ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,405

Date uploaded in London – –   3 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோபத்துக்கு எதிராக வேதம் சொல்லும் கருத்து, பாரதி மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் வரை எப்படியெல்லாம் பரவியது என்பதைக் காண்போம்.

“ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் எம்.கே தியாகராஜ பாகவதர் (MKT) மூலமாக அறிமுகமாகியது. பின்னர் பலரும் அதை மாற்றி, மாற்றி, பல பிற்காலத் திரைப் படங்களில் பயன்படுத்தினர். காலத்தால் அழியாத இந்தக் கவிதை, ‘கோபம் கூடாது’ என்பதை மனதில் நன்கு படிய வைக்கிறது.

வள்ளுவனோ சினம்/வெகுளாமை  என்ற தலைப்பில் பத்து குறள்களைத் தந்தான். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று சினத்தை சம்ஸ்க்ருத மொழியில் இருந்து (குறள் 305- ஆஸ்ரயாஸஹ ) மொழிபெயர்த்தும் தருகிறார். ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309)  என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”

என்பது பாரதியின் அருள்வாக்கு

……

“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்

 செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்

மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய

வாள்கொண்டு கிழித்திடுவார் “

சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.

அதே பாடலில் பாரதி,

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

               கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

               ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

               அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

               கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

               கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே

. என்பான்.

கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!

XXXX

அதர்வண வேதப் பாடல்

காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)

1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.

2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான்  உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்

3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே

இதற்குப் பழைய விளக்கம்:

இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.

xxx

எனது வியாக்கியானம்

இதில் ‘உன்னுடைய’ என்பது எதிரில் உள்ள நண்பனிடம்  சொல்லுவது அன்று ; நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் AUTO SUGGESTION ஆட்டோ சஜ்ஜஷன் கட்டளை இது.

நீ ஒரு முக்கியமான ஆளை சந்திக்கப் போகிறாய். அவன் உன்னைக் கோபப்படுத்தி மடக்குவதற்காக உன்னை ஏசுவான்; ஏமாந்துவிடாதே ; ஜாக்கிரதை; கோபப்பட்டு ஏதேனும் கத்திவிடாதே ; அத்தனையையும் ரிக்கார்ட் செய்து உனக்கு எதிராகப் பிரசாரம் செய்வான்- என்பது ஒரு விளக்கம்

இதோ பார்; நீ ஆன்மீக தாகம் கொண்டுள்ளாய்; விசுவாமித்திரன் கோபத்திலும், காமத்திலும், அஹங் காரத்திலும் தபோ பலத்தை வீணாக்கி, ஒவ்வொரு முறையும், வசிட்டரிடம் தோற்றான். ஆகையால் ஏமாறாமல் கோபத்தை ஒழித்துவிட்டால் நீ முன்னேறுவாய்.. இதுதான் சரியான பொருள்.

இப்போது பாரதி பாடலைப் படியுங்கள்; அதர்வண வேதம் மனதுக்கு இடும் ஆட்டோசஜ்ஜெ ஷன் கட்டளைதான் அந்த துதி

இதையே வள்ளுவனும் சொல்கிறான் .

.தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும்  சினம்’ – குறள் 305

சினம் பற்றிய பத்து குறள்களையும் துறவறவியலில் வள்ளுவன் செப்பியது குறிப்பிடத் தக்கது. அதாவது வெகுளாமை வந்த பின்னரே வசிட்டர் வாயால் விசுவாமித்திரனுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது. முதல் மோதலே வசிட்டனின் காமதேனுவைப் பறித்தவுடன் அதை வசிட்டன் தடுக்க, கோபக்கனல் பொங்க படைகளை ஏவினான் விசுவாமித்திரன் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்

கி.மு. 3150 வாக்கில், அதாவது இற்றைக்கு 5150 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை நான்காகப் பிரித்து 4 சீடர்களிடம் கொடுத்து இதை எழுதக் கூடாது வாய் மொழியாகப் பரப்புங்கள் என்றார் வியாசர்.

அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு இன்றுவரை நமக்கு அதர்வண வேத மந்திரத்தை அளித்த பார்ப்பானுக்கு பல கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக

பார்ப்பான் வாழ்க ; வேதம் வாழ்க ; சம்ஸ்க்ருத மறையை தமிழ் மறையாக நமக்கு அளித்த வள்ளுவன் வாழ்க

வெகுளாமை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள பத்துக் குறட்களையும் பத்து  முறை படியுங்கள்

xxxxx

பாபநாசம் சிவன் பாடல்

ராதே உனக்கு……………………………….

