கம்ப ராமாயணப் பாடல்களில் 50 கேள்விகள் (Post.16,296)

Written by London Swaminathan

Post No. 16,296

Date uploaded in London – 11 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இதற்கு முன்னர் வெளியிட்ட40 கேள்விகள் கடைசியில் உள்ளன ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

41

கெளசிகி என்ற நதி பற்றி ராம லட்சுமணர் வினவியபோது தன்னுடைய சகோதரியின் பெயர் அது என்று கூறிய விச்வாமித்ரன் அவனுடைய அப்பா, தாத்தா பற்றி என்ன சொன்னான் ?

42

கணவனே கண்கண்ட தெய்வம் என்ற வள்ளுவனின் கருத்தை நைசாக கம்பன் சொல்லும் இடம் எது ?

43

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இரண்டு பிராமணர்கள்தான் குரு; மஹாபலியிடம் திருமாலே வாமனன் என்ற பிராமணச் சிறுவனாக வந்த போது பிராமண குரு சுக்கிர ஆச்சாரியார் எச்சரிக்கிறார் ; அப்போது அசுரர் சக்கரவர்த்தியான மஹாபலி சொன்ன 3 புல்லெட் பாயிண்டுகள் என்ன?

44

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண்வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்- என்ற கண்ணதாசனின் பாசம் திரைப்படப் பாடலுக்கு மூலம் கம்ப ராமாயணத்தில் எங்கு வருகிறது?

45

மிதிலை நகரை அயோத்தி போல விரிவாக வருணிக்கும் கம்பன் , நமக்கு முதல்  முதலில் சீதா தேவி பற்றி என்ன செப்பினான் ?

46

கண்டதும் காதல் LOVE AT FIRST SIGHT லவ் அட் பஸ்ட் சைட் பற்றிக் கம்பன் பாடியது என்ன ?

47

சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வை பற்றி Ayodhya Today, Mithila Times 5000 BCE நியூஸ் பேப்பர்களில் எப்படி FLASH NEWS செய்தி வெளியிட்டார்கள் ?

48

சிவ தனுஷ் என்னும் வில் எவ்வளவு பெரியது?

49

வில்லினை ராமன் எடுத்து, நாண் ஏற்றியதை கம்பன் எவ்வாறு வருணிக்கிறான்? 

50

சீதா தேவி பூமியில் கிடைத்த வரலாறு என்ன ?

 ************************

விடைகள்

41. ‘அன்னவன் தனக்கு வேந்தன்   அரசொடு முடியும் ஈந்து

பொன்னகர் அடைந்த பின்னர்   புகழ்மகோதயத்தில் வாழும்

மன்னவன் காதிக்கு யானும்   கவுசிகை என்னும் மாதும்

முன்னர் வந்து உதிப்ப அந்த   முடியுடை வேந்தர்வேந்தன்.

 அந்தக்  காதி  என்னும் பெயருடைய   அரச  குமாரனுக்கு   தந்தையான குசநாபன்; ஆட்சியுடன்   அதற்குரிய  மணிமுடியும்  தந்து; விண்ணுலகு சென்றபின்பு;  புகழ்மிகுந்த மகோதயம் என்ற நகரில்அரசு  புரிந்து  வாழ்ந்து  வந்த  காதிக்கு;  யானும் எனக்கு முன்பு வந்துதித்த கவுசிகை  என்ற பெண்ணும் வந்து பிறக்க; மணிமுடி   புனைந்த  அந்த மன்னர் மன்னனான காதி வேந்தன் கெளசிகியை இரிசியன் என்பவனுக்கு மணம் செய்வித்தான் ; அவ இறந்த பின்னர் எனது சகோதரி கெளசிகி நதியாவிவிட்டாள்

விச்வாமித்ரனின் தாத்தா- குசநாபன்; அப்பா- காதி ;

***

ஒரு அழகிய சோலையைக் கண்டு இது என்ன இடம் ? என்று ராம லெட்சுமணர்கள் கேட்டார்கள்; அப்போது கம்பன் கொடுத்த பதில்:

‘தங்கள் நாயகரின் தெய்வம்

   தான் பிறிது இலை’ என்று எண்ணும்

மங்கைமார் சிந்தை போலத்

   தூயது; மற்றும் கேளாய்;

எங்கள் நான்மறைக்கும். தேவர்

   அறிவிற்கும். பிறர்க்கும். எட்டாச்

செங் கண் மால் இருந்து மேல்நாள்

   செய் தவம் செய்தது அன்றே.

தங்களது கணவரைக் காட்டிலும்  தெய்வம் வேறு இல்லை; 

என்று கருதும் பெண்ணரசிகளது;  மனத்தைப்போல  (இச்சோலை) தூய்மையானது

பின்னும் சொல்லுகிறேன்  கேட்பாயாக;   எங்களுடைய  நான்கு   வேதங்களுக்கும்;  

மற்றவர்களுக்கும்  (உள்ளம்  உரை) செயல்களால்

எட்டமுடியாத  திருமால்;  இங்குத் தங்கி முன்

ஒரு  காலத்திலே; செம்மையான தவத்தைச் செய்த இடமல்லவா?

***

(43)1.ஹலோ மிஸ்டர் சுக்ரா! வந்தவன்  திருமாலே என்றல் பார்!  என் கை உயர்ந்து நிற்க அவன் கை தாழ்ந்து பிச்சை எடுப்பதைப் பார் . இதைவிட எனக்கு என்ன பெருமை தேவை ?

2.செத்துப் போன வார்களெல்லாம் செத்தவர்கள் இல்லை; கொடுப்பதால் அழியாத புகழ் எய்துவர்

3.யு ஆர் மை எனிமி! U R MY ENEMY கொடுப்பவர்களைத் தடுக்கிறானே! அவன்தான் எதிரி/எனிமி!

‘நினக்கு இலை; என் கை   நிமிர்ந்து இட, வந்து

தனக்கு இயலா வகை    தாழ்வது, தாழ்வு இல்

கனக் கரி ஆனது    கைத்தலம் என்னின்,

எனக்கு இதன் மேல் நலம்    யாது கொல்? ‘என்றான்..

’மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர்;- எந்தாய்!-

வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்.

ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரோ?

‘அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்

கொடுப்பவர் முன்பு ‘கொடேல் ‘என நின்று

தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்

கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை ‘என்றான்.

***

44.‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்   இனி. இந்த உலகுக்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்   துயர் வண்ணம் உறுவது உண்டோ?

மை வண்ணத்து அரக்கி போரில்   மழை வண்ணத்து அண்ணலே! உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன்;   கால் வண்ணம் இங்குக் கண்டேன்

(பாலகாண்டம்-அகலிகைப் படலம் பாடல் 24)

அற்புதமான கருத்து நயம்; ஓசை நயம், எழுத்து நயம், வார்த்தை நயம் உள்ள இதற்கு இணையான இன்னொரு

பாடலை எந்த இலக்கியத்திலுமே காண முடியாது என்பது மட்டும்; உண்மை!

ராமனின் கை வண்ணத்தை அரக்கி தாடகை அழிவில் கண்ட மஹரிஷி விஸ்வாமித்திரர்

அவன் கால் ஒரு கல்லில் பட அகலிகை சாப விமோசனம் பெற்று எழும் போது கால் வண்ணத்தையும் கண்டு

கூறிய வார்த்தைகள் இவை!

மைவண்ணத்து   அரக்கி   –    அஞ்சனம்   போலும்   கரிய

நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு; போரில் – செய்த

போரில்;   உன்   வைண்ணம்   கண்டேன்  –  உன்  கையின்

திறத்தைப்  (வில்லினது  ஆற்றலை)  பார்த்தேன்;  இங்குக்  கால்

வண்ணம்  –    இந்த   இடத்தில்  உன்  திருவடியின்  திறத்தை;

கண்டேன்  – பார்க்கலானேன். 

கல் போல சித்தப் பிரமையில் இருந்த அகலிகை, ராமன் கால் பட்டவுடன், உயிரும் உணர்வும் பெற்று எழுந்தாள்

***

செப்பும்காலை. செங்கம   லத்தோன் முதல் யாரும்.

எப் பெண்பாலும் கொண்டு   உவமிப்போர் உவமிக்கும்.

அப் பெண் தானே ஆயின   போது. இங்கு. அயல் வேறு ஓர்

ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை   நாடி. உரை செய்வோம்?

சீதைக்கு     உவமை கூற இயலாது: ஏனென்றால் அவள் உவமை கடந்தவள்.  எவ்வாறெனில்.  எல்லாப்  பெண்களுக்கும்  எல்லாராலும் உவமையாக   எடுத்துச்   சொல்லப்படுகிறவள்   திருமகள்.  அவளே இப்போது  மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க

அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்?              24 

உமையாள் ஒக்கும் மங்கையர்`   உச்சிக் கரம் வைக்கும்

கமையாள் மேனி கண்டவர்   காட்சிக் கரை காணார்.

‘இமையா நாட்டம் பெற்றிலம்’   என்றார்; ‘இரு கண்ணால்

அமையாது’ என்றார் – அந்தர   வானத்தவர் எல்லாம்.

மண்ணவர். விண்ணவர்: சீதையைப் பார்த்தவர்கள்அவளது  மேனி

யழகிற்கு  எல்லை  காண  முடியாது  வருந்தினார்கள்.  அவர்களிலே

நிலவுலகத்தவர்  தேவர்களைப்  போலத்  தமக்கு  இமையா  நாட்டம்

இல்லையே  என்று  வருந்தினர். ஆனால் அவ் வானத்தவரோ தமக்கு

இமையா  நாட்டம்  இருந்தும்  அவை  இரண்டாக அமைந்தமையால்

சீதையின்  அழகை  முற்றும்  ஒருங்கே பார்க்க அவை போதா என்று குறைபட்டனர்.      

***   

46.இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர்

கண்டுகொள்ளல்

எண் அரும் நலத்தினாள்    இனையள் நின்றுழி,

கண்ணொடு கண் இணை    கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது    உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான்!    அவளும் நோக்கினாள்.

   அண்ணலும்நோக்கினான் – இராமனும்   (சீதையைப்)   பார்த்தான்;   அவளும்

நோக்கினாள்  – சீதையும் (இராமனைப்) பார்த்தாள்.

இராமனும் சீதையும். இராமனது பார்வை சீதைமேல் செல்ல. அவள்

கண்  இராமன்  மேல்  பாய்.  அப்போது இருவரது  மனவுணர்ச்சியும்

ஒன்றுபட்டு ஒரு தன்மைத்தான காதலைக் கொண்டது புலனாகும்.

***

47.வில் படை வீரனும் வாள் படை (வாள் போன்ற விழியுடையாள்) வீராங்கனையும் சந்திப்பு !

மிதிலை முழுதும் கிசு கிசு செய்திகள்! Flash News in Ayodhya Today 5000 BCE, Mithila Times 5000 BCE!

பருகிய நோக்கு எனும்    பாசத்தால் பிணித்து,

ஒருவரை ஒருவர் தம்     உள்ளம் ஈர்த்தலால்,

வரி சிலை அண்ணலும்    வாள் கண் நங்கையும்

இருவரும் மாறிப் புக்கு    இதயம் எய்தினார்.

மருங்கு இலா நங்கையும். வசை இல் ஐயனும்.

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்-

கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்

பிரிந்தவர் கூடினால். பேசல் வேண்டுமோ?

மருங்கு இலா நங்கையும்- இடையில்லாத (நுண்ணிய   இடையைக்

கொண்ட) சீதையும்; வசை இல் ஐயனும் – குற்றம் இல்லாத இராமனும்

(ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மிக்க காதலால்); ஒருங்கிய இரண்டு

உடற்கு  –  ஒன்றுபட்ட  இரண்டு  உடல்களுக்கு;  உயிர்    ஒன்று

ஆயினார் – ஓர் உயிர் என்று சொல்லுமாறு ஆனார்கள்;  கருங்கடல்

பள்ளியில் – மிகப்  பெரிய  பாற்கடலில்  ஆதிசேடனாகிய   பாம்புப்

படுக்கையிலே; கலவி  நீங்கி –  (ஒருவரோடு  ஒருவர்   கலந்திருந்த)

கூட்டம் நீங்கி;  போய்ப்   பிரிந்தவர்  –  (தனித்தனியே)   பிரிந்து

சென்றவர்கள்;  கூடினால்  –  மீண்டும் (ஓர்  இடத்தில்)  சேர்ந்தால்;

பேசல்  வேண்டுமோ?  – (அவர்களுக்குள் உண்டாகும்   காதலைச்)

சொல்லவும் வேண்டுமோ? 

விஷ்ணு- லெட்சுமி இருவரும் பூமியில் பிறந்து மிதிலை நகரில் மீண்டும் சந்தித்துவிட்டனர்!

***

48.உறுவலி யானையை ஒத்த மேனியர்.

செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்.

அறுபதினாயிரர். அளவு இல் ஆற்றலர்.

தறி மடுத்து. இடையிடை. தண்டில் தாங்கினர்.*

(விற்சாலையுள்     புகுந்த ஏவலாளர்  தெரிவித்தவாறு) 

மிக்க  வலிமையுடைய  யானையை; ஒத்த  திடமான உடலையுடையவர்களும்; மலை

போலத்   திரண்டு;   மயிர்  அடர்ந்த தோளினரும்;    அளவிடமுடியாத

வல்லமையுடையவர்களுமாகிய;  அறுபதினாயிரம்

வீரர்கள்;  (அந்த  வில்லின்) நடு இடங்களில்;

தூண்களை  வைத்து;  (அத் தூண்களோடு

நெடுகக்  கட்டிய) தண்டுகளில்; (தம் தோள்களில் வைத்து

சுமந்து வந்தார்கள்.

அறுபதினாயிரம் 60,000 என்ற எண், இந்துமத நூல்கள் முழுவதிலும் எண்ணற்ற, கணக்கில்லாத என்ற பொருளில் வருகிறது.

***

49.தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்

மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;

கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்

எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

கண்     இமை   கொட்டினால்    இராமன்     வில்லையெடுத்து

நாணேற்றுவதைக்  காணாமற்போய் விடுவோம்  என்று கண் கொட்டாது

பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும்.  அது  முறிந்த

ஓசையையும்  கேட்டனரே  அல்லாமல் அதை   நாணேற்றியதைக் காண

முடியாதவராயினர் என்பது. இற்றது – இறுதலால் தோன்றிய ஒலி    

***

50.யாகம் செய்வதற்காக மன்னர்கள் தங்க- ரத்தினக் கலப்பை கொண்டு உழுவது சம்பிரதாயம் ;

அவ்வாறு ஜனக மன்னன் நிலத்தை உழுத போது சீதையைக் கண்டான்

‘உழுகின்ற கொழு முகத்தின்.

   உதிக்கின்ற கதிரின் ஒளி

பொழிகின்ற. புவி மடந்தை

   திரு வெளிப்பட்டென. புணரி

எழுகின்ற தெள் அமுதோடு

   எழுந்தவளும். இழிந்து ஒதுங்கித்

தொழுகின்ற நல் நலத்துப்

   பெண் அரசி தோன்றினாள்.

சீதை   கொழுமுகத்தில் தோன்றினாள் என்றார். சீதையின் திருமேனி

பொன்னிறமாதலால்    ‘உதிக்கின்ற    கதிரின்     ஒளி   பொழிகின்ற

புவிமடந்தை’  என்றார்  இலக்குமியும்  தாழ்ந்து  வணங்கத்தக்க  பேரழகு

படைத்தவள் சீதை .                                 

கொழு: நிலத்தை உழுவதற்காக ஏரில் பயன்படுத்தப்படும் இரும்பு முனை (Ploughshare).

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இதற்கு முன்னர் வெளியிட்ட 40 கேள்விகள் ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்

1

அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?

2

ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப்  பலன்கள்  பற்றி  கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?

3

எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது ; கம்பன், தனது ராமாயணத்தை, எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?

4

கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள் ?

5

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் ; போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே ?

6

வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?

7

தெய்வ மாக்கவி, முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?

8

கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்; சைவ, வைணவ பேதம் பாராட்டாதவன் ; முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான் ; சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?

9

ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி – என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள் ; இதைக் கம்பனும் சொல்லி, சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?

10

கம்பன் போகிற போக்கில் Music மியூசிக் பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான் ; இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,

பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,

விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.

***

11

கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை ?

12

தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?

13

கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம்   ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?

14

வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம் ; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?

15

தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப் THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை  அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?

16

பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது ; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!

17

யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?

18

முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா ?

19

கம்பன் கருத்துப்படி வானரங்கள் – குரங்குப்படை யார் ?

20

துளசிதாஸ் எழுதிய ஹனுமான் சாலீஸாவில் அனுமன், சிவ பெருமானின் அவதாரம் என்கிறார் ; கம்பன் என்ன சொன்னான் ?

21

விஷ்ணு ராமனாகவும், சிவன் அனுமனாகவும் தேவர்கள் வானரங்களாகவும் அவதரித்ததாகக் கம்பன் சொன்னதைப் பாடல்களில் கண்டோம்; வாலி, சுக்ரீவன் யார் அவதாரம் ?

22

ரிஷ்யஸ்ருங்க முனிவரின் தமிழ்ப் பெயர்  கலைக்கோட்டு முனிவர் (கலை-மான்); அவரை கம்பன் எப்படிப் புகழ்கிறான் ?

23

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை — என்று மூதுரை நூலில் தமிழ் மூதாட்டி ஔவையார்  பாடியுள்ளார்.ரிஷ்ய ச்ருங்க முனிவர் நகருக்குள் நுழைந்தவுடன் என்ன நடந்தது ?

24

சோழர்கள் ஒரிஜினல் தமிழர்கள் அல்ல என்று புறநானூற்றுப் புலவர்களும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் குறிப்பால் உணர்த்துகின்றார்கள்.வடமேற்கு இந்தியாவை ஆண்ட சிபி என்னும் சூரியகுல மன்னன் அவர்களின் முன்னோன் ; கம்பன் செப்புவது என்ன ?

25

கலைக்கோட்டு முனிவன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அக்கினி குண்டத்திலிருந்து வந்த தேவன், பாயசம் ஏந்திய கலத்தைக் கொண்டுவந்தான் என்று வால்மீகி கூறுகிறார்; கம்பன் வேறு கதை சொல்கிறானே!

26

சுமித்திரைக்கு மாட்டும் இரட்டைப்பிள்ளைகள்  பிறந்தது ஏன் என்று கம்பன் காட்டுகிறான்?

27

கம்பன் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் என்ன ? ராமன் , லெட்சுமணன் நட்சத்திரங்கள்- ராசிகள் என்ன ?

28

வள்ளுவர் பற்றிக் கம்பன் புகல்வது யாது?

29

ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு என்று விச்வாமித்ர முனிவன் சொன்னவுடன் தசரதன் அவனைவிட்டுவிடு, நானே வருகிறேன், என்று சொல்லி எப்படித்துடித்தான் ?

30

விசுவாமித்திர முனிவரின் கோபத்தையும் எக்காளச் சிரிப்பையும் கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?

31

விசுவாமித்திர முனிவன் அதி பயங்கர கோபத்துடன் எக்காளச் சிரிப்பு சிரித்து வெளியேற எத்தனித்தபோது , வசிட்ட மாமுனிவன் ப்ளீஸ் வெயிட், ப்ளீஸ் பி பேஷண்ட் PLEASE WAIT, PLEASE BE PATIENT என்று சொல்லி தசரதனுக்கு என்ன சொன்னான் ?

32

நீ தேரோட்டி மகன் ; க்ஷத்ரியர்கள் போட்டியில் நீ இடம்பெற முடியாது என்று கர்ணனிடம் சொன்னபோது, உடனே அவனை இன்று முதல் அங்க நாட்டுக்கு மன்னன் என்று டிக்ளேர் DECLARATION  செய்து பிளாஷ் நியூஸ் FLASH NEWS வெளியிட்டான் துரியோதனன் ; அந்த அங்க நாட்டுக்கு ஏன் அங்கம் என்று பெயர் வந்ததாகக் கம்பன் செப்புகிறான் ?

33

ராம லெட்சுமணர்களுக்கு பலா , அபலா என்ற இரண்டு மந்திரங்களை விச்வாமித்ரன் அளித்தானே ; அவைகளின் பொருள் என்ன? காளிதாசன் இது பற்றி விளம்பியது என்ன ?

34

தாடகை என்னும் அரக்கியை கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான் ?

35

ராமனைப் பார்த்த ஆண்களுக்கு, தாங்கள் பெண்களாகப் பிறந்து இவரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எழுமாமே! கம்பனின் அதீதக் கற்பனை வரும் பாடல் எது ?

36

இந்தியாவில் எரிமலைகள் /VOLCANOES  கிடையாது ; ஆயினும் தாடகையை கம்பன் வால்க்கேனோ – எரிமலை என்று வருணிக்கும் வியப்பான இடம் எது?

37

தமிழ்க்கடல் தந்த அகத்தியனை கம்பன் எப்படி அறிமுகப்படுத்துகிறான் ?

38

செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்று தமிழ்ப்பழமொழி உண்டு; ஆனால் கம்பன், தீயவர் காதில் போட்ட சொற்கள் ஒரு காதில் சென்று மனத்தில் தங்காமல் மறு காது வழியாகப் போய் விடும் என்ற உவமையைப் பொருத்தமாகப் பயன்படுத்துவது எங்கே?

39

கம்பன், ராமாயணம் இயற்றும் காலையில், அவருக்கு பேருதவி புரிந்தவர் சடையப்ப வள்ளல் என்னும் பெருந்தகை ஆவார்; அவரை அவ்வப்போது கம்பன் புகழ்ந்து நன்றிக் கடன் செலுத்துவான்; அவ்வாறு முதல்முதலில் புகழும் பாடல் எது ?

40

ஒருவன் செய்த நற்பயன்/ கல்வி அனைத்தும் மறுபிறப்பில் (ஏழு பிறப்புக்கும்) வரும் என்று வள்ளுவன் சொன்னதைக் கம்பன் எப்படிப் பாட்டில் வடிக்கிறான் ?

–subham—

Tags- கம்ப ராமாயணம், பாடல்கள், 50 கேள்விகள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-119 ; இந்து மத கலைச்சொல் அகராதி-119 (Post.16,232)

Written by London Swaminathan

Post No. 16,232

Date uploaded in London – 24 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

விதர்பா

இந்த தேசம் தற்போதைய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதி ஆகும். வேத காலத்திலியேயே இப்படி ஒரு நாடு இருந்தது அகஸ்தியர்- லோபாமுத்ரா கதை மூலம் தெரிகிறது; விதர்ப்ப நாட்டு இளவரசியான லோபாமுத்ரா , படுக்கை அறைக்குள் நுழைய, புதிய கணவனான அகஸ்திய முனிவருக்கு ஒரு நிபந்தனை போடுகிறாள் ; நீர் தவம் செய்யும் பிராமணன்; நானோ இளவரசி ; ஆகையால் நல்ல நகை நட்டுகளுடன் வந்தால் முதல் இரவு நடக்கும் என்கிறாள்; செல்வத்தைச்  தேடிச் சென்ற அகஸ்தியரும் மூன்று  மன்னர்கள் கை விரித்தவுடன் அப்போதையமில்லியன ர் பட்டியலில் இருந்த இல்வலன் வாதாபி என்ற இரண்டு அசுரர்களிடம் செல்கிறார் ; அவர்கள் அரக்கர் வேலையை அகஸ்தியரிடம் காட்டியவுடன், அவர் இருவரையும் அழிக்கிறார். அகஸ்தியர்– லோபாமுத்திரை கதை ரிக் வேதத்திலும் தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையிலும் இருப்பதால் விதர்பா தேசம் வேத காலம் முதல் இருந்தது தெரிகிறது

***

விஜயநகர சாம்ராஜ்யம் – வித்யாரண்யர் கதை

என்னுடைய பழைய பதிவிலுள்ள வித்யாரண்யர் கதை

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்று மஹா கவி பாரதியார் ஏன் சொன்னார்?  இது பலரது அனுபவத்தில் கண்ட உண்மை என்பது பாரதியாருக்குத் தெரியும். முதலில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு ஷெல்லி தாசன் என்ற புனைப்பெயரில் பாடிய பாரதி, பின்னர் சக்திதாசன் என்ற பெயரில் எழுதினார். இதனால் இன்றளவும் அவரை மிஞ்சும் கவிஞன் பிறக்கவில்லை.

சக்தியைப் பாடிப் பயன் அடைந்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது ஆதி சங்கரர்,மூக கவி, காளிதாசன், தெனாலி ராமன், வித்யாரண்ய சுவாமிகள், லலிதா சஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதிய பாஸ்கர ராயர், நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி, சிருங்கேரி மடாதிபதிகள் , புதுக்கோட்டை சாந்தானந்த  சுவாமிகள் ஆகியோர் தினமும் சக்தியை- தேவியை – வழிபட்டுப் புகழ் அடைந்தனர். ஒரு சில விஷயங்களை நவராத்ரி காலத்தில் நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஆதிசங்கரர் அம்பிகையின் அருள்பெற்று நாடு முழுதும் பல கோவில்களில் ஸ்ரீ சுக்ர யந்திரத்தை ஸ்தாபித்து எல்லோருக்கும் தேவியின் அருள் கிடைக்க வழி செய்தார் ஸ்ரீநகர் முதல் கன்யாகுமரி வரை அவருடைய காலடிபட்டு புனிதம் பெற்றது காஷ்மீரின் தலைநகருக்கே ஸ்ரீ நகர் என்று தேவியின் பெயரைச் சூட்டினார்.

இன்றுவரை ஆதிசங்கரரின் துதிகளை சிருங்கேரி, காஞ்சி மடாதிபதிகள் பரப்பியும், தேவியைப் பூஜித்தும் வழிபடுகின்றனர் .

காளிதாசன்

ஆட்டிடையனாகப்  பிறந்த காளிதாசனை திமிரு பிடித்த மஹாராணிக்குஅந்த நாட்டு மந்திரிகள் மனம் புரிவித்தனர்; முதல் நாள் இரவிலேயே அவன் ஆட்டிடையன் என்று கண்டு கொண்ட ராணி அவனை விரட்டவே,  ஊர்க்கோடியில் உள்ள காளிகோவிலுக்குச் சென்று பிரார் த்தனை செய்தான் காளி  அவன் முன் தோன்றி அவன் நாவில் மந்திர அட்சரத்தினை எழுதவே உலகப் புகழ் பெற்ற கவிஞன் ஆனான்  .ஏழு அற்புத நூல்களை நமக்குத் தந்தான்

இதே போல தெனாலி ராமனுக்கும் காளியின் அருள் கிடைக்கவே அவன் விஜய நகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான விகட கவியாக உயர்ந்து நமக்கு நகைச் சுவைக்கதைகளை விட்டுச் சென்றான்.

மூக கவி என்பவர் குமர குருபரர்  போல ஊமையாகப் பிறந்து ,  இறைவியின் அருள் பெற்று நமக்கு அருட்கவிகளை மழை யெனப் பொழிந்து சென்றார்.

 நமது தாத்தா , கொள்ளுத்   தாத்தா காலத்தில் வாழ்ந்த அப்பய்ய தீட்சிதர் பாஸ்கர ராயர், முத்து சுவாமி தீட்சிதர் , நீல கண்ட தீட்சிதர் முதலிய எண்ணற்ற கவிஞர்கள் நமக்கு துதிகளை உரைகளையும் நல்கினர் .

வீர சிவாஜியோ பவானி தேவியின் வாளினைப் பெற்று முஸ்லீம் படைகளை நிர்மூலமாக்கி ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். குமார கம்பன்னன், மஹா  ராணி  கங்கா தேவி, திருமலை நாயக்கர் முதலிய மன்னர்களை வானுயரும் கோபுரங்களை அன்னைக்கு எழுப்பி அழியாத  புகழ் பெற்றனர்.

இவர்களுக்கு முன்னோடியாக இருந்த வித்யாரண்யர் இறைவியை வேண்டி டன்  கணக்கில் தங்கம் கேட்கவே அவளும் தந்தாள்; ஆனால் அதை அடுத்த பிறவியில்தான் அனு பவிக்க முடியும் என்றாள், அவரும்  அடுத்த பிறவிக்காக ஸந்யாஸத்தை ஏற்றவுடன் ஞானம் பிறந்தது; தங்கத்தை தொடாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஹரிஹரன் ,புக்கன் என்ற இடையர்களை அழைத்துப் பயிற்றுவித்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யததை நிறுவி முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தார்.

இதற்கெல்லாம் முன்னோடியாக சங்க இலக்கியத்திலே உமா என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சொல்லி தமிழ்ச் சங்கப்புலவர்களும் தேவியின் பெருமையைப் பாடினர்.

தமிழ்ச் சங்கப்புலவர்களில் உண்மையான புலவர் யார்? போலிகள் யார்? என்பதைத் தீர்மானித்தது  மதுரை அன்னை மீனாட்சி கோவில் பொற்றாமரைக்குளத்தில் மிதந்த சங்கப்பலகையே!

அங்கையற்கண்ணியையும் ஆலவாய் உறை அப்பனையும் பாடி  கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றிய திரு ஞான சமப்ந்தர் சைவத்தை மீண்டும் தமிழ் நாட்டில் நிலைநாட்டினார். அவர்  பயன்படுத்திய அங்கையற்கண்ணி என்ற மீனாட்சியின் தமிழ்ப்பெயர் இன்று வரை பெயர் சூட்டலில் இடம்பெறுகிறது.

இவ்வளவு கதைகளையும் அறிந்த பாரதியார் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்றார். அதில் வியப்பதற்கொன்றுமில்லை!

xxx

இந்துக்களையும் இந்தியாவின் தென்பகுதியையும் காப்பாற்றிய மாபெரும் பேரரசு- விஜயநகர சாம்ராஜ்யம் ; டில்லி சுல்தான்களின் இந்து மத விரோதப்போக்கு அதிகரித்தவுடன் சங்கம வம்சத்தின்  ஹரிஹரன்,  புக்கன் என்ற இரண்டு  ஆட்டிடையர்களை வித்யாரண்ய சுவாமி அழைத்து , தேவியிடமிருந்து பெற்ற தங்கக்கட்டிகளை கொடுத்து விஜய நகர சாம்ராஜ்யத்தை ஸ்தா பிக்கிறார் அந்த அரசு இல்லாவிடில் தென்னிந்தியா முழுதும் இன்று முஸ்லீம் நாடாக மாறியிருக்கும் சுமார் 400 ஆண்டுகளுக்கு கர்நாடகத்திலுள்ள விஜய நகரிலிருந்து – ஹம்பி நகரம் — ஆட்சி புரிந்தனர்; இவர்களின் செல்வவளத்தை– அளக்க முடியாத அளவுக்கு ரத்தினைக் குவியல் இருந்ததை– இரு வெளிநாட்டு யாத்ரீகர்கள் மிக விரிவாக நமக்கு அளித்துள்ளனர். இந்தப் பேரரசில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலம் பொற்காலம் ஆகும் ; இலக்கியமும்  கட்டிடக் கலை யும் சிற்பக்கலை யும் பெரும் வளர்ச்சி கண்டது. விஜய நகர ஆட்சிக் காலத்தில் குமார கம்பண என்ற படைத் தளபதி மதுரை வரை வந்து முஸ்லீம் படைகளை அழித்து 45 ஆண்டுக்  காலத்துக்கு மூடியிருந்த மதுரை மீனாட்சி கோவிலைத் திறந்தார்கள். ; அவருடன் வந்த ராணி கங்கா தேவி உலகத்தின் முதல் வார் கரஸ்பாண்டண்ட் WAR CORRESPONDENT ஆவாள் ; யுத்த காலத்தில் நடந்ததை அப்படியே கண்டவாறு எழுதிய அந்தப் பெண்மணி உள்ளத்தின் முதல் வார் பிராண்ட் ஜர்னலிஸ்ட் WAR FRONT JOURNALIST  ஆவாள் அவள் சம்ஸ்க்ருத  மொழியில்  எழுதிய மதுரா விஜயம் போர்க்களத்தின் நேரடி வருணனையை LIVE COMMENTARY அளிக்கிறது. மதுரை வரை முஸ்லீம் ஆட்சியை ஒழித்த  பெருமை குமார கம்பெண்ணனைச் சாரும்; இதே தெலுங்கு மன்னர்கள் வரிசையில் வந்த திருமலை நாயக்கர், ராணி மங்க கம்மாள் ஆகியோர் தமிழ்நாட்டின் பெரிய கோபுரங்களைக் கட்டினார்கள் கிருஷ்ண தேவராயருக்குப் பின்னர் விஜய நகரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவு கண்டது ; அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ராமராயர் துலுக்கசுல்தானகளைச் சீண்டிவிடவே அவர்கள் இணைந்து 1565, at the Battle of தாலிகொடலாம் ஆண்டில்  தலைக்கோட்டை யுத்தத்தில் ராயர் படைகளை நிர்மூலமாக்கினார்கள் அப்போது கடைசி மன்னர் திருமலராயா (Tirumala Raya) 500 யானைகளில் செல்வத்தை ஏற்றிக்கொண்டு பெனுகொண்டாவுக்குச்சென்றார் . ஆங்காங்கு இருந்த நாயக்க மன்னர்கள் கலைகளையும் இலக்கியங்களையும் வளர்த்தனர் மஹேந்திர பல்லவனைப்போல கிருஷ்ண தேவராயரும் நூலாசிரியர். ஆண்டாளின் பக்தர் கும்பகோணம் மகாமக குளத்தில் குளிக்க வந்தவர். போர்ச்சுகீசியருடன் வணிக ஒப்பந்தம் செய்து கடல் வாணிகத்தைப் பெருக்கினார்

இதற்குப்பின்னர் மஹாராஷ்டிரா வீர சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவி தென் இந்தியாவையும் மஹாராஷ்டிரத்தையும் காப்பாற்றினார்

திருமலை நாயக்கரும் மதுரையில் மஹால், மதுரை மீனாட்சி  கோவில் கோபுரங்களை எழுப்பி புகழ் அடைந்தார்  .o  ஹரிஹர I (Deva Raya) 1336-1343

o             புக்க I 1343-1379

குமாரா கம்பண (1343—1379).

சாளுவ வம்சம்

கிருஷ்ண தேவ ராயர் 1509-1530

***

விமானம்  

VASTU SHASTRA MEANING: Vimāna (विमान).—விமானம் என்பது விண்ணில் பறக்கும் ரதங்கள் என்றும் ஏழு மாடி உயர கட்டிடங்கள் என்றும் வாஸ்து சாஸ்திர நூல்கள் பகர்கின்றன.ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சம்ஸ்க்ருத நூல் ஐந்து விமானங்களைக்குறிப்பிடுகிறது

1.           வைராஜ-பிரம்மா தனக்காகச் செய்த விமானம்;

2.           கைலாச விமானம் – சிவா பெருமானுக்காக பிரம்மா

3.           புஷ்பக – குபேரனுக்காக செய்தது; 

4.           மணிகா – வருண பகவானுக்கு செய்தது;

5.           த்ரிவிஷ்டப்ப- விஷ்ணுவுக்கு seythathu.

சம்ஸ்க்ருத அகராதியில்:

8.           Vimāna (विमान).—மானம் இழந்த

12.        ஒரு அளவு, நிலுவை

வானில்பறக்கும் பலூன்  (vimānīkṛtarājahaṃsamaṇḍalaḥ) K.; R.12.14; Ku. 2.45;7.4; V.4.43; Kirātārjunīya 7.11; विगते दिवसे ततो विमानं वपुषा सूर्य इव प्रदीप्यमानः (vigate divase tato vimānaṃ vapuṣā sūrya iva pradīpyamānaḥ) (āruroha) Bu. Ch.5.43.

பொதுவான  வாஹனம்

15.        ஏழு மாடிக் கட்டிடம் ); ‘विमानोऽस्त्री देवयाने सप्तभूमौ च सद्मनि (vimāno’strī devayāne saptabhūmau ca sadmani)’ इति निघण्टुः (iti nighaṇṭuḥ); Rām.1.5.16; नेत्रा नीताः सततगतिना यद्विमानाग्रभूमीः (netrā nītāḥ satatagatinā yadvimānāgrabhūmīḥ) Meghadūta 71.

16.        7) குதிரை

17.        ௮திறந்த pallakku.; इमां विमानेन सभां विशन्तीं पपावपाङ्गैरथ राजराजिः (imāṃ vimānena sabhāṃ viśantīṃ papāvapāṅgairatha rājarājiḥ) N.1.17.

18.        படகு, கப்பல்

***

வினதா Vinatā (विनता).—

காஸ்யப ரிஷிக்கு கத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள்; பாம்புகளின் தாயார் கத்ரு; பாம்புகளின் எதிரியான கருடன்களுக்குத் தாயார் வினதா; இருவருக்கும் இடையே நிகழந்த பந்தயத்தில் வினதா தோற்று அடிமை ஆனாள்;

இதோ அந்தக் கதை:

காஸ்யப ரிஷிக்கும் வினதாவுக்கும் மகனாக கருடன் பிறந்தார். அவருடைய அண்ணன் பெயர் அருணன் அவளுக்கும் கத்ருவுக்கும் நடந்த போட்டியில் வினதா தோற்றுப்போகவே அடிமையானாள்;

இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை சொன்னாள்;  கத்ரு அதன் நிறம் கருமை என்றாள்.

குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை ஆகவேண்டும் என்பது நிபந்தனை. கத்ரு போட்டியில் வெல்ல வேண்டி ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொண்டன ;குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது.

போட்டியில் தோற்றுப்போன , வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள். அவளை விடுவிக்க அவளுடைய மகன் கருடன் அமிர்தத்தின் ஒரு பகுதியை சிறிய தாய்க்கு கொண்டுவந்து கொடுத்தான் ; அவள் விடுதலை ஆனாள்.

சம்ஸ்க்ருத அகராதி:

Vinata (विनत).—p. p.

குனிந்த, பணிந்த;

பணிவுடைய; எளிமையான

***

விநாயக- பெருந்தலைவர் Vināyaka (विनायक),

தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்;

ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:

லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:

தூமகேதுர்கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானன:

வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:

மேற்கண்ட 16 பிள்ளையார் பெயர்களிலும் 32 கணபதி பெயர்களிலும் விநாயகர் உண்டு.

புகழ்பெற்ற விநாயக கவசமும் முதலில் விநாயகர் பெயருடன்தான் துவங்குகிறது :

“வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க! நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க! புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க! தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!” ………………………………..

புத்தருக்கும் விநாயகர் என்ற பெயர் உண்டு .

மூங்கில் தோட்டங்களில் வேலை பார்க்கும் தெலுங்கு, கன்னட, ஒரியா மக்களின் ஜாதியில் விநாயக கோத்திரமும் இருக்கிறது.

TO BE CONTINUED………………………..

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-119 , இந்து மத கலைச்சொல் அகராதி-119, விநாயக, விதர்பா, விமானம் விஜயநகர சாம்ராஜ்யம் ,

வித்யாரண்யர் கதை