால் இன்று வரை எல்லா பிரிவு இந்துக்களும் அவரைக் குரு என்கின்றனர்; வழிபடுகின்றனர்.

அடுத்ததாக ஆதி சங்கரர். அவர் காலத்தில் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்’, தமிழில் ‘டைப் அடிக்கத்  தெரிந்தவன் எல்லாம் பிளாக் எழுதும் அறிஞன்’ என்ற அதி பயங்கரக் கொடுமை நிலவியது.  96 வகை பிரிவுகள் தாண்டவமாடின . அவற்றை எல்லாம் அழித்து அறு வகை வழிபாட்டை உருவாக்கி, உபநிஷதம் முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம் வரை உரைகளை எழுதித் தள்ளினார். அதனால் இன்றும் வரை இன்றும் குருவாக்கப் போற்றுவர் சிவனை வழிபடுவோர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதே போல தமிழுக்கு என்று ஒருவனை இறைவன் படைத்தான் அவர் பெயர் நச்சினார்க்கினியர் . மதுரையைச் சேர்ந்த பாரத்வாஜ கோத்ரப் பிராஹ்மணன் ; இதை அவரே ஒவ்வொரு உரைக்கும் கீழாக எழுதி பெருமைப்படுகிறார் . அவர் கையில் கிடைத்த,  தமிழ் நூல்களுக்கு எல்லாம் உரைகளை எழுதித் தள்ளினார். இதனால் அவரை மற்றவர்கள் ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்று பாடிப் பரவினர்

அவர் உரை ல்லாவிடில் இன்று பெரும்பாலான சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு அர்த்தம் தெரியாமல் போயிருக்கும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

tags — சங்க இலக்கியம், ‘அஹம் பிரம்மாஸ்மி’ ,மதுரைக் காஞ்சி, ‘ஒருதாம்’,
நச்சினார்க்கினியர்

—-subham—-

மோடி ஜி ! தட்டிப் பார்த்தால் தங்கம்!! எதிர் நோக்கும் சவால்கள்!!! (Post No.7785)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7785

Date uploaded in London – – 5 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

பிரதமர் நரேந்திர மோடி ஜியை தரக்குறைவாக சாய் வாலா என்று ஒருவர் விமரிசனம் செய்தார்.

நாட்டில் உள்ள அனைவருமே ஏழை முதல் பணக்காரர் வரை அதை புகழாரமாக எடுத்துக்கொண்டு ‘உயர்ப்பால் உயர்ந்தவர்’, ‘பேதமற்ற பெருமனிதர்’ என்பன போன்ற பட்டங்களை அள்ளி வீசினர்.

சாய் வாலா என்று பேசியவர் ஙே என்று விழித்தார்; இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறார்.

மோடி அவர்களைத் தட்டிப் பார்த்தால் அவர் ஒரு தங்கம் – பத்தரை மாத்துத் தங்கம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டனர்.

எந்த ஒரு பிரதம மந்திரிக்கும் இல்லாத, அல்லது எந்த ஒரு அரசருக்கும் இல்லாத வரலாறு காணாத ஒரு சவாலை – கொரானாவை அவர் எதிர் கொண்டிருக்கிறார்.

பேரரக்கன் கொரானாவைக் கண்டு உலகப் பெரும் தலைகள் அரண்டு மிரண்டு போயிருக்கும் இந்த நேரத்தில், ஒன்று கூடி வீட்டிலிருந்தே, நமக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் போலீஸ், நர்ஸ்கள், டாக்டர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், தன்னலம் கருதாத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வகையில் கையைத் தட்டச் சொன்னார்; தட்டினோம்.

உலகம் வியந்தது; இந்திய ஒற்றுமையைப் பார்த்து பிரமித்தது.

இது என்ன புது டெக்னிக் என்று! மற்ற நாடுகளும் கைகளைத் தட்ட ஆரம்பித்தன.அடுத்து தமஸோ மா ஜோதிர் கமய என்ற உத்தியை – இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லும் தீப மங்கள ஜோதியை ஏற்றச் – சொல்லி வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய மக்கள் ஜோதி ஏற்ற என்றுமே தயங்கவே மாட்டார்கள்!