FROM WWW.LAKSHMANSRUTHI.COM (THANKS TO LAKSHMAN SRUTHI)

படம். சிந்தாமணி

வருடம். 1937

பாடல். பாபநாசம் சிவன்

பல்லவி.

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா……….தே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா…………தே உனக்கு கோபம் ஆகாதடி……….

மாதரசே, பிழையே……….து செய்தேன் சுகுண

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………

மா……….தரசே………, பிழையே……..து செய்தேன் சுகுண…….

ராதே உனக்கு கோ……….பம் ஆகாதடி…………

மா………..தரசே………..பிழையே…………..து செய்தேன் சுகுண

ரா………தே உனக்கு கோபம் ஆ………..காதடி…………

எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ………….

4

எனைக் கணம் பிரி…………ய மன…………..ம் வந்ததோ……….

நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ

ஓடா………தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி…………

நீ…………எங்கு………..சென்றா……….லும் நான் உன்னை……..விடுவேனோ

ஓ….டாதே ராதே உனக்கு கோபம், ஆ…………..கா………….த……..டி……….

ரா………தே உனக்கு கோபம், ஆகா………..தடி…………..ஈ……………….ஈ…………..

8

கண்ணை இழந்தவன் நீயோ நானோ……………..

கண்ணை இழந்………..தவன் நீயோ………..நா………..னோ………..

கண்ணை இழந்தவன் நீ………யோ நா…………னோ……………

கண்………ணை இழந்தவன் நீயோ………….நானோ………….

கண்ணா…………..நீ வேறு நான் வேறோ…………எவன் சொன்ன…………வன்

கண்ணை யிழ………ந்தவன் நீ…………யோ நா…………னோ…………..

கண்ணை யிழ……….ந்தவன் நீயோ நானோ…………………

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே………….

4

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே…………….

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோதி பொருளே இன்று………….

கண்ணை இழந்…………தவன் நீயோ நானோ……………

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோ…………..தி பொருளே இன்று

கண்………..ணை இழ………..ந்தவன், நீயோ நானோ………ஓ……….ஓ……….

—SUBHAM—

tags -கோபம், பாரதி, பாபநாசம் சிவன், அதர்வண வேதம், சினம், ராதே உனக்கு

லண்டனில் பாபநாசம் சிவன் விழா! (Post No. 6452)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 28 May 2019


British Summer Time uploaded in London – 7-31 am

Post No. 6452

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு (Post No.2856)

papanasam sivan 1

Compiled by london swaminathan

 

Date: 31 May 2016

 

Post No. 2856

 

Time uploaded in London :– 8-25 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட்ட மொழி; சம்ஸ்கிருதம் என்றாலே நன்கு செய்யப்பட்டது எனப் பொருள்; 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பாணினியால் இலக்கணம் பெற்ற மொழி. அவருக்கு முன்னால் இருந்த இலக்கண கர்த்தாக்களின் நீண்ட பட்டியலும் உள்ளது. அப்படியானால் எவ்வளவு பழமை என்று தெரிந்து கொள்ளலாம்.அதற்கும் முன்பாக இருந்த பழைய மொழி வேத கால சம்ஸ்கிருதம்.

இன்று சங்க காலத் தமிழ் மொழியை நாம் புரிந்துகொள்ள உரைகாரர்களின் உரை தேவைப்படுகிறது. 2000 ஆண்டுகளில் நம் தமிழ் மொழி மாற்றம் அடைந்தது போல, பாணினி காலத்துக்குள் வேதகால சம்ஸ்கிருதம் புத்துருப் பெற்றுவிட்டது.

 

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. அழகான மொழியும் கூட. சொல்லாக்க முறையைத் தெரிந்துகொண்டு விட்டால் புதிய சொற்களை நாமே உருவாக்கலாம். வேர்ச் சொல்லின் பொருளும் வினைச் சொற்களின் வடிவமும் தெரிந்துவிட்டால், அகராதி தேவையே இல்லை. பொருளை நாமே கண்டுபிடித்து விடலாம்.

p sivan 2

தமிழ் இசை மன்னன் பாபநாசம் சிவன் அவர்கள் வடமொழிச் சொற்கடல் என்ற ஒரு நூலில் சம்ஸ்கிருதச் சொற்களை புதிய முறையில் அழகு படத் தொகுத்துள்ளார். அந்த மொழியின் அழகை விளக்க சில சொற்களை மட்டும் காண்போம்:–

கரம் என்றால் கை; கையால் செய்யப்படுவது காரியம். கர என்ற விகுதியைக் கொண்டு முடியும் சொற்களின் அழகைப் பாருங்கள்:–

சுககர:= இன்புறச் செய்பவன்

ருசிகர:= இனிமை அளிப்பது

சுசிகர:= சுத்தம் செய்பவன்

கஜகர:= துதிக்கை, விக்னேச்வரன்

கடகர:= குயவன் (கடம்/பானை செய்பவன்)

ஹிதகர: = நன்மைசெய்பவன்

ரதிகர: = பிரியத்தை அளிப்பவன்

ரதகர: = தேர் செய்பவன் (ரதகாரன்)

மதுகர: = தேனீ (மதுவைச் செய்வது)

தினகர:= சூரியன் (பத்திரிக்கையின் பெயர்)

அனுகர: = உதவி செய்பவன்

லிபிகர:= கணக்குப் பிள்ளை

சுபகர:= க்ஷேமம் தருபவன் (ஜோதிடத்தில் சுபகாரன் யார் என்று சொல்லுவர்)

ஹிமகர: = சந்திரன் (குளிர்ச்சி தருபவன்)

பரிகர:= பரிவாரம், கட்டில், கூட்டம்

அவகர: = குப்பை

சவிகர: = சோபை/அழகு தருவது

சசிகர:= சந்திர கிரணம்

அஸிகர: = வாள் பிடித்தவன்

ரவிகர: = சூரிய கிரணம் (ரவி= சூரியன்)

வசிகர= ஆகர்ஷண சக்தி (வசீகரம்)

நிசிகர:= நிலவு

அசுகர: = செயற்கரிய செயல்

பசுகர:= செல்வம் தருவது

பஹுகர:= பல கை உடையான்; நகர சுத்தி செய்பவன்

அஜகர: = பெரிய பாம்பு

 

 

ஜலதர, ஹலதர, சசிதர, விஷதர

இதே போல ‘தர’ என்பது தரிப்பவன், தாங்குபவன் எனப்பொருள்படும்:-

நகதர:= கண்ணன்; ம்ருகதர:= சந்திரன் ( மானைத் தாங்குபவன்); ஜலதர: = மேகம் (நீரைத் தாங்குபவன்); ஹலதர:= பலராமன் (கலப்பையைத் தாங்குபவன்); சசதர: = சந்திரன் (முயல் தாங்கி); சசிதர: = சிவன் (பிறை அணிந்தவன்); விஷதர: = பாம்பு (விஷம் தாங்கி); மஹிதர: = மலை.

 

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

மடாதிபதி, ஜனாதிபதி போன்ற சொற்களை நாம் தமிழிலும் பயன்படுத்துகிறோம். அதிபர், அதிப என்பதெல்லாம் தலைவன் என்ற பொருளில் வரும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

அகாதிப:, நகாதிப:= இமயமலை; ககாதிப: = கருடன்; ம்ருகாதிப: = சிங்கம்; மடாதிப: = மடாதிபதி; கணாதிப: = கணபதி (கணங்களின் தலைவன்); மதாதிப: = மதத்தின் தலவன்; ஜனாதிப: = அரசன்; தினாதிப: = சூரியன்; தனாதிப:= குபேரன் (தனத்திற்கு அதிபதி);தராதிப:, நராதிப: = ராஜா (நரர்களுக்குத் தலைவன்); சுராதிப:= சுரர்களுக்கு/ தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்); தசாதிப:=ஒன்பது கிரகங்கள்; திசாதிப; = திக்குகளின் தலைவன்; நிசாதிப: = நிசி/ ரவின் தலைவன்/சந்திரன்.

ஆதாரம்:- வடமொழிச் சொற்கடல், தொகுத்தவர்- பிரும்ம ஸ்ரீ பாபநாசம் சிவன், வெளியீடு—டாக்டர் ருக்மிணி ரமணி, 30, கிருபா சங்கரி தெரு, சென்னை- 600 033, விலை ரூ 150; வருடம்- 2000 (முதல் பதிப்பு 1954)

(வடமொழி பயில விரும்புவோர் வாங்க வேண்டிய நூல்)

 

எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்? (ஜூலை 4, 2015)

பாணினி மாஜிக்!! Panini Magic!! ( 7-4-2015)

பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி! (19-2-2015)

கடவுள் தந்த இரண்டு மொழிகள் (13 நவம்பர் 2014)

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! (20-12-2014)

 

p sivan 3

–சுபம்—

 

 

 

சம்ஸ்கிருத எதுகை அகராதி!

சம்ஸ்கிருத எதுகை அகராதி!

Compiled by London swaminathan

Article No.1843 Date: 3 May 2015

Uploaded at London time: 23-47

ஊத்தங்கரை ஏ ஆர் அப்பாய் செட்டியாரின் தமிழ் எதுகை அகராதி பற்றி சின்னாட்களுக்கு முன் எழுதினேன். இதே போல பிரபல சங்கீத சாஹித்யகர்த்தா, பாடல் ஆசிரியர், நடிகர், இசை அமைப்பாளரான பாபநாசம் சிவன் அவர்களும் வடமொழிச் சொற்கடல் என்ற பெயரில் சம்ஸ்கிருத எதுகை அகராதி தயாரித்து வெளியிட்டார். இதை அவர் தயாரிக்க எட்டு ஆண்டுகள் ஆயின. இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1954-ல் வெளியானது.

சம்ஸ்கிருதம் கற்க விரும்போருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஏற்கனவே சம்ஸ்கிருதம் அறிந்தோருக்கு அச்சொற்களைத் திறம்பட பயன்படுத்தும் வகையிலும் தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் அவரோ தன்னடக்கத்துடன் பெரிய கடலை ஒரு சிறு கரண்டியால் அளக்க முயல்வதாக முகவுரையில் எழுதியுள்ளார். தான் எழுதியதைக் கட்டி ஆற்றில் எறிந்துவிடலாமா என்று எண்ணியிருந்த சமயம் டாக்டர் வீ ஆர் மூர்த்தி இதை வெளியிட உதவிசெய்ததாகவும் நன்றிப் பெருக்குடன் கூறியுள்ளார்.

அதில் ஓரெழுத்துக்கான சம்ஸ்கிருதப் பொருளை மட்டும் இன்று காண்போம்; இதில் சம்ஸ்கிருத நாகரி லிபியில் சொற்களும் அதற்கான பொருள் தமிழிலும் கொடுத்திருப்பது எல்லோருக்கும் பயன்  தரும்:

அ- மங்களகரமான முதல் எழுத்து; எதிர்மறை

உ- ஐயக்குறி, வினாக் குறி

கு- இழிவு, கொஞ்சம்

து- பிரித்தல்

ந – இல்லை

நி- இன்மை, மிகவும்

னு- ஐய வினா

வ- போல

வி-வெறுப்பு, விரோதம், விசேஷம்

சு-நன்மை, நன்றாக

ஹ-வியப்பு,துயரம்

ஹி-அல்லவா

(இவை யாவும் அவ்யயம் எனப்படும்)

ஆ-வியப்பு

ஓ-விளி,வியப்பு

கா-எவள்

ஜா-பிறந்தவள்

நா-மனிதன்

நோ-இல்லை

பா-ஒளி

போ-விளி

மா-தகாது, லெட்சுமி

மே-எனக்கு, ஆட்டின் குரல்

யா-யாதொருவன்

ரே-விளி

வா-அல்லது

வை-உறுதி

சா-அவள்

ஹா-ஐயோ

ஹீ-ஆச்சர்யம்

ஹே-விளி

ஜம்-காற்றொளி

டம்-நாணொலி

பம்-நட்சத்திரம்

சம்-நன்றாக

ஸம்-சுகம்

ஹும்-அச்சுறுத்தல்

அ:-பிரமன்,விஷ்ணு,சிவன்

இ:-இந்திரன்

உ:-சிவன்

க:-பிரமன்

க:-எவன்

கு:-பூமி

கி:-விழுங்குதல்

ஜ:-பிறவி

ய:எவனொருவன்

வி:-பறவை

ஸ:-அவன்

ஆ:-வியப்பு, வேதனை

ஊ: பெருக்கம்

கீ: சொல்

கௌ: பூமி, பசு

ஜூ: ஜுரம், வானம், பிசாசு,வாணி,வாயு

தூ: வேகம்

தீ: புத்தி

தூ: சுமை

பா: ரட்சிப்பவன்

பூ: பூமி

பீ: அச்சம்

மா: தடுத்தல்

மூ: மூர்ச்சை

ரா: ஐச்வர்யம், அக்னி

வா: ஜலம்.

தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம்! – 2

Karnan2

by ச.நாகராஜன்

Post No 1624: Date 5th February 2015

 

திரைப்படங்களில் சுபாஷிதம்

தமிழ் திரைப்படங்களில் சுபாஷிதம் எனப்படும் தனி ஸ்லோகங்களைக் கூட காண முடியும். கமலஹாஸன் நடித்த படத்தில் வரும் ஒரு ஸ்லோகம் இது:

புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம் கதம் I                           அதவா புநராயேன ஜீரண ப்ரஷ்ட ண்ட II

புஸ்தகம், பெண், பணம் ஆகியவை அடுத்தவன் கைக்கு மாறினால் போனது போனது தான்! திரும்பி வந்தாலும் ஜீரணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு பின்னமும் துண்டுகளாகவும் உருமாறி வரும் என்பது இதன் திரண்ட பொருள்!

கர்ணனில் கீதை

பகவத் கீதை உலகமெலாம் போற்றப்படும் அற்புத நூல். இதையும் தமிழ்ப் படங்களில் பலவற்றிலும் காண முடியும். குறிப்பாகச் சொல்ல ஒரே ஒரு படத்தை எடுத்துக் காட்டலாம்.

1963ஆம் ஆண்டில் வெளியாகிய படம் கர்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனாகவும் என் டி ராமாராவ் கண்ணனாகவும் எஸ்.பி.முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்து னைவரின் பாராட்டையும் பெற்ற படம் இது.

அதில் கீதையை என் டி ராமாராவ் சுருக்கமாகவும் அழகாகவும் போர்க்களக் காட்சியில் இப்படிக் கூறுவார்:

 

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!

மரணத்தின் தன்மை சொல்வேன்;

மானிடர் ஆன்மா மரணமெய்தாது,

மறுபடிப் பிறந்திருக்கும்;

மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!

வீரத்தில் அதுவும் ஒன்று;

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,

வெந்து தான் தீரும் ஓர் நாள்.

 

என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,

எனதென்றும் அறிந்து கொண்டாய்;

கண்ணன் மனது கல் மனதென்றோ

காண்டீபம் நழுவ விட்டாய்

காண்டீபம் நழுவ விட்டாய்

மன்னரும் நானே, மக்களும் நானே,

மரம் செடி கொடியும் நானே;

சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;

துணிந்து நில் தர்மம் வாழ.

 

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,

அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்

போகட்டும் கண்ணனுக்கே.

 

கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;

கண்ணனே கொலை செய்கின்றான்.

காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!

இக்களமெலாம் சிவக்க வாழ்க!

karna

கண்ணதாசனின் அற்புத கவிதை வரிகள் கீதையின் சுருக்கத்தைத் தந்து நம் உளத்தை உருக்குகிறது; மகிழ்விக்கிறது. இதைத் தொடர்ந்து கீதையில் நான்காவது அத்தியாயத்தில் வரும் முக்கியமான ஸ்லோகம் அப்படியே சம்ஸ்கிருதத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது.

நல்லோரைக் காத்தற்கும் தீயோரை அழித்தற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம் தோறும் அவதரிக்கிறேன் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகம் கேட்போரைப் பரவசப்படுத்துகிறது:

 

பரித்ராணாய சாதூனாம்,

விநாசாய துஷ்க்ருதாம்;

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,

சம்பவாமி யுகே யுகே.  (கீதை நான்காம் அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்)


papanasam

பாபநாசம் சிவனின் அமர கீதங்கள்

இனி தமிழ் திரையுலகின் ஆரம்ப வருடங்களை எடுத்துப் பார்த்தாலோ அங்கும் சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பரவலாகக் கொண்ட பாடல்களை

நாம் காண முடியும்:

பாபநாசம் சிவன் பெரும் சாஹித்யகர்த்தா. அழகிய இனிமையான பாடல்களை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர். பெரும் புகழ் பெற்ற கவிஞர். சுமார் 2400 கீதங்களை இயற்றியவர். இவற்றில் திரைப்படப்பாடல்கள் மற்றும் சுமார் 800. இதுவரை முறையாகத் தொகுக்கப்பட்ட கீர்த்தனைகள் 400. அனைத்துப் பாடல்களையும் முறையாகத் தொகுக்கும் முயற்சியை அவரது மகள் இப்போது செய்து வருகிறார்.

என்ன தவம் செய்தனையசோதா என்ன தவம் செய்தனை என்ற இவரது பாடலை இன்றும் மேடை தோறும் வீடு தோறும் கேட்க முடிகிறது. இது போல ஏராளமான உள்ளம் உருக்கும் கீதங்களை யாத்தவர் இவர்.

papanasam2

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற நூற்றுக் கணக்கான இவரது பாடல்களுக்கு இன்றும் ஒரு தனிப் பெருமை உண்டு.

1945இல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படமான சகுந்தலை படத்தில் அனைத்து பாடல்களையும் இயற்றியவர் பாபநாசம் சிவன் தான். இசை அமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.எம்.எஸ். சுப்புலெட்சுமியும் ஜி.என்.பாலசுப்பிரமணியனும் பாடிய ஒரு பாடலின் சில வரிகள் இதோ:

பிரேமையில் யாவும் மறந்தேனே

பிரேமையில் யாவும் மறந்தேனே  .. பிரேமையில் ஜீவனம் உனதன்பே ஜீவனம் உனதன்பேஎன்

அன்பே வானமுதும் விரும்பேனே

பிரேமையில் யாவும் மறந்தோமோ   ..பிரேமையில்

பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி  . . என் உள்ளம்

பரவசமாக பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி

என்னை மறந்தேன் மதனமோகனா

என்னை மறந்தேன் மதனமோகனா

இப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் சரியான விகிதத்தில் கலந்து குழைத்து அமுத கானம் வழங்கியவர் பாபநாசம் சிவன்.


haridas

எம் கே டி பாடிய பாடல்கள்

கிருஷ்ணா முகுந்தா முராரே போன்ற துதிப் பாடல்களில் இவர் சம்ஸ்கிருத சொற்களையே அதிகம் கையாண்டார். இன்றும் பக்தர்கள் தவறாமல் கேட்கும் பாடல் இது.

எம்.கே.தியாகராஜர் நடித்துப் பாடி இவர் எழுதிய பாடல்கள் தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த ஒரு அழகிய சங்கமம். காலத்தால் வெல்ல முடியாத இந்தப் பாடல்களின் பட்ட்டியலை எழுதத் தொடங்கினால் அது ஒரு தனி நூலாக விரியும்.

 

ஆக இப்படி தமிழ் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை சம்ஸ்கிருதம் உரிய இடத்தை தமிழ் திரைப்படங்களில் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

நம் கலைஞர்களுக்கு மொழிப் பற்று உணடு; மொழி வெறி இல்லை. இந்த நல்ல போக்கு எதிர்காலத்திலும் தொடரும்; தொடர வேண்டும்.

இதை எதிர்ப்பவர்கள் அரசியலில் தமிழை வணிகமாகப் பயன்படுத்தும் சுயநலமிகள் என்பதை நன்கு அறிந்து கொண்ட தமிழர்கள் அவர்களை காலம் தோறும் உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது

krishna mkt

தமிழும் சம்ஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்

நமது நோக்கம் தெளிவானதாக இருத்தல் வேண்டும். தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியராகிய நமக்கு இரு கண்கள்.

தமிழை உலகத்தின் தலையாய அழகிய மொழி என்பதை ஆதாரங்களுடன் தருவோம்; நம் மொழியை இன்னும் அதிக வளம் வாய்ந்த செழுமை மொழியாக ஆக்குவோம். அதே நேரத்தில் சம்ஸ்கிருதத்தைக் கற்று நம் பண்பாட்டை இன்னும் அதிகமாக வேரூன்ற வைப்போம், இதற்கு திரைப்படமும் ஒரு கருவி என்பதால் அதிலும் இதே கொள்கையைக் கடைப் பிடிப்போம்!

********* முற்றும்

contact swami_48@yahoo.com