Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 12
(ஆர், சேஷாத்ரிநாதன்)
அனுமனின் ஐந்து முகங்கள்
அனுமனின் 5 முகங்கள் சொல்லும் ரகசியம்! உங்களுக்குத் தெரியுமா?
முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான பிரம்மாவுக்கு இருந்த பெருமைகளில் ஒன்று தான் ஐந்து முகங்கள். தனக்கு ஐந்து முகங்கள் இருந்த பெருமையில் ஆணவத்தின் காரணமாக பிரம்மா தனது ஒரு முகத்தை சிவபெருமான் மூலம் பெற்ற சாபத்தினால் இழந்து நான்முகனாக வழிபடும் பெருமை இழந்த கதையும் அறிவோம்.
ஆனால் எந்த ஆணவமும் இல்லாமல் தெய்வங்களிலேயே பராக்கிரமிக்க அதே சமயம் பணிவுடன் விசுவாசம் மிக்க தெய்வமாக மனிதர்களின் வாழ்வியலோடு பொருந்தி எவ்வித வேறுபாடுமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தெய்வமாக வழிபடப்படுபவர் தான் ஆஞ்சநேயர் எனும் அனுமன். இவரும் ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபடப்படுவது சிறப்பு. அத்துடன் இவரது தனித்துவமான உருவம் குழந்தைகளிடம் கூட கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ப்பது சிறப்பு.
பஞ்சமுக ஹனுமன் புராண வரலாறு:
பஞ்சமுக ஹனுமானின் கதை இராமாயணத்தின் பகுதியாகக் கூறப்படுகிறது. மாயையில் வல்லவரும் இராவணனின் சகோதரருமான அஹிரவணா அல்லது மயில்ராவணன் காளிதேவிக்கு பலி தரும் எண்ணத்துடன் இராமனையும் இலட்சுமணனையும் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் சிறை வைத்தான்.
அவர்களை மீட்க வந்த ஹனுமனால் அரக்கனை வதம் செய்ய முடியவில்லை. காரணம் அஹிரவன் ஒரு தனித்துவமான வரம் பெற்றிருந்தான். அவனது உயிர் ஐந்து திசைகளில் வைக்கப்பட்ட ஐந்து எண்ணெய் விளக்குகளில் சேமிக்கப்பட்டு ஐந்தும் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டால் மட்டுமே அவன் மரணம் நிகழும் என்பதே அது. அஹிரவணுடன் போரிட்ட ஹனுமன் பஞ்சமுக ஹனுமனாக மாறி, ஐந்து தலைகளையும் மகத்தான சக்தியையும் பெற்றார். ஒவ்வொரு முகமும் வெவ்வேறு திசையில் பார்த்த தெய்வீக வடிவத்துடன் இருந்த அனுமன் ஒரே நேரத்தில் விளக்குகளை ஊதி, அரக்கனை அழித்து, இராமனையும் இலட்சுமணனையும் மீட்டார் என்கிறது புராணக்கதைகள்.
மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.
இராவணனை வதம் செய்த செய்தியை அறிந்த சதகண்டன் என்னும் அரக்கன் இராமனோடு போர் புரிய வந்தான். இராவணவதம் முடித்த இராமன் களைப்பு தீர ஓய்வெடுக்கட்டும் என எண்ணிய ஆஞ்சநேயர், தனக்கே உரித்தான வானரம் மற்றும் சிங்கம், கருடன், வராகம்(பன்றி), குதிரை ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக மாறினார். சதகண்டன் எடுத்த மாய வடிவங்களுக்கு ஏற்ப தானும் உருமாறி அழித்தார்.
பஞ்சமுகத்தின் சிறப்பு
இந்த ஐந்து முகங்களும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேல் திசைகளை நோக்கியுள்ளன. ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும், பலனையும் குறிப்பதாக கூறப்படுகிறது. ‘பஞ்சமுக ஆஞ்சநேயர் தத்துவம்’ என ஆன்மிகம் சிறப்பிக்கும் இந்த ஐந்து முகங்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன? இங்கு காண்போம்.
1. கிழக்கு முகம் (அனுமன் முகம்): ஆஞ்சநேயரின் உண்மையான சுயரூபத்தைக் குறிக்கும் இந்த முகம் கிழக்கு, புதிய தொடக்கங்கள் மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய கிழக்கு நோக்கி உள்ளது. இது பக்தி, தீர்க்கமான அறிவு, புத்திக்கூர்மை, மற்றும் செயலில் வலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது.
2. தெற்கு முகம் (நரசிம்ம முகம்): ஸ்ரீநரசிம்மரின் அம்சத்துடன் மரணம் மற்றும் மாற்றத்தைத் தரும் தெற்கு திசை நோக்கிய இந்த முகம் பயம், எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலுடன் அச்சத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
3. வடக்கு முகம் (வராக முகம்): வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் வடக்கு முகம் வராகரின் அம்சத்தைக் குறிக்கிறது. விஷ்ணுவின் பன்றி அவதாரமான இது பூமிக்குரிய வலிமை, சாபங்கள் மற்றும் எதிர்மறையிலிருந்து ஒருவரை விடுவித்தல், செல்வ செழிப்பு, அமைதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.
4. மேற்கு முகம் (கருட முகம்): தீமைகளிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றைக் குறிக்கும் மேற்கு முகம் கருடனின் அம்சமாக சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தருகிறது. மேலும் விஷங்கள், பாம்புக்கடிகள் மற்றும் சூனியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
5. மேல் முகம் (ஹயக்ரீவ முகம்): ஆன்மீக விழிப்புணர்வைக் குறிக்கும் விதமாக மேல் நோக்கி காணப்படும் இந்த முகம் ஹயக்ரீவரின் அம்சத்தைக் குறிக்கிறது. இது அறிவு, தெளிவு, ஞானம், கல்வி மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.
பஞ்சமுக அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
பில்லி சூனியம், தீய சக்திகள் அச்சம் அல்லது கெட்ட கனவுகள், கடுமையான உடல்நலக் கவலைகள், மன உளைச்சல், நிதி உறுதியற்ற தன்மை, வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல் போன்ற அனைத்து கவலைகளில் இருந்தும் பஞ்சமுக அனுமன் காக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதன் காரணமாகவே அவரது சிலைகள் அல்லது படங்களை அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-4-26 பகவான் ஶ்ரீ சத்யசாயிபாபா மஹா சமாதி தினம்
9-4-26 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
உங்கள் இதய ஊஞ்சலில் ஆடவே எனக்கு விருப்பம்! ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
ச. நாகராஜன்
உலக இயலில் ஆழ்ந்திருக்கும் குறை கூறுபவர்களைப் பற்றிக் கவலையே படாதீர்கள். அவர்கள் உங்களை ராஜ பாதையான விவேக-வைராக்யத்தை விட்டுவிட்டு சந்துபொந்துகளில் இழுக்கப்பார்ப்பார்கள். அவதாரங்கள் கூட அவர்கள் மீது பொறாமை கொண்ட சின்னபுத்திக்காரர்களால் குறி வைக்கப்பட்டவர்களே. அப்படி இருக்கும் போது தங்கள் பார்வையை விரிவுபடுத்தி அன்பை உலகமயமாக்க விரும்புபவர்களை அவர்கள் எப்படி விடுவார்கள்?
கிருஷ்ணரைப் பற்றிய அவதூறுப் பேச்சுகளை ஒருபோதும் பாண்டவர்கள் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். அவர்களுக்கு அவரது திவ்யமான புகழ் பற்றித் தெரியும். அவரிடம் முழுமையாக பாண்டவர்கள் சரணடைந்து விட்டார்கள். கிருஷ்ணரும் அவர்கள் செலுத்திய அதே அன்பைத் திருப்பித் தந்தார்.
அவர், தர்மராஜரே தனது தலை, அர்ஜுனனே தனது தோள்கள், பீமனே தனது இடுப்பு, நகுல சகாதேவர்களே தனது கால்கள் என்று பிரகடனம் செய்தார்.
அவரே இதயம். இதுவே பாண்டவர்களுக்கும் கிருஷ்ணருக்குமான உறவுநிலையாகும். இதுவே இறைவனுக்கும் அனைத்து உயிர்களுக்குமான உறவுநிலையாகும்.
பாண்டவர்கள் மட்டுமே இதை உணர்ந்தனர்; நம்பினர்; அதனால் பயனடைந்தனர். மற்றவர்கள் அடையவில்லை.
இறைவனே ஹ்ருதயவாஸி. தனது பணியை முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உலகை நீத்து விட்டதைக் கேள்விப்பட்டவுடன் தர்மராஜர் மஹாப்ரஸ்தானம் செய்ய முடிவெடுத்தார். மௌனமாக வடதிசையை நோக்கித் தனியே சாகும் வரை நடந்து செல்ல அவர் தீர்மானித்தார்.
பீமனிடம் இதைத் தெரிவித்த அவர், பீமன் என்ன முடிவெடுத்திருக்கிறான் என்று கேட்டார்.
பீமன், “அண்ணா! சூதாட்டம் நடந்தபோது நடந்த முடிவை விட்டுவிட்டு வேறொரு முடிவை எடுக்க நாம் வேறு ஆட்களாக ஆகி விட்டோமா, என்ன? நீங்கள் அப்போது எங்களைக் கேட்காமலேயே, எங்கள் அனுமதியைப் பெறாமலேயே எங்களைப் பணயம் வைத்தீர்கள், இழந்தீர்கள். இப்போது கூட எது உங்களுக்குச் சிறப்பானது என்று தோன்றி முடிவெடுத்தீர்களோ அதுவே எங்களுக்கும் உகந்ததே. ஏனெனில் நாம் ஒரே உடலில் இருக்கும் ஐந்து பிராணன்கள் போல (பஞ்ச ப்ராணன்). ஐந்து முக்கிய உறுப்புகள் ஒரே இழையில் இணைந்தது போலத் தான் அது” என்று பதில் கூறினான்.
அவர்களின் உடல் ஒன்றே; அதில் கிருஷ்ணரே இதயம்.
கோபர்களுக்கும் கோபிகைகளுக்கும் கிருஷ்ணரே இதயம். பாகவதத்தில் இப்படித் தான் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அவர்கள் கிருஷ்ணரை தங்கள் பதியாக, எஜமானனாக, இறைவனாக நினைத்தார்கள், உண்மையில் சொல்லப் போனால் கிருஷ்ணரை மட்டுமே அவர்கள் ஒரே புருஷனாகக் கருதினார்கள். மற்றவர்கள் எல்லாம் அ-பலைகள், பெண்கள், பலவீனமானவர்கள், பலவீனமான பெண்கள். துன்பம் வரும் நேரத்தில் மிகப் பெரும் வீரன் கூட தனிமையில் மௌனமாகப் புலம்பி அழுகிறான்.
அவர்களுக்கும் கூட மற்றவர்களுக்கு ஏற்படுவது போலவே, என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலை உருவாகிறது
எதையும் முடிவு செய்ய முடியாத நிலையில் சந்தேகம் சூழ்ந்த நிலையில் அவர்கள் பிரார்த்தனை புரிந்து உதவி கேட்கிறார்கள். அவர்களும் பலவீனமானவர்களே. இறைவன் ஒருவனே எல்லாக் காலங்களிலும் வலிமை வாய்ந்தவன். எவற்றாலும் அசைக்க முடியாதவன். அனைவருக்கும் பலத்தைத் தருபவன்.
ஆகவே நீங்கள் கோபியரின் ப்ரேமை பற்றிப் படிக்கும் போது எல்லா உயிர்களும் பெண்களே, இறைவன் ஒருவனே புருஷன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ப்ரேமை ஒன்றினாலேயே இறைவன் தன்னை வெளிக்காட்டத் தூண்டப்படுவான். ஞானம் கைகூடும்.
இப்போது நான் பேச்சை நிறுத்த வேண்டும்; ஏனெனில் பங்களூரில் உள்ள பக்தர்கள் ஒரு புஷ்ப ஊஞ்சலை இங்கே அமைத்திருக்கிறார்கள்; அதில் நான் அமர்ந்து ஊஞ்சலாட வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இதை நான் ஆதரிக்கவில்லை. உங்கள் இதய ஊஞ்சலில் ஆடுவதால் நான் எவ்வளவு ஆனந்தம் அடைவேன் தெரியுமா?
ஓம்காரம் என்னும் ஊஞ்சலில் ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களின் இதயத்திலிருந்து தத் – த்வம் – அஸி என்ற ராகம் இசைக்கப்படும்போது அது எவ்வளவு பிரமாதமாக இருக்கும்! உங்கள் இதய ஊஞ்சலில் நீங்கள் மஹாதேவரை உட்காரவைக்கவில்லை, மனதை உட்கார வைத்திருக்கிறீர்கள். ஆகவே தான் மனிதகுலத்திற்கு அமைதியும் சந்தோஷமும் மறுக்கப்பட்டிருக்கிறது.
24-10-1966 அன்று தசரா விழாவில் பகவான் பாபா ஆற்றிய அருளுரை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Uraiyur- Tirukkoziyur
திருச்சி உறையூர் அழகிய மணவாளர் (கமலவல்லி நாச்சியார்) திருக்கோயிலை, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (1762) ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் 2-வது தலம்; திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம்.
உறையூர் பாசுரம்
“கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன
பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணமென்னில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா.”
உறையூர் பாசுரம் -திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி.
திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளேயே உள்ளது. திருச்சி இரயில்வே சந்திப்பிலிருந்து சுமார் மூன்று கி.மீ தொலைவிலுள்ளது.
இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயாருக்கு கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி என்று பெயர்கள் .
–subham—
TAGS– Vishnu Temples, 108 “Divya Desams” , Pictures, Part 2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள்-2, Uraiyur- Tirukkoziyur, உறையூர் பாசுரம் ,திருக்கோழி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
English version was posted yesterday.
****
லாஸ்யம்
பெண்கள் ஆடும் நடனம் லாஸ்யம் ;ஆண்மைக்குரிய ஆடலாகத் தாண்டவமும், பெண்மைக்குரியனவாக நளின நடனமாகிய லாஸ்யமும் கூறப்படும். ஒரு போட்டியில் தாண்டவங்களைச் சிவபெருமான் ஆடிக் காட்டினார்; லாஸ்யத்தை உமா தேவியார் ஆடினார் அந்தப் போட்டியில் தேவியார் தோற்றுப்போனார் என்றும் கூறுவர்; ஏனெனில் பெண்கள் கால்களை உயர்த்தி தூக்கி ஆடக்கூடாது என்பது நடைமுறை.
***
லவங்கம்
CLOVE கிராம்பு (லவங்கம் Syzygium aromaticum). பூஜையில் பயன்படுத்தப்படும் வாசனைப்பொருள். சமஸ்கிருதத்தில் லவங் என்று அழைக்கப்படுகிறது, ஆயுர்வேத மூலிகை ஆகும். காரமான சுவையும் வாசனையும் உள்ளது சமையலில் மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளில் பிரபலமாக உள்ளது. பல் வலி மருந்தாகவும் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் மூலிகையாகவும் பயன்படும் இது ஒரு தாவரத்தின் மலர் மொட்டு ஆகும்.
***
லலித விஸ்தார
புத்தரின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் சம்ஸ்க்ருத நூல் ; இதில் அக்கால பண்பாட்டு விஷயங்கள் இருப்பதால் அடிக்கடி மேற்கோள்களில் பயன்படுகிறது
***
லக்ஷணம்
லக்ஷணம் (இலக்கணம்/லட்சணம்) என்பது பொதுவாக அழகு, தன்மை, அடையாளம் அல்லது ஒரு பொருளின் சிறப்பியல்பு ஆகியவற்றைக் குறிக்கும். சாமுத்ரிகா லக்ஷணம் போன்ற நூல்களில் இது அங்க அழகு என்றும், ஆன்மீகத்தில் பக்தி அல்லது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கப் பயன்படுகிறது. சில சூழல்களில், இது சாசனப்பத்திரம் (Deed) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
***
லக்ஷியம்
ஒருவருடைய குறிக்கோள் லக்ஷியம் எனப்படும்; ஒருவர் தான் அடைய வேண்டியதை தனது லக்ஷியம் ஆக வைத்துக்கொள்வார் . கீழே காஞ்சி சுவாமிகளின் உரையில் இந்தச் சொல் வருகிறது: “புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தைக் காட்டுகிறார்கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம்”.
***
லெமூரியா
இது ஒரு கற்பனைக் கண்டம் . இந்தச் சொல்லை முதலில் ஒரு ஆங்கிலேயர் (English zoologist Philip L. Sclater (1829-1913) உருவாக்கி அதை கிரேக்கர்கள் சொல்லும் இன்னொரு மறைந்த அட்லாண்டிஸ் கண்டத்துடன் சேர்த்து புஸ்தகம் எழுதினார்.
இந்தச் சொல் இப்பொழுது மடகாஸ்கர் என்னும் பிரம்மாண்டமான தீவு நாட்டில் (இப்போதைய பெயர் மலகாசி) காணப்படும் லெமூர் LEMUR என்னும் பிராணிகளிடத்திலிருந்து அவராக கற்பனையில் உருவாக்கிய சொல்; அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை; இதே பிராணிகளின் பழைய பாசில் FOSSIL சுவடுகள் இந்தியாவிலும் கிடைப்பதால் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்த நிலப்பரப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் ; அப்போது மனித இனமோ நாகரீகமோ தோன்றவில்லை!
இதே போல குமரிக்கண்டம் என்பதும் உண்மையே ; இரண்டு பெரிய சுனாமி தாக்குதல்களில் கன்னியாகுமரிக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு கடலில் சென்றது; இதற்கும் லெமூரியாயாவுக்கும் தொடர்பு இல்லை. நமது காலத்திலேயே சுனாமி வந்து தனுஷ்கோடி முதலிய இடங்கள் கடலுக்குள் மூழ்கியதையும் குஜராத்தில் கிருஷ்ணரின் துவாரகை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் மூழ்கியதையும் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால் இவை எல்லாம் சிறு நிலப்பரப்பே . பெரிய கண்டமல்ல ; மேலும் சோழர் கல்வெட்டில் வரும் இலமூரி தேசமும் சுமத்ரா தீவில் உள்ள இடம் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் வெளியிட்ட இந்துமஹாசமுத்திரப் படம், கடலில் மூழ்கிய மலைகளுடன் என்னிடம் உள்ளது; அதிலும் பெரிய நிலப்பரப்பு மூழ்கியதற்கான் தடயங்கள் காணப்படவில்லை ; ஆக நாகரீகமுள்ள லெமூரியா என்பது கற்பனையே .
கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு முதலியன மூழ்கியது பற்றி குறிப்பிடுகின்றன .
SEE THE PICTURE
இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம்ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக் கண்டம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது , சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
Lemuria, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.
Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May.
***
லிங்கம்/ சிவலிங்கம்
‘லிங்கம்’ என்றால் குறி MARK என்று பொருள்; பால் GENDER என்ற பொருளிலும் இலக்கணத்தில் வரும். சம்ஸ்க்ருத வகுப்பில் அகாரந்தப் புல்லிங்க: ராம சப்த: இகாரந்த ஸ்த்ரீலிங்க: என்று சொல்வதிலிருந்து இது ஆணையோ பெண்ணையோ அலியையோ குறிக்கப் பயன்படும் என்பதை அறியலாம். இறைவனுக்கு உருவம் உண்டு/ இல்லை என்பதை சிவபெருமானின் அடி முடியைத் தேடுவதற்கு விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற கதை காட்டுகிறது ;12 லிங்கம் உள்ள ஸ்தலங்களை இந்துக்கள் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று வழிபடுகின்றனர்.
நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும், லிங்க வடிவிலுள்ள மலையை இமயத்திலுள்ள புனித கயிலாய மாகவும், காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கத்தை ஜஸ் லிங்கமாகவும் இந்துக்கள் வழிபடுகிறார்கள் .
இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்;.சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. பூமிக்கடியில் ஏற்படும் அதிர்வலைகளால் இப்படி நடக்கிறதென்று ஜியாலஜிகல் மேகசினில் GEOLOGICAL MAGAZINE கட்டுரை வெளியாகியுள்ளது.
சிந்து சமவெளியில் மொஹஞ்சசத்தாரோ, ஹரப்பாவில் கிடைத்தவை லிங்கங்கள் அல்ல; தாயக் கட்டத்தில் வைத்தாடும் காய்கள் அல்லது எடைக் கற்கள் என்று அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
காஞ்சி மஹா பெரியவர் (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1894-1994) லிங்க வழிபாடு மற்றும் சிவலிங்கத்தின் தத்துவம் குறித்துப் பேசியுள்ளார் .
அருவுருவ நிலை: சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் லிங்கம் ஆகும். இது உருவமும் (ரூபம்) அல்ல, உருவமற்றதும் (அரூபம்) அல்ல. உருவமும் அருவமுமாக இணைந்த அருவுருவம் என்று காஞ்சி சுவாமிகள் லிங்க வடிவத்தை விளக்குகிறார்.
பஞ்ச பூத லிங்கங்கள் என்பன ஐந்து கோயில்களில் உள்ளன ;காஞ்சி சங்கர மடத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சந்திரமௌலீஸ்வரர் (ஸ்படிக லிங்கம்) உள்ளது . லிங்கம் என்பது பரம்பொருளை மனதளவில் உணர்வதற்கான மிக உயர்ந்த குறியீடு .
வேதங்களிலோ , சங்க இலக்கியத்திலோ , காளிதாசன் மாணிக்கவாசகரின் படைப்புகளிலோ லிங்கம் என்ற சொல்லினைக் காண முடியாது; மிகவும் பிற்கால தமிழ் பக்தி இலக்கியங்களிலும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களிலும் மட்டுமே லிங்கம் என்ற சொல் வருகிறது; ஆனால் அதற்கு முன்னர் வழிபாடு இருந்ததற்குத் தொல்பொருட் துறைச் சான்றுகள் உள்ளன .
Tallest Lingam in Kerala.
***
லீலாவதி
லீலாவதி ( Līlāvatī ) இரண்டாம் பாஸ்கரரால் சமஸ்கிருதத்தில் கி.பி. 1150 இல் எழுதப்பட்ட கணித நூலான சித்தாந்த சிரோன்மணி என்ற நூலின் முதல் பகுதி ஆகும்.இந்தப் பகுதியின் பெயர் பாஸ்கரரின் மகளான லீலாவதியின் பெயரால் அழைக்கப்படுகிறது. பீ ஜ கணிதம், கிரஹ கணிதம், கோளத்யாயம் என்ற தலைப்புகளில் இந்துக்களின் கணித அறிவு விளக்கப்பட்டுள்ளது ; மேலை நாட்டினாருக்கும் முன்னதாகவே ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா ஆகி யவற்றினை சுவைபட விளக்கும் சம்ஸ்க்ருத நூல்
Srirangam Temple Tower.
To be continued……………..
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 ,லீலாவதி,லிங்கம், சிவலிங்கம், லெமூரியா, லாஸ்யம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-3-26 கல்கி ஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை
பாட்டுக்கு ஒரு பட்டம்மாள்!
ச. நாகராஜன்
1947 ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நள்ளிரவு 12 மணி. இந்தியா எங்கும் ஒரே கொண்டாட்டம். சென்னையில் எங்கு பார்த்தாலும் மாவிலைத் தோரணம். மக்கள் ஆடிப்பாடி ஆரவாரித்து சுதந்திரத்தை வரவேற்றனர்.
ஆல் இந்தியா ரேடியோவில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்ற மகாகவி பாரதியாரின் தீர்க்கதரிசனப் பாடல் இனிமையாக ஒலித்தது.
பாடியவர் டி.கே.பட்டம்மாள் என்று பிரபலமான தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்! நிலைய டைரக்டராக இருந்த கோபாலன் அவருக்கு சன்மானமாக ஒரு செக்கை அளித்தபோது அதை வாங்க மறுத்து விட்டார் டி.கே.பட்டம்மாள். “விடுதலை கிடைத்ததற்கு காசு வாங்கினால் அது அபசாரம்” என்று தெளிவாகக் கூறிய அவர் ஒரு மஹா தேசபக்தை!
1919ம் வருடம் மார்ச் மாதம் 19ம் தேதியன்று காஞ்சிபுரத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார் பட்டம்மாள்.
அவர் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் அவரைத் திருவண்ணாமலைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே பகவான் ரமண மஹரிஷியின் காலடியில் ஆசீர்வாதம் வாங்க அவர் வைக்கப்பட்டபோது பகவான் அவர் நாக்கில் தேன்துளிகளைத் தெளித்தார். ஆசீர்வாதம் செய்தார்.
அதன் பலனை நாடு நன்கு அனுபவித்தது. எங்கும் தெய்வீக இசை! முறையாகச் சங்கீதம் பயிலவில்லை என்றாலும் ராக தேவதை அவரிடம் குடியிருந்தாள். அவரது இசைத் திறமையைச் சோதிக்க அவரை பரிசோதித்தவர் அம்பி தீக்ஷிதர் – முத்துசாமி தீக்ஷிதரின் பேரன். அவரது திறமையைக் கண்டு வியந்த அவர், ‘உனக்குப் பாட்டுச் சொல்லித் தர எனக்கு ஆசை’ என்று கூறி பட்டம்மாளுக்கு வீணையுடன் இசையைக் கற்றுத் தந்தார்.
பட்டம்மாளின் பாணி தனித்வம் பெற்ற ஒன்று. அழுத்தம் கொடுத்து அவர் இசைப்பதைக் கேட்ட அனைவரும் அந்த அழுத்தத்தை நன்றாக ரசித்தனர். இதை பட்டம்மாள் ஸ்டைல் என்றே அழைத்தனர். அவரது பல்லவிகளின் நேர்த்தியைப் பார்த்த மக்கள் அவரை பல்லவி பட்டம்மா என்றே அழைத்தனர்.
முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளை அவர் விசேஷமாகப் பாட ஆரம்பித்தார். அது மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
கர்நாடக சங்கீத கிருதிகள், தேச பக்திப் பாடல்கள், சியாமளா தண்டகம் உள்ளிட்ட ஸ்தோத்திரங்கள்,திரைப்படப் பாடல்கள் என அனைத்திலும் அவர் கோலோச்ச மக்கள் மயங்கினர். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவரைப் பாராட்டி, “ப(பா)ட்டம்மா.. சங்கீதத்திற்காகப் பாடு பட்ட அம்மா” என்று வர்ணித்துப் பாராட்டினார்.
முதன் முதலில் கொலம்பியா கிராமபோன் கம்பெனி அவரை அணுகி பாடுமாறு வேண்ட ‘முக்தி அளிக்கும் திருமூல” என்ற பாடலை ரிகார்டு செய்தார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் எதிரொலிக்க அவர் பிரபலமானார். கல்கி எழுதிய கதையான தியாகபூமியில் அவரது பாடல் வரிகளைப் பாடி, அவரது திரைப்பட சேவை 1939ல் தொடங்கியது. இசை மேதை பாபநாசம் சிவன் அவரை திரைத்துறையில் அறிமுகப்படுதினார். பின்னர் நாம் இருவர், மிஸ்மாலினி, வேதாள உலகம், வாழ்க்கை உள்ளிட ஏராளமான படங்களில் அவர் பாடினார்.
2000ம் ஆண்டு இந்தியக் குடியரசின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் ஏ.ஆர் ரெஹ்மான் அமைத்த
‘ஜனகனமண’ ஆல்பத்தில் அவரே சீனியர் பாடகர். அவருக்கு அப்போது வயது 80.
பல விருதுகள் அவர் வாழ்க்கை முழுவதும் அவரைத் தேடி வந்தன. 1971ம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் 1999ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் அளித்து இந்திய அரசு அவரைக் கௌரவித்தது. அவரது உருவம் பொறித்த ஐந்து ரூபாய் தபால்தலைகளை அற்புதமாக வடிவமைத்து இந்திய அரசு வெளியிட்டது.
இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள சங்கீத சபாக்கள் அவரை வரவேற்று அவர் இசை அமிர்தத்தை மக்கள் பருக வழி வகுத்தன. அத்துடன் அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஶ்ரீ லங்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று அங்கு உள்ள சங்கீத ரசிகர்களை தன் இசைத்திறத்தால் அவர் மகிழ்வித்தார்.
1939ல் திரு ஈஸ்வரனை மணந்த அவர் ஒரு சங்கீத குடும்பத்தையே உருவாக்கினார்.
2009ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் நாளன்று வயது மூப்பின் காரணமாக அவர் சென்னையில் காலமானார்.
இன்றும் காலை நேரத்தில் பல வீடுகளில் அவர் இசைக்கும் சியாமளா தண்டகம் மற்றும் தீக்ஷிதர் கிருதிகள் உள்ளிட்டவற்றை ஏராளமான குடும்பத்தினர் கேட்டு மகிழ்வது கண்கூடு!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
***
LA Words continued…………. Tamil Version will be posted tomorrow.
LAKSHANAM
Lakshanam (Sanskrit: लक्षण) denotes a sign, mark, characteristic, or attribute used to define an entity. The term serves as a foundational concept in Hindu philosophy, Ayurveda, and linguistics, indicating symptoms, unique features, or indirect meanings.
***
LAKSHYAM
lakṣya (or lakshya) generally refers to a target, goal, aim, or objective within Hindu, Sanskrit, and Yoga literature. The term encompasses both physical targets used in contexts like the Arthashastra and the metaphorical focus of meditation
***
LASYAM
Lāsya refers to a graceful, delicate form of dance, often representing the feminine counterpart to the vigorous Tāṇḍava dance of Shiva. Rooted in the term for playing or frolicking, this style is characterized by its gentle movements and is associated with emotional expression. For more details.
***
Lalita Vistara
A work in Sanskrit verse on the doctrine and life of Buddha.
Lalitavistara (Sanskrit: ललितविस्तर) is a sacred Mahāyāna Buddhist text detailing the life of Gautama Buddha, often translated as “The Exhaustive Story of the Sport of the Buddha”. It presents the Buddha’s life—from descending from Tusita heaven to his first sermon—as a playful act of a superhuman being.
***
LAVANGA/M
Used in Puja along with Cardamom
Lavanga in Sanskrit is the name of a plant identified with Syzygium caryophyllatum from having the following synonyms: Myrtus caryophyllata, Syzygium caryophyllaeum, Eugenia corymbosa.
Lavaṅga (लवङ्ग) or Lavaṭha refers to the medicinal plant Syzygium aromaticum L. Syn. Eugenia aromaticum Merril & Perry. Syn. Eugenia caryophyllata Thunb., and is used in the treatment of atisāra (diarrhoea), according to the 7th century Mādhavacikitsā chapter (it belongs to the Myrtaceae (Bottlebrush) family).
It is used in the Ayurvedic formulation known as Cyavanaprāśa: an Ayurvedic health product that helps in boosting immunity
The flower-buds are used. It is fragrant, bitter, pungent, cold, pacifies pitta and kapha and restores vāyu to its normal course.
***
LE, LI words
LEMURIA
A fake and imaginary land like Utopia. May be compared with Atlantis of Greek literature. Tamils try to identify it with the lost Kumari Kandam/continent.
It is a fact that two Tsunamis devoured southern most parts of Tamil Nadu 2000 ++ years ago. But imaginary Lemuria has no scientific proof and nothing to do with the lost Tamil lands.. During continental drift, a lot of geological changes happened. But human beings did not exist at that time. The Indian Ocean map produced by National Geographic magazine shows NO such land mass near the southernmost tip of India. But millions of years ago, before civilizations appeared on earth, massive geological changes happened. In short Lemuria is misunderstood and misused by politicians.
Lemuria is a 19th-century scientific hypothesis named by English zoologist Philip Sclater in 1864, derived from “lemur” (the primate) and the suffix “-ia” (land). It was coined to describe a hypothetical sunken continent in the Indian Ocean, bridging Madagascar and India, intended to explain the geographical distribution of lemur fossils.
Origins and Evolution of the Name:
Scientific Origin (1864): Philip Lutley Sclater proposed the name in a paper titled “The Mammals of Madagascar” to suggest a former landmass connecting Africa, Madagascar, and India.
Etymological Basis: The name is derived from lemur (referring to the nocturnal, bug-eyed lemur primates) and the suffix -ia (Latin/Greek suffix denoting a land or country).
The “Lemur” Link: The concept arose because fossils of similar creatures were found in Madagascar and India, but not in Africa, suggesting they migrated across a “land bridge” that later san
***
LINGA/M
Formless aspect of God, particularly Siva. Though the linga form is absent in the Vedas, from Mahabharata it received distinct notice.
Sangam Tamil literature mentioned Siva’s names but not Lingam. It is refered very late in Bhakti literature.
In a passage of the Saurapurāṇa, Nārada asks Brahmā as to what is called liṅga; then Brahma gives the definition of liṅga:
“That form of Mahādeva which is Unmanifest (avvakta) is called liṅga; it is bliss (ānanda) and beyond all nescience (tamasaḥ paraṃ). By the liṅga Śaṃkara is Liṅgī”
Liṅga (लिङ्ग).—The worship of Liṅga is found in a quarrel between Brahmā and Viṣhṇu.
Certain liṅgas are called Jyotirliṅgas and they are said to be twelve in number such as Viśveśvara, Ratneśvara at Vārāṇasī, Mahākāla at Ujjayinī etc
In olden days, in the period of Satyayuga, Mahāviṣṇu did penance in Śvetadvīpa (the island Śveta) to obtain Eternal Bliss, being deeply engaged in the study of Brahmavidyā. Brahmā also went to another place and began to do penance for the suppression of passions. Both were doing severe penance. So they began to walk in order to take rest from the penance. On the way they met each other. One asked “who are you?” The other also asked the same question. The talk ended in a contest as to who was the greater of the two. Each claimed himself to be the supreme power of the world. Neither of them was prepared to recognize the claims of the other. In the midst of this contest, a LINGA appeared before them and an ethereal voice said from the sky: “You need not quarrel as to who is superior. He who reaches the extremity of this Lingam is the superior person. So both of you proceed, one upwards and the other downwards and find out the end.” Hearing this Viṣhṇu went downwards to find out the bottom and Brahmā, upwards to the top. Viṣhṇu travelled for a long time and finding no end thought the attempt futile and returned to the starting point with disappointment and sat down.
Brahmā travelled upwards for a long time and found no end. On the way he saw the petal of a paṇḍānus flower, coming down from the sky. Brahmā took it and joyfully returned and said haughtily to Viṣṇu: “See, I have taken this flower from the head of the Lingam. I have brought this to convince you. You have been defeated. So can you not admit that I am the superior?” Mahāviṣhṇu did not believe the words of Brahmā. So he called the Paṇḍānus flower to him and questioned it. The Paṇḍānus flower took false oath and witnessed in favour of Brahmā, who had asked the flower beforehand to be on his side. Mahāviṣṇu did not believe this either and said, “Let Śiva be witness to this flower”. Śiva at these words appeared before them and revealed the deceit played by Brahmā and the flower and then cursed the Paṇḍānus flower that thenceforward it should not have a place among the flowers of oblation to Śiva. Then Śiva got angry and plucked off a head of Brahmā. That is the skull Śiva uses for receiving alms. (Devī Bhāgavata, Śkandha 5.)
General meaning:
Liṅga (लिङ्ग)
1) A mark, sign, token, an emblem, a badge, symbol, distinguishing mark, characteristic; यतिपार्थिवलिङ्गधारिणौ (yatipārthivaliṅgadhāriṇau) R.8.16; अथवा प्रावृषेण्यैरेव लिङ्गै- र्मम राजोपचारः संप्रति (athavā prāvṛṣeṇyaireva liṅgai- rmama rājopacāraḥ saṃprati) V.4; मुनिर्दोहदलिङ्गदर्शी (munirdohadaliṅgadarśī) 14.71; Manusmṛti 1. 3;8.25,252.The sign of gender
2) Liṅga.—Proof, evidence (प्रमाण (pramāṇa)); the word is often used in the Paribhāșendușekhara and other works in connection with a rule or part of a rule quoted as an evidence to deduce some general dictum or Paribhāșā;
***
Lilavati (leelaavati)
Charming- the fanciful title of that chapter of Bhaskara’s Siddhanta Sironmani which treats of arithmetic and geometry
***
LO words
LOPAMUDRA
Daughter of king of Vidarbha. Agastya’s wife.
Sage Agastya, not being able to find a suitable wife , created her through the synthesis of best organs of various living beings and caused her to be born as the daughter of king of Vidarbha. She grew up to be a supremely beautiful woman, and her father was reluctant to give her in marriage to Agastya when he asked for her hand. The king was afraid to refuse the great sage for fear of earning his wrath. Lopamudra, realizing this predicament, willingly marred Agastya and discarding her royal robes and regal ways of living , she followed the sage in his ascetic wanderings.
When Agastya expressed his desire to produce a child, her only request was that he come to her dressed in a rich princely attire and find her on a jewel encrusted bed in a palace such as the one she was used to in her father’s house. When Agastya needed the amassed wealth and fulfilled her wishes, she gave birth to a son, Dadhasyu This is in Mahabharata .
Most famous Tamil commentator Nachchinarkiniyar , who lived 700 years ago, gives interesting story about the clash between Agastya and Trunadumagni who Tamils called Tolkappiar. Full account will be given under ‘T.’
***
LOKALOKA PARVATA
Lokāloka (लोकालोक).—There is a mountain between Loka and Aloka. This is called Lokālokaparvata and the land beside it is called Lokāloka. The mountain is as long as the distance between Mānasottara and Mahāmeru. This place is golden in colour and as smooth as glass. Not a single being lives there. God has created this as a boundary to the three worlds. All the planets like the Sun get light from the brilliance of this mountain. Brahmā has posted four diggajas named Vṛṣabha, Puṣpacūḍa, Vāmana and Aparājita in the four corners of this mountain. (8th Skandha, Devī Bhāgavata).
***
LOMASHA RISHI
A great rishi, who on a visit to swarga/heaven, was surprised to see Arjuna sitting beside Indra on a throne. Indra read his mind and acquainted him about Arjuna’s birth and his mission on earth. In accordance with Indra’s wishes , Lomasha then returned to earth and assured Yudhishthira about the welfare of Arjuna . He then accompanied the Pandavas to various places of pilgrimage and at each place he told them about the great sages who had lived there in earlier times. This is in Mahabharata .
***
LOMAPADA
An ancient king of Anga desa who had displeased some Brahmanas and therefore they cursed that his kingdom would undergo a prolonged draught. He therefore arranged to bring to his kingdom the sage Rishyasinga through trickery so that rain would fall on his parched and famine stricken land. Later he gave his adopted daughter Shantaa in marriage to Rishyashringa .This is in Mahabharata .
To be continued……………………..
Tags- Rishyashringa, Lopamudra, Lakshana, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 54; இந்து மத கலைச்சொல் அகராதி-54
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
***
திருவரங்கம் SRIRANGAM – TIRUVARANGAM
Pictures are taken by London Swaminathan
There are already very good websites giving full details about the 108 Divya Desams (Divine Sjrines)of Lord Vishnu. My purpose of this post is to present the pictures I took in Sriperumpudur temple in 2019 and Oppliappan Temple in 2026. It may not be complete because some pictures on the walls are in shady areas or no light areas. Yet my pictures will be useful to compare with others. These shrines were glorified in the poems of 12 Alvars what they call in Tamil as Mangalaa saasanam.
****
திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் -1
நான் எல்லா திவ்யதேசங்களுக்கும் செல்லவில்லை சுமார் 20 அல்லது 30 தலங்களுக்கு மட்டுமே சென்றிருப்பேன். ஆயினும் ஒப்பிலியப்பன் கோவில், ஸ்ரீ பெரும்புதூர் கோயில்களில் உள்ள சுவரோவியங்களைப் படம் எடுத்தேன் ; அவைகளைக் காணுங்கள் ; 12 ஆழ்வார்களால் பாடப்பட்டவை – அதாவது பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை .ஏற்கனவே பலரும் இப்பணியைச் செய்த்துள்ளனர் ; அவர்கள் வாழ்க!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15-4-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியான கட்டுரை!l̥
எதிர்ப்பாளரை ஒரு நல்ல நண்பனாக மாற்ற வேண்டுமா? – பென் ஃப்ராங்க்ளின் எஃபெக்ட்!
ச. நாகராஜன்
அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களுள் ஒருவராக அமைந்து அமெரிக்க நூறு டாலர் நோட்டில் இடம் பெற்றிருக்கும் மாமனிதர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஆவார். (தோற்றம் 17-1-1706 மறைவு – 17-4-1790)
எதிர்ப்பை சமாளிக்க அவரது வழியே தனி. அந்த வழியை அவர் தனது சுயசரித்திரத்தில் ஒரு சம்பவத்தின் வாயிலாகக் குறிப்பிடுகிறார். சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் அவரை இடைவிடாது எதிர்த்து வந்தார். ஒரு முறை அவரை அணுகிய பென் ஃப்ராங்க்ளின் அவரது நூலகத்தில் இருந்த ஒரு அரிய புத்தகத்தைப் படிக்கத் தர முடியுமா என்று பணிவுடன் வினவினார். அசந்து போன அவரது எதிர்ப்பாளர் அதைத் தந்து உதவினார். புத்தகத்தைப் படித்து விட்டு நன்றி என்ற குறிப்புடன் புத்தகத்தைத் திருப்பித் தந்தார் பென்.
அன்றிலிருந்து அந்த எதிர்ப்பாளர் நல்ல ஒரு நண்பராக விளங்கத் தொடங்கினார்.
இந்த உத்தி பென் ஃப்ராக்ங்ளின் எஃபெக்ட் என்று அழைக்கப்படுகிறது.
உளவியல் ரீதியாக இந்த பென் விளைவு ஆராயப்பட்டிருக்கிறது. ஒரு நண்பரிடம் நீங்கள் ஒரு சின்ன உதவியையோ அல்லது சலுகையையோ கேட்டீர்கள் என்றால் அதில் சந்தோஷப்படுவது அந்த உதவியைச் செய்தவர் தான்; அதைப் பெற்றவரின் சந்தோஷம் அடுத்தபடி தான். அதிலும் எதிர்ப்பதில் தீவிரமாக இருப்பவரிடம் உதவி கேட்டால் எதிர்ப்பு மறைந்து விடும்.
இதை COGNITIVE DISSONANCE – அறிவாற்றல் முரண்பாடு என்று உளவியல் குறிப்பிடுகிறது. அதாவது ஒரே சமயத்தில் எதிர்ப்பையும் நட்பையும் ஒருவர் கொள்ள முடியாது இல்லையா. உதவி செய்தவுடன் ஒரு பெரிய நல்ல விஷயத்தை நடத்திய உணர்வு செய்தவரின் மனதில் ஏற்படும் போது எதிர்ப்பே போய் விடுகிறது.
இதை அன்றாட வாழ்க்கையில் குடும்பத்திலும் அலுவலகத்திலும் சமூக நிகழ்வுகளிலும் கூடக் கடைப்பிடித்து வெற்றி பெறலாம்.
உதவிகள் உடனே செய்யக் கூடிய அளவில் சிறிதாக இருக்க வேண்டும். உதவியைப் பெற்றவுடன் அதைப் பெற்றவர் மனமார நன்றி சொல்ல வேண்டும். உதவி நிஜமாகவே தேவைப்பட்டதாக இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக பென்சிலை எடு, மேஜையை நகர்த்து என்று எரிச்சலூட்டும் விதத்தில் அடுத்தவரைச் செயல் செய்யத் தூண்டினால் இன்னும் எதிர்ப்பும் பகையும் அதிகமாகவே ஆகும்.
இந்த பென் விளைவினால் நட்பு மற்றும் உறவுகளை வலுவுள்ளதாக ஆக்க முடியும்.
அலுவலகத்தில் சின்ன உதவிகளைக் கேட்டுப் பெறுவதால் சீரான உறவு தொடரும். ஒரு ப்ராஜெக்டில் ஒருவரது யோசனையைக் கேட்டாலேயே போதும், அது அடுத்தவரை உச்சி குளிரச் செய்து விடும். அவருக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதற்கான ஒரு சின்ன அறிகுறி அது! அவர் எவ்வளவு அறிவுபூர்வமாக உயர்ந்து இருக்கிறார் என்று நீங்கள் எண்ணுவதன் அடையாளம் அது.
உதவிகளைக் கேட்பதில் சிறிய உதவியை மட்டுமே கேளுங்கள்.
அது உண்மையாகவே உங்களுக்குத் தேவைப்பட்டதாக இருக்க வேண்டும். அதைச் செய்பவரும் உணர வேண்டும்.
உதவி பெற்றவர் நிச்சயம் மனமார நன்றி கூற வேண்டும்.
இப்படி ஒரு வழியைச் செய்து தான் பாருங்களேன்!
பென் எஃபெக்ட் பெஸ்ட் எஃபெக்ட் என்று உணர்வீர்கள்; சொல்வீர்கள்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
National poet Subramanya Bharathi (Bharathiyaar) has praised Vedas sky high in many of his poems. In one of his poems, he says Let the drum of victory sound in all the eight directions, And let them (or us) say long live the Vedas. In another poem he says Vedas say God is One and they say The World is a delightful Keni உலகின்பக் கேணி.
There is a problem in translating the word Keni into English. What is a KENI கேணி?
If we look at the dictionary we get a small tank, a well or a moat or a cradle. What he wants to convey is the world is a place of delight. If we accept the meaning well or tank or moat, the translation won’t be good. Even the available translation from Sekkizar Adippodi Dr T N Ramachandran avoids the word Keni and gives us the general meaning life on earth is a delight.
“Ekam sat vipra: bahudha vadanti” is a phrase from the Rig Veda (1.164.46) meaning “Truth is one, the wise call it by many names,” highlighting the Hindu philosophical concept that ultimate reality is described in various ways.
***
What did Bharathiyar had in his mind when he used KENI கேணி?
I think he must have meant only Cradle/ swing.
Let me translate it with that word
3. “The Supreme Being is one only; we are
Its children; life on earth is a happy cradle/swing”
Thus spoke whose hand wrote many Vedas.
Whose is it but that of Bharat-Devi’s?
We see lovers, children, old people etc sitting on a swing in the hall of a house or from a tree or in the recreational parks swing and sing. Singing and swinging are very common in villages. Even Hindu Brahmin Weddings have Swing Ceremony until this day. Guests stand around sing when the newly wed couple are swinging. All the parks have Swings.
In Mother India film we can see the lovers singing and swinging.
Whose is it but that of Bharat-Devi’s? (Translation by T N R)
***
Next question is
Where is the proof in the Vedas?
Rig Veda and Atharva Veda (Bhumi Suktam) say the Earth is a beautiful place, a happy place. Here are stanzas to ponder over:
In the Bhumi Sukta of Atharva Veda, the seventh mantra says Devas protect earth without erring. That means aliens are always watching us. Intergalactic traveller NARADA visits earth now and then. Poet prays to earth to shower sweets on us. Madhu used here is Honey; also used in all poems on Asvins in the RV.
Vedic poets always send positive vibrations. Even when they churn the wood to create fire for the Yagas, they sing happily:
We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,
yatra rājā vaivasvato yatrāvarodhanaṃ divaḥ | yatrāmūr yahvatīr āpas tatra mām amṛtaṃ kṛdhīndrāyendo pari srava || 9-113- 7 and 8.
***
Maypole dance.
In Vedas, we don’t find any mantra describing the world as a place of sorrow and grief. Vedic society lived happily.
Keeping it in mind Bharathi says Let us follow the Vedic life. He also feels proud to say that This country has Vedas. He even criticised people who misunderstood Vedas. “வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று வேதம் புகன்றிடுமே – ஆங்கோர் வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென வேதம் அறிகிலதே”
He was against Purdah system, and he says that Vedic women never had Purdah
Rig Vedic poets give us the picture of Vedic women doing May Pole dance.
***
வேத வாழ்வினைக் கடைப்பிடித்தோம்வேதம் உடையது இந்த நாடு , வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே , வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே
–Subham—
Tags- Proof for Bharati’s Quote, the Vedas, world, happy place, swing, cradle.Keni
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டனில் நீண்டகாலம் வாழ்ந்து அரிய பெரிய பணிகளைச் செய்து அன்பர்களின் உள்ளத்தில் நீங்காத இட்டம்பெற்றார் திருச்சி ஸ்ரீ கல்யாண சுந்தர சிவாச்சார்யா; அவரை கல்யாண்ஜி என்ற பெயரில் ஆயிரக்கக்காணோர் அறிவார்கள் அவர் காரைக்காலில் ஏப்ரல் பத்தாம் தேதி சிவனடி சேர்ந்தார் ; அவருடைய நினைவைப் போற்றி யும் அவருடைய ஆன்மா ஸத்கதி அடையவும் மித்ர சேவா அமைப்பின் சார்பில் லண்டனில் 19-4-2026 ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடந்தது; அப்போது பேசியோரும் பாடியோரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
அஞ்சலிக் கூட்டத்துக்கு உலக இந்து மஹா சங்கத்தின் செயலாளர் லண்டன் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பாலாஜி, மீ.ராஜகோபாலன், சிவசங்கரன், டி வி லட்சுமிகாந்தன், நடராஜன் கணேசன், சந்திரசேகர், பிரசன்னா, பாலசுப்பிரமணியம், சூர்யநாராயண சர்மா, சுப்ரமணிய அய்யர், தியாகராஜன், டாக்டர் கணேசன் ஆகியோர் பேசினார்கள். இறுதியில் ராஜ் அய்யர் நன்றி நவின்றார். இடையே சங்கர் பாடினார்; ஆரம்பத்தில் மித்ர சேவா அமைப்பினைச் சேர்ந்த திருமதிகள் உமா ராஜகோபாலனும் மீனா ராஜும் பிரார்த்தனைப் பாடல்களை இசைத்தார்கள் .
கூட்டத்தில் பேசிய அனைவரும் கல்யாண்ஜி எப்படி குருவாகத் , திகழ்ந்தார் என்று சொல்லி அவருடைய தன்னலமாற்ற சேவையைப் புகழந்தனர் .
எஸ். சுவாமிந்தனின் தலைமை உரையில் , உலக இந்து மகா சங்கத்தை அவருடன் சேர்ந்து துவக்கி பல யாக யக்ஞங்களையும் பூஜைகளையும் சிந்தி மந்திர், ஹிந்து சென்டர் முதலிய இடங்களில் நடத்தியதையும் ஆண்டுதோறும் யஜுர் உபகர்மாவை கல்யாண்ஜி நடத்தியதையும் குறிப்பிட்டார் .
ஞான மயம் ZOOM ஒலிபரப்பு கல்யாண்ஜியால் உருவாக்கப்பட்டு வாரந்தோறும் நடத்தப்பட்டது ; அதில் புதிய புதிய பாடகர்களயும் பேச்சளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களை கல்யாண்ஜி உற்சாகப்படுத்தியதன் மூலம் ஐந்தாண்டுகளில் ஆயிரக் கணக்காணோர் பயனடைந்தனர் என்றும் சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்
கல்யாண்ஜி நீண்ட காலம் நடத்திய வேத வகுப்பு மற்றும் வேதாகம அகாடமி மூலம் அவர் நடத்திய ஸ்லோக வகுப்பு வடக்கத்திய, தென்னிந்திய , மலேசிய, மொரீஷியஸ் , இலங்கைத் தமிழர்களைக் கவரும் விதத்தில் அவர் நடத்திய பூஜைகள், டெக்நாலஜி விஷயத்தில் அவருக்கு இருந்த ஞானம் முதலியவற்றையும் பேசியோர் சுட்டிக்காட்டினார்கள். பாலாஜி சம்ஸ்க்ருத மொழியில் நீண்ட கவிதை மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; ராஜகோபால் எழுதிய கவிதை மித்ர சேவா வெப்சைட்டில் உள்ளது.
இந்த அஞ்சலிக் கூட்டத்தை மித்ர சேவா YOU TUBE யு ட்யூப் பதிவிலும் காணலாம்; கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
வருகின்ற 25-4-2026 சனிக்கிழமை இந்தியாவிலிருந்து கல்யாண்ஜிக்கு ZOOM சூம் வழியாக அஞ்சலி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
—SUBHAM—
TAGS- கல்யாண சுந்தர சிவாச்சார்யா, கல்யாண்ஜி , லண்டனில் அஞ்சலி , மித்ர சேவா , ஞானமயம் ஒளிபரப்பு, உலக இந்து மஹா சங்கம் , வேதாகம அகாடமி , லண்டன் சுவாமிநாதன்