ஹி ஹி இது என்ன டார்ச் லைட் என்பவர்களுக்கு வரலாறு காண்பிக்கும் உண்மைகள் பல

உப்பால் நாடு ஒன்று படுமா, இது என்ன உப்பு சத்யாக்ரஹம் என காந்திஜிக்கு அருகில் இருந்த பல தலைவர்களே சந்தேகம் கொண்டார்கள்; சிலர் ‘குழந்தைத்தனமானது இது’ என்று கோபமும் கொண்டார்கள்.

ஆனால் நாடே உப்பால் ஒன்று திரண்டது; வெள்ளைக்காரனை அரள வைத்தது.

அந்த உப்பு போல இந்த ஜோதியும் ஒற்றுமையை வளர்க்கும். அனைவரையும் இணைக்கும்.

மோடி ஜி இன்று எதிர் நோக்கும் தலையாய சவால்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன; வரலாறு காட்டும் தலைவர்கள் எவரும் எதிர் கொள்ளாத சவால் என்று துணிந்து அடித்துக் கூறலாம்.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்:

  1. ‘பிரமிக்கத்தக்க விதத்தில் நாட்டை ஓரிழையில் கொரானா காலத்தில் இணைத்து விட்டாரே, இந்த நாட்டை எப்படிச் சிதைப்பது’ என்று அரண்டு போயுள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகள் பல வித கெட்ட உத்திகளைக் கையாளும். இவர்களுக்குத் தக்க பதில் தர வேண்டும்.
  2. அரண்டு போயுள்ள பிரிட்டிஷ் மற்றும் மேலை நாட்டுப் பத்திரிகைகள் கெட்ட செய்திகளை இட்டுக் கட்டி வெளியிடுகின்றன. இப்படிப் பட்ட உலக பத்திரிகைகளின் பொய்களை முறியடித்து  உண்மையை உலகின் முன் வைக்க வேண்டும்.
  3. பிற நாட்டுப் பத்திரிகைகள் ஒரு புறம் இருக்கட்டும், இந்தியத் திருநாட்டில் ஐந்தாம்படை வேலை பார்க்கும் சில ஊடகங்களும், பத்திரிகைகள், குட்டி டிவிக்கள் மணிக்கு ஒரு பொய்ச் செய்தி என்பதை வெளியிட்டு மதக்கலவரம், இனக்கலவரம் ஆகியவற்றிற்கு வித்திடுகின்றன. இதை நீக்க வேண்டும்.
  4. பொருளாதாரச் சரிவு என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு போகும். இதைச் சரி செய்து மீள வேண்டும். ‘மனித உயிர்கள் தான் முதலில், ‘அவர்களுக்கான பொருளாதாரம் அடுத்து’ என்று உறுதியாகக் கூறிய அவர் அன்றாடக் கூலி வேலை பார்த்துப் பிழைக்கும் தொழிலாளிகள், அவ்வப்பொழுது கிடைக்கும் சவாரி கொண்டு வாழ்க்கை நடத்தும் ஆட்டோ ஓட்டிகள் போன்ற பல நூறு துறைகளைச் சார்ந்தோருக்கு உதவ வேண்டும். 130 கோடி பேர் கொண்ட நாடு என்பதை நினைக்கும் போது இது ஒரு பெரிய சவால்.
  5. ஏற்கனவே தீய நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் பணம் அனுப்பி வந்த என் ஜி ஓக்களைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்காகக் கடுப்பில் இருப்போர் கொரானாவை எப்படித் தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திட்டமிடுவர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
  6.  தொழிற்சாலைகள் இயங்காதிருத்தல், போக்குவரத்து முடக்கம், இயல்பான வாழ்க்கை இன்மை, கல்விச்சாலைகள் மூடி இருத்தல் – இவை எல்லாம் தற்காலிக நிறுத்தம் என்றாலும் பழைய தடத்தில் இயல்பாக இயங்க வைக்க வேண்டும். இது ஒரு பெரிய சவால்.
  7.  ஒரே நாடு என்ற சிந்தனை இன்றி, தனி இனம், மொழி, கலாசாரம் என்று பிதற்றி வந்து கொண்டே இருக்கும் சில குரூப்புகள் அயல்நாட்டுப் பணத்திற்கு இரையாகாமல் இருக்க வேண்டும்.
  8. ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் தடை போடும் கட்சிகள், தவறான ஆட்களுக்கு பேச்சு சுதந்திரம், தனி நபர் உரிமை என்ற பெயரில்  துணை போகும் அமைப்புகள் தரப் போகும் குடைச்சலை எதிர் கொள்ள வேண்டும்.
  9. குடைச்சலைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் சீனாவை பல்துறைகளிலும் பாங்காக எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.

இன்னும் பல, பற்பல!

ஆனால்  மோடி ஜியின் உடலில் ஓடுவது இந்திய மக்களின் அன்பு என்னும் இரத்தம். அந்த உடலைத் தட்டிப் பார்த்தால் தங்கமாக இருக்கிறது. அது மற்ற உலோகங்களை எளிதாக வெல்லும்!

ஒவ்வொரு இந்தியனும் இந்த வரலாறு காணாத ஆபத்துக் காலத்தில் மோடி ஜிக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். இருப்போம்; வெல்வோம்

tags- நரேந்திர மோடி, தமஸோ மா ஜோதிர் கமய, கொரானா

***

SWAMI CROSSWORD 442020 (Post No.7784)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7784

Date uploaded in London – 4 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Across

1. –(9)- wife of Duryodhana

3.– (6) – a chandas/poetic  metre with seven syllables in a pada; also name of a horse of the sun.

4.–(5) – desired object; Yajna; wish, desire.

6. – (5) -food; in Tamil swan

8.– (6) – Descended from Manu; youth, lad, mankind ; in Tamil student

9.– (3) a Sanskrit adverb or preposition meaning unto, near or towards, against,  with regard to

10.– (8)- Great Black Goddess of Kolkatta; Parvati in her malevolent form

11. (4)—In India it goes with crow and te sound it makes

12. – (5) feminine name; all, everything

13. – (8) – mother of Pandu and grand mother of Pandavas/ go from right to left

xxxx

Down

1. – (7)- Devavrata, Gangeya; grandsire of the Kaurava/Pandava family.

5. – (4) – moon and elixir in Vedas

2. – (6) – new in Sanskrit; name of a person

7. – (5) – crocodile

6. – (6) – Mother of Dhritarashtra and grand mother of Kauravas

–subham–

பெண்ணை எதிர்பார்த்து புலியிடம் சிக்கிய ஆசிரியர் (PostbNo.7783)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7783

Date uploaded in London – 4 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு ஊரில் பணக்கார வணிகர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகள் . அவளை அந்த ஊர் ஆசிரியர் ஒருவரிடம் அனுப்பி கல்வி கற்க வைத்தார்.வருடங்கள் உருண்டோடின. ஒரு நாள் அந்தப் பெண் பருவம் எய்திய செய்தி வந்தது. உடனே அந்த வணிகர் மகளை அழைத்து, “பெண்ணே நீ இனி தினமும்  அவர்  வீட்டுக்குச்  சென்று கல்வி கற்க இயலாது . ஆகையால் ஒரு நல்ல நாளில் அவருக்கு குருதட்சிணை , வெற்றிலை, பாக்கு, பழங்கள் கொடுத்து நமஸ்காரம் செய்து விட்டு வா” என்றார் .

அந்தப் பெண்ணும் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு , ஆசிரியர் வீட்டுக்குச் சென்று நமஸ்காரம் செய்துவிட்டு ஆசிர் வதிக்கும்படி கேட்டாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

காமப்பசியில் தகித்த அந்த ஆசிரியர் சொன்னார் — பெண்ணே, உன் அப்பன் எனக்கு நிறைய பணம் கொடுத்துவிட்டார். எனக்கு பணம் ,காசு வேண்டாம். நான் ஆவலுடன் காத்திருந்த நாள் வந்து விட்டது. இத்தனை நாளாக உன்னைக் கட்டித் தழுவக் காத்திருந்தேன் என்று சொல்லி அவள் மீது படு வேகத்தில் பாய்ந்தார்.

அவளோ உயர் குலத்தில்  உதித்த நங்கை. கடுமையான கோபம் கொந்தளிக்க அவரை ஒரே தள்ளாகத் தள்ளி உதறிவிட்டு , “அட கிராதகா! நீ படித்த படிப்புக்கும் நினைத்த நினைப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லையே ; நீ நாசமாய்ப் போ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைநதாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவருடைய அப்பா அப்போது பிஸினஸ்  விஷயத்தில் பிஸியாக இருந்ததால் இது பற்றிப் பேசவில்லை. அம்மாவிடம் மட்டும் அழுது புலம்பினாள்.

இதற்குள் கள்ள ஆசிரியருக்கு மின்னல் வேகத்தில் புத்தி வேலை செய்தது. தோளில் அங்க வஸ்திரம், அதற்கடியில் ஜிப்பா, கையில் ஒரு ஜோதிட புஸ்தகத்துடன் வணிகர் வீட்டுக்கு விரைந்தார். அவர் வழக்கமாக கொடுக்கும் மரியாதை எல்லாவற்ரையும் கொடுத்து ராஜ உபசாரம் செய்தவுடன் மகள் இன்னும் அப்பாவிடம்  தன்னுடைய வண்டவாளத்தை (வண்டல் வளம்) தண்டவாளத்தில் ஓடவிட வில்லை என்பதை அறிந்து ஆனந்தம் கொண்டார்.

ஒரு அவசர விஷயம் பேச வந்தேன் என்றவுடன், அவரும் கணக்குப் புஸ்தகம் எல்லாவற்றையும் மூடி விட்டுக் காது  கொடுத்தார் .

ஆசிரியர் தொடர்ந்தார்– சொல்லுவதற்கே கஷ்டமாக இருக்கிறது; உங்கள் மகள் பருவம் எய்திய பொது கிரகச் சேர்க்கை சரியில்லை. இதனால் உங்கள் குடும்பத்துக்கும் அவளுக்கும் பேராபத்து ஏற்படும் என்று சொல்லி 12 ராசிகள், ஓன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்களை வம்புக்கு இழுத்து அளவளாவினார். ஆசிரியர் மீது  இதுகால பர்யந்தம் நன் மதிப்பு இருந்ததால் அவர் சொன்னதை வேத வாக்காக வணிகர் ஏற்றார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

“ஆசிரியரே, எல்லாவற்றுக்கும் பரிகாரம் இருக்கிறதே. இதற்கும் பரிகாரம் இருக்குமே?” என்றார் வணிகர்.

 “ஆமாம் உண்டு ; அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றார் . உங்கள் மகள் ஒரு க்ஷணம் கூட உங்களுடன் இருக்கக்கூடாது. அவளை ஒரு பெட்டியில் வைத்து, ஆற்றில் மிதக்க விடுங்கள்; அவள் ஜாதகம் கெட்டி; அவள் பிழைத்துக் கொள்வாள். நீங்களும் சுகமாக  வாழ்வீர்கள்” என்று சொன்ன மாத்திரத்தில் அவரும் ஏற்பாடுகளைத் துவங்கினார்.

ஆசிரியர், இதுவரை தான் போட்ட திட்டங்கள் வெற்றி அடைந்த களிப்பில் வீடு ஏகினார்.

இரவில் தூங்கும் நேரத்தில், அந்தப் பெண்ணும் பெட்டியில் வைக்கப்பட்டு ஆற்றில் மிதக்க விடப்பட்டாள் .

அந்தக் காலத்தில் அரசர்கள் காட்டுக்கு வே ட்டை ஆட வருவது வழக்கம். ஒரு மன்னன் ஒரு புலியை வேட்டையாடி, காயமடைந்திருந்த அந்தப் புலியைக்  கயிற்றைக் கட்டி இழுத்துவந்து  ஆற்றில் தண்ணீர் குடிக்க இறங்கினார் ; தண்ணீரில் மிதந்து வரும் பெட்டியைப் பார்த்து , ஆவலுடன் திறந்தார். அழகிய பருவக் குமரியைக் கண்டு ஆனந்தம் கொண்டார் . தங்கப் பல்லக்கில் அவளை வைத்து அரண்மனைக்குக்  கொண்டு சென்றார் .

அப்படிப் போவதற்கு  முன்னர் தான் பிடித்து வந்த காயமடைந்த புலியைக்  கட்டவிழ்த்து பெட்டிக்குள் வைத்து பத்திரமாக ஆற்றில் மிதக்கவிட்டார். இவ்வளவு திட்டத்துக்கும்  மூல காரணமான ஆசிரியர் ஒரு பாலத்தின் அருகில் பெட்டியைப் பிடித்திழுக்க சில வேலைக்காரர்களுடன் காத்திருந்தார். பெட்டியும் வந்தது. வந்திருந்த வேலைக் காரர்களின் தலையில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றார். எல்லோரையும் கூலி கொடுத்து அனுப்பிவிட்டு சந்தன ஜவ்வாது பூ ச்சுடன் வந்தார். பெட்டியைப் படுக்கை அறைக்குள் கொண்டு சென்றார். பெட்டிக்கு அருகில் போய் காதல் மொழிகள் கிளர்ந்தார். இப்போது  உன் மனம் மாறியிருக்குமே என்று சொல்லிக் கொண்டே பெட்டியைத் திறந்தார். புலியோ, அடி பட்ட நாகம் போல சீறிப் பாய்ந்து ஆசிரியரைக் குதறிக்கொன்றது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேராசை பெரு நஷ்டம்!

தினை விதைத்தவன் தினை  அறுப்பான்;

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Tags – தினை, விதைத்தவன், வினை, பெண், புலி, ஆசிரியர்

—subham—

TAMIL SWORD AND GREEK SWORD (Post No.7782)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7782

Date uploaded in London – 4 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

There is a very interesting story in Greek literature. The story is ‘The Sword of Damocles’. No student of English literature could miss it, because it is used by many writers and speakers from Cicero to John F. Kennedy and Nikita Kurushev. Shakespeare, Chaucer and all famous writers used the phrase.

So, what is the story?

Damocles, 4th century BCE, in classical literature, was a courtier of the elder Dionysius , ruler of Syracuse ,Sicily (now part of Italy) . When Damocles praised Dionysius sky high and said that he was very fortunate to be a king. But Dionysius invited him to a feast where he symbolically hung a sword over Damocles’ head by a single horse hair to demonstrate the precariousness of the happiness of the kings .

Later versions of the episode are more interesting. Cicero popularised by saying that rulers are not enjoying.

In fact Dionysius was a tyrant . He had so many enemies around him and he did not allow anyone else other than his daughter to cut his hair. He invited Damocles to rule the country for a day when he hung the sword over the throne. Fearing for his life Damocles ran away. Now we know how difficult to is be a Prime Minister or President where there are unruly opposition parties. US President John F Kennedy and Nikita Kurushev of USSR also used the phrase in the same context. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tamil Sword

Tamils also used the sword but in a different context. They saw a sword over their head in the form of Sun. They told the world “Look at the sun. it is shining over head and you people praise it. But in reality it is a sword that cuts, saws your life every day. That is, every day passed is Minus 1 in your life.

A woman by name Miss Allur Namullai used it for the first time. It is in Kuruntokai, part of 18 books of Sangam Age. That lady saw a sword every early morning . When she had menstruation she cried that its going to deprive her of husband’s hug for three days. Very rare are the verses about menstruation 2000 years ago. Hindu women never talk about it openly. Hindu women never allow any one to touch them during that three day period. They wont even water the plants.

Nan Mullai means good Jasmine flower. The genus Jasminium has hundreds of varieties and Sanskrit is the only ancient language with 100s of names for jasmine and 100s of names for lotus. Many Sangam Age poets who lived 2000 years ago took the prefix Good for their names; in Sanskrit it goes like Su +Mati, Su+ Niti, Su+ Gandhi, Su +Nita etc. In Tamil it is Nan+ Mullai, Nak +Kannai, Nac+ Chellai, Nap+ Pinnai. In short, they followed the Sanskrit prefix GOOD = Su=Na.

Allur Nan Mullai is a translation of Su Kumari.  Sukumari is one of the jasminium (Mullai) varieties in the Sanskrit dictionary.

Around 4th or 5th century CE, came the greatest of the ancient Tamil poets Tiruvalluvar and composed 1330 didactic couplets. In 140 couplets under ‘ascetism’ he gave the essence of Hinduism. In fact, he divided the book into three chapters called Dharma, Artha and Kama and placed Moksha under subheading ‘ascetism’.

This ascetism has a chapter called’ Instability’ where he compared a day (sun rise ) to a sword-

“TIME SEEMS ALL SMILES AND LAUGHTER, BUT VERILY IT IS A SAW THAT CEASELESSLY SAWS AWAY THE LIFE OF MAN”.- Kural/couplet 334

Another translation of the same couplet 334 is

“The day which measures time is comparable to a sword  which , day by day, cuts short the life of man “– 334

MILTON TOO SAID THIS…………

Dr S M Diaz, Inspector General of Police, Tamil Nadu, India comments on this verse as follows (in his two Volumes titled TIRUKKURAL)

“The day shows itself as an entity, but in reality it is just

The relentless movement of a saw, that cuts through life” – Kural 334.

The day is not just the entity that it appears to be; it is the inexorable movement of a saw that cuts through life. The interpretation is based on Parimelllagar’s. Manakkudavar would interpret the expression ‘naal ondrupol kaatti’ as meaning, showing the day itself as an object of enjoyment. The comparison of time to a sword is found also in the Sangam literature Kurunthokai.

Milton, the doyen among English poets, has given expression to the same thought thus –

“The scythe of time mows down “.

xxx tamilandvedas.com, swamiindology.blogspot.com

Naladiar is a book with 400 moral verses. In fact, Jains wanted to compete with Hindu poet Tiru Valluvar and composed 400 verses on the same didactic topics. One of the Jain poets says,

“Yama, the God of Death devours away your life daily using the resplendent sun as his measure.  Perform therefore virtuous deeds and become compassionate, for otherwise all those that are born will be considered as unborn.” – Naladiar verse 7

Vedic God Yama is Kuutru or Kuutram in Tamil.

Swami Vivekananda also said, “They alone live who live for others, the rest are more dead than alive”

tags — Tamil sword, Greek sword, Damocles, Naan Mullai, Kuruntokai, Sun saw

–subham—

HELPFUL HINTS – 9 Don’t Argue! உதவிக் குறிப்புகள்! – 9 (Post.7781

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7781

Date uploaded in London – – 4 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உதவிக் குறிப்புகள்! – 9 HELPFUL HINTS – 9 (71 to 90)

 Don’t Argue!

ச.நாகராஜன்

எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:

HELPFUL HINTS

குறிப்பு எண் 71 : Tact!

Tact can be defined “as the ability to say or to do the right thing at the right time”.

குறிப்பு எண் 72 : Don’t Argue!

In any discussion, never argue as if you are right and the other person is wrong. You may win the arugument, but you will lose an admirer, or customer. Say instead, “I agree with you, to a point. But don’t you think it could also be this way?” Then put forward your point of view calmly and lucidly

குறிப்பு எண் 73 : Faith in yourself!

The first essential to success is faith in oneself. Next the courage to act on that faith. The third essential to success is enthusiasm.

குறிப்பு எண் 74 : Success and Luck!

Success has nothing to do with luck. Success is the result of planning, patience and perseverance. If you plan well, if you have the patience to carry out your plan, and if you persevere in the face of abstacles, there can be only one outcome – SUCCESS!

குறிப்பு எண் 75 : Thinker and Doer!

Be better than the Thinker , be a doer! Dreams are worth less if they are not backed by schemes. In working out those schems follow – Einstein’s law of Success

A = X+Y+Z

Where ‘X’ is work

‘Y’ is play and

‘Z’ is keeping your  mouth shut.

After you have learnt to keep your mouth shut –

Do more than look – observe;

Do more than hear – listen;

Do more than listen – understand;

Do more than read – absorb

Do more than desire – act;

Do more than exist – Live joyously!

Don’t open your mouth just because you have to say something, but speak only when you have something to say – something worthwhile, constructive or cheerful.

குறிப்பு எண் 76 : We are World Changers!

Let this sink deep within you, till it becomes part of you!

We are not World- shakers, but World Changers!

குறிப்பு எண் 77 : Money!

A successful businessman has stated :-

OBSERVATION + IMAGINATION = MONEY!

குறிப்பு எண் 78 : Carry slips of paper!

Carry slips of paper or perfectly a tiny notebook wherever you go. Jot down ideas, cute phrases, suggestions for the home and office or jokes and thoughts to include in letters.

குறிப்பு எண் 79 : 6 irksome causes!

The weak  becomes irksome due to six main causes:

  1. Lack of interest 2. Lack of knowledge 3. Lack of Skill 4. Lack of congenial companions 5. Lack of an appreciative Boss 6. Lack of a congenial working place.

If you dislike your present work, find out the reason why.

குறிப்பு எண் 80 : Qualities of Leadership!

Qualities of Leadership :- 1) Be enthusiastic 2) Have a sense of humour 3) Be eager to learn 4) Share praise but shoulder blame 5) Enrich the lives of others 6) Never ridicule, Nag or Shout at anyone 7) Develop Dependability 8) Dont over-reach 9) Make few promises and keep them 10) Work for the cause

குறிப்பு எண் 81 : Are you over sensitive?

From the book Here’s Help by M.R.Kopmeyer

Are you over sensitive? 1) Get tough emotinally, ignore it! 2) Turn it Off (Turn off your emotions)

குறிப்பு எண் 82 : To overcome resentment!

From the book Here’s Help by M.R.Kopmeyer

To overcome resentment – 1) Change your attitude towards the cause of your resentment 2) Forget it!

குறிப்பு எண் 83 : Anger is self-prison!

From the book Here’s Help by M.R.Kopmeyer

Anger is self-prison – when angry count to ten before you speak; if very angry, count a hundred!

குறிப்பு எண் 84 : Don’t Worry!

From the book Here’s Help by M.R.Kopmeyer

Don’t worry and put yourself to self torture!

  1. Most of your worries never happened!
  2. Which did happen were not as disastrous as you worried they might be!

குறிப்பு எண் 85 : Never escalate a negative emotion!

From the book Here’s Help by M.R.Kopmeyer

Never escalate a negative emotion – Do not add emotional negatives!

குறிப்பு எண் 86 : Be like President Eisenhower!

From the book Here’s Help by M.R.Kopmeyer

Be like President Eisenhower who said, “ I never waste a minute thinking about someone I don’t like. Put a period after them!

குறிப்பு எண் 87 : Don’t Criticize!

From the book Here’s Help by M.R.Kopmeyer

Don’t Criticize! If necessary, then do not add emotion to criticism!

குறிப்பு எண் 88 : Unjust Criticism!

From the book How to stope worrying and start living   by Dale Carnegie

Remember that unjust criticism is often a disguised compliment; Remember that no one ever kicks a dead dog!

குறிப்பு எண் 89 : Do the very best you can!

From the book How to stope worrying and start living   by Dale Carnegie

Do the very best you can; and then put up your old umbrella and keep the rain of criticism from running down the back of your neck! DO THIS AND CRITICISM CAN’T HURT YOU!

குறிப்பு எண் 90 :  Record for – ‘Fool things we have done!’

From the book How to stope worrying and start living   by Dale Carnegie

Let us keep a record of the fool things we have done and criticize ourselves. Since we can’t hope to be perfect, let us do what E.H.Little did : Let us ask for unbiased, helpful, constructive criticism.

****

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 342020 (Post No.7780)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7780

Date uploaded in London – 3 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. (5) + 3. –(6) -முதல் பகுதி – அதிசயமான ; காரைக்கால் அம்மையார் பாடியது

4. (4)– சைவத்தின் முக்கியமானவர்கள்; தேவாரம், திருவாசகம் பாடியோர்

5. (2) — கேட்க உதவும் அவயவம்

7. (5)- வடமீன் – கற்புக்கரசி

6.– (4) – படம் காட்டுதல்; வீண் பகட்டு

9. (3) – மணப்பெண், திருமணம்

xxxx

கீழே

1. (5) 400 அகத்துறை பாடல்கள்; நீ ண்ட பாடல்கள்

2.– (4) – கண்ணுக்கு மேல் கருப்பாக இருக்கும்

3. (6)- இது எண் ஒன்றின் தொடர்ச்சி- முதல் பாட்டின் கடைசி அடியுடன் அடுத்த பாட்டு துவங்கும்

5. (4) – முறையான அரசு வரும்வரை இருக்கும் தற்காலிக அரசு

8. –( 3) – நூல் என்ற ஸம்ஸ்கிருதச் சொல்; கல்யாண மந்திரங்களில் வரும்